Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினத்தை அழிக்கவல்ல ஊழல் என்னும் பெருங்கொடுமை

Featured Replies

தமிழ் மக்கள் தம்வாழ்வை நெறிப்படுத்துவதற்கு யாரிடமும் செல்ல வேண்டியதில்லை. வாழ்க்கையை எப்படித் திட்டமிட வேண்டும் என்பது முதல் எப்படி வாழ வேண்டும் என்பது வரை நம் வள்ளுவப் பெருமகனார் நமக்கு திருக்குறள் மூலம் உரைத்துள்ளார்.

திருக்குறளைக் கற்று அதன் வழி நடப்போமாக இருந்தால் இந்த உலகம் நம்மைப் போற்றும். எனினும் திருக்குறள் பற்றி நாம் கவனம் கொள்வதில்லை. இன்று வடக்கு மாகாண சபையில் ஊழல் தொடர்பான விவகாரங்களே பேசுபடுபொருளாகியுள்ளன. 

வடக்கு மாகாண அரசு அமையப்பெற்று ஒரு சில வருடங்கள் நிறைவடைவதற்குள் அந்தச் சபையின் விவாதம் வட மாகாணத்தின் அதிகார எல்லைக்குள் நடந்த ஊழல் தொடர்பானதாக இருப்பது வேதனைக்குரியது. 

இன விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் தம் உயிரை ஆகுதி ஆக்கிய வரலாறு இன்னமும் சுட்டபடி இருக்கையில்; யுத்தத்திற்குள் அகப்பட்டு பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பலியாகிப் போன நிலையில், தமிழினத்தை எப்படியும் நசுக்கி விட வேண்டும் என,

பேரினவாதிகள் திட்டம் தீட்டி; அதனை நடை முறைப்படுத்தி வரும் நேரத்தில், எங்கள் வடபுலத்தில் உள்ள சில அமைப்புகளில் ஊழல் நடந்துள்ளன என்ற செய்தி தீரா வேதனையைத் தருகிறது. 

ஏன்? எப்படி? என்று எழுகின்ற கேள்விகளுக்குள் நாங்கள் கடந்த முப்பது ஆண்டு காலமாக அனுபவித்த துன்பங்கள், துயரங்கள், இழப்புகள், குடிபெயர்வுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் என அனைத்தும் வீணாகிப் போய் விட்டதா? என்ற ஏக்கம் உள்ளடங்கியுள்ளது.

போரில் தோற்கடிக்கப்பட்ட எம் இனத்தை நாம் அல்லவா தூக்கிவிட வேண்டும். ஆனால் தூக்கி விடுவதற்குப் பதிலாக நாமே குழிவெட்டி அதற்குள் நம் இனத்தை தள்ளி விடுகிறோம் என்றால் இது எந்த வகையில் நியாயமாகும்?

ஊழல்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்கு எத்தனையோ பொறிமுறைகள் உண்டு. எனினும் அவற்றையும் கடந்து ஊழல் நடக்கிறது எனில் கடமை செய்கின்றவர்கள் தம் கடமையை கடமையாகச் செய்யவில்லை என்றே பொருள் கொள்ள வேண்டும். 

ஊழல் நடந்து விட்டது என்று விவாதம் நடத்தி தம் தம் கருத்துக்களை அவைக்கும் பொது சனத்துக்கும் தெரியப்படுத்துவதை விடுத்து, ஊழல் இடம் பெறாமல் தடுப்பது பற்றி ஆராய்வதே நல்லது. ஆனால் அதுதான் நம்மிடம் இல்லையயன்றாயிற்றே. 

இதன் காரணமாக ஊழல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று ஊழல் நடந்ததாக அறியப்பட்ட நிறுவனங்கள் ஒரு சிலவாக இருக்கலாம். ஆனால் நாளை இந்தக் கண்டுபிடிப்புகள் இன்னமும் பலவாக இருக்கலாம் என்ற ஏக்கம் மக்களிடம் இருக்கவே செய்கிறது. 

ஆக, உயர் அதிகாரிகள் தம் நிறுவனத்தை மேற் பார்வை செய்ய வேண்டும். அதற்கேற்ற பொறி முறைகளை வகுத்து அவற்றை கிரமமாக அவதானித்து நிலைமையை சுமுகமாக ஆக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். 

இல்லையேல் ஊழல்கள் மலிந்து பெருகும். அதன் பின்னர் ஊழலைக் கட்டுப்படுத்துவதென்பது முடியாத காரியமாகிவிடும். 

வள்ளுவன் சொல்கின்றான் “வருமுன்னர் காவா தான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும்” என்று. இக்குறள் பற்றி நாம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12370&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.