Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகளின் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் எனக்குத் தெரியாது – நளினி

Featured Replies

விடுதலைப்புலிகளின் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் எனக்குத் தெரியாது – நளினி

nalini
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் தமக்குத் தெரியாது என கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தெரிவித்துள்ளார். நளினி கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நளினி முருகன் எழுதிய சுயசரிதையொன்று எதிர்வரும் 24ம் திகதி வெளியிடப்பட உள்ளது. 500 பக்கங்களைக் கொண்ட இந்த சுயசரிதையில் பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். ராஜீவ் காந்தியின் புதல்வி பிரியன்கா காந்தி எதற்காக தம்மை சந்தித்தார் என்பது தமக்கு புரியாத புதிராகவே தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் சிறையில் இருந்த போது கருவுற்றிருந்ததாகவும் கருவை கலைப்பதற்கு இந்திய காவல்துறையினர் மருத்துவர் ஒருவரின் உதவியை நாடியதாகவும், இந்த மருத்துவர் தெய்வத்தைப் போன்று கருவை கலைக்க அனுமதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/7462

  • தொடங்கியவர்
பிறப்பு முதல் பிரியங்கா வரை...
 
21-11-2016 03:05 AM
Comments - 0       Views - 83

article_1479646680-nalini120.jpgஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான நளினி எழுதிய சுயசரிதை, எதிர்வரும் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட உள்ளது என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், நளினி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்யுமாறு பல்வேறு வழியில் நீதிதுறையின் மூலம் அவர் போராடியும் வருகிறார். இந்த நிலையில் சுயசரிதை ஒன்றை எழுதியுள்ளார் நளினி.

500 பக்கங்களை கொண்ட இந்த சுயசரிதையில் தனது குழந்தைப் பருவம் தொடங்கி, முருகனுடன் காதல் ஏற்பட்டது, அவரை திருமணம் செய்துகொண்டது, கருவுற்றது, குழந்தை பிறந்தது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியது, பெரும்புதூரில் நடந்தது என்ன? கைது செய்யப்பட்டு, கடுமையான விசாரணைகளை எதிர்கொண்டது, சிறைக் கொடுமைகள், தொடர்ந்து 25 ஆண்டுகளாக சிறைவாசம் உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கியுள்ளார்.

அதுமட்டுமன்றி, அவ்வப்போது தனது மகளுக்கு எழுதும் கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவரங்களை நளினி எழுதியுள்ளார். இந்த சுயசரிதையின் இறுதி அத்தியாயத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு பிரியங்கா காந்திக்கும், நளினிக்கும் இடையே நடைபெற்ற சிறப்பு சந்திப்பு பற்றியும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வடபழனியில் வைத்தே இந்த சுயசரிதை புத்தகம் வெளியிடப்பட உள்ளது. இதில் நளினி கலந்து கொள்ள மாட்டார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்; உள்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள

- See more at: http://www.tamilmirror.lk/186479/ப-றப-ப-ம-தல-ப-ர-யங-க-வர-#sthash.npTo4MyO.dpuf
  • தொடங்கியவர்

‘நளினி கதையைப் படமாக்கினால் ஆஸ்கர் விருதே கிடைக்கும்...!’ கண்கலங்கிய வைகோ

 

nalini_11046.jpg

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, எழுதிய சுயசரிதையை திரைப்படமாக எடுத்தால், ‘ஆஸ்கர் விருது’ கிடைக்கும் என்று வைகோ உருக்கமாக கூறினார்.

ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில்  நளினி கடந்த 25 வருடங்களாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை, கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி நீதித்துமன்றத்தில் போராடி வருகின்றார். அவர், தன்னுடைய வாழ்க்கையை சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில், தனது குழந்தை பருவம், முருகனுடன் ஏற்பட்ட காதல், திருமணம், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிக்கியது, சிறையில் நடந்தவை என தன்னுடைய 25 கால வாழ்க்கையை பற்றி தெளிவாக எழுதி இருகிறார்.

‘ராஜிவ் கொலை. மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா&நளினி சந்திப்பும்’ என்று அந்த புத்தகத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. 24.11.2016 அன்று வடபழனி ஆர்.கே.வி ஸ்டூடியோவில் மாலை 4.30 மணி அளவில் இந்த புத்தகம் வெளியிடப்படுகிறது. வைகோ, திருமாவளவன், சிமான், திருச்சி வேலுசாமி,  இயக்குநர் புகழேந்தி தங்கரஜ், வழக்கறிஞர் புகழேந்தி, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த புத்தகத்தை தொகுத்துள்ள பா. ஏகலைவன் தனது முகநூல் பக்கத்தில், ‘‘எதைச் சொல்லி ஒரு விடுதலை இயக்கத்திற்கு தடை போட்டார்களோ.... எதைச் சொல்லி ஒரு இனத்தின் எழுச்சியை ஒடுக்கினார்களோ... எதைச் சொல்லி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு துணை நின்றார்களோ.. எதைச் சொல்லி தமிழகத்தில் உணர்வாளர்களின், இளைஞர்களின் எழுச்சியை மிரட்டினார்களோ... எதைச் சொல்லி இங்கேயும் அங்கேயும் உலகமெங்கும் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தார்களோ.... அந்த ராஜீவ்காந்தி கொலையில் நடந்த புலன்விசாரணையும், ஓட்டைகளையும் ஆதாரங்களோடு தோலுரிக்கும் புத்தகம்.. இன்றும் ஆறா துயரத்துடன் காத்திருக்கிறார் நளினி முருகன். ’என்று பதிவிட்டுள்ளார்

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சமீபத்தில், ‘ஆனந்த விடகன்’ இதழுக்கு பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டியின் போது நளினியை பற்றி உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். ‘‘தற்போது, நளினி எழுதிய புத்தகத்தை நான் படித்துக் கொண்டிருக்கிறேன். ஏகலைவன் தொகுத்து இருக்கிறார். நேற்றும் படித்தேன். முந்தாநாளும் படித்தேன். படிக்கவே முடியவில்லை. ஐயோ அவ்வளவு கொடுமைகள் வேறு எங்கும் நடந்து இருக்காது. அப்படி சித்ரவதை செய்து இருக்கின்றார்கள். அது கொடுமையான சித்ரவதை. ‘விசாரணை’ என்று ஒரு படம் எடுத்து இருக்கின்றனர் அல்லவா? அதுபோல நளினியின் கதையை ஒரு இயக்குநர் திரைப்படமாக எடுத்தால் கண்டிப்பாக ஆஸ்கர் விருது கிடைக்கும். அந்த அளவுக்கு சித்ரவதைகள்’’ என்று சொன்னார்.

http://www.vikatan.com/news/tamilnadu/72994-if-we-make-nalini-biopic-it-may-get-oscar--vaiko.art

  • தொடங்கியவர்

ராஜிவ் காந்தி கொலை: பிரியங்காவுடன் சந்திப்பு பற்றி நளினி

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள நளினி ராஜீவ் காந்தியின் கொலைகுறித்து எழுதிய புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

பிரியங்காவுடன் சந்திப்பு பற்றி நளினி
 

அந்தப் புத்தகத்தில் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தன்னை சிறையில் வந்து சந்தித்தது குறித்தும் அப்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்தும் நளினி எழுதியிருக்கிறார்.

'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்' என்ற பெயரில் நளினி தன் சிறுவயது சம்வங்கள் முதல் தற்போது வரையிலான சம்பவங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார்.

பா. ஏகலைவன்

 

 பா. ஏகலைவன்

மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து, யாழ் பதிப்பகம் என்ற தனது பதிப்பகத்தின் மூலமாக வெளியிடுகிறார்.

வரும் 24-ஆம் தேதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவன், சீமான் ஆகியோரால் இந்தப் புத்தகம் வெளியாகவிருக்கிறது.

பிரியங்கா சந்திப்பு

 

பிரியங்கா

 பிரியங்கா

இந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் பிரத்யேகமாக பிபிசி தமிழுக்குக் கிடைத்துள்ளன.

கடந்த 2008ஆம் ஆண்டின் துவக்கத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியை பிரியங்கா சென்று சந்தித்தார். அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பதை "என் விடுதலையும் பிரியங்கா சந்திப்பும்" என்ற தலைப்பில் இந்தப் புத்தகத்தில் நளினி விவரித்துள்ளார்.

இந்த சந்திப்பு நெடுக தான் நிரபராதி என்பதை கூறும்வகையிலேயே பல்வேறு சம்பவங்களை, நுணுக்கமாக பிரியங்காவிடம் நளினி கூறியிருக்கிறார்.

குறிப்பாக, தனக்கும் தன் கணவர் முருகனுக்கும் (இதே வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருப்பவர்) ராஜீவ்காந்தி கொலையில் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை; கொலைக்கு முன்பாக தங்களுக்கு அதைப் பற்றி தெரியாது என்பதற்கான வாதங்களை பிரியங்காவிடம் நளினி முன்வைத்ததாக புத்தகத்தில் கூறியிருக்கிறார்.

 

ராஜீவ் காந்தி

 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி

அதிலிருந்து சில பகுதிகள்:

"விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடுமையான கட்டுப்பாடு ஒன்று இருக்கிறது. திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு 26 வயதும், பெண்களுக்கு 21 வயதும் நிறைவடைந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அனுமதி இன்றி யாரும் திருமணம் செய்ய முடியாது. அதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். பொதுவாக யாரும் அப்படி மீறுவது இல்லை என்பதே அங்குள்ள செய்திகள்.

அப்படி இருக்க, என் கணவர் எப்படி 21 வயதில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டிருக்க முடியும்.? திருமணம் செய்துவிட்டு ஊருக்கு போவதற்காக வேதாரண்யம் கடற்கரையில் படகுக்காக ஏன் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்? இயக்கத்தினருக்கு அந்த வழக்கம் இல்லையே. ஆவணங்களில் எல்லாம் இதை மறைத்து விட்டார்கள்.

சம்பவத்திற்கு பிறகு சி.பி.ஐ. சிவராசனை வலை வீசித் தேடிக்கொண்டிருந்தது. அதனால் 7.6.91 அன்று மேலிட உத்தரவுப்படி சிவராசன் தனது மீதிப் பொறுப்புக்களை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு இலங்கை போவதாக சொல்லிப்போனார் என சி.பி.ஐயினர் என் கணவர் பெயரில் உள்ள வாக்குமூலத்தில் எழுதியிருக்கிறார்கள். இது ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டிருக்கிறது மேடம்.

இயக்கமாக இருந்திருந்தால் திருமணம் செய்துகொண்டு ஊருக்கு புறப்பட்டிருக்க முடியாது. கணவரும் இக்கொலையில் சம்மந்தப்பட்டு இருந்தால் சிவராசன், சுபா, நேருவோடு சேர்த்து என் கணவரையும்தானே இலங்கைக்கு அழைத்திருக்க வேண்டும்."

"என் கணவருக்கு மேலிடத்து உத்தரவு வர, இலங்கை புறப்பட்டு செல்ல வேதாரண்யம் சென்று ஒரு வாரம் காத்திருந்துவிட்டு, படகு வரவில்லை என 18ஆம் தேதி என்னைத் தேடி சென்னைக்கே வந்துவிட்டார் என்று சிபிஐயினர் கதை அளந்துள்ளனர், என்றபடி, 'இங்கே ஒரு விஷயத்தை விளக்கமாகச் சொல்ல அனுமதிக்கனும் மேடம்' என கேட்கிறேன். 'ஆகட்டும் தொடருங்கள்'என சம்மதிக்கிறார் பிரியங்கா.

 

நளினி

 முருகனுடன் நளினி

முருகன் புலிகள் இயக்கத்தின் முக்கிய நபரா?

அந்த காலகட்டத்தில் புலிகளின் நிறைய படகுகள் வேதாரண்யம் கடற்கரை பகுதிக்கு வந்து சென்றபடி இருந்தன என சி.பி.ஐயினரே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். தினமும் நினைத்த நேரத்தில் தமிழகம் வந்தும் போகும் வசதி அவர்களிடம் இருந்தது என்றும் சொல்கின்றனர்.

என் கணவர், அதில் ஏறிப்போயிருக்கலாம் அல்லவா?

அடுத்து அவர்களுக்கு வயர்லெஸ் தொடர்பும் இருந்தது என்கிறார்கள். என் கணவரும் வயர் செய்திகளை அனுப்பிப் பெற்றுக் கொண்டார் என்கிறார்கள். கணவரை இரண்டாம் கட்ட தலைவர் என்கிறார்கள் தீர்ப்பில். அப்படி இருக்க அதன் மூலம் தொடர்புகொண்டு படகை வரவழைத்து சென்றிருக்கலாம் அல்லவா? சி.பி.ஐ. சித்தரித்தபடி ஒரு இரண்டாம் கட்ட தலைவர் ஒரு வாரம்வரை காத்திருந்துவிட்டு படகு வரவில்லை என்று திரும்பி வரவேண்டியது ஏன்?

வாக்கிடாக்கியில் ஒரு செய்தி சென்றால் படகுகள் வந்து அழைத்துச் சென்றிருக்குமல்லவா? ஏன் அப்படி நடக்கவில்லை? ஏனென்றால், அவர் சாதாரண நபர், உண்மையில் வேதாரண்யம் போயிருந்தால் மற்றவர்களைப்போல் தனியார் படகிற்கு காத்திருந்தார். அந்த படகு வரவில்லை என்றான பிறகுதான் திரும்பியிருப்பார். ஆனால் அதுவும் உண்மை அல்ல. அந்த சமயத்தில் தன் உறவினர்களுடன் தமிழக கோயில்களுக்கு சென்றிருந்ததுதான் உண்மை."

நான் குற்றவாளியா ?

"என்னைப் பிரதான குற்றவாளி என்று கூறுகிறார்கள். ஆனால் நான் சம்பவம் நடந்த நாள் அன்றும் அதற்கு முன்பும் எப்படி இருந்தேன் என்பதை அவர்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை. அந்த மே மாதத்தில் ஒரு நாள்கூட நான் அலுவலகத்திற்கு போகாமல் இருந்ததில்லை. சம்பவ தினமான மே 21ஆம் தேதியன்றுகூட வழக்கம் போலத்தான் அலுவலகத்திற்கு போனேன். அரை நாள் விடுப்பு வேண்டும் என்றேன். அவர்களோ, 'எதற்கு அரை நாள் லீவு. சிறிது நேரம் வேலை பார்த்துவிட்டு கிளம்புங்கள்' என்று கூறினார்கள்.

நான் மிகச் சாதாரணமாகத்தான் இருந்தேன். என்னிடம் எந்த பதட்டமும் இல்லை. அரை நாள் வேலை செய்துவிட்டு பிறகுதான் இராயப்பேட்டை வீட்டிற்கு போகிறேன். சாட்சி விசாரணைகள் எல்லாம் அதைத்தான் தெளிவு படுத்தியிருக்கின்றன. கொலைச் சதி தெரிந்த ஒருவர் இப்படியெல்லாமா நடந்துகொள்வார் என்று ஏன் யாரும் யோசிக்கவேயில்லை? இப்படியெல்லாம்கூட ஒருவர் கொலைச் சதி குழுவில் இருக்க முடியுமா?"

"தீர்ப்பிலும்கூட ஏராளமான தவறுகள் இருக்கின்றன மேடம்' என்ற நான் சில முக்கிய உதாரணங்களை மட்டும் அவரிடம் எடுத்துக் கூறினேன். கேட்டுக்கொண்டிருந்தவரின் முகம் வாட்டமாகியது. குழப்பமடைந்தவராக காணப்பட்டார். அதை விரும்பாத நான் உதாரணங்களை நிறுத்திவிட்டு, அடுத்த சாதகமான சந்தர்ப்ப சூழ்நிலையினை எடுத்துச் சொல்லத் தொடங்கினேன்.

விசாரணையில் ’முரண்பாடுகள்’

கொலைச் சதி சம்பவம் நடந்த இடத்திற்கு நாங்கள் பாரிமுனையில் இருந்து பேருந்தில் சென்றதாகதான் சி.பி.ஐ. கூறியது. சாட்சி ஆவணங்களும் அதைத்தான் சொல்கின்றன. அதோடு வெடிகுண்டை முதுகில் கட்டிக்கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். ஓடும் பேருந்தில் நின்றபடி பயணிக்கும் வெடிகுண்டு பெண்ணால் யார் மீதும் மோதிவிடாமல் நின்றுகொண்டே போக முடியுமா? அப்படியே உட்கார நினைத்தாலும் முதுகில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு உட்கார முடியுமா? வழியிலேயே வெடித்திருக்க வாய்ப்பில்லை என கூற முடியாதே. திட்டமிடுபவர்கள் அப்படியா திட்டமிடுவார்கள்? ஏன் இத்தனை முரண்பாடு?

இன்னொரு முக்கிய விடயம் மேடம்.... ஹரிபாபு எடுத்த கடைசி போட்டோவில் அந்த பொண்ணு தணு வலது தோள் முதுகுப் பக்கம் கை வைத்து யாரோ ஒருவர் உங்கள் தந்தையை நோக்கித் தள்ளுகிற காட்சி பதிவாகி இருக்கிறது. அந்த கை யாருக்கு உரியது என்று இதுவரை கண்டுபிடிக்க முயற்சி செய்யப்படவே இல்லை மேடம். இதற்கு பதிலும் இதுவரை சிபிஐ சொல்லவும் இல்லை.

சம்பவ இடத்தில் இறந்துபோன போட்டோகிராபர் ஹரிபாபுவின் நிலை மற்றும் லதா கண்ணன் , அவரது மகள் கோகிலா ஆகியோரது நிலைதான் என்னுடைய நிலையும். சதித் திட்டம் தெரிந்திருந்தால் ஹரிபாபு அருகில் இருந்து புகைப்படம் எடுத்திருக்க மாட்டார். கூடவே சுபா, தனு, சிவராசன், லதா கண்ணன் அவர் மகள் கோகிலா உள்ளிட்டவர்களையும் படம் எடுத்திருக்க மாட்டாரே. அதே நிலைதான் எனக்கும் என்று அதற்கான பல முக்கிய விஷங்களை மட்டும் கூறினேன்.

முகம் சிவந்த பிரியங்கா

பிரியங்கா 

மிக நிதானமாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. அவசியம் என்றால் மட்டுமே கேள்விகேட்டார். அப்போதுதான் எனக்கொரு மன உறுத்தல் இருந்தது. எங்கள் இருவரைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோமே. கணவருடன் தூக்குமர நிழலில் இருக்கும் மற்ற இருவரைப் பற்றியும், பேசவேண்டும். அவர்களும் குற்றமற்றவர்கள் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிவிட வேண்டும் என்று அவர்களைப் பற்றி பேசினேன்.

அப்போதுதான் அவர் முகம் மாறத்தொடங்கியது. அவர் பார்வையும் சிவந்து கொண்டிருந்த முகமும் அதை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் ஒவ்வொன்றையும் குறுக்கு கேள்வி மூலம் மறுத்தபடி அதிருப்தியை வெளிப்படுத்தினார். எதிர் கேள்வியால் மறுத்தபடி, "உன்னைப் பற்றி சொன்னாய்.. உன் கணவரைப் பற்றி சொன்னாய். அதில் ஒரு நியாயம் உண்டு. 'அவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்...? அவர்களை பற்றி நீங்கள் ஏன் அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள்?' என சற்று காட்டமாக கேட்டார். அப்படியான அதிருப்தியையும் எதிர்ப்பையும் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஸ்தம்பித்தேன்

'இல்லைங்க மேடம். அவர்களும் அப்பாவிகள்தான்...' என நான் சொல்ல முற்பட்டபோதே, 'இதோ பாருங்கள். நீங்கள் அனைவருமே நிரபராதிகளா? உங்களில் யாருக்குமே இந்த சம்பவத்தில் தொடர்பில்லையா? அப்படி என்றால் இந்த விசாரணை, சி.பி.ஐ. சாட்சிகள், ஆவணங்கள் எல்லாமும் பொய்யா? நீதிமன்ற முடிவுகள் தவறானதா? என்ன சொல்ல வருகிறீர்கள்' என கோபத்தின் உச்சிக்கு போனபோது எனக்கு நடுநடுங்கத் தொடங்கிவிட்டது.

அதற்கு மேலும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஸ்தம்பித்து நின்றேன். சி.பி.ஐ. ஜோடிப்புகள், தீர்ப்புகள் எல்லாமே தவறுதான் என்பதை எப்படி அவருக்கு புரியவைப்பது? அப்படிச் சொன்னால் அவர் குடும்பம் ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பதை அவரால் சகிப்பது மிக சிரமமாச்சே என்று அப்படியே பிரமை பிடித்து பார்த்திருந்தேன். மேற்கொண்டு பேச எனக்கு நா குழறியது.

அவரின் ஆதங்கத்தை, அந்த எதிர்ப்பை புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு தேசத்தின் மிகப்பெரிய தலைவர், முன்னாள் பிரதமரின் கொலை வழக்கு, இவ்வளவு மோசமாகவா விசாரணை நடத்தப்பட்டது? உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே இல்லையா, நம்மை ஏமாற்றி விட்டார்களா? தந்தையின் மரணத்திற்கு ஒரு நீதி கிடைக்கவில்லை. கிடைத்ததாக சொல்லும் நீதியும் ஏமாற்றப்பட்டதா? என்ற கோணத்திலான வெளிப்பாடாகக்கூட அது இருக்கலாம்.

நடுவில் இருப்பவர் நளினி  நடுவில் இருப்பவர் நளினி

அதைத்தான் என்மீது கோபமாக கொட்டுகிறார் என்பதை புரிந்து கொள்கிறேன். அவரது கோபக் கொந்தளிப்பு எனக்கு நடுக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. கோபத்தில் அவர் பேசிய தொனி அச்சுறுத்தலாக மாறியது. சில உண்மைகளை சொல்லும்போது அப்படி அவர் ஆகவில்லை என்றால்தான் நாம் சிந்தித்திருக்க வேண்டும். நான் சொன்னதை எல்லாம் உள்வாங்கி இருக்கிறார். எனவே இயற்கையாக எழக் கூடிய உணரச்சிகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எங்களின் சந்திப்பு தொடர்ந்து 75லிருந்து 85 நிமிடங்கள் வரை இருந்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நீண்டது. 50 நிமிடங்கள் வரை நான் சொன்ன விளக்கத்தை எல்லாம் உள்வாங்கிக்கொண்டே சின்ன சின்ன கேள்விகளை எழுப்பியிருந்தார். முகத்தில் அதிருப்தியும், வெறுப்புமாக இருந்தது. சமயத்தில் ஆச்சரியம், வியப்பு ஆகியவையும் வெளிப்பட்டன.

அதன் பிறகு நான் மற்றவர்களைப் பற்றி பேசப்போய்தான் அவர் ஒரேடியாக அதிருப்தியை வெளிக்காட்டினார். தொடர்ந்து எதிர்ப்பு கேள்விகளை முன்வைத்தபடியே கோபத்தை கொட்டினார். இந்த வழக்கின் விசாரணைஒட்டுமொத்தமாக தவறு என்று நான் சொன்ன உண்மையை அவரது புண்பட்டிருந்த மனசு ஏற்க தயாராக இருக்கவில்ல. அந்த நிராகரிப்பு கோபமாக வெளிப்பட்டது. அந்த கோபம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்த நான் அமைதியானேன்.

சந்திப்பை ஒப்புக்கொண்ட பிரியங்காவின் ’’பெருந்தன்மை’’

பிரியங்காவின் பெருந்தன்மை  பிரியங்காவின் பெருந்தன்மை

நான் சொன்ன தகவல் அவரைக் கோபப்படுத்தியது, அந்த கோபம் என்னை அச்சுறுத்தியது, அவ்வளவுதான். நான் சொன்ன விளக்கம் எல்லாமும் ஆவணங்களில் இருந்ததைத்தான் விளக்கினேன் என்பதையும் அறியாதவர் அல்ல. அதனால் அவருக்கு வந்த கோபம் போலியாகவே நடந்த விசாரணைக் கட்டமைப்பின் மீதுதான் இருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். தவிர ஒரு கைதியிடம் அவர் நடந்துகொண்ட பாங்கு மிக உயர்ந்த குணத்தைக் கொண்டதாகவே அமைந்தது.

அந்த சந்திப்பு பற்றிய செய்தி முதலில் வெளியானவுடன் சிறைத் துறை (மாநில அரசு) " அப்படிச் சந்திப்பு ஏதும் நடக்கவில்லை" என மறுத்தது. ஏன்..? பிரியங்கா "ஆமாம்...நடந்தது" என ஒப்புக் கொண்ட பின்னர்தான் உலகமே நம்பியது. அவரும் இல்லை என மறுத்து இருந்தால் அதனைத்தான் உலகம் நம்பி இருக்கும் . ஏன் எனில் அந்த சந்திப்பு நடந்ததற்கான பதிவு, ஆவணம் , அனுமதி என எதுவுமே சான்றாக இல்லை. அவரது பெருந்தன்மையினையும் துணிச்சலையும் பாராட்டியாக வேண்டும். அவர் மறுத்து இருந்தால் என் மீது பழி சுமத்தி இருப்பர்களா? என் விடுதலைக்கு பெரும் முட்டுக்கட்டை போட்டிருப்பார்களா?

இந்த இடத்தில் ஒரு கேள்வியினை நான் கேட்க விரும்புகிறேன். ஒருவேளை அதே காலத்தில் ராஜிவ் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திக்க விரும்பி இருந்தால் அவர்கள் வேண்டாம்; முடியாது என மறுத்திருக்க முடியுமா? தம் மக்களின் நல்ல எதிர்காலத்திற்காக அந்த வாய்ப்பினை நிச்சயம் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவே விரும்பி இருப்பார்கள். நழுவவிட்டால் அது அவர்களது போராட்டத்திற்கு எதிராகப் போயிருக்காதா?

அதை விட்டுவிட்டு 17 ஆண்டுகள் கழித்து என்னைத் தேடி வருவானேன் என்ற காரணமும் நோக்கமும் அரசியல் பின்னணி கொண்டதே. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்கு எங்கள் சந்திப்பை பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கலாம். இப்படி பல விஷயங்கள் இதனுள் அடங்கியிருக்கியிருப்பதாக நினைக்கின்றேன்.

சந்திப்பால் நல்லது நடந்ததா?

அதைத் தாண்டி இன்னொன்றையும் கூறலாம். ஏதோ ஒரு வகையில், இந்தப் பெண் நிரபராதி என நினைத்திருக்கலாம். ரகசியச் சந்திப்பை இந்த பெண் அம்பலப்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. அதனாலும் பார்க்க வந்திருக்கலாம்.

இப்போது திரும்பிப் பார்க்கிறேன். அந்த சந்திப்பு நடந்து ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்டன. எங்களுக்கு நல்லது ஏதும் நடக்கவில்லை. 'என்னோட காயத்தை ஆற்றிக்கொள்ள நடந்த சந்திப்பு என அறிக்கை கொடுத்திருந்தார். 2013ல் ஒரு பேட்டி, 'அவரை மன்னித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அங்கே (வேலூர்) போனேன். போன பிறகுதான் அது தேவை இல்லை என்றாகிவிட்டது. அவரை சந்தித்த பிறகுதான் என் வேதனையும் நளினியின் வேதனையும் ஒன்றாக இருக்கிறது என மூன்று வரிகளில் கூறியிருந்தார். ஆக என்னை ஏதோ ஒரு வகையில் நிரபராதி என உணர்ந்துள்ளார். அதே நேரத்தில் அவரால் வெளிப்படையாக என் விடுதலையை பேசவும் முடியவில்லை. இந்தியா, சி.பி.ஐ என்ற கட்டமைப்பு குலைந்துபோய்விடக் கூடாது என்ற காரணமாகவும் இருக்கலாம்.

http://www.bbc.com/tamil/india-38062439

  • தொடங்கியவர்

“குண்டு வெடித்த பிறகு தணு நடந்து போனார்!”

 

நளினி சொல்லும் ராஜீவ் கொலைக் களம்

 

‘‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்” என்ற தலைப்பில் நளினி முருகன், தனது எண்ணங்களைப் புத்தகமாக ஆக்கி உள்ளார். பத்திரிகையாளர் பா.ஏகலைவன் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து எழுதி உள்ளார். வரும் 24-ம் தேதி சென்னையில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட உள்ளது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தன் எண்ணங்களை இந்தப் புத்தகத்தில் நளினி சொல்லி இருக்கிறார். அதிர்ச்சிகரமான தகவல்கள் பல முதன்முறையாக வெளிவருகின்றன. அதன் சில பகுதிகள் மட்டும் இங்கே...

p12a.jpg

இருட்டறையில் இருந்து!

red-dot.jpg இது கால் நூற்றாண்டைத் தாண்டி இருட்டறைக்கு உள்ளாக ஒலித்துக் கொண்டிருக்கும் என் மனசாட்சியின் குரல். இப்போது, சிறைக் கொட்டடியைத் தாண்டி உங்களின் இதயத்தைத் தட்டப்போகிறது.

எனக்கான கனவுகளோடு அந்த வசந்தகால நடைபாதையில் எல்லோரையும் போல நானும் இளமையைச் சுமந்து கொண்டு காத்திருந்தேன். திடீரென ஒரு வெடிகுண்டுச் சத்தம், என் கனவுகளை எல்லாம் சிதைத்துவிட்டுப் போகும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

இப்போது 26 ஆண்டு காலம், நீண்ட நெடிய சிறைவாசத்தை அனுபவித்தபடி நிற்கிறேன். இதில் பாதிக் காலம், ‘நாளை என் உடல் தூக்கில் தொங்குமோ’, என்ற மிரட்சியில் கழிந்தது. எப்போது விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்தில் என் கணவரையும், குழந்தையையும் பிரிந்த துயரில் கண்ணீரில், கவலையில் என் மீதி வாழ்க்கை கழிந்துகொண்டிருக்கிறது.

தாஸ் தங்குவதற்கு ஓர் இடம்!

red-dot.jpg ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல ஊர்களில் தங்கியிருந்தார்கள். அப்படி போராளிகளுக்கு ஆதரவாக நின்ற இளைஞர் பட்டாளத்தில் என் தம்பி பாக்கியநாதனும் ஒருவன். சென்னையில் பிரபலமாக இருந்த சுபா சுந்தரம் போட்டோ ஸ்டூடியோவுக்கு பாக்கியநாதன் போய்வருவான். அங்குதான் பேரறிவாளன், ஹரிபாபு, முத்துராஜ் உள்ளிட்ட பலரும் புகைப்படக்கலை பயிற்சி கற்றுக்கொண்டிருந்தார்கள். அப்படியான நண்பர்கள் பட்டியலில் புதிதாக வந்து சேர்ந்தவர்தான் தாஸ் என்ற முருகன்.

தாஸ் தங்குவதற்கு ஓர் இடம் வேண்டும் என்று தம்பி பாக்கியாவிடம் பேசியிருக்கிறார்கள். ‘வேறு வாடகை வீடு பார்த்துக்கொள்ளும் வரை என் வீட்டில் இருந்துகொள்’ என்று தாஸை வீட்டுக்கு அழைத்துவந்திருக்கிறான் தம்பி. 1991 பிப்ரவரி எட்டாம் தேதி முருகனை முதன்முதலாக சந்தித்தேன். ராயப்பேட்டையில் சபரி காலேஜ், தியாகராய நகரில் விவேகானந்தா காலேஜ் என இரண்டு டுடோரியல் கல்லூரிகளில் சேர்ந்து ஆங்கில வகுப்புக்கு தினமும் காலையிலும் மாலையிலும் தவறாமல் போய்விடுவார். வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்காக அவரை அவரது அப்பா, ஒரு ஏஜென்ஸியைப் பிடித்து படகு மூலம் தமிழகத்தின் வேதாரண்யத்துக்கு அனுப்பி வைத்துவிட்டார். அப்படி வேதாரண்யம் வந்த இடத்தில் தான் ஒற்றைக்கண் சிவராசன் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பிவைக்கும் ஏஜென்ட்டாக அறிமுகமாகியிருக்கிறார். நாங்கள் இருவரும் சம்பந்தமில்லாமல் நிறையப் பேசிக் கொண்டோம். எங்கள் மனதைப் புறக்கணித்துவிட்டு இதயங்கள் இரண்டும் தமக்குள்ளே பேசிக்கொள்ளத் தொடங்கிவிட்டன. 1991 ஏப்ரல் 21-ம் தேதி திருப்பதி கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றோம். என் கழுத்தில் முருகன் தாலி கட்டினார். அவர் விருப்பப்படி என் காலில் மெட்டியைப் போட்டுவிட்டார். தாலியையும், மெட்டியையும் என் வழக்கில் ஏன் மறைத்தார்கள்? எங்கள் உறவையும் ஏன் கொச்சைப்படுத்தினார்கள் என்பதுதான் எங்கள் காதலுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய துரதிஷ்ட வலியாகும்.

p12.jpg

தணுவைச் சந்தித்தேன்!

red-dot.jpg திருமணத்துக்குப் பிறகு, அவரது வெளிநாட்டுப் பயணத்தில் நான் அதிக அக்கறை செலுத்த ஆரம்பித்தேன். பயண முகவர் என்ற அளவில் முதன் முதலில் சிவராசன் என்பவரைப் பற்றி சொன்னார். ‘ஈழ விடுதலைக்கு இந்தியத் தலைவர்களின் ஆதரவை சிவராசன் திரட்டி வருபவர். ஒவ்வொருவராக சந்தித்து நட்பு ஏற்படுத்தி வருபவர்’ என்று என் கணவர் சொன்னார். 1991 மே மாதம் மூன்றாம் தேதி அன்றுதான் சிவராசன் எனக்கு முதன்முதலாக அறிமுகமானார். சுபா, தணு ஆகிய இருவரையும் அழைத்து வந்து அறிமுகம் செய்தார் சிவராசன். வில்லிவாக்கத்தில் உள்ள எனது வீட்டில் தங்கி இருந்தார்கள்.

7.5.91 அன்று நந்தனத்தில் நடந்த வி.பி.சிங் கலந்து கொண்ட கூட்டத்துக்கு என்னை அழைத்தார்கள். சென்றேன். கூட்டத்தில் ஹரிபாபு, பேரறிவாளன் ஆகிய இருவரையும் பார்த்தேன். வி.பி.சிங்குக்கு மாலை அணிவிக்க தணு முயற்சி செய்தார். முடியவில்லை. மேடையில் இருந்து இறங்கிப் போகும்போது மாலையைக் கையில் வாங்கிக்கொண்டார் வி.பி.சிங். சுமார் ஏழு மணி நேரம் அங்கு இருந்தோம். பிறகு நடந்த விசாரணையில் அந்தக் கூட்டத்தில் எங்களை பார்த்ததாக ஒருவர்கூட சாட்சியம் அளிக்கவில்லை.

12.5.91 அன்று சுபாவும், தணுவும் என் வீட்டுக்கு வந்தார்கள். அன்று எனக்கு விடுமுறை நாள் என்பதால் அவர்களை மீண்டும் சினிமாவுக்கும் கோயிலுக்கும் கடைக்குமாக அழைத்துப்போய் வந்தேன். மே 18-ம் தேதியும் வந்தார்கள். அன்று முழுவதும் மகாபலிபுரம் சென்று வந்தோம். 19-ம் தேதியும் வெளியில் சுற்றினோம். விடிந்ததும் அவர்கள் கிளம்பினார்கள். நான் வேலைக்குச் சென்றுவிட்டேன்.

அந்த நாளும் வந்தது!

21-ம் தேதி சுபா, தணுவுடன் பாரிஸ் கார்னர் பேருந்து நிலையம் போய் இறங்கினோம். அங்கு சிவராசனும் ஹரிபாபுவும் காத்திருந்தார்கள். சுமார் ஏழு மணி அளவில் ஸ்ரீபெரும்புதூரில் இறங்கினோம். சாப்பிட்டோம். கூட்டமே இல்லை. போலீஸார் தான் அதிகம் இருந்தார்கள். சிவராசனும், தணுவும் ஏதோ கோபமாகப் பேசிக் கொண்டார்கள். அங்கிருந்த முக்கிய நபர்களை சிவராசனுக்குத் தெரிந்திருந்தது. அவர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் சிவராசன். வி.ஐ.பி-கள் உட்காரும் இடத்துக்குள் தணுவை மட்டும் அழைத்துக்கொண்டு போனார். பெண்கள் பகுதியில் நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில் வி.ஐ.பி-கள் வரிசையில் தணுவை முதலாவதாகக் கொண்டுபோய் நிறுத்திவிட்டு, வேறு ஒரு பகுதியில் தூரமாகப்போய் நின்றுகொண்டு, அங்கிருந்த தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருந்தார் சிவராசன்.

சுமார் 10.15 இருக்கும் ராஜீவ் காந்தி வந்து விட்டார். அவரை அருகில் சென்று பார்க்க எனக்கு ஆர்வமாக இருந்தது. சுபாவை அழைத்தேன். வேண்டாம் என்று என் கையைப் பிடித்து இழுத்த சுபா, வெளியே இழுத்துச்சென்றார். கூட்டத்தைவிட்டு வெளியே நகர்ந்து சற்று தள்ளி தூரமாகப் போய் நின்றுகொண்டார். ‘என்னாச்சு சுபா... ஏன்?’ என்று கேட்டேன். ‘ஒன்றுமில்லை பேசாமல் இருங்கள்’ என்றாள். என்னையும் வெளியே இழுத்துச் சென்றாள்.

சாலையை நோக்கி நடந்திருப்போம். இது வரையிலும் நான் கேட்டிராத பெரிய வெடிச்சத்தம். திரும்பிப் பார்த்தேன். ஒரே புகைமண்டலம். கூட்டத்துக்குள் இருந்து சிவராசன் எங்களை நோக்கி வந்தார். ஆட்டோவில் ஏறினோம். ‘நிறைய குழப்படிகள்’ என்று சொல்லிக் கொண்டார். புதிதாக ஒரு வீட்டுக்கு எங்களை அழைத்துச் சென்றார் சிவராசன்.

p12b.jpg

கண் முன்னால் நடந்து போனார் தணு!

நாங்கள் மூன்று பேரும் ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடக்கிறோம். பட்டென்று எங்கள் முன்பாக கண்ணெதிரே தணு நடந்து போய்க்கொண்டிருந்தார். இது கற்பனை அல்ல. நாங்கள் எல்லோருமே அந்தக் காட்சியைக் கண் கூடாகப் பார்த்து நிற்கிறோம். எங்களுக்குமுன் தணு அங்கு எப்படி வந்தாள் என நான் அதிர்ச்சியானேன். எப்படி என சுபாவை சைகையில் கேட்டேன். அவளுக்கும் அதிர்ச்சி. தணுவை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, வாயில் விரல் வைத்துச் சத்தம் போடாதீர்கள் என காட்டினாள். வீட்டில் இருந்து கிளம்பும்போது எந்த உடையில் கிளம்பினாளோ அதே உடையில், கையில் சந்தன மாலையோடு அப்படியே நடந்துசென்றபடி இருக்கிறாள் தணு.

பிறகு, எங்களை எல்லாம் சி.பி.ஐ. பிடித்து விசாரித்தபோது நாங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே ‘தணுவின் ஆவி’ காட்சியைப் பதிவு செய்திருந்தோம் என்பதைப் பின்நாட்களில் தெரிந்து கொண்டோம். அது பிரமையா அல்லது உண்மையா என்று இன்றுவரை என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால், ஒரே நேரத்தில் பலர் பார்த்தோம் என்பதை சி.பி.ஐ-யினரும் உறுதிப்படுத்தியிருந்தார்கள். கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. இப்போது நினைத்தாலும் எனக்கு அந்தக் காட்சி உதறலாகத்தான் இருக்கிறது. அதை நினைத்துப் பல இரவுகள் நான் பயந்து நடுங்கியிருக்கிறேன்.

p12c.jpg

எங்களுக்குத் தெரியாது!

red-dot.jpg அப்போது நான் குழந்தைப் பேறு அடைந்திருந்தேன். என் கணவரை எப்படியாவது வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவிட நினைத்தேன். அதனால்தான் சிவராசன் கோபப்படாதவாறு நடந்தேன். என் கணவர் நன்மைக்காக சுபா, தணுவை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்துதான் மனதில் ஒரு சந்தேக நெருடல் இருந்தது. ஏதோ சிக்கலில் எங்களை அறியாமல் சிக்கி விட்டோமோ என நினைத்தேன். கணவரை அழைத்துக்கொண்டு திருப்பதி செல்ல திட்டமிட்டேன். மே 10-ம் தேதி அவரை பார்த்தது. மே 25-ம் தேதிதான் பார்த்தேன். வில்லிவாக்கம் வீட்டில் இருந்தபோது சிவராசன் வந்துவிட்டார். எங்களோடு அவரும் திருப்பதி வருவதாகச் சொல்லிவிட்டார். ‘உன் அம்மாவையும் கூப்பிடு’ என்றார் சிவராசன். தம்பிக்கு போன் செய்து சொன்னேன். கொலைத் திட்டம் பற்றி எல்லாம் எங்களுக்குத் தெரிந்திருந்தால் யாராவது சொந்தப் பெயரில் கார் பதிவுசெய்து சிவராசன், சுபா உடன் திருப்பதி போயிருப்பார்களா?

சிவராசனும், என் கணவரும் ஒரே அறையிலும்... நான், சுபா, என் அம்மா மூவரும் ஒரு அறையிலும் இருந்தோம். ‘தணு எங்கே?’ என்று என் கணவர் கேட்க, சிவராசன் மழுப்பி இருக்கிறார். 26-ம் தேதி காலையில் தணுவின் புகைப்படம் வெளியாகிவிட்டது. அதன் பிறகுதான் என் கணவருக்கே தெரியும். என்னிடம் இதுபற்றி பேசினார். பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்பதை அவரும் உணர்ந்தார். நம்மால், நமக்கு உதவி செய்த குடும்பத்துக்குச் சிக்கல் வந்ததாக என் கணவர் நினைத்தார். என்னைவிட என் கணவரின் உயிரும் பாதுகாப்பும் எனக்கு முக்கியமாகப்பட்டது. நாங்கள் காதலிப்பது சிவராசனுக்குத் தெரியும், ஆனால், ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டோம் என்பது தெரியாது. ‘உங்கள் காதல் எனக்குத் தெரியும்.

நீ சரியாக ஒத்துழைக்கவில்லையானால் உங்களுக்குள் சிக்கல் ஏற்படுத்துவேன்’ என்பது மாதிரி அவர் அணுகுமுறை இருந்ததால், சிவராசன் விஷயத்தில் தள்ளியே இருப்போம் என்ற முடிவில் இருந்தேன்.

வேலையை ராஜினாமா செய்தேன்!

திருப்பதியில் இருந்து திருத்தணி வந்து முருகனை வேண்டிக்கொண்டு சென்னை வந்தோம். மாலை நாளிதழ்களில் மனித வெடிகுண்டு என்று தணு படம் வந்திருந்தது. எனக்குக் கண்கள் இருட்டிக் கொண்டுவிட்டது. கத்திக் கதறினேன். சுற்றி இருந்த எல்லோருமே அழுதார்கள். போலீஸ் வந்து கேட்டால் உண்மையைச் சொல்லப்போகிறோம். எப்படியும் என் மீது தவறு ஏதும் இல்லை என நிச்சயம் புரிந்து கொண்டு விடுவார்கள் என நினைத்தேன்.

அதன்பிறகுதான், எங்களுக்குள் திருமணம் நடந்துவிட்டதை அம்மாவிடம் சொன்னேன். தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அம்மா அழுதார். என் கணவரை சபித்தார். நடந்த தவறில் என் கணவருக்கு ஒரு பங்கும் இல்லையம்மா என்று நான் சொன்னேன். என்னுடைய அலுவலகத்துக்கு சி.பி.ஐ. வர ஆரம்பித்தது. சங்கர் என்பவர் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர் வைத்திருந்த காகிகத்தில் என் அலுவலக போன் நம்பர் இருந்ததாகவும் சொன்னார்கள். ஜூன் 10-ம் தேதி நான் எனது வேலையை ராஜினாமா செய்தேன். அலுவலகம் சென்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, அலுவலக ஊழியர் சுஜயா வீடு சென்று அலுவலகச் சாவியை ஒப்படைத்துவிட்டு திரும்பினேன்.

ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பிருந்தால் இப்படியா நடந்து கொண்டிருப்பேன்? தப்பிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ஒருவர் இப்படிச் செய்வாரா? மனதளவில் நான் குற்றவாளி இல்லை என்பதால் என்னையும் அறியாமல் அப்படி நடந்து கொண்டிருக்கிறேன்.

அலையாய் அலைந்தோம்!

red-dot.jpg நானும் என் கணவரும் சாந்தி (ஜூன் 11) தியேட்டர் அருகே சந்தித்தோம். திருப்பதி போனோம். அதற்குள் என் குடும்பத்தினர் அனைவரும் சி.பி.ஐ-யால் வளைக்கப்பட்டார்கள். ‘என் கணவரையும் குழந்தையையும் காப்பாத்துப்பா’ என்று  கடவுளிடம் நான் வேண்டினேன். கணவரை முடி காணிக்கை செய்யவைத்தேன். ‘ராஜீவ் கொலையை வெற்றிகரமாக முடித்துவிட்டதற்கு நேர்த்திக்கடன் செய்தோம்’ என்று சி.பி.ஐ தனது வழக்கில் ஜோடித்தது. மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்குமா பெருமாள் ஆசீர்வாதம் கொடுத்துக் கொண்டிருப்பார்? ஏழுமலையானுக்கு இதெல்லாமும் ஒரு வேலைதான் என்று சி.பி.ஐ-யினர் எப்படித் தெரிந்து கொண்டார்கள்? மதுரை, பெங்களூர், விழுப்புரம் என அலைந்தோம். விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்தோம். சைதாப்பேட்டையில் இறங்கியபோது போலீஸ் கைதுசெய்தது.

p12e.jpg

சித்ரவதைகள்!

red-dot.jpg அடி, சித்ரவதை, பாலியல் கிண்டல்கள், நிர்வாணம் என ‘மல்லிகை’ விசாரணையில் அனைத்தையும் கொடுத்தார்கள். முக்கிய அதிகாரியான ரகோத்தமன், என் தாலியைப் பிடித்து இழுத்து, ‘இது எதுக்கடி’ என்று அறுத்தெடுத்தார். வளையல்களை உடைத்து நொறுக்கினார். காலில் அணிந்திருந்த மெட்டி, கொலுசையெல்லாம் பலவந்தமாகப் பிடுங்கினார். என்னை அலங்கோலப்படுத்தி நிறுத்தி வைத்திருந்தார். தூங்கவிடவில்லை. அடி வயிற்றுக்கு கீழே எத்தினார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சித்ரவதைகள். சுபா, தணுவுடன் நான் பழகி இருக்கிறேன். என் கணவர், சிவராசனுடன் பழகி இருக்கிறார். இதனால் அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் மேல் திணித்து எங்களை முதன்மை குற்றவாளியாக்க நினைத்தார்கள். சி.பி.ஐ. சொல்வதை எல்லாம் என்னை ஒப்புக்கொள்ளச் சொன்னார்கள். என்னை அப்ரூவராக்கி, என் கணவரை நானே காட்டிக்கொடுக்க வேண்டும் என்று கார்த்திகேயன் நினைத்தார். எங்களுக்குள் திருமணமே நடக்கவில்லை என்று போலி ஆவணத்தை உருவாக்கினார்கள். எங்கள் காதலையும், கற்பையும் கொச்சைப்படுத்தினார்கள். எங்கள் இருவரையும் பிரிக்க நினைத்தார்கள். நாங்கள் உறுதியாக இருந்தோம்.

சி.பி.ஐ சொல்வதைப் போல பொய் வாக்குமூலம் கொடுத்தால் என் கணவருக்கு தூக்குத் தண்டனை உறுதியாகும். முடியாது என்றால் இங்கேயே அவரை அடித்துக் கொன்று போடுவார்கள். இரண்டுமே எனக்கு எதிரானதுதான். எதைச் செய்வது? எதை விடுவது?

அப்ரூவராகி நானே அவருக்குத் தூக்குக் கயிறை எடுத்துக் கொடுப்பதைவிட கடைசி வரை நான் அவருக்கு உண்மையாகவே நின்று போலி என்கவுன்டர் மரணத்தைத் தருவது எவ்வளவோ மேல்!

(நளினியின் கருவை கலைக்கச் சொன்ன போலீஸ் அதிகாரி, பிரியங்கா கேட்ட கேள்விகள் போன்ற அதிர்ச்சியான விஷயங்கள் அடுத்த இதழில்...)

http://www.vikatan.com/juniorvikatan/2016-nov-27/investigation/125885-nalini-wrote-book-about-rajiv-gandhi-murder.art

  • தொடங்கியவர்

திருமதி நளினி - ஒற்றை வார்த்தைக்காக முருகன் சிந்திய கண்ணீர்...!

 

நளினி

"ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்” என்ற தலைப்பில் நளினியின் சுயசரிதை புத்தகமாக நவம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருப்பவர் பத்திரிகையாளர் பா.ஏகலைவன். அவரிடம் பேசியபோது, அந்தப்புத்தகத்தில் இடம்பெறாத ஒரு தகவலை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அந்தச் சம்பவம்....

சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன் புத்தகம் 

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த அதிகாரிகளில் முக்கியமானவர் ரகோத்தமன். சி.பி.ஐ. தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்த அவர் சமீபத்தில், ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் சாந்தனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அவர் சாந்தனுக்கு கடிதம் எழுதக் காரணம், 2009-ம் ஆண்டு “ராஜீவ்கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்” என்று ரகோத்தமன் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதில், ஹரிபாபு கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட 10 படங்களில் சிலவற்றை ரகோத்தமன் பயன்படுத்தி இருந்தார். அந்தப் படங்களில் ஒன்றில், ராஜீவ் காந்தியின் முகத்துக்கு நேரே ஒருவர் கையை நீட்டிக் கொண்டு நிற்பார். அந்த நபர்தான் தற்போது கைது ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கும் சாந்தன் என்று ரகோத்தமன் குறிப்பிட்டு இருப்பார். ஆனால், உண்மையில் அது தவறான செய்தி. அந்த நபர் சாந்தன் இல்லை. இந்த விபரம் சிறையில் இருக்கும் சாந்தனுக்கு தெரியவந்தது. இதையடுத்து, சிறையில் இருக்கும் சாந்தன் வழக்கறிஞர் புகழேந்தி மூலம் சி.பி.ஐ. தலைமைப் புலனாய்வு முன்னாள் அதிகாரி ரகோத்தமனுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அதில், “ஹரிபாபு புகைப்படத்தில் இருக்கும் நபர் வேறு ஒருவர். அந்த நபர் தான் இல்லை. சம்பவ இடத்தில் நிற்கும் யாரோ ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி, அது நான்தான் என்று சொன்னது உண்மைக்குப் புறம்பானது. இதற்கு நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், அவதூறு வழக்குத் தொடருவேன்” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

உங்கள் விடுதலையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்

ragoo%20cut_17020.jpg

அதற்கு பதில் எழுதிய ரகோத்தமன், “அந்தப் புத்தகம் அப்போது கிடைத்த தகவல்களின்படி எழுதப்பட்டது. அதில் வேறொருவரின் புகைப்படத்தை வைத்து, அது நீங்கள்தான் என்று குறிப்பிட்டது, உங்களை வேதனை அடைய வைத்தது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சிறைச்சாலையை பூஞ்சோலையாக மாற்றிய உங்களின் விடுதலையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். உங்களோடு சிறையில் இருக்கும் முருகன், திருமதி நளினியை நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். 

திருமதி நளினி - முருகன் வடித்த கண்ணீர்

இந்தக் கடிதத்தைப் சாந்தனிடம் இருந்து வாங்கிப்படித்த  முருகன், தாரை தாரையாக கண்ணீர் சிந்தினார். அதுபற்றி முருகனிடம் கேட்டபோது, “திருமதி நளினி என்ற ஒற்றை வார்த்தைக்காக எத்தனை ஆண்டுகள் போராட்டத்தை இந்தச் சிறைச்சாலைக்குள் நடத்தி இருக்கிறேன். எத்தனை நாள்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளேன். வழக்கு ஆவணங்கள், தடா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ரகோத்தமன் 2009-ம் ஆண்டு எழுதிய புத்தகம் என அனைத்திலும் மிஸ்.நளினி என்றுதான் இருந்தது. அதை திருமதி நளினி என்று மாற்றச் சொல்லி இந்த அதிகாரிகளிடம் எத்தனை முறை மன்றாடி இருக்கிறேன்.அப்போது எல்லாம் அதைச் செய்யாமல் பிடிவாதமாக இருந்தவர்களில் இந்த அதிகாரி ரகோத்தமனும் ஒருவர். இன்றைக்கு அவரே திருமதி நளினி என்று அவர் கைப்பட எழுதி உள்ளார். அதைப் பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/73262-story-behind-miss-nalini-to-mrs-nalini.art

  • தொடங்கியவர்

நளினி எழுதிய புத்தகம் ஆங்கிலம், இந்தியில் மொழிபெயர்க்க ஏற்பாடு

 

 
 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ளார். இவர் ‘ராஜீவ் படுகொலையில் மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்’ என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நளினி எழுதிய புத்தகம் சமீபத்தில் தமிழில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட ஏற்பாடு நடந்துவருகிறது. மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த புத்தகம் டெல்லியில் வெளியிடப்படும். நளினி எழுதிய புத்தகத்தில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்தத் தகவல் 7 பேர் விடுதலைக்கு துணையாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/நளினி-எழுதிய-புத்தகம்-ஆங்கிலம்-இந்தியில்-மொழிபெயர்க்க-ஏற்பாடு/article9391519.ece?homepage=true

  • தொடங்கியவர்

“அந்த 3 பேருக்குத்தான் தெரியும்!”

 

‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி எழுதியிருக்கும்  புத்தகத்தின் இரண்டாவது பகுதி இது!

‘ஏண்டி உன்னை அம்மணமா நிக்க வச்சு விசாரிச்சாத்தான் பிடிக்குமோ’ என்று சொல்வதே அப்போதைக்கு அவர்களிடம் இருந்த ஓரளவு நாகரிகமான வார்த்தை எனலாம். அதைவிட இன்னும் கொச்சையாக இருந்தன அந்த அதிகாரியின் வார்த்தைகள். மனநிலை பலகீனமானவர்கள் கேட்டிருந்தால், உயிரை விட்டிருப்பார்கள். அந்த வார்த்தைகள் எந்த மனிதனது சுயமரியாதை உணர்ச்சிகளையும் சூடு, சுரணைகளையும் வேருடன் பிடுங்கி எறிந்துவிடும். அவர்களின் சொல்லுக்கு ஆடுகிற தலையாட்டி பொம்மையாக, நடைபிணமாக மாற வேண்டும். அதற்குத் தடையாக இருந்தது என்னிடம் இருந்த அடிப்படை சுபாவங்கள்தான். அதை அழித்துவிட இப்படி அருவருப்பான சித்ரவதைகள் மூலம் முயற்சிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்.

 p36b.jpg

ஒரு பிள்ளைத்தாச்சிப் பெண் ஆசைப்பட்டு சாப்பிடுகிற எந்தச் சாப்பாட்டையும், என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. என் வயிற்றில் இருக்கும் குழந்தைதான் அப்போது எனக்கு முக்கியமாகப் பட்டது. என்னைப் பட்டினி போட்டு, தாகத்துடன் தவிக்கவிட்டு, ரசிப்பதுகூட அவர்களது சித்ரவதைகளில் ஒன்றாக இருந்தது. இப்படி பட்டினி போட்டால், வயிற்றில் உள்ள குழந்தை இறந்து போகலாம். அதன் பிறகாவது என் மனதைக் கரைக்க முடியும். என் கணவரிடம் இருந்து என்னைப் பிரித்துவிட முடியும் என்ற தப்புக்கணக்கில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். சி.பி.ஐ கஸ்டடியில் இருந்த ஒவ்வொரு நாளும் நான் வேதனையை மட்டுமல்ல; கொடிய சித்ரவதையையும் அனுபவித்தேன். குறிப்பாக, கடைசி 20 நாட்களில் தினமும் என்னை இரவு, பகல் என்று தூங்கவே விடாமல் கொடுமைப்படுத்தினார்கள்.

ஒரு நாள், என்னை வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். எங்கெங்கோ சுற்றிக்கொண்டு, அடையாறு பகுதியில் உள்ள நவீன மருத்துவமனைக்கு அந்த வாகனம் சென்றது. ஒரு பெண் மருத்துவரின் வரவேற்பு அறையில் நிறுத்தி வைக்கப்பட்டேன். சில மணி நேரம் கழித்து உள்ளே அழைக்கப்பட்டேன். அந்த மருத்துவரால் நான் சோதனை செய்யப்பட்டேன். எனது உடலைப் பார்வையிட்ட அந்த மருத்துவரின் முகம் மாறத் தொடங்கியது. நிறைய இடங்களில் அடித்த காயமும் தழும்புமாக இருந்தது. என் கை, கால்களை விலங்கிட்டு வைத்திருந்ததால், அந்த இடமெல்லாம் சீழும், ரத்தமுமாகப் புண்ணாகி இருந்தது. மருத்துவருக்கு முகம் சுருங்கிப் போனது. என் உடலைச் சோதித்த அவர், ‘கரு நன்றாக வளர்ந்து விட்டதும்மா. காலம் கடந்துவிட்டது. இப்போது அபார்ஷன் செய்தால் உன் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். என்ன படிச்சிருக்க? இதெல்லாம் உனக்குத் தெரியாதா?. ஏன் அபார்ஷன் பண்ணனும்னு சொல்ற?’ என்று எதார்த்தமாகக் கேட்டார்.

இதுதான் சரியான தருணம் என்று நான் அவரது கைகளை கால்களாகப் பிடித்துக் கொண்டு,  அழுதபடியே நடந்தவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் உருக்கமாகக் கூறி முடித்தேன். ‘மேடம். இந்த குழந்தைக்காகத்தான். நான் இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து கலைத்து விடாதீர்கள்’ என இரு கரம் கூப்பி அழுதுபடியே வேண்டினேன். வெளியே நின்றிருந்த அதிகாரியை அழைத்த அந்த மருத்துவர், ‘இந்தப் பெண்ணின் கருவைக் கலைப்பதற்கான காலக்கெடு தாண்டிவிட்டது. இதற்குமேல் கருவை கலைப்பது டேஞ்சர். அந்தப் பெண்ணின் உடல் நிலையும் பலவீனமாக இருக்கிறது. அபார்ஷன் செய்தால் அவர் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை. அவரது உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’ என்றார்.

p36c.jpg

அப்போது அந்த அதிகாரி, ‘இல்லைங்க மேடம். இது மிக முக்கியமான கேஸ். மொத்த ரகசியமும் இவளிடம்தான் இருக்கிறது. ஒத்துழைக்க மாட்டேன் என்கிறாள். அதற்குக் காரணம் இந்தக் கருதான். இதை கலைத்து விட்டால், எங்களுக்கு எளிதாக வழி கிடைத்துவிடும்’ என்று வாதாடினார். அதற்கு அந்த மருத்துவர், ‘நான் சொல்வதைப் புரிந்து கொள்ளுங்கள். என்னால் அப்படிச் செய்ய முடியாது. ஒரே நேரத்தில் இரண்டு கொலையைச் செய்வதாக மாறிவிடும். தெரியாமல் நடப்பது வேறு. தெரிந்தே செய்வது கொலை. நான் அதற்குத் தயாராக இல்லை’ என்றார்.

அதற்கு அந்த அதிகாரி, ‘நாங்கள் இதை விரும்பிச் செய்யவில்லை. இந்த வழக்கோட தன்மை அப்படிச் செய்யவைக்கிறது’ என்றார். அதன் பிறகு இருவருக்கும், அதிக நேரம் விவாதங்கள் நடந்தன. ‘என்னால் முடியாது. நீங்கள் வேறு மருத்துவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று அந்த மருத்துவர் சொன்னார். பிறகு இறுதியாக, ‘உங்கள் டிபார்ட்மென்டிலேயே ஒரு மருத்துவ மனையை உருவாக்கிக் கொள்ளுங்களேன். அங்கிருப்பவர்கள் உங்களின் உத்தரவை ஏற்றுச் செயல்பட வாய்ப்பிருக்கும்’ என்று சொல்லி கடுமையாகத் திட்டி , ‘தயவுசெய்து வெளியே சென்றுவிடுங்கள்’ என்றார்.

எனக்கு அந்தப் பெண் மருத்துவரின் துணிச்சலைக் காண பிரமிப்பாக இருந்தது. எனக்கு அந்தப் பெண் மருத்துவர் யார் என்றே தெரியாது. ஆனாலும், என் மனதில் தெய்வமாக நின்று விட்டார். அன்று அவர் துணிந்து கருக் கலைப்பை செய்திருந்தால், அந்தக் குழந்தை பிறந்து வளர்ந்து படித்து, இன்று லண்டனில் ஒரு மருத்துவராக மாறி இருக்கமுடியாது. நானும் இப்படி எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். இருவருமே செத்துப் போயிருப்போம். அதனால்தான் சொல்கிறேன். அந்தப் பெண் மருத்துவர் எனக்குத்  தெய்வமாகத் தோன்றினார். இன்றும் எனது தினசரிப் பிரார்த்தனையில் அவருக்காகவும் வேண்டிக் கொண்டு வருகிறேன். அவரும், அவரது குடும்பத்தாரும், நீடூடி வாழ வேண்டும். அதன்பிறகு எனக்கு நடந்த விசாரணைகள் எல்லாம் மோசமாகத் தொடர்ந்தன.

என் கருவைக் கலைத்துவிட வேண்டுமென, இவ்வளவு மெனக்கெட்ட வர்கள் எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்ற பயம் என் உறக்கத்தைக் கெடுத்தது. தூங்கும்போது, பக்கவாட்டில் கூனிக் குறுகி, கைகளால் வயிற்றைப் பாதுகாத்த வண்ணமே படுப்பேன். நான் தூங்கும்போது ஏதாவது ஊசியைப் போட்டுவிட்டால் என்னாவது என்ற பயம்.

p36d.jpg

விசாரணைக்கு என வந்த அதிகாரிகளுக்கு ஒரு வெறியும், மோகமும் இருந்தது. பதவி உயர்வு என்ற வெறியும், ஊதிய உயர்வு என்ற மோகமும்தான் அது. அதே நேரத்தில் எல்லா அதிகாரிகளும், காவலர்களும் பதவி  வெறியில் இருந்தார்கள் எனக் கூற முடியாது. எனது தாலியை அறுத்தெறிந்தவர்தான் தலைமைப் புலனாய்வு அதிகாரியான ரகோத்தமன். ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் மனசாட்சி உள்ளவராகவே நடந்துகொண்டார். எனக்கு ஏதும் நடந்துவிடக் கூடாது என பகல் முழுவதும் தன் பார்வையில் வைத்திருப்பார். எனக்கும், என் கணவருக்கும் நடந்த சித்ரவதைகள் பெரும்பாலும் அவர் இல்லாத நேரங்களில் நடந்தன. சிலவற்றை அவரால் தடுக்க முடியவில்லை. அவருக்கும் மேலாக ஒருவர் உத்தரவிட்டுக் கொண்டு இருக்கும்போது பாவம் அவரால் என்னசெய்ய முடியும்? 

என்னைக் கடைசியாகத் தொடர்ந்து 20 நாட்கள் சித்ரவதை செய்து, விசாரித்த 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் தியாகராஜனும் ஒருவர். மிக மோசமான சித்ரவதையைக் கையாண்டவர். நான் கைகூப்பி கதறியபடி அவரது காலில் விழப்போனேன். பட்டென்று என் மார்பில் அடித்த வேகத்தோடு, என் சுடிதார் துப்பட்டாவை அப்படியே பிடித்து இழுத்தார். அவர் இப்படிச் செய்வார் என எதிர்பார்க்கவே இல்லை. ‘இது தொடக்கம்தான். வெளியே பையன்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உன்னை நிர்வாணமாக்கி விட்டு, வெளியே போய்விடுவேன். பிறகு என்ன நடக்கும் என்று புரிகிறதா?’ என முறைத்தார். மேலும் ஒரு அடி முன்னே வந்து, சுடிதார் துணி மீது கை வைத்து இழுத்தார். அது கிழியத் தொடங்கியது. அதற்கு மேலும் என்னால் நிற்க முடியவில்லை. படாரென்று விழுந்துவிட்டேன். ’சார் வேண்டாம். நீங்கள் சொல்கிறபடியெல்லாம் கேட்கிறேன் சார். என்னை எதுவும் செய்யாதீங்க’ என்று கதறியபடியே அவருடைய காலில் விழுந்து விட்டேன். அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவர். பேசாமல் சென்று அவரது நாற்காலியில் அமர்ந்துவிட்டார். பிறகு, கணினியில் ஏற்கெனவே தட்டச்சு செய்து வைத்திருந்த, தாள்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு தாளாக எடுத்து, அதில் என்ன எழுதப்பட்டிருந்ததோ அதை தன் கைபட எழுதிக் கொண்டிருந்தார். அதில் உள்ளதை அப்படியே எழுதினால், முழுக்க முழுக்க அவர்களாகவே எழுதிய போலி வாக்குமூலம் எனத் தெரிந்துவிடும் என நினைத்து, அவ்வப்போது என்னிடமும் சில வார்த்தைகளை, நிகழ்வுகளைக் கேட்டு அதையும் குறுக்கே சேர்த்துக்கொண்டு வந்தார். அதாவது, பல பொய்களுக்கு மத்தியில், ஒரு உண்மையைப் போட்டு எழுதி வந்தால், மொத்தமும் உண்மையாகி விடும் என்பார்களே அப்படி.

தடா சட்டப்படி, ஒருவர் மனம் உவந்து கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து, மற்ற கைதிகளுக்கானத் தண்டனையையும் வாங்கித் தரமுடியும். இது எனக்கு அப்போது தெரியாது. அவர் விருப்பப்படியே தயாரித்த வாக்குமூலத்தில் என் கையொப்பங்களை வாங்கிக் கொண்டார்கள். சி.பி.ஐ கஸ்டடியில் வைத்திருந்த 60 நாட்களும் இப்படிச் சித்ரவதைகளோடுதான் கழிந்தன.

எங்கள் எல்லோரிடமும் வாக்குமூலம் வாங்கிய ஐ.பி.எஸ் அதிகாரி தியாகராஜன், 22 ஆண்டுகள் கழித்து ‘நான் நீதிப்பிழை செய்துவிட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார். பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை நான் எழுதியபோது ‘எதற்கு எனத் தெரியாமல்’ என்ற வார்த்தையை எழுதாமல் விட்டுவிட்டதாக தியாகராஜன் சொல்லி இருக்கிறார். சுற்றி வளைத்து தன்னை ஒரு நேர்மையான அதிகாரி போன்று காட்டிக்கொள்ள அவர் ஆசைப்படுகிறார். தியாகராஜன் பேட்டி கொடுத்ததாக, ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பேட்டியில், ‘1991 மே மாதம் 7-ம் தேதிக்கு முன்பாக ஒரே ஒரு பெண்ணைத் தவிர வேறு யாருக்கும் ராஜீவ் காந்தி கொலைச் சதி பற்றித் தெரிந்திருக்கவில்லை என்பதற்கு வயர்லெஸ் செய்திகள் ஆதாரமாக உள்ளன’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.

p36a.jpg

‘ஒரு பெண்ணைத் தவிர’ என்று குறிப்பிடும்போது அங்கே என் புகைப்படத்தை இடைச்செருகல் செய்து காட்டுகிறார்கள். நளினியாகிய என்னிடம் இருந்து புலிகளின் தலைமைக்குத் தகவல் போயிருப்பதாகக் காட்சி அமைப்பை உருவாக்கிக் காட்டி இருக்கிறார்கள். இது எப்படியான விஷமத்தனம். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ஆவணங்கள், குற்றவாளிகளின் வாக்குமூலங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், மேல் முறையீட்டை எடுத்து நடத்திய உச்ச நீதிமன்றம் ஆகிய அனைத்திலும், எந்த இடத்திலும் அப்படி ஒரு தகவலை, செய்தியைச் சொல்லவே இல்லை. ஜெயின் கமிஷன் விசாரணையிலும் சரி, வர்மா கமிஷன் அறிக்கையிலும் சரி அப்படி எந்த ஒரு குறிப்புமே இல்லை. சிவராஜன் வன்னிக்கு அனுப்பியதாகச் சொல்லும் அந்த வயர்லெஸ் உரையாடலில் ‘தமிழகத்தில் சிவராஜன், தணு, சுபா ஆகிய 3 பேரைத்தவிர வேறு யாருக்கும் கொலைச் சதித்திட்டம் தெரியாது’ என்றுதான் இருக்கிறது. இதைத்தான் உச்ச நீதிமன்றமும் தன்னுடைய தீர்ப்பில் பல இடங்களில் சுட்டிக்காட்டி இருக்கிறது. எந்த இடத்திலும் கொலைச் சதி பற்றிய தகவல் நளினியாகிய எனக்குத் தெரிந்திருந்ததாகவே கூறப்படவில்லை. ஆனால் நான் கால் நூற்றாண்டு காலமாக எல்லாத் துன்பங்களையும் அனுபவித்துவிட்டேன்.

இந்த நிலையில்தான், பிரியங்கா என்னைச் சந்திக்க வந்தார். அவர் வரும் வரை யார் வரப்போகிறார்கள் என்றும் தெரியாது. வந்தபிறகும் இவர்தான் பிரியங்கா என்றும் தெரியாது!

- அது பற்றி அடுத்த இதழில்...

தொகுப்பு: ஜோ.ஸ்டாலின், ஆ.நந்தகுமார்


‘‘முருகனே நளினியிடம் பேசி அனுமதி வாங்கித்தந்தார்!”

ந்தப் புத்தகத்தை எழுதி இருக்கும் பத்திரிகையாளர் பா.ஏகலைவன், ‘‘2010-ம் ஆண்டு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தார். அவரைப் பார்க்க, நானும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமியும் வேலூர் சிறைக்குச் சென்றிருந்தோம். அப்போதுதான், ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய ஐந்து பேரையும் நேரில் சந்தித்தேன். அந்த நேரத்தில், இந்த வழக்கில் வெளியில் தெரியாமல், புதைந்துகிடக்கும் பல விஷயங்களை உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இதில் முதல் குற்றவாளியாக இருக்கும் நளினியின் தரப்பு இதுவரை வெளியிலேயே வரவில்லை. அதனால், நளினியின் தரப்பில் இருந்து இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்றும் நினைத்தேன்.

p36.jpg

என்னுடன் பேசிக்கொண்டிருந்த முருகனும், தனக்கும் இப்படி ஒரு எண்ணம் இருப்பதாக தெரிவித்தார். புத்தகம் எழுத முடிவானது. நளினியிடம் பேசி முருகனே அதற்கு அனுமதியும் வாங்கினார். முருகன்  நளினி மூலமாக சொன்ன வாய்வழித் தகவல், பலநூறு பக்கங்களைக் கொண்ட அவர்களின் வழக்கு ஆவணங்கள் உள்ளிட்டவைதான் இந்தப் புத்தகத்துக்கு மூலம். சமயங்களில் நான் முருகனிடம் இருந்து விவரங்களைப் பெற முடியாத நேரத்தில், வேலூரைச் சேர்ந்த தம்பி கி.டி.சரவணன், ஈரோட்டைச் சேர்ந்த தம்பி பேரறிவாளன் ஆகியோர் முருகனிடம் இருந்து விவரங்களைப் பெற்றுத் தந்தனர். புத்தகம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பிறகு, வழக்கறிஞர் புகழேந்தியின் மூலம் சில தகவல்கள் மற்றும் பெயர் விவரங்களை உறுதிப்படுத்தினேன். அதன்பிறகு, இந்தப் புத்தகம் நளினிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவர் அணிந்துரை வழங்கினார். மொத்தமாக, என்னுடைய 6 ஆண்டுகால உழைப்பின் விளைவாக இப்போது புத்தகம் முழுமை அடைந்துள்ளது” என்றார். 

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

“தணுவை தள்ளிவிட்டது யார்?” - பிரியங்காவிடம் நளினி சொன்ன ரகசியம்

 

‘ராஜீவ் கொலை : மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா சந்திப்பும்’ என்ற தலைப்பில், நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் மூன்றாம் பகுதி இது!

‘‘19-03-2008 திங்கட்கிழமை. என்னைக் கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அவருக்குப் பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தார். அந்தப் பெண் என்னை உற்றுப் பார்த்தார். அவர் யார் என்று எனக்குத் தெரிந்ததும் எனது நாடி நரம்புகள் தளர்ந்துவிட்டன. ‘நான் பிரியங்கா காந்தி’ என்று அவர் சொன்னார். உடனே அவரது கையைப் பிடித்து அழவேண்டும் என்று தோன்றியது. தன் அருகில் உட்காருமாறு இரண்டு மூன்று தடவை அவர் சொன்னபிறகுதான் உட்கார்ந்தேன். தலையைக் குனிந்து உட்கார்ந்து இருந்தேன். சில நிமிடங்கள் கழித்து நிமிர்ந்து பார்த்தேன். அவரது கன்னங்கள் சிவந்து போயிருந்தன.

‘ஏன் அப்படிச் செய்தீர்கள்? எங்க அப்பா மிக மென்மையானவர் ஆயிற்றே. நல்லவர் ஆயிற்றே! எதுவானாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாமே? ஏன் அப்படிச் செய்தீர்கள்?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டவர் அழத் தொடங்கினார். நானும் அழ ஆரம்பித்துவிட்டேன். ‘ஐயோ மேடம் எனக்கு எதுவும் தெரியாது. நான் ஒரு எறும்புக்குக்கூடத் தீங்கு நினைக்க முடியாதவள். என் சந்தர்ப்பம், சூழ்நிலை என்னை இப்படிக் குற்றவாளியாக நிறுத்தி இருக்கிறது. மனதளவில்கூட நான் யாருக்கும் தீங்கு நினைக்காதவள்’ என்று சொல்லி அழுதேன்.

p12b.jpg

அவரை அழுகையை நிறுத்தும்படி சொன்னேன். சில நிமிடங்கள் கழித்து இருவரும் ஓரளவு அமைதியாக ஆனதும் நான் சொல்ல ஆரம்பித்தேன்:

‘‘எனக்கோ என் கணவருக்கோ இந்தச் சதி பற்றி எதுவுமே தெரியாது மேடம்! என் கணவர் உண்மையில் வெளிநாடு சென்று வேலை செய்து பிழைத்துக்கொள்ள வேண்டித்தான் சென்னை வந்தார். அதற்கு ஆதாரமாக இரண்டு கடிதங்கள் இருந்தன. ஒன்று சுவிட்சர்லாந்தில் இருந்து அவரது சித்தி அருள் வசந்தா எழுதிய கடிதம். மற்றொன்று கனடாவில் உள்ள கணவரின் பெரியப்பா மகள் ஜெயம் எழுதிய கடிதம். இரண்டில் ஒரு கடிதத்தை எங்களிடம் காட்டி விசாரித்தார்கள். ஆனால், ஆவணப்படுத்தாமல் மறைத்துவிட்டார்கள். அது ஆவணமாக்கப்பட்டிருந்தால் என் கணவர் குற்றச் சதியில் ஈடுபட இங்கே வரவில்லை என்பது உறுதியாகி இருக்கும். அதனால்தான் மறைத்தார்கள். ஆனால், சித்தி எழுதிய கடிதம் அரசுத் தரப்பு ஆவணம் 452-ஆக உள்ளது. அதில், கணவரது சித்தி விரைவில் சுவிஸுக்கு அழைப்பதாக எழுதியுள்ளார்.

என் கணவர் ‘ஆங்கிலப் பயிற்சிக் கல்லூரிக்குப் போவதாகக் காட்டிக் கொண்டு சதித்திட்ட வேலைகளில்தான் இருந்தார். அவர் கல்லூரிக்குச் சரியாகவே செல்லவில்லை’ என்று உண்மைக்குப் புறம்பாகக் கூறி, அதற்கான பொய் ஆவணங்களை சி.பி.ஐ காட்டியது. ஆனால், சாட்சி சொல்ல வந்த கல்லூரி நிர்வாகம், ‘முருகன் தினமும் நாள் தவறாமல் வந்து முழு நேரமும் பங்கேற்றிருந்தார். தொடர்ந்து அடுத்த கோர்ஸும் படிக்க அதே கல்லூரியில் சேர்ந்து இருந்தார்’ எனச் சொன்னதை சி.பி.ஐ அதிகாரிகள் மறைத்தார்கள். வெளிநாட்டில் போய்ப் பிழைக்க ஆங்கிலம் அவசியம். அதனால் இரு கல்லூரிகளில் காலையும், மாலையும் படித்தார். இதற்கும் சி.பி.ஐ-யின் சாட்சியங்களும் ஆவணங்களுமே சான்றாக உள்ளன. ஆனால், இவர் வெளிநாடு செல்லத்தான் இந்த முயற்சிகளை எடுத்திருந்தார் என்பது வெளிப்பட்டுவிடும் என்பதால் எல்லாவற்றையும் மறைத்தார்கள்.

p12c.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடுமையான கட்டுப்பாடு ஒன்று இருக்கிறது. திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு 26 வயதும், பெண்களுக்கு 21 வயதும் நிறைவடைந்து இருக்க வேண்டும் என்பதுதான் அது. அனுமதி இன்றி யாரும் திருமணம் செய்ய முடியாது. அதை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும். பொதுவாக யாரும் அப்படி மீறுவது இல்லை என்பதே அங்குள்ள செய்திகள்.

அப்படி இருக்க விடுதலைப்புலிகள் அமைப்பில் என் கணவர் தீவிரமாகச் செயல்பட்டவர் என்றால், எப்படி 21 வயதில் திருமணத்துக்கு சம்மதித்து ஒப்புக்கொண்டிருக்க முடியும்? திருமணம் செய்துவிட்டு ஊருக்குப் போவதற்காக வேதாரண்யம் கடற்கரையில், படகுக்காக ஏன் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்? அவர் இயக்கத்தில் இருந்திருந்தால் திருமணம் செய்துகொண்டு ஊருக்குப் புறப்பட்டிருக்க முடியாது. எங்களுக்குள் திருமணம் நடந்தது என்பதையே சி.பி.ஐ மறைத்தது

‘கழுத்தில் தாலி, காலில் மெட்டி, இரண்டு மாத கர்ப்பிணி, தாஸ் என்ற முருகன்தான் என் கணவர்’ என்ற பதிவு எல்லாம் நீதிமன்றத்தில் இருக்கும்போது, சி.பி.ஐ-யினர் என்னை ‘மிஸ் நளினி’யாகவே வைத்திருந்தார்கள். காரணம் திருமணத்தை ஒப்புக்கொண்டால், முருகன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது உறுதியாகிவிடும். அவர் நிரபராதி என்றால், நானும் குற்றமற்றவளாகி விடுவேன். அது நடந்தால் உண்மைக் குற்றவாளி களைப் போய் தேட வேண்டும். அது சாத்திய மில்லை என்பதால், எங்களது கதையை இப்படி முடித்துவிட்டார்கள்.

 அந்த காலகட்டத்தில் புலிகளின் நிறையப் படகுகள் வேதாரண்யம் கடற்கரைப் பகுதிக்கு வந்து சென்றபடி இருந்தன என சி.பி.ஐ அதிகாரிகளே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். தினமும் நினைத்த நேரத்தில், தமிழகம் வந்து போகும் வசதி அவர்களிடம் இருந்தது என்றும் சொல்கின்றனர். என் கணவரை இரண்டாம் கட்டத் தலைவர் என்கிறார்கள் தீர்ப்பில். அப்படி இருக்க அதன் மூலம் தொடர்புகொண்டு படகை வரவழைத்து சென்றிருக்கலாம் அல்லவா. சி.பி.ஐ சித்தரித்தபடி ஒரு இரண்டாம்கட்டத் தலைவர் ஒரு வாரம்வரை காத்திருந்துவிட்டு படகு வரவில்லை என்று திரும்பி வரவேண்டியது ஏன்? வாக்கி டாக்கியில் ஒரு செய்தி சென்றால் படகுகள் வந்து அழைத்துச் சென்றிருக்குமல்லவா? ஏன் அப்படி நடக்கவில்லை? ஏனென்றால், அவர் சாதாரண நபர்!

நான் கர்ப்பிணி என்ற விஷயத்தை என் கணவர் அவரது நண்பர்களுடன் ஆன்மிக தல யாத்திரையில் இருந்தபோது தொலைபேசியில் (குண்டு வெடிப்புக்கு முன்பாகவே) அவரிடம் சொன்னேன். அவர் சந்தோஷ பரபரப்பில், ‘இதோ சீக்கிரம் திரும்பி வந்துவிடுகிறேன்’ என்றார். பெரிய தலைவரைக் கொல்லச் சதி செய்துவிட்டு, நண்பர்களுடன் அவரால், கோயில்களை சுற்றிக்கொண்டு இருக்க முடியுமா? நான் கருவுற்று இருப்பது  தெரிந்துகொண்டு இப்படியெல்லாம் சந்தோஷப்பட்டிருக்க முடியுமா? எதிர்காலம் பற்றி யோசித்திருக்க முடியுமா?21-5-1991 அன்று என்னை மட்டும் பொதுக்கூட்ட இடத்துக்கு அனுப்பிவிட்டு அவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்க முடியுமா?

எந்தப் பெண்ணாவது ‘தன் முதல் கர்ப்பத்துக்கு ஆபத்து வரும்’ என்பது தெரிந்தே அந்த  இடத்துக்குப் போயிருப்பாளா? அப்போது நான் கர்ப்பத்தின்  மிக ஆரம்ப நிலையில் இருந்தேன். சிறிய அதிர்ச்சி, நீண்ட தூரப் பயணம், நடை எல்லாம் கர்ப்பத்துக்கு ஆபத்தாக முடியும் என்பது எனக்குத் தெரியும். என் அம்மா 25 வருடங்களாகக் கர்ப்பிணிகளைக் கையாள்வதிலும் பிரசவம் பார்ப்பதிலும் திறமை பெற்ற தாதியாக இருந்தவர். அதனால் நானும் ஓரளவு அப்படியான விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தேன்.

p12d.jpg

1991 மே மாதம் 7-ம் தேதி வி.பி.சிங் கூட்டத்தில் கலந்து கொண்டதை ஒத்திகை என்று சி.பி.ஐ தரப்பு சொல்கிறது. ஆனால், உச்சநீதிமன்றமோ, அந்த சம்பவத்தில், நானும் என் கணவரும் ஒத்திகைப் பங்காளர்கள்தான் என எடுத்துக் கொள்ள முடியாது என்று ஒரு இடத்தில் மறுத்துள்ளது. அதுமட்டுமின்றி, அதே சி.பி.ஐ-யினர் நீதிமன்றத்தில் காட்டிச் சொன்ன வயர்லெஸ் ஆவணப்படி ‘சிவராசன், சுபா, தணு’ ஆகிய மூவரைத் தவிர வேறு யாருக்கும் இந்தச் சதித்திட்டம் பற்றித் தெரியாது’ என்பதை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்துகிறது. அப்படி இருக்கும்போது எனக்கும் என் கணவருக்கும் தெரியும் என்பது திரிக்கப்பட்ட கற்பனை கதைதானே?

பிரியங்கா : ‘இலங்கையைச் சேர்ந்தவர் என்றால் புலிகளுடன் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று உனக்குத் தெரியாதா?’

நான் : ‘எனக்கு அந்தளவுக்கு அப்போது விவரம் இல்லை. அந்த நாட்களில் மத்திய அரசு, மாநில அரசு உட்பட எல்லா மக்களும் இலங்கைப் போராளிகளை ஆதரித்தார்களே மேடம்! அங்கு பல அமைப்புகள் இருந்தன என்றுதான் கேள்விப்பட்டேன். அவரது அண்ணன் போராளி அமைப்பில் இருந்து மூன்று வருடங்கள் முன் இறந்தது தெரியும். அங்கு நடந்த இனப் போராட்டத்தினால் அவரும் அவர் குடும்பமும் பாதிக்கப்பட்டு இருந்ததைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். அதனால் எனக்கு அவர் மீதும், அவர் குடும்பம் மீதும் அனுதாபம் ஏற்பட்டு இருந்தது. புலிகளைப்பற்றி என்னிடம் பெரிதாக எதுவும் பேசியது கிடையாது. என் கணவரும் அப்படி என்னிடம் பழகவில்லை. அவருக்கு எங்கள் வீட்டில் அடைக்கலம் தந்திருந்தோம். அந்த நன்றிக்காக என்னை என் அம்மாவுடன் மீண்டும் சேர்த்து வைக்க எடுத்துக்கொண்ட முயற்சியும் அக்கறையும்தான் அவரை என் கணவராக்கியது. இன்று வரை என்னிடம் உயிராகத்தான் இருக்கிறார். அவருக்குத் தெரிந்து இருந்தால் நான் இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள இடமே கொடுத்திருக்க மாட்டார். அறியாது சிக்கலில் மாட்டிவிட்டோம் என்று தெரிந்த பின் என்னையும் என் குடும்பத்தினையும் காப்பாற்ற அவர் ஏன் தன்னையே அர்ப்பணித்து இருக்க வேண்டும். தெரிந்து இருந்தால், முன்னாடியே காப்பாற்றி இருப்பாரே!

என்னைப் பிரதானக் குற்றவாளி என்று கூறுகிறார்கள். ஆனால், நான் சம்பவம் நடந்த நாள் அன்றும் அதற்கு முன்பும் எப்படி இருந்தேன் என்பதை அவர்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை. அந்த மே மாதத்தில் ஒரு நாள்கூட நான் அலுவலகத்துக்குப் போகாமல் இருந்ததில்லை. சம்பவ தினமான மே 21-அன்றுகூட வழக்கம் போலத்தான் அலுவலகத்துக்குப் போனேன். அரை நாள் விடுப்பு வேண்டும் என்றேன். அவர்களோ, ‘எதற்கு அரை நாள் லீவு. சிறிது நேரம் வேலை பார்த்துவிட்டுக் கிளம்புங்கள்’ என்று கூறினார்கள்.

நான் மிகச் சாதாரணமாகத்தான் இருந்தேன். என்னிடம் எந்தப் பதட்டமும் இல்லை. அரை நாள் வேலை செய்துவிட்டு பிறகுதான்  ராயப்பேட்டை வீட்டுக்குப் போகிறேன். சாட்சி விசாரணைகள் எல்லாம் அதைத்தான் தெளிவு படுத்தியிருக்கின்றன. கொலைச் சதி தெரிந்த ஒருவர் இப்படியெல்லாமா நடந்துகொள்வார்? என்று யாரும் யோசிக்கவேயில்லை. இப்படியெல்லாம்கூட ஒருவர் கொலைச் சதி குழுவில் இருக்க முடியுமா?

என் கணவரைச் சந்திக்கலாம், ஏதாவது சாப்பிடலாம் என்றுதான் அம்மா வீடு போனேன். கணவரைப் பார்த்து பல நாள் ஆயிற்று. எனக்கு ஒரே தவிப்பாக இருந்தது. அங்கு அவர் இல்லை. ஆனால், அந்த நேரத்தில் அவர் என்னைத்தேடிக் கொண்டு அலுவலகம் சென்றுவிட்டார். எனக்குப் பெரும் ஏமாற்றம். சாப்பிட்டுவிட்டு வில்லிவாக்கம் புறப்பட்டேன்.

p12a.jpg

அந்தக் காலகட்டத்தில், போலீஸிடம் சிக்கியப் பல போராளிகள் உடனடியாக சயனைடு குப்பியை கடித்துத் தற்கொலை செய்துகொண்டதும் நடந்தது. என் கணவர் குற்றவாளி என்றால் அதைத்தானே செய்திருக்கவேண்டும். ஏன் அப்படிச் செய்யவில்லை? அவரிடம் சயனைடு குப்பி இருக்கவில்லை என்பதுதான். கதை எழுதிய சி.பி.ஐ அதிகாரிகள் அதைப்பற்றி எழுத மறந்துவிட்டார்கள்.’

பிரியங்கா: ‘அவர்கள் தற்கொலையாளிகள் என்பது தெரியாதா?’

நான்: ‘இல்லை மேடம், தெரிந்திருந்தால் எப்படி போயிருக்க முடியும்?  சென்னையில் பிறந்து வளர்ந்த என்னால், அதனை ஜீரணிக்கத்தான் முடியுமா? எனக்கு என் குழந்தை முக்கியமல்லவா? ‘21-ம்தேதி மாலை வில்லிவாக்கம் வீட்டில் வைத்து சுபாவும் தணுவும் அந்தச் சதியைப் பற்றி என்னிடம் கூறினார்கள் என்றும், என் தம்பியின் வாக்குமூலத்தில், ‘சம்பவ இடத்துக்குச் சென்ற பிறகுதான் என் அக்கா நளினியிடம் அவர்கள் சதி பற்றி கூறியிருக்கிறார்கள்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது.’

பிரியங்கா: ‘உன் கணவர் இதுபற்றி சொன்னதாகத் தீர்ப்பில் உள்ளதே?’

நான் : ‘இல்லைங்க. அதற்கான சாட்சியச் சான்று எதுவுமே இல்லை. இந்த விஷயம் என் கணவருக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதில் சிவராசன் உறுதியாக இருந்தார் என்பதற்குத்தான் நிறைய சாட்சியச் சான்றுகள் இருக்கின்றன. என் கணவரின் வாக்குமூலம் முதல் மற்ற சாட்சிகளின் வாக்குமூலம் வரையான எல்லாவற்றிலும் கொலைச்சதி தெரிந்ததற்கான ஆதாரங்கள் ஏதுமேயில்லை.

கொலைச் சம்பவம் நடந்த இடத்துக்கு நாங்கள் பாரிமுனையில் இருந்து பேருந்தில் சென்றதாகத்தான் சி.பி.ஐ கூறியது. சாட்சி ஆவணங்களும் அதைத்தான் சொல்கிறது. அதோடு வெடிகுண்டை முதுகில் கட்டிக்கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள். ஓடும் பேருந்தில் நின்றபடி பயணிக்கும் வெடிகுண்டு பெண்ணால் யார் மீதும் மோதிவிடாமல் நின்றுகொண்டே போக முடியுமா? அப்படியே உட்கார நினைத்தாலும் முதுகில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு உட்கார முடியுமா? வழியிலேயே வெடித்திருக்க வாய்ப்பில்லை என கூற முடியாதே. திட்டமிடுபவர்கள் அப்படியா திட்டமிடுவார்கள்?

இன்னொரு முக்கிய விஷயம் மேடம்.... ஹரிபாபு எடுத்த கடைசிப் போட்டோவில், அந்தப் பொண்ணு தணுவின் வலது தோள் முதுகுப் பக்கம் கை வைத்து யாரோ ஒருவர் உங்கள் தந்தையை நோக்கித் தள்ளுகிற காட்சிப் பதிவாகி இருக்கிறது. அந்தக் கை யாருக்கு உரியது என்று இதுவரை கண்டுபிடிக்க முயற்சி செய்யப்படவே இல்லை மேடம். இதற்குப் பதிலும் இதுவரை சி.பி.ஐ சொல்லவில்லை.’

பிரியங்கா : ‘அப்படியானால் எப்படி அந்த இடத்துக்குப் போனீர்கள்?’

நான்: ‘பேருந்தில்தான் போனோம் மேடம். குறிப்பாக எனக்குச் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த ரிஸ்க்கினை எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதோடு அந்தப் பொதுக்கூட்ட இடத்தில், மாலை 6.30 மணிக்கு எல்லாம் சிவராசன், தணு ஆகிய இருவரும் என்னைவிட்டுப் பிரிந்து போய்விட்டார்கள். அதிலிருந்து சுமார் மூன்றரை மணி நேரம் கழித்தே அங்கு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. தொடக்கத்தில் தணுவைக் கொண்டுபோய் முக்கியப் பிரமுகர்களின் பகுதியில் நிற்க வைத்த சிவராசன் அங்கிருந்த நிர்வாகிகள் சிலரோடு சாதாரணமாகச் சிரித்துப் பேசியபடி இருந்ததைப் பார்த்ததோடு சரி. தணு அங்கு வந்து இருந்த காங்கிரஸ் பிரமுகர் கோகிலாவுடனும் அவர் மகளுடனும் நெருக்கமாகப் பழகியதைப் பார்க்க முடிந்தது. இதுவும் ஹரிபாபுவின் புகைப்படத்தில் பதிவாகி உள்ளது. பிறகு தலைவர் வரும் நேரத்தில், சுபா என்னைப் பிடித்திழுத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டார். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பில் நான் அவர்களுக்கு மறைத்துப் பாதுகாப்பு கொடுத்த தாகவும் அன்றிலிருந்தே நான் தலைமறைவாகி விட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். இப்படி எல்லாவற்றையும் ஆழமாகப் பார்த்தால் உண்மைக் குற்றவாளிகளை விட்டுவிட்டு எங்களைச் சிக்கவைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டுமே இதில் இருந்திருக்கிறது.

p12.jpg

சம்பவ இடத்தில் இறந்துபோன போட்டோ கிராபர் ஹரிபாபுவின் நிலை மற்றும் லதா கண்ணன், அவரது மகள் கோகிலா ஆகியோர்களது நிலைதான் என்னுடைய நிலையும். சதித்திட்டம் தெரிந்திருந்தால் ஹரிபாபு அருகில் இருந்து புகைப்படம் எடுத்திருக்க மாட்டார். கூடவே சுபா, தணு, சிவராசன், லதா கண்ணன் அவர் மகள் கோகிலா மற்றும் நான் உள்ளிட்டவர்களையும் படம் எடுத்திருக்க மாட்டாரே... அதே நிலைதான் எனக்கும். மே 21-ம் தேதிக்குப் பிறகு நாங்கள் சிவராசனுடன் 25-ம் தேதி அன்று திருப்பதி போய் வந்தோம். அந்தச் சதிபற்றி தெரிந்து இருந்தால் அவருடன் சேர்ந்து நாங்கள் திருப்பதி போயிருப்போமா? எனக்கு இங்கு குடும்பம் இருக்கு, வாழ்வு இருக்கு. அப்படி இருக்க இந்த முட்டாள் தனத்தினை யாராவது செய்து இருப்பார்களா? அதுவும் என் தம்பி பெயரிலேயே வாடகைக் கார் புக் செய்திருந்தோம். அப்படி செய்திருப் போமா? குற்றம் நடந்த பிறகும் நாங்கள் எப்படி அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று நினைத்திருப்போம். 26-ம் தேதி பத்திரிகைகள் மூலம்தான் கொலைச்சதியில் தணு சம்பந்தப் பட்டார் என உறுதியாகத் தெரிந்தது. அன்றுதான் அதுவரை நடந்ததை என் கணவரிடம் சிவராசன் சொல்கிறார். திருப்பதியில் இருந்து திரும்பிய மறுநாளே 27-5-91 அன்று எங்களின் வில்லிவாக்கம் வீட்டைக் காலி செய்துவிட்டோம். காரணம் சிவராசன் அங்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான். அது எல்லாம் சி.பி.ஐ ஆவணங்களிலேயே இருக்கின்றன. இந்தப் பின்னணியை எல்லாம் பார்த்தால், கொலைச்சதியில் எங்களுக்குத் தொடர்பிருக்கவில்லை என்பது தெரியவரும் மேடம்’

பிரியங்கா: ‘அதன் பிறகு சிவராசனைப் பார்க்கவில்லையா?’

நான்: ‘இல்லை’

பிரியங்கா: ‘ஏன் உடனே போலீஸுக்குத் தகவல் சொல்லவில்லை?’

நான்: ‘அந்த நேரத்தில் என் கணவரின் பாதுகாப்பு கருதி அப்படியிருந்து விட்டேன். அவருக்கு ஏதும் ஆபத்து வந்துவிடக்கூடாது. எப்படியாவது நல்லபடியாக வெளிநாடு போய்விட வேண்டும். அதற்கான ஏற்பாட்டைச் செய்யும் முகவர் பொறுப்பே சிவராசனிடம்தான் இருந்தது. அது கெட்டுவிடக்கூடாது. கூடவே எங்களை வேறு ஏதேனும் சதிவலையில் சிக்கவைத்து விடுவாரோ என்ற பயம் எல்லாம் சேர்ந்து அப்படியிருந்து விட்டேன். சிவராசனைப் பிடிக்க வேண்டும் என நினைத்திருந்தால் தாராளமாக எப்போதோ பிடித்திருக்கலாம்!’

- இப்படி நான் சொன்னதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் பிரியங்கா!’’

- அது பற்றி அடுத்த இதழில்...

http://www.vikatan.com/juniorvikatan/

  • தொடங்கியவர்

“நான் சாப்பிடும் உணவில் விஷ மாத்திரை கலக்கப்பட்டது”

 

நளினியின் சிறை சித்ரவதைகள்!

 

‘‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்” என்ற தலைப்பில் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் நான்காவது பகுதி இது...

‘‘நான் சொன்னதை மிக நிதானமாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. அவசியம் என்றால் மட்டுமே கேள்விகேட்டார். அப்போதுதான் எனக்கொரு மன உறுத்தல் இருந்தது.  ‘என்னைப் பற்றியும் என் கணவரைப் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோமே, என் கணவருடன் தூக்குமர நிழலில் இருக்கும் மற்ற இருவரைப் பற்றியும் பேசவேண்டும்; அவர்களும் குற்றமற்றவர்கள் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிவிட வேண்டும்’ என்று அவர்களைப் பற்றி பேசினேன். அதை அவர் விரும்பவில்லை. ‘அவர்களும் நிரபராதிகள்தான்’ என்று சொல்ல வந்தேன். ‘ஒரு தேசத்தின் மிகப்பெரிய தலைவர், முன்னாள் பிரதமரின் கொலை வழக்கு,  இவ்வளவு மோசமாகவா விசாரணை நடத்தப்பட்டது?’  என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவும் அவரது கோபம் இருந்திருக்கலாம்.

p16.jpg

எங்களின் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நீண்டது. 50 நிமிடங்கள் வரை நான் சொன்ன விளக்கத்தை எல்லாம் உள்வாங்கிக் கொண்டே சின்னச் சின்னக் கேள்விகளை எழுப்பியிருந்தார். நான் பேசி அவர் கேட்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவருக்கு வேண்டிய விளக்கங்களை, சந்தேகங்களைப் பெற்றுக்கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் பார்க்காமல், என்னிடம் வந்தார். என்னைச் சுதந்திரமாகப் பேசவிட்டு கேட்டுக்கொண்டிருந்தார். தேவையான இடங்களில் மட்டுமே குறுக்கிட்டுப் பதில் பெற்றார். மற்றபடி என்னை முற்றாகப் புறக்கணித்துவிடவில்லை என்பதே அவரின் மேலான குணத்தைக் காட்டியது.

எல்லாமும் பேசி முடித்து அவர் கிளம்பியபோது, ‘மேடம், நீங்கள் நல்லபடியாக வீடு போய் சேர்ந்தீர்கள் என்ற செய்தி எனக்கு வரும்வரை நான் சாப்பிடாமல்தான் இருப்பேன். நல்லபடியாக சென்றடைந்தீர்கள் என்ற தகவல் வந்த பிறகே சாப்பிடுவேன். அதனால், நீங்கள் நல்லபடியாக சென்றடைந்தேன் என்ற தகவலை எனக்கு கிடைக்க வழி செய்தால் எனக்கு நிம்மதி’ என்று நான் கூறியபோது அவரும் சாந்தமான முகத்தோடு, ‘ஒன்றும் பிரச்னை இல்லை. அப்படியே செய்கிறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பிப் போனார்.

நான் இப்படிக் கேட்டதற்கு எனது 17 வருடகால வலியே காரணம். போகிறபோது தற்செயலாக ஏதாவது அவருக்கு நடந்தாலும் அந்தப் பழி என்னை வந்து சேர்ந்துவிடும் என்ற பயம் என்னை கவ்விக்கொண்டிருந்தது. அப்படி மீண்டும் ஒரு பழி வருவதை தாங்கும் சக்தி துளி அளவும் இல்லை. ஏற்கெனவே நடைபிணமாக உள்ளோம். இனி என்ன இருக்கிறது?

சொன்னபடியே அடுத்த நாள் மதியம் நான் உணவை மறுத்து இருந்தேன். அந்தத் தகவல் சிறை அதிகாரிக்குப் போனது. அவர் டெல்லிவரை தொடர்புகொண்டு விசாரித்து, ‘மேடம் நல்லபடியாக வீடு போய் சேர்ந்திருக்கிறார்’ என்ற தகவலை மாலையில் கூறி அனுப்பினார். அதன் பிறகுதான் நான் இரண்டாவது நாளன்று இரவு உணவைச் சாப்பிட்டேன்.

இந்தச் சந்திப்பை பற்றி நான் வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. வக்கீலையும் அம்மாவையும் வரவழைத்து அவர்களிடம் மட்டும் சொல்லிவைத்தேன். அவர்களும் அதை வேறு யாரிடமும் கூறவில்லை. கமுக்கமாகவே வைத்திருந்தார்கள். பிரியங்கா அவர்கள் சந்தித்து சென்ற பிறகு 11 நாள் கழித்துதான் என் கணவர் என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் இதைச் சொன்னேன். ஒரு மாதம் கழித்து வேறு ஒரு வழக்கறிஞர் மூலம் அந்தத் தகவல் பரப்பப்பட்டது. அதன் பிறகு எங்கள் சந்திப்பின் சாதக பாதகம் பற்றி மீடியாக்கள் விதம் விதமாக எழுதித் தள்ளின. நாங்கள் வெளியிடாத ரகசியம் வேறு யாரால் தெரியத் தொடங்கியது; அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்றும் தெரியத் தொடங்கியது.

p16a.jpg

பிரியங்கா அவர்கள் என்னைச் சந்தித்தது வேறு வேறு விஷயங்களை எல்லாம் முடிச்சுப்போட்டு பேச வைத்துவிட்டது. அதில் முதலாவது அவர் என்னைச் சந்தித்த பிறகுதான், ‘நான் எதையோ சொல்லிவிட்ட பிறகுதான்’ இலங்கையில், இன அழிப்பு போர் தீவிரமடைந்து கோரமாக முடிந்தது என்று விஷமத்தனமானப் பிரசாரத்தை இங்கே சிலர் செய்தார்கள். இந்த உண்மை தெரியாத சிலரும் வலியின் காரணமாக என்னைத் தவறாகப் பேசினார்கள். சிலர் எரிகிற வீட்டில் பிடுங்கினவரை லாபம் என்று அவதூறு பரப்பினார்கள். சிலர் எனது விடுதலைக்கான ஆதரவினை முழுமையாகத் தடுத்துவிடத் திட்டமிட்டு அந்தப் பழிகளை என்மீது சுமத்தி பிரசாரம் செய்தார்கள். அப்படி பிரசாரம் செய்தவர்கள் நான் அப்படி என்னதான் சொன்னேன் என்றும் சொல்லி இருக்கலாமே? அப்படி என்னதான் என்னிடம் இருந்தது? வெளியில் உள்ள அவர்களுக்குத் தெரியாத விஷயமா உள்ளே இருக்கும் எனக்குத் தெரிந்திருக்கப்போகிறது?

எங்களை 60 நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருந்தார்கள். பல அதிகாரிகளிடம் பல தகவல்கள் இருந்திருக்கலாம். ஒரு வருடம் புலனாய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்கள், சிறப்பு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது, பிறகு பல்நோக்கு விசாரணை ஒன்று போடப்பட்டதே, அவர்களும் 15 வருடம் விசாரித்தபடி இருக்கின்றார்களே, இதிலெல்லாம் கிடைக்காத ஒரு தகவலுக்கா பிரியங்கா என்னைத் தேடி வந்திருக்கப் போகிறார்?

அவருக்கு ஏதோ ஒரு அவநம்பிக்கை இருந்திருக்க வேண்டும். நாங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை விரும்பிக் கொடுத்திருந்தோம் என்பதை அவர் நம்பவில்லை. பல ஆண்டுகளாக அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை அறிந்துகொள்வதற்காகக்கூட என்னை சந்தித்திருக்கலாம்.

சோனியாவை சந்தித்த பெங்களூரு ரங்கநாத் சொல்லாத தகவலையா நான் சொல்லி இருக்க முடியும்?

இலங்கையில், இறுதி  இன அழிப்புப் போர் 2007-ம் ஆண்டு வேகம் எடுக்கத் தொடங்கியது. அதற்கு முந்தைய ஆண்டே அந்தப் போருக்கு ‘ஆபரேஷன் பெக்கான்’ எனப் பெயரே வைத்துவிட்டிருந்தார்கள். இதற்கு ஓராண்டு கழித்து 2008-ல்தான் இங்கே வேலூர் சந்திப்பு நடந்தது. எனவே எனது சந்திப்புக்கும் இறுதிப் போருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரியங்கா எதிர்பார்த்து வந்தது என்னிடம் இருந்து அவருக்குக் கிடைத்து இருந்தால், அவர் திருப்தி அடைந்து இருக்க வேண்டும்; அவர் எனது விடுதலைக்கு வழிவகை செய்து இருக்க வேண்டும். ஆனால், எனக்கு சாதகமாக இருந்த சூழ்நிலைகள் அப்படியே எதிராக அல்லவா மாற்றப்பட்டுவிட்டன. சிறையிலும் எனக்குத் திட்டமிட்ட துன்பங்கள் இழைக்கப்பட்டன. விடுதலையைத் தடுக்க பல பழிகள் சுமத்தப் பட்டன. சிறைக்குற்றம் என ஒரு வழக்கும் ஜோடிக்கப்பட்டது. பின்பு உயர் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது.

இது தவிர அந்தச் சந்திப்புக்குப் பிறகு சிறையில், எனக்குத் திட்டமிட்ட உளவியல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்று நான் பைத்தியம் ஆகிவிட வேண்டும் அல்லது தற்கொலை செய்திட வேண்டும். இதனைக் குறிவைத்து விதம் விதமான இம்சைகள் என்மீது ஏவப்பட்டன. சிறைமாற்றம் செய்யப்பட்டேன். அவதிப்பட்டேன். கணவரைச் சந்திக்க அனுமதி இல்லாது  ஒரு வருடத்துக்கு மேல் அவதிப்பட்டேன். வாயும், வயிறும் அவிந்துபோய் உணவு எடுக்க முடியாமல், பல மாதங்கள் அவதிப்பட்டேன்.  இப்படி எனக்கு ஆக வேண்டும் என ஏதோ ஒரு மாத்திரையை எனக்கான உணவில் கலந்து தினமும் கொடுத்துள்ளார்கள். இதனை ஒரு மனச்சாட்சி கொண்ட காவலர் என்னிடம் சொன்ன பிறகு அவர்கள் தருகிற உணவினை அப்படியே வாங்கி ரகசியமாகக் கொட்டிவிடுவேன். பழங்கள், பிஸ்கட்டுகள் மட்டும் சாப்பிட்டு பல மாதங்கள் கழித்தேன். இவை எல்லாம் ஏன் நடந்தன... எப்படி நடந்தன என்பதை வெளியுலகுக்கு சொல்லக்கூடப் பயந்து கொண்டிருந்தேன். ஆனால், இவை அனைத்தையும் சிறைத்துறைத் தலைவருக்கு அவ்வப்போது புகாராக நானும் என் கணவரும் அனுப்பி இருக்கிறோம்.

 ஏதோ ஒரு வகையில், இந்தப் பெண் நிரபராதி என என்னைப்பற்றிப் பிரியங்கா நினைத்திருக்கலாம். ரகசியச் சந்திப்பை இந்தப் பெண் அம்பலப்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை இருந்து அதனாலும் பார்க்க வந்திருக்கலாம்.  ஆனால், அந்தச் சந்திப்பு, மனித நேயச் சந்திப்பாகத்தான் பேசப்பட்டது. இப்போது திரும்பிப் பார்க்கிறேன். அந்தச் சந்திப்பு நடந்து ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்களுக்கு நல்லது ஏதும் நடக்கவில்லை. ‘என்னோட காயத்தை ஆற்றிக்கொள்ள நடந்த சந்திப்பு’ என அறிக்கை கொடுத்திருந்தார் பிரியங்கா. ஒரு பேட்டியில், ‘அவரை மன்னித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அங்கே (வேலூர்) போனேன். போனபிறகுதான் அது தேவை இல்லை என்றாகிவிட்டது. அவரைச் சந்தித்தப் பிறகுதான் என் வேதனையும் நளினியின் வேதனையும் ஒன்றாக இருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்’ என மூன்று வரிகளில் கூறியிருந்தார். ஆக என்னை ஏதோ ஒரு வகையில் நிரபராதி என்பதை உணர்ந்துள்ளார். அதே நேரத்தில், அவரால் வெளிப்படையாக என் விடுதலையைப் பேசவும் முடியவில்லை. இந்தியா, சி.பி.ஐ என்ற கட்டமைப்பு குலைந்துபோய்விடக் கூடாது என்ற காரணமாகவும் இருக்கலாம்.

p16b.jpg

அவரைப் போலவே அவரது சகோதரர் ராகுல் காந்தியும் சொன்னார். ஜார்கண்ட் மாநிலத்தில், மாவோயிஸ்ட்டுகளால்  கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி பிரான்ஸிஸ் இந்துவார் வீட்டுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூற சென்றிருந்தார். அப்போது பிரான்ஸிஸினுடைய பிள்ளைகளிடம் பேசியபோது, ‘நானும் தீவிரவாதத்துக்கு என் தந்தையைப்  பலி  கொடுத்தவன் தான். அதன் வலி எனக்குத் தெரியும். அப்போது என்னுடைய வயது 19-தான். அதனால் உங்களின் வேதனை எனக்குப் புரிகிறது. துக்கத்தில் இருந்து மீண்டு வாருங்கள்’ என்று ஆறுதல் கூறினார். அப்போது அந்தப் பிரான்ஸிஸின் பிள்ளைகள், ‘எங்கள் தந்தையைக் கொன்றவர்களை நாங்கள் மன்னித்து விட்டோம். நீங்கள்....?’ என்று கேட்க, ‘நானும் உங்களைப் போலத்தான். அந்தக் கொலையாளி களை நான் என்றைக்கோ மன்னித்து விட்டேன்’ என்று பட்டென்று பதில் கூறியிருக்கிறார் ராகுல். இந்தச் செய்தி 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவலாக வெளிவந்தது. அதன் பிறகும் ஆறு ஆண்டுகள் கடந்திருக்கிறது. ஆனாலும் எங்களை விடுவிக்க விருப்பமின்றியே இருக்கிறார்கள்.

இதையெல்லாம் சுட்டிக்காட்ட காரணம், பிரியங்காவின் சந்திப்பு எங்களை விடுதலை செய்வதற்கானது அல்ல. வேறு அரசியல் காரணங்களுக்கானது என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது.’’

(சிவராஜனை சி.பி.ஐ ஏன் பிடிக்கவில்லை என்பது பற்றி அடுத்த இதழில்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

“சிவராசனை கைது செய்ய சி.பி.ஐ. விரும்பவில்லை!”

 

நளினி சொல்லும் ரகசியம்

 

‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி எழுதி, பத்திரிகையாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் 5-ம் பகுதி இது. இதில் சிவராசன் பற்றிய பகுதிகள் இடம் பெறுகின்றன:

ந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட சிவராசன் உண்மையில் பிடிக்க முடியாத நபரா... அல்லது பிடிபடாத நபரா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். எங்களைக் கேட்டால் மிகச் சாதாரணமாகவே சிவராசனைப் பிடித்திருக்கலாம். வேண்டும் என்றே அவரை ‘பிடிக்க முடியாத’ நபராக மாற்றிக் காட்டியது சி.பி.ஐ-யின் சிறப்புப் புலனாய்வு குழுதான். இந்தக் குற்றச்சாட்டை நான் வேண்டும் என்றோ, மேம்போக்காகவோ கூறவில்லை. இன்னும் சொல்லப் போனால் இது என் சொந்தக் கருத்தும் அல்ல. நான் சொல்வது அனைத்தும் சி.பி.ஐ-யினர் சொன்னவை. நீதிமன்றத்தில் பதிவான ஆதாரங்கள், பத்திரிகைச் செய்திகள், இன்னும் முக்கிய ஆவணங்களில் இருந்து மட்டுமே எடுத்துச் சொல்கிறேன்.

1991 மே மாதம் 21-ம் தேதி முன்னிரவு ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் நடக்கிறது.  சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் இருந்த இந்த வழக்கை, மத்தியப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. எடுத்துக்கொண்டு சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்தது. அதிலிருந்தே குற்றவாளிகளைத் தேடத் தொடங்குகிறார்கள்.

p30b.jpg

மே மாதம் 23-ம் தேதி தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் வைத்து சங்கர் என்பவரை கைது செய்தார்கள். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் இருந்த டைரியில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில் நளினி - தாஸ் என்ற பெயரில் எனது அலுவலக தொலைபேசி எண்ணும் அலுவலக முகவரியும் எழுதப்பட்டிருந்தது. எபினேசர் ஸ்டோர், ராபர்ட் பயஸ் என்ற பெயரில் உள்ள தொலைபேசி எண்ணும் இருந்தது. இந்த இரண்டு தொலைபேசி எண்களைவைத்து உடனே விசாரணையில் இறங்கிவிட்டனர். அந்த நிமிடமே நளினியாகிய நானும் ராபர்ட் பயஸும் சி.பி.ஐ. கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டோம். அடுத்தநாள் 24-ம் தேதி வந்த பத்திரிகைகளில், ‘சங்கர் என்ற விடுதலைப் புலி சென்னை புரசைவாக்க விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். அவரை சிவராசன் என்பவர்தான் தங்கவைத்து பணமும் கொடுத்தார்’ என்று வெளியானது. ஆக, சிவராசன் பெயர் 23-5-91 அன்றே சி.பி.ஐ. போலீஸாருக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

சங்கர் பிடிபட்டு, அவரிடம் இருந்த தொலைபேசி எண்களை எடுத்துக்கொண்டபோதே நான் அவர்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டேன் என்றால், அப்போதே என் கணவரும் அவர்களின் வளையத்துக்குள் வந்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும். 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால், நான் அலுவலகம் செல்லவில்லை. ஆனால், 23-ம் தேதி அன்றே நான் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வந்தபிறகு போலீஸார் அங்கு சென்று என்னைப் பற்றி விசாரணை செய்திருக்கிறார்கள். அடுத்து, 27-ம் தேதி மற்றும் 29-ம் தேதிகளில் என்னை அலுவலகத்துக்குத் தேடிவந்து விசாரித்துவிட்டுப் போனார்கள். அப்போதே என் அலுவலகம், வீடு ஆகியவற்றில் எல்லாம் கண்காணிப்பு போலீஸை நிறுத்தியிருப்பார்கள். அந்தக் கட்டத்தில், ராயப்பேட்டை வீட்டில் இருந்த என் கணவர், என்னைத் தேடி அடையாறில் உள்ள என் அலுவலகம் வந்து கொண்டிருந்தார். ஆக, அவரும் அவர்களின் கண்காணிப்பு வளையத்துக்குள்தான் இருந்திருக்க வேண்டும்.

மற்றொரு பக்கம், 23-ம் தேதியே ஹரிபாபுவின் கேமராவும், அதில் இருந்த புகைப்படங்களும் போலீஸாருக்குக் கிடைத்துவிட்டன. அதில் சிவராசன், தணு, சுபா மற்றும் என்னுடைய புகைப்படங்களும் இருந்தன. அந்தப் புகைப்படத்தில் இருந்தவர்கள் பற்றி துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அதாவது சங்கர் மூலமாக சிவராசன் பெயரும் ஹரிபாபு கேமரா மூலமாக சிவராசன் படமும் சி.பி.ஐ-க்கு கிடைத்துவிட்டன. கையில் சந்தன மாலையோடு நின்றிருந்த தணுவின் படம் 26-ம் தேதி பத்திரிகைகளில் வெளியானது. அடுத்த நாள் 27-ம் தேதி மாலை நாளேடுகளில் பைஜாமா- குர்தா அணிந்த சிவராசனுடைய படங்கள் வெளியாகின்றன.

ஹரிபாபு, புகைப்பட நிபுணர் சுபா சுந்தரத்தின் மாணவர் என்பதால் 23-ம் தேதியில் இருந்தே அவரை விசாரிக்கத் தொடங்கி 29-ம் தேதி அவரை கைதுசெய்தனர். அப்படியே ஹிரிபாபுவின் மற்ற நண்பர்களையும் விசாரிக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். ஆக இந்தப் பாதையிலும், கோணத்திலும் போலீஸ் உள்ளே நுழைந்து போய்க்கொண்டிருந்தது.

அதே போன்று ஜூன் 3-ம் தேதி அன்று என் தம்பி பாக்கியநாதனையும் விசாரிக்கத் தொடங்கினார்கள். அதாவது, தினமும் வந்து அழைத்துச் செல்வார்கள். விசாரிப்பார்கள். மதிய உணவுக்கு கொண்டுவந்து விடுவார்கள். மீண்டும் அழைத்துச் சென்று மாலையில் கொண்டுவந்து விடுவார்கள். மீண்டும் அதிகாலையில் வந்து அழைத்துக்கொண்டு போவார்கள். இப்படியே இருந்துவிட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு 6-ம் தேதி அன்று என் தம்பியை கைதுசெய்கிறார்கள். ஆக, எங்கள் வீட்டைச் சுற்றி போலீஸ் கண்காணிப்பு இருந்தபடியே இருந்துள்ளது. பேரறிவாளனை எடுத்துக்கொண்டால் மே 23-ம் தேதி அன்றே தமது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஊருக்குப் போய்விட்டிருந்தார். பிறகு, அவரையும் விசாரித்துக்கொண்டு ஜோலார்பேட்டை வரையிலும் போய் நின்றார்கள். அங்கேயும் போலீஸ் வளையம் போடப்பட்டுவிட்டது.

p30.jpg

இதற்கிடையில், என் கணவர் தொடர்ந்து எங்களின் ராயப்பேட்டை வீட்டில் தங்க முடியாத நிலை. அதாவது, எங்களின் காதல் திருமண விவகாரம் அம்மாவுக்குத் தெரிந்து, அது பிரச்னையானதால், நான்தான் தம்பி பாக்கியநாதனின் அச்சகத்தில் தற்காலிகமாக தங்கச் சொன்னேன். நான் வேலை முடிந்து தினமும் அவரைச் சென்று பார்த்துவிட்டு, உணவை வாங்கிக்கொடுத்துவிட்டு, பிறகுதான் வீட்டுக்குச் செல்கிறேன். என்னைப் பின்தொடர்ந்து கண்காணிக்கும் போலீஸாருக்கு நான் என் கணவரை சந்திப்பதும், அவர் அங்கே இருப்பதும் தெரிந்தபடிதான் இருந்திருக்கும். ஜூன் 6-ம் தேதி என் தம்பியை கைது செய்துகொண்டு போனபின்னர், மூன்று தினங்கள் கழித்து 9-ம் தேதி அன்று என் அம்மா, தங்கை கல்யாணி, தோழி பாரதி, மனநலம் குன்றிய மாமா இராசரத்தினம் ஆகியோரை கைதுசெய்தார்கள். அதே தினத்தில் ஜெயக்குமார், அவரது மனைவி சாந்தி, அவர்களின் குழந்தை ஆகியோரையும் கைதுசெய்தார்கள். அடுத்த நாள் ஜூன் 10-ம் தேதி அன்று ராபர்ட் பயஸ் அவரது குடும்பத்துடன் கைதுசெய்யப்பட்டார். மேலும் தொடர்ந்து தேடப்பட்டுக்கொண்டிருந்த பேரறிவாளன் 11-ம் தேதி அன்று சரண்டர் ஆக, அவரையும் கைதுசெய்ததாக அறிவித்தார்கள்.

மறுநாள் எனது புகைப்படம் பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கூடவே, என் கணவரின் விவரங்களும் அடையாளங்களும் தாஸ் என்ற பெயரில் வெளிவருகின்றன. அதற்கடுத்த நாளே கணவரின் புகைப்படமும் வெளிவருகிறது. ஆனால், அது கணவரின் உண்மையான புகைப்படம் அல்ல. கணவரின் அடையாளங்களை துல்லியமாகத் தெரிந்தவர் சொல்லச் சொல்ல கணினியில் தயார் செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் படம்தான் அது. அந்தப் படத்தில் என் கணவர் முகம் மிகத் துல்லியமாக இருந்தது. இவர்கள் எல்லாம் பிடிபட்ட பிறகு கடைசியாகத்தான் நாங்கள் ஜூன் 14-ம் தேதி நடு இரவில் சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கியபோது கைது செய்யப்பட்டோம். நாங்கள் அடையாளம் காட்டி யாரும் பிடிபட வாய்ப்பில்லை. கடைசியாகத்தான் நாங்கள் கைதாகினோம்.

சம்பவம் நடந்த மே 21-ம் தேதியில் இருந்து, ஜூன் மாதம் 14-ம் தேதி வரை இருபத்தி நான்கு நாட்களும் நான் மேலே சொன்ன நபர்களில் சிலரை எல்லாம் சிவராசன் தொடர்ந்து சந்தித்துக் கொண்டுதான் இருந்துள்ளார். இதனை சி.பி.ஐ-யினரின் ஆவணங்களே பல இடங்களிலும் பதிவு செய்திருக்கின்றன. சில சாட்சிகளின் வாக்குமூலமும் அப்படி இருக்கிறது. மே 23-ம் தேதி அன்றே சிவராசன் எங்களைச் சந்தித்தார். மே 25 மற்றும் 26-ம் தேதிகளில் எங்களோடு திருப்பதிக்கு வந்து திரும்பினார். அதன் பிறகு என் கணவரை இரண்டு தடவை சந்தித்தார். என் தம்பியையும் போய்ப் பார்த்தார்.

மே 25 முதல் ஜூன் 7 வரை  என் கணவரையும், விசாரணை கண்காணிப்புக்குள் இருந்த வேறு சிலரையும் மூன்று நான்கு தடவை சிவராசன் சந்தித்ததாக சி.பி.ஐ-யினர் கதை எழுதிவைத்து உள்ளனர்.

இந்த இடத்தில், சி.பி.ஐ. சொன்ன மற்றொரு கதையையும் பார்ப்போம்.

ஜூன் மாதம் 7-ம் தேதி அன்று சிவராசன், சுபா, சாந்தன், என் கணவர், நான் ஆகிய ஐந்து பேரும் அடையாறு அஷ்டலட்சுமி கோயிலில் ஒன்றாகச் சந்தித்து பேசிக்கொண்டதாகவும், அப்போது சுபாவுக்கு அங்கே இருந்த மருத்துமனையில் சிகிச்சை அளித்ததாகவும் ஒரு கதையை சொல்லியிருக்கிறார்கள். இந்த கதையின்படி பார்த்தால்கூட நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம்.

மற்றவர்களை விடுங்கள். என்னை அலுவலகம் வந்து விசாரித்தார்கள். தொடர்ந்து கண்காணித்தார்கள். அதன் பேரில் என்னிடம் வந்து போய்கொண்டிருந்த என் கணவரையும் பின்தொடர்ந்திருப்பார்கள். அப்படி இருக்கும்போது  சிவராசன் உள்பட நாங்கள் எல்லாம் ஒன்றாகப் பலமுறை சந்தித்துக்கொண்டபோது மட்டும் ஏன் பின்தொடராமல் சி.பி.ஐ. அதிகாரிகள் விட்டார்கள்? ஏன் பிடிக்காமல் விட்டார்கள்?

p30a.jpg

ஒன்று எங்களை எல்லாம் பின்தொடர்ந்து கண்காணித்ததாகச் சொல்வது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது தெரிந்தே சிவராசனை பிடிக்காமல் விட்டது உண்மையாக இருக்க வேண்டும். அப்படித்தானே.? எங்களில் யாரையாவது ஒருவரை பின்தொடர்ந்து கண்காணித்திருந்தாலும் சிவராசனை பிடித்திருப்பது சாத்தியம்தானே? பிறகு ஏன் சிவராசனை பார்த்து சி.பி.ஐ. விலகி விலகி ஓடிக்கொண்டிருந்தது என்பதற்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமியின், ‘ராஜீவ் காந்தி படுகொலை. தூக்குக் கயிற்றில் நிஜம்’ என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் எல்லாமும் விளங்கும்.

இதுதவிர, சிவராசனை கைது செய்யக்கூடிய மேலும் பல வாய்ப்புகள் நிறைய இருந்தன. சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைமையிடமான மல்லிகை கட்டடத்தில், ராஜீவ் கொலையாளிகளைப் பற்றித் தகவல் தருவதற்கு என்றே பல தொலைபேசி எண்களை அறிவித்திருந்தார்கள். அந்தத் தொலைபேசிகளைக் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதற்கு என்று ஒரு அதிகாரிகள் குழுவைப் போட்டிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே தமிழ் சுத்தமாக தெரியாது. ஆங்கிலமும் தெரியவில்லை. தெலுங்கு மற்றும் இந்தி தெரிந்தவர்களை மட்டுமே நியமித்திருந்தார்கள். திட்டமிட்டு வேண்டும் என்றே அப்படி செய்திருக்கிறார்கள். இதை சி.பி.ஐ-யில் இருந்த ஆய்வாளர் ஜெபமணி மோகன்ராஜ் இணையதளம் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில், ‘தமிழ்மொழி தெரியாத அதிகாரிகளைத்தான் அந்த இடத்தில் வைத்திருந்தார்கள்’ என ஆதங்கத்தோடு அம்பலப்படுத்தியிருக்கிறார். அதாவது, சிவராசன் குறித்த செய்திகளை சி.பி.ஐ. அறிய விரும்பவில்லை என்றே தெரிகிறது.

ஆகஸ்ட் 19-ம் தேதி அன்றுதான் சிவராசன் - சுபா பெங்களூருவில் தற்கொலை செய்துகொண்டதாக சொன்னார்கள். இடைப்பட்ட 2 மாதங்களில் சிவராசனை உயிருடன் பிடிப்பதற்கு எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக சாட்சியங்கள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு முறையும் மயிரிழையில் தப்பிவிட்டார் என்பது போல், அதாவது இருந்த இடத்தைவிட்டு சிவராசன் தப்பிப் போன மறுகணமே அங்கு போனதாக சொல்லிக்கொண்டார்கள். ஏன் அந்த கண்ணாமூச்சி நாடகம்?

இறுதியாக, பெங்களூருவில் சிவராசன் இருந்த வீடு சுற்றிவளைக்கப்பட்ட போதும் உடனடி நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. 20 மணி நேரம் வேண்டும் என்றே தாமதம் செய்தார்கள். மயக்க மருந்துக்காகத்தான் காத்திருந்தார்கள் என்றால் அதை டெல்லியில் இருந்து இந்திய ராணுவ விமானத்தின் மூலம் பெங்களூருக்கு எடுத்து வர ஒரு மணிநேரம் போதுமே. ஏன் இந்த நாடகம் நடத்தினார்கள்? சிவராசனை உயிருடன் பிடிப்பதை தவிர்த்தார்கள். அதுதான் உண்மை. ‘சிவராசனை உயிருடன் பிடிக்க சி.பி.ஐ. விரும்பவில்லை’ என்று இந்த வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனை பெற்று பிறகு விடுதலையான பெங்களூரு ரங்கநாத் நன்றாகவே தெளிவுபடுத்தி உள்ளார்.

என் கணவரை முதல் குற்றவாளியாக்க வேண்டும். அதற்கு ஏற்ப என்னை அப்ரூவராக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். அதற்காகவே எங்களுக்குத் திருமணம் நடந்துவிட்டது, கைதாகும்போது கழுத்தில் தாலி, காலில் மெட்டி, வயிற்றில் குழந்தை, கூடவே கணவர் இருந்தும்கூட, பெர்சனல் செர்ச் (Personal seach memo) மெமோவில் தாலி - மெட்டி அணிந்து இருந்ததைப் பதிவுசெய்து முதல் முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்்தியபோது குறிப்பிட்டிருந்தும் அதன் பிறகு தயார்செய்த ஆவணங்களில் எல்லாம் திட்டமிட்டு மறைத்து வைத்திருந்தார்கள். இப்படி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பார்த்தோமானால் சிவராசனை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கம் சி.பி.ஐ-யினருக்கு தொடக்கத்தில் இருந்தே இருக்கவில்லை என்பது தெரியும். முழுப் பூசணிக்காயையும் இலை சோற்றுக்குள் மறைத்து வைத்து சாதித்தவர்கள் கார்த்திகேயன் தலைமையிலான சி.பி.ஐ-யின் சிறப்பு புலனாய்வு குழுவினராகத்தான் இருக்க முடியும்.

(அடுத்த இதழில் முடியும்!)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

‘நியாயத்தைவிட அநியாயத்தையே காதலித்தார்கள்!’

 

‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி எழுதி, பத்திரிகையாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் 6-ம் பகுதி இது.

இந்தப் புத்தகம் பேசுகிறதா? இல்லை இந்தப் புத்தகத்தினுள் நான் பேசுகின்றேனா என்ற வியப்பு எனக்குள்.

என் மீது வீசப்பட்ட கொடிய வார்த்தைகள் எவ்வளவு? கொடை சாய்ந்துபோகும் அளவுக்கு திணிக்கப்பட்ட அவமானங்கள் எவ்வளவு? என்னை நானே அறியாதபடி என் முகம் முழுக்கக் கட்டுக்கதைகளாக சேறு பூசப்பட்டிருந்ததே, ஏன்? என்றோ செத்துப் போனவள் இன்று இந்தப் புத்தகத்தில் பேசுகிறாளே எப்படி என்று எனக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள். வேட்டையாடும் விலங்குகளுக்கு மான் என்ன அப்பாவி என்றா தெரியும்? சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக்குழுவின் செயலையும் நான் அப்படித்தான் பார்க்கின்றேன். அவர்கள் நீதியைவிட அநீதியின் மீதே அதிகம் ஆசைப்பட்டார்கள். நியாயத்தைவிட அநியாயத்தையே அதிகம் கட்டிக்கொண்டு காதலித்தார்கள். அதனால் அவர்கள் வீசிய வார்த்தைகளைப் பற்றியோ, சூட்டிய கதைகளைப் பற்றியோ எனக்கு வருத்தமோ, கவலையோ இல்லை. ஆனால், உடனிருந்தே உலை வைத்தவர்களை நினைத்துத்தான் வேதனைப்படுகிறேன். அப்பாவி எனத் தெரிந்தே என் மீது அழுக்குச் சேற்றைவாரி பூசியவர் களுக்காக வெட்கப்படுகிறேன். நினைத்துப் பார்க்கும்போதே நெடுந்துயரம் என்னைப் பிடித்தாட்டுகிறது. எல்லாவற்றையும் இந்தப் புத்தகத்தின் உள்ளே இறக்கிவைக்க முடிய வில்லை. இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு யுகத்தின் கதை சொல்லும். என் வேதனை உங்களையும் தாக்கிவிடக் கூடாதல்லவா?

p26a.jpg

2000-ம் ஆண்டு எனக்கு மட்டும் தண்டனை குறைப்பு நடந்தது. 2003-ம் ஆண்டு வரை என் வாய் கட்டப்பட்டு இருந்தது. அதன் பிறகு சில வருடங்கள் எனக்கு நானே வாய்கட்டி மௌனமாக இருந்து கொண்டேன். மிக நெருக்கடியான காலகட்டங்களில்கூட நான் ஏதும் பேசவில்லை. கணவர் உட்பட மூவருக்கு தூக்குக்கயிறு ஊசலாடியபடியே இருந்தது. அந்த நாட்களில் மூவர் கழுத்துகளையும் சுற்றி இருந்த தூக்குக்கயிறே பலரது கவலைக்கும், பதட்டத்துக்கும் காரணமாக இருந்தது. எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என தவித்துக் கொண்டிருந்தனர். அந்த வேதனையும் துடிப்பும் எனக்கு மிக அதிகமாகவே இருந்தது. அதுவே என்னை மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டவளாக மாற்றியிருந்தது.

எனது அந்த மௌனத்தையே சிலர் தங்களுக்கு சாதகமாக மாற்றி திட்டமிட்டு தவறுகளை சிறிதும் உறுத்தல் இன்றி மற்றவர்கள் உணரவே முடியாதபடி செய்து முடித்தார்கள். மரணக்கயிறு என்ற திரையை பிடித்துக்கொண்டு எனக்கு எதிராக விஷ அம்புகளை எய்தார்கள். அந்த விஷம பிரசாரமே என்னை 26 ஆண்டுகளைக் கடந்தும் சிறையிலேயே நிறுத்தி வைத்திருக்கிறது. அந்தச் சூட்சுமத்தை என்னவென்று கூற.? அதில் ஒரு சிலதையே இங்கே பதிவு செய்திருக்கின்றேன். ஏதோ நான்தான் தீவிரவாதியைப் போலவும், நான்தான் திட்டமிட்டு பலரையும் சிக்க வைத்ததைப் போலவும் பல கதைகள் வெளியே இருக்கின்றன. எல்லோரையும் போலத்தான் நானும் ஒரு அப்பாவி என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருபுறம் ‘கருப்பு’ பிரசாரங்கள் உண்மைகளைத் தடுத்துவிட்டது. மறுபுறம் அதிகாரமிக்க சி.பி.ஐ-யின் அரசு இயந்திரம் செய்த அசுரத்தனமான பொய்ப் பிரசாரம் பாய்ந்து தடுத்தது. நெஞ்சில் சிறிதும் ஈரமில்லாமல், மனதில் சிறிதும் கூச்சம் இல்லாமல் என் மீது அபாண்டமான அவதூறுகளை வீசும்போது நான் தடுக்கக்கூடாதா..? என் மீது வீசியடிக்கப்பட்ட சாக்கடைச் சேறுகளை நான் கழுவிடக்கூடாதா? அதைத்தான் இப்போது இந்தப்  புத்தகத்தின் வாயிலாக செய்திருக்கின்றேன். அனைத்துக்குமே ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் கூறுகின்றேன்.

உண்மையில் நான் யார்? என் குடும்பப் பின்னணி என்ன? எப்படி இந்த வழக்கிற்குள் சிக்கினோம்? எங்கள் குடும்பமே கைது செய்யப்பட்டதே, எப்படி? கைது செய்யப்பட்டதில் இருந்து எனக்கு நடந்த சித்ரவதைகள் என்ன? விழுந்த அவமான அடிகள் எவ்வளவு? கழுத்தைச் சுற்றிய சதிகள் எத்தனை?... என்ற அடுக்கடுக்கான கேள்விகள் பல உங்களுக்கு எழலாம். இப்படி பேசாத பல விஷயங்களுக்குமாக சேர்ந்தே புத்தகத்தினுள் பேசியிருக்கின்றேன். சிறையில் இருந்த தொடக்கக் காலம் நாங்கள் மிகவும் வறுமையில் திண்டாடிக் கொண்டிருந்தோம். அந்த நேரம் பல உணர்வாளர்கள் பொருள் உதவியை செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த உதவிகள் கூட எங்களுக்கு வந்து சேரவேயில்லை. இடையில் இருந்தவர்கள் தடுத்து விட்டிருந்தார்கள். அதுகூட என் அம்மா, தம்பி உட்பட 19 பேர் விடுதலையாகி வெளியே சென்ற பிறகு எட்டு ஆண்டுகள் கழித்துதான் தாமதமாக எனக்குத் தெரிய வந்தது. அப்போது நானும் என் கணவரும் எப்படி எல்லாம் தனிமைப்படுத்தப் பட்டிருந்தோம் என்பது யாருக்கும் தெரியாது. ஏன் எங்களுக்காக வழக்கறிஞராக முன் வந்தவர்களும்கூட தடுக்கப்பட்டிருந்தார்கள். அவற்றை எல்லாம் மீறி மூத்த வழக்கறிஞரான எஸ்.துரைசாமி, ராமதாஸ் அவர்கள் எனக்காக வழக்காட  முன் வந்தார்கள. 

p26b.jpg

உச்ச நீதிமன்ற விசாரணைக்கு சில நாட்கள் முன்பாக (1999-ல்) மூத்த வழக்கறிஞர் ஒருவர் என் கணவரிடம் சென்றார். ‘உன்னைக் காப்பாற்ற முயற்சி எடுத்தால் நளினியை காப்பாற்ற முடியாமல் போய்விடும். நளினியைக் காப்பாற்ற முயன்றால் உன்னை காப்பாற்ற முடியாதுப்பா. என்ன செய்வது” என்று கூறினார். அதற்கு என் கணவர், “என்னைக் காப்பாற்ற முடியாமல் போனால் பரவாயில்லை. என் குழந்தைக்கு அம்மாவாவது இருந்தாக வேண்டும். நளினியை எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள். அதுவே எனக்குப் போதும். என்னைப் பற்றி கவலையில்லை.” என்ற உறுதியைக் கொடுத்திருக்கிறார்.

அதே வழக்கறிஞர், பிறகு என்னிடம் வந்தார். “உங்களைக் காப்பாற்ற முயன்றால் மற்ற ஏழு பேரையும் காப்பாற்ற முடியாமல் போகும்மா” என்று உருகி பேசினார். நடுங்கிப் போன நான், ‘என் உயிர் போனாலும் பரவாயில்லை சார், மற்ற ஏழு பேரையும் எப்படியாவது காப்பாற்றினால் போதும். வேண்டுமானால் இப்போதே நான் எழுதிக் கொடுத்து விடுகிறேன்” என்று கூறிவிட்டேன். அந்த ஏழு பேரில் என் கணவரும் ஒருவர். அவர் தப்பித்தால் குழந்தைக்கு அப்பாவாவது இருக்கிறார் என்ற திருப்தியில் என் உயிர் போகும். அந்த நினைப்பில்தான் என்னால் மற்ற ஏழுபேரின் விடுதலையும் பாதிக்கக்கூடாது எனக் கூறினேன். (அப்போது 26 பேரில் எட்டுப் பேரை மட்டும் விசாரணைக்கு எடுப்போம் என நீதிபதிகள் கூறியிருந்தார்களாம். அதனால்தான் இப்படி ஒரு பேச்சு ஓடியது) அதனால்தானோ என்னவோ எங்களுக்குச் சாதகமான விவாதங்கள் அங்கே முன்வைக்காமல் விட்டார்கள். நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல எங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் போராடாமலேயே நிரபராதிகளான நாங்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டோம் என்ற வலி இன்றும் இருக்கின்றது. தொடர்ந்து நடந்த நெடிய சட்டப் போராட்டங்களால், என்னுடைய தூக்குத் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாகத் தமிழக அரசால் குறைக்கப்பட்டது.

ஆனால், எனக்கு அது மகிழ்ச்சியளிக்க வில்லை. என்னுடைய தண்டனைக் குறைப்பு சிலருக்கு பெரிய எரிச்சலையும், காழ்ப்பு உணர்ச்சியையும் ஏற்படுத்திவிட்டது. “ஏம்பா, சம்பவ இடத்திலிருந்த நளினியை விட்டுவிட்டார்கள். நிரபராதியான என் மகனைத் தூக்கில் போடப்போகிறோம் என்கிறார்களே. என்னப்பா நியாயம்” என்று என் மாமியாரும் சாந்தனின் அம்மாவும் ஊர்தோறும் பிரசாரம் செய்தால் எப்படி இருக்கும்? அரசும், அதிகாரிகளும் என்ன நினைப்பார்கள்? அந்தப் பொண்ணு குற்றவாளின்னு அவங்க ஆளுங்களே உறுதிப்படுத்துகிறார்களே? அவருக்கு தண்டனை குறைப்பு செய்து விடுவித்தால் மற்ற மூவரையும் விடுவித்தாக வேண்டுமே. அது சிக்கலை ஏற்படுத்துமே என்றுதானே நினைத்துக் கொள்வார்கள். அதுதானே எனக்கு நடந்தது.

p26.jpg

ராஜீவ் கொலை நடந்த அந்தப் பொதுக்கூட்டத்துக்கு நான் அவர்களோடு சென்றிருந்ததை வைத்துத்தான் என்னை முதன்மைக் குற்றவாளியாக்கினார்கள். அதை குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான கெ.டி.தாமஸ், என் சந்தர்ப்ப சூழ்நிலையை தெளிவாகவே குறிப்பிட்டு, எனக்கான மரண தண்டனையை குறைத்து தீர்ப்பு எழுதினார். ஆக மூவரில் ஒருவர் என்னை நிரபராதி, சந்தர்ப்ப வசத்தால் இந்த சதியில் சிக்கினேன் என்று கூறியிருக்கின்றார். எழுவர் விடுதலை என்ற ‘சிலர்’ இதைப்பற்றி எல்லாம் மக்களிடம் போய் பேசவில்லை. மாறாக, அவர்கள் எழுதிக்கொண்ட புத்தக மடலில் ‘எங்கள் வீட்டில்தான் சதித்திட்ட கூட்டம் நடந்தது என்ற சி.பி.ஐ-யினரின் பொய்யான குற்றச்சாட்டை பதிவுசெய்து, தவறான உள்நோக்கத்தை ஏற்படுத்தினார்கள். அப்படி ஒரு கூட்டம் எங்கள் வீட்டில் நடக்கவேயில்லை என்று சாட்சிகள் மூலம்  நிரூபணமான பிறகும் தொடர்ந்து புத்தகத்தின் மூலம் அந்த பிரசாரத்தை செய்து வருகிறார்கள். அதற்கு என்ன சொல்வது? என் மரணதண்டனைக் குறைக்கப்பட்டபோது தமிழக சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது. அப்போது ‘நளினியின் விடுதலை எப்போது’ என்ற கேள்விக்கு, ‘‘14 வருடங்கள் ஆன பிறகு நளினியின் விடுதலையைப் பற்றி பரிசீலிக்கப்படும்” என அன்றைய முதல்வர் அறிவித்தார். அது போன்ற ஒரு சூழ்நிலை கணிந்ததும் உண்மை. ஆனால் விடுதலை மட்டும் கிடைக்கவில்லை? கிணற்றில் போட்ட கல்லாக மாற்றிவிட்டார்கள்.

அடுத்த இதழில் தொடரும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

புதைகுழியில் தள்ளும் பொய்ப் பிரசாரங்கள்!

சிறையில் இருந்து நளினி...

 

‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி எழுதி, பத்திரிகையாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் 7-ம் பகுதி இது.

p16.jpg

டந்த 2005 ஆண்டளவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் சுமார் 70 சதவிகிதம் பேரும், குமுதம் வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் சுமார் 80 சதவிகிதம் பேரும் என் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனாலும் அரசு முன்பு எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டது. நீதிமன்றப் போராட்டங்கள் எல்லாமும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. என் விடுதலைக்கு ஆதரவாகச் செய்திகளைப் போட்டு வந்த பத்திரிகைகள் எல்லாம் தன் போக்கை மாற்றிக்கொண்டன.

மகாத்மா காந்தியின் வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்தவர் 16 வருடங்களில் விடுவிக்கப்பட்டார். அன்னை இந்திரா காந்தியின் கொலைவழக்கில் ஆயுள் கைதியாக இருந்தவர் 18 வருடங்களில் விடுவிக்கப்பட்டார். ஆனால் எனக்கு? இந்தத் தடையும் முட்டுக்கட்டையும் யாரால் வந்ததென்றால் எங்களாலேயேதான் வந்தது என்பதை ஒப்புக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. எழுவர் விடுதலை என பிரசாரம், எழுவர் விடுதலைக்கான ஆதரவு, எழுவர் விடுதலைக்கான நிதிதிரட்டல் என செய்துகொண்டே அதில் ஒருவரைப் பற்றிமட்டும் அவதூறு பேசினால், ஒளிபரப்பினால் என்ன அர்த்தம்? அதற்குப் பெயர் எழுவர் விடுதலையா என்ற கேள்வியை உங்கள் முன்பாகவே வைக்கின்றேன். உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையோடு நீங்கள் யோசிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இந்த நிலையில் பிரியங்கா அவர்களுடன் திடீர் சந்திப்பு நடக்கிறது. அந்த சந்திப்புகூட நான் ஏற்படுத்திக் கொண்டதல்ல. அவராக வந்தார். யாரென்றே தெரியாமல் நான் அந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கெதிராக இப்படி எல்லாம் பிரசாரம் செய்யாமல் விட்டிருந்தால் ஒருவேளை என் விடுதலை 2008-க்கு முன்பே சாத்தியமாகி இருக்கலாம். அப்படி நடந்திருந்தால் இன்று மற்ற ஆறு பேரின் விடுதலைக்குமாக நான் உண்மையான குரலோடு பிரசாரம் செய்திருப்பேன். என் ஒருத்திக்கு எதிராக உருவாக்கப்படும் பிரசாரங்கள் மற்ற அறுவருக்கும் எதிராக வந்து நிற்கிறது என்ற உண்மையை ஒரு தரப்பு உணர மறுக்கிறது. இந்தப் போக்கு, ஒற்றுமையின்மை எல்லாம் எதிரிகளுக்குத்தான் வாய்ப்பாக முடியும் என்பதையும் அறிய மறுக்கிறார்கள். அதனால்தான், என் விரல்களைக் கொண்டு என் கண்களைக் குத்திக்கொள்ள வைத்துவிட்டார்கள் என்று சொல்கிறேன்.

p16z.jpg

இன்னொரு விஷயம். 2011-ல் மூவரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். உடனே அந்த மூவருக்கான தூக்குத்தண்டனை தேதி குறிக்கப்பட்டது.  தமிழக மக்கள் கொந்தளித்தார்கள். ஆங்காங்கே போராட்டம் வெடித்தது. சட்டக்
கல்லூரி, அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி மாணவர்கள் எல்லாம் போராடினார்கள். இன்று நாங்கள் குலதெய்வமாக வரிந்துகொண்டிருக்கும் மகள் செங்கொடி தீக்குளித்தாள். மகள் செங்கொடியை இழந்த வேதனையில் இருந்தே மீளமுடியாமல் இருந்த எங்களுக்கு இப்படியான தம்பிகளின் உயிர்த்தியாக முனைப்பு உலுக்கி எடுத்தது.

p16a.jpgஇந்தக் களேபரத்துக்கு மத்தியில் ஒரு பச்சைத் துரோகமும் நடந்தது. என் கணவரையும் சாந்தனையும் வாழ்வின் கடைசிக்காலத்துக்கும் மட்டுமல்ல, இறந்த பிறகும் அவர்களை பழிச்சொல்லுக்கு ஆளாக்கும் ஒரு துரோகம் அது. அந்தப் பரபரப்பு சூழ்நிலையில் ஜனாதிபதிக்கு அவசர அவசரமாக மீண்டும் ஒரு கருணை மனு அனுப்ப வேண்டும் என வேலை செய்தார்கள். அப்படியான மனு கணவர் இருக்கும் சிறைக்குள் சென்று மூன்று தினங்கள் ஆகியிருந்தது. கடைசிநாள் அன்று மாலையில்தான், ‘நாளை காலையில் இந்த மனு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தாக வேண்டும். உடனடியாக கையெழுத்தைப் போடுங்கள்’ என்று கூறி சாந்தனிடமும் என் கணவரிடமும் வழங்கப்பட்டிருந்தது. படித்துப் பார்க்கக்கூட அவகாசம் கொடுக்கக்கூடாது என்பதில் திட்டமிட்டே தெளிவாகக் காய் நகர்த்தினார்கள். இவ்வளவு அவசரப்படுத்துவது ஏன் என யோசித்த என் கணவருக்கு ஏதோ சந்தேகம் வந்திருக்கிறது. படித்துப் பார்க்காமல் கையொப்பம் போடமுடியாது, முழுதும் வாசித்துவிட்டு போடுகிறேன் என்று கூறி 25 பக்கங்கள் அடங்கிய அந்த மனுவை வாங்கி வந்து இரவெல்லாம் படித்துப் பார்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்ட அந்த மனுவில், என் கணவரும் சாந்தனும் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும், தாங்கள் தவறாக வழி நடத்தப்பட்டவர்கள் என்றும், ஈழப்போராட்டம் ஒரு பயங்கரவாதப் போராட்டம் என்பது உட்பட இன்னும் என்னென்னவோ எழுதப்பட்டிருக்கிறது. என் கணவருக்குப் படிக்கப் படிக்க ஒரே அதிர்ச்சி.

நம்மவர்கள்தானே கொடுக்கிறார்கள் என நம்பி படித்துப் பார்க்காமல் கையொப்பம் இட்டிருந்தால் எவ்வளவு பெரிய இழுக்காக மாறியிருக்கும். இந்த இனம் அந்த இருவரையும் காரித்துப்பியிருக்குமே? நினைக்க நினைக்க நெஞ்சு பதறியிருக்கிறது. இரவெல்லாம் படித்துப் பார்த்து, எங்கெல்லாம் துரோக வார்த்தைகள் இருந்ததோ, அதையெல்லாம் அழித்து மீண்டும் அங்கே கையால் எழுதி, திருத்தப்பட்ட படிவமாக அதிகாலையில் கொடுத்திருக்கிறார். இந்த தகவலை சாந்தனிடமும் தெரிவித்தார்.

சாந்தனோ, தூக்குக் கிடைத்தாலும் பரவாயில்லை. படிக்காமல் மனுவை கொடுக்க முடியாது என்று வேறு ஒரு நம்பிக்கையானவரை வைத்து திருத்தம்செய்து, மூன்று நாட்கள் கழித்துதான் அந்த மனுவை வெளியே கொடுத்தனுப்பினார். கொஞ்சம் விட்டிருந்தாலும் அதுவே அந்த இருவருக்குமான தூக்குக்கயிற்றை உறுதி செய்திருக்கும். இறந்தாலும் பரவாயில்லை. இன விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாத போராட்டம் எனக் கொச்சைப்படுத்திய துரோகிகள் என காலமும் தூற்றியிருக்குமே? நல்லவேளை, கடவுள் அருளால் தப்பினார்கள்.

பிறகு இதே வழக்கறிஞர் இன்னொரு உள்ளடி வேலையையும் செய்தார். தூக்கில் இருந்த மூவரைப் பற்றி பிரபல வார ஏட்டுக்கு பேட்டி கொடுத்தார். அதில் என் கணவரையும் சாந்தனையும் பற்றிக் குறிப்பிடும்போது, ‘அவர்கள் வெளிநாட்டுக்காரர்கள். விடுதலைப்புலிகள் அமைப்பில் கடுமையான ஆயுதப்பயிற்சியை எடுத்தவர்கள்’ என்று ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறுகண்ணில் சுண்ணாம்பையும் தடவினார். ‘விடுதலைப்புலி இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார் என்பதாலோ, பயிற்சி எடுத்தவர் என்பதாலோ கொலை வழக்கில் சம்பந்தப்பட்டார் என கூறுவதை ஏற்க முடியாது’ என்று சங்கர் என்பவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை அந்த வழக்கறிஞர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எப்படியோ மூவரின் தூக்குக்கு எதிரான தடையாணை கிடைத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடியதை ஒரு காரணமாகக் கூறி, அந்த வழக்கை டெல்லி உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றினார்கள்.

சிறையில் இருந்த தொடக்க காலம் நாங்கள் மிகவும் வறுமையில் திண்டாடிக் கொண்டிருந்தோம். அந்த நேரம் பல உணர்வாளர்கள் பொருள் உதவியை செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த உதவிகள்கூட எங்களுக்கு வந்து சேரவேயில்லை. இடையில் இருந்தவர்கள் தடுத்து விட்டிருந்தார்கள். அதுகூட என் அம்மா, தம்பி உட்பட 19 பேர் விடுதலையாகி வெளியே சென்ற பிறகு எட்டு ஆண்டுகள் கழித்துதான் தாமதமாக எனக்குத் தெரிய வந்தது.

p16b.jpg

அதே போன்று பெண்கள் சிறையில் இருக்கும் என் நிலையிலும் ஒரு சிக்கல். உறவினர்கள், மற்றும் குறிப்பிட்ட மூன்று தலைவர்களைத் தவிர வேறு யாருமே வந்து சந்தித்தது இல்லை. சில தலைவர்கள், பிரமுகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை மணிக்கணக்கில் காக்கவைத்து, கடைசியாக நான் பார்க்க விரும்பவில்லை என்றுகூறி திருப்பி அனுப்பியதும் நடந்திருக்கிறது. அடுத்த முறை அவர்கள் பார்க்க வரக்கூடாது என்றவிதத்தில் நடந்திருக்கிறது. இந்தக் கொடுமையை எல்லாம் என்னவென்று கூறுவது? சமீபத்தில்கூட என் கணவர் மீதும் சாந்தன் மீதும் கொலைப்பழி சுமத்தி ஒரு இணையத்தில் செய்தி வெளியானது. அபாண்ட பழியால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானோம். தாக்கியவரும், பாதிக்கப்பட்ட இருவரும் நீண்டகால நண்பர்களாக இருந்தவர்கள். தாக்கிய நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர். பிறகு ஏன் வடநாட்டு நபர் என்று திரித்துக் கூறினார்கள் என தெரியவில்லை. எப்படியோ அந்தப் பழியை பெரும்வலியோடு கடந்தோம். காரணம் பதில் உரைப்பதாக இறங்கி யாரையும் காயப்படுத்தக்கூடாது என்ற நல்லெண்ணம்தான். இப்படி தவிர்த்துவிட்டு கடந்து வந்த காயங்களே அதிகம்... போகட்டும்.

- சிறைவாசி நளினி

மகளிர் தனிச் சிறைச்சாலை. வேலூர்.

(நிறைவு)

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.