Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை

Featured Replies

Drugs kansha

மட்டக்களப்பில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை!

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரண்டு இலட்சத்து 41ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று(06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை ஒழிக்கும் வகையில் மதுவரித் திணைக்களம் பல்வேறு நடவடிக்கையினை கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டுவந்தது.

இதனடிப்படையில் கேரளா கஞ்சா விற்பனை செய்தவர்கள்,வெளிநாட்டு மதுபானங்களை சட்ட விரோதமாக விற்றவர்கள், வடிசாராயம் விற்றவர்கள், வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்றவர்கள் என 99பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர்களில் 58 பேருக்கு நீதிமன்றங்கள் ஊடாக இரண்டு இலட்சத்து 41ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன் 41பேருக்கான வழக்குகள் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சுசாதரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையில் மதுவரித்திணைக்கள பரிசோதகர் பி.செல்வகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர்.

இதேவேளை தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

http://kathiravan.com/138606

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.