Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?

Featured Replies

எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?

 

இலங்கை தேசியத் தலைமைகள் ஒரு நிரந்தரமான முடிவைக் காணவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் அவர்கள் முன்னே கொண்டு வரப்பட்டிருக்கிறது தேசியப் பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் பொறிமுறை எவ்வாறு அமையப் போகின்றது என்பதை வெளிப்படுத்த வேண்டிய கால நெருக்கடியொன்று உருவாகியுள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றமுறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

 

நாம் ஒன்று நினைக்க அர­சாங்கம் ஒன்றை சொல்லிக் கொண்­டி­ருக்­கி­றதே என்ற சொற் போரி­லேயே இன்று அர­சாங்­கத்­துக்கும் கூட்­ட­மைப்­புக்­கு­மி­டை­யி­லான பேச்­சு­வார்த்­தை­களின் நகர்­வுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

அர­சியல் சாசனம் தமிழ் மக்­க­ளுக்­கான நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் பட்­ட­ய­மாக இருக்கும். அப்­பட்­டயம் விரைவில் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்டு மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­படும். அதன் பின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டு­மென அர­சாங்கத் தரப்­பினர் கூறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அதே பாணி­யினைப் பின்­பற்றி கூட்­ட­மைப்­பி­னரும் பக்­க­வாத்­தி­யம்போல் இசைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இதே நேரம் சமஷ்­டியா, ஒற்­றை­யாட்­சியா, இணைப்பா, பிரிப்பா என்ற சொற்­போ­ருக்கு விடை சொல்­லாமல் அர­சாங்­கத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரிகள் மூடு மந்­திர விளை­யாட்­டுக்­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அண்­மையில் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைச் சந்­தித்து உரை­யா­டிய த.தே.கூ. அமைப்­பினர் அவ­ரிடம் ஒற்­றை­யாட்­சியை ஏற்­க­மாட்டோம். மீளப்­பெற முடி­யாத அள­வுக்கு அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும். நாட்டைப் பிரிப்­ப­தற்கு நாங்கள் முய­ல­வில்லை. தற்­பொ­ழு­துள்ள மாகா­ண­ச­பை­களின் ஆளு­நர்­களின் அதி­கா­ரங்கள் வறி­தாக்­கப்­பட வேண்டும் என்­றெல்லாம் கார­சா­ர­மாக எடுத்துக் கூறி­யுள்­ளனர்.

இதன்­போது பிர­தமர் தாம் தேசிய இனப் பிரச்­சி­னைக்கு தீர்­வொன்றைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருப்­ப­தா­கவும் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும் என்றும் தற்­போது புதிய அர­சியல் அமைப்பு அமைக்கும் செயற்­பாட்டில் பல்­வேறு தரப்­பி­னரின் கருத்­துக்­களைப் பெற்றுக் கொள்­வது அவ­சியம் என்றும் கூறினார் என கூட்­ட­மைப்­பினர் தெரி­வித்­தி­ருந்­தனர்.

பிர­த­மரின் இக்­க­ருத்­தா­னது அல்­லது வாக்­கு­று­தி­யா­னது நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் விட­யத்தில் முற்­றுப்­புள்ளி காணும் பதி­லாக அல்­லது உறுதி மொழி­யாக இருக்­குமா? என்­பதே தமிழ் மக்கள் மத்­தியில் தோன்­றி­யி­ருக்கும் சந்­தே­மாகும்.

எந்­த­வொரு சந்­திப்­பிலும் கருத்­துப்­ப­ரி­மாற்­றத்தின் போதும் பிர­த­மரோ அல்­லது ஜனா­தி­ப­தியோ தமிழ் மக்­களின் நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக சமஷ்டி முறை­யி­லான அர­சியல் தீர்வை வழங்க தயா­ராக இருக்­கிறோம். இணைப்பை உறு­திப்­ப­டுத்த ஆயத்­த­மா­க­வுள்ளோம் என்ற பரி­மாற்றக் கருத்­துக்­களைக் கூறி­ய­தாகக் தெரி­ய­வில்லை.

இதே­போன்றே ஜனா­தி­ப­தியும் தமிழ் மக்­க­ளுக்­கான பிரச்­சி­னையைத் தீர்த்து வைப்­பதில் தான் கவனம் கொண்­ட­வ­னாக இருக்­கிறேன். அது எனது பொறுப்பும் கூட என்று கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றாரே தவிர வெளிப்­ப­டை­யாக எக்­க­ருத்­தையும் உறு­தி­மொ­ழி­யையும் அளித்­த­தாகத் தெரி­ய­வில்­லை­யென தமிழ் மக்கள் மத்­தி­யி­லுள்ள புத்­தி­ஜீ­வி­களும் புலம்­பெயர் சமூ­கத்­த­வரும் குறை கூறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இன்னும் கூறப்­போனால் த.தே.கூ. அமைப்பில் உள்ள பல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே அதி­ருப்தி கொண்­ட­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றார்கள்.

இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இரண்டு வரு­டங்­களைத் தாண்­டப்­போ­கிற நிலை­யிலும் எல்­லா­வற்­றுக்கும் அப்பால் புதிய அர­சியல் யாப்பை தயா­ரிக்கும் முயற்சி தீவிரம் கொண்­ட­தாகக் காணப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கிற போதும் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு பற்றி தெளி­வற்ற நிலையே இன்னும் காணப்­ப­டு­கி­றது.

சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னரைப் பொறுத்­த­வரை அதா­வது ஜனா­தி­ப­தியின் தலை­மை­யி­லான சுதந்­தி­ரக்­கட்­சி­யா­ளர்­களைப் பொறுத்­த­வரை ஒற்றை ஆட்­சிக்கு அப்பால் சென்று அதி­கா­ரங்­களைப் பகிர்­வ­தற்கு அவர்கள் தயா­ரில்­லை­யென்ற கருத்­தையே மறை­மு­க­மாக இன்னும் கூறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ஒற்­றை­யாட்சி சமஷ்டி என்று சது­ராட்டம் ஆடிக் கொண்­டி­ருக்­காமல் ஒற்­றை­யாட்சி முறையின் கீழ் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­க­ளுடன் ஒத்­தி­சைவுப் பட்­டி­ய­லையும் நீக்கி அர­சியல் தீர்­வுக்குச் செல்­வதே பொருத்­த­மாக இருக்­கு­மென்று அர­சாங்­கத்­த­ரப்­பினர் கூறிக் கொண்­டி­ருப்­ப­துடன் பொலிஸ், காணி அதி­கா­ரத்­துடன் 13 ஐ அமுல்­ப­டுத்த வேண்­டு­மென சுதந்­திரக் கட்­சியின் விசே­ட­குழு ஜனா­தி­ப­திக்கு விரைவில் அறிக்­கை­யொன்றை சமர்ப்­பிக்­கப்­போ­வ­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

சுதந்­தி­ரக்­கட்­சியின் நிலைப்­பாட்­டா­ளர்­களைப் பொறுத்­த­வரை ஒற்றை ஆட்­சிக்கு அப்பால் செல்­வதை தவிர்த்து ஏல­வே­யுள்ள 13 ஆவது அதி­காரப் பகிர்வை காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களை வலு­வாக்­கு­வதன் மூலம், பலப்­ப­டுத்­து­வதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தரத் தீர்வை கண்­டு­வி­ட­லா­மென்ற நிலைப்­பாடு கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கி­றார்கள் என்­பது அண்­மைக்­கால செய்­திகள் மூலமும் அறிக்­கைகள் மூலமும் தெரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கி­றது.

ஆட்­சி­யா­ளர்­க­ளான சுதந்­திரக் கட்­சியின் மூல­மான நோக்கம் மாகாண சபை முறை­யொன்றின் மூலம் தீர்வைத் தந்து விட­லா­மென்­பது அவர்­களின் திட­மான முடி­வாக இருப்­ப­தா­கவே ஓர­ள­வுக்கு ஊகிக்க முடி­கி­றது. புதிய அர­சியல் சாசன உரு­வாக்­க­மா­னது மாகா­ண­சபை பகிர்­வுக்கு அப்பால் சென்­று­விட முடி­யாது என்ற எல்லை கொண்­ட­தாக இருக்க வேண்­டு­மென்­பதில் சுதந்­திரக் கட்­சியின் தீர்­மா­னிப்­பா­ளர்கள் இருந்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது. இதை மீறி கட்­சியின் தலை­வரோ அடுத்த பதவி நிலை­யி­லுள்­ள­வர்­களோ சமஷ்டி பற்றி ஏற்றுக் கொண்­ட­வர்­க­ளா­கவோ உச்­ச­ரிப்­ப­வர்­க­ளா­கவோ காணப்­ப­ட­வில்லை.

இதே­வேளை கூட்­ட­மைப்­பினர் வெளிப்­ப­டை­யா­கவே அறி­வித்­துள்­ளனர். நாங்கள் எந்­த­வொரு நிலை­யிலும் சமஷ்டி நீக்­கிய ஒற்றை ஆட்சி அர­சியல் தீர்வை ஏற்றுக் கொள்­ளப்­போ­வ­தில்லை. தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்ற விட­யத்தில் எமது மக்கள் ஒற்­றை­யாட்­சிக்குள் ஆளப்­ப­டு­வ­தற்கு எமக்கு ஆணை வழங்­க­வில்லை. ஒற்­றை­யாட்சி முறை­யா­னது மத்­திய அர­சாங்கம் அதி­கா­ரங்­களை முழு­மை­யாக தன்­ன­கத்தே வைத்­தி­ருப்­ப­தாகும். ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டு­வ­தென்­பதும் அதி­கா­ரங்­களை வழங்­கி­விட்டு பறித்­தெ­டுப்­ப­தற்­கான சூழலே காணப்­படும். ஆகவே நாம் ஒற்­றை­யாட்சி முறை­மையை ஒரு­போதும் ஏற்­கவே மாட்­டோ­மென திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளனர். கூட்­ட­மைப்­பினர்.

இவ்­வி­ரு­பக்கப் போக்­கு­க­ளையும் பார்க்­கின்­ற­போது எந்­தப்­பக்­கத்­தாலும் சிக்கு அவிழ்க்க முடி­யாத இடி­யப்­பப்­பின்­ன­லா­கவே அர­சியல் தீர்வு விவ­காரம் நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது என்­பது தெளி­வாகத் தெரி­கின்ற விடயம். இதே­வேளை தேசிய அர­சாங்­கத்தை இயக்கிக் கொண்­டி­ருப்­ப­தாகக் கூறிக்­கொண்­டி­ருக்­கின்ற ஐ.தே.கட்­சியின் நிலைப்­பாடும் சுதந்­தி­ரக்­கட்­சியின் நிலைப்­பாட்­டி­லேயே இருப்­பது போன்ற மாயையே உண்­மை­யாகத் தெரி­கின்­றது. ஐ.தே.க.வினரைப் பொறுத்­த­வரை அதன் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏலவே அர­சியல் தீர்வு ஒற்­றை­யாட்­சிக்கு அப்பால் செல்­லாது என திட்­ட­வட்­ட­மா­கவே கூறி­யி­ருக்­கிறார். கூறி­வ­ரு­கிறார். இவ்­வா­றா­ன­தொரு நிலையில் தமிழ் மக்­க­ளு­டைய ஏக­பி­ர­தி­நி­தி­க­ளா­கவும் தீர்வு நாடி­க­ளா­கவும் விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கோரிக்­கைகள், நிலைப்­பா­டுகள் ஆகி­ய­வற்­றுக்கும் எதி­ரே­யுள்ள ஆட்­சி­யா­ளர்­க­ளு­டைய நிலைப்­பா­டு­க­ளுக்கும் போக்­கு­க­ளுக்­கு­மி­டையில் எங்கே சம­நிலை காணப்­படப் போகி­றது என்­பது ஆச்­ச­ரி­யத்தைக் கொட்­டிக்­காட்­டு­கிற ஒரு விட­யந்தான்.

பாரா­ளு­மன்றம் அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்டு வழிப்­ப­டுத்தல் குழு­வுக்கு உத­வி­யாக ஆறு உப­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு அவை தமது இடைக்­கால அறிக்­கையை பிர­தமர் ஊடாக பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்து விட்­டார்கள். இக்­கு­ழுக்கள் நாட்டின் ஏனைய நிர்­வாக மற்றும் அதி­கார இணைவு தொடர்பு, நீதி, சட்டம் சம்­பந்­த­மான ஏனைய விட­யங்­களைப் பற்றி நிபுணர் குழு மற்றும் புத்­தி­ஜீ­விகள், பொது­மக்கள் ஆலோ­ச­னை­களைப் பெற்று அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளார்­களே தவிர அர­சியல் தீர்வு பற்­றியோ அதி­கா­ரப்­ப­கிர்வு பற்­றியோ வட­கி­ழக்கு இணைப்பு விடயம் தொடர்­பிலோ தமது ஆலோ­ச­னை­களை முன்­வைக்கும் அதி­காரம் அவற்­றுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. வரை­ய­றுத்து வழங்­கப்­பட்ட விவ­காரம் தொடர்­பா­கவே ஆறு­கு­ழுக்­களும் அறிக்­கை­களைச் சமர்ப்­பித்­துள்­ளன.

அதி­காரப் பகிர்வு, அர­சியல் தீர்வு விவ­காரம் தொடர்பில் வழி­ப­டுத்தல் குழுவே தனது அறிக்­கையைச் சமர்ப்­பிக்­க­வுள்­ளது. இன்னும் விளக்­க­மாக கூறு­வ­தானால் அர­சியல் சாச­னத்தில் உள்­ள­டக்­கப்­போ­வ­தாகக் கூறப்­படும் அர­சியல் தீர்வு, அதி­காரப் பகிர்வு தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிக்கும் கடப்­பாடு வழிப்­ப­டுத்தல் குழு­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவே கூறப்­ப­டு­கி­றது. இக்­கு­ழுவின் அறிக்கை எதிர்­வரும் ஜன­வரி முடி­வ­டை­வ­தற்கு முன் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­மென ஆருடம் கூறு­கி­றது.

இவ்­வ­றிக்­கையை எதிர்­பார்த்தே தமிழ் மக்கள் மிக ஆவ­லு­டனும் அக்­க­றை­யு­டனும் காத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது யதார்த்­த­மான ஒரு ­வி­ட­யம்தான். வரப்­போகும் இடைக்­கால அறிக்­கையில் தமிழ் மக்கள் எதிர்­பார்க்கும் விட­ய­மென்ன என்­பது வெளிப்­ப­டை­யா­கவே பேசப்­படும் விடயம்.

அதி­காரப் பகிர்வு, அர­சியல் தீர்வு எவ்­வாறு கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது. இன்­னொரு விடயம் வடக்கு கிழக்கு இணைப்பு விவ­கா­ரத்தில் அர­சாங்கம் என்ன முடிவை எடுக்கப் போகி­றது என்­ப­தாகும். இவற்­றுக்­கான தீர்வை முன்­வைப்­பதில் அர­சாங்கம் எத்­த­கைய உறு­தி­யான போக்கை கடைப்­பி­டிக்கப் போகி­றது. இல்லை பழை­ய­படி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை­யாக மாறி­வி­டுமா என்ற பயப்­பாடு கொண்­ட­வர்­க­ளா­கவே தமிழ் மக்கள் நாளுக்கு நாள் நம்­பிக்கை இழந்து கொண்டு செல்­ப­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கி­றார்கள் என்­பது புத்­தி­ஜீ­வி­களின் கருத்து முன்­வைப்­பாகும்.

இன்­னு­மொரு காலத்­துக்­காக பொறுத்­தி­ருக்கும் நிலை கொண்­ட­வர்­க­ளாக தமிழ் மக்­க­ளு­மில்லை. அவர்­க­ளு­டைய தலை­வர்­க­ளு­மில்லை என்­ப­தையே கூட்­ட­மைப்பின் தலை­மைகள் சொல்லி வந்­தி­ருக்­கின்­றன.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் இலங்கை தேசி­யத்­த­லை­மைகள் ஒரு நிரந்­த­ர­மான முடிவைக் காண­வேண்­டிய பல்­வேறு பிரச்­சி­னைகள் அவர்கள் முன்னே கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கி­றது தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வை வழங்கும் பொறி­முறை எவ்­வாறு அமையப் போகின்­றது என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்­டிய கால நெருக்­க­டி­யொன்று உரு­வா­கி­யுள்­ளது என்­பதை அர­சாங்கம் புரிந்து கொள்­ள­வேண்டும். அதற்கு ஏற்­ற­மு­றையில் தமது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்த வேண்டும்.

வெளிப்­ப­டுத்­து­வதால் ஏற்­ப­டக்­கூ­டிய பிர­தி­கூ­லங்கள், அனு­கூ­லங்கள் பற்றி ஒரு தெளி­வான முடி­வுக்கு வர­வேண்டும். அர­சாங்­கத்தால் எடுக்­கப்­படும் முடி­வுகள் ஒரு சமூ­கத்­துக்குப் பிர­தி­கூ­ல­மா­கவும் இன்­னுமோர் சமூ­கத்­துக்கு அனு­கூ­ல­மாக இருக்­கு­மானால் அதனால் விளை­யப்­போகும் பெறு­மா­னங்கள் பற்­றியும் ஆரா­ய­வேண்­டிய தேவை அர­சாங்­கத்தைச் சார்ந்­ததே.

தமிழ் மக்­களின் அல்­லது நாட்டின் நீண்ட காலத் தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென்ற நிலைப்­பாடு எல்­லாத்­த­லை­மை­க­ளுக்கும் தெரிந்­த­வொரு விட­ய­மாக இருந்து வரு­கின்ற போதிலும் அந்த விட­யத்தில் முடி­வொன்றை காண்­பதில் அவர்கள் காட்­டு­கின்ற தயக்­கமே இந்த நாட்டின் சாபக்­கே­டாகக் காணப்­ப­டு­கின்­றது.

இலவு காத்த கிளி­க­ளைப்போல் தமிழ் மக்கள் எத்­தனை காலத்­துக்­குத்தான் காத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யு­மென்­பது பற்றி தமிழ் மக்கள் தெரி­வித்­து­வரும் அதி­ருப்­திகள் பற்­றியும் அரச தலை­மைகள் உண­ரா­ம­லில்லை. உண்­மையைக் கூறப்­போனால் வழங்­கப்­ப­ட­வி­ருக்கும் தீர்­வா­னது தமிழ் மக்­க­ளுக்கு சாத­க­மாக இருக்­கு­மானால் தென்­னி­லங்­கையை சமா­ளிப்­பதும் வெற்­றி­கொள்­வதும் ஆபத்­தான காரி­ய­மா­கப்­போய்­விடும் என்ற பயமும் மறு­புறம் தமிழ் மக்­களின் நீண்ட கால அபி­லா­ஷை­க­ளைப்­பூர்த்தி செய்­யாத அவர்கள் கோரி­வ­ரு­கின்ற அதி­கா­ரப்­ப­கிர்வை வழங்­க­மு­டி­யாத நிலை­யொன்று காணப்­ப­டு­மானால், அதனால் ஏற்­ப­டக்­கூ­டிய எதிர்­வி­ளை­வுகள் பற்றி சிந்­திப்­பதன் கார­ண­மா­கவே அர­சாங்கம் மெல்லவும் முடி­யாமல் விழுங்­கவும் முடி­யாமல் திண்­டா­டு­கின்­றது என்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரி­கின்­ற­வுண்மை.

ஒற்­றை­யாட்­சியின் அதி­யுச்ச அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு செல்­வதே யதார்த்தம். இல்­லை­யாயின் நாட்டில் பல்­வேறு குழப்­பங்­களும் அர­சியல் சரி­வு­களும் பெரும்­பான்மை சமூ­கத்தின் வெறுப்­புக்கும் ஆளா­க­வேண்­டி­வரும் என்­ப­துடன் சமஷ்டி முறை­யி­லான அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கோ ஆட்­சி­மு­றைக்கோ செல்­வோ­மானால் அது நாட்டை பிள­வு­ப­டுத்­தி­விடும். வட­கி­ழக்கில் தனி ஈழத்­துக்­கான வழி திறந்­து­விடும் என்ற நிலைப்­பாடும் பயப்­பாடும் கொண்­ட­வர்­க­ளாக ஆட்­சி­யா­ளர்கள், சிங்­க­ளப்­பெ­ரும்­பான்­மை­யினர், தென்­னி­லங்­கையைச் சேர்ந்த அர­சியல் தலை­வர்கள், புத்திஜீவிகள் இருந்து வரு­கின்­றார்கள் என்­பது வெளிப்­ப­டை­யா­கவே தெரி­ய­வ­ரு­கின்ற விட­ய­மாகும். என்­னதான் தென்­னி­லங்­கையைச் சேர்ந்த முற்­போக்கு சிந்­த­னைகள் கொண்­ட­வர்கள் நீண்­ட­கால தேசி­யப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வு­கா­ண­வேண்­டு­மெனக் கூறி­வ­ரு­கின்­ற­போதும் அந்தத் தீர்வு எவ்­வாறு அமைய வேண்டும் அதன் ஆட்சி மற்றும் அதி­காரப் பகிர்­வு­சார்ந்த வடிவம் எவ்­வாறு அமை­ய­வேண்­டு­மென்­பதை தெளி­வு­ப­டக்­கூ­று­கின்­ற­வர்­க­ளா­கவோ, துணிந்து முன்­மொ­ழி­ப­வர்­க­ளா­கவோ காணப்­ப­ட­வில்­லை­யென்­பதே யதார்த்தம்.

ஆட்­சி­யா­ளர்கள் இன்னும் என்ன கூறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். புதிய அர­சியல் சாச­ன­மாக இருக்­கலாம், அதி­கா­ரப்­ப­கிர்­வாக இருக்­கலாம் நாட்டின் பல்­வேறு தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து அபிப்­பி­ரா­யமும் ஆலோ­ச­னையும் பெறப்­பட வேண்டுமென கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பல்வேறு தரப்பினர் யார் என்பதே இன்றைய பிரச்சினையாகும்.

தென்­னி­லங்­கையர், தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­திகள், புத்­தி­ஜீ­விகள், கல்­வி­மான்கள், மத­வா­திகள், பௌத்த குருமார், பௌத்த அமைப்­புகள், எதி­ர­ணி­யினர், எதிர்க்­கட்­சி­யினர், முஸ்லிம் சமூ­கத்­தவர் என ஏகப்­பட்­ட­வர்கள் வரி­சைப்­பட்டு நிற்­கின்­ற­போது இவர்கள் மத்­தியில் ஒரு­மித்த கருத்­தையும் நேர்­கோட்டு முடி­வு­க­ளையும் எடுக்­கப்­போ­கின்­ற­வர்கள் யார் என்­பதே தமிழ் மக்கள் இன்று அங்கலாய்த்து நிற்கும் விடயமாகும். நல்­லாட்சி அர­சாங்­கத்தை குந்­த­வைத்­த­வர்கள் சிறு­பான்மை சமூ­கத்­த­வர்கள் என்­ற­வ­கையில் அவர்கள் எதிர்­பார்ப்­ப­தெல்லாம் இதுதான். ஆட்­சி­யா­ளர்கள் தெளி­வான முடி­வுக்கு வர­வேண்டும். அந்த தெளி­வான முடிவை மக்கள் மத்­தியில் கொண்டு சென்று அவர்­களின் சம்­ம­தத்­தையும் ஆணை­யையும் பெறும் கைங்­கரியத்தில் வெற்றிகாண வேண்டும்.

 

பாராளுமன்றில் தனது செல்வாக்கையும் பலத்தையும் பாவித்து வெற்றிபெற முடிந்தாலும் மக்கள் ஆணையென்பது அவ்வாணையைப் பெறுவது என்பது நாளுக்கு நாள் விபரீதமான திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது இருதரப்பினரும் உணராத ஒருவிடயமல்ல.

இவ்­வி­ட­யத்தில் அர­சாங்கம் கொண்­டி­ருக்­கின்ற பொறுப்பு அதே­வேளை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு உள்ள கடமை கன­தி­யா­னது. குறிப்­பாக இணைப்பு விவ­கா­ரத்தில் முஸ்லிம் சமூ­கத்தின் உடன்­பாட்டை காண­வேண்­டி­யது அவ­ச­ர­மான ஒரு விட­ய­மாகும். குறிப்­பிட்டுக் கூறு­வ­தானால் சமஷ்டி உச்ச அதி­கா­ரப்­ப­கிர்வு, இணைப்பு தொடர்பில் முஸ்லிம் கட்­சி­களும் தலை­மை­களும் என்ன நிலைப்­பாடு கொண்­டுள்­ளார்கள் என்­பது அவர்­க­ளா­லேயே தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும். இவற்­றுக்­கி­டையில் தேசிய இணைவை கொண்­டு­வ­ரு­வதில் உள்ள பாரிய பொறுப்பு இருதரப்பினரையுமே சார்ந்ததாகும்.   

– திரு­மலை நவம் –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-17#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.