Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய அமெரிக்காவில் சிறுபான்மை மக்களுக்கான உயர்கல்வி நிலையங்கள்

Featured Replies

ஐக்­கிய அமெ­ரிக்­காவில் சிறு­பான்மை மக்­க­ளுக்­கான உயர்கல்வி நிலை­யங்கள்

005-c07cabaec6a8b0d2911169e36e0c004c198e8337.jpg

 

ஐக்­கிய அமெ­ரிக்­காவின் 32 கோடி மக்­களில் 77.5 சத­வீதம் வெள்­ளை­யர்கள் (77.5%), ஆபி­ரிக்க, அமெ­ரிக்­கர்கள் 4.2 கோடி (13.2%), அமெ­ரிக்க இந்­தி­யர்கள் 40 இலட்சம் (1.2%) ஆசி­யர்கள் 1.7 கோடி (5.4%) இது 2014க்குரிய புள்ளி விபரம்.

முக்­கிய சிறு­பான்­மை­யி­ன­ராக ஆபி­ரிக்க, அமெ­ரிக்­கர்கள் 1555 – 1865 வரை ஆபி­ரிக்­கா­வி­லி­ருந்து பலாத்­கா­ர­மாக, அடி­மை­க­ளாக அழைத்து வரப்­பட்­ட­வர்­களின் வழித்­தோன்­றல்­க­ளாவர். ஐக்­கிய அமெ­ரிக்­காவில் பெப்­ர­வரி மாதம் கறுப்­பி­னத்­தவர் வர­லாறு மாத­மாகக் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. இவர்கள் ஒதுக்­கி­வைக்­கப்­பட்ட இன­மாக இருந்த போதிலும் இன்று ஆபி­ரிக்க, அமெ­ரிக்கர் வர­லாறு பாட­சா­லை­க­ளிலும் பல்­க­லைக்­கழகங்­க­ளிலும் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது. 20 ஆம் நூற்­றாண்டின் பிற்­ப­கு­தியில் இவ்­வ­ர­லாறு அறி­ஞர்­களின் கவ­னத்தைக் கவர்ந்­தது.

அமெ­ரிக்க, இந்­தி­யர்கள் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் பூர்­வீகக் குடிகள். இவர்கள் பல இனக்­கு­ழுக்­களைச் சேர்ந்­த­வர்கள். இவர்கள் சுதேச அமெ­ரிக்கர் என்றும் அழைக்­கப்­ப­டுவர். அமெ­ரிக்­காவில் குடி­யே­றிய ஐரோப்­பிய இனத்­த­வர்கள் முழு அமெ­ரிக்­கா­வையும் கைப்­பற்றிக் குடி­யேறி விட நினைத்­த­மையால் சுதே­சி­க­ளுடன் முரண்­பாடு ஏற்­பட்­டது. இது ஒரு நீண்ட வர­லாறு. நவீன ஆயு­தங்­களை ஏந்­திய ஐரோப்­பியர் குடி­யே­றி­க­ளிடம் தோல்வி கண்ட சுதே­சி­களின் எண்­ணிக்கை கணி­ச­மாகக் குறைந்­தது. ஐரோப்­பியர் கொள்ளை நோயி­னாலும் வன்­மு­றை­யி­னாலும் ஏரா­ள­மா­ன­வர்கள் இறந்து விட்­டனர். அவர்­களை வெள்­ளையர் கலா­சா­ரத்­துடன் ஒன்று கலக்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 1830 ஆம் ஆண்டில் சுதே­சி­களை அகற்றும் சட்­டத்தின் படி அம்­மக்கள் வாழ்ந்த இடங்­க­ளி­லி­ருந்து அகற்­றப்­பட்­டனர். குறிப்­பிட்ட இடங்­களில் அவர்கள் குடி­யேற்­றப்­பட்­டனர். 1924 இல் தான் சுதேச மக்கள் குடி­யு­ரிமை பெற்­றனர். அவர்­க­ளுக்­கென்று ஊட­கங்­க­ளையும் உரு­வாக்கிக் கொண்­டனர். அவர்­க­ளுக்­கென்று பாட­சா­லைகள், பல்­க­லைக்­க­ழ­கங்கள், அரும் பொருட்­காட்­சி­சாலை என்­பன ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

ஆபி­ரிக்க, அமெ­ரிக்­கர்கள் கல்­வித்­து­றையில் வர­லாற்று ரீதி­யான பல பின்­ன­டை­வு­க­ளுக்குப் பின்னர் 21 ஆம் நூற்­றாண்டில் பல முன்­னேற்­றங்­களைக் கண்­டுள்­ளனர். முன்பு பாட­சா­லை­களில் படித்­த­வர்­களில் 50 சத­வீ­த­மா­ன­வர்­களே கல்­லூ­ரி­க­ளுக்குச் சென்­ற­வி­டத்து 2012 இல் இவ் வீதம் 62 ஆக அதி­க­ரித்­தது. வெள்­ளை­யின மாணவர் சத­வீதம் 65 வரை­யாகும். உயர் கல்வி பயி­லு­வோரில் 40 சத­வீத ஆபி­ரிக்க, அமெ­ரிக்க மாண­வர்­களே இறு­தியில் பட்டம் பெற்­றனர். வெள்­ளை­யின மாண­வர்­களில் இவ்­வாறு கல்­வியை முடிப்போர் 65%.

உயர்­கல்வி – ஆபி­ரிக்க, அமெ­ரிக்கர்

கறுப்பு இனத்­த­வ­ருக்­கான கல்­லூ­ரி­களும் பல்­க­லைக்­க­ழகங்கள் 1965 க்கு முன்­னரே நிறு­வப்­பட்­டன. எனினும் ஏனைய இன மாண­வர்­களும் அங்கு அனு­ம­திக்­கப்­பட்­டனர். ஐக்­கிய அமெ­ரிக்­காவில் இச் சிறு­பான்மை இனத்­த­வ­ருக்­கான 107 கல்­லூ­ரி­களும் பல்­க­லைக்­க­ழ­கங்­களும் உள்­ளன. இவற்றில் மருத்­துவக் கல்­லூ­ரி­களும் சட்டக் கல்­லூ­ரி­களும் அடங்கும். பெரும்­பா­லான நிறு­வ­னங்கள் அமெ­ரிக்க உள்­நாட்டு யுத்­தத்­திற்கு முன்னர் தொடங்­கப்­பட்­டவை. முன்னர் அம்­மக்­களை அடி­மை­க­ளாக வைத்­தி­ருந்த மாநி­லங்­க­ளிலும் அக்­கல்­லூ­ரிகள் நிறு­வப்­பட்­டன.

கறுப்பு இனத்­த­வ­ருக்­கு­ரிய 107 உயர் கல்வி நிறு­வ­னங்­களில் 27 கலா­நிதிப் பட்ட கற்கை நெறி­க­ளையும் 52 பட்­டமேற் படிப்புக் கற்கை நெறி­க­ளையும் (முது­கலை) வழங்­கு­கின்­றன. 83 கல்­லூ­ரிகள் இள நிலைக் கற்கை நெறி­களை வழங்­கு­கின்­றன. கறுப்பு இன மக்­க­ளுக்­கான இவ்­வுயர் கல்வி நிறு­வ­னங்கள் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறு­வ­னங்­களில் 3 சத­வீ­த­மாகும். இவற்றில் லிங்கன் பல்­க­லைக்­க­ழ­கமும் வில்­பாஸ்மித் பல்­க­லைக்­க­ழ­கமும் மிகவும் பிர­சித்தி பெற்­ற­வை­யாகும்.

வர­லாற்று ரீதி­யாக ஆபி­ரிக்க, அமெ­ரிக்­கர்­க­ளுக்­கென நிறு­வப்­பட்ட உயர்­கல்வி நிலை­யங்­களில் நாட்டில் வளர்ச்சி பெற்­று­வரும் இன ஒற்­றுமை கார­ண­மாக வெள்ளை இன மாணவர் வீதா­சாரம் கூடி வரு­கின்­றது. சில நிறு­வ­னங்­களில் அவர்கள் 80 சத­வீ­த­மாக உள்­ளனர். (புளுபீல்ட் கல்­லூரி மேற்கு வேர்­ஜி­னியா அரசப் பல்­க­லைக்­க­ழகம்) பல கறுப்பு இனப் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் ஏறத்­தாழ 20 சத­வீத மாண­வர்கள் வெள்ளை இனத்­த­வராவர்.

கறுப்பு இனத்­தவர் மத்­தியில் காணப்­படும் மருத்­து­வர்­களில் 70% பொறி­யி­ய­லா­ளரில் 50’ பாட­சாலை ஆசி­ரி­யரில் 55% சட்­டத்­த­ர­ணி­களில் 35% மாண­வர்கள் இக்­கல்­லூ­ரி­களில் படித்­த­வர்­க­ளாவர். இக்­கல்­லூ­ரி­களில் பட்டம் பெற்ற பலர் சட்டம், வர்த்­தகம், அர­சியல் முத­லிய துறை­களில் தேசிய ரீதி­யாகப் பணி­யாற்றி அங்­கீ­காரம் பெற்­ற­வர்கள். மார்ட்டின் லூதர் கிங் இளை­ய­வரும் மூத்­த­வரும் இவ்­வா­றான கல்­லூ­ரி­களில் படித்­த­வர்­க­ளாவர்.

எவ்­வா­றா­யினும் அமெ­ரிக்க உயர் கல்வி நிலை­யங்­களில் கறுப்பு இன விரி­வு­ரை­யா­ளர்­களின் தொகை மிகவும் குறை­வாக உள்­ளது அவர்கள் 3 – 4 சத­வீ­த­மா­கவே உள்­ளனர். என்றும் அச் சத­வீதம் 10 – 12 ஐ எட்ட இன்னும் ஒரு நூற்­றாண்டு கால­மா­வது செல்லும் என வாஷிங்டன் போஸ்ட் பத்­தி­ரிகை கூறி­யது. ஒரே ஒரு பல்­க­லைக்­கழ­கத்தில் மட்டும் கறுப்பு இன ஆசி­ரி­யர்கள் 6.8 சத­வீ­த­மாக இருந்­தனர். (அல­பாமா பல்­க­லைக்­கழகம்) ஏனைய பல பல்­க­லைக்­கழ­கங்­களில் இவ்­வீ­தா­சாரம் 3–5 சத­வீ­த­மாக மட்­டுமே இருந்­தது. (கொலம்­பியா 6.2%, வட கரோ­லினா 5.9%, மிக்­சிகன் 5.4%, வேர்­ஜி­னியா 3.8%)

வர­லாற்று ரீதி­யாக கறுப்பு இன ஆசி­ரி­யர்கள் கறுப்பு இனப் பல்­க­லைக்­க­ழங்­க­ளி­லேயே பணி­யாற்­றினர். கறுப்பு இன ஆசி­ரி­யர்­களில் 96 சத­வீத மான­வர்கள் அவர்­க­ளு­டைய இனம் சார்ந்த கல்­லூ­ரி­க­ளி­லேயே பணி­யாற்­று­கின்­றனர். 3000 கல்­லூ­ரி­களில் 3% மட்­டுமே கறுப்பு இனத்­த­வரின் கல்­லூ­ரி­க­ளாகும். எனவே, இவை மறைந்து விட்டால் கறுப்பு இன ஆசி­ரி­யர்­களும் கூட இல்­லாமல் போய் விடுவர் என இப்­பத்­தி­ரிகை தெரி­வித்தது.

கறுப்பு இனக் கல்­லூ­ரிகள் தவிர்ந்த ஏனைய இனக் கல்­லூ­ரி­களில் பொது­வாகக் கறுப்பு இன பீடத்­த­லை­வர்­களோ (Dean) துறைத் தலை­வர்­களோ இல்லை. இதனால் வெள்­ளையர் மட்­டுமே தலைமை வகிக்கத் தகு­தி­யு­டை­யவர் என்ற தவ­றான எண்ணம் உரு­வா­கின்­றது. வெவ்­வேறு இனத்து ஆசி­ரி­யர்கள் இருந்தால் சகல இனத்­த­வரும் அறி­ஞர்­க­ளாக வரலாம் என்ற எண்ணம் உரு­வாக முடியும் என்றும் அதே பத்­தி­ரிகை சுட்­டிக்­காட்­டி­யது. (வாஷிங்டன் போஸ்ட் நவம்பர் 15.2015)

1960 களிலும் 1970 களிலும் ஆபி­ரிக்க, அமெ­ரிக்க மக்­களின் வர­லாறு, கலா­சாரம், அர­சியல், சமயம் தொடர்­பான கற்கை நெறிகள் அமெ­ரிக்கக் கல்­லூ­ரி­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டன. இதற்­காகக் கறுப்பு இன மாண­வர்கள் பல போராட்­டங்­களை நடத்த வேண்­டி­யி­ருந்­தது.

சான் பிரான்­சிஸ்கோ மாநி­லத்தில் அவர்கள் இதற்­காக ஐந்து மாதங்­க­ளுக்கு வேலை நிறுத்தம் செய்­தனர். 1969 இல் இதற்­கென ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்­துறை நிறு­வப்­பட்­டது. இவ்­வா­றான பர­வ­லான போராட்­டங்­களின் பின்னர் நாடெங்­கி­லு­முள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இக்­கற்கை நெறிகள் அறி­முகம் செய்­யப்­பட்­டன.

இவ்­வா­றான கற்கை நெறி­க­ளுக்­கென ஒதுக்­கப்­பட்ட நிதியும் குறை­வாக இருந்­தது. பல பிர­தான பல்­க­லைக்­க­ழ­கங்­களில் நிர்­வா­கி­களின் இனப்­பா­கு­பாடு கார­ண­மாக இத்­திட்டம் சரி­வர நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எவ்­வா­றா­யினும் இக்­கற்கை நெறி­களைக் கற்­பிக்­க­க்கூ­டிய அறி­ஞர்­களும் கறுப்பு இனக்­கற்கை நெறி­க­ளுக்குத் தேவை­யான சஞ்­சி­கை­களும் ஏராளம் வெளி­வந்­துள்­ளன.

எவ்­வா­றா­யினும் கறுப்பு இனத்­த­வ­ருக்­கென்றே நூற்­றுக்கும் மேற்­பட்ட கல்­லூ­ரி­களும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுடன் அம்­மக்கள் தொடர்­பான கற்கை நெறி­களும் எழுச்சி பெற்­றி­ருப்­பது சிறு­பான்­மை­யினர் கல்வி வர­லாற்றில் ஒரு முக்­கிய அம்­ச­மாகும்.

ஆரம்ப காலங்­களில் வெள்ளை இனத்­த­வரைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட கல்­லூ­ரிகள் இன­வே­று­பாட்டின் கார­ண­மாகக் கறுப்பு இன மாண­வர்­களை அனு­ம­திக்க மறுத்­தன. இதன் கார­ண­மாக கறுப்பு இனத்­த­வர்கள் தமது உயர்­கல்வி வாய்ப்பு கல்­வி­யி­னூ­டாக கலா­சார தனித்­து­வத்தைப் பாது­காத்தல் போன்ற கார­ணங்­க­ளுக்­காகத் தமக்­கென கல்­லூ­ரி­க­ளையும் பல்­க­லைக்­க­ழகங்­க­ளையும் அமைத்துக் கொள்ளப் போரா­டினர். அமெ­ரிக்க மாநில மத்­திய அர­சாங்­கங்­களும் இம்­மு­யற்­சி­க­ளுக்கு தமது ஆத­ர­வையும் நிதி உத­வி­யையும் வழங்­கின.

அமெ­ரிக்க/ இந்­தியர் உயர்­கல்வி

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் ஆணை­யின்­படி எனது நிர்­வாகம் பழங்­கு­டி­யி­னரின் உயர்­கல்வி நிலை­யங்­களில் பயிலும் மாண­வர்­களின் கல்வி வாய்ப்­பு­களை மேம்­ப­டுத்தப் பாடு­படும். அக்­கல்­லூ­ரிகள் அம்­மக்­களின் மொழி­க­ளையும் கலா­சார மர­பு­க­ளையும் பேணிப் பாது­காக்க முயற்­சிக்கும். உயர்­த­ர­மான கல்­லூரிக் கல்­வியை வழங்கும். தொழில்­நுட்ப தொழில்சார் கல்­வியை வழங்கும். நாட்டின் வறு­மை­யான, தூரப்­பி­ர­தே­சங்­களில் அக்­கல்­லூ­ரிகள் சேவை­யாற்றும் (நிர்­வாக ஆணை 13592) இன்று ஐக்­கிய அமெ­ரிக்­காவில் பழங்­கு­டி­யி­ன­ருக்­கான 32 கல்­லூ­ரி­களும் பல்­க­லைக்­க­ழ­கங்­களும் காணப்­ப­டு­கின்­றன. இவை மொத்­த­மாக 358 கற்கை நெறி­களை வழங்­கு­கின்­றன. இவற்றில் 40 இள­நிலை, 4 முது­நிலை மற்றும் இணைப்­பட்டக் கற்கைநெறிகள் அடங்கும்.

இவ்­வா­றான 32 நிறு­வ­னங்­களில் 30,000 மாண­வர்கள் (முழு­நேர, பகு­தி­நேர) கல்வி பயி­லு­கின்­றனர். இங்கு பயிலும் மொத்த மாண­வர்­களில் 78% அமெ­ரிக்க இந்­தி­யர்­க­ளாவர்.

அமெ­ரிக்க, இந்­தியர் சமூ­கங்­களின் அத்­தி­யா­வ­சி­ய­மான ஒன்­றி­ணைக்­கப்­பட்ட அங்­க­மாக இந்­நி­று­வ­னங்கள் விளங்­கு­கின்­றன. அமெ­ரிக்க, இந்­தி­யரின் கலா­சாரம், மொழிகள், மர­பு­கள் என்­ப­வற்றைப் பேணி வளர்ப்­ப­தற்­கான சூழலை இக்­கல்­லூ­ரிகள் உரு­வாக்­கு­கின்­றன. ஐக்­கிய அமெ­ரிக்­காவின் வறிய பிர­தே­சங்­களில் உள்ள உயர் கல்வி நிறு­வ­னங்கள் இவை மட்­டுமே. இவை இளை­ஞர்­க­ளுக்கும் வளர்ந்­தோ­ருக்கும் உயர்­கல்வி வழங்­கு­வன. வறு­மை­யாலும் வேலை­யின்­மை­யாலும் வாடும் பழங்­கு­டி­யி­ன­ருக்கு நம்­பிக்­கை ­தரும் சமு­தாய வளங்­க­ளாக அவை வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றன.

இக்­கல்­லூ­ரி­களில் சேர்ந்து பயிலும் அமெ­ரிக்க, இந்­திய மாண­வரில் 86%- வீதமானோர் தமது கல்­வியை முடித்துச் சான்­றிதழ் பெறு­கின்­றனர். 10 சத­வீ­த­மான பழங்­குடி மாண­வர்கள் பாட­சாலைக் கல்­வியை முடித்­து­விட்டுப் பிர­தான கல்­லூ­ரி­க­ளிலும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் கல்வி பயி­லு­கின்­றனர்.

ஆரம்­பத்தில் அமெ­ரிக்கப் பாட­சா­லைகள் அநேக அமெ­ரிக்­கர்­களை வெள்­ளை­யின அமெ­ரிக்கக் கலா­சா­ரத்­துடன் ஒன்­றி­ணைக்கும் நோக்­கத்­துடன் இயங்­கின. மாண­வர்கள் தமது சமு­தா­யத்­துக்குத் திரும்பிச் சென்று இவ்­வா­றான ஒன்று கலக்கும் பணியில் ஈடு­பட வேண்டும் என்ற எதிர்­பார்ப்பு இருந்­தது. ஆனால் சிவில் உரி­மைகள் இயக்கம் (1960 களில்) புதிய நோக்­கங்­க­ளையும் புதிய கற்கை நெறி­க­ளையும் உரு­வாக்க உத­வி­யது. ஒன்று கலக்கச் செய்யும் நோக்­குக்குப் பதி­லாக அமெ­ரிக்க, இந்­திய சமூ­கங்­களைக் கல்­வி­யி­னூ­டாக வலுப்­ப­டுத்தும் நோக்கம் உரு­வா­யிற்று.

அமெ­ரிக்க இந்­தியர் வர­லாறு. சமூ­க­வியல், அர­சியல் என்­ப­வற்­றுக்குப் புதிய விளக்­க­ம­ளிக்கும் கற்கை நெறிகள் ஆரம்­ப­மா­யின. பிரின்ஸ்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் நடந்த (1970) அமெ­ரிக்க இந்­தியர் மா­நாட்டில் சுதேச அமெ­ரிக்கக் கற்கை நெறிகள் ஒரு பல்­க­லைக்­க­ழகப் பாட­நெ­றி­யாக உரு­வாக்­கப்­பட்­டன. சுதேச இந்­தி­யர்கள் தமது சொந்த நிலங்­க­ளையும் உரி­மை­க­ளையும் பாது­காக்கும் முக­மாக இக்­கற்கை நெறிகள் தொடங்­கப்­பட்­டன. ஐக்­கிய அமெ­ரிக்­காவின் சுதேச மக்கள் பற்­றிய கொள்கை மாற்றத்துக்கு இவை உதவும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. மேலைநாட்டு அறிஞர்கள் தமது கலாசார சிந்தனைகளுடன் பக்கச் சார்பாக சுதேச இந்தியர் கலாசாரத்தை ஆராய்ந்திருந்தனர். அவர்களுடைய விஞ்ஞான முறைக்குப் பதிலாக இந்தியர்களின் வாய்மொழி சுதேச மரபுகளின் அடிப்படையில் இந்தியர் கலாசாரம் ஒரு மறுவாசிப்புக்கு உள்ளானது.

பழங்குடியினரின் உயர்கல்வி நிலையங்களில் கல்வித் தராதரங்களை மேம்படுத்தவும் புதிய கல்லூரிகளை அமைக்கவும் தேசிய மட்டத்தில் சுதேச இந்தியர் உயர்கல்விக்கான கொள்கைகள், சட்டவாக்கம் என்பவற்றில் உதவி புரியவும் அமெரிக்க இந்திய உயர்கல்வி அமைப்பொன்று (1972 Consortium) உருவாக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவில் சார்பளவில் பின்தங்கிய மக்களாக வாழும் கறுப்பு இன ஆபிரிக்க, அமெரிக்கர், சுதேச அமெரிக்கர் ஆகியோரின் உயர்கல்வி மேம்பாட்டுக்காக அவர்களுடைய இனஞ்சார்ந்த கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் ஏற்படுத்தப்­பட்டுள்ளன. அத்துடன் அவர்களின் பண்பாட்டு வரலாறு தொடர்பான கற்கை நெறிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் அடிமைகளாக இருந்த ஆபிரிக்க அமெரிக்கரும் அழித்தொழிக்கப்­பட்ட சுதேச இந்தியர்களும் இன்று ஐக்கிய அமெரிக்காவில் பல வரலாற்று ரீதியான இன்னல்களுக்கிடையில் கல்வித் துறையில் இந்த அளவிற்கு அங்கீகாரம் பெற்றிருப்பது மனித நாகரிக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பேராசிரியர் சோ.சந்திரசேகரன் 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-17#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.