Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை - பங்களாதேஷ் மோதும் அரையிறுதிப்போட்டி இன்று

Featured Replies

இலங்கை - பங்களாதேஷ் மோதும் அரையிறுதிப்போட்டி இன்று

 

 

19 வய­திற்­குட்­பட்­டோருக் ­கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையி­றுதிப் போட்டியில்  இலங்கை மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­த­வுள்­ளன. 

asdfasfa1.jpg

இந்த போட்டி இன்று மதியம் 2.30 மணியளவில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/14598

  • தொடங்கியவர்

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை

 

 19 வய­திற்­குட்­பட்­டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையி­றுதிப் போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.

15622118_2018120591552471_11789700453412

பங்களதேஷ் அணிக்கெதிரான இந்த போட்டியில் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களதேஷ் அணி 48.3 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் ரயான் ரப்ஷான் 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இலங்கை அணி சார்பில் ஜெயவிக்ரம 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால், டக்வர்த் லூவிஸ் முறைப்படி இலங்கை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணி சார்பில் சத்துரங்க 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டியில் இந்திய அணியை சந்திக்கவுள்ளது.

http://www.virakesari.lk/article/14634

  • தொடங்கியவர்

இளையோருக்கான ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இளம் இலங்கை

u4-40edb9f2087d1c83e6d0ad30802699b41e9f2151.jpg

 

இலங்­கையில் நடை­பெற்­று­வரும் இளையோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி நாளை கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது.

நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற முத­லா­வது அரை­யி­றுதிப் போட்­டியில் ஆப்­கா­னிஸ்தான் அணியை வீழ்த்தி இந்­திய அணி இறு­திப்­போட்­டிக்கு நுழைந்­தது. நாளை நடை­பெ­ற­வுள்ள இறு­திப்­போட்­டியில் இந்­தி­யா­வுடன் மோதப்­போகும் அணி எது என்­பதை தீர்­மா­னிக்கும் இரண்­டா­வது அரை­யி­றுதிப் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச அரங்கில் நடை­பெற்­றது.

இலங்கை மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் பலப்­ப­ரீட்சை நடத்­தின. இதில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி ­பெற்ற பங்­க­ளாதேஷ் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது.

அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய பங்­க­ளாதேஷ் அணியின் ஆர­ம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக சைவ் ஹசன் மற்றும் மொஹமட் சொஹ்ப் ஹொசன் ஆகியோர் கள­மி­றங்­கினர். 8.3 ஓவர்­களில் 42 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்த வேளையில் பங்­க­ளாதேஷ் முதல் விக்­கெட்டை இழந்­தது. 26 ஓட்­டங்­களைப் பெற்று சைவ் ஹசன் ஆட்­ட­மி­ழந்தார்.

அடுத்ததாக ஹொசைனும் 36 ஓட்டங்களுடன் விக்கெட்டை பறிகொடுக்க, சிறப்பாக ஆடி வந்த ரவ்சான் ரஹ்மானும் 38 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இறு­தியில் பங்­க­ளாதேஷ் அணி 48.3 ஓவர்­களில் சகல விக்­கெட்­டுக்

­க­ளையும் இழந்து 194 ஓட்­டங்­க ளைப் பெற்­றுக்­கொண்­டது. பந்­து­ வீச்சில் அசத்­திய இலங்கை வீரர் ஜய­விக்­ரம 4 விக்­கெட்­டுக்­க­ளையும்,

வீர­சிங்க 3 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினர்.

195 என்ற வெற்­றி

­இ­லக்கைத் துரத்த கள­மி­றங்­கிய இலங்கை அணிக்கு கெலி மற்றும் சது­ரங்க ஜோடி தொடக்­கத்தை கொடுத்­தது. இதில் கெலி 23 ஓட்­டங்­க­ளு­டனும் சது­ரங்க 68 ஓட்­டங்­க­ளையும் பெற்று ஆட்­ட­மி­ழக்க, அடுத்து பொயா­கொட மற்றும் மெண்

டிஸ் ஜோடி நிதா­ன­மாக ஆடிக்­கொண்­டி­ருக்க மழை குறுக்­கிட்­டது.

கிட்­டத்­தட்ட 2 மணித்­தி­யா­லங் கள் தொடர்ந்து மழை பெய்­ததால் போட்டி நிறுத்­தப்­ப­டு­வ­தாக அறி­விக்கப்பட்­டது.

அப்­போது இலங்கை அணி 27.1 ஓவர்­களில் 2 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 106 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது. போட்டி நிறுத்­தப்­பட்­டதால் டக்வேர்த் லூயிஸ் முறைப்­படி போட்­டியின் முடிவு அறி­விக்­கப்­பட்­டது. அதன்­படி 26 ஓட்­டங்­களால் இலங்கை அணி வெற்­றி­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இந்த வெற்றியின் மூலம்  இலங்கை அணி இறுதிப்போட்டிக் குள் நுழைந்தது. நாளை நடை பெறவுள்ள இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-22#page-16

  • தொடங்கியவர்

ஆசிய கிண்ணம் யாருக்கு? ; இலங்கையுடன் மோதுகிறது இந்தியா!

 

19 வய­திற்­குட்­பட்­டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின்  இறுதிப்போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

asfasf1.jpg

இந்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அரையிறுதிப்போட்டியில் இலங்கை அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 26  ஓட்டங்களால் பங்களதேஷ் அணியை வெற்றிக்கொண்டதுடன், இந்திய அணி 77 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிக்கொண்டது.

இந்நிலையில் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த போட்டி இலங்கை நேரப்படி மதியம் 2.30 மணியளவில் கொழும்பு ஆர். பிரேமதாச  சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

http://www.virakesari.lk/article/14672

  • தொடங்கியவர்

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

Published by Pradhap on 2016-12-23 22:26:14

 

19 வயதுக்குற்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வெற்றிக்கொண்டு இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

15698241_2020803997950797_58297168606718

இன்று ஆர்.பிரேமாதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதனடிப்படையில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் சப்மான் கில் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

15665890_2020803951284135_67498116899153

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ரன்சிக மற்றும் ஜெயவிக்ரம தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் 274 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்கள் நிறைவில் 239 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

15590255_2020804057950791_53737729136642

இலங்கை அணி சார்பில் கெல்லி 62 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணி சார்பில் அபிசேக் சர்மா 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

http://www.virakesari.lk/article/14695

  • தொடங்கியவர்

#U19AsiaCup: இந்தியா ஹாட்ரிக் சாம்பியன்!

 

C0YFEIYUsAAEqiH_22561.jpg

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை  கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் ஆடிய ஹிமான்ஷு ராணா அதிகபட்சமாக 70 பந்துகளில், 71 ரன்கள் எடுத்தார்.

அடுத்து பேட் செய்த இலங்கை அணி, 48.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் இந்திய அணி இலங்கையை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் இந்த இளம்வயது ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று ஹாட்-ட்ரிக் சாதனை படைத்துள்ளது.

http://www.vikatan.com/news/sports/75800-india-u-19-team-won-youth-asia-cup.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.