Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண வரவு – செலவுத் திட்டம்

Featured Replies

வடமாகாண வரவு – செலவுத் திட்டம்

01-0194ed7e66167fafa636ffe4e7d82045cf10e617.jpg

 

முத­ல­மைச்­சரின் அமைச்­சா­னது நிதியும் திட்ட­மி­டலும் சட்­டமும் ஒழுங்கும், காணி, சமூ­க­சேவை, புனர்­வாழ்­வ­ளித்தல், மக­ளிர்­ வி­வ­காரம், மின்­சக்தி, வீட­மைப்பும் நிர்­மா­ணமும், தொழிற்­று­றையும் தொழில் முனைவோர் மேம்­பாடும் சுற்­றுலா, உள்ளூ­ராட்சி மற்றும் மாகாண நிர்­வாகம் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கி­யுள்­ளது.

இதில் நிர்­வாக ரீதி­யான செயற்­பா­டு­களின் இலகு தன்­மை­யினைக் கருத்தில் கொண்டு பிர­தம செய­லாளர் செய­ல­கத்தின் கீழ் இணைக்­கப்­பட்­டுள்ள நிதியும் திட்­ட­மி­டலும், மாகாண நிர்­வாகம் போன்­ற­வற்­றுடன் எமது அமைச்சின் கீழ் இயங்கும் மகளிர் விவ­காரம் புனர்­வாழ்வு ஆகி­ய­வற்றைத் தவிர ஏனைய துறை­க­ளுக்கும் சேர்த்து மொத்­த­மாக எமது அமைச்­சிற்கு 2017 ஆம் ஆண்­டுக்­காக ரூபா 2,732.111 மில்­லியன் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதில் 2,430.611 மில்­லியன் ரூபா மீண்­டு­வரும் செல­வி­னத்­திற்கும் 301.5 மில்­லியன் ரூபா மூல­தனச் செல­வி­னத்­திற்கும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

எமது அமைச்சின் கீழ் வரும் திணைக்­க­ளங்­களைத் தவிர, முத­ல­மைச்­சரின் அமைச்­சிற்கு மட்டும் 2017ஆம் ஆண்­டுக்கு 63.138 மில்­லியன் ரூபா மீண்­டெழும் செல­வி­னத்­திற்­கா­கவும், பிர­மாண அடிப்­ப­டை­யி­லான கொடைக்கு ரூபா 8 மில்­லி­யனும் மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட அபி­வி­ருத்திக் கொடைக்கு ரூபா 42 மில்­லி­ய­னு­மாக மொத்­த­மாக 113.138 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

1. வீட­மைப்பு

இத்­து­றைக்கு 2016 ஆம் ஆண்டில் ரூபா 12.75 மில்­லியன் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இதில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட, வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மற்றும் அர­சாங்­கத்தின் ஏனைய வீட்டுத் திட்­டங்­களுள் உள்­ள­டக்­கப்­ப­டாத மிகவும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுள் 17 குடும்­பங்கள் தெரிவு செய்­யப்­பட்டு புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஒரு வீட்­டினை நிர்­மா­ணிப்­ப­தற்­காக எமது அமைச்சின் பங்­க­ளிப்­பாக 750,000 ரூபா வழங்­கப்­ப­டு­கின்­றது. இத்­துடன் பய­னா­ளியின் பங்­க­ளிப்­பாக 155,000 ரூபாவும் சேர்த்து மொத்­த­மாக மதிப்­பி­டப்­பட்ட தொகை ரூபா 905,000இல் வீடுகள் கட்­டப்­பட்­டுள்­ளன. எனினும் பய­னா­ளிகள் தமது பங்­க­ளிப்­பினை சேர்த்து வீட்­டினை கட்டி முடிப்­பதில் அவர்­க­ளது வரு­மானம் போதாமல் உள்ள வறுமை நிலை­யா­னது பல இடர்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தி­யதன் விளை­வாக வீட்­டினை குறிப்­பிட்ட காலத்­திற்குள் நிறைவு செய்­வதில் கால­தா­ம­தங்கள் ஏற்­பட்­டன. எனவே, அடுத்த ஆண்டில் இத் தொகை­யினை அதி­க­ரித்து வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம். சில­ருக்குக் குறித்த தொகை­யா­னது எமது உத­விப்­பாலம் திட்­டத்தின் கீழ் வழங்­கப்­பட்டு வீட்டு­ நிர்மாணப் பணிகளை முடித்துக் கொடுத்­துள்ளோம்.

வீடுகள் இல்­லாது வாழ்ந்­து­வரும் பலர் எம்­மிடம் வீட்டுத் திட்­டத்­திற்­காக விண்­ணப்­பித்­தி­ருக்­கி­றார்கள். யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், பெண் தலை­மைத்­துவ குடும்­பங்கள், வறு­மைக்­கோட்டின் கீழ் உள்­ள­வர்­க­ளுக்­காக வீடு­களை அமைத்துக் கொடுப்­ப­தற்­கான நிதி ஒதுக்­கீடு போதாமல் உள்ள நிலையே காணப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் வீட­மைப்­புக்­காக 2017 ஆம் ஆண்­டுக்கு 12 மில்­லியன் ரூபா மட்­டுமே ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்­டிலும் பார்க்க 75 மில்­லியன் குறை­வா­கவே கிடைத்­துள்­ளது.

2. சுற்­று­லாத்­துறை
இலங்­கையின் ஏனைய பகு­தி­களை பொறுத்த­வ­ரையில் சுற்­று­லாத்­துறை ஆனது நீண்­ட­கால அடிப்­ப­டையில் முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது. எனினும் வட­மா­காணம் தற்­பொ­ழுது தான் இத்­து­றையில் கால் பதித்­துள்­ளதால் எம்­மி­டையே காணப்­படும் அரிய வளங்கள், வனப்­புக்கள், வாய்ப்­புக்கள் ஆகி­யவை பொக்­கி­ஷங்­க­ளாகக் கரு­தப்­பட்டு திற­மான விதத்தில் முன்­னெ­டுத்துச் செல்­லப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. நீண்ட கால யுத்­தத்­தினால் எமது கலை கலா­சார சின்­னங்­களும், வர­லாற்று சின்­னங்­களும் பாரிய அழி­வுக்கு உட்­பட்டு இருக்­கின்ற வேளையில் இவற்றை உள்­ள­டக்­கி­ய­தான சுற்­று­லாத்­துறை அபி­வி­ருத்தி என்­பது வர­லாற்று ரீதி­யா­கவும் சமூக, கலா­சா­ர­ ரீ­தி­யா­கவும் எமது அடை­யா­ளத்தை நிலை­நாட்டி வெளிக்­கொ­ணர்­வ­தற்­கான ஒரு உபா­ய­மா­க­வும்­ சுற்­று­லாத்­துறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். மேலாண்மைத் திறன் கொண்ட சுற்­றுலா அபி­வி­ருத்தித் திட்டம் ஒன்றின் வரைவை நாம் உறுப்­பி­னர்­க­ளுக்கு அண்­மையில் அனுப்­பி­யுள்ளோம். உறுப்­பி­னர்­களின் கருத்­துக்­களை ஆவ­லுடன் எதிர்­பார்க்­கின்றோம். அத் திட்­டத்தை அடிப்­ப­டை­யாக வைத்து நீண்ட காலத் திட்­ட­மொன்றைத் தீட்ட இருக்­கின்றோம்.  

ஐக்­கிய நாடு­களின் உலக சுற்­றுலா ஸ்தாப­னத்தின் 2017ஆம் ஆண்­டுக்­கான மகுட வாச­க­மா­கிய நிலை­பே­றான சுற்­று­லாத்­துறை -அபி­வி­ருத்­திக்­கான ஒரு கருவி (Sustainable Tourism: A tool for development) என்­ப­தற்கு அமை­வாக வட மாகா­ணத்­திலும் பல அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. வேலை­வாய்ப்­பினைத் தேடிக்­கொண்­டி­ருக்கும் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு தொழில்சார் திற­னுள்ள பயிற்­சி­களை வழங்­கு­வதன் மூலம் அவர்­களை சுற்­றுலா மற்றும் விருந்­தோம்பல் துறையில் தேர்ச்­சி­யுள்­ள­வர்­க­ளாக பயிற்­று­வித்து அத­னூ­டாக வட மாகா­ணத்தில், இத்­து­றையில் நிலவும் பாரிய தொழில் வெற்­றி­டங்­களை நிரப்ப முடியும். தற்­பொ­ழுது பெரும்­பாலும் ஏனைய மாகா­ணங்­களில் இருந்தே ஆள­ணி­யினர் வரு­விக்­கப்­ப­டு­கின்­றனர்.

எமது மாகா­ணத்தில் காணப்­ப­டு­கின்ற வளங்­களை சிறந்த முறையில் முகா­மைத்­துவம் செய்­வதன் மூலம் அவற்­றினை சுற்­று­லாப் ­ப­ய­ணி­க­ளுக்குத் தோதான சுற்­றுலா பிர­தே­சங்­க­ளாக அபி­வி­ருத்தி செய்­யலாம். இதற்குப் பாரி­ய­ளவில் முத­லீ­டுகள் அவ­சியம். எனினும் இவ்­வா­றான முத­லீ­டு­களின் மூலம் வட மாகா­ணத்தில் சுற்­று­லாத்­து­றை­யினை விருத்தி செய்து நலி­விற்­குள்­ளா­கி­யுள்ள மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தினைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும். அதன் மூலம் மாகா­ணத்தின் மொத்த உற்­பத்­தியில் சுற்­று­லாத்­து­றையும் முக்­கிய பங்­க­ளிப்­பினை வழங்க முடியும்.

இவ்­வ­ருடம் (2016ஆம் ஆண்டு) ரூபா 50,250 மில்­லியன் ஒதுக்­கீட்டில் 5 மாவட்­டங்­க­ளிலும் இனங்­கா­ணப்­பட்ட வேலைத் திட்­டங்கள் சிறப்­பான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் தொல் பொருள் திணைக்­களம், கரை­யோரப் பாது­காப்புத் திணைக்­களம், வன­வ­ளப்­பா­து­காப்புத் திணைக்­களம் என்­ப­வற்­றி­ட­மி­ருந்து உரிய அனு­ம­திகள் கிடைக்கப் பெறு­வதில் உள்ள தாம­தங்கள் தடங்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

2017ஆம் ஆண்­டுக்கு ரூபா 30 மில்­லியன் நிதி மட்­டுமே சுற்­று­லாத்­து­றைக்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­தி­யா­னது,

1. சுற்­றுலாப் பய­ணி­களை கவ­ரக்­கூ­டிய இடங்­களை அழகு படுத்தல் மற்றும் அபி­விருத்தி செய்தல்.

2. பாரம்­ப­ரிய சுற்­று­லாத்­து­றையை அபி­வி­ருத்தி செய்தல்.

3. இயற்கை சுற்­று­லாத்­து­றையை அபி­விருத்தி செய்தல்.

4. சமயம் சார்ந்த சுற்­று­லாத்­து­றையை விருத்தி செய்தல்.

5. ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட வச­தி­கள்/­சௌ­க­ரி­யங்கள் உள்­ள­டங்­கிய மையங்­களை தனியார் துறையின் பங்­க­ளிப்­புடன் உரு­வாக்­குதல்.

6. சுற்­றுலாத் துறைக்­கான தக­வல்­களை வெளியி­டுதல் மற்றும் அத்­துறை சார்ந்த ஊழி­யர்­க­ளுக்­கான இய­லுமை விருத்­திப் பயிற்­சி­களை வழங்­குதல்.

ஆகிய பிரி­வு­களின் கீழ் அபி­வி­ருத்தித் திட்­டங்கள் தெரிவு செய்­யப்­பட்டு மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

3. மகளிர் விவ­காரம்

மிகவும் முக்­கி­ய­மான துறை­களில் ஒன்­றாக காணப்­படும் மகளிர் விவா­கரத் துறையின் கீழ் போருக்குப் பின்­ன­ரான வட மாகா­ணத்தில் கடந்த காலப் போரினால் அதிகம் பாதிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட்ட மாற்று வலு­வு­டை­ய­வர்கள், முன்னாள் போரா­ளிகள் மற்றும் போருக்குப் பின்­ன­ரான காலத்தில் இல­குவில் பாதிப்­புக்­குள்­ளா­கிய பெண்கள் என பல­த­ரப்­பட்­ட­வர்­களும் உள்­ளனர். இவர்­க­ளது முன்­னேற்றம் குறித்து மகளிர் விவ­காரம் என்னும் நோக்­கெல்­லை­யூ­டாக விசேட கவனம் செலுத்தி வரு­கின்றோம்.

அந்­த­வ­கையில் இத்­து­றைக்கு 2016 ஆம் ஆண்டு 10 மில்­லியன் ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு போரினால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் தலை­மைத்­துவக் குடும்­பங்­க­ளுக்­கான வாழ்­வா­தார மேம்­பாட்­டுக்­கான சுய­தொழில் ஊக்­கு­விப்புத் திட்­டங்­க­ளான கோழி வளர்ப்பு , ஆடு வளர்ப்பு, நிலக்­க­டலை பயிர்ச்­செய்கை, வீட்­டுத்­தோட்டம், தையல் தொழி­லுக்­கான தையல் இயந்­திரம் வழங்கல், இறால் பிடித்­த­லுக்­கான வள்ளம் வழங்கல் மற்றும் சுய­தொ­ழி­லுக்­கான பயிற்சி நெறிகள் என்­பன வழங்­கப்­பட்­டன.

அதன் தொடர்ச்­சி­யாக 2017 ஆம் ஆண்டில், பெண்­க­ளுக்­கான தொழில் வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்தல், தொழிற்பயிற்­சிகள் வழங்­குதல், பெண்­களின் இயல்­த­கை­மை­களை முன்­னேற்­றக்­கூ­டிய பயிற்­சி­நெ­றி­களை ஒழுங்­கு­ப­டுத்தி வழங்­கு­தல் ­போன்ற செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்க உத்­தே­சித்­துள்ளோம்.

சிறி­ய­ள­வி­லான ஆடை உற்­பத்தி நிலை­யங்­களை நிறுவி அதன் மூலம் பெண்­க­ளுக்­கான தொழில் வாய்ப்­பினை வழங்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இவை எல்­லா­வற்­றையும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு நிதி ஒதுக்­கீடு அதி­க­மாக தேவைப்­ப­டு­கின்­றது. இந்­நிதித் தேவை­யினை ஒதுக்­கீடு செய்­யப்­ப­டாது உள்ள சிறி­ய­ளவு நிதி­யி­லி­ருந்து பெற்றுக் கொடுக்க எண்­ணி­யுள்ளோம்.

4. புனர்­வாழ்­வ­ளித்தல்

புனர்­வாழ்­வ­ளித்தல் எனும் நோக்­கெல்­லை­யூ­டாக ஏற்­க­னவே சுகா­தார அமைச்­சினால் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்த முள்­ளந்­தண்டு வடம் பாதிக்­கப்­பட்ட மற்றும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளாக காணப்­பட்ட 538 பய­னா­ளி­க­ளுக்கு மொத்­த­மாக ரூபா 65.63 மில்­லியன் மதிப்­பீட்டில் இருக்கை மல­ச­ல­கூ­டங்­களை அமைத்துக் கொடுக்கும் செயற்­றிட்­டத்­தினை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். இதில் அமைச்சின் பங்­க­ளிப்­பாக ரூபா 122,000.00 மற்றும் பய­னா­ளியின் பங்­க­ளிப்­பாக ரூபா 40,000.00 இனையும் சேர்த்து 162,000.00 ரூபா ஒரு மல­ச­ல­கூ­டத்­திற்கு மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந் நோக்­கத்­திற்­காக கடந்த வருடம் சுகா­தார அமைச்­சினால் ரூபா 20.34 மில்­லியன் 538 பய­னா­ளி­க­ளுக்­கு­மான ஆரம்ப கொடுப்­ப­ன­வுக்­காக செல­வி­டப்­பட்­டி­ருந்­தது.

மேலும் இவ்­வ­ரு­டத்தில் கிடைக்­கப்­பெற்ற 25 மில்­லியன் ரூபா­வி­னையும் சேர்த்து தற்­போது வரை 210 மாற்று வலு­வு­டை­யோ­ருக்­கான விசேட மல­ச­ல­கூ­டத்­தினை பூர்த்தி செய்­துள்ளோம். ஏனை­யவை பகு­தி­ய­ளவில் பூர்த்­தி­ய­டைந்த நிலை­யி­லுள்­ளன. இதனை முழு­மை­யாக முடி­வு­றுத்­து­வ­தற்கு தேவை­யான 20 மில்­லியன் ரூபா நிதி இவ்­வ­ரு­டத்தில் கிடைக்­கப்­பெ­றா­ததால் அதன் தொடர்ச்­சியை 2017 ஆம் ஆண்டில் மேற்­கொண்டு முடி­வு­றுத்த எதிர்­பார்த்­துள்ளோம். மேலும் போதிய நிதி மூலம் கிடைக்­கப்­பெறும் பட்­சத்தில் இவர்­களின் இருக்கை மல­ச­ல­கூ­டத்­திற்­கான நீர்­வ­ச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்கும் எண்­ணி­யுள்ளோம்.

அத்­துடன் வட மாகா­ணத்தில் முக்­கி­ய­மான துறை­களில் ஒன்­றாக புனர்­வாழ்வும் உள்­ளது. ஆனால் 2017ஆம் ஆண்­டுக்­காக இத்­து­றைக்கு நிதி ஒதுக்­கப்­ப­ட­வில்லை. எனவே ஒதுக்­கீடு செய்­யப்­ப­டாது உள்ள சிறி­ய­ள­வி­லான நிதி­யி­லி­ருந்து குறிப்­பிட்ட அளவு நிதி­யினை இத்­து­றைக்கு ஒதுக்­கீடு செய்து 2017ம் ஆண்டு இத்­து­றையின் கீழ் முக்­கி­ய­மான திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த எண்­ணி­யுள்ளோம்.

5. சட்­டமும் ஒழுங்கும்

வட மாகா­ணத்தில், சட்­டமும் ஒழுங்கும் பேணப்­ப­டு­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தனை நோக்­க­மாக கொண்டு ஒன்­றி­ணைந்த பொலிஸ் - சிவில் பாது­காப்­பு­கு­ழு­வினை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து எடுக்­கப்­பட்­ட­போதும் 2016 ஆண்­டி­லேயே இம்­மு­யற்சி நடை­மு­றைக்கு வந்­துள்­ளது. இந்தக் குழு­வினை அமைப்­ப­தற்­கான கருத்­தா­வணம் (Concept Note) எம்மால் தயா­ரிக்­கப்­பட்டு பொலிஸ்­மா­ அ­திபர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்­மா­ அ­திபர் ஆகி­யோ­ரினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு அத­ன­டிப்­ப­டை­யி­லேயே இக்­கு­ழுவின் முத­லா­வது கூட்டம் இவ்­வ­ருடம் வைகாசி மாதத்தில் நடை­பெற்­றது. பொலி­ஸா­ருடன் தொடர்பில் இருந்­தாலும் அடுத்த கூட்­டங்கள் பல கார­ணங்­க­ளுக்­காக ஒத்தி வைக்­கப்­பட்டு வந்­துள்­ளன. விரைவில் வரும் வரு­டத்தில் இக்­குழு கூடும். இக்­கு­ழுவின் இலக்குப் பரப்­பினுள் சட்டம், மற்றும் சமா­தானம் என்­ப­ன­வற்றை செயற்­ப­டுத்­துவ­தற்­கான பொது­வான விட­யங்­களும் மாகா­ணத்தில் எதிர்­நோக்­கப்­படும் போதைப்­பொருள் பாவனை, பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்­பி­ர­யோகம், களவு, கொள்ளை போன்­ற­வற்றை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்­பா­கவும் ஆராய்ந்து சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்­து­வ­தற்­கான முன்­னேற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டு ­வ­ரு­கின்­றன.

குறை­நி­வர்த்தி நட­மாடும் சேவைகள்

எமது அமைச்­சினால் இந்த வருடம் யாழ் மாவட்­டத்தில் இரண்டு குறை­நி­வர்த்தி நட­மாடும் சேவை­களும் வவு­னியா மற்றும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் தலா ஒரு குறை­நி­வர்த்தி நட­மாடும் சேவையும் நடத்­தப்­பட்­டன. மேலும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஒரு நட­மாடும் சேவை நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் மிகவும் பின்­தங்­கிய பிர­தே­சங்­க­ளுக்கு மக்கள் சந்­திப்­புக்கள் போன்ற சேவை­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இதற்­காக ரூபா 2.5 மில்­லியன் மீண்­டு­வரும் செல­வீ­னத்தில் செல­வி­டப்­பட்­டுள்­ளது. 2017 ஆம் ஆண்டில் 5 குறை­நி­வர்த்தி நட­மாடும் சேவைகள் நடத்த தீர்­மா­னித்­துள்ளோம்.

6. உள்ளூ­ராட்­சித் ­தி­ணைக்­களம்

உள்ளூ­ராட்சித் திணைக்­க­ளத்தை பொறுத்த வரை ஒரு மாந­கர சபை, 5 நகர சபை­கள், 28 பிர­தேச சபைகள் ஊடாக மக்­களின் தேவைகள் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றன. உள்­ளூராட்சி சபை வீதிகள், திண்­மக்­க­ழி­வ­கற்றல், கிரா­மிய மாற்­றீட்டு சக்தி, உள்ளூ­ர­தி­கா­ர­சபை சேவைகள் மற்றும் சன­ச­மூக நீர் விநி­யோகம் ஆகிய துறை­களின் ஊடாக உள்ளூ­ராட்சி சபை­க­ளினால் மக்­க­ளுக்­கான சேவை­களை வழங்­கு­வ­தற்கு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கின்­றது.

(தொடரும்) 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-22#page-4

  • தொடங்கியவர்

வடமாகாண வரவு – செலவுத் திட்டம்

ppp7-29ccab7d86283289bf8704faeaaca98aaab6adad.jpg

 

முதலமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான விவாதத்தில் சி.வி. ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி

இதற்­காக 2017ஆம் ஆண்டில் மீண்­டு­வரும் செல­வீனத்­திற்­கா­க ­ரூபா 1,840.162 மில்­லி­யனும், பிர­மாண அடிப்­ப­டை­யி­லான கொடைக்கு ரூபா 4.5 மில்­லி­யனும், மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட அபி­வி­ருத்திக் கொடைக்கு ரூபா 198 மில்­லி­ய­னு­மாக மொத்­த­மாக 2042.662 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

2016ஆம் ஆண்டு 35 கிரா­மிய வீதிகள் புன­ர­மைக்­கப்­பட்டு வரு­வ­துடன் திண்­மக்­க­ழிவு முகா­மைத்­து­வத்தில் 19 வேலைத்­திட்­டங்­களும் உள்­ளூர் அ­தி­கா­ர­சபை சேவை­க­ளி­னூ­டாக 23 வேலைத்­திட்­டங்­களும் சன­ச­மூக நீர் விநி­யோ­கத்தில் 24 வேலைத்­திட்­டங்­களும் திறன்­வி­ருத்­தியில் 2 வேலைத்­திட்­டங்­களும் மற்றும் கிரா­மிய மின்­சா­ரத்­திட்­டத்தில் 5 மாவட்­டங்­க­ளிலும் உள்ள 34 உள்ளூ­ராட்­சி­ அதி­கா­ர­ ச­பை­க­ளிலும் சூரிய சக்­தி­யினால் இயங்­கு­கின்ற மின்­வி­ளக்­கு­களைப் பொருத்­து­வ­தற்­கு­மான 108 வேலை­க­ளுக்­காக மொத்­த­மாக ரூபா 263.74 மில்­லியன் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அவற்றுள் 87 வேலைத்­திட்­டங்கள் ரூபா 203 மில்­லியன் செலவில் இது­வரை பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. அத்­துடன் பின்­தங்­கி­யதும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­து­மான கிரா­மங்­களின் அபி­வி­ருத்­தியின் கீழ் 6 கிரா­மிய வீதி­களும் ரூபா 32.9 மில்­லியன் செலவில் புன­ர­மைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

உள்ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வரு­மான மூலங்­களை மேம்­ப­டுத்தும் முயற்­சி­யாக 2015இல் உரு­வாக்­கப்­பட்ட மாகாண வரு­மான வரிகள் திணைக்­க­ளத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டின் ஒக்­டோபர் மாதம் வரை திரட்­டப்­பட்ட முத்­தி­ரைத்­தீர்வை ரூபா 298.5 மில்­லி­யனும், நீதி மன்றத் தண்­டப்­பணம் ரூபா 94.13மில்­லி­யனும் திரட்­டப்­பட்­டுள்­ளன. இதில் முத்­தி­ரைத்­தீர்வை வரு­மானம் 2017 இல் உள்ளூ­ராட்சி சபை­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

2017 ஆம் ஆண்டில் முத்­தி­ரைத்­தீர்வை வரு­மானம் 458 மில்­லியன் ரூபாவும், நீதிமன்றத் தண்­டப்­ப­ண­மாக 65 மில்­லி­யன்­ ரூ­பாவும் கிடைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. மேலும் 24 வரு­மான பரி­சோ­த­கர்கள், 5 ஆய்வு உத்­தி­யோ­கத்­தர்­களும் இவ்­வ­ருடம் உள்ளூ­ராட்சி சபை­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்டு வரு­மான முகா­மைத்­துவம் மேம்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

வடக்கு மாகாண இறை­வரித் திணைக்­களம் 08.07.2015இல் தனது தொழிற்­பா­டு­களை உத்­தி­யோக பூர்­வ­மாக ஆரம்­பித்­ததில் இருந்து 2016 நவம்பர் வரை­யி­லான காலப்­ப­கு­தியில் 894 மில்­லியன் ரூபாவை மொத்த அர­சி­றை­யாக சேக­ரித்­துள்­ளது. இவ் வருடம் ஜன­வரி முதல் நவம்பர் வரை­யான காலப்­ப­கு­தியில் 674.5 மில்­லியன் ரூபா சேக­ரிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஏற்­க­னவே 25 ஆண்­டு­க­ளாக செயற்­பட்டு வரும் ஏனைய மாகாண இறை­வரித் திணைக்­க­ளங்கள் சில­வற்றை பின்­தள்ளி தற்­போது இறை­வரி சேக­ரிப்பில் மாகாண வரி­சையில் ஆறாம் இடத்தில் இருந்து தொடர்ந்து முன்­னேறி வரு­கின்­ற­மை­யா­னது இத் திணைக்­க­ளத்தின் செயற்­றிறன் வாய்ந்த வரி நிர்­வா­கத்தை கோடிட்டுக் காட்­டு­கின்­றது.

எமது திணைக்­க­ளத்தால் இவ்­வ­ருடம் மொத்த அர­சிறை சேக­ரிப்­பாக ஏறத்­தாழ ரூபா 750 மில்­லியன் இலக்­கி­டப்­பட்­டுள்­ளது. இது எதிர்­பார்க்­கப்­பட்ட இலக்கை விட மும்­ம­டங்கு அதி­க­மாகும். அடுத்த வருடம் ஏறத்­தாழ ரூபா 1000 மில்­லியன் என்ற இலக்கை நோக்கி எமது திணைக்­களம் செயற்­றி­ற­னு­டனும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் ஈடு­படும்.

முத்­தி­ரைத்­தீர்வை நிலுவை 

2011ஆம் ஆண்டில் இருந்து 2015 ஜூன் மாதம் வரைக்­கு­மான 34 உள்ளூ­ராட்சி மன்­றங்­களின் முத்­திரைத் தீர்வை நிலு­வை­யாக 1202 மில்­லியன் ரூபா­வினை மத்­திய திறை­சேரி உள்ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு மீள­ளிக்க வேண்­டி­யுள்­ளது. தற்­போது 2017ஆம் ஆண்­டுக்­கான பிர­மாண அடிப்­ப­டை­யி­லான நன்­கொ­டை­யாக வழங்­கு­வ­தென மத்­திய அரசின் நிதி அமைச்­ச­ரினால் ஒப்­பு­த­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் 2017ஆம் ஆண்­டுக்­கான மத்­திய அர­சினால் ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட வரவு–செலவுத் திட்டத்தில் இது உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. ஆதலால், தொடர் நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்டு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளினால் முன்­மொ­ழி­யப்­பட்ட அபி­வி­ருத்­தித்­திட்­டங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

நெல்சிப் திட்டம்

2016ஆம் ஆண்டில் நெல்சிப் திட்­டத்­திற்­காக 1145 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு மேற்­கொள்­ளப்­பட்டு 2016ஆம் ஆண்டு கார்த்­திகை மாதம் வரை 909 மில்­லியன் ரூபா 103 வேலை­திட்­டங்­க­ளுக்­காக செல­வீ­டு­செய்­யப்­பட்­டுள்­ளது. இதில் உள்­ள­டக்­கப்­படும் முக்­கிய அபி­வி­ருத்­தி­வே­லை­க­ளாக,

1. நெடுந்­தீ­வு ­மக்­களின் போக்­கு­வ­ரத்­தினை இல­கு­ப­டுத்­து­வ­தற்­காக 150 மில்­லியன் ரூபா செலவில் நெடுந்தாரகை படகு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

2. 11 பிர­தேச சபை­க­ளுக்கு அலு­வ­லக கட்­டட நிர்­மாண வேலைகள் நடை­பெற்­று­ வ­ரு­கின்­றன.

3. நெல்சிப் திட்­டத்தின் கீழ் 2010 தொடக்கம் 2016 வரை 380 கிலோ­மீற்றர் தார் வீதியும், 8.5 கிலோ­மீற்றர் கொங்­கிரீட் வீதியும், 47 சந்­தை­களும், 14 சிறுவர் பூங்­காக்­களும், 2 விளை­யாட்­டு­மை­தா­னங்­களும் மற்றும் மயா­னங்கள், இறைச்­சி­க்க­டை­களும் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன.

கிளி­நொச்சி மத்­திய சந்­தையின் தீ அழிவு

கிளி­நொச்சி மத்­திய சந்­தையில் 16.09.2016 இல் தீ விபத்து ஏற்­பட்டு சந்தை முற்­றாக அழி­வ­டைந்த நிலையில் கடை­களை நடத்­தி­ய­வர்­களின் வாழ்­வா­தாரப் பாதிப்­பினை ஈடு­செய்­வ­தற்­காக 124 பய­னா­ளி­க­ளுக்கும் தலா 20,000.00 வீதம் உட­ன­டி­யாக 2.48 மில்­லியன் வழங்­கப்­பட்­டது. மேலும் அழி­வுற்ற கடைகள் முழு­வதும் பிர­மாண அடிப்­ப­டை­யி­லான நன்­கொடை நிதி­யி­லி­ருந்து 11.5 மில்­லியன் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு 27.10.2016 இல் வேலைகள் முடி­வு­றுத்­தப்­பட்டு உரி­ய­வர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டன. எமது அலு­வ­லர்­களின் அய­ராத முயற்­சியினால் இக்­க­டின இலக்கு குறு­கிய காலத்தில் சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட வர்த்­த­கர்­க­ளுக்­கான நட்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான கோரிக்கை மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்டு ரூபா 74.5 மில்­லியன் பாதிக்­கப்­பட்ட வியா­பா­ரி­க­ளுக்கு இவ்­வ­ருட முடி­விற்குள் நட்­ட­ஈ­டாக வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் ரூபா 150 மில்­லியன் செலவில் சந்தைக் கட்­டடத்­தொ­குதி அமைப்­ப­தற்கும் மத்­திய அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. அத்­துடன் கரைச்சிப் பிர­தேச சபையில் தீய­ணைப்புச் சேவை ஒன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு ரூபா 100 மில்­லியன் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

7. காணி ஆணை­யாளர் திணைக்­களம்

காணி ஆணை­யாளர் திணைக்­க­ளத்­தி­னூ­டாக எமது அரச காணிகள் தொடர்பில் நாம் ஒரு வரை­ய­றுக்­கப்­பட்ட அள­வி­லேயே எமது கட்­டுப்­பாட்டை பிர­யோ­கிக்க முடி­கி­றது. பிர­தேச மட்­டத்தில் எமது மாகாண அலு­வ­லர்கள் பிர­தேச செய­லா­ளர்­களின் கீழ் பணி­பு­ரிந்து வரு­கின்­றனர். ஆயினும் பல தேவை­களின் பொருட்டு சமர்­ப்பிக்­கப்­படும் விண்­ணப்­பங்கள் எம்மால் மக்கள் நலன் கருதும் வகை­யி­லேயே கையா­ளப்­ப­டு­கின்­றன. எனினும் காணி தொடர்­பான விட­யங்­களை கையா­ளுதல், சவால்­மி­குந்த ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது.

அரச காணிகள் மட்­டு­மல்­லாமல், பெரு­ம­ள­வி­லான தனியார் காணி­களும், படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டினுள் கொண்டு வரப்­பட்டு அவற்றை விடு­வித்துக் கொள்ள முடி­யாத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன் அர­சியல் தலை­யீ­டு­க­ளினால் எமது கவ­னத்­திற்கு கொண்டு வரப்­ப­டாமல் பெரு­ம­ள­வி­லான அர­ச­கா­ணிகள் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இது ஒரு ஆரோக்­கி­ய­மான செய­லாகக் காணப்­ப­ட­வில்லை. இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக நாம் மத்­திய அர­சிற்கு அடிக்­கடி அழுத்தம் கொடுக்க வேண்­டி­யுள்­ளது. ஓங்கி குரல் கொடுப்­பதன் மூலம் முன்­னி­லைப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. எனவே இது­பற்றி சக­ல­ரி­னதும் கவ­னத்­திற்கு கொண்டு வரு­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்றோம். இதற்கு சக­ல­ரி­னதும் ஒத்­து­ழைப்பு தேவைப்­ப­டு­கின்­றது.

2017 ஆம் ஆண்­டுக்கு ரூபா 85.126 மில்­லியன் மீண்­டு­வரும் செல­விற்கும் பிர­மாண அடிப்­ப­டை­யி­லான கொடைக்கு ரூபா 1 மில்­லி­யனும், மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட அபி­வி­ருத்திக் கொடைக்கு ரூபா 4 மில்­லி­யனும் மாகாண காணி ஆணை­யாளர் திணைக்­க­ளத்­திற்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இவ் ஒதுக்­கீட்டில் இருந்து காணி தொடர்­பான இலத்­தி­ர­னியல் தகவல் முகா­மைத்­துவ முறைமை தரவுத் தளத்­திற்கு வேண்­டிய கணினி உப­க­ர­ணங்கள், மாவட்ட அலு­வ­ல­கங்­க­ளுக்குத் தேவை­யான நிழற்­பி­ரதி இயந்­தி­ரங்கள், அரச காணி­களில் மரங்­களை நாட்­டு­வ­தற்­கான திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

8. தொழிற்­றுறைத் திணைக்­களம்

வட­மா­கா­ணத்தின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யிலும் போருக்கு பின்­ன­ரான எமது மக்­களின் வாழ்­வ­ாதார முன்­னேற்­றங்­க­ளிலும் சிறிய மற்றும் நடுத்­தர கைத்­தொ­ழில்­களின் பங்­க­ளிப்­பா­னது முது­கெ­லும்­பாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே, இத்­து­றையின் வளர்ச்­சிக்கு உரிய செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.

வடக்கு மாகா­ணத்­தினை சமூக, பொரு­ளா­தார ரீதி­யாக மீளக் கட்­டி­யெ­ழுப்பும் முயற்­சியில் தனியார் துறையின் ஈடு­பாடும் பங்­க­ளிப்பும் பெரிதும் வர­வேற்­கப்­படும் நிலைமை தற்­போது தோன்­றி­யுள்­ளது.

உள்ளூர் முயற்­சி­யாளர் மட்­டு­மன்றி புலம்­பெயர் உற­வு­களின் ஈடு­பாடும் இத்­து­றையை மென்­மேலும் முன்­னேற்­று­வ­தற்கு உறு­து­ணை­யாக அமையும். எமது பிர­தே­சத்தில் காணப்­படும் சிறிய மற்றும் நடுத்­தர கைத்­தொ­ழில்­க­ளுக்­கான வளங்­க­ளையும் மற்றும் இத்­து­றைக்­கான விற்­பன்­னர்­க­ளையும் அடை­யாளம் காண்­ப­தற்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கான தேவைகள், வாய்ப்­புக்கள், சாத்­தி­யப்­பா­டு­களை ஆரா­யவும் இத்­து­றைக்­கான ஆலோ­சனைச் சபை ஒன்றை உரு­வாக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளோம்.

தொழிற்­றுறை திணைக்­களம் வடக்கு மாகா­ணத்தில் தொழிற்­துறை அபி­வி­ருத்தி மற்றும் வாழ்­வா­தார தொழில் முயற்சி அபி­விருத்­திக்­கான கொள்கைத் தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் நிறு­வ­ன­மாகும். தொழிற்­றுறை திணைக்­க­ளத்தின் கீழ் 24 கைத்­தறி நெச­வுப்­பயிற்சி நிலை­யங்­களும், 6 சிறு­கைத்­தொழில் பயிற்சி நிலை­யங்­களும் 5 சந்­தை­வாய்ப்பு நிலை­யங்­களும் 5 மாவட்­டங்­க­ளிலும் இயங்­கு­கின்­றன. அத்­துடன் தொழிற்­துறை திணைக்­களம் தேசிய அருங்­க­லைகள் பேரவை மற்றும் மத்­திய புட­வைக் ­கைத்­தொழில் திணைக்­களம் ஆகி­ய­வற்­றுடன் இணைந்தும் வடக்கு மாகா­ணத்தில் திறன் அபி­வி­ருத்­திக்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. தொழிற்றுறைத் திணைக்­க­ளத்­தி­னு­டைய பிர­தான நோக்கம் கைத்­தொழில் துறை­யி­னு­டைய மேம்­பாடு மற்றும் அபி­வி­ருத்­தி­யுடன் வாழ்­வா­தார தொழில் முயற்­சி­க­ளையும் அபி­வி­ருத்தி செய்து வரு­தல்­ ஆகும்.

2016ஆம் ஆண்டில் முன்­னெ­டுக்­கப்­பட்ட கைத்­தொ­ழிற்­றுறை செயற்­பா­டுகள் பின்­வ­ரு­மாறு: -

நெச­வுத்­துறை

2016ஆம் ஆண்டு தொழிற்­றுறை திணைக்­களம் 107 யுவ­தி­களை கைத்­தறி நெசவில் பயிற்று­வித்­தி­ருக்­கின்­றது. இதற்­காக ரூபா 1.37 மில்­லியன் செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும் 81 பேருக்கு நெசவு நிலை­யங்­களில் நெச­வா­ளர்­க­ளாக வேலை­வாய்ப்பும் வழங்­கி­யுள்­ளது. இந்த வரு­டத்­திற்­கான மொத்தக் கைத்­தறி புட­வைகள் ரூபா 2.02 மில்­லி­ய­னுக்கு உற்­பத்தி செய்­யப்­பட்­டுள்­ளன.

முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் பாண்­டியன் குளத்தில் மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட நிதி ரூபா 2.8 மில்­லி­யனில் நெசவு நிலையம் ஒன்று கட்­டப்­பட்­டுள்­ளது. இங்கு வேலை செய்­வ­தற்கு நன்கு பயிற்­று­விக்­கப்­பட்ட 20 நெச­வா­ளர்கள் தயா­ராக உள்­ளனர்

வவு­னியா செட்­டி­குளம் நெசவு நிலையம் மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட நிதி ரூபா 2.55 மில்­லி­யனில் புன­ர­மைக்­கப்­பட்டு விரி­வாக்­கப்­பட்­டுள்­ளது. இது வட மாகா­ணத்தின் சிறந்த நெசவு நிலை­யங்­களில் ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது.

ஏனைய 22 நெசவு நிலை­யங்­க­ளி­லுள்ள சிறு திருத்த வேலை­க­ளுக்­காக ரூபா 3.00 மில்­லியன் செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும் இந்­நிலை­யங்­க­ளி­னு­டைய தள­பாட வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்­காக புட­வைக்­கைத்­தொழில் அமைச்­சி­னு­டைய நிதி ரூபா 2.5 மில்­லி­யனில் வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

நெசவுத் துறையில் நவீன தொழில் நுட்­பத்தை அறி­மு­கப்­ப­டுத்தி திணைக்­க­ளத்­தினால் மின்­தறி ஆலை ஒன்று சுன்­னா­கத்தில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் UNDP உத­வி­யுடன் வவு­னியா மாவட்­டத்தில் செட்டி குளம் மற்றும் தோணிக்கல் பிர­தே­சத்­தில 2 மின்­தறி ஆலைகள் நிறு­வப்­பட்டு தொழி­லா­ளர்கள் பயிற்­று­விக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

தொழில்­நுட்ப பரி­மாற்ற பயிற்­சிகள்

எதிர்­கால தொழில் முயற்­சி­களின் முன்­னேற்­றத்­திற்­காக மேம்­பட்ட தொழில் நுட்­பங்­களை வழங்­கு­கின்ற குறு­கிய கால பயிற்­சி­க­ளையும் தொழிற்­றுறை திணைக்­களம் வழங்கி வரு­கின்­றது.

எதிர்­கா­லத்தில் வட மாகா­ணத்தின் சிறு கைத்­தொழில் துறைக்கு பங்­க­ளிப்புச் செய்­யக்­கூடிய சுமார் 17 வகை­யான குறுங்­கால பயிற்­சிகள் ரூபா 1.08 மில்­லி­ய­னுக்கு வடக்கு மாகா­ணத்தின் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் 2016ஆம் ஆண்டில் வழங்­கப்­பட்­டுள்­ளன. அவை­யா­வன: -

கபாய ஆடை­வ­டி­வ­மைப்பு பயிற்சி, தையல் இயந்­திரம் திருத்­து­வ­தற்­கான பயிற்சி, பற்றிக் துணியில் ஆடை வடி­வ­மைப்­பிற்­கான பயிற்சி, சுளகு உற்­பத்தி பயிற்சி, மெழு­கு­திரி உற்­பத்தி பயிற்சி, வாழ்த்­து­மடல் வடி­வ­மைப்பு பயிற்சி, பனை­யோ­லைசார் பொருட்கள் உற்­பத்தி பயிற்சி, நகை வேலைப்­பாட்டு பயிற்சி, தோற் பொருள் உற்­பத்தி பயிற்சி, வாழை­நாரில் அழகு சாதனப் பொருட்கள் உற்­பத்தி செய்­வ­தற்­கான பயிற்சி, தேங்­காய்ச் சிரட்­டையில் கைப்­பணி பொருட்கள் உற்­பத்தி செய்­வ­தற்­கான பயிற்சி, கட­தாசி உற்­பத்தி பயிற்சி, இயந்­திரப் பட­கு­களின் வெளி இணைப்பு இயந்­திரம் திருத்­து­வ­தற்­கான பயிற்சி, பாற்­பொ­ருட்கள் உற்­பத்தி பயிற்சி, கடற் சிப்பி சோகி­க­ளி­னா­லான அழகு சாதனப் பொருட்கள் உற்­பத்தி பயிற்சி, சுய­தொழில் ஊக்­கு­விப்பு பயிற்சி, சேலை­க­ளுக்­கான சட்டை வெட்டும் பயிற்சி ஆகி­ய­ன­வாகும்.

சுமார் 961 பய­னா­ளிகள் 84 பயிற்­சி­க­ளி­னூ­டாக பயிற்­று­விக்­கப்­பட்டு பயிற்­சியின் நிறைவில் சான்­றி­தழ்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. 3 மாத காலப்­ப­கு­தி­யை­யு­டைய தொழிற்­ப­யிற்­சி­களும் பிர­தே­ச­ செ­ய­லக வாரி­யாக வழங்­கப்­பட்­டுள்­ளன. இப்­ப­யிற்­சி­களின் ஊடாக நன்கு பயிற்­று­விக்­கப்­பட்ட 52 மின்­னி­ணைப்­பா­ளர்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­துடன் இவர்­க­ளுக்கு ஆரம்ப­கட்ட சுய தொழில் ஊக்­கு­விப்­பாக சிறு உப­க­ர­ணப்­பொ­தி­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. 

(தொடரும்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-23#page-4

  • தொடங்கியவர்

வட மாகாண வரவு – செலவுத்திட்டம்

 

முதலமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான விவாதத்தில் சி.வி. ஆற்றிய உரையின் நேற்றைய 4ஆம் பக்கத் தொடர்ச்சி

சிறு­கைத்­தொழில் துறை

தொழிற்­றுறை திணைக்­க­ளத்­தினால் பாரம்­ப­ரிய சிறு­கைத்­தொழில் திறன் விருத்­திக்­கான மர­வேலை, தும்பு வேலை மற்றும் மட்­கல வேலைப்­ப­யிற்­சிகள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

1. மானிப்­பாயில் மர­வேலைப் பாட­சா­லையின் ஊடாக இளை­ஞர்­க­ளுக்­கான மர வேலைப் பயிற்சி வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

2. சங்­கானை இயந்­திர மட்­கல நிலை­யத்தில் பெண்­க­ளுக்­கான மட்­பாண்ட உற்­பத்திப் பயிற்சி அளிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

3. ஊர்­கா­வற்­றுறை தும்பு பயிற்சி நிலையம், மற்றும் இயந்­திர சாத­னங்­களால் நவீன மயப்­ப­டுத்­தப்­பட்ட புலோப்­பளை தும்பு பயிற்சி நிலையம் என்­ப­வற்­றி­னூ­டாக 3 மாத கால தும்பு பொருட்கள் உற்­பத்தி செய்­வ­தற்­கான பயிற்சி வழங்­கப்­ப­டு­கின்­றது.

4. மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட நிதி (PSDG) 4.5 மில்­லியன் ரூபாவில் கச்சாய் தும்பு பயிற்சி நிலையம் மீள்­பு­ன­ர­மைப்பு செய்­யப்­ப­டு­கின்­றது, இங்கு உற்­பத்தி முயற்­சி­களில் ஈடு­ப­டு­வ­தற்­காக கச்சாய் தொழிற் பயிற்சி நிலை­யத்தில் நன்கு பயிற்­று­விக்­கப்­பட்ட பய­னா­ளிகள் தயா­ராக உள்­ளனர் உற்­பத்தி வேலைகள் 2017ஆம் ஆண்டின் தொடக்­கத்தில் ஆரம்­பிக்­கப்­படும்.

தெரிவு செய்­யப்­பட்ட 58 சிறு­தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு (PSDG) நிதியின் கீழ் ரூபா 1.25 மில்­லியன் பெறு­ம­திக்கு அரை­மா­னிய திட்­டத்தில் உப­க­ர­ணங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இது அவர்­க­ளது சுய தொழில் முயற்­சியை ஊக்­கு­விப்­ப­தற்கு மிகவும் வாய்ப்­பாக உள்­ளது.

கல்­வித்­தி­ணைக்­க­ளத்தின் 1.5 மில்­லியன் நிதி ஒதுக்­கீ­ட்டின் ஊடாக எமது திணைக்­க­ளத்தில் தொழிற்­ப­யிற்சி பெற்­ற­வர்­க­ளுக்­கான கள வேலையின் பயிற்­சி­யாக சம்­ப­ளத்­துடன் கூடிய தொழில் வாய்ப்பு வழங்­கப்­பட்டு பாட­சாலைத் தள­பா­டங்கள் திருத்தி கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

விசேட திட்டம்

தனியார் பங்­க­ளிப்­பு­ட­னான தொழில் முயற்­சி­யா­னது அபி­வி­ருத்­தியில் முக்­கிய அம்­ச­மாக கரு­தப்­ப­டு­வதால் ஆரம்ப முயற்­சி­யாக தனியார் துறை­யுடன் இணைந்து சுகா­தார சிறு­துண்­டுகள் (Sanitary Napkin) உற்­பத்தி செய்யும் நிலை­யங்கள் கிளி­நொச்சி மற்றும் யாழ். மாவட்­டங்­களில் ஆரம்­பிப்­ப­தற்­கான பூர்­வாங்க ஏற்­பா­டுகள் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன.

2017 ஆம் ஆண்டு உத்­தே­சிக்­கப்­பட்ட திட்­டங்கள்  

1. தொழிற்­றுறைத் திணைக்­க­ளத்தில் பயிற்சி பெற்­ற­வர்­க­ளுக்கு சுய தொழில் ஊக்­கு­விப்பு உப­க­ர­ணங்கள் வழங்­கு­வ­தற்­காக ஐந்து மாவட்­டங்­க­ளுக்கும் சேர்த்து ரூபா 5.00 மில்­லியன் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

2. தொழிற்­றுறை திணைக்­க­ளத்தில் பயிற்சி பெற்­ற­வர்­களால் உற்­பத்தி செய்­யப்­படும் பொருட்­க­ளுக்­கான சந்தை வாய்ப்பு நிலை­யங்­களை மேம்­ப­டுத்தல்.

3. தற்­கா­லத்­திற்கும் எதிர்­கா­லத்­திற்கும் ஏற்ற வகையில் தொழில் முயற்­சி­களில் திற­மை­யாக ஈடு­ப­டு­வ­தற்­கான தொழிற்­றிறன் விருத்தி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யினை மேற்­கொள்ளல்.

4. நவீன தொழில்­நுட்­பத்­திற்கு ஏற்ற வகை யில் தொழில் நுட்ப பயன்­பாட்­டுத்­திட்­டங்­களை ஏற்­ப­டுத்­துதல்.

இவை எல்­லா­வற்­றிற்­கு­மாக 2017ஆம் ஆண்­டிற்கு ரூபா 74.560 மில்­லியன் மீண்­டு­வரும் செல­வி­னத்­திற்கும், பிர­மாண அடிப்­ப­டை­யி­லான கொடைக்கு ரூபா 2 மில்­லி­யனும், மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட கொடைக்கு ரூபா 15 மில்­லி­யனும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.

9. சமூ­க­சே­வைகள் திணைக்­களம்

வடக்கு மாகாண சமூ­க­சே­வைகள் திணைக்­களம், வடக்கு மாகா­ணத்­திற்­கென ஒரு மாகாண அலு­வ­ல­கத்­தி­னையும் மற்றும் மாகா­ணத்தின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கும் தனித்­த­னி­யான மாவட்ட சமூ­க­ சே­வைகள் அலு­வ­ல­கங்­க­ளையும் அமைத்­துக்­கொண்டு அதன் ஊடாக அந்­தந்த மாவட்­டங்­களின் அனைத்துப் பிர­தேச செயலர் பிரி­வு­க­ளுக்கும் தனித்­த­னி­யான சமூ­க­சே­வைகள் அலு­வ­லர்­களை நிய­மித்து பிர­தேச செய­லா­ளர்கள் ஊடாக அவர்­களின் சமூ­க­சேவை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளல், மேற்­பார்வை செய்தல் மற்றும் முன்­னேற்­றங்கள், அடை­வுகள் ஆகி­ய­வற்றை பரி­சீ­ல­னை­ செய்தல் ஆகிய செயற்­பா­டு­களை ஆற்­றி­வ­ரு­கின்­றது.

வடக்கு மாகா­ணத்தின் முழு­மை­யான சமூ­க­சேவைச் செயற்­பாட்­டிற்கும் பொறுப்­புக்­கூறும் வகை­யி­லான நாளாந்தச் செயற்­பா­டு­க­ளான, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்­க­ளுக்­கான பொது­சன மாதாந்த உதவிக் கொடுப்­ப­ன­வு­களை வழங்கல், அவர்­க­ளுக்­கான சுய­தொழில் ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வு­களை வழங்­குதல், இயற்கை அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட வறிய குடும்­பங்­க­ளுக்கு அதி­லி­ருந்து உட­ன­டி­யாக மீண்­டெ­ழு­வ­தற்­கான இடர் உதவிக் கொடுப்­ப­ன­வு­களை வழங்கல், இயற்­கை­யாக அல்­லது அனர்த்­தங்­க­ளின்­போது அவ­ய­வங்­களை இழந்த மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கான செயற்கை அவ­ய­வங்­களை வழங்­குதல், தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் என்­ப­ன­வற்றில் சில நோய்­க­ளான கசம், புற்­றுநோய், தொழுநோய், தல­சீ­மியா, சிறு­நீ­ரக நோய் போன்­ற­வற்றால் பீடிக்­கப்­பட்ட நோயா­ளர்­க­ளுக்கு குறிப்­பிட்ட அளவு நோயாளர் கொடுப்­ப­ன­வு­களை வழங்கி ஆற்­றுப்­ப­டுத்தல், மற்றும் முள்­ளந்­தண்­டு­வடம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளிற்­கான கொடுப்­ப­னவு வழங்கல் மற்றும் கைத­டியில் அரச முதியோர் இல்லம் ஒன்றும் இத்­திணைக்­க­ளத்­தினால் நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. இதில் சுமார் 184 மூத்த பிர­ஜைகள் பரா­ம­ரிக்­கப்­படு­கின்­றார்கள்.

மேற்­படி நாளாந்த செயற்­பா­டுகள் மட்­டு­மல்­லாது வட மாகா­ணத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள அரச சார்­பற்ற மற்றும் தனியார் நிறு­வ­னங்­களால் பரா­ம­ரிக்­கப்­பட்­டு­வரும் முதியோர் மற்றும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­களின் இல்­லங்­க­ளுக்கும் அவற்றின் செயற்­பா­டு­களை ஊக்­கு­விக்கும் முக­மாக கொடுப்­ப­ன­வு­களை வழங்­குதல், முதியோர் மற்றும் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் தொடர்­பி­லான சமூக அக்­கறை, அவர்­களின் பரா­ம­ரிப்புத் தொடர்­பான விழிப்­பு­ணர்வு, சமூ­கத்தில் நலி­வுற்­றோர்களை ஊக்­கப்­ப­டுத்தல் போன்ற கார­ணங்­க­ளுக்­காக இவர்­க­ளுக்­கெனச் சர்­வ­தே­சத்­தினால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படும் விசேட தினங்­களை கொண்­டா­டுதல் போன்ற செயற்­பாடு­களும் இத்­தி­ணைக்­க­ளத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

நலி­வுற்ற மக்­களின் குறைகேள் விருத்திச் செயற்­பா­டு­க­ளுக்கும், அவர்­களால் முன்­வைக்­கப்­படும் முறைப்­பா­டு­களை சீர்­செய்யும் நோக்­கு­டனும் பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் சமூக பரா­ம­ரிப்பு நிலை­யங்­களை நிறுவி அத­னூ­டா­கவும் சமூக சேவைச் செயற்­பா­டுகள் இத்­தி­ணைக்­க­ளத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இதற்­க­மைய இத்­தி­ணைக்­க­ளத்தின் கண்­கா­ணிப்பில் 77 முதியோர் சங்­கங்­களும், 7 மாற்று வலு­வு­டை யோர் இல்­லங்­களும், 8 தனியார் முதியோர் இல்­லங்­களும், 7 முதியோர் பகல் ­ப­ரா­ம­ரிப்பு நிலை­யங்­களும் இயங்­கி­ வ­ரு­கின்­றன.

முப்­பது வரு­ட­காலக் கொடிய யுத்­தத்­தினால் எமது மாகாணம் பல இழப்­பு­களைச் சந்­தித்­துள்­ளது. இதனால் நலி­வ­டைந்த மக்கள் தொகை பன்­ம­டங்­காக உயர்ந்­துள்­ளது. இதி­லி­ருந்து சடு­தி­யாக மீள்­வது மிகவும் பாரிய சவா­லாகும். யுத்­தத்­திற்கு முன்னர் வினை­த்தி­ற­னுடன் இயங்­கி­வந்த பல முதியோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்கள் மூடப்­பட்­டுள்­ளன. அவற்றின் கட்­ட­டங்கள் பெரு­ம­ளவில் அழி­வுற்று மீண்டும் இயங்க முடி­யாத நிலையில் காணப்­ப­டு­கின்­றன. பல ஏக்கர் நிலப்­ப­ரப்பில் பல கட்­டடத் தொகு­தி­களைக் கொண்­ட­தாக அழி­வ­டைந்த நிலையில் உள்ள பல இல்­லங்கள் தற்­போது அடை­யா­ளங் ­கா­ணப்­பட்­டுள்­ளன.

இவற்­றினை விட வடக்கு மாகா­ணத்தில் ஆத­ர­வற்ற மன­வ­ளர்ச்சி குன்­றி­யோரைப் பரா­ம­ரிப்­ப­தற்கு தனி­யான அரச இல்­லங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. மாற்று வலு­வுள்ள சிறு­வர்­களைப் பரா­ம­ரிப்­ப­தற்கும் அரச இல்­லங்கள் உரு­வாக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. மாற்று வலு­வுள்ள இளைஞர், யுவ­தி­களின் வாழ்­வா­தாரம் இன்­னமும் கேள்­விக்­கு­ரிய ஒன்­றா­கவே காணப்­ப­டு­வ­தனால் அவர்­க­ளுக்­கான வதி­வி­டத்­துடன் கூடிய தொழிற்­ப­யிற்சி நிலை­யங்கள் அமைக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

சர்­வ­தேச ரீதி­யிலும் எமது நாட்டின் கொள்­கை­க­ளுக்­க­மை­வா­கவும் மாற்­று­வ­லு­வு­டை­ய­வர்கள் மற்றும் நலி­வுற்­ற­வர்கள் பல உரி­மை­களைக் கொண்­டுள்­ளனர். இது அரச கொள்­கை­யாகப் பெய­ர­ளவில் காணப்­படும் போதும் நடை­முறையில் இது செயற்­பாட்டில் இல்­லாத ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது. மாற்று வலு­வு­டை­ய­வர்கள் தங்­க­ளது வதி­வி­டங்­களில் இல­கு­வாக நட­மா­டக்­கூ­டி­ய­வ­கையில் அணு­கு­வ­ச­திகள் அமைத்துக் கொடுக்­கப்­ப­ட­வேண்டும். பொது அலு­வ­ல­கங்­க­ளிலும், ஏனைய பொது இடங்­க­ளிலும் அவர்கள் நட­மா­டக்­கூ­டிய அணுகு வச­திகள் (Access Ram) அமைத்­துக்­கொ­டுக்­கப்­பட வேண்­டி­யுள்­ள­துடன் அவர்­க­ளுக்­கான விசேட கழிப்­பிட வச­தி­களும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட வேண்டும்.

அத்­துடன் மிகவும் நலி­வுற்ற மக்­களை வலு­வூட்­டக்­கூ­டிய வகையில் நிலைத்­தி­ருக்கக் கூடிய வாழ்­வா­தா­ரத்­திட்­டங்கள் உரு­வாக்­கப்­படல் வேண்டும். எதிர்­கா­லத்தில் வடக்கு மாகா­ணத்தில் உள்ள அனைத்து மாற்று வலு­வு­டை­ய­வர்­க­ளையும் சமூகத்தில் ஏனை­ய­வர்­க­ளுடன் பொரு­ளா­தாரம் மற்றும் சமூக அந்­தஸ்து என்­ப­வற்றில் சம­னாக இருக்­கக்­கூ­டிய வகையில் முன்­னேற்­று­வ­தற்­கான திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இதற்கு உங்கள் எல்­லோ­ரதும் ஒத்­து­ழைப்பும் பெரிதும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

2016 இன் அடை­வுகள்

2016ஆம் ஆண்டின் மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட அபி­வி­ருத்திக் கொடைக்கு 30 மில்­லியன் வழங்­கப்­பட்­டது.

2016ஆம் ஆண்டில் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் மற்றும் நலி­வுற்­ற­வர்­க­ளுக்­கான பயிற்சி நிலையம் அமைப்­ப­தற்­காக ரூபா 11.6 மில்­லி­யனும், மாற்­றுத்­தி­ற­னா­ளி­களின் வதி­வி­டங்­களின் அணு­குகை வச­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக ரூபா 6 மில்­லி­யனும், மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் மற்றும் நலி­வுற்­ற­வர்­க­ளுக்­கான தொழிற்­ப­யிற்­சிக்­காக 1.4 மில்­லி­யனும் செலவு செய்­யப்­பட்டு வச­திகள் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும் வலிந்­து­தவும் சமூக சேவை அமைப்­புக்­க­ளான யாழ். விழிப்­பு­ல­னற்றோர் சங்கம், சண்­டி­லிப்­பா­யி­லுள்ள கல்­வளை முதியோர் பகல் நிலையம், மன்­னா­ரி­லுள்ள சாந்தோம் முதியோர் இல்லம், புதுக்­கு­டி­யி­ருப்பு வள்­ளி­பு­னத்­தி­லுள்ள இனிய வாழ்வு இல்லம், வவு­னி­யா­வி­லுள்ள சிவன் முதியோர் இல்லம், தர்­ம­புரம் முதியோர் பகல் நிலையம் போன்­ற­வற்­றுக்­கான கட்­டட நிர்­மாணம் மற்றும் புன­ர­மைப்பு வேலைகள் என்­பன ரூபா 8.15 மில்­லியன் ரூபாவில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இதேபோல் மூத்த பிர­ஜைகள் மற்றும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான பொது­சன மாதாந்த உதவிக் கொடுப்­ப­ன­வாக ரூபா 207.14 மில்­லி­யனும், காசநோய்க் கொடுப்பனவாக 1.664 மில்லியனும், தொழுநோய் கொடுப்பனவாக 0.493 மில்லியனும், தலசீமியா கொடுப்பனவாக 0.319 மில்லியன் ரூபாவும், சிறுநீரகநோய் கொடுப்பனவாக ரூபா 18.625 மில்லியனும், முள்ளந்தண்டு வடப்பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவாக ரூபா 11.135 மில்லிய னும், புற்றுநோய் சிகிச்சைக்கான கொடுப் பனவாக ரூபா 27.575 மில்லியனும் வழங்கப் பட்டுள்ளது.

இதில் பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு என்பது அவர்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும் போது இத்தொகையானது அவர்களின் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கான செலவுத் தொகையாகவே காணப்படுகின்றது. அவர்களுக்கான வருமானம் ஈட்டும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில் இத்தொகையினையாவது வழங்குவது நல்விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால், வருமானங்கள் கிடைக்கும் இடத்து அவர்க ளுக்கான கொடுப்பனவுகளை மேம்படுத்தலாம்.

இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் 6.05 மில்லியன் ரூபாவில் கொள்வனவு செய்து வழங்கப்பட்டன. நலிவுற்றவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 6.449 மில்லியன் ரூபாவும், தற்செயல் நிவாரணக் கொடுப்பனவாக 7 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டதுடன், கைதடி அரச முதியோர் இல்லத்தின் பராமரிப்புச் செலவிற்காக 16.5 மில்லியன் ரூபாவும், மாற்றுத்திறனாளிகள் இல்லம், சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட தனியார் முதியோர் இல்லங்கள், முதியோர் பகல் நிலையங்களுக்கான மானியமாக 6.83 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டன.

2017 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடுகள்

2017ஆம் ஆண்டிற்கு சமூக சேவைகள் திணைக்களத்தின் மீண்டெழும் செலவினத்­திற்காக 367.625 மில்லியன் ரூபாவும், பிரமாண அடிப்படையிலான நிதியாக 2 மில்லியன் ரூபாவும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியாக 25 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது 2016லும் பார்க்க ஐந்து மில்லியன் குறைவு.

2017 ஆம் ஆண்டிற்கான பிரதான முன்மொழிவுகள் 

வடக்கு மாகாணத்தின் சமூகசேவைத் துறையினை மேம்படுத்தும் வகையில் பின்வரும் அத்தியாவசிய வேலைத் திட்டங்கள் எம்மால் முன்மொழியப் பட்டுள்ளன.

1. கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான நோயாளர் காவு வண்டி கொள்வனவு

2. மாகாண சமூக சேவைகள் திணைக் களத்திற்கு அதன் அலுவலர்கள் வேலை களை நேரடியாகச் சென்று மேற்பார்வை யிடுவதற்கான வாகன கொள்வனவு.

3. யுத்தத்திற்கு முன்னர் திறம்பட இயங்கி வந்த முதியோர் இல்லங்கள் அனைத்தையும் புனரமைப்புச் செய்தலும் மீளவும் இயங்கச் செய்தலும்.

4. யுத்தத்திற்கு முன்னர் திறம்பட இயங்கி வந்த மாற்று வலுவுள்ளோர் இல்லங்கள் அனைத்தையும் புனரமைப்புச் செய்தலும் மீள இயங்கச் செய்தலும்

5. உளநல நெருக்கீட்டிற்குச் சிகிச்சை பெற்று குணமாகிய மக்களுக்கான தனியான அரச வாழிடம். அதாவது சமூகத்தால் புறக்­கணிக்கப்படுவதால் மீண்டும் மனவழுத் தத்திற்கு உள்ளாகுவோருக்கு அரச வாழிடம் அமைத்துக் கொடுத்தல்

6. ஐந்து மாவட்டத்திலும் மாற்று வலுவுடை­யோருக்கான வதிவிடப் பயிற்சி நிலையம் அமைத்தல்

7. ஏறத்தாழ 60 வருடங்களுக்கு மேற்பட்ட பழுதடைந்து காணப்படும் கைதடியில் உள்ள அரச முதியோர் இல்லத்தின் பணியாளர் விடுதியை தற்கால வசதிக்கேற்ப மீளமைத்தல்.

நிறைவுரை

எமது அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் வரும் அனைத்து திணைக்களங்களுக்குமான 2016ஆம் ஆண்டிற்கான மாகாண குறித்தொ துக்கப்பட்ட அபிவிருத்தி கொடையின் வேலைகளுக்கான நிதிசார் முன்னேற்றமானது 78 சதவீதமாக காணப்படும் அதேவேளை பௌதீக ரீதியான முன்னேற்றம் 90 சதவீதமாக காணப்படுகின்றது. அத்துடன் கடந்த ஆண்டின் வருட இறுதியில் கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தப்படாத நிதி பொருட் கொள்வனவுகளுக்காக மாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக எம்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் தேவையின் அவசியத் தன்மை கருதியே அவை கொள்வனவு செய்யப்பட்டு மிகவும் பொருத்தமான இடங்களில் அவை பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்நிதியாண்டில் எம்மால் திட்ட­மிடப்பட்டு அனுமதிக்கப்பட்ட திட்டங்­களே மாற்றங்கள் எதுவுமின்றி நடைமுறைப்­படுத்தப்படுகின்றன. நிதி மற்றும் பௌதீக முன்னேற்றமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கூடுதலானதாக காணப்படுகின்றது. வருட முடிவுக்குள் எம்மால் முழுமையான முறையில் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றங்களை அடைய முடியும் என எதிர்பார்க்கின்றோம். இந்த முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய எனது அமைச்சின் அனைத்து அலுவலர்களுக்கும், அமைச்சின் கீழ் வருகின்ற திணைக்களங்களின் அலுவலர் களுக்கும் மற்றும் எனது பிரத்தியேக அலுவலர்களுக்கும் ஏனையவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் அடுத்துவரும் ஆண்டில் இதனைவிட திறம்பட அனைத்து திட்டங்க­ளையும் நடைமுறைப்படுத்துவதற்கு உங்கள் எல்லோரதும் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து எனது உரையினை நிறைவு செய்கின்றேன்.

(முற்றும்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-24#page-7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.