Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண விளையாட்டு செய்திகள் 2017

Featured Replies

இரணைமடு வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மாவட்ட செயலக அணி தனதாக்கிக் கொண்டுள்ளது.

DSC_0071-1024x681.jpg
கிளிநொச்சி மாவட்ட நீர்பாசன திணைக்களித்தின்  மென்பந்து குழுமத்தினால் முதன் முறையாக நடாத்தப்பட்ட இரணைமடு வெற்றி கிண்ணத்தினை கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் தமதாக்கி உள்ளனர்.

குறித்த மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நிகழ் நேற்று  கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மாலை இடம்பெற்றது.
DSC_0079-1024x681.jpg
முதலில் களம் இறங்கிய கிளிநொச்சி மாவட்ட நீர்பாசான திணைக்கள அணியினர் பத்து பந்து பறிமாற்றத்தின் இறுதியில்  70ஒட்டங்களை பெற்றனர். தொடர்ந்து களமிறங்கிய கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் பத்து பறிமாற்றத்தின் நிறைவில் 71 ஒட்டங்கள் பெற்றது இரணைமடு வெற்றிகின்னத்தை தமதாக்கியுள்ளனர்.

இந்த போட்டி நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் மாகாண நீர்பாசன பெறியியலாளர் பிறேம் குமார் மற்றும் திணைக்களத்தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மென்பந்து ஆர்வலர்கள் எனப்பலர்கலந்து சிறப்பினர்.

DSC_0115-1024x681.jpgDSC_0138-1024x681.jpgDSC_0160-1024x681.jpgDSC_0167-1024x681.jpg

0

http://globaltamilnews.net/archives/14405

  • Replies 78
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
சம்பியனாகினர் ஆவரங்கால் இந்து இளைஞர்
 
 

- கே.கண்ணன்

புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ். மாவட்ட அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் ஏ பிரிவினருக்கான தொடரில், ஆவரங்கால் இந்து இளைஞர் அணி, சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.

குறித்த கழக மைதானத்தில், மின்னொளியில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து ஆவரங்கால் மத்தி அணி மோதியது. 1ஆவது செற்றில் ஆவரங்கால் மத்தி அணி 25-21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, 2ஆவது செற்றில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 25-17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழிதீர்த்தனர்.

மூன்றாவது செற்றில் ஆவரங்கால் மத்தி அணி 25-19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, தாமும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக ஆவரங்கால் இந்து இளைஞர் அணி, 4ஆவது செற்றில் 25-15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுப் பதிலடி கொடுத்தனர்.

வெற்றி - தோல்வியைத் தீர்மானிக்கும் 5ஆவது செற்களில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 15-11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது. போட்டியின் நாயகனாக, ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை சேர்ந்த பழனி தெரிவு செய்யப்பட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/189800/சம-ப-யன-க-னர-ஆவரங-க-ல-இந-த-இள-ஞர-#sthash.BOE8cWyB.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
சம்பியனானது புத்தூர் வளர்மதி அணி
 
 

- கே.கண்ணன்

புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்திய, யாழ். மாவட்ட அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட தொடரில், “பி” பிரிவில், புத்தூர் வளர்மதி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.

மின்னொளியில் கடந்த வாரயிறுதியில் கலைமதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், புத்தூர் வளர்மதி அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி மோதியது.

முதல் இரு செட்களிலும் பலத்த ஆதிக்கம் செலுத்திய வளர்மதி அணி 25-18, 25-20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிரண்டு செட்களிலும் வெற்றிபெற்றது. ஆனால், மூன்றாவது செட்டில் நவஜீவன்ஸ் அணி 25-20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. எனினும், நான்காவது செட்டில், புத்தூர் வளர்மதி அணி 25-22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3:1 என்ற செட் கணக்கில் போட்டியை வென்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.

இறுதிப் போட்டியின் நாயகனாக புத்தூர் வளர்மதி அணியை சேர்ந்த புவிந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/189793/சம-ப-யன-னத-ப-த-த-ர-வளர-மத-அண-#sthash.VKQJ5lI1.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழ். சென் ஜோன்ஸ்-கொழும்பு கெரிக் கல்லூரி சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி சமநிலையில்

 

யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு கெரிக் கல்லூரிக்கும் இடையிலான 19வயதுக்குட்பட்ட சிநேக பூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டி சமநிலையில் முடிவுற்றது.

கடந்த இரண்டு நாட்களாக  யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இப்போட்டி  இடம்பெற்றது.

இதில் முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கெரிக் கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் துசாநந்தா 42 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் சென். ஜோன்ஸ் கல்லூரி சார்பாக யதுசன் 4 விக்கெட்டுக்களையும் கபில்ராஜ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

16128681_1884900041743646_1653594782_n

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 267 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழ ந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. துடுப்பாட்டத்தில் கிசாந்துஜன் 97 ஓட்டங்களையும் , தேவபிரசாத் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

தனது இரண்டாம் இனிங்சை ஆரம்பித்த கொழும்பு கெரிக் கல்லூரி ஆட்டநேர முடிவில் சகல விக்கெட்டுக்க ளையும் இழந்து 197 ஓட்டங்களை பெற்றது. இதில் சந்தன காரகே 52 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் கபி ல்ராஜ் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இடையிடையே மழை குறுக்கிட்டதால் நேற்றையதினம் அதிக ஓவர்கள் வீசப்படவில்லை கொழும்பு கெரிக் கல்லூரி ஆட்டமிழக்கும் போது நேற்றையு நாளுக்கான நேரம் நிறைவடைந்ததால் ஆட்டம் சம நிலையில் நிறை வடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

http://onlineuthayan.com/sports/?p=3141

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

கிளிநொச்சி  அரச அதிபர்  கிண்ணத்தை கைப்பற்றியது கரைச்சி

Published by Priyatharshan on 2017-02-15 09:54:05

 

கிளிநொச்சி மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தினால் 2016 ஆம் ஆண்டுக்ககான அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் துடுப்பாட்ட போட்டி நேற்றையதினம்  கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது. 

unnamed-_4_.jpg

இப்போட்டிக்கு பிரதம விருந்திருந்தினராக கிளிநொச்சி மாவட்ட  அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகமும், சிறப்பு விருந்தினர்களாக கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி , பூநகரி பிரதேச செயலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

unnamed-_3_.jpg

வருடந்தோறும் நடைபெற்றுவரும் இவ் அரசஅதிபர் வெற்றிக்கிண்ணப்  போட்டியில் இம்முறை மாவட்டத்திலுள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலக அணிகளும் மற்றும் மாவட்ட செயலக அணியும் போட்டியிட்டன. இதில் அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்தை கரைச்சி பிரதேச செயலக அணி தட்டிக்கொண்டது.

unnamed-_5_.jpg

பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட அரச அதிபர், கருத்து தொிவித்த போது  இப்போட்டியானது மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான நட்புறவை ஏற்படுத்தும் வகையிலும்  உடல், உளஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் அமைந்தது என தெரிவித்ததோடு இனிவரும் காலங்களில் நடத்தப்படவுள்ள அரச அதிபர் கிண்ணப்போட்டி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல திணைக்களங்களையும் உள்ளடக்கி நடாத்தவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/16639

  • தொடங்கியவர்

இறுதி போட்டியில் ஞானம்ஸ் , சிற்றி ஸ்பேஸ் அணிகள் மோதல்

 

கரவெட்டி மத்தொனி விளையாட்டுக்கழகம் நடத்திய 21 வயது பிரிவினருக்கு இடையிலான அணி க்கு 9 பேர் 8 பந்து பரிமாற்றம் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டியின் play off முறையி லான அரையிறுதி போட்டியில் கரவெட்டி ஞானம்ஸ் அணி, கரவெட்டி ஐங்கரன் அணி மற்றும் கரவெட்டி சிற்றி ஸ்பேஸ் அணிகள் மோதின.

முதல் போட்டியில் ஞானம்ஸ் அணியை எதிர்த்து  ஐங்கரன் அணி மோதியது. நாணய சுழற்சியில் ஞானம்ஸ் அணி  வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. அவ் அணி 6.1 பந்து பரிமாற்ற ங்களில் சகல இலக்குகளையும் இழந்து 38 ஓட்டங்களை பெற்றது. பிரணவன் அதிக பட்சமாக 14 ஓட்டங்களை பெற்றார். ஐங்கரன் அணி சார்பாக அஜந் 4 இலக்குகளை கைப்பற்றினார். 39 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐங்கரன் அணி 6.5 பந்து பரிமாற்றங்களில் சகல இலக்கு களையும் இழந்து 24 ஓட்டங்களை பெற்றது. இப்போட்டியில் 14 ஓட்டங்களினால் ஞானம்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியது.

FB_IMG_1487132558247

இரண்டாவது போட்டியில் ஐங்கரன் அணியை எதிர்த்து சிற்றி ஸ்பேஸ் அணி மோதியது. நாணய சுழற்சியில் ஐங்கரன் அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது. சிற்றி ஸ்பேஸ் நிர்ண யிக்கப்பட்ட 8 பந்து பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 64 ஓட்டங்களை பெற்றது. சுஜித் அதிக பட்சமாக 19 ஓட்டங்களை பெற்றார். பாபு மற்றும் அஜந் தலா 2 இலக்குகளை கைப்பற்றினார்கள். 65 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐங்கரன் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி இருந்தும் நிர்ணயிக்கப்பட்ட 8 பந்து பரிமாற்றங்களில் 3 இலக்குகளை இழந்து 61 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. விதுஷன் அதிக பட்சமாக 20 ஓட்டங்களை பெற்றார். மதன் 2 இலக்கு களையும் சதீஸ் 1 இலக்கையும் கைப்பற்றினார்கள்.  இப்போட்டியில் சிற்றி ஸ்பேஸ் அணி 3 ஓட்ட ங்களினால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியது.

http://onlineuthayan.com/sports/?p=4041

  • தொடங்கியவர்

வீரர்களின் போரில் ஸ்கந்தவரோதய கல்லூரி அணி முன்னிலையில்

 

வீரர்களின் போர் என அழைக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணிகள் மோதும் 17 வது பெரும் தொடர் துடுப்பாட்ட போட்டியில் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி அணி முன்னிலை பெற்றுள்ளது.

இன்றைய தினம் ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தவரோதய கல்லூரி அணி மகாஜனக் கல்லூரி அணியினை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.இதன்படி தனது முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய மகாஜன கல்லூரி அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.மகாஜன கல்லூரி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் யசிந்தன் 31 ஓட்டங்களையும் ,கஜீவன் 15 ஓட்டங்களையும் ,முரளிதரன் 10 ஓட்டங்களையும் பெற்று க்கொடு த்தனர்.உதிரிகளாக 19 ஓட்டங்கள் கிடைக்கப்பெற்றது.

16730446_1348362781892404_5544069854577792485_n

ஸ்கந்தவரோதய கல்லூரி அணி சார்பாக பந்து வீச்சில் சோபிகன் 10 ஓவர்கள் வீசி 24 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளையும்,கோதவக்சன் 7 ஓவர்கள் வீசி 11 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தமது சிறப்பான பந்துவீச்சினை வெளிக்காட்டியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதய கல்லூரி அணியினர் இன்றைய முதலாவது நாள் ஆட்ட நேர நிறைவில் 58 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்று 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். .ஸ்கந்தவரோதய கல்லூரி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சயந்தன் 56 ஓட்டங்களையும் ,அஜிந்தன் 51 ஓட்டங்களையும்,பிரசன் 12 ஓட்ட ங்க ளையும்,றொனிஸ்ரன் 12 ஓட்டங்களையும்,கோதவக்சன் 9 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

16806999_1348362908559058_1496088322716464744_n

.மகாஜன கல்லூரி அணி சார்பாக பந்து வீச்சில் டினேஸ் 13 ஓவர்கள் பந்து வீசி 53 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.ஆடுகளத்தில் தற்போது ஸ்கந்தவரோதய கல்லூரி அணியின் அஜிந்தன் 51 ஓட்டங்களுடனும்,கோதவக்சன் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.  இரண்டாம் நாள் ஆட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.

16711960_1348363011892381_6760008818643750836_n

இன்றையமுதலாம்நாள்நிகழ்வில் இரண்டு கல்லூரிகளின் அதிபர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் கல்லூரி பழைய மாணவர்கள்,நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்ட னர்.16806750_1348450268550322_6972791875701975931_n 16807157_1348450135217002_5107443280672726341_n 16807525_1348450068550342_5518202339156223220_n 16807719_1348450318550317_5490785903881364046_n

 
 

http://onlineuthayan.com/sports/?p=4144

  • தொடங்கியவர்

யாழ்.இந்துவுடனான பயிற்சி ஆட்டத்தில் சென்.ஜோன்ஸ் ஆதிக்கம்

 

எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ள யாழ் இந்துக் கல்லூரி எதிர் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் துடுப்பாட்ட போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் சென்ஜோன்ஸ் வீரர்களின் பந்துவீச்சில் சுருண்டது யாழ்.இந்து

இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அணி ,சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 36.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் சென் ஜோன்ஸ் அணிசார்பாக தேவபிரசாந் 33 ஓட்டங்களையும்,ஜெனி பிளமிங் 28 ஓட்டங்களையும்,கபில்ராஜ் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி அணிசார்பாக துவாரகன் 8ஓவர்கள் பந்து வீசி 18 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளையும்,சிவலக்சன் 9 ஓவர்கள் பந்து வீசி 43 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டு களையும்,சந்துரு 12 ஓவர்கள் பந்து வீசி 34 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டு களையும் கைப்பற்றிக்கொண்டனர்.

3

பதிலுக்கு தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்துக் கல்லூரி அணி 32.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரம் பெற்று முதலாவது இனிங்சில் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தது .துடுப்பாட்ட வரிசையில் யாழ் இந்துக் கல்லூரி அணி சார்பாக கயானன் 30 ஓட்டங்கள்,சந்தோஷ் 15 ஓட்டங்களை பெற்றுக் கொடு த்தனர்.சென் ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக பந்து வீச்சில் யதுஷன் 10 ஓவர்கள் பந்து வீசி 21 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும்,நிசாந்துயன் 9ஓவர்கள் பந்து வீசி 21 ஓட்டங்க ளைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தமது சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தி யிருந்தனர்.

2

தொடர்ந்து தனது இரண்டாவது இனிங்சினை ஆரம்பித்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினர் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 22 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 121 ஓட்டங்களை பெற்று பலமான நிலையில் உள்ளனர்.ஆடுகளத்தில் துலக்சன் 76 ஓட்டங்களுடனும்,தேவபிரசாந் 34 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

4

 
 

http://onlineuthayan.com/sports/?p=4155

  • தொடங்கியவர்

சமநிலையில் முடிவடைந்த வீரர்களின் போர்

 

வீரர்களின் போர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதய கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணிகள் மோதிய 17 வது பெரும் தொடர் துடுப்பாட்ட போட்டியானது சமநிலையில் முடிவுற்றது.

இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தவரோதய கல்லூரி அணி மகாஜனக் கல்லூரி அணியினை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.முதலாவது இனிங்சில் முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனா கல்லூரி அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதய கல்லூரி அணியினர் முதலாவது நாள் ஆட்ட நேர நிறைவில் 58 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்று 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது .

குறித்த போட்டித் தொடரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று ஆரப்பமானது.முதலாவது இனிங்சின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஸ்கந்தவரோதய கல்லூரி அணி 63 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ஸ்கந்தவரோதய கல்லூரி அணிசார்பாக துடுப்பாட்டத்தில் சயந்தன் 56 ஓட்டங்களையும் ,அஜிந்தன் 52 ஓட்டங்களையும்,கோதவக்சன் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.உதிரிகளாக 17 ஓட்டங்கள் கிடைக்கப்பெற்றது.

மகாஜனா கல்லூரி அணி சார்பாக பந்து வீச்சில் டினேஷ் 15 ஓவர்கள் பந்து வீசி 56 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளையும்,யனுசன்,கனிஸ்டன்,சுஜீவன்,சாருஜன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய மகாஜனா கல்லூரி அணி, 66 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.மகாஜனா கல்லூரி அணிசார்பாக துடுப்பாட்டத்தில் யனுசன் 56 ஓட்டங்களையும் ,முரளிதரன் 39 ஓட்டங்களையும்,டினேஸ் 30 ஓட்டங்களையும்,யசிந்தன் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.உதிரிகளாக 25 ஓட்டங்கள் கிடைக்கப்பெற்றது.

16807011_1349859315076084_7544179635441117072_n

ஸ்கந்தவரோதய கல்லூரி அணிசார்பாக பந்து வீச்சில் சோபிகன் 18 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்டுகளையும் ,கஜீபன்,டான்சன்,கோதவக்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இரண்டாவது இனிங்சில் பதிலுக்கு துப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதய கல்லூரி அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 86 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி இரு அணிகளும் வெற்றி தோல்வி இன்றி சமனான நிலையில் போட்டி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

16804618_1289551531158369_1525907253_o

ஸ்கந்தவரோதய கல்லூரி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சயந்தன் 32 ஓட்டங்களையும்,சாருஜன் 21 ஓட்டங்களையும்,சஜீவன் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.மகாஜனா கல்லூரி அணிசார்பாக பந்து வீச்சில் யனுசன் 10 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்டுகளையும்,டினேஸ் 5 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

குறித்த போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஸ்கந்தவரோதய கல்லூரி அணியின் சயந்தன்,சிறந்த பந்து வீச்சாளராக ஸ்கந்தவரோதய கல்லூரி அணியின் சோபிகன்,சிறந்த களத்தடுப்பாளராக மகாஜனா கல்லூரி அணியின் யசிந்தன்,சகல துறை வீரராக மகாஜனா கல்லூரி அணியின் டினேஸ்,போட்டித்தொடரின் சிறந்த வீரராக மகாஜனா கல்லூரி அணியின் யனுசன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

16810544_1289551584491697_824848095_o

இவர்களுக்கான பதக்கங்கள்,வெற்றிக் கிண்ணங்கள்,பரிசில்களை நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் வழங்கி கௌரவித்தார். மேலும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்,பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

16833046_1289551594491696_235508209_o

 

16833683_1289551577825031_1124997806_o

 

16776346_1289551827825006_489592522_o 16804955_1289551834491672_133186666_o 16831901_1349851955076820_6940994795126111233_n 16832983_1289551894491666_1713105551_o

 

http://onlineuthayan.com/sports/?p=4179

  • தொடங்கியவர்

யாழ் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் கலைப்பீடம் முதலிடம்

February 21, 2017

யாழ் பல்கலைக்கழக 2016ம் ஆண்டுக்கான 1ம் வருடமாணவர்களின் பீடங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் கலைப்பீடம் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடை பெற்றன.

யாழ் பல்கலைக்கழகத்திற்கு கடந்த வருடம் தெரிவாகி முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் அனைத்து பீட மாண்வர்களுக்கான மைதான மற்றும் சுவட்டு நிகழ்ச்சியாக இந்த விளையாட்டுப்போட்டி அமைந்திருந்தது.

16838204_182402305583616_1705122489_n

போட்டியில் தமது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டிய கலைப்பீடம் அதிக புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி ஆர்.விக்னேஸ்வரன் கலந்து சிறப்பித்திருந்தார்.

நிகழ்வில் மாணவர்கள்,விரிவுரையாளர்கள்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

16901892_182402295583617_1089295318_n

 
 

http://onlineuthayan.com/sports/?p=4302

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
சம்பியனானது சென்றலைட்ஸ்
 
 
சம்பியனானது சென்றலைட்ஸ்
யாழ் மாவடட்ட கூடைப்பந்தாட்டச் சங்கம் தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்திய கூடைப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் பிரிவில் பற்றிசியன்ஸை வீழ்த்தி சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றுள்ளது. 

http://www.onlineuthayan.com/news/24827

  • தொடங்கியவர்
யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்க தொடரில் சென்றலைட்ஸ், K.C.C.C அணிகள் சம்பியன்
tamil-bb.jpg

யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்க தொடரில் சென்றலைட்ஸ், K.C.C.C அணிகள் சம்பியன்

singer-league-2017-728.jpg

யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினது 2016/17ஆம் பருவகாலத்திற்கான அங்கத்துவ கழகங்களிடையேயான கூடைப்பந்தாட்ட சுற்றுத் தொடரில் ஆண்கள் பிரிவில் சென்றலைட்ஸ் அணியும் பெண்கள் பிரிவில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய (K.C.C.C) அணியும் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளுக்கும் இடம்பெற்றிருந்த இத்தொடரின் முதலாவது சுற்று லீக் முறையிலும் அதற்கு அடுத்த சுற்று Play off முறையிலும் இடம்பெற்றிருந்தன. இதன் இறுதிப் போட்டிகள் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்றன.

 

ஆண்கள் பிரிவு

 
 

ஆண்கள் பிரிவில், குழு நிலையில் முதலிடம் பெற்றிருந்த சென்றலைட்ஸ் அணி, காங்கேசன்துறை ஜக்கிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்திருந்தது. மறுபுறத்தே, K.C.C.C அணியையும், கங்கேசன்துறை அணியையும் அடுத்தடுத்து வெற்றிகொண்டு இறுதிக்குள் நுழைந்திருந்தது பற்றீசியன்ஸ் அணி.

போட்டியின் முதல் காற்பகுதியில் 8:7 என முன்னிலை பெற்றது பற்றீசியன்ஸ். இரண்டாவது காற்பகுதியில் பற்றீசியன்ஸ் 15 புள்ளிகளையும், சென்றலைட்ஸ் 11 புள்ளிகளையும் சேர்த்தனர். முதல் அரைப்பகுதி 23:18 என நிறைவுக்கு வர, பற்றீசியன்ஸ் சென்றலைட்ஸை விட 5 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தனர்.

மூன்றாவது காற்பகுதியில் விரைந்தாடிய சென்றலைட்ஸ் 13 புள்ளிகளையும், பற்றீசியன்ஸ் 11 புள்ளிகளையும் சேகரித்தனர். தொடர்ந்தும் சென்றலைட்ஸை விட பற்றீசியன்ஸ் 03 புள்ளிகளால் முன்னிலை பெற்றிருந்தனர்.

இறுதிக் காற்பகுதியில் அபாரமாக ஆடிய சென்றலைட்ஸ் 15 புள்ளிகளை சேகரிக்க, பற்றீசியன்ஸால் வெறுமனே 07 புள்ளிகளையே பெற முடிந்தது. எனவே, இறுதிக் காற்பகுதியில் கிடைத்த சிறப்புப் பெறுதியுடன் 46:41 என ஆட்டத்தை நிறைவு செய்த சென்றலைட்ஸ் கிண்ணத்தை தமதாக்கியது.

விருதுகள்

சம்பியன் – சென்றலைட்ஸ் அணி
2ஆம் இடம் – பற்றீசியன்ஸ் அணி
3ஆம் இடம் – காங்கேசன்துறை அணி
ஆட்ட நாயகன் – நிறோசன் (பற்றீசியன்ஸ்)
தொடர் நாயகன் – சுஜீந்திரன் (சென்றலைட்ஸ்)

பெண்கள் பிரிவு

குழு நிலையில் முன்னிலை வகித்த K.C.C.C அணியை வீழ்த்தி சிவன் அணியும், மறுபுறத்தில் சிவனுடன் தோல்வியடைந்து காங்கேசன்துறை அணியை வீழ்திய K.C.C.C அணியும் இறுதிப் போட்டியில் மோதியிருந்தன.

முதற் காற்பகுதியில் அபாரமாக ஆடிய K.C.C.C அணி 15 புள்ளிகளை சேர்க்க, சிவன் 05 புள்ளிகளை மட்டுமே சேர்த்தது. இரண்டாவது காற்பகுதியில் விரைந்தாடிய சிவன் அணி 13 புள்ளிகளை சேகரித்தது. K.C.C.C அணி 04 புள்ளிகளை மட்டுமே சேகரித்தது.

 

முதல் அரைப்பகுதி நிறைவில் K.C.C.C அணி 20 புள்ளிகளையும் சிவன் அணி 18 புள்ளிகளையும் பெற்றிருந்தன. பரபரப்பாக ஆரம்பமாகிய மூன்றாவது காற்பகுதியில் சிவன் அணிக்கு 04 புள்ளிகளை மட்டும் விட்டுக்கொடுத்து, K.C.C.C  அணியினர் 14 புள்ளிகளை சேகரித்து தமது முன்னிலையை உறுதி செய்தனர்.

இறுதிக் காற்பகுதியில் சிவன் 19 புள்ளிகளையும், K.C.C.C அணி 13 புள்ளிகளையும் பெற்றன. இதன் காரணமாக போட்டி நிறைவில் 47:41 என K.C.C.C அணி வெற்றி பெற்றது.

 

சம்பியன் – K.C.C.C அணி
2ஆம் இடம் – சிவன் அணி
3ஆம் இடம் – காங்கேசன்துறை அணி
ஆட்ட நாயகி – தமிழரசி (K.C.C.C அணி)
தொடர் நாயகி – சுபீசனா (சிவன் அணி)

 

 

http://www.thepapare.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கரைச்சி பிரதேச விளையாட்டு விழா-2017 கனகபுரம் சாம்பியன்

 

IMG_4789.jpg

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக விளையாட்டு விழா 2017 இல் கனகபுரம் விளையாட்டுக்கழகம் முதலாவது இடத்தினை பெற்று சாம்பியனானது. வருடந்தோறும் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் இடம்பெறுகின்ற  விளையாட்டு விழா இம் முறை கிளிநொச்சி கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்குகொண்டிருந்தனர். குறிப்பாக ஜெயந்திநகர் மகாதேவா சைவ சிறார்(குருகுலம்) இல்ல மாணவர்களும்  மகாதேவா விளையாட்டுக்கழகம் மூலம் விளையாட்டுப்போட்டிகளில் பங்குகொண்டு பல போட்டிகளில் வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக இடம்பெற்ற 2017 கரைச்சி பிரசேத விளையாட்டு விழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சி. சத்தியசீலன் அவர்கள் கருத்து தெரிவித்த போது

கிளிநொச்சி மாவட்டம் விளையாட்டுத்துறையில் மேலும் வளரவேண்டும்.  கடந்த ஆண்டு இடம்பெற்ற வடக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது. ஆனால்  இவ்வருட போட்டியில் அதை தாண்டி வரவேண்டும் எனத் தெரிவித்த அவர் கிளிநொச்சியிலிருந்து தேசிய  சாதனைகளை நிலைநாட்டவும் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கும் கொள்ளும் அளவில் போட்டியாளர்கள்  வளர்ந்துள்ளனர். ஆனாலும் விளையாட்டில் மேலும் வளரவேண்டும் நாம் அதற்காக எம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.
IMG_4799.jpg
இ;ந்த நிகழ்வில்  வட மாகாண விளையாட்த்துறை பிரதிப் பணிப்பாளர் குருபரன், மாவட்டசெயலக பிரதி திட்டப்பணிப்பாளர் கௌரிதாசன், பளை பிரதேச செயலாளர் ஜெயராணி  விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

IMG_4809.jpg IMG_4868.jpgIMG_4872.jpg

1

https://globaltamilnews.net/archives/21699

  • 1 month later...
  • தொடங்கியவர்

பாடும்மீன் கம்பீரமான வெற்றி

உரும்பிராய் சரஸ்வதியின் தொடரில்

 

உரும்பிராய் சரஸ்வதி விளையாட்டுக் கழகம் நடத்தும் கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் குருநகர் பாடும்மீன் அணி வெற்றிபெற்றது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில், குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து மல்லாகம் நியூவொரியர்ஸ் அணி மோதியது. 6:0 என்ற கோல் கணக்கில் குருநகர் பாடும்மீன் அணி அபார வெற்றிபெற்றது.

 

IMG_0047-1024x1006.jpg

IMG_0048-1-885x1024.jpg

IMG_0053-1-1024x823.jpg

 

http://uthayandaily.com/story/1476.html

  • தொடங்கியவர்

ரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த கிண்ணத்தை வென்றது வதிரி டயமண்ட்ஸ்

TP Pathmanathan Memorial Trophy
singer-league-2017-728.jpg

தெல்லிப்பளை மகாஜன கல்லூரியின் முன்னாள் வீரர் ரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் பசையூர் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்திய வதிரி டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகம் இவ்வருட சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

 

இந்த சுற்றுத்தொடர் கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இத்தொடரில் யாழ் மாவட்டத்தின் முன்னணி கழகங்களின் எட்டு அணிகள் பங்கெடுத்தன.

பெருந்தொகையான ரசிகர்களுடன் ஆரம்பமான, கிண்ணத்தைத் தீர்மானிப்பதற்கான, தொடரின் இறுதிப் போட்டியில் யாழ் மாவட்டத்தின் புகழ் பூத்த கழகங்களான பசையூர் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதியாட்டத்தின் முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை இரு அணிகளும் வெளிப்படுத்திய நிலையில், 16ஆவது நிமிடத்தில் சென் அன்ரனீஸ் வீரன் கலிஸ்ரர் முதலாவது கோலைப் போட 1-0 என தனது தரப்பினரை அவர் முன்னிலைப்படுத்தினார்.

அதன் பின்னர் இரு தரப்பினராலும் கோலுக்கான முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. எனினும், வீரர்களின் தடுப்பாட்டம் காரணமாக மேலதிகமாக எந்த ஒரு கோலும் பெறப்படாத நிலையில் முதல் பாதி நிறைவடைந்தது.

முதல் பாதி: சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம் 1 – 0 டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகம்

இந்நிலையில் இரண்டாவது பாதியாட்டத்தில் வேகமெடுத்த டயமண்ட்ஸ் அணியினருக்கு 51ஆவது நிமிடத்தில் தண்ட உதைக்கான வாய்ப்பொன்று கிடைத்தது. அதனை அவ்வணி வீரன் உஷானந் சரியாகப் பயன்படுத்தி கோலைப் பெற்றார். இதன்மூலம் டயமன்ஸ் அணி போட்டியை சமநிலைப்படுத்தியது.

எனினும் அதன் பின்னர் இரு அணி வீரர்களும் போட்டியின் வெற்றி கோலைத் பெறுவதற்காக கடுமையாகப் போராடினர். எனினும் இறுதி வரை இரண்டாவது கோல் பெறப்படவில்லை.

இதன் காரணமாக ஆட்டத்தில் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. இதன்போதும் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறவில்லை.

முழு நேரம்: சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம் 1 – 1 டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகம்

இறுதியாக கிண்ணத்தின் சொந்தக்காரர் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி வாய்ப்பாக இரு தரப்பினருக்கும் பெனால்டி உதைக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது, டயமன்ஸ் அணியினர் 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று 2017ஆம் ஆண்டிற்கான ரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த கிண்ணத் தொடரில் சம்பியனாகத் தெரிவாகியது.

அரையிறுதி ஆட்டங்கள்

தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பலம்மிக்க வதிரி டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகம், குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் என்பன மோதின.

இப்போட்டியில், இம்முறை FA கிண்ணத் தொடரில் காலிறுதிக்கு முன்னைய சுற்று வரை முன்னேறியிருந்த யாழின் பலம் மிக்க அணிகளில் ஒன்றான பாடும் மீன் தரப்பினரை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய டயமண்ட்ஸ் அணி வீரர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியிலும் பலம் மிக்க அணிகளான பாசையூர் சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழக அணி மோதியது.

பார்வையாளர்களுக்கு விருந்தளித்த இந்த விறுவிறுப்பான போட்டியின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் காணப்பட்டதால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி இறுதி போட்டிக்குத் தகுதிபெற்றது.

இறுதிப் போட்டியின்  ஆட்ட நாயகன்

T.உஷானன்த் – டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகம்

தொடரின் நாயகன்

கலிஸ்டர் – சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழக

சிறந்த கோல் காப்பாளர் 

M.ஜானரத்தனன் – டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகம்

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி முடிவுகள்

 
2 of 8,767 Northern provincial schools Volleyball
bradby-2017-web-banner-728.gif

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நடப்பு வருடத்திற்கான கரப்பந்தாட்ட போட்டிகள் யாழ்ப்பாணம், நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடம்பெற்று நிறைவடைந்துள்ளன.  

இந்த சுற்றுப் போட்டியில் 20 வயதின் கீழ் ஆண்கள் பெண்கள், 18 வயதின் கீழ் ஆண்கள் பெண்கள் மற்றும் 16 வயதின் கீழ் ஆண்கள் பெண்கள் என மொத்தம் ஆறு பிரிவுகளின்கீழ் போட்டிகள் இடம்பெற்றன.

மூன்றாம் இடத்தை தவறவிட்ட இலங்கை இளையோர் அணி

வட மாகாண கரப்பந்தாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் கழக அணிகள் காணப்படும் கோப்பாய் கல்விக் கோட்டத்தினர் மிக நீண்ட காலமாக பாடசாலை மட்டப் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எனினும், கோப்பாய் கோட்டத்தின் ஆதிக்கமானது கடந்த சில வருடங்களாக உடைத்தெறியப்பட்டு வெற்றியினை மாகாணத்தின் சகல பகுதிகளைச் சேர்ந்த அணிகளும் பகிர்ந்து வருகின்றன.

அதேவேளை, ஒரு சில வலயங்களைச் சேர்ந்த அணிகள் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய மிக நீண்ட காலமாகத் திணறி வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.


20 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவு

இறுதிப் போட்டி

அரையிறுதிப் போட்டியில் வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலய அணியினை 2:0 என்ற நேர் செற்களில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்திருந்தது சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணி. மறுமுனையில் பரபரப்பான போட்டியில் 2:1 என மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலய அணியை வீழ்த்தி புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி அணியினர் இறுதி மோதலில் களங்கண்டனர்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான இப்போட்டியின் முதலாவது செற் சம புள்ளிகளுடன் நகர்ந்தது. ஒரு கட்டத்தில் அபாரங்காட்டிய விக்டோரியாவின் வீரர்கள் நேர்த்தியான அறைதல்கள் மூலம் தம்பக்கம் புள்ளிகளை விரைவாக சேகரிக்கத் தொடங்கினர். இறுதியில் 25:21 என விக்டோரியா கல்லூரி அணியினர் முதல் செற்றினை தமதாக்கினர்.

இதன் காரணமாக போட்டியை தக்கவைப்பதற்கு இரண்டாவது செற்றில் அவசியம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது சோமஸ்கந்தா கல்லூரி அணி.

போட்டியின் முதல் நாள் புகைப்படங்கள்

இரண்டாவது செற்றிலும் இரு அணி வீரர்களும் சிறந்த பணித்தல்கள், அறைதல்கள், தடுப்புகள் மற்றும் காப்புகள் என அனைத்துத் துறைகளிலும் சிறந்த முறையில் தமது திறமையைக் காண்பித்தனர். இதனால் முதலாவது செற்றை போன்றே நகர்ந்தது இரண்டாவது செற்றும். சோமஸ்கந்தா வீரர்களின் அதிகமான அறைதல்கள் எல்லைக் கோட்டிற்கு வெளியே செல்ல, இரண்டாவது செற்றினையும் 25:22 என கைப்பற்றி  2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தைத் தமதாக்கியது சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி.

Thepapare.comஇன் ஆட்ட நாயகன் – சிறிமோகன் சணோஜன் (சுழிபுரம் விக்டோரியா கல்லூரி)

20 வயதுக்குட்பட்ட சம்பியன் விக்டோரியா கல்லூரி அணி 20 வயதுக்குட்பட்ட சம்பியன் விக்டோரியா கல்லூரி அணி

மூன்றாம் இடத்திற்கான போட்டி

வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம் மற்றும் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் மோதிய இப்போட்டி, விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாது இடம்பெற்றிருந்தது.

முதலாவது செற்றினை ஸ்ரீ சுமண அணி 25:23 என தமதாக்க, தொடர்ச்சியாக இடம்பெற்ற இரண்டு செற்களையும் முறையே 25:13, 25:22 என கைப்பற்றி அபார வெற்றிபெற்றது எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயம்.


18 வயதிற்குட்பட்டடோர் ஆண்கள் பிரிவு

இறுதிப் போட்டி

அரையிறுதிப் போட்டியில் முறையே ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம் மற்றும் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் ஆகிய அணிகளை 2:1 என்ற செற் கணக்கில் வெற்றிகொண்ட ஆவரங்கால் மகாஜனா வித்தியாலய அணியும், புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி அணியும் இறுதிப் போட்டியில் மோதின.

முதலாவது செற்றில் உத்வேகத்துடன் ஆடிய மகாஜனா வித்தியாலய அணி வீரர்கள் காற்றின் சாதகத்தன்மையும் கிடைக்க 25:12 என குறித்த செற்றை தமதாக்கினர். இரண்டாவது செற்றில் அவ்வாறே சோமஸ்கந்தா கல்லூரி அணிக்கும் அதே சாதகம் கிடைக்க, அவ்வணி வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு 25:13 என இரண்டாவது செற்றை தமதாக்கினர்.

தீர்மானம்மிக்க மூன்றாவதும் இறுதியுமான செற்றினை 25:19 என கைப்பற்றி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றியை தமதாக்கினர் ஆவரங்கால் மகாஜனா வித்தியாலய அணியினர்.

Thepapare.comஇன் ஆட்ட நாயகன் – சிவனேஸ்வரன் சரண்ஜன் (ஆவரங்கால் மகாஜனா வித்தியாலயம்)

18 வயதுக்குட்பட்ட சம்பியன் ஆவரங்கால் மகாஜனா வித்தியாலய அணி 18 வயதுக்குட்பட்ட சம்பியன் ஆவரங்கால் மகாஜனா வித்தியாலய அணி

மூன்றாம் இடத்திற்கான போட்டி

இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம், வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் மோதிய இப்போட்டியில் 25:20,21:16 என தொடர்ச்சியாக இரண்டு செற்களையும் இலகுவாகக் கைப்பற்றி மூன்றாம் இடத்தை தமதாக்கியது ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம்.


16 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவு

இறுதிப் போட்டி

ஸ்ரீ சுமண மகா வித்தியாலய அணியை 2:1 என அரையிறுதியில் வீழ்த்திய புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி அணியும், அவ்வாறே ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய அணியை 2:1 என வெற்றிபெற்ற கோப்பாய் மகா வித்தியாலய அணியும் 16 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் களங்கண்டிருந்தன.

இந்த மோதலில் நேர்த்தியான அறைதல்களை மேற்கொண்ட கோப்பாய் மகா வித்தியாலய அணி முதலாவது செற்றினை 25:16 என தமதாக்கியது. இரண்டாவது செற்றில் நுட்பமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய சோமஸ்கந்தா கல்லூரி அணி 25:10 என பதிலடி கொடுத்தது.

போட்டியின் முதல் நாள் புகைப்படங்கள்

தீர்மானம்மிக்க இறுதி செற்றில் இரு அணிகளும் சிறந்த அறைதல்களுடன் பலத்த போராட்டத்தை வெளிப்படுத்தின. இறுதியில் 25:20 என மூன்றாவது செற்றைக் கைப்பற்றிய கோப்பாய் மகா வித்தியாலய அணி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.

Thepapare.comஇன் ஆட்ட நாயகன் – வரதராஜா வாசுதன் (கோப்பாய் மகா வித்தியாலயம்)

Northern provincial 18 வயதுக்குட்பட்ட சம்பியன் கோப்பாய் மகா வித்தியாலய அணி

மூன்றாம் இடத்திற்கான போட்டி

வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம், ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம் ஆகிய அணிகள் மோதிய இப்போட்டியை 25:16, 25:19 என தொடர்ச்சியாக இரண்டு செற்களையும் கைப்பற்றிய ஸ்ரீ சுமண வித்தியாலய அணி 2:0 என்ற நேர் செற் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தினைத் தமதாக்கியது.

பெண்கள் பிரிவு

20 வயதிற்குட்பட்டோர்

முதலாம் இடம் – யா/பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை

இரண்டாம் இடம் – கிளி/பளை மத்திய கல்லூரி

மூன்றாம் இடம் – யா/ இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம்

18 வயதிற்குட்பட்டோர்

முதலாம் இடம் – யா/வயாவிளான் மத்திய கல்லூரி

இரண்டாம் இடம் – யா/ சென். தோமஸ் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை

மூன்றாம் இடம் – யா/ உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்

16 வயதிற்குட்ட்டோர்

முதலாம் இடம் – யா/உரும்பிராய் சைவத்தாமிழ் வித்தியாலயம்

இரண்டாம் இடம் – யா/கோப்பாய் மகா வித்தியாலயம்

மூன்றாம் இடம் – மு/கலைமகள் வித்தியாலயம்

http://www.thepapare.com/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கிண்ணத்தை சுவீகரித்த ஏஞ்சல், கொக்குவில் இந்து மற்றும் வேம்படி அணிகள்

 
0011-696x462.jpg
icc-champions-trophy-web-banner-728-90-with-logo.jpg

கொழும்பு YMCA இன் அனுசரனையில் யாழ்ப்பாணம் YMCA, யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்துடன் இணைந்து பாடசாலை அணிகளுக்கு இடையிலான 3×3 கூடைப்பந்தாட்டத் தொடரினை ஏற்பாடு செய்திருந்தது. போட்டிகள் நேற்று முன்தினம்(19) மாலை 3 மணிக்கு ஆரம்பமாகி நேற்றைய தினம் முழு நாளும் போட்டி யாழ் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்றிருந்தது.

போட்டியானது ஆண், பெண் என இரு பாலாரிற்கும் 16 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 20 வயதிற்கு உட்பட்டோர் என இரு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தது.

16 வயதிற்கு உட்பட்டோர் – ஆண்கள்

இறுதிப்போட்டி

U16 Boysஅரையிறுதிப் போட்டியில் லீக் சுற்றில் குழு B இல் இரண்டாம் இடம்பிடித்த ஏஞ்சல் சர்வதேச பாடசாலை-B அணியை எதிர்த்து மோதிய குழு A இன் சம்பியன்களான ஏஞ்சல் சர்வதேச பாடசாலை-A அணி 07:01 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தது.

மறுபுறம் குழு B இன் சம்பியன்களான கொக்குவில் இந்துக் கல்லூரியை 06:10 என வெற்றிபெற்று குழு A இல் இரண்டாம் இடம்பிடித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

போட்டியின் முதல்நாள் புகைப்படங்களைப் பார்வையிட

விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் 07:04 என்ற புள்ளிகள் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியையை வெற்றிபெற்று கிண்ணத்தைத் தமதாக்கியது ஏஞ்சல் சர்வதேச பாடசாலை-A அணி.

மூன்றாம் இடத்திற்கான போட்டி

ஏஞ்சல் சர்வதேச பாடசாலை-B அணி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய அணிகள் மோதிய இப்போட்டியில் 06:04 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தினைத் தமதாக்கியது கொக்குவில் இந்துக் கல்லூரி.


20 வயதிற்கு உட்பட்டோர் – ஆண்கள்

இறுதிப்போட்டி

U20 Boysமுதலாவது அரையிறுதிப்போட்டியில் குழு A இன் சம்பியன்களான யாழ் மத்திய கல்லூரி-A அணியினர், குழு B இல் இரண்டாம் இடம்பிடித்த மல்லாவி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து மோதியது. விரைவாக ஆடிய யாழ் மத்திய கல்லூரி- A போட்டி நேரம் பூர்த்தியாக முன்னரே 21 புள்ளிகளையும் பெற்று 21:11 என வெற்றிபெற்றது.

மறுமுனையில், குழு B இன் சம்பியன்களான யாழ் மத்திய கல்லூரி-B அணியை 12:18 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தியது குழு A இல் இரண்டாம் இடம்பிடித்த ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணி.

லீக் சுற்றில் எஞ்சல் அணியை வீழ்த்திய நம்பிக்கையுடன் களமிறங்கிய யாழ் மத்திய கல்லூரி- A அணிக்கு ஆரம்பம் சாதகமாக அமையவில்லை, விரைவாகப் புள்ளிகளை சேகரித்த ஏஞ்சல் அணி புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகித்து. பலத்த போராட்டத்தினை வெளிப்படுத்திய மத்திய கல்லூரி, பல ஃப்ரீ சூட்களை வீணடித்த போதும் விரைவாக புள்ளிகளைச் சேகரித்து போட்டியின் இறுதி நொடியில் 17:17 என புள்ளிகளை சமன் செய்தது.

அடுத்தடுத்து இரு புள்ளிகளைப்பெறும் அணிக்கு வெற்றி என்ற அடிப்படையில் இரு அணிகளும் களமாடின. சில நொடிகளிலேயே ஏஞ்சல் அணிக்கு ஃப்ரீ சூட் கிடைக்கப்பெற அவை இரண்டினையும் சஞ்சிகன் புள்ளிகளாக மாற்ற வெற்றிக்கிண்ணத்தினை தமதாக்கியது ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை அணி.

மூன்றாம் இடத்திற்கான போட்டி

யாழ் மத்திய கல்லூரி-B அணி, மல்லாவி மத்திய கல்லூரி ஆகிய அணிகள் மோதிய இப்போட்டியில் யாழ் மத்திய கல்லூரி அணி 14:09 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தினைத் தம்வசப்படுத்தியது.


16 வயதிற்கு உட்பட்டோர் – பெண்கள்

இறுதிப்போட்டி

U16 Girlsலீக் சுற்றில் முதலாம் இடம்பிடித்த உடுவில் மகளிர் கல்லூரி அணி யாழ் இந்து மகளிர் கல்லூரி அணியுடனான அரையிறுதியில் வோக் ஓவர் (Walk over) மூலம் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது.

மற்றைய அரையிறுதியில் திருக்குடும்பக் கன்னியர் மட அணியினை துவம்சம் செய்த வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அணி 15:04 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

போட்டியின் ஆரம்பத்திலிருந்து அசத்திய வேம்படியின் அனோசிகா விரைந்து புள்ளிகளைச் சேகரிக்க, ஆட்டநேர நிறைவில் 06:01 என்ற புள்ளிகள் அடிப்படையில் போட்டி நிறைவடைய, 05 புள்ளிகள் முன்னிலையிலிருந்த வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அணி இலகு வெற்றிபெற்று வெற்றிக் கிண்ணத்தினைத் தமதாக்கியது.

மூன்றாம் இடத்திற்கான போட்டி

வோக் ஓவர் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணியை வெற்றிபெற்ற திருக்குடும்ப கன்னியர் மட அணி மூன்றம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.


20 வயதிற்கு உட்பட்டோர் – பெண்கள்

இறுதிப்போட்டி

U20 Girlsகுழு நிலைப்போட்டியில் முதலாம் இடம்பிடித்த கொக்குவில் இந்துக் கல்லூரி அணி நான்கம் இடம்பிடித்த வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அணியை 10:00 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகுவாக வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதியில் உடுவில் மகளிர் கல்லூரி அணியை 13:11 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற திருக்குடும்ப கன்னியர் மட அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்திருந்தது.

பலம்பொருந்திய கொக்குவில் இந்துக் கல்லூரி அணிக்கு பலத்த அழுத்தத்தினை கொடுத்திருந்தனர் திருக்குடும்ப கன்னியர் மட அணியினர். கன்னியர் மட அணிக்கு எப்ஷிபா புள்ளிகளை விரைந்து சேர்க்க, கொக்குவில் இந்துவின் புள்ளிப்பட்டியலை தர்ஷி உயர்த்தினார்.

திருக்குடும்ப கன்னியர் மட அணியின் பலத்த சவாலையும் தாண்டி இறுதியில் 11:10 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணத்தை தமதாக்கியது கொக்குவில் இந்துக் கல்லூரி அணி.

மூன்றாம் இடத்திற்கான போட்டி

உடுவில் மகளிர் கல்லூரி அணியினை எதிர்த்து வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அணி மோதியிருந்தது. இப்போட்டி 5:7 என்ற புள்ளிகள் கணக்கில் நிறைவிற்கு வர, 2 புள்ளிகள் முன்னிலையிலிருந்த வேம்படி மகளிர் கல்லூரி அணி மூன்றாமிடத்தினை பெற்றுக்கொண்டது.

http://www.thepapare.com/

  • தொடங்கியவர்

மன்னாரின் வெற்றிநடைக்கு முடிவுகட்டியது யாழ்.

 
மன்னாரின் வெற்றிநடைக்கு முடிவுகட்டியது யாழ்.

வடமாகாண ரீதியிலான கால்பந்தாட்டத்தில் மன்னார் மாவட்ட அணியை வீழ்த்தி யாழ்ப்பாண மாவட்ட அணி நடப்பு வருடச் சம்பியனானது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு மின்னொளியில் இந்த ஆட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அணியை எதிர்த்து மன்னார் மாவட்ட அணி மோதியது. ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்கள் வரை கோலெதுவும் பதிவாகவில்லை. 44 ஆவது நிமிடத்தில் ரஞ்சன் தட்டிக்கொடுத்த பந்தை தாசன் தலையால் இடித்து முதல் கோலைப் பதிவுசெய்ய முதல் பாதியின் முடிவில் 1:0 என்று முன்னிலை பெற்றது மன்னார்.

மன்னாரின் ஆதிக்கத்துடன் இரண்டாம் பாதி நகரந்துகொண்டிருந்தது. ஆட்டத்தின் 87ஆவது நிமிடத்தில் மன்னார் வீரரொருவர் விதிமுறைகளுக்கு முரணான ஆட்டத்தை வெளிப்படுத்த யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வாய்ப்புத் தேடிவந்தது. கச்சிதமாகக் கோலாக்கினார் கலிஸ்ரன். நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரு அணிகளும் தலா ஓர் கோலைப் பதிவுசெய்திருந்தமையால் சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 6:5 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது யாழ்ப்பாணம்.

2010ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டுவரை மன்னார் மாவட்ட அணி யாழ்ப்பாண மாவட்ட அணியை வீழ்த்தி தொடர்ந்து நான்கு வருடங்கள் மகுடம் சூடியது. 2014ஆம் ஆண்டு மன்னாரை வீழ்த்தி கிண்ணம் வென்றது யாழ்ப்பாண மாவட்ட அணி. 2015ஆம் ஆண்டு இரு அணிகளும் இணைச் சம்பியனாகத் தெரிவாகின. கடந்த வருடம் மீண்டும் வெற்றிபெற்றது மன்னார் மாவட்ட அணி. அந்த அணியின் வெற்றிநடைக்கு நடப்பு வருடத்தில் முட்டுக்கட்டை போட்டது யாழ்ப்பாணம்.

http://uthayandaily.com/story/4560.html

1-finalist-jaffna-men-1024x683.jpg யாழ்ப்பாண மாவட்ட அணி 1-finalist-mannar-men-1024x683.jpg மன்னார் மாவட்ட அணி

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மன்னார் மாவட்ட அணியை பெனால்டியில் வீழ்த்திய யாழ் மாவட்ட அணி வடக்கின் சம்பியனாகியது

 
Northern Provincial Meet
 

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் 8ஆவது விளையாட்டு நிகழ்வுகளின் கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் மன்னார் மாவட்ட தெரிவு அணியை பெனால்டியில் வீழ்த்திய யாழ் மாவட்ட அணி இவ்வருடத்திற்கான வட மாகாண சம்பியனாகத் தெரிவாகியது.

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வுகளின் இறுதி நாள் நிகழ்வில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மாபெரும் இறுதிப் போட்டி ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னிலையில் இடம்பெற்றது.

மினி உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட யாழ் ஆடவர் மகளிர் அணிகள்

இதுவரை இடம்பெற்ற வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் உதைபந்தாட்ட தொடர்களில் மன்னார் மாவட்ட அணி அனைத்துப் தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதுடன் இதில் 5 முறை சம்பியனாகியுமுள்ளது. ஒரே ஒரு தடவை மட்டுமே யாழ் மாவட்ட அணி மன்னார் அணியை வீழ்த்தியுள்ளது. அதுவும் பெனால்டி முறையிலாகும்.   

யாழில் அதிக கழகங்கள், திறமை வாய்ந்த வீரர்கள் மற்றும் அதிக உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இடம்பெறுகின்ற போதும் மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகளின்போது சிறந்த அணியாக செயற்படுவது மிகவும் குறைவாக இருப்பதுவே, கடந்த கால தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பலராலும் தெரிவிக்கப்பட்டு வந்தது.

மன்னார் மாவட்ட அணியைப் பொறுத்தமட்டில் எப்பொழுதும் சிறப்பான பயிற்சிகள், ஒழுங்குபடுத்தல்கள் மூலம் இப்போட்டிகளில் சிறந்த பெறுபேற்றினை எப்பொழுதும் வெளிப்படுத்தியுள்ளது.

இதுவரை யாழ் மன்னார் அணிகள் மோதிய ஆட்டங்களின் பெறுபேறுகள்

2009 – யாழ் 00 – 01 மன்னார்

2010 – யாழ் 00 – 04 மன்னார்

2011 – யாழ் 00 – 04 மன்னார்

2013 – யாழ் 01 – 01 மன்னார்

2014 – யாழ் 01 – 01 மன்னார்

2015 – யாழ் 02 – 02 மன்னார்

2016 – யாழ்: 00 – 01 மன்னார்

இந்நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பெரும் எதிர்பார்க்கிற்கு மத்தியில் இவ்வருடத்திற்கான இறுதிப் போட்டி ஆரம்பமானது. வட மாகாணத்தின் உதைபந்தாட்ட நட்சத்திரங்கள் அனைவரும் ஒரே போட்டியில் கலந்துகொள்வதனால் ஆட்டத்தின் வேகத்திலும் குறைவிருக்கவில்லை.

ரசிகர்களை பரவசப்படுத்தும் வகையிலான ஆட்டத்தை மன்னார் அணி முதல் பாதியில் வெளிப்படுத்தியபோதும் யாழ் அணியின் பின்கள வீரர்களின் சிறப்பான ஆட்டம் மன்னார் தரப்பினரின் கோல் போடும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.

23 வயதிற்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பிடிக்கக் கூடிய வீரர்கள் யார்?

முதற் பாதியில் பல தடவைகள் மான்னார் அணியின் பின்காளத்தை ஊடுருவி யாழ் அணியினரால் பந்து கடத்தப்பட்டிருந்தபோதும், அவர்கள் கோல் பெறுவதற்கு தவறியிருந்தனர். இருப்பினும் முதல் பாதியின் 44ஆவது நிமிடத்தில் மன்னார் அணியின் தாசனால் மிக தூரத்திலிருந்து உதைக்கப்பட்ட பந்து நேராக யாழ் அணியின் கோல் கம்பத்தினுள் புகுந்தது.

இதனால் மன்னார் அணிக்கான முதலாவது கோல் பெறப்பட, ஒரு  கோலினால் அவ்வணி முன்னிலை வகித்த நிலையில் முதற்பாதியாட்டம் நிறைவடைந்தது.

முதல் பாதி: மன்னார் மாவட்ட தெரிவு அணி 1 – 0 யாழ் மாவட்ட தெரிவு அணி

சொந்த மைதானத்தின் ரசிகர்களின் உற்சாகத்துடன் வியூகங்களை மாற்றியமைத்து இரண்டாம் பாதியில் களமிறங்கிய யாழ் அணி வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், மன்னார் வீரர்களும் சளைக்காமல் தமது பங்கிற்கு சவாலான ஆட்டதை வெளிப்படுத்தினர்.

யாழ் மாவட்ட தெரிவு அணி யாழ் மாவட்ட தெரிவு அணி

பரபரப்பாக நகர்ந்த இரண்டாம் பாதியின் 87ஆவது நிமிடத்தில் யாழ் அணி வீரன் பிறேம்குமார் மன்னார் தரப்பின் தண்டப் பரப்பில் பின்கள வீரர்களை பந்துடன் கடக்க முற்பட்டார். இதன்போது மன்னர் பின்கள வீரர் அவரை முறையற்ற விதத்தில் தடுக்க முயற்சித்ததாகத் தெரிவித்த நடுவர், யாழ் அணியினருக்கு தண்ட உதைக்கான வாய்ப்பை வழங்கினார்.

இதன்போது யாழ் அணியின் கலிஸ்ரரினால் நேர்த்தியாக உதைக்கபட்ட தண்ட உதை கோலாக மாற யாழ் ரசிகர்களின் உற்சாகத்தினால் அரங்கமே அதிர்ந்தது.

எனவே, போட்டியின் நிறைவில் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் இருந்தன.

முழு  நேரம்: மன்னார் மாவட்ட அணி 1 – 1 யாழ் மாவட்ட அணி

இதன் காரணமாக வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சமநிலை உதையில் (பெனால்டி) 6-5 என்ற கோல்கள் கணக்கில் மன்னார் அணியை வீழ்த்திய யாழ் வீரர்கள் 2017ஆம் ஆண்டின் வட மகாண உதைபந்தாட்ட சம்பியனாகத் தெரிவாகினர்.

மன்னார் மாவட்ட தெரிவு அணி மன்னார் மாவட்ட தெரிவு அணி

http://www.thepapare.com

  • தொடங்கியவர்
விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழக நினைவுக் கிண்ண சம்பியனானது பொதுசன அணி
Mannar-Football-league.jpg

விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழக நினைவுக் கிண்ண சம்பியனானது பொதுசன அணி

 

மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழகம் தமது 44ஆவது வருட நினைவையொட்டி மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியினை மன்னார் லீக்கின் அனுமதியுடன் நடாத்தியது. இதில் மன்னார் லீக்கில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களில் 36 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின.

இந்த சுற்றுப் போட்டியானது கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து நான்கு நாட்கள் விடத்தல்தீவு பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்குபற்றிய அணிகள் A, B என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விலகல் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

காலிறுதிச் சுற்று

குழு A யில் முதலாவது காலிறுதிப் போட்டியில் மன்னாரின் நடப்பு சம்பியன் பள்ளிமுனை சென்.லூசியா அணியை எதிர்த்து தோட்டவெளி ஐக்கிய அணி மோதியது. இதில் இரண்டு அணிகளும் போட்டி நேர முடிவின்போது எதுவித கோல்களையும் போடாத காரணத்தினால் சமனிலை தவிர்ப்பு உதை (பெனால்டி) மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் தோட்டவெளி ஐக்கிய அணியானது 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

A குழுவின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் விடத்தல்தீவு புதிய ஐக்கிய அணியை எதிர்த்து முருங்கன் பொதுசன சேவைகள் அணி மோதியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரண்டு அணிகளும் எதுவித கோலினையும் போடாததால் சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. இதில் முருங்கன் பொதுசன சேவைகள் அணி 4-3 எனும் கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

B குழுவின் முதலாவது காலிறுதிப் போட்டியில் காத்தாங்குளம் சென்.ஜோசப் அணியை எதிர்த்து விடத்தல்தீவு ஐக்கிய அணி மோதியது. இதன் முதல் பாதியில் ஐக்கிய அணியின் வின்சன் பற்றிக் பெற்றுக்கொடுத்த கோலின் மூலம்  1-0 எனும் நிலையில் ஐக்கிய விளையாட்டுக் கழகம் முன்னிலைபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியாட்டத்தில் மீண்டும் ஐக்கிய அணியின் வின்சன் பற்றிக் மற்றுமொரு கோலையும் பெற்றுக்கொடுத்து தனது அணியை பலப்படுத்தினார். இறுதியில் ஐக்கிய அணி 2-0 எனும் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

அக்குழுவின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் அடம்பன் டிலாசால் அணியை எதிர்த்து வங்காலை சென்.ஆன்ஸ் அணி மோதியது. போட்டி நேர முடிவின்போது இரு அணிகளும் தலா ஒரு கோலினை போட்டதனால் ஆட்டம் சமநிலையில் முடிவுபெற்றது. பின்னர் சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட, அதில் 4-1 எனும் கோல்கள் கணக்கில் வங்காலை சென்.ஆன்ஸ் அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட

அரையிறுதிச் சுற்று

முதலாவது அரையிறுதிப் போட்டியில் விடத்தல்தீவு ஐக்கிய அணியும் வங்காலை சென்.ஆன்ஸ் அணியும் மோதின. போட்டி ஆரம்பமாகிய வேகத்திலேயே 8ஆவது நிமிடத்தில் சென்.ஆன்ஸ் அணியின் அனஸ்ரியன் லாபகமாக கோல் ஒன்றினை பெற்றுக்கொடுத்து, தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

சுற்றுத் தொடரை நடாத்தும் ஐக்கிய அணி பின்னிலை வகிக்க, திரண்டிருந்த ரசிகர்களின் ஆக்ரோசமான ஆதரவு ஐக்கிய அணி வீரர்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்தது. போட்டியின் 16ஆவது நிமிடத்தில் ஐக்கிய அணியின் நிதர்சன் கோல் ஒன்றினை போட, ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானம் அதிர்ந்தது.

பின்னர் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற இரண்டாம் பாதியில் அதே உற்சாகத்தில் களமிறங்கிய ஐக்கிய அணி மீண்டும் ஒரு கோலினை பெற்று, போட்டியை 2-1 என நிறைவுறச் செய்து இறுதிப் போட்டிக்கத் தகுதி பெற்றது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியானது தோட்டவெளி ஐக்கிய அணிக்கும் முருங்கன் பொதுசன சேவைகள் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இதில் போட்டி ஆரம்பித்து 10ஆவது நிமிடத்தில் நிரோசன் குருவின் எதிர்பாராத கோலின் மூலம் பொதுசன சேவைகள் அணி 1-0 என முன்னிலை வகிக்க ஆட்டம் விறுவிறுப்பானது.

முதல் பாதி முடிவடைவதற்கு 03 நிமிடத்திற்கு முன்னர் ஐக்கிய அணியின் ரெக்சனின் சிறப்பான கோல் ஒன்றின் மூலம் போட்டியின் முதல் பாதியானது 1-1 என சமனிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் வெற்றிக்கான கோலினை போடுவதற்கு முயற்சித்த வேளையில், அதிஷ்டவசமாக போட்டி முடிவடைவதற்கு 6 நிமிடங்களுக்கு முன்னர் பொதுசன சேவைகள் அணிக்கு தண்ட உதை வாய்ப்பு ஒன்று கிடைக்கப்பெற்றது. இதனை சிறப்பாக பயன்படுத்திய அமல், வாய்ப்பை கோலாக மாற்றி அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார்.

பின்னர் ஐக்கிய அணியினர் இறுதிவரை போராடியிருந்தும், அவர்களது முயற்சிகள் பொதுசன அணியின் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் தகர்க்கப்பட்டன. இறுதியில் பொதுசன சேவைகள் அணி 2-1 என வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.

இறுதிப் போட்டி

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவலர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்க, முருங்கன் பொதுசன சேவைகள் அணிக்கும் போட்டித் தொடரை நடாத்தும் ஐக்கிய அணிக்கும் இடையிலான தீர்மானம் மிக்க இறுதிப் போட்டி வெகு விமர்சையாக ஆரம்பமானது.

மைதானத்தில் குவிந்திருந்த தங்களின் ரசிர்களின் ஆதரவுடன் களமிரங்கிய ஐக்கிய அணிக்கு, பொதுசன சேவைகள் அணியுடன் கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. இரண்டு அணிகளும் சம்பியன் பட்டத்தினை பெற வேண்டும் என்ற கனவோடு விளையாட போட்டியானது விறு விறுப்பின் உச்ச கட்டத்தினை அடைந்தது.

முதல் பாதி முடிவுற்ற நிலையில் இரு அணிகளும் எதுவித கோலினையும் போடாமல் சமனிலையில் காணப்பட்டது.

பின்னர் இடம்பெற்ற இரண்டாம் பாதியிலும் இரு அணி வீர்ர்களும் மிகவும் போராட்டத்துடன் தமது திறமையை வெளிப்படுத்தினர். இரு தரப்பினரின் தடுப்பாட்டங்களினால் எந்தவொரு அணிக்கும் கோல் போட முடியாமல் போனது.

எனவே, ஆட்ட நேரம் முடிவடைந்ததும் இரு அணிகளும் சமநிலையடைந்தது. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது.

சமனிலை தவிர்ப்பு உதை

  • ஐக்கியம் அணியின் அலக்ஸ் முதலாவது உதையை கோலாக மாற்றினார். (1-0)
  • பின்னர் பொதுசன சேவைகள் அணியின் அன்பும் தனது வாய்ப்பையும் கோலா மாற்றினார். (1-1)
  • ஐக்கிய அணியின் வின்சன்பற்றிக் கோல் போட, தனது பங்கிற்கு பொதுசன சேவைகள் அணியின் வசந்தனும் கோலினை போட்டார். (2-2)
  • ஐக்கிய அணி சார்பாக கலிஸ்டர் அடித்த பந்தை பொதுசன சேவைகள் அணியின் கோல் காப்பாளர் சிறப்பான முறையில் பாய்ந்து தடுத்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். (2-2)
  • தொடந்து வந்த பொதுசன சேவைகள் அணியின் ஜெசிந்தன் கோல் கம்பத்திற்கு வெளியே அடித்து மீண்டும் போட்டியை சமனிலைப்படுத்தினார். (2-2)
  • ஐக்கிய அணியின் டெல்சன் அடித்த சமனிலை தவிர்ப்பு உதையானது கோல் கம்பத்திற்கு வெளியே சென்றது. (2-2)
  • பதிலுக்கு நிதர்சனின் உதை, கோல் காப்பாளருக்கு நேராக வந்திருந்தும் கோல் காப்பாளர் பந்தைப் பிடிக்க தவறியதினால் அது கோலாக மாறியது. இதன் மூலம் பொதுசன சேவைகள் அணி 3-2 என முன்னிலை வகித்தது. (2-3)
  • ஐக்கிய அணியின் இறுதி வீரரும் கோல் கம்பத்திற்கு வெளியே பந்தை உதைத்தார். (2-3)

பின்னர் வந்த பொதுசன அணியின் அமல் தமது வாய்ப்பை கோலாக மாற்றி 4-2 என அணியை முன்னிலைப்படுத்தி அணியை வெற்றிபெறச் செய்தார்.

இதன் காரணமாக பொதுசன அணி விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் 44ஆவது வருட நினைவுக் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியன் பட்டத்தைப் பெற்றது.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்
தேசிய அணியில் பாடுமீன் வீரர்
 

image_8352068c88.jpg

23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அணியில், குருநகர் பாடுமீன் அணியின் ஜோசப் ஜெரின்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   

கொழும்பில், நேற்று (21) நடைபெற்ற, 23 வயதுப் பிரிவு அணித் தெரிவிலேயே, இவர் தேசிய அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.  

இவர், சென். பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், கல்லூரி அணியின் தலைவராகச் செயற்பட்டிருந்தார்.    

http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/தேசிய-அணியில்-பாடுமீன்-வீரர்/88-197723

 
 
 
சம்பியனானது பலாலி விண்மீன்
 
 
 

image_5103b60ec4.jpg

- கே.கண்ணன்

பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய, குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான, வடமராட்சி அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில், பலாலி விண்மீன் அணி சம்பியனாகியது.   

பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில், நேற்று (20) நடைபெற்ற இறுதிப் போட்டியில், பலாலி விண்மீன் அணியை எதிர்த்து, வதிரி பொம்மேர்ஸ் அணி மோதியது.   

இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில், இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால், இரண்டு அணிகளாலும் கோல் எதனையும் பெற முடியவில்லை. இருப்பினும், வதிரி பொம்மேர்ஸ் அணி வீரர் சாரங்கன், பலாலி விண்மீன் அணியின் பின்கள வீரர்களைத் தாண்டி பந்தைக் கொண்டு சென்றபோது, பலாலி விண்மீன் அணி வீரர்கள் முறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த, வதிரி பொம்மேர்ஸ் அணிக்கு, பெனால்டி கிடைத்தது. இதனை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கோலாக்க, சற்றும் சளைக்காத பலாலி விண்மீன் அணியினர், தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்த மூன்றாவது நிமிடத்தில், பலாலி விண்மீன் அணி வீரர் டேமியன் ஒரு கோலைப் பெற்று பதிலடி கொடுத்தார். இதனால், இடைவேளைக்கு முன்னர், இரண்டு அணிகளும் சம கோல்களைப் பெற்றுக் கொண்டன.   

இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில், பெம்மேர்ஸ் அணி, தமது பின்கள தற்காப்பு வீரர்களை பலப்படுத்திக்கொண்டு, முன்கள வீரர்கள் முன்னேறிப்பாயும் தாக்குதலில் விளையாட்டை நகர்த்தத் தொடங்கினர். இதனால், பலாலி அணியினர், பொம்மேர்ஸ் அணியின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிலைகுலைந்தனர். ஆனால், பொம்மேர்ஸ் அணியினர் அதனைக் கோலாக்கத் தவறிவிட்டனர். இதனால் இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடாத்த, இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டது. மத்தியஸ்தர்களால் எச்சரிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாதியின் 15ஆவது நிமிடத்தில், பலாலி விண்மீன் அணி வீரர் யூட்,  தனது அணிக்காக கோல் ஒன்றை பெற்றுக் கொடுக்க, ஆட்ட நேர முடிவில், பலாலி விண்மீன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சம்பியன் கிண்ணத்தைத் தமதாக்கிக் கொண்டது.   

இப்போட்டியின் நாயகனாக, பலாலி விண்மீன் அணியின் முன்கள வீரர் டேமியன் தெரிவுசெய்யப்பட்டார். சம்பியனாகிய விண்மீன் அணிக்கான கிண்ணத்தை, தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் வழங்கினார்.    

http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/சம்பியனானது-பலாலி-விண்மீன்/88-197660

  • தொடங்கியவர்
தர்ம முழக்கத்தில் முழங்கிய முழங்காவில்
 

image_b4497dd6f5.jpg
தர்ம முழக்கம் கிரிக்கெட் போட்டியில், விக்னேஸ்வரன் பிரணவனின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் கைகொடுக்க, தர்மபுரம் மத்திய கல்லூரியின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்தி, முதலாவது வெற்றியை, முழங்காவில் மகா வித்தியாலயம் சுவைத்தது.   

கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் மகா வித்தியாலம் ஆகிய பாடசாலைகளின் கிரிக்கெட் அணிகளுக்கிடையில், தர்ம முழக்கம் என்னும் இரண்டு நாட்களைக் கொண்ட, மட்டுப்படுத்தப்படாத ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டி, 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.   

2015, 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில், தர்மபுரம் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டுக்கான போட்டி, தர்மபுரம் மத்திய கல்லூரி மைதானத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (02) ஆரம்பமாகியது.  

நாணயச் சுழற்சியில் வென்ற முழங்காவில் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தர்மபுரம் அணி, பிரணவனின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் நிலைதடுமாறியது. தர்மபுரம் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில், அன்ரனி குவைரோ லோகேந்திரன் 35 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், பிரணவன், 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.   

தொடர்ந்து, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய முழங்காவில் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கிருஷ்ணகுமார் 30, பிரணவன் 29, கஜன் 29, டிலக்சன் 30 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சயந்தன், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

55 ஓட்டங்கள் பின்னிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடத் தொடங்கிய தர்மபுரம் அணி, மீண்டும் பிரணவனின் பந்துவீச்சில் தடுமாறி, 81 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தின், நிதுசன் 24 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், பிரணவன், நிசாந்தன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.   
பதிலுக்கு, 27 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய முழங்காவில் அணி, 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.   

இந்த வெற்றியுடன், தர்மபுரம் அணியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்திய முழங்காவில் அணி, தமது வெற்றி எண்ணிக்கையையும் ஆரம்பித்துள்ளது.   

முழங்காவில் அணியின் பயிற்றுவிப்பாளராக சற்குணராஜா துஷ்யந்தன் செயற்பட்டார். தேசிய பாடசாலையான முழங்காவில் மகா வித்தியாலயம், வளங்கள் என்ற ரீதியில் பின்தங்கிய இருக்கும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளுக்கான வளங்களும் மிகக்குறைந்தளவே கொண்டுள்ளது. குறைந்த வளங்களைக் கொண்டு, வீரர்களைத் தயார்படுத்தி போட்டியொன்றில் வெற்றியையும் பெற்றுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.   

http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/தர்ம-முழக்கத்தில்-முழங்கிய-முழங்காவில்/88-198047

  • தொடங்கியவர்

மன்னார் மண்ணில் மீண்டும் தனது பலத்தை நிரூபித்தது சென்.லூசியா

 
Mannar Football league
icc-clips-728-90-newest.jpg

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அணிக்கு 9 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த சென்.லூசியா விளையாட்டுக் கழகம், மன்னாரின் பலம் மிக்க அணி தாம் தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.

குறித்த போட்டித் தொடர் கடந்த வாரத்தின் இறுதி மூன்று நாட்களிலும் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் மன்னார் லீக்கில் பதிவு செய்யப்பட்ட 36 கழகங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டியில் பங்குபற்றியிருந்தன.

காலிறுதிச் சுற்றுப் போட்டிகள்

A பிரிவில் நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் முருங்கன் பொதுசன சேவைகள் அணியும் பாலம்பிட்டி ஐக்கிய அணியும் மோதின. இதில் போட்டி நேர முடிவில் இரண்டு அணிகளும் எதுவித கோல்களையும் பெறாததனால் சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. இதில் பொதுசன சேவைகள் அணி 4-2 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

 

A பிரிவின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் அணியும் சாவக்கட்டு கில்லறி அணியும் மோதின. இதில் ஜோசப்வாஸ் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

அதேபோன்று, மாளிகைப்பிட்டி சித்திவிநாயகர் அணியும் பண்டிவிரிச்சான் சென்.மரியகொறற்றி அணியும் B பிரிவின் முதலாவது காலிறுதிப் போட்டியில் மோதின. இதில் சென்.மரியகொறற்றி அணி 1-0 என வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

அதனைத் தொடர்ந்து B பிரிவின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் பலம் மிக்க இரு அணிகளான பள்ளிமுனை சென்.லூசியா அணியும் தேவன்பிட்டி சென்.சேவியர் அணியும் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி நிமிடத்தில் சென்.லூசியா அணி கோல் ஒன்றினைப் போட்டு 1-0 என வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

அரையிறுதிப் போட்டிகள்

முதலாவது அரையிறுதிப் போட்டியானது நடப்புச் சம்பியன் பொதுசன சேவைகள் அணிக்கும் தோட்டவெளி ஐக்கிய அணிக்கும் இடையில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரண்டு அணிகளும் தங்களுக்கான கோல் போடும் பல சந்தர்பங்களை தவறவிட்டமை இரு அணி ரசிகர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது.

போட்டி நேர முடிவின்போது இரு அணிகளும் எதுவித கோல்களையும் பெற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது.  

இதில் ஐக்கிய அணியின் கோல் காப்பாளர் ஜேம்ஸ் எதிரணியின் இரண்டு உதைகளை சாதுர்யமாகத் தடுத்து அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார். எனினும் அவ்வணியின் வீரர்கள் தமக்கு வழங்கப்பட்ட உதைகளின்போது பந்தை கோல் கம்பத்திற்கு வெளியே உதைந்தனர். இதனால் பொதுசன சேவைகள் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியானது சென்.லூசியா அணிக்கும் பண்டிவிரிச்சான் மரியகொறற்றி அணிக்கும் இடையில் நடைபெற்றது. இந்தப் போட்டி ஆரம்பித்து 7ஆவது நிமிடத்தில் லூசியா அணியின் பிங்கோவின் சிறப்பான கோல் மூலம் அவ்வணி முதல் பாதியாட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியாட்டத்திலும் சென்.லூசியா அணியின் உதயன் மற்றுமொரு கோலைப் பெற்று முன்னிலை கோலை இரட்டிப்பாக்கினார். எனினும், ஆட்டத்தின் இறுதி வரை பண்டிவிரிச்சான் மரியகொறற்றி வீரர்களால் எந்த கோலையும் பெற்றுக்கொள்ளவில்லை.  

எனவே, 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற சென்.லூசியா அணி கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி மோதலுக்குத் தெரிவாகியது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டியில் வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ குணசீலன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். நாலா பக்கமும் உதைபந்தாட்ட ரசிகர்களினால் மைதானம் நிரம்பிவழிய இறுதிப் போட்டி ஆரம்பமாகியது.  

பலம் பொருந்திய பல அணிகளை வீழ்த்திய பெருமையுடன் கிண்ணத்திற்கான இறுதி மோதலில் களம் கண்ட இரு அணி வீரர்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் விளையாட ஆரம்பித்தனர்.  

நடப்பச் சம்பியன் பட்டத்தை தக்கவைக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் முருங்கன் பொதுசன சேவைகள் அணியும், இழந்த சம்பியன் பட்டத்தை மீளப்பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் பள்ளிமுனை சென்.லூசியா அணியும் மோதின.

இரண்டு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படுத்தினர். இரு அணிகளும் கோல் பெறுவதற்கு மிகவும் கடுமையாகப் போராடினர். எனினும், களத்தடுப்பாளர்களின் சிறப்பான ஆட்டம் மூலம் இரு தரப்பினருக்கும் கோல்கள் எதுவும் இன்றி முதல் பாதி நிறைவடைந்தது.

இரண்டாவது பாதியாட்டம் ஆரம்பித்ததும் போட்டியின் விறுவிறுப்பு மேலும் அதிகரித்தது. எப்படியாவது போட்டியை சமனிலைக்கு கொண்டுவந்து சமநிலைத் தவிர்ப்பு உதை மூலம் போட்டியில் வெற்றிபெறுவதற்கு பொதுசன சேவைகள் அணி முயற்சித்ததை அவதானிக்க முடிந்தது.

ஏனெனில், பொதுசன சேவைகள் அணி காலிறுதிப் போட்டிக்கு முன்னைய போட்டி, காலிறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி என தொடர்ச்சியாக மூன்று போட்டிகளையும் சமநிலைத் தவிர்ப்பு உதை மூலமே வெற்றிபெற்றிருந்தது.

>>

எனினும் சென்.லூசியா அணியின் சிறப்பான ஆட்டம் கைகொடுக்க ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிங்கோவின் அதிரடியான கோலின் மூலம் 1-0 என சென்.லூசியா முன்னிலை பெற்றது.  

இதனையடுத்து எஞ்சிய நேரத்தில் தமக்கான முதல் கோலைப் பெறுவதற்கு பொதுசன சேவைகள் வீரர்கள் கடுமையாக முயற்சித்தும், அவர்களது முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.

எனவே, போட்டி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தினை தம்வசப்படுத்தியது சென்.லூசியா அணி.

விருதுகள்

இறுதிப் போட்டியின் சிறந்த வீரர் – பிங்கோ (சென்.லூசியா அணி)
தொடரின் சிறந்த கோல் காப்பாளர் – சதுசியன் (சென்.லூசியா அணி)
தொடரின் சிறந்த வீரர் – அமலனேசன் (பொதுசன சேவைகள் அணி)
தொடரின் சிறந்த அணி – தேவன்பிட்டி சென்.சேவியர் அணி

பரிசளிப்பு நிகழ்வின்போது, மன்னார் மண்ணில் 29 வருடங்களாக உதைப்பந்து விளையாடிவரும், தற்பொழுது 47 வயதான பாலம்பிட் ஐக்கிய அணி வீரர் கண்ணாவிற்கு சிறப்பு விருது ஒன்றும் வழங்கப்பட்டது.

சம்பியன் கிண்ணத்தை வென்ற சென்.லூசியா அணி சம்பியன் கிண்ணத்தை வென்ற சென்.லூசியா அணி

http://www.thepapare.com

  • தொடங்கியவர்
அரையிறுதியில் யாழ். பல்கலைக்கழகம்
 -

image_f2ff681b13.jpg

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தை ஐந்து விக்கெட்டுகளால் வென்று, அரையிறுதிப் போட்டிக்குள்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி நுழைந்தது.   

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, 50 ஓவர்களைக் கொண்டதாக நடைபெற்றுவரும் இத்தொடரின் காலிறுதிப் போட்டியொன்று, பேராதனைப் பல்கலைக்கழக மைதானத்தில், நேற்று (04) நடைபெற்றது. அன்று பெய்த மழை காரணமாக, போட்டி, 33 ஓவர்களைக் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டு இது இடம்பெற்றது.   

முதலில் துடுப்பெடுத்தாடிய மொறட்டுவை அணி, 33 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், வகன்யா 26 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், குருகலசூரிய, லோகதீஸ்வரர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.   

பதிலுக்கு, 125 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி, 28.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், கல்கோவன் 44, துவாரகசீலன் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களைப் பெற்றனர்.  

அரையிறுதிப் போட்டியில், ராஜரட்டை பல்கலைக்கழகத்துடன்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மோதவுள்ளது.    

http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/அரையிறுதியில்-யாழ்-பல்கலைக்கழகம்/88-198212

  • தொடங்கியவர்
நவரத்தினராசா ஞாபகார்த்த சுற்றுப் போட்டி
 

image_f0d2581596.jpg

வலிகாமம் கால்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில், வலிகாமம் கால்பந்தாட்ட லீக்கின் முன்னாள் தலைவரும், தமிழ்மிரரின் வலிகாமம் பிரதேச ஊடகவியலாளருமான, மறைந்த நா.நவரத்தினராசா ஞாபகார்த்தமாக, கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியொன்று நடத்தப்படவுள்ளது.  

தலைவர் கிண்ணம் எனும் பெயரில் நடைபெறவுள்ள இச்சுற்றுப் போட்டியில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 10 அணிகள் பங்குபற்றுகின்றன. குருநகர் பாடுமீன், வேலணை ஐயனார், பலாலி விண்மீன், அராலி பாரதி, வதிரி டயமன்ஸ், இளவாலை யங்ஹென்றிஸ், சண்ஸ்ரார், கம்பர்மலை யங்கம்பன்ஸ், பாசையூர் சென். அன்ரனிஸ், ஊரெழு றோயல் ஆகிய அணிகளே, பங்குபற்றும் 10 அணிகளாகும்.   

இச்சுற்றுப் போட்டியின் போட்டிகள், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில், நாளை மறுதினம் (10) முதல் ஆரம்பமாகின்றன. தொடர்ந்து காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.  

முதற் சுற்றுப் போட்டிகள் ஒரு மணித்தியாலத்தைக் கொண்டதாகவும், காலிறுதிப் போட்டிகள், அதற்கு பின்னதான போட்டிகள், ஒன்றரை மணித்தியாலத்தைக் கொண்டதாகவும் நடைபெறவுள்ளன.   

 
 
 
 
கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
 

image_338c03f76e.jpg

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98ஆவது ஆண்டு நிறைவையொட்டி, “வடக்கின் வல்லரசன் யார்?” என்னும் மாபெரும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியொன்று, அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில், நாளை மறுதினம் (10), அதற்கு மறு நாள்(11) நடத்தப்படவுள்ளது.  

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கார்த்திகேசு குணரத்தினத்தின் ஆதரவில், மூன்றாவது தடவையாக இச்சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.  

தெரிவு செய்யப்பட்ட எட்டு அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றுகின்றன. முதலாவது போட்டியில், சிங்க றெஜிமன்ட் இராணுவ அணியை எதிர்த்து கொடிகாமம் இராணுவ அணி மோதுகிறது. இரண்டாவது போட்டியில், மன்னார் மாவட்ட அணியை எதிர்த்து கிளிநொச்சி மாவட்ட அணி மோதுகிறது. மூன்றாவது போட்டியில், ஆவரங்கால் மத்திய அணியை எதிர்த்து ஆவரங்கால் இந்து இளைஞர் அணியும், நான்காவது போட்டியில், புத்தூர் கலைமதி அணியை எதிர்த்து இளவாலை மத்திய அணியும் மோதவுள்ளன.  

வெற்றிபெறும் அணிகள் தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகளில் விளையாடும். அரையிறுதிப் போட்டிகளில், வெற்றிபெறும் அணிகள், இறுதிப் போட்டியில் மோதும்.  

இச்சுற்றுப் போட்டி, 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுப் போட்டியில், அநுராதபுரம் இராணுவ அணி சம்பியனாகியது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுப் போட்டியில், ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியனாகியது.   

http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/கரப்பந்தாட்ட-சுற்றுப்-போட்டி/88-198293

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.