Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - வின்டோஸ்

Featured Replies

உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - வின்டோஸ்

இலக்கம் 1

வின்டோஸிலுள்ள பின்போல்(Pinball) விளையாட்டில் அழுகுணி ஆட்டம் ஆட விருப்பமா! இது வின்டொஸ் எக்ஸ்பிக்கும்(WIN XP) பொருந்தும்.

பின்போல் வின்டோ வந்து ஆட்டம் தொடங்க முதல் பின்வருவனவற்றை மேற்கோள்குறி இல்லாமல் தட்டச்சு செய்வதன் மூலம் அழுகுணி ஆட்டம் ஆடலாம்.

  1. பின்போல் பந்தை உங்கள் mouse மூலம் தூக்கிச் செல்ல
    "hidden test" - mouseஆல் பின்போல் மேசையில் கிளிக்(Click) பண்ணி பந்தை தூக்கி விரும்பியவாறு விளையாடுங்கள்.

  2. "1max" - முடிவிலி எண்ணிக்கையான பந்துகளைப் பெற

  3. "bmax" - Gravity well ஐப் பெற

  4. "gmax" - Rank ஐ உயர்த்த

  5. "rmax" - உடனடியாக 1,000,000 புள்ளிகளைப் பெற

Edited by suddi

  • தொடங்கியவர்

உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - வின்டோஸ்

இலக்கம் 2

Notepad ஐ தினக்குறிப்பேடாக(Dairy) பாவிக்க. எல்லா விண்டோஸ்களுக்கும் பொருந்தும்.

  1. ஒரு வெற்று Notepad fileஐ திறந்து கொள்ளவும்.
  2. முதலாவது வரியில் ".LOG" (கட்டாயம் பெரிய எழுத்துக்களாக இருக்கவேண்டும்)என்று மட்டும் தட்டச்சு செய்து கொள்ளவும்(மேற்கோள் இல்லாமல்).
  3. உங்களுக்கு பிடித்த பெயரில் .txt fileஆக சேமித்துக் கொள்ளவும்.
  4. இப்பொழுது அதை மூடிவிட்டு மீண்டும் திறக்கவும்.
  5. ஒவ்வொரு முறை நீங்கள் அந்த fileஐ திறக்கும் பொழுதும் அச்சமய திகதி, நேரம் தானாகவே போடப்படும். நீங்கள் அதற்கு கீழே தட்டச்சு செய்து சேமிக்கலாம்.

நன்றி சுட்டி

மேலும் எதிபார்க்கிறோம்.

சொலிட்டேயரில் அழுகுணி ஆட்டம் ஆட ஆல்ட் + சிப்ட் + 2 ஐ அழுத்துங்கள்.

  • தொடங்கியவர்

நன்றி சுட்டி

மேலும் எதிபார்க்கிறோம்.

சொலிட்டேயரில் அழுகுணி ஆட்டம் ஆட ஆல்ட் + சிப்ட் + 2 ஐ அழுத்துங்கள்.

அது அழுகுணி ஆட்டம் அல்ல. எந்நேரத்திலும் ஆட்டத்தை முடித்துக் கொள்ள.

  • தொடங்கியவர்

உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - வின்டோஸ்

இலக்கம் 3

Label(Name) இல்லாத Iconகளை Desktopஇலிடவேண்டுமா?

இது எல்லா Windows இலும் வேலை செய்யும்.

நீங்கள் Label இல்லாமல் தோன்ற வைக்க விரும்பும் Iconகளின் பெயரை Alt keyயை அமத்திக் கொண்டு 0160(Numpadஇல்) என்று மாற்றி விடுங்கள்.

அவ்வாறு மாற்றி விட்டு Enterஐ அமத்திவிட்டு பாருங்கள். Labelஇல்லாத icon தயார்.

  • தொடங்கியவர்

உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - வின்டோஸ்

இலக்கம் 4

Windows இலுள்ள Registered User Informationஐ மாற்ற வேண்டுமா?

உங்களது windows இலுள்ள Registered User Information, Product ID மாற்றியமைக்க நீங்கள் செய்ய வேண்டியன,

நீங்கள் பாவிப்பது Windows 95/98/Meஆயின்

1. Start button ஐ அழுத்தி பின் Run ஐ அழுத்தித் திறந்து கொள்ளுங்கள், பின் அதில் regedit என்று தட்டச்சு செய்து கொள்ளவும்.

2. வரும் Window இல் முறையே பின்வருவனவற்றை திறந்து கொள்ளவும்.

HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\ Microsoft\ Windows\ CurrentVersion

3. RegisteredOrganization, RegisteredOwner, ProductId என்பனவற்றை double click செய்வதன்மூலம் உங்களுக்குத் தேவையானவற்றை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் பாவிப்பது Windows 2000/2003/XP/Vista ஆயின்

1. Start button ஐ அழுத்தி பின் Run ஐ அழுத்தித் திறந்து கொள்ளுங்கள், பின் அதில் regedit என்று தட்டச்சு செய்து கொள்ளவும்.

2. வரும் Window இல் முறையே பின்வருவனவற்றை திறந்து கொள்ளவும்.

HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\ Microsoft\ Windows NT\ CurrentVersion

3. RegisteredOrganization, RegisteredOwner, ProductId என்பனவற்றை double click செய்வதன்மூலம் உங்களுக்குத் தேவையானவற்றை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

  • தொடங்கியவர்

உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - வின்டோஸ்

இலக்கம் 5

உங்களது சிறந்த Firewall உம் உங்களது கடனட்டை இலக்கம் போன்றவற்றை திருட விட்டுவிடும் அபாயம் உள்ளது.

நாங்கள் பல இடங்களில் ctrl+c ஐ பயன்படுத்தி தகவல்களை பல இடங்களில் paste பண்ணுவதுண்டு. இந்த copy பண்ணிய தகவல்கள் clipboard இல் பதியப்படும். இதனை இணையம் மூலம் Javascripts ஐயும் ASP ஐயும் உபயோகித்து அணுகமுடியும்.

இதை முறியடிக்க நீங்கள் செய்ய வேண்டியவை,

1. internet options->security இற்கு செல்லவும்.

2. custom level ஐத் தெரிவு செய்யவும்.

3. security settings இல் disable under Allow paste operations via script ஐத் தெரிவு செய்யவும்.

இதன்மூலம் இந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம்.

Edited by suddi

  • தொடங்கியவர்

உதவிக் குறிப்புகளும் உத்திகளும் - வின்டோஸ்

இலக்கம் 6

உங்களது இணைய உலாவி செயற்பட மறுத்தால், MS-calculator இன் மூலம் நீங்கள் இணையத்தில் உலா வரலாம்.

உங்களுக்கு மிகவும் அவசரமான, அவசியமான வேலை இணையத்தில் உண்டு, ஆனால் உங்கள் உலாவி செயற்பட மறுக்கிறதா? கவலையை விடுங்கள். உங்களுக்கு MS-calculator கைகொடுக்கும்.

அதற்கு செய்யவேண்டியவை.

  1. MS-calculator ஐத் திறக்கவும். இதைப் பொதுவாக Start => All Programs => Accessories எனும் படிகளுனூடு திறந்து கொள்ளலாம்.
  2. F1 key யை அழுத்துவதன் மூலம் help-window ஐத் திறந்து கொள்ளவும். அல்லது help me ஐத் திறந்து கொள்ளவும்.
  3. வரும் window இன் இடது மேல் மூலையிலுள்ள icon கிளிக் செய்யவும்.
  4. Go to URL-address ஐத் தெரிவு செய்து கொள்ளவும்.
  5. இதில் உங்களுக்குத் தேவையான இணைய முகவரியை http:// உடன் தட்டச்சு செய்யவும். http:// கட்டாயம் இருக்கவேண்டும்.
  • 2 months later...
  • தொடங்கியவர்

உபயோகமான ரன் கட்டளைகளின் தொகுப்பைப் பார்க்க இதைக் கிளிக் பண்ணவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.