Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த களத்தில்... காதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த களத்தில்... காதல்!

p35dh7.jpg

என் திருமணம் நடந்தபோது நான் இலங்கை அரசால் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்தேன். பகலில் காடுகளில் அலைவேன். யுத்தத்துக்கான வெடிபொருளாக கவிதைகள் தயாரித்தேன். கூடவே, காதலித்தேன். அதுவும் 15 ஆண்டுக் காதல்.

இயக்கத்துக்கு ஆதரவு தேடி உலகமெல்லாம் பறந்த காலம் அது. தகிக்கிற அரசியல் வெப்பத்துக்கு நடுவே காதல் நிழலாக, ஆறாத காயங்களும் தீராத வேதனைகளிலும் திரிந்த எனக்கு ஆறுதலாக இருந்தவள் சரோஜினி. எத்தனையோ முறை எதிரிகளிடம் இருந்து என் னைக் காத்தவள். ஒரு மருத்துவத் தாதியாக அவள் எனக்கு அறிமுகம்!

யாழ்ப்பாணத்தில் இருக்கிற செல்வ சன்னதி என்ற முருகன் கோயிலில் நடந்தது ரகசியத் திருமணம். இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை என்றாலும், ‘காசியண்ணாவுக்குத் திருமணம்’ என்று ஈழத் தமிழ் மக்கள் கூடிக் கொண்டாடிய ஒரு விழா அது. இரவில் நடந்த திருமணத்துக்கு வந்து வாழ்த்தினார் பிரபாகரன்.

என் நண்பன் இன்பன்தான் திருமண வேலைகளை முன்னின்று செய்தான். மறுநாள் காலையில், யாழ்ப்பாணம் மண்டைத் தீவில் குண்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தான் இன்பன். நள்ளிரவில் சிங்கள போலீஸாரிடம் சிக்கியிருக்கிறான். காதல் தம்பதியான நானும் என் மனைவியும் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இன்பனின் இறுதி ஊர்வலம்தான்.

எங்களின் காதல் வாழ்வுக்குச் சாட்சியாக, என் மனைவி வேலை பார்த்த அதே மட்டக்களப்பு மருத்துவமனையில்தான் என் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தார்கள். நாங்கள் காதலித்தது மாதிரியே எங்கள் மகள் அமுதநிலாவின் காதலையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைத் தந்தது ஈழப் போராட்டம்தான்!’’ என்கிற கவிஞர் காசி ஆனந்தன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காதல் வாழ்க்கையைச் சொல்கிறார் நெகிழ்ச்சியாக!

‘‘அப்போது சென்னையில் இருந்தபடி, ஈழ விடுதலைப் போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப் பில் இருந்தார் தலைவர் பிரபாகரன். அப்போது ஈழத்திலிருந்து போராட்ட அரசி யல் பயிலரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த யாழ் பல்கலைக் கழக மாணவி மதி வதனியுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டது. அமைப்பின் அத்தனை தலைவர்களின் ஒப்புதலுடன், 84&ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி, தமிழகத்தின் திருப்போரூர் கோயிலில் ஆன்டன் பாலசிங்கமும் அடேலும் தலைவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.

காதல் வயப்பட்டனர், கல்யாணம் செய்துகொண்டனர் என்று ஒற்றை வரியில் முடிகிற கதை அல்ல, பிரபாகரன் - மதிவதனி தம்பதியின் கதை. சொல், செயல், வாழ்க்கை என எல்லாம் ஒரே திசையில் பயணித் தால் காதல் எத்தனை மகத்தான சக்தி என்பதற்கான உதாரணக் கதை!

அவர்களுக்கு முதலில் பிறந்தது ஆண் குழந்தை. சார்லஸ் ஆன்டனி சீலன் என்று பெயரிட் டனர். சார்லஸ் ஆன்டனி & பிரபாகரனின் பால்ய காலத் தோழன். சிங்கள ராணு வத்துடன் நேரடி மோதலில் கொல்லப்பட்டு, ஈழ விடுதலைக்காக விழுந்த முதல் விதைகளில் ஒருவன். அடுத்தது பெண் குழந்தை. துவாரகா என்று பெயரிட்டனர். யாழ்ப்பாணத்தில் எதிரி களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியான பெண் போராளியின் பெயர் துவாரகா. அடுத்த ஆண் குழந் தைக்குப் பெயர் பாலச்சந்திரன். இந்திய ராணுவத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட பாலச்சந்திரன் என்கிற போராளி, மதிவதனியின் தம்பி. தம்பியே மகனாகப் பிறந்த அதிசயம் போராட்டக் களத்தில் காதலில் மட்டுமே நிகழும்.

தன் காதல் கணவன் ஒரு புலி வீரன். ஒரு இனத்தின் விடுதலைக்காக வனவாசம் இருப்பவன் என்று தெரிந் தும், இன்றைக்கும் இன்னல்களுக்கு நடுவே ஒரு காதலியாக, மனைவி யாக, தாயாக, போராளியாக இருக்கும் மதிவதனிக்கு, தமிழ் ஈழத்தில் வசிக்கிற மனோவலிமையைத் தந்ததும் காதலே!

ஈழ விடுதலையின் தத்துவப் பேராசான் ஆன்டன் - அடேல் தம்பதியும் காதல் தம்பதியே!

அடேலின் வார்த்தைகளி லேயே சொல்வதென் றால், ‘பாலசிங்கத்தைத் திருமணம் செய்வதென் பது ஒன்று. ஒரு புரட்சிப் போராட்டத்தில் ஈடுபடு வது என்பது இன்னொன்று. திருமணத்துக்குப் பின் எனது உள்நோக்கம் வேறொன்றாக இருந்திருந்தால், பாலாவைத் திசை திருப்பி, அவரை வேறொரு பக்கம் நான் கவர்ந்து சென்றிருக்கலாம். ஆனால், நான் அப்படிச் செய்ய வில்லை. அரசியல் பாதையையும் தமிழ் மக்களின் போராட்ட ஈடுபாட் டையும் நானே தேர்ந்தெடுத்தேன்!’

தன் முதல் மனைவியின் மரணத்துக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு மருத்துவத் தாதியை காதல் மனைவியாக்கி, அவரையும் ஈழ விடுதலையின்பால் ஈடுபாடு கொள்ளச் செய்கிற சக்தி, தத்துவச் செறிவுள்ள காதலுக்கு மட்டுமே வாய்க்கும். இப்போது பாலா இறந்து விட்டாலும், அடேல் இன்னும் ஈழப் போராட்டத்தில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்.

ஈழத்தில் குமரப்பா, புலேந்திரன் என இரண்டு இளைஞர்கள். குமரப்பா மட்டக்களப்பு பிரதேசப் பொறுப் பாளராக நியமிக்கப்பட்டபோது ரஜனியைச் சந்தித்தான். இருவருக்கும் காதல். அடேலும் பாலாவும் ஈழத்துக்கு வந்தபோது குமரப்பா - ரஜனி திருமணம் நடந்தது. நானும் போயிருந்தேன். அதே காலத்தில் புலேந்திரனும் சுபாவும் காதலித்து, தலைவர் பிரபாகரன் திருமணம் செய்துகொண்ட அதே திருப்போரூர் கோயிலில்தான் திருமணம் செய்து கொண்டார்கள். இரண்டு ஜோடிகள்... நான்கு போராளிகள்.

நண்பர்கள் இருவரும் புயல் மாதிரி திரிவார்கள். களமுனையில் எதிரி களைப் பந்தாடியவர்கள். பருத்தித் துறை கடல்வெளியில் ஒரு கடல் பயணத்தின்போது குமரப்பா, புலேந்திரன் உட்பட 15 போராளி களைச் சுற்றிவளைத்துப் பிடித்தது சிங்கள ராணுவம். இந்திய ராணுவத் தின் அனுமதியுடன் பாலா போராளி களைச் சந்தித்தார். மீட்க முடியாத சூழலில், அந்த 15 பேருக்கும் சயனைடு குப்பிகளை வழங்கியது பாலாதான். குமரப்பாவுக்கும் புலேந்திரனுக்கும் திருமணத்தை நடத்திவைத்ததும் பாலாதான்; ஈழ விடுதலைக்காக அவர்களின் உயிரை உரமாக்கியதும் பாலாவே!

குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகளின் உடலும் அடக்கம் செய்யப்பட்டபோது, அவர்களின் பேழையைப் பிடித்து ரஜனியும் சுபாவும் அழுத அழுகை, இன்னும் வல்வெட்டித்துறையில் கேட்டுக்கொண்டு இருக்கும்.

அது போல மேஜர் சுசி... தன் காதல் கணவன் கிரேசியை களத்தில் இழந்தபோது துடிதுடித்ததை மறக்க இயலாது. இழப்புக்குப் பிறகும் களத்தில் நின்ற மேஜர் சுசியை யோகி என்கிற யோகரத்தினம் மறுமணம் செய்தார். இப்படி இள வயதில் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் புரியவும் ஆசீர்வதிக்கிறது இயக்கம். போராளிகளிடையே காதல் திருமணங்களை அமைப்பே செய்து வைக்கிறது. சொல்லப்போனால், புலிகளின் தலைமை இப்படிப்பட்ட காதல் திருமணங்களை ஊக்கு விக்கிறது. அநேகமான புலிப் போரா ளிகள் தம்பதிகளாக வாழ்கிறார்கள். மரணம் என்பது ஈழத்துக்குக் கொடுக்கும் கொடையாகப் பார்க்கப் படுகிறது. ஒருவேளை நாம் மரித்துப் போனாலும் இன்னொரு விதையை ஈழப் போராட்டத்துக்குத் தந்து விட்டுப் போகும் அருமருந்தாகவே இருக்கிறது யுத்த களத்தில்... காதல்!’’

http://www.vikatan.com/

எப்படியெல்லாம் கதைதீர்கள், இவர்களைப்பற்றி ;எப்படி காதலித்துள்ளார்கள் எப்படி வாழ்கிறார்கள்.இதை கட்டாயம் வாசிக்கவேண்டியவர்கள் பலர் வெளிநாட்டில் உள்ளனர்.இது வாழ்க்கை, நீதிமன்றை நம்பியல்ல!

ஏன் இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை, எதாவது ஜாதி பிரச்சனையா?!!!

உயர்தரக்கல்வி படிக்கும் போது சங்ககால இலக்கியங்களில் நடந்த காதல். யுத்தம் ,யுத்தத்தின்போது கடமைகள். போருக்கு போகும் போது ஆசிர்வதித்து வழி அனுப்பல் என் பலவற்றை இலக்கிய நயங்களுடன் தமிழ் பேராசிரியரிடம் படித்தோம். படிக்கும்போது இப்படி எல்லாம் செய்துள்ளார்களா தமிழர் என்று சந்தேகம் வரும். இருந்தாலும் இலக்கியத்திற்காக அதை எல்லாம் படித்தோம்.

இப்போ காசி அண்ணா போராட்டக்களத்தில் காதல் பற்றி சொன்ன போது சங்ககால இலக்கியம், அதை நயத்துடன் கற்றுத்தந்த பேராசியர் எல்லாம் கண்முன் விரிந்து நிற்கின்றன. உண்மையான நிகழ்வுகள் நாங்கள் வாழும் நாட்களில் இவையே சரித்திரமாகின்றன இலக்கியமாகின்றது.

ஆச்சரியமாக இருக்கின்றது.

போராளிகளின் காதல் அற்புதமானது, அதைவிட, தமது இல்வாழ்க்கை நிச்சயமற்றது என்று தெரிந்தும் கூட அவர்களை காதலிக்கும் பெண்கள் போற்றபட வேண்டியவர்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இப்படித்தான் காதலத்து கட்ட ஆசைப்படுறன் ஒரு பெட்டையளும் பாக்கிறாளவயில்லை..என்ன.செய்ய காசி அண்ண கொடுத்து வைச்சவர்...

காவல் துரை அவர்களே நீங்களே ஒரு காவலர் உங்களுக்கு ஏன் ஒரு காவல் துறையை எதிபார்க்கிறீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்படித்தான் காதலத்து கட்ட ஆசைப்படுறன் ஒரு பெட்டையளும் பாக்கிறாளவயில்லை..என்ன.செய்ய காசி அண்ண கொடுத்து வைச்சவர்...

கல்யாணம் பண்ணிட்டு காதலித்து பாருங்கோ காவல்துறை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.