Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதிக்கு பதிலாக சித்தார்த்தன் எம்.பியால் திறக்கப்பட்ட கட்டடம்

Featured Replies

முல்லைத்தீவு சென்ற ஜனாதிபதி இடை நடுவில் கொழும்பு திரும்பினார்

 

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலநிலை சீரின்மையால் தனது பயணத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.FotorCreated-491.jpg

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில்  இன்று இடம்பெற்று வருகின்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த விஜயம் இடைநடுவில் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

 

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இன்றைய தினம் இடம்பெறும் பொது நிகழ்வில் பாடசாலைக் கட்டிடத் திறப்புடன் மாவட்டத்தின் 1500 பேருக்கான காணி அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப்படுவதுடன் 500 குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவிகள்  மற்றும் கேப்பாபுலவில் விடுவிக்கப்படும் நிலங்களிற்கான சான்றிதழ்கள் போன்றன வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சித்தாத்தன், பிரபா கணேசன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, வடமாகாண சபை அவைத் தலைவர் கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15791

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த ஒருதொகுதி காணி விடுவிப்பு.!

 

 

இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட இருந்த இந்தகட்டடத்தொகுதி இறுதி நேரத்தில் ஜனாதிபதி வருகைதராததன் காரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனினால் திறந்துவைக்கப்பட்டது. 

mullai__5_.jpg

இந்நிகழ்வில் முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 243 ஏக்கர் காணி  முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதியால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் பவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. இந்த காணிகளுக்கான அனுமதிகள் பயனாளிகளுக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதோடு காணி அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்கப்பெறாத முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளை தேர்ந்த 1,350 பேருக்குச் சொந்தமான காணி அனுமதிப்பத்திரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது. 

mullai__13_.jpg

300 பேருக்கான தலா ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

mullai__16_.jpg

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்
ஜனாதிபதிக்கு பதிலாக சித்தார்த்தன் எம்.பியால் திறக்கப்பட்ட கட்டடம்
ஜனாதிபதிக்கு பதிலாக சித்தார்த்தன் எம்.பியால் திறக்கப்பட்ட கட்டடம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட கட்டட தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் த சித்தார்த்தனினால் திறந்துவைக்கப்பட்டது.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  திறந்து வைக்க இருந்த கட்டடத் தொகுதி இறுதி நேரத்தில் ஜனாதிபதி வருகை தராததன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனினால் திறந்து வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 243 ஏக்கர் காணி, முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதியால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. 
 
இந்த காணிகளுக்கான அனுமதிகள் பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதோடு காணி அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்கப்பெறாத முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 1,350 பேருக்குச் சொந்தமான காணி அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன . 
 
முந்நூறு பேருக்கான தலா ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிட த்தக்கது. 
 
இந்நிகழ்வில் வடமாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் க சிவநேசன், ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முல்லைத்தீவு இராணுவ கட்டளை தளபதி, மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 
1625660510Mullai.jpg
 

http://www.onlineuthayan.com/news/23103

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.