Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உத்தரவு

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உத்தரவு

 

இலங்கை கடற்படையினர் கைப்பற்றிய தமிழக மீனவர்களின் 120 படகுகளை மீட்க இரண்டு மாதங்களில் நடவடிக்கை எடுக்க, இந்திய மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 

தமிழர் தேசிய முன்னணியின் மாநில இளைஞரணிச் செயலர் க.திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், இராமநாதபுரம், இராமேசுவரம், எஸ்.பி.பட்டணம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 120 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் கையகப்படுத்தி உள்ளனர். 

அவற்றில் 80 படகுகள் இராமேசுவரம் மீனவர்களுடையதாகும். ஒவ்வொரு படகும் பல இலட்ச ரூபாய் மதிப்புடையவை. எனவே இலங்கை கடற்படையினர் கைப்பற்றிய 120 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனவர்களின் படகுகளை மீட்பது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் மனு அளித்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தலைமைச் செயலர் அனுப்பிய மனு தொடர்பாக, இந்திய மத்திய வெளியுறவுத் துறை செயலர் இரண்டு மாதங்களில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.