Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோரை எங்கு சென்று தேடுவது அமைச்சரவை பேச்சாளர் கேள்வி

Featured Replies

காணாமல் போனோரை எங்கு சென்று தேடு­வது

01-ace6f96ee8bf446cbc6ac0719e19cf4f2544907d.jpg

 

அமைச்­ச­ரவை பேச்­சாளர் கேள்வி
 (ரொபட் அன்­டனி)

காணாமல்போன­வர்­களை எங்கு சென்று  தேடு­வது? காணாமல்போன­வர்கள் தொடரபில் உள்ள ஒரே தீர்வு அவர்கள் குறித்து தேடிப்­பார்ப்­ப­தாகும். ஒரு சில நாட்­களில் இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யாது. காணாமல்போன­வர்­களை தேடவும் முடி­யாது. அனை­வரும் இறந்­து­விட்­ட­தாக சான்­றிதழ் வழங்­கவும் முடி­யாது என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ண தெரி­வித்தார்.  

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பின் பின்னர் தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்­த போது

எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அதா­வது வவு­னி­யாவில் காணாமல் போனோரின் உற­வி­னர்கள் காணாமல் போன தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை மீட்டுத் தரு­மாறு கோரி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளமை குறித்து தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

காணாமல் போன­வர்­களை எங்கு சென்று தேடு­வது? காணாமல் போன­வர்கள் தொடர்பில் உள்ள ஒரே தீர்வு அவர்கள் குறித்து தேடிப்­பார்ப்­ப­தாகும். ஆனால் தேட­வேண்டும் என்­ப­தற்­காக வித்­தி­யா­ச­மாக ஒன்றும் செய்ய முடி­யாது.

காணாமல் போனோர் குறித்து பல முறைப்­பா­டுகள் உள்­ளன. அவற்றில் தேட முடி­யு­மா­னவை தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டலாம். ஏனை­யவை குறித்து ஒன்றும் கூறவோ செய்­யவோ முடி­யாது.

1971 ஆம் ஆண்­டி­லி­ருந்து காணாமல் போன சம்­ப­வங்கள் உள்­ளன. அந்த நேரத்தில் காணாமல் போன­வர்­க­ளுக்கும் இன்னும் சான்­றிதழ் வழங்­கப்­ப­ட­வில்லை. அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டும் நாட்டில் ஒரு புரட்சி நடை­பெற்­றது. அதில் காணாமல் போன­வர்­க­ளுக்கும் சான்­றிதழ் வழங்­கப்­ப­ட­வில்லை.

இதன்­போது காணாமல் போன­வர்கள் தொடர்பில் மரண சான்­றிதழ் வழங்­கு­மாறு கோரப்­ப­டு­கின்­றது. ஆனால் அவ்­வாறு வழங்க முடி­யாது. அதற்­கான முறைமை இலங்­கையில் இல்லை. அவ்­வா­றான முறை செய்­யப்­ப­ட­வில்லை.

எனவே இது தொடர்­பான முறைமை ஒன்று குறித்து ஆராய்ந்­து­வ­ரு­கின்றோம். அதா­வது 1971 ஆம் ஆண்­டி­லி­ருந்து காணாமல் போன­வர்கள் தொடர்பில் என்ன செய்­யலாம் என்று தேடி­வ­ரு­கின்றோம். அது குறித்து ஆராய்ந்­து­வ­ரு­கின்றோம்.

ஆனால் ஒரு சில நாட்­களில் இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யாது. காணாமல் போன­வர்­களை தேடவும் முடி­யாது. அனை­வரும் இறந்­து­விட்­ட­தாக சான்­றிதழ் வழங்­கவும் முடி­யாது.

இதற்கு சிறந்த உதா­ரணம் ஒன்றை பார்க்­கலாம். அதா­வது 1988 இறந்­து­விட்­ட­தாக கரு­தப்­பட்ட ஒருவர் தற்போது உயிருடன் வந்துள்ளார். அவருக்கு மரண சான்றிதழ் வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? அப்படியானால் அவரை மீண்டும் பிறக்க வைக்க பிறப்பு சான்றிதழ் கொடுக்கவேண்டியேற்பட்டிருக்கும். அதுதான் பிரச்சினையாகும் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.