Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோரின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கவேண்டும்

Featured Replies

காணா­மல் ­போ­னோரின் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு வழங்­க­வேண்டும்

 

 போர்க்­குற்றம் குறித்தும் விசா­ரணை அவ­சியம்  என்­கிறார் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன்
(எம்.நியூட்டன்)

 காணா­மல் ­போ­னோரின் பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வை வழங்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். இதே­போன்று யுத்தக் குற் றம் தொடர்­பா­கவும் உரிய விசா­ரணை நடத்­

தப்­ப­ட­வேண்டும் என்று சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

யாழ்ப்­பாணம் செய­ல­கத்தில் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சின் யாழ். பிராந்­திய கொன்­சி­யூலர் அலு­வ­லக திறப்­பு­விழா நேற்று நடை­பெற்­றது. வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உட்­பட அமைச்­சர்கள் எம்.பி.க்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் கலந்­து­கொண்ட இந்த நிகழ்வில் சிறப்பு அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இரா­ஜாங்க அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.  

 இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:- காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் வவு­னி­யாவில் சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர். காணா­மல்­போன தமது கண­வன்­மா­ரையும் பிள்­ளை­க­ளையும் அவர்கள் தேடி வரு­கின்­றனர். கண­வன்மார் காணாமல் போயுள்ள பெண்கள் தாம் அணிந்­தி­ருக்கும் தாலியை கழற்­று­வதா இல்­லையா என்று தெரி­யாத நிலை­யிலும் பொட்­டினை வைப்­பதா அல்­லது கழற்­று­வதா என்று தெரி­யாத நிலை­யிலும் ஏங்கித் தவித்து வரு­கின்­றனர்.

 எனவே இவ்­வாறு தமது உற­வு­களை தொலைத்­து­விட்டு ஏங்கித் தவிக்கும் மக்­க­ளுக்கு அர­சாங்­க­மா­னது நிரந்­தரத் தீர்­வினை வழங்­க­வேண்டும்.

 தற்­போ­தைய நிலையில் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது போர்க்­குற்றம் குறித்த பாரிய பிரச்­சி­னை­யையும் எதிர்­நோக்கி வரு­கின்­றது. யுத்தம் இடம்­பெற்று ஏழு வரு­டங்கள் பூர்த்தி அடைந்­துள்ள நிலை­யிலும் போர்க்­குற்ற விசா­ர­ணை­யா­னது இன்­னமும் முடி­வ­டை­ய­வில்லை. வடக்கு, கிழக்கு மற்றும் மலை­யக மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் முயற்சி எடுத்து வரு­வதைப் போன்றே போர்க்­குற்ற விசா­ர­ணை­யையும் நடத்த வேண்டும்.

  இன்­றைய தினம் வெளி­வி­வ­கார அமைச்சின் பிராந்­திய கொன்­ஷி­யூலர் அலு­வ­லகம் யாழ்ப்­பா­ணத்தில் திறந்­து­வைக்­கப்­பட்­டமை இப்­ப­குதி மக்­க­ளுக்கு வரப்­பி­ர­சா­த­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. இவ்­வா­றான அலு­வ­லகம் 20 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வட­ப­கு­தியில் திறக்­கப்­பட்­டி­ருந்தால் யுத்த சூழல் ஏற்­பட்­டி­ருக்­காது. நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வரு­கின்­றது. அதன் ஒரு கட்­ட­மாக இந்த அலு­வ­லகம் திறக்­கப்­பட்­ட­மைக்­காக யாழ். மக்­களின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்­ச­ருக்கு நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.

 வெளி­வி­வ­கார அமைச்சின் சேவை­களைப் பெறு­வ­தற்­காக கடந்த காலங்­களில் கொழும்பு சென்ற தமிழ், இளைஞர், யுவ­திகள் கைது­செய்­யப்­பட்டு சிறை­களில் அடைக்­கப்­பட்­டனர். கடந்த அர­சாங்கம் அம்­பாந்­தோட்­டையில் துறை­மு­கத்தை அமைத்­ததே தவிர இவ்­வா­றான அலு­வ­ல­கங்­களை வடக்கு, கிழக்கில் திறக்­க­வில்லை.

 யுத்­த­கா­லத்­தின்­போதும் அதன் பின்­னரும் வடக்­கி­லி­ருந்து கொழும்பு செல்­வ­தற்கு மக்கள் பெரும் கஷ்­டப்­பட்­டனர். மூன்­று­நேர உண­வுக்கு கஷ்­டப்­படும் நிலையில் கூட தேவை­களின் நிமித்தம் கொழும்பு செல்­ல­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. தற்­போது 15 இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட எமது உற­வுகள் புலம்­பெ­யர்ந்து வாழ்ந்து வரு­கின்­றனர். இத்­த­கை­ய­வர்­க­ளுக்கு உற­வுப்­பா­ல­மாக இந்தப் பிராந்­திய அலு­வ­லகம் அமைந்­துள்­ளமை வரப்­பி­ர­சா­த­மாகும்.

 வெளி­நா­டு­களில் உற­வினர் ஒருவர் இறந்தால் அவ­ரது பூத­வு­டலை இங்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு எவ்­வ­ளவு பணம் இருந்­தாலும் பல அலு­வ­ல­கங்­க­ளுக்கு ஏறி இறங்­க­வேண்­டிய நிலை காணப்­பட்­டது. ஆனால் இந்த அலு­வ­லகம் தற்­போது திறக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் எமது சொந்த மொழி­யி­லேயே சேவை­களைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இன்­றைய தினம் இந்த நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்­பட்­டது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கடந்த சுதந்­திரத் தினத்தின் போதும் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்­பட்­டி­ருந்­தது.

 நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பாட்டில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர பாடு­பட்­டு­வ­ரு­கின்றார். வெளி­நா­டு­க­ளுக்கு சென்றும் அவர் இத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்றார். அன்று தமிழ் அமைச்சர் ஒருவர் வெளி­வி­வ­கா­ரத்­திற்கு பொறுப்­பாக இருந்த போதிலும் வட­மா­கா­ணத்தில் இத்­த­கைய அலு­வ­லகம் திறக்­கப்­ப­ட­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஆட்சி க்கு வரு­வ­தற்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை ஆட்­சியில் அமர்ந்­து­வ­தற்கும் மங்­கள சம­ர­வீ­ரவே மும்­மு­ர­மாக செயற்­பட்டார். இதே­போன்று தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றிக்­கா­கவும் 24 மணி­நே­ரமும் அவர் பாடு­பட்டார். கட்­சிக்குள் எத்­த­னையோ பிரச்­சி­னை­களை சந்­தித்த போதிலும் அவர் சளைக்­காது தனது பணியில் ஈடு­பட்­டி­ருந்தார். இதே­போன்றே அமைச்சர் ராஜித சேனா­ரட்­னவும் நல்­லாட்சி அரசாங்கத்தின் வெற்றிக்காக உழைத்திருந்தார்.

 வெளிநாடுகளில் வாழும் 15 இலட்சம் தமிழ் மக்களை எம்முடன் இணைக்கும் பணியை இந்த அலுவலகம் மேற்கொள்ளவுள்ளது. மரண,பிறப்பு, திருமண சான்றிதழ்களை உறுதிப்படுத்தும் பணியிலும் இந்த அலுவலகம் ஈடுபடும். வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இந்திய, மற்றும் சுவிர்சர்லாந்து துணைத்தூதரகங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளின் துணைத்தூதரகங்களை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முழுமுயற்சி எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.