Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுக-வின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரன் நியமனம்!

Featured Replies

அதிமுக-வின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரன் நியமனம்!

TTV Dinakaran

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி தினகரன் அ.தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Sasikala wirth dianakaran

நேற்று, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பால், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் சசிகலா அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை, சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி தினகரன் மற்றும் டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்க்கப்பட்டுள்ளதாக 'நமது எம்ஜிஆர்' நாளிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

'டி.டி.வி. தினகரன் மற்றும் டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்புக் கோரி, தங்களை  மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டதால், இன்று முதல் உறுப்பினர்களாகக் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.' என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/80861-is-ttv-dinakaran-to-be-next-deputy-general-secretary-of-admk.html

  • தொடங்கியவர்

அதிமுக துணை பொதுச் செயலர் தினகரன் நியமன பின்னணி

 

 
 
ttv_dinakaran_3133243f.jpg
 
 
 

அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன்தான் டிடிவி.தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கட்சியின் துணை பொதுச் செயலாளராக டிடிவி.தினகரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கட்சியினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கப்பட்டார். இந்நிலையில் டி.டி.வி.தினகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, நேற்றைய தேதியில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த டிடிவி.தினகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி தங்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டதால், இன்று முதல் உறுப்பினர்களாகக் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கட்சியில் சேர்க்கப்பட்ட உடனேயே அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

நியமனத்தின் பின்னணி?

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து சசிகலா உள்ளிட்டோர் விரைவில் சிறை செல்கின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பின் அதிர்வலைகளுடன் அதிமுகவில் உட்கட்சி பூசலும் வலுத்துவரும் நிலையில் டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருசில மணி நேரங்களிலேயே கட்சியின் முக்கியப் பொறுப்பு தினகரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சமீப காலத்தில் அதிமுகவில் துணைப் பொதுச் செயலாளர் என்ற ஒரு பொறுப்பு இல்லாதிருந்த நிலையில் தினகரனுக்காக துணைப் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது. சசிகலா சிறை செல்வதால் அவர் சிறையிலிருந்தாலும் கட்சி மீது கட்டுப்பாட்டை செலுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது உறவினருக்கு அவசர அவசரமாக இப்பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையத்திலுள்ள புகார் காரணமா?

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் 29-ம் தேதி சசிகலா அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளரை பொதுக்குழுவில் தேர்வு செய்ய முடியாது முறைப்பட்டி அதிமுக தொண்டர்களிடம் தேர்தல் நடத்தியே தேர்வு செய்ய வேண்டும், தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவி செல்லாது என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதபட்டிருக்கிறது. இந்தப் புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா இழக்க நேரிடலாம், எனவே அத்தகைய சூழலில் கட்சியின் மீது பிடி தளர்ந்துவிடாமல் இருக்கவே இத்தகைய அவசர முடிவை சசிகலா எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்சியில் இல்லாவிட்டாலும் முக்கியத்துவம்..

டிடிவி தினகரன் கட்சியில் இல்லாவிட்டாலும், கடந்த 9-ம் தேதி சசிகலா ஆளுநரை சந்திக்கச் சென்றபோது நேற்று (14-ம் தேதி) எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திக்கச் சென்றபோதும் அவர்களுடன் இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர் சசிகலாவுடன் போயஸ் தோட்ட இல்லத்தில்தான் இருந்து வருகிறர். கடந்த 7-ம் தேதி, மெரினாவில் ஜெ. சமாதியில் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக வேண்டும் என தினகரன் விரும்புவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தன்னிடம் கூறினார்" என மேற்கோள் காட்டி கட்சியில் சசிகலா குடும்பம் ஆதிக்கம் செலுத்துவாக குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/அதிமுக-துணை-பொதுச்-செயலர்-தினகரன்-நியமன-பின்னணி/article9544127.ece?homepage=true

  • தொடங்கியவர்

‘டி.டி.வி தினகரன் ஏன் முன்னிறுத்தப்படுகிறார்?’ - எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலங்கிய சசிகலா

டி.டி.வி.தினகரன்-சசிகலா

'கூண்டில் இருந்தாலும் அ.தி.மு.கவை வழிநடத்துவேன்' என அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மத்தியில் உருகினார் சசிகலா. 'கசப்பை மறப்போம்' என எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். 'இப்படியொரு தீர்ப்பை சசிகலா எதிர்பார்க்கவில்லை. கட்சியை வழிநடத்த டி.டி.வி தினகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அதிகாரங்கள் வழங்குவது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

அ.தி.மு.க சட்டசபைத் தலைவராக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. நேற்று மாலை ஆளுநரை சந்தித்து, ஆட்சிமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தார். ஆளுநர் மாளிகையில் இருந்து இதுவரையில் எந்த அழைப்பும் வரவில்லை. " உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வேறு கோணத்தில் எதிர்பார்த்திருந்தார் சசிகலா. 'இரண்டு நீதிபதிகளும் ஆளுக்கொரு கருத்தை வெளியிட்டால், சிறைக்குச் செல்வதில் இருந்து கால அவகாசம் கிடைக்கும்' என நம்பினார். கழக வழக்கறிஞர்களும் அவருக்கு நம்பிக்கை கொடுத்திருந்தனர். 'நான்கு ஆண்டு சிறை உறுதி' என்ற தகவல் வந்ததும், அவர் முகம் மாறிவிட்டது. எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் கலங்கினார். அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பியிருந்தார். சரண்டர் ஆவதில் இருந்து நான்கு வார கால அவகாசம் கேட்டு இன்று காலை கர்நாடக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விண்ணப்பத்திருந்தார். அவரது கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. நேற்று விடிய விடிய நடந்த ஆலோசனையில் டி.டி.வி.தினகரனுக்குப் புதிய வழங்குவது குறித்து ஆலோசித்தார். 'அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்வதாக' நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டிருந்தார் சசிகலா. தற்போது துணைப் பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுவிட்டார் டி.டி.வி தினகரன்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

பன்னீர்செல்வம்"சசிகலா குடும்பத்திலேயே டி.டி.வியை முன்னிலைப்படுத்துவதில் திவாகரன் உள்ளிட்டவர்கள் விரும்பவில்லை. 'அவருடைய ஆதிக்கம் தலைதூக்குகிறது. அமலாக்கப் பிரிவு வழக்கையும் எதிர்கொண்டு வருகிறார். சிங்கப்பூர் சிட்டிசன் என நீதிமன்றத்திலேயே தெரிவித்தவர். அவரை முன்னிறுத்துவதால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்' எனக் கடந்த சில வாரங்களாக சசிகலாவிடம் புகார் சொல்லிய வண்ணம் இருந்தனர். இந்தக் கருத்துக்களையெல்லாம் புறக்கணித்த சசிகலா, போயஸ் கார்டனில் நடந்த அனைத்து ஆலோசனைகளிலும் டி.டி.வியை முன்னிறுத்தினார். பொதுச் செயலாளராக பதவியேற்ற நாளில், நிகழ்த்திய உரையை முழுக்கத் தயாரித்தது டி.டி.வியின் ஆட்கள்தான். சசிகலாவுக்கான உடையை வடிவமைத்தது தினகரனின் மனைவி அனுராதாதான். ஆளுநரை சந்திக்கச் சென்றபோதும், தினகரனையே அழைத்துச் சென்றார் சசிகலா. கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவருக்கு உள்ள 'ஜென்டில்மேன்' இமேஜ்தான் காரணம்.

சசிகலா குடும்பத்தில் உள்ளவர்களில் நான்கு பேருக்கு ஜெயலலிதா பதவி கொடுத்தார். அவர்கள் நடந்து கொண்ட விதத்திற்கும் தினகரன் நடந்து கொண்ட விதத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தன. அதனால்தான், கட்சி பொருளாளர், ஜெயலலிதா பேரவை செயலாளர், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் என நான்கு பதவிகளை அவருக்கு வழங்கினார் ஜெயலலிதா. தென் மாவட்டம் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் ஒருகாலத்தில் டி.டி.வியைக் கண்டால் பயம் கலந்த மரியாதையோடு வணங்கினார்கள். 2009-ம் ஆண்டு வரையில் கட்சிப் பதவி அவரிடம் இருந்தது. 2011 டிசம்பர் 19 அன்று சசிகலாவை நீக்கிய அன்றே, தினகரன் உள்பட குடும்ப உறவுகள் அனைவரையும் நீக்கினார் ஜெயலலிதா. கூடவே, நடராசன், திவாகரன், டாக்டர்.வெங்கடேஷ், மிடாஸ் மோகன், இராவணன் உள்பட அனைவர் மீதும் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தார் ஜெயலிலதா. அந்த நேரத்தில்கூட தினகரன் மீது எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம், ஜெயலலிதாவின் கோபத்தைப் புரிந்து கொண்டு ஒதுங்கியே இருந்தார். எந்த அதிரடியிலும் இறங்க மாட்டார். இதுவரையில் கட்சிக்காரர்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு அவர் நடந்து கொண்டதில்லை. 'அவரை தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும்'  என்ற முடிவுக்கு வந்தார் சசிகலா" என்றார் விரிவாக. 

எடப்பாடி பழனிச்சாமி"ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தபோது கூறிய வார்த்தைகள் மிக முக்கியமானது. 'போயஸ் கார்டனில் இருந்தவர்கள் என்னை நிர்பந்ததித்து ராஜினாமா செய்ய வைத்தார்கள்' என்றவர், அப்போது அருகில் இருந்தவர்களைப் பற்றிச் சொல்லும்போது, 'மூத்த அமைச்சர்கள் இருந்தார்கள்; வெங்கடேஷ் இருந்தார்; டி.டி.வி.தினகரன் சார் இருந்தார்' என விவரித்தார். சசிகலாவுக்கு எதிராக முழு எதிர்ப்பு நிலை எடுத்தபோதும், தினகரனை 'சார்' என்றுதான் அழைத்தார் பன்னீர்செல்வம். அந்தளவுக்கு அவர் மீது மரியாதை வைத்திருக்கிறார். நேற்று முன்தினம், 'கூவத்தூருக்கு பன்னீர்செல்வம் வர இருக்கிறார்' என்ற தகவலைக் கேள்விப்பட்டு, சசிகலாவும் அங்கு கிளம்பினார். அப்போது பேசிய தினகரன், ' நான் ஓ.பி.எஸ்ஸிடம் பேசட்டுமா? அவரை யார் இயக்கினால் என்ன? நான் போய் நின்றால், அவரால் எதுவும் பேச முடியாது' என விளக்கினார்.

பதவியை ராஜினாமா செய்யுமாறு கார்டனில் பன்னீர்செல்வம் நிர்பந்திக்கப்பட்ட அன்றும், அவரது கையைப் பிடித்துக் கொண்டு, 'உங்களை இவ்வளவு பெரிய இடத்துக்குக் கொண்டு வந்தேன். ராஜினாமா செய்ய மாட்டேன் எனச் சொல்லலாமா?' எனக் கெஞ்சினார் டி.டி.வி. தற்போதுள்ள சூழலில், பன்னீர்செல்வத்திற்கு எதிராக தினகரனை முன்னிறுத்துவதே, 'கட்சியின் பிடியை நழுவவிடாமல் பாதுகாக்கும்' என சசிகலா உறவுகள் நம்புகின்றனர். அடுத்ததாக, 'எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் அழைப்பார்' என நம்புகின்றனர். 'ஒருவேளை ஓ.பி.எஸ் அழைக்கப்பட்டாலும், அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆட்சி அதிகாரத்திற்குள் வந்த பிறகு, தினகரனை தலைமைப் பதவிக்குக் கொண்டு வரலாம்' எனவும் கணக்குப் போடுகிறார் சசிகலா" என விவரிக்கின்றனர் தலைமைக் கழக நிர்வாகிகள். 

டி.டி.வி தினகரன் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் நெருக்கிக் கொண்டே வருகின்றன. இன்று பெங்களுரூ சிறைக்கு கார் வழியாகவே பயணப்பட இருக்கிறார் சசிகலா. 'கட்சியை கட்டுக்கோப்பாகக் கொண்டு செல்வது சாத்தியம்தானா?' என்ற கேள்விகளும் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. முதல்வர் பதவிக்கு தினகரனால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வம், தற்போது அவரை நேருக்கு நேராக எதிர்க்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். 'தந்தையின் இறப்புக்கே மகனை அனுப்பாத இந்தக் கட்சியில், இதெல்லாம் ஒரு விஷயமா?' என்ற விவாதங்களும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/80873-this-is-why-ttv-dhinakaran-was-announced-as-admks-deputy-general-secretary---sasikala.html

  • தொடங்கியவர்
தினகரனுக்கு கட்சி; 6 மாதத்தில் திவாகரன்
கையில் ஆட்சி : இறுதியாக கார்டனில்
சசிகலா வகுத்த திட்டம் அம்பலம்
 
 
 

அ.தி.மு.க.,வை நிர்வகிக்கும் பொறுப்பு தினகரனுக்கும், அடுத்த ஆறு மாதத்தில் திவாகரனை முதல்வராக்கவும் திட்டம் வகுத்து கொடுத்து, சசிகலா போயஸ் கார்டனில் இருந்து சிறைக்கு கிளம்பியுள்ளார்.

 

Tamil_News_large_171137520170215232207_318_219.jpg

ஜெ., மறைவுக்குப் பின், கட்சி, ஆட்சி, ஜெ., சொத்து என அனைத்தையும் வளைத்தது மன்னார்குடி கும்பல். சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த, 7 இரவு, ஓ.பி.எஸ்., தனியாக பிரிந்து, சசிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

இருப்பினும், அன்று இரவே, அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை கார்டனுக்கு வரவழைத்து, கூவத்துாரில் அடைத்தனர். தப்பிய, 10 எம்.எல்.ஏ.,க்கள் மட்டும், ஓ.பி.எஸ்., பக்கம் சென்றனர்.

சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு பாதகமாக வந்தால் என்ன செய்வது என, கடந்த ஒரு வாரமாக பல திட்டங்களை வகுத்தனர். முதல்வர் பதவியில் சசிகலாவுக்கு பதில் தினகரன் அல்லது திவாகரனை அமர வைக்க ஆலோசித்தபோது, மக்களிடம் மேலும் எதிர்ப்பு வரும் என்பதால், எடப்பாடி பழனிச்சாமியையும் தேர்வு செய்தனர்.

நேற்று முன்தினம் வந்த தீர்ப்பில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், குடும்ப அளவில் சசிகலா, நடராஜன், தினகரன், திவாகரன் உள்ளிட்டோர் ஆலோசித்தனர். அதில், மக்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் பெரிய அளவில் புகார் இல்லாத மற்றும் அறிமுகமான தினகரனை, கட்சியின் துணைப் பொதுச் செயலராக ஆக்கி கட்சி பணியை கட்டுக்குள் வைப்பது என்றும் முடிவானது.

கூடவே, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் முதற்கட்டமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சியை அமைத்து, அரசின்

பாதுகாப்புடன், திவாகரனை ஏதாவது ஒரு தொகுதி யில் போட்டியிட செய்து, அடுத்த, ஆறு மாதத்துக் குள் முதல்வராக்குவது என்றும் முடிவெடுக்கப் பட்டது.

பொதுமக்கள், கட்சி, ஆட்சி என அனைத்து தரப்பினராலும் ஏற்கப்படாத சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, இந்த திட்டத்தில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. அவர் எந்த பொறுப்புக்கு வந்தாலும், அதை எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதை விளக்கி, கட்சி மற்றும் ஆட்சியில் நடராஜன் கூறும் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், ஒப்புதல்தெரிவிக்கப்பட்டது.

ஓ.பி.எஸ்., - எடப்பாடி பழனிச்சாமி போன்ற வெளி நபர்களை முதல்வராக்குவது, மதுசூதனன் போன்றவர்களை அவைத் தலைவராக்குவதால் எழும் சிக்கலை தவிர்க்க, மன்னார்குடி குடும்பத்தை சேர்ந்த ஒருவரை, இதுபோன்ற முக்கிய பதவிகளில் நியமிப்பது என்றும், தற்போதைய சிறை தண்டனை காலத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலாவே தொடர்வது என்றும் தீர்மானித்தனர்.

எந்த பதவியும் இல்லாமல், சிறையில் இருப்பது பாதுகாப்பு இல்லை என்றும், கூடுதல் வசதிகள் கூட கிடைக்காது என்றும் விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் முதல் கட்டமாக, ஜெயலலிதாவால் அடித்து விரட்டப்பட்ட தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் சேர்க்கப்பட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் தினகரன், கட்சியின் துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டார். ஆலோசனையின் போது கூறப்பட்ட முடிவுகளை, திட்டமாக வகுத்து கொடுத்து விட்டு தான், சசிகலா பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார்.
 

அன்னிய செலாவணி வழக்கில் தண்டிக்கப்பட்ட தினகரன்


இந்திய ரூபாய் மதிப்பில், 36 கோடி ரூபாயை, அமெரிக்க டாலராக, 1.04 கோடியை அங்கீகாரம் இல்லாத ஏஜன்ட் மூலம் பெற்று, இங்கிலாந்தில் உள்ள, 'பார்க்லேஸ்' வங்கியில் தினகரன் டிபாசிட் செய்துள்ளார்.

அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டப்படி, 1996ல் தினகரன் மீது வழக்கு பதிவாகி, 1998ல் அவருக்கு, 31 கோடி ரூபாய் அபராதம்விதிக்கப் பட்டது.இதை எதிர்த்து, டில்லி அன்னிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் முறையீடு செய்து, 28 கோடி ரூபாயாக அபராத குறைப்பு பெற்றார்.

இத்தொகையை, 45 நாளில் கட்ட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், இதை மேல்முறையீடு செய்தார். உயர்நீதிமன்றம் இந்த அபராத தொகையை

 

உறுதி செய்துள்ளது. இதையும் மேல்முறை யீடு செய்யும் முயற்சியில் தினகரன் உள்ளார்.
 

பரம எதிரிகளான தினகரன் - திவாகரன்


சசிகலாவின் தம்பியான திவாகரனும், சசிகலா வின் அக்கா வனிதாமணியின் மூத்த மகனான தினகரனும், ஜெ.,யின் நம்பிக்கையை பெற்ற வர்கள். மிகவும் முரட்டு குணம் கொண்ட திவாகரன், 1998 முதல் கார்டனுக்குள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டார்.

ஆனால், கட்சியினருடன் இணக்கமாக செயல் படுவதால், தினகரனை, 1999ல் பெரியகுளம் லோக்சபா தொகுதியில், ஜெ., நிறுத்தி வெற்றி பெற செய்தார். 2004ல் அதே தொகுதியில் தினகரன் தோல்வியடைந்தாலும், ராஜ்யசபா, எம்.பி., பதவி கொடுக்கப்பட்டு, டில்லி அரசியலை தினகரன் கவனித்தார்.

ஆனால், 2006 முதல் தினகரனும் கார்டனுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு, 2011ல் சசிகலா கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, தினகரனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, முற்றிலும் வெளியேற்றப்பட்டார். இருப்பினும், இவரது மனைவி அனு, ஜெயா, 'டிவி' இயக்குன ராக கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறார்.

ஆரம்ப காலம் முதல், தினகரன் மற்றும் திவாகரனுக்கு இடையே எப்போதும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கும். சிறிய விஷயத் துக்கு கூட அடிக்கடி மோதிக்கொள்வது வழக் கம். தினகரனுக்கு, எம்.பி., பதவி கொடுத்தது முதல், அத்தனை செயல்பாட்டிலும் சசிகலா விடம், திவாகரன் எதிர்த்து வந்தார்.

இந்நிலையில், கட்சியை தினகரனிடமும், ஆட்சியை திவாகரனிடமும் வழங்க சசிகலா திட்டமிட்டுள்ளதால், அவர்களே மோதி உடைவர் என கட்சியினர் கூறுகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711375

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.