Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸில் தமிழர் வார விழா

Featured Replies

சுவிஸில் தமிழர் வார விழா

58283541.MadrasKalakshetrabarat30.jpg

2007 ஜுன் மாதம்

சுவிஸ் பாசல் நகரில்

தமிழர் வாரம் ஒன்றை நடத்த

சுவிஸ் கலாச்சார அமைச்சுடன் கூடிய உதவி நிறுவனம் வழி

நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதில் தமிழர் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள்

இடம் பெற உள்ளன.

இதில் 3 பகுதிகளின் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவை

1. தமிழ் சினிமா மாலை

2.புகைப்படக் கண்காட்சி (முழு வாரமும்)

3.புலம் பெயர் படைப்பாளிகளின் நூல் அறிமுகம்

இதில்

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்

புகைப்படங்களை உங்களால் அனுப்ப முடிந்தால்

தேர்வு செய்யப்படும் புகைப்படங்களுக்கு ஒரு பரிசு தொகையை பெற்றுத் தர முடியும்.

அதற்கான கருத்தை அவர்களிடம் முன் வைத்திருக்கிறேன்.

பதில் அடுத்த சில வாரங்களுக்குள் தெரிந்துவிடும்.

முழு விபரம் விரைவில் தருகிறேன்.

தமிழர் வார விழாவில்

இசை - நடனம் - நூல் - புகைப்படம் - தமிழ் கோயில்கள் - சினிமா - நாடகம் - நகர அறிமுகம் ஆகியவை இடம் பெற உள்ளன.

தொடர்புகளுக்கு:

info@ajeevan.com

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வாரவிழா வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்.

1. தமிழ் சினிமா மாலை

2.புகைப்படக் கண்காட்சி (முழு வாரமும்)

3.புலம் பெயர் படைப்பாளிகளின் நூல் அறிமுகம்

இவைபற்றிய மேலதிக விபரங்களை அறியத்தாங்க அஜீவன்.

  • தொடங்கியவர்

வணக்கம் அஐPவன்.முதலில் தமிழர் வாரவிழா வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்.மற்றும் உங்களுக்கு கிடைத்த பொறுப்பிலும் எல்லோரும் ஆஆஆ வென்று திறந்த வாய் மூடாமல் பார்க்க வைப்பீர்கள் என எண்ணுகிறேன்.வாழ்த்துக்கள்.

எப்படியான படம்களை எதிர்பார்க்கிறீர்கள்.இதற்கு குளக்காட்டானுடன் தொடர்பு கொண்டால் நல்லது.

தமிழர் கலாச்சாரம் என்ன என்பதை

நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

தமிழர் வாழ்கை முறைகள் குறித்த புகைப்படங்களாக இருக்கலாம்.

அவை போஸ்டர் அளவில் பெரிதாக்கக் கூடிய தரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

படங்களை ஒரு குழு தேர்வு செய்யும்.

வன்முறை கலந்த புகைப்படங்களை தவிர்க்க வேண்டியுள்ளது.

காரணம் சிறு குழந்தைகள் இங்கு கலந்து கொள்வதாலும்

முதல் நாள் தொடக்கம் இறுதி நாள் வரை புகைப்பட கண்காட்சி நடைபெறுவதாலும் கவனமாக படங்கள் தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்பது சந்திப்புகளில் பேசப்பட்டது.

தமிழர் குறித்த தகவல்களோடு படங்களை காட்சிக்கு வைப்பது எனது கருத்தாக இருக்கிறது.

புகைப்படங்களில் கோயில்கள்

மக்களின் வாழ்வு முறைகள்........

ஓவியங்கள் போன்றவை கூட இணைக்க விருப்பம்.

உதாரணத்துக்கு:

2006090719290301.jpg

tamil.jpg

s0231.jpg

c25cf28acf4549548a1a7af36ce00d.jpg

இவற்றை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரையறை செய்வதை விட

கிடைக்கும் புகைப்படங்களினின்று தேர்வு செய்யப்படுவதே நல்லதாக இருக்கும்.

தமிழர் வாரவிழா வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்.

1. தமிழ் சினிமா மாலை

2.புகைப்படக் கண்காட்சி (முழு வாரமும்)

3.புலம் பெயர் படைப்பாளிகளின் நூல் அறிமுகம்

இவைபற்றிய மேலதிக விபரங்களை அறியத்தாங்க அஜீவன்.

நன்றி கறுப்பி......

புகைப்பட கண்காட்சி குறித்து ஈழப்பிரியனுக்கு பதில் அளித்துள்ளேன்.

ஏனைய விபரங்களை கூடிய விரைவில் தருகிறேன்.

வாழ்த்துக்கள் அஜீவன்.

1. ஈழத்து சினிமாக்கள் உள்ளடக்கப்படுமா? தேவை ஏற்பட்டால் மீள் பதிவு (மொழி உள்ளடக்கம்) செய்து காண்பிக்கலாமா?

2. புலம்பெயர் வாழ்வில் ஆரம்ப அகதி முகாம் வாழ்வை தயவுசெய்து உள்ளடக்கவும். சுவிஸில் நிறையவே உண்டு.

தங்களின் கலை ஆர்வத்தை பயன்படுத்தி (வெளிநாட்டவர்கள் பார்க்க நினைப்பதை தெரிவுசெய்வதைவிட) எமது மண்ணையும் மக்களையும் பிரதிபலிக்கும் எண்ணக் கருக்களை அவர்களது மனங்களில் பதிவு செய்யும்படி நிகழ்வுகள் இருப்பின் வரலாற்றில் நிலைக்கும்...

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் அஜீவன்.

1. ஈழத்து சினிமாக்கள் உள்ளடக்கப்படுமா? தேவை ஏற்பட்டால் மீள் பதிவு (மொழி உள்ளடக்கம்) செய்து காண்பிக்கலாமா?

2. புலம்பெயர் வாழ்வில் ஆரம்ப அகதி முகாம் வாழ்வை தயவுசெய்து உள்ளடக்கவும். சுவிஸில் நிறையவே உண்டு.

தங்களின் கலை ஆர்வத்தை பயன்படுத்தி (வெளிநாட்டவர்கள் பார்க்க நினைப்பதை தெரிவுசெய்வதைவிட) எமது மண்ணையும் மக்களையும் பிரதிபலிக்கும் எண்ணக் கருக்களை அவர்களது மனங்களில் பதிவு செய்யும்படி நிகழ்வுகள் இருப்பின் வரலாற்றில் நிலைக்கும்...

இவை அனைத்துக்கும் பொறுப்பானவர் நாளை என் வீட்டில் சந்திக்கிறார்.

அப்போது அவரோடு பேச இருக்கிறேன்.

இங்கே உள்ளவர்கள் எம்மைக் கூட கோப்பை கழுவ மட்டுமே லாயக்கு என்று நினைப்பதுண்டு. அதற்கு முக்கிய காரணம் எம்மவரே என்பதை வெளிப்படையாகவே சொல்வேன்.

நாம் ஏதோ ஊரில் மரம் ஏறி தேங்காய் பிடுங்கி சாப்பிட்டவர்கள் என்றா நினைக்கிறாய் என்று நான் அவர்களிடம் கேட்பதுண்டு.

உதாரணத்துக்கு நம்மை காட்டிக் கொடுப்போர் நம்வர் என்பதை சரித்திரம் காட்டுகிறது.

எதுக்கெடுத்தாலும் அரசியலை புகுத்துவதற்கே நாம் எத்தனிக்கிறோம்.

இதுவே நம்மில் பலரால் வெளியே நின்று பேச முடியாத முத்திரை குத்தப்பட்ட

முகங்களாக பலரை தடுத்து நிற்கிறது.

இலங்கைக்கு போன ஒருவர் சுகயீனமாகி வைத்தியசான்றிதழ் கொண்டு வந்து கொடுத்த போது நம்ம இன்னொருத்தர் நிர்வாகியிடம் சொன்னாராம் நான் இங்கிருந்து இதே மாதிரி சான்றிதழ் வாங்கித் தரவா என்று...........

நான் நிர்வாகியிடம் சொன்னேன்.

அங்கு வைத்தியர்கள் முட்டாள் என்றால் நீங்களும் முட்டாள்கள்தான்.

ஆயுர்வேதா பற்றி பேசுகிறர்கள் அதை பின்பற்றுகிறீர்கள் இயற்கை வைத்தியம் என்று அவ்வளவும் ஆசியாவிலிருந்துதான்........

நீ வணங்கும் ஏசுபிரானே ஆசியன்தானே தவிர ஐரோப்பியனோ அமெரிக்கனோ இல்லை என்றேன்.

காட்டிக் கொடுத்தவனையும் நான் விட்டு வைக்கவில்லை.

அவன் சொல்வது உண்மையானால் அவன் பிறப்பு சான்றிதழ் மற்றும் அவனது திருமண சான்றிதழ் கல்வி சான்றிதழ் அனைத்தும் பொய்தான்.

அவனால் அது முடியும் என்றால்

என்னால் எதுவும் முடியும் சொல்வதை எழுத்தில் தர முடியுமா? என்றேன்.

ஏன் காசு கொடுத்து சுவிஸ் பாஸ்போட்டே எடுக்க முடியும்?

என்றேன்...........

இது உண்மை! நடக்கிறது.

கத்தியதில் பதில் மெளனம்.

எனவே நமது தகமைகள் முதலில் வெளிக் கொண்டுவரப் பட வேண்டும்.

ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது

ஒருவனது தகமையை - திறமையைத்தான் பார்க்கிறார்கள்.

இங்கு சாதி மதம் மொழி பார்ப்பதில்லை.

முதலில் நம் தகமைகளை திறமைகளை முன்வைப்போம்.

அது நம்மவர் அங்கீகாரத்துக்காக......

இது எமது எதிர்கால குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய ஒன்று.....

அடுத்து

நமக்கான தடைகள்.......

நமது தேவைகளை முன் வைக்கலாம்........

எல்லாத்துக்குள்ளும் எல்லாரும் நுழைந்து

எல்லாத்தையும் இல்லாமல் பண்ணாமல் இருந்தால்

அதுவே போதும்.......

நன்றி!

  • தொடங்கியவர்

சாதாரணமாக

ஒரு விடயத்தை எழுதினால்

யாழ்கள் முகப்பில் தெரிய வேண்டும்?

இந்த பகுதி வரவே இல்லை. ஏன்? :lol:

  • 2 weeks later...

உதாரணத்துக்கு நம்மை காட்டிக் கொடுப்போர் நம்வர் என்பதை சரித்திரம் காட்டுகிறது.

இது ஈழத்தில் சிங்கள ஆர்மியிடம் காட்டி கொடுப்பதில் இருந்து,

இங்கு புலம் பெயர் நாட்டில் வெள்ளைக்காரரிடம் காட்டிக் கொடுப்பது வரை நம்மவர் தான் கூட. உங்கள் இக் கருத்துக்கள் யதார்த்தமாகவும், உண்மையாகவும் இருக்கின்றன.

ஜூன் மாதம் நடக்கவிருக்கும் இந் நிகழ்ச்சி சிறப்பாக நடபெற எனது வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.