Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடகர் S.G.சாந்தன் அவர்களுக்கு மாமனிதர் பட்டம் வழங்கியது புலிகளல்ல,இலங்கை புலனாய்வாளர்களே! -கழுகுவிழியன்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Mar 2, 2017  932
பாடகர் S.G.சாந்தன் அவர்களுக்கு மாமனிதர் பட்டம் வழங்கியது புலிகளல்ல,இலங்கை புலனாய்வாளர்களே!   -கழுகுவிழியன்-

புலிகளின் பெயரை தாங்கிவந்த போலியான மொட்டை அறிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் அடங்கிய அவர்களால் முன்பு மதிப்பளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட மாமனிதர்களுக்கான மதிப்பளிக்கும் அதிகாரபூர்வ அறிக்கையொன்றை TCCஎனும் புலம்பெயர் கட்டமைப்புக்குள் ஊடுருவியுள்ள இலங்கை புலனாய்வாளர்கள் “பிரதிசெய்து” சில கருத்துமாற்றங்களை ஏற்படுத்தி அதை புலிகளின் பாணியில் ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ளார்கள் என்பது தற்பொழுது நூறுவீதமும் நிரூபணமாகிவிட்டது.

உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட எமது தேசப்பற்றாளர்களுக்கான மதிப்பளிக்கும் தமது சின்னம் தாங்கிய அறிக்கைகளில், அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு “தகுதியானவர்களது முகவரி” அவ் அறிக்கையின் முகப்பிலும், அறிக்கையின் முடிவிடத்தின் கீழ்ப்பகுதியில் அவ்வறிக்கைக்கு பொறுப்புவாய்ந்த பொறுப்பாளரது பெயரும், அவரது பொறுப்பின் நிலையும், தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் என்று குறிப்பிட்டிருப்பதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

ஆனால் 26-02-2017என்று திகதியிடப்பட்டு வந்த புலிகளின் பாணியிலான ஒரு அறிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்’ இதில் “தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே இன்னொரு விடையத்தை குறிப்பிடுகின்றேன். வழமையாக புலிகள் விடும் தமது பிரதான அறிக்கைகள் யாவும் அவர்களின் “தலைமைச் செயலகம்” என்று தலைப்பிட்டே உத்தியோகபூர்வமாக விடப்பட்டு வந்தது’ ஆனால் இந்த அறிக்கையில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் புலம்பெயர் ஊடகங்கள் வாயிலாகவே இந்த அறிக்கை தற்பொழுது தீயாக பரவியுள்ளது.

மேலும் இந்த அறிக்கையை வெளியிட்டவர்களை இனங்காணமுடியாதென்று எவரும் கூறிவிட முடியாது. காரணம் இந்த அறிக்கையை பொறுப்பேற்று தத்தமது ஊடகங்கள் ஊடாக பிரசுரித்த ஊடகங்கள் அனைத்திற்கும் குறிப்பாக புலம்பெயர் ஊடகங்களான “லங்காசிறி,தமிழ்வின்,புதினம்,தமிழருள் போன்ற ஊடகங்களுக்கு இந்த அறிக்கையை யார் பிரசுரிக்கும்படி அனுப்பிவைத்தார்களோ அவர்களை நிச்சயமாக இவ் ஊடகங்களுக்கு ஓரளவேனும் தெரிந்திருக்கும்.

இதையும்விட புலத்திலுள்ள TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவே இந்த அறிக்கைக்கு முழுமையாக தாம் செவிசாய்த்து மறைந்த எமது புரட்சிப் பாடகர் திரு.S.G.சாந்தன் அவர்களுக்கு அவசர அவசரமாக பல புலம்பெயர் நாடுகளிலும் தமது நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்தியும் வருகிறார்கள்.

எனவே இவற்றோடு ஒப்புநோக்குகையில் இந்த போலியான அறிக்கையை புலிகளின் பாணியில் தயாரிப்பதற்கு உந்துசக்தியாக இருந்தவர்கள் TCCஎனும் புலம்பெயர் கட்டமைப்பு என்பதுமட்டும் இங்கே தெளிவாக எமக்கு புலனாகின்றது.

ஏனென்றால் கடந்த 2009ற்கு பின்னர் தாயகத்திலிருந்து புலம்நோக்கிவந்த எமது போராளிகளின் செயற்பாடுகளை இலங்கை புலனாய்வாளர்கள் தாம் தடுப்பதற்கான முயற்சியாகவே, போராளிகள் ஊடாக “தலைமைச் செயலகம்” என்று முகவரியிட்டு அவர்கள் ஊடாக பொறுப்புவாய்ந்த அறிக்கைகள் ஏதும் வருவதற்கு முன்பு அவர்களை முந்திக்கொண்டு பாடகர் திரு.S.G.சாந்தன் அவர்களுக்கு “பொருத்தமில்லாத மாமனிதர் பட்டத்தை அவசர அவசரமாக வழங்கி” தமது துரோகத்தனத்தை எம் எதிரியின் புலனாய்வாளர்களின் துணையோடு TCCயே இதை புலத்திலிருந்து அரங்கேற்றியுள்ளார்கள்.

ஆகவே எம் தாயக,புலம்பெயர் உறவுகளே…
எமது தேசத்தின் எழுச்சிக்காக தனது குரலின் ஊடாக எமது போராளிகளுக்கும், மக்களாகிய உங்களுக்கும் உணர்வினையும், உத்வேகத்தையும் வழங்கி எமது தமிழ்த் தேசிய விடுதலைக்காக தனது வாழ்நாளையே அற்பணித்தது மட்டுமல்லாமல், அதற்காக எதிரிகளால் வழங்கப்பட்ட போராளிகளுக்குரிய புனர்வாழ்வெனும் தண்டனைகளை தானும் பெற்று இறுதிவரை எதிரிகளால் வதைக்கப்பட்டுவந்த எமது தேசத்தின் உணர்சிக் குரல், மறைந்த திரு.S.G.சாந்தன் அவர்களுக்கு உரிய மதிப்பனிப்பினை எமது “தலைமைச் செயலகம்” தாம் வழங்கும் என்பதை இங்கே உறுதியுடன் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

குறிப்பு: புலிகளின் உண்மையான மாதிரி அறிக்கையினையும், இலங்கை புலனாய்வாளர்களின் திரு.S.G.சாந்தன் தொடர்பான மொட்டை அறிக்கையினையும் இங்கே உங்கள் தெளிவுக்காக பிரசுரிக்கின்றோம்.

 

ltte-2.jpg

 

http://www.tamilsvoice.com

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.