Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாபுலவு இராணுவ பாசறை அல்ல! அது நம் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் ஆண்ட பூமி!எம் சொந்த மண்ணில் நாம் வாழ ஏன் இந்த தடை? 5வது நாளாக தொடரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் மண் மீட்பு போராட்டம்.!

Featured Replies

கேப்பாபுலவு இராணுவ பாசறை அல்ல! அது நம் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் ஆண்ட பூமி!எம் சொந்த மண்ணில் நாம் வாழ ஏன் இந்த தடை? 5வது நாளாக தொடரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் மண் மீட்பு போராட்டம்.!

 

 

கேப்பாபுலவு மண் எமது பாட்டன் பூட்டன் முப்பாட்டன் ஆண்ட பூமி அந்த மண் இராணுவத்தின் பாசறை என எமது ஊரின் பிரதான வீதியை மறித்து பிரம்மாண்டமாக வாசல் அமைத்து பாரிய படைத்தலைமையகத்தை அமைத்து அங்கே  பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை நிலை நிறுத்தி எமது மண்ணில் உள்ள வருமானம் தரும் வளங்களை எல்லாம் சூறையாடி வருகின்றனர். நாமோ மாதிரிகிராமம் என்னும் போர்வையில் அகதிமுகாமில் வாழ்ந்து வருகின்றோம்.

IMG_2791.JPG

எமது சொந்த மண்ணில் என்ன வளம் இல்லை ஏன் இப்படி எம்மை இந்த அரசும் இராணுவம் நடத்துகின்றது. இதனால் இவர்களுக்கு என்ன இலாபம் நாம் தனி நாட்டை கேற்கவில்லை எமது சொந்த மண்ணையே கேட்கின்றோம். எமது நிலங்கள் விடுவிக்கப்படும்வரை இந்த வீதியில் கிடந்து மாண்டு போவமே தவிர சற்றும் நகர மாடடோம் என இன்று 5வது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

IMG_2812.JPG

5வது நாளான இன்றையதினம் அருட்  சகோதரிகள் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் மக்களை சந்;தித்து தமது ஆதரவினை வெளியிட்டனர். அத்தோடு நாலாவது நாளான நேற்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மக்களை சந்;தித்து தமது ஆதரவினை வெளியிட்டார்.

IMG_2844.JPG

அத்தோடு இன்றையதினமும் தமது சொந்த நிலங்களுக்கு செல்லவேண்டும் என்ற ஆவலில் உள்ள கேப்பாபுலவின் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இணைந்து தமது நிலங்கள் விடுவியுங்கள் என கோசம் எழுப்பி இராணுவ படை தலைமையக வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

IMG_2819.JPG

கேப்பாபுலவு கிராம  சேவகர்  பிரிவில்  கேப்பாபுலவு பூர்வீக கிராமம், சீனியா மோடடை, பிலக்குடியிருப்பு, சூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு கேப்பாபுலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான பகுதிகள் இராணுவத்தால் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.

IMG_2905.JPG

இந்த நிலையில் கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள், வீடுகள் பாடசாலை, வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள், வயல் நிலங்கள் என அனைத்தையும் கையகப்படுத்தி 480 ஏக்கருக்கு மேலான மக்களின் நிலங்களில் 10க்கும்  மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை  இராணுவம் அமைத்துள்ளது.

IMG_2838.JPG

இந்த நிலையில் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 8 வருடங்களாக கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் பலவடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் பலமுறை ஏமாற்றபட்ட இந்த மக்கள் ஆத்திரமடைந்தவர்களாய் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/17414

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.