Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 வருடங்கள் பொறுத்திருக்க முடியாது காணிகளை கையகப்படுத்துவது ஆக்கிரமிப்பே என்கிறார் சம்பந்தன்

Featured Replies

2 வருடங்கள் பொறுத்திருக்க முடியாது

p025-7b68d3f43bd2f09011cba326849143961c4fd9c6.jpg

 

காணிகளை கையகப்படுத்துவது ஆக்கிரமிப்பே என்கிறார் சம்பந்தன்
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

நடை­பெற்று வரும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்­க­ப்ப­டு­வது குறித்து எம்மால் எதுவும் கூற­மு­டி­யாது. எனினும் எமது மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்­காக மேலும் இரண்டு வரு­டங்கள் பொறுத்­தி­ருக்க முடி­யாது. மக்கள் விரக்­தியின் விளிம்­புக்கு வந்து விட்­டனர் என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் சபையில் சுட்­டிக்­காட்­டினார்.  

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை சபை­ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை சமர்ப்­பித்து உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு அவர் தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்­க­ளா­கின்­றன. தற்­போது வரையில் எமது மக்­க­ளுக்கு சொந்­த­மான நிலங்கள் படை­யி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன. அவர்கள் பரம்­ப­ரை­யாக வாழ்ந்த சொந்த நிலங்­களில் படை­யி­னர் நிலை கொண்டுள்ளனர்.

எமது மக்­களின் பூர்­வீக காணி­களில் படை­யினர் ஆக்­கி­ர­மித்­தி­ருப்­ப­தற்கு தேசிய பாது­காப்பை காரணம் காட்­டு­கின்­றார்கள். அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. எமது மக்கள் தமது சொந்த இடங்­களை விட்டு வெவ்­வேறு இடங்­களில் நெருக்­க­டிக்குள் வாழ்­கின்­றனர்.

தேசிய பாது­காப்பை காரணம் காட்டி நிலங்­களை ஆக்­கி­ர­மித்­தி­ருக்கும் படை­யினர் அந்த நிலங்­களில் தோட்­டங்கள் செய்­கின்­றார்கள், பொழு­து­போக்கு இடங்­களை அமைக்­கின்­றார்கள், மரங்­களை வளர்க்­கின்­றார்கள், வியா­பாரம் செய்­கின்­றார்கள். அந்த நிலத்­திற்கு சொந்­த­மான மக்கள் வீதியில் இருக்­கின்­றார்கள்.

இவ்­வாறு ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­வது எந்த வகையில் நியா­ய­மா­ன­தாகும். தேசிய பாது­காப்பை காரணம் காட்­டி­யி­ருக்கும் அவர்கள் இவ்­வாறு செயற்­ப­ட­மு­டி­யாது அவ்­வாறு செயற்­ப­டு­வதை ஏற்­கவும் முடி­யாது. ஆகவே அவர்கள் அந்த நிலங்­களை மீளவும் மக்­க­ளி­டத்தில் கைய­ளிக்க வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்றேன்.

2015ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் காணிகள் மீண்டும் மக்­க­ளி­டத்தில் கைய­ளிக்­கப்­ப­ட­வேண்டும். அதற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் விரைந்­தெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். உள்­ளிட்ட விட­யங்கள் கூறப்­பட்­டுள்­ளன. அந்த பிரே­ர­ணைக்கு அர­சாங்கம் இணை அனு­ச­ர­ணையும் வழங்­கி­யுள்­ளது.

அதே­போன்று ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யா­ளரும் காணிகள் விடு­விப்பு தொடர்­பாக தனது கரி­ச­னையை கூறி­யுள்­ள­தோடு விடு­விக்­கப்­பட்ட காணி­களின் அள­வையும் குறிப்­பிட்­டுள்ளார். குறிப்­பாக சுமார் 9ஆயிரம் ஏக்கர் வரை­யி­லான காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்ள தாக கூறி­யுள்ளார்.

அதே­நேரம் இம்­முறை நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் 34ஆவது மனித உரி­மைகள் பேர­வையில் உரை­யாற்­றிய வௌிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர 6ஆயிரம் ஏக்கர் அரச தனியார் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறி­யுள்ளார்.

இந்த இரண்டு கூற்­றுக்­க­ளுக்­கு­மி­டையில் பரஸ்­பர முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே இந்த பரஸ்­பர முரண்­பாட்டை தீர்ப்­ப­தாயின் படை­யினர் வச­முள்ள காணிகள் தொடர்­பாக மீள் கணக்­கீடு செய்­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

யாழ்ப்­பாணம் வலி.வடக்கில் விடு­விக்­கப்­ப­டா­துள்ள காணிகள் மற்றும் கேப்­பா­பு­லவில் விடு­விக்­கப்­ப­டா­துள்ள காணிகள் தொடர்­பாக இந்த சபையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றேன்.

யாழ் மாவட்­டத்தில் 5250 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் விடு­விக்­கப்­பட வேண்­டி­யுள்­ளன. முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 1853 ஏக்கர் காணி­களும், கிளி­நொச்சி மாவட்­டத்தில் 400 ஏக்கர் காணி­களும் விடு­விக்­கப்­பட வேண்­டி­யுள்­ளன. இது மட்­டு­மல்ல வவு­னி­யா­விலும், மன்­னா­ரிலும் இதே நிலைமை தான் காணப்­ப­டு­கின்­றது. அது தொடர்­பான தக­வல்­களும் உள்­ளன.

பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான இந்தக் காணி­களை விடு­விக்­கா­தி­ருப்­ப­தற்கு எந்த நியா­யப்­ப­டுத்­தல்­க­ளையும் கூற­மு­டி­யாது. மக்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது மனித உரிமை மீற­லாகும். அடிப்­படை உரிமை மீற­லாகும்.

நடை­பெற்ற வரும் ஐக்­கிய நாடுகள் சபையின் 34ஆவது கூட்­டத்­தொ­டரில் 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக இரண்டு வருட கால அவ­கா­சத்தை அர­சாங்­கத்­திற்கு வழங்­க­வுள்­ள­தாக சொல்­லப்­ப­டு­கின்­றது. அந்த கால அவ­காசம் வழங்­கப்­ப­டுமா இல்­லையா என்­பது தொடர்­பாக எம்மால் எத­னையும் சொல்ல முடி­யாது.

படை­யினர் ஆக்­கி­ர­மித்­துள்ள பொது­மக்­களின் ஆக்­கி­ர­மிப்பை விடு­விப்­ப­தற்கு இரண்டு வரு­ட­காலம் எம்மால் காத்­தி­ருக்க முடி­யாது. கேப்­பா­பு­லவு உட்­பட பல இடங்­களில் மக்கள் போராட்­டங்­களை ஆரம்­பித்­துள்­ளார்கள். அவர்கள் வீதியில் வெயி­லுக்­குள்ளும் மழைக்­குள்ளும் இருக்­கின்­றார்கள்.

அவர்­களின் கோரிக்­கை­களை பெற்றுக்கொண்டு ஜனாதிபதியை நான் நேரடியாகச் சந்தித்தேன். எமக்கு முன்னாலேயே முப்படைத்தளபதிகளுடன் தொடர்பு கொண்டு பணிப்புரைகளை விடுத்தார். உ்டனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்கு எமது நன்றிகள்.

அதேபோன்று வடக்கில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உடன் பணிப்புரை விடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றேன். எமது மக்கள் விரக்தியின் விளிம்புக்கு வந்துவிட்டனர். காலம் தாழ்த்தாது உடன் நடவடிக்கைளை எடுங்கள் என்று இந்த சபையில் கோருகின்றேன். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-09#page-1

  • தொடங்கியவர்

காணிகள் மீளக் கையளிக்கப்படாமை எந்த வகையில் நியாயம் ?

 

2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி­வுக்கு வந்­த­போது, தனிப்­பட்ட பிரஜை­க­ளுக்குச் சொந்­த­மான பொருந்­தொகைக் காணி­களில் இரா­ணு­வத்­தினர் தங்­கி­யிருக்­கின்­றமை விசே­ட­மாக வலி­காமம் வடக்கு, கேப்­பா­ப்பு­லவு பகு­தி­களில் படை­யினர் ஆக்­கி­ர­மித்­து­ள­்ளமை ஆகி­ய­வற்றை கண்­டித்தும் அவற்றை மக்­க­ளிடத்தில் மீளக்கைய­ளிக்­கு­மாறு வலி­யு­றுத்­தியும் எதிர்க்­கட்­சித் த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் 8.3.2017 அன்று புதன்­கி­ழமை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை சமர்ப்­பித்து ஆற்றிய உரை. 

வட மாகா­ணத்தில் நிலவும் இந்தக் காணிப் பிரச்­சினை தொடர்­பா­கவும் பல இடங்­களில் பல நாட்­க­ளா­கவும் பல வாரங்­க­ளா­கவும் தொடர்ச்­சி­யாக நடை­பெற்­று­வரும் பல்­வேறு எதிர்ப்­புகள் மற்றும் ஆர்ப்­பாட்­டங்கள் மூலமும் நாம் காணு­கின்ற இந்தக் காணிப் பிரச்­சினை பற்­றிய மக்­களின் மனப்­பாங்கு தொடர்­பா­கவும் நான் இப்­போது சில கருத்­துகள் கூற விரும்­பு­கிறேன்.

மக்கள் தமது காணி­க­ளுக்குத் திரும்பிச் செல்ல விரும்­பு­வதால், தமது காணி­களில் வாழ விரும்­பு­வதால், தமது காணி­களில் விவ­சாய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட விரும்­பு­வதால் அவர்கள் ஆர்ப்­பாட்டம் செய்­கி­றார்கள். வட மாகா­ணத்தில் ஆர்ப்­பாட்டம் செய்­கின்ற மக்­க­ளுக்கு ஆத­ர­வாக நாட்டின் ஏனைய பகு­தி­களில், ஏனைய இடங்­களில் வாழு­கின்ற ஆட்­க­ளினால் ஆர்ப்­பாட்­டங்­களும் எதிர்ப்­பு­களும் நடத்­தப்­பட்­டுள்­ளன. உண்­மையில் பௌத்த பிக்­குகள் அடங்­க­லாக சிலர் வடக்கில் ஆர்ப்­பாட்டம் செய்­கின்­ற­வர்­க­ளுடன் இணைந்­துள்­ள­தோடு, அவர்கள் இக்­கா­ணிகள் தொடர்ச்­சி­யாக ஆயுதப் படை­யி­னரின் வசம் இருப்­பதைத் தாம் அனு­ம­திக்­க­வில்லை என்­ப­தையும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். உதா­ர­ண­மாக, மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் காத்­தான்­குடி பள்­ளி­வா­சலில், வடக்கில் இக்­கா­ணி­களில் குடி­யி­ருப்­ப­தற்கு உரித்­து­டைய ஆட்­க­ளுக்கு அவை விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் பல ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

இக்­கோ­ரிக்­கைக்கு ஆத­ர­வாக நாட்டின் ஏனைய பகு­தி­க­ளிலும் ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. வட­மா­கா­ணத்தில் வாழும் மக்­க­ளினால் விடுக்­கப்­படும் இக்­கோரிக்கை ஒரு நியா­ய­மான கோரிக்கை என்றும் இக்­கா­ணிகள் எந்த மக்­க­ளுக்கு உரி­ய­னவோ, அந்த மக்­க­ளுக்கு அவை திரும்ப வழங்­கப்­பட வேண்டும் என்றும் மக்கள் கரு­து­கின்­றார்கள் என்­பதை இது தெளிவாக எடுத்துக் காட்­டு­கின்­றது. இந்தக் காணிகள் தமக்குத் திருப்பித் தரப்­பட வேண்­டு­மென்று வட­மா­கா­ணத்தில் உள்ள மக்­க­ளினால் விடுக்­கப்­படும் இக் கோரிக்­கைக்கு ஆத­ர­வாக சிங்­கள மக்­களும் முஸ்லிம் மக்­களும் இவ்ஆர்ப்­பாட்­டங்­களில் பங்­கு­பற்றி வரு­கின்­றனர்.

இந்த மிகவும் நியா­ய­மான கோரிக்­கைக்கு ஆத­ர­வாக ஆர்ப்­பாட்­டங்கள் நடத்தி வரும், குறிப்­பாக வட­மா­கா­ணத்­திற்கு வெளியே இருக்கும் சிங்­கள மக்­க­ளுக்கும் முஸ்லிம் மக்­க­ளுக்கும் நான் நன்றி கூற விரும்­பு­கின்றேன்.

இது மாதி­ரி­யான ஒரு நிலைமை நாட்டின் தென்­ப­கு­தியில் இருக்க முடி­யுமா என்ற வினாவை நான் எழுப்ப விரும்­பு­கிறேன். குடி மக்­களின் காணி­களை ஆயு­தப்­ப­டை­யினர் அல்­லது அர­சாங்கம் அவ்­வாறு பிடித்து வைத்­தி­ருக்க முடி­யுமா? அது சகித்­துக்­கொள்­ளத்தான் படுமா? ஏனைய அர­சியல் சக்­திகள் அவ்­வாறு நிகழ்­வதை அனு­ம­திக்­குமா? தெற்கில் அத்­த­கைய காணிகள் ஆயு­தப்­ப­டை­யி­னரால் அல்­லது அர­சாங்­கத்­தினால் பிடித்து வைக்­கப்­பட்­டி­ருக்­கு­மானால், அவர்கள் தலை­யிட்டு அக்­கா­ணிகள் அம்­மக்­க­ளிடம் திருப்பி வழங்­கப்­ப­டு­வதை உறு­தி­செய்­தி­ருக்க மாட்­டார்­களா?

இது எதனைக் காட்­டு­கின்­றது? இந்த விட­யங்கள் தொடர்­பாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளக்­கூ­டி­ய­தான அதி­கா­ரமும் பலமும் தமிழ் மக்­க­ளிடம் இல்லை என்­பதை அது தெளிவாக எடுத்துக் காட்­டு­கி­றது. ஐயா, அத­னால்தான் உண்­ணா­வி­ர­த­மி­ருந்து மழை­யி­னாலும் பனி­யி­னாலும் தடைப்­ப­டாது வெட்­ட­வெளியில் இரவும் பகலும் சுட்­டெ­ரிக்கும் வெ­யிலில் தமது குடும்­பங்­க­ளோடும், தமது பிள்­ளை­க­ளோடும் தமது குழந்­தை­க­ளோடும் தொடர்ந்து அமர்ந்­தி­ருந்து தம்மைத் தாமே வருத்திக் கொள்­கின்­றார்கள். தமக்கு இழைக்­கப்­படும் அநீ­தியை உலகம் உணர்ந்­து­கொள்ள வேண்டும் என்­ப­தற்­காகத் தான் அவர்கள் ஆர்ப்­பாட்டம் செய்­கி­றார்கள். எதிர்ப்புத் தெரிவிக்­கின்­றார்கள். தம்மைத் தாமே வருத்திக் கொள்­கி­றார்கள். இந்த நிலைமை தொட­ரக்­கூ­டாது. அது ஒரு முடி­வுக்கு வர­வேண்டும்.

பல வரு­டங்­க­ளுக்கு முன்­னரே யுத்தம் முடி­வுற்­றி­ருந்தும், ஒரு யுத்த சூழ்­நி­லையில் அவர்கள் இடம்­பெ­யர்­வ­தற்கு முன்னர் இக் குடி­மக்­க­ளுக்குச் சொந்­த­மா­க­வி­ருந்த அல்­லது அவர்கள் வைத்­தி­ருந்த இக்­கா­ணி­களைத் தொடர்ந்தும் பிடித்து வைத்­தி­ருப்­பது சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும் என்­ப­தோடு, இக்­கா­ணி­க­ளுக்­கான இம்­மக்­களின் சட்­ட­பூர்­வ­மான உரித்து தெளிவா­கவே மறுக்­கப்­ப­டு­கின்­றது. இது அவர்­களின் அடிப்­படை மற்றும் மனித உரி­மை­களின் ஒரு பெரும் மீற­லாகும். தேசிய பாது­காப்புக் கார­ணங்­களின் அடிப்­ப­டையில் தெளிவாக இனங்­கா­ணப்­பட்ட ஒரு சில வரை­ய­றுக்­கப்­பட்ட அளவு காணியில் இரா­ணுவம் தங்­கி­யி­ருக்­கலாம். எனினும், அவர்கள் அக்­கா­ணி­களை விவ­சா­யத்­திற்கும், மரக்­கறி, பழங்கள் ஏனைய பயிர்கள் வளர்ப்­ப­தற்கும், ஆடம்­பர விடு­திகள் மற்றும் உண­வ­கங்கள் நடத்­து­வ­தற்கும் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கும் அவற்றைத் தமது பொழு­து­போக்­கிற்­காக கோல்ப் திடல்­க­ளுக்­காக அல்­லது அவர்­க­ளது வதி­வி­டங்­க­ளாகப் பயன்­ப­டுத்­து­வ­தற்கும் நிச்­ச­ய­மாக முடி­யாது. அவ்­வாறு செய்­வது இம் மக்­க­ளது அடிப்­படை மற்றும் மனித உரி­மை­களின் ஓர் அப்­பட்­ட­மான மீற­லாகும். இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்க முடி­யு­மென நான் கரு­த­வில்லை.

உண்­மையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட ஐ.நா.மனித உரி­மைகள் பேரவைத் தீர்­மானம் கூறு­வது,

"அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட உயர்­பா­து­காப்பு வல­யங்­களின் மீளாய்வைக் கவ­னத்­தி­லெ­டுத்தும், காணி­களை சட்­ட­பூர்வ குடி­மக்கள் உரி­மை­யா­ளர்­க­ளுக்குத் திருப்பிக் கொடுப்­ப­தற்கும் உள்ளூர் மக்கள் தமது வாழ்­வா­தா­ரங்­களை மீண்டும் தொடங்­கு­வ­தற்கு உத­வு­வ­தற்கும் குடி­மக்கள் வாழ்க்­கையில் மாமூல் நிலையை மீள ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் மேற்­கொள்­ளப்­பட்ட ஆரம்ப நட­வ­டிக்­கை­களை வர­வேற்றும்."

இவ்­வாறு தான் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யினால் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் கூறப்­ப­டு­கி­றது. அது மேலும் 10 ஆம் பந்­தியில் குறிப்­பி­டு­வ­தா­வது, "அத்­துடன் காணி­களைத் திருப்பி ஒப்­ப­டைப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­படும் ஆரம்ப நட­வ­டிக்­கை­களை வர­வேற்­ப­தோடு, காணி­களை அவற்றின் சட்­டபூ­ர்வ குடி­மக்கள் உரி­மை­யா­ளர்­க­ளிடம் மீள ஒப்­ப­டைப்­ப­தற்கும், காணிப் பாவனை மற்றும் உரித்­தாண்மை ஆகிய துறை­களில், அதிலும் குறிப்­பாக குடி­மக்கள் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதை முடி­வு­றுத்­துதல் மற்றும் குடி­மக்கள் தமது மாமூல் வாழ்க்­கையை மீள ஏற்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்றில், முன்னே இருக்கும் கணி­ச­மா­ன­ளவு பணி­களைக் கையாள்­வ­தற்கு மேலும் முயற்­சி­களை மேற்­கொள்ள இலங்கை அர­சாங்­கத்தை ஊக்­கு­விப்­ப­தோடு, இம்­மு­யற்­சி­களில் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் மற்றும் சிறு­பான்­மை­யினர் உள்­ளிட்ட உள்ளூர் மக்­களின் முழு­மை­யான பங்­கேற்பின் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­து­கி­றது."

இது தான் ஒன்­றரை வரு­டத்­திற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு, ஒக்­டோபர் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட ஐ.நா.மனித உரி­மைகள் பேரவைத் தீர்­மா­னத்­திலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சிவி­லியன் வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்­பு­வ­தற்கு உத­வு­மு­க­மாக காணிகள் திருப்பி ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வதை அவர்கள் வலி­யு­றுத்­தினர். அது நடை­பெ­ற­வில்லை என்­பதை நாங்கள் கவ­லை­யோடு கூறு­கின்றோம்.

2017 ஆம் ஆண்டு, பெப்­ர­வரி மாதம் ஐ.நா.மனித உரி­மைகள் ஆணை­யாளர், ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில் விடுத்த அறிக்­கையில் அவர் கூறி­யதை நான் வாசிக்­கின்றேன். ஐ.நா.மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ரது அறிக்­கையின் 48ஆம் மற்றும் 49 ஆம் பந்­தி­களை நான் குறிப்­பி­டு­கின்றேன்.

பந்தி 48இல் அவர் கூறு­கிறார், "இரா­ணு­வத்தின் வச­முள்ள காணி­களை அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளிடம் திரும்ப ஒப்­ப­டைத்தல் என்ற நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்பும் நட­வ­டிக்­கை இன்­னமும் பூர்த்தி செய்­யப்­ப­டாத ஒரு அம்­ச­மா­கவே உள்­ளது. கணி­ச­மான அளவு காணிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருப்­பினும் (அர­சாங்க புள்­ளி­வி­ப­ரங்­களின் படி 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதத்­தி­லி­ருந்து மேல­திக 2,625 ஏக்கர் தனியார் காணி­களும், 9,288 ஏக்கர் அரச காணி­களும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன), இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள தனியார் மற்றும் அரச காணி­களின் வரை­ப­ட­மொன்றும் தெளிவான எல்லைக் குறி­யீ­டு­களும் கால­வ­ரை­ய­றை­களும் கொண்ட காணி விடு­விப்புத் திட்­ட­மொன்று இன்னும் பொது­மக்­க­ளுக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை".

49 ஆம் பந்­தியில் அவர் கூறு­கிறார், "நன்­கொ­டை­யா­ளர்கள் மற்றும் சர்­வ­தேச நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்­றி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்ற ஆத­ரவு இருந்தும், உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்த ஆட்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­தி­லான முன்­னேற்றம் மந்­த­மா­கவே உள்­ளது. இது பகு­தி­ய­ளவில், காணி­களை விடு­விக்கத் தவ­றி­ய­­மை­யினால் ஏற்­பட்­ட­தாகும். 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி மோத­லினால் பாதிக்­கப்­பட்டு ஏற்­பட்ட இடம்­பெ­யர்­வு­க­ளுக்­கான நிலை­யான தீர்­வுகள் தொடர்­பான ஒரு உரி­மை­களின் அடிப்­ப­டை­யி­லான, விரி­வான தேசிய கொள்­கையை அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்­தது. எனினும், அதன் அமு­லாக்­கத்­திற்­கான சவால்கள் நில­வு­கின்­றன. அர­சாங்கம் பிடித்து வைத்­தி­ருப்­பது அல்­லது இரண்­டாம்­நிலை பிடித்து வைப்­புகள் தொடர்­பான காணிப் பிணக்­குகள் அடங்­க­லான முக்­கிய தடைகள் தீர்க்­கப்­பட வேண்டும். சிவி­லியன் வர்த்­தகச் செயற்­பா­டு­களில் இரா­ணுவம் தொடர்ச்­சி­யாக ஈடு­ப­டு­வ­தால், பாதிக்­கப்­பட்ட சமூ­கங்­களில் அதி­ருப்தி அதி­க­ரித்­துள்­ளது."

ஐயா, மனித உரி­மைகள் ஆணை­யா­ளர்­ கூட கடந்த மாதம் மனித உரி­மைகள் பேர­வையில் தான் விடுத்த அறிக்­கையில், முற்­றிலும் தேவைப்­ப­டாத ஒரு அள­விற்கு இரா­ணுவம் காணி­களைப் பிடித்து வைத்­தி­ருப்­பதன் விளை­வாக எழு­கின்ற பிரச்­சி­னை­க­ளையும் மக்கள் தமது காணி­க­ளுக்குத் திரும்பிச் செல்ல முடி­யா­தி­ருப்­ப­தற்குக் கார­ண­மாக அமையும் இரா­ணு­வத்தின் செயற்­பா­டு­க­ளையும் மக்கள் தமது காணி­களில் குடி­ய­மர்த்­தப்­ப­டா­த­தையும் குறிப்­பிட்­டுள்ளார். எனவே, இது மனித உரி­மைகள் ஆணை­யா­ளரும் தனது அறிக்­கையில் குறிப்­பி­டு­வ­தற்குப் பொருத்­த­மா­ன­தெனக் கரு­திய ஒரு விட­ய­மாகும்.

அமைச்சர் மங்­கள சம­ர­வீரவும் 2017 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 28ஆம் திகதி மனித உரி­மைகள் பேர­வையில் தான் விடுத்த அறிக்­கையில் இவ்­வி­ட­யத்தைக் குறிப்­பிட்­டுள்ளார். அரச காணி­களைப் பொறுத்­த­வரை 5,519.98 ஏக்கர் காணியும் 1,383.51 ஏக்கர் காணி­யு­மாக மொத்தம் 6,903.49 ஏக்கர் விடு­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் கூறு­கிறார். தனியார் காணி­களைப் பொறுத்­த­வரை 2,090.03 ஏக்­கரும் 30.54 ஏக்­க­ரு­மாக மொத்தம் 2,120.57 ஏக்கர் விடு­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறு­கிறார்.

மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ரினால் தரப்­பட்ட புள்­ளி­வி­ப­ரங்­க­ளுக்கும் அமைச்சர் மங்­கள சம­ர­வீரவால் வழங்­கப்­பட்ட புள்­ளி­வி­ப­ரங்­க­ளுக்­கு­மி­டையே பரஸ்­பர முரண்­பாட்டை நான் காண்­கின்றேன். 9,288 ஏக்கர் அரச காணிகள் திரும்ப ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன என்று மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ருக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கலாம். ஆனால், வெளிநாட்­ட­லு­வல்கள் அமைச்சர் மங்­கள சம­ர­வீரவின் அறிக்கை 6,903.49 ஏக்கர் மட்­டுமே விடு­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறு­கி­றது. இங்கு கிட்­டத்­தட்ட 3000 ஏக்கர் வித்­தி­யாசம் உண்டு. தனியார் காணிகள் தொடர்­பா­கவும் ஒரு முரண்­பாடு நில­வு­கி­றது. மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ரது கூற்­றுப்­படி, 2,625 ஏக்கர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், வெளிநாட்­ட­லு­வல்கள் அமைச்சர் மங்­கள சம­ர­வீரவின் கூற்­றுப்­படி, 2,120.57 ஏக்கர் மட்­டுமே விடு­விக்­கப்­பட்­டுள்­ளது.

இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்­டின்கீழ் இருக்கும் அரச மற்றும் தனியார் காணிகள் விடு­விக்­கப்­ப­டு­வ­தற்­காக அவற்றின் சரி­யான விஸ்­தீ­ரணம் துல்­லி­ய­மாக இனங்­கா­ணப்­பட்டு தெளிவான எல்­லை­களும் கால வரை­ய­றை­களும் கொண்ட திட்­டங்கள் மக்­க­ளுக்குத் தெரிவிக்­கப்­ப­டும்­போது தான் இத்­த­கைய முரண்­பாடும் ஒவ்­வா­மையும் தீர்க்­கப்­பட முடியும். பொதுமக்­களின் ஒத்­து­ழைப்­போடு இந் நட­வ­டிக்கை தொட­ர­வேண்டும். எனவே, வெளிநாட்­ட­லு­வல்கள் அமைச்சர் கூறு­வ­தற்கும் மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ரினால் அவ­ரது அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தற்­கு­மி­டையே ஒரு முரண்­பாடு, ஓர் ஒவ்­வாமை நில­வு­கி­றது என்று நான் கூறு­கின்றேன்.

இந்த விடயம் தொடர்­பாக, நான் ஒரு சிறு தயார்­ப­டுத்தல் வேலைகள் செய்­தி­ருக்­கின்றேன். விட­ய­ம­றிந்­த­வர்கள், சரி­யான தக­வல்­களைத் தரக்­கூ­டி­ய­வர்கள் ஆகி­யோரை நான் விசா­ரித்­தி­ருக்­கிறேன். நான் இப்­போது பதிவு செய்ய விரும்பும் தக­வல்கள் மறு­த­லிக்­கக்­கூ­டி­ய­வை­யல்ல. யாழ்ப்­பாண மாவட்­டத்தில் வலி­காமம் வடக்கில் பெரும்­பாலும் தெல்­லிப்­பழைப் பகு­தியில் 4,500 ஏக்கர் தனியார் காணிகள் இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. யாழ்ப்­பாண மாவட்­டத்தின் ஏனைய பகு­தி­களில் 750 ஏக்கர் தனியார் காணிகள் இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. மொத்­த­மாக யாழ்ப்­பாண மாவட்­டத்தில் 5,250 ஏக்கர் தனியார் காணிகள் இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. இவை அனைத்தும் தனியார் காணி­க­ளாகும்.

முல்­லைத்­தீவில் 1,080 ஏக்கர் அரச காணிகள் இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. கரை­து­றைப்­பற்றில் 166.25 ஏக்கர், புதுக்­கு­டி­யி­ருப்பில் 371 ஏக்கர், ஒட்­டு­சுட்­டானில் 180 ஏக்கர், துணுக்­காயில் ஒரு பகுதி காடா­க­வுள்ள 425 ஏக்கர், மாந்தை கிழக்கில் 10 ஏக்கர் என எல்­லாமாக முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 1,080 ஏக்கர் மக்­க­ளி­ட­மி­ருந்து எடுக்­கப்­பட்ட அரச காணிகள் இன்னும் அம்­மக்­க­ளுக்குத் திருப்பித் தரப்­ப­ட­வில்லை. அதற்கு மேல், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 773 ஏக்கர் தனியார் காணிகள் இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. கரை­து­றைப்­பற்றில் 708 ஏக்கர், ஒட்­டு­சுட்­டானில் 45 ஏக்கர், மாந்தை கிழக்கில் 20 ஏக்கர் என்பன முல்­லைத்­தீவில் உள்ள தனியார் காணி­களும் அரச காணி­க­ளு­மாகும்.

நான் ஏற்­கெ­னவே வழங்­கிய எண்­ணிக்­கைகள் தரைப்­ப­டை­யினர் நிலை­கொண்­டுள்ள காணி­க­ளாகும், அதற்கு மேலாகக் கடற்­படை கரை­து­றைப்­பற்று வட்­டு­வாகல் பகு­தியில் 404 ஏக்­கர்­களைத் தம்­ம­கத்தே வைத்­தி­ருக்­கின்­றனர். கரை­து­றைப்­பற்று, ஒட்­டு­சுட்டான் மற்றும் துணுக்காய் பகு­தி­களில் பொலிஸாரும் 22.5 ஏக்­கர்­களைத் தம்­ம­கத்தே கொண்­டி­ருக்­கின்­றனர். இந்த எண்­ணிக்­கைகள் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் தரைப்­படை, கடற்­படை மற்றும் பொலிஸ் ஆகி­யவை நிலை­கொண்­டுள்ள அரச மற்றும் தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணி­க­ளாகும்.

கிளி­நொச்சி மாவட்­டத்தில் அரச மற்றும் தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணி­களில் 400 ஏக்கர் காணி இன்னும் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. கண்­டா­வ­ளையில் 163 ஏக்­கர்­களும், பூந­க­ரியில் 101 ஏக்­கர்­களும், கரைச்­சியில் 79 ஏக்­கர்­களும் மற்றும் பளையில் 71 ஏக்­கர்­களும் விடு­விக்­கப்­பட வேண்டும். யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு மற்றும் கிளி­நொச்சி மாவட்­டங்­களில் தரைப்­படை, கடற்­படை மற்றும் பொலிஸ் ஆகி­ய­வற்­றினால் அநீ­தி­யான வகையில் பிடித்து வைத்­தி­ருக்­கப்­படும் அரச மற்றும் தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணி­களின் பரப்­ப­ளவு பற்­றிய விப­ரங்­களை நான் தந்­துள்ளேன்.

இவற்­றை­வி­டவும், வவு­னி­யா­விலும் மன்­னா­ரி­லும்­கூட ஆயு­தப்­ப­டை­யி­னரால் காணிகள் பிடித்து வைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த விப­ரங்­களும் கிடைக்­கக்­கூ­டி­யதாக உள்­ளன. எனவே, நான் சமர்ப்­பித்­துள்ள எண்­ணிக்­கை­களை நீங்கள் உற்­று­நோக்­கினால், வடக்கு மாகா­ணத்தில் உள்ள எல்லா மாவட்­டங்­க­ளிலும் பரம்­ப­ரை­யா­கவும் நூற்­றாண்­டு­க­ளா­கவும் உறுதி மூலம் மக்­க­ளுக்குச் சொந்­த­மான தனியார் காணி­களும், காணி அபி­வி­ருத்திச் சட்­டத்தின் கீழ் காணி உரிமைப் பத்­திரம் மூலம் மக்­க­ளுக்குப் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட காணி­க­ளிலும் மிக அதிக பரப்­ப­ள­வான காணிகள் தரைப்­படை, கடற்­படை மற்றும் பொலிஸ் ஆகி­யன பிடித்து வைத்­துள்­ள­மையை நீங்கள் காண்­பீர்கள்.

போர் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு எட்டு வரு­டங்­க­ளா­கி­விட்­டன. எனது பிரே­ர­ணையில் நான் குறிப்­பிட்­டுள்­ள­வாறு இக்­கா­ணிகள் மீளக் கைய­ளிக்­கப்­ப­டா­மைக்கு எந்­த­வி­த­மான நியா­ய­பூர்­வ­மான கார­ணங்­களும் கிடை­யாது. இக் காணிகள் அதன் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு மீளக் கைய­ளிக்­கப்­பட வேண்டும். இது அவர்­க­ளு­டைய அடிப்­படை உரிமை. இது அவர்­க­ளு­டைய மனித உரிமை. நீங்கள் அவர்­களு­டைய அடிப்­படை உரி­மை­க­ளையும் மனித உரி­மை­க­ளையும் மீறு­கின்­றீர்கள். அத்­தோடு, நீங்கள் இக்­கா­ணி­களை விநோதப் பொழு­து­போக்­குக்­காகப் பயன்­ப­டுத்­து­கின்­றீர்கள். அதே­நேரம், இக்­கா­ணி­க­ளுக்கு உரி­மை­யா­ளர்­க­ளா­கிய மக்கள் நலன்­புரி முகாம்­க­ளிலும் நண்­பர்கள், உற­வினர் வீடு­க­ளிலும் துய­ரத்­தோடு வாழ்­கின்­றனர். இதனை எவ்­வாறு நீங்கள் நியா­யப்­ப­டுத்த முடியும்? இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யுமா? நிச்­ச­ய­மாக இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இதனை ஒரு முடி­வுக்குக் கொண்­டு­வர வேண்டும்.

வலி­காமம் வடக்கு மற்றும் முல்­லைத்­தீவு கேப்­பாப்­பு­லவு ஆகிய இரண்டு குறிப்­பிட்ட விட­யங்கள் தொடர்­பா­கவே இன்று நான் இந்தப் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பு­கின்றேன். நான் ஜனா­தி­ப­திக்குக் கடிதம் எழு­தி­யுள்ளேன். விமா­னப்­ப­டை­யி­னரால் கேப்­பா­ப்புலவில் உள்ள காணிகள் விடு­விக்­கப்­ப­டாமல் இருந்­த­போதும், தரைப்­ப­டை­யி­னரால் புதுக்­கு­டி­யி­ருப்பில் உள்ள காணிகள் விடு­விக்­கப்­ப­டா­தி­ருந்­த­போதும் மற்றும் கிளி­நொச்சி மகா­வித்­தி­யா­ல­யத்­துக்­கு­ரிய காணிகள் விட­ய­மா­கவும் நான் எனது இரண்டு நண்­பர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன் மற்றும்செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகி­யோ­ருடன் ஜனா­தி­பதியைச் சந்­தித்­த­போது, உட­ன­டி­யா­கவே செயற்­பட விரும்­பிய ஜனா­தி­பதி, எமது முன்­னி­லை­யி­லேயே தரைப்­படைக் கொமாண்­ட­ரு­டனும் விமா­னப்­படைக் கொமாண்­ட­ரு­டனும் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு ஓரிரு நாட்­களில் இக்காணி­களை விடு­விக்­கும்­படி அறி­வு­றுத்தல் விடுத்தார். அதன்­படி அது நடை­பெற்­றுள்­ளது. அதற்­காக நான் அவ­ருக்கு நன்றி கூறு­கின்றேன். அந்த இடங்­களில் உள்ள மக்கள் அத்­த­கைய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­மைக்­காகத் தமது நன்­றி­யைத் தெரிவித்­தனர். யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு உட்­பட வட­மா­கா­ணத்தின் எல்லா மாவட்­டங்­க­ளிலும் இது­வரை விடு­விக்­கப்­ப­டாமல் உள்ள காணிகள் தொடர்­பாக ஒரு செயற்­பாட்டுக் கொள்­கையை உரு­வாக்கி அர­சாங்கம் செயற்­பட வேண்­டு­மெனக் கேட்­டுக்­கொள்­கின்றேன். சரி, நான் எண்­ணிக்­கை­களைத் தந்­தி­ருக்­கின்றேன்.

இவை சரி­யான எண்­ணிக்­கைகள் ஆகும். மன்னார், வவு­னியா மாவட்­டங்­க­ளுக்­கா­கவும் ஒரு செயற்­றிட்டம் இருக்க வேண்டும். எவ்வெவ் இடங்­களில் உள்ள காணிகள், எவ்­வ­ளவு பரப்­ப­ளவைக் கொண்ட காணிகள், எப்­போது இக்­கா­ணிகள் விடு­விக்­கப்­படும் என்­பது தொடர்­பான சரி­யான விப­ரங்கள் மக்­க­ளுக்குக் கிடைக்கக் கூடி­ய­தாக இருக்க வேண்டும். இந்த விட­யங்கள் மேலும் தாம­திக்­கக்­கூ­டிய விட­யங்கள் அல்ல. இந்த விட­யங்கள் 2015ஆம் ஆண்டில் ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வை­யினால் நிறை­வேற்­றப்­பட்ட தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒன்றரை வருடங்களுக்குப் பின் 2017இல் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும்கூட இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவால் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைகளுக்கும், மனித உரிமை ஆணையாளரால் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைகளுக்கும் இடையில் பரஸ்பர முரண்பாடுகள் காணப்படுகின்றன.

எனவே, இந்த விடயத்தில் நிச்சயமற்ற தன்மையொன்று காணப்படுகின்றது. அது குழப்பமான நிலைமையாகும். இத்தகைய நிலைமை தொடரமுடியாது என்பதுடன் இக்காணிகள் விடுவிக்கப்படல் வேண்டும். மேலும், இரண்டு ஆண்டு காலம் இதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது. 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்காக, மனித உரிமைகள் பேரவையிடமிருந்து மேலும் கால அவகாசம் கோரப்போவதாக இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. அந்தக் கால அவகாசம் வழங்கப்படுமா அல்லது வழங்கப்படாதா என்பது பற்றி நான் அறியேன்.

ஆனால், எமது மக்கள் நிச்சயமாகக் காத்திருக்க முடியாது. அவர்கள் நலன்புரி நிலையங்களிலும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் அவர்களின் தயவில் தொடர்ந்தும் தங்கி வாழ முடியாது. அவர்கள் தங்களுக்குச் சொந்தமான காணிகளுக்கு மீளச் செல்ல வேண்டும். அவர்களது சொந்தக் காணிகளில் அவர்கள் குடியிருக்க வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதோடு, அக்காணிகளில் அவர்கள் பண்ணைச் செய்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

நான் இந்தக் கேள்வியை எழுப்புவதற்குக் காரணம் எமது மக்கள் விரக்தியின் விளிம்புக்கே வந்துவிட்டனர் என்பதனாலாகும். இன்று அவர்கள் கொளுத்தும் வெயிலையும், பெய்யும் மழையையும், இரவு வேளைகளில் பனியையும் பொருட்படுத்தாது தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடைய மனைவிமார்கள், பிள்ளைகள், குழந்தைகள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள அவலத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது. இந்த நிலைமை தொடரக்கூடாது. இது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அரசாங்கம் இந்த நிலைமைகளை நன்கு விளங்கிக் கொண்டு, அவற்றை முடிவுக்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-11#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.