Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய பிரேரணைக்கு உறுப்பு நாடுகள் ஆதரவு கால அவகாசத்திற்கு ஜெனிவாவில் தமிழர் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு

Featured Replies

புதிய பிரேரணைக்கு உறுப்பு நாடுகள் ஆதரவு

P14-ab44cdd451e776c2f6759275fc107004e3d2a85d.jpg

 

கால அவ­காசத்திற்கு ஜெனி­வாவில் தமிழர் பிர­தி­நி­திகள் கடும் எதிர்ப்பு 
(ரொபட் அன்­டனி)

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வளாகத்தில் நடை­பெற்று

வரும் இலங்­கையின் மனித உரிமைகள் விவ­காரம் தொடர்­பான உப கு­ழுக்­கூட்­டங்­களில் கலந்­து­கொள் ளும் தமிழர் தரப்புப் பிர­தி­நி­திகள்  இலங்­கைக்கு ஐக்­கிய நாடுகள் சபை கால அவ­ காசம் வழங்­கக்­கூ­டாது என தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.  

ஜெனிவா வளா­கத்தில் நடை­பெ­று­கின்ற இலங்கை தொடர்­பான உப­கு­ழுக்­கூட்­டங்­களில் பங்­கேற்கும் புலம்­

பெயர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் மற்றும் இலங்­கையில் இருந்து சென்­றுள்ள தமிழர் பிர­தி­நி­திகள் இவ்­வாறு இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கப்­ப­டு­வ­தற்கு கடும் எதிர்ப்பைத் தெரி­வித்து வரு­கின்­றனர்.

நேற்று முன்­தினம் ஜெனிவா வளா­கத்தில்

 நடை­பெற்ற உப­கு­ழுக்­கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய வட மாாண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன் இலங்­கைக்கு மேலும் கால அவ­காசம் வழங்­கக்­கூ­டாது என வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

அத்­துடன் நேற்று முன்­தினம் ஜெனி­வாவில் நடை­பெற்ற இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள பிரே­ரணை வரைபு குறித்து ஆராயும் உப குழுக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த பல்­வேறு புலம்­பெயர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் இலங்கை அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்­கக்­கூ­டாது என வலி­யு­றுத்­தினர்.

அத்­துடன் கால அவ­காசம் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்ற புதிய பிரே­ர­ணைக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தா­கவும் புலம்­பெயர் அமைப்­புக்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

எனினும் இந்த உப­குழுக் கூட்­டத்தில் தெரி­வித்­துள்ள இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை தயா­ரித்­துள்ள அமெ­ரிக்­காவின் பிர­தி­நி­திகள் புதிய பிரே­ர­ணை­யா­னது 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணைக்கு எதி­ராக அமை­யாது என்றும் அதனை அடி­யொட்­டி­ய­தாக அமைந்­தி­ருக்கும் என்றும் தெரி­வித்­துள்­ளனர்.

மேலும் கால அவ­காசம் வழங்கும் வகையில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டா­விடின் மனித உரிமை பேர­வைக்கு வெ ளியே இலங்­கையை வைத்­துக்­கொண்டு என்ன செய்ய முடியும் என்றும் இந்த உப­குழுக் கூட்­டத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து தயா­ரித்­துள்ள இந்தப் பிரே­ர­ணைக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன. எனினும் இலங்­கை­யா­னது நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் விரை­வுத்­தன்­மையை வெ ளிக்­காட்­ட­வேண்டும் என்று கன­டாவும் சுவிட்­சர்­லாந்தும் இந்த நிகழ்வில் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

ஆனால் இவ்­வாறு விளக்­க­ம­ளிக்­கப்­பட்ட நிலையில் உப­குழுக் கூட்­டத்தில் கலந்­து­கொண்ட புலம்­பெயர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கு­வ­தற்கு தொடர்ச்­சி­யாக எதிர்ப்பு வெ ளியிட்­டுள்­ளனர்.

இதே­வேளை 24 மாத­கால கால அவ­கா­சத்தை இலங்­கைக்கு வழங்கும் வகையில் இலங்கை தொடர்­பான பிரே­ரணை அமை­ய­வுள்­ளதால் இலங்கை அர­சாங்கம் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்க தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை கடந்த திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் நடை­பெற்ற உபக்­கு­ழுக்­கூட்­ட­மொன்றில் உரை­யாற்­றிய தமிழர் பிர­தி­நி­திகள் இலங்­கையில் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் எவ்­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் ஏற்­ப­டுத்­த­வில்லை என்றும் எனவே இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கக்­கூ­டாது என்றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.

அந்­த­வ­கையில் ஜெனிவா மனித உரிமை வளா­கத்தில் நடை­பெற்று வரும் இலங்கை மனித உரிமை தொடர்­பான அனைத்துக் கூட்­டங்­க­ளிலும் இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கக்­கூ­டாது என தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

எவ்­வா­றெ­னினும் இலங்­கைக்கு 24 மாத­கால அவ­கா­சத்தை வழங்­கு­வ­தற்­கான பிரே­ரணை சில தினங்­களில் மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

தொடர்ந்து எதிர்­வரும் 23 ஆம்­தி­கதி இந்தப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு ஜெனி­வாவில் நடை­பெறும். எனினும் வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­ப­டாமல் பிரேணை இலங்­கையின் அனு­ச­ர­ணை­யுடன் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­படும் சாத்­தி­யமே அதிகம் உள்­ள­தாக ஜெனிவா தக­வல்கள் தெரி­வித்­தன.

கடந்த 27 ஆம்­தி­கதி ஆரம்­ப­மான ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொட­ரா­னது இம்­மாதம் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு நடைமுறைப்படுத்தியது என்பது தொடர்பாக எழுத்துமூல அறிக்கையை கடந்தவாரம் வெளியிட்டிருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்திருந்தார்.

விசேடமாக இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை விடயத்தில் கவலையளிக்கும்வகையில் தாமதம் நிலவுவதாகவும் அரசாங்கம் அவசரமாக முன்னேற்றத்தை வெளிக்காட்டவேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.