Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா : இந்தியர்கள் புறக்கணிப்பு

Featured Replies

இன்று கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா : இந்தியர்கள் புறக்கணிப்பு

 

 

 

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் நிகழ்வு தற்போது நடைபெறுகிறது. 

திருப்பலியை யாழ் கத்தோலிக்க குருமார் நடத்திவருகின்றனர். நேற்று மாலை 4.30 மணியளவில் ஆலயத்தின் பரிபாலகர் அன்டனி ஜெயராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டதோடு விழா ஆரம்பமானது.

C6ruPE3WYAAP3YW.jpg

இன்று காலை 6.00 மணிக்கு திருச்செபமாலை இடம்பெற்றத 6.30 மணிக்கு ஆயர் குருக்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் வரவேற்கப்பட்டனர் 6.45 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

காலையில் நிகழும் இந்த சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் திருவிழா நிறைவுக்கு வரும்.

வருடாந்தம் நடைபெறும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளும் நிலையில், கடந்த வாரம் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து இந்திய மீனவர்கள் இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலைய திருவிழாவில் கலந்துகொள்ளவதை புறக்கணித்துள்ளனர்.

இம்முறை இந்தியாவில் இருந்து  5015 ஆயிரம் பக்தர்கள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து 2000 ஆயிரம் பக்தர்கள் பங்குகொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய மீனவர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சம்பவத்தில் ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில் இன்னொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த துப்பாக்கி சூட்டு பிரயோகம் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது என இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளது அடுத்து இந்தியாவின் தமிழக மீனவர்கள் தமது கடுமையான விரோதத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இம்முறை கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் கலந்துகொள்ள போவதில்லை என இந்த மீனவர் சங்கங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

http://www.virakesari.lk/article/17669

  • தொடங்கியவர்

 

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா ஆரம்பம்: தமிழக மீனவர்கள் புறக்கணிப்பு

  • தொடங்கியவர்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா.......
 
 

 

article_1489319386-DSC_0172.JPG

 

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா, இன்று நடைபெற்றது. சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான இத்திருவிழாவில், விசேட திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன கலந்துகொண்டார். இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த யாத்திரிகர்கள், பெருமளவில் கலந்துகொண்டனர். (ரொமேஸ் மதுசங்க) .

article_1489319400-DSC_0178.JPG

article_1489319420-DSC_0144.JPG

article_1489319435-DSC_0194.JPG

article_1489319455-DSC_0096.JPGarticle_1489319471-DSC_0053.JPG

article_1489319495-DSC_0058.JPG

article_1489319563-DSC_0085.JPG

article_1489319550-DSC_0068.JPG

article_1489319581-DSC_0134.JPG

article_1489319593-DSC_0147.JPG

article_1489319602-DSC_0153.JPG

article_1489319618-DSC_0159.JPG

article_1489319632-DSC_0005.JPG

article_1489319642-DSC_0007.JPG

 

- See more at: http://www.tamilmirror.lk/193062/கச-சத-வ-ப-ன-த-அந-த-ன-ய-ர-ஆலயத-த-ர-வ-ழ-#sthash.bzvk9veG.dpuf
கச்சதீவு வருடாந்த திருவிழா: 6,600 பக்தர்கள் பங்கேற்பு
 
12-03-2017 05:48 PM
Comments - 0       Views - 24

article_1489321214-article_1489319495-DS

கச்சதீவிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா, கொடியேற்றத்துடன் சனிக்கிழமை ஆரம்பமாகி, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஒப்புகொடுக்கப்பட்ட திருவிழாத் திருப்பலியுடன் நிறைவடைந்தது.

இலங்கையில் இருந்து 6,600 பக்தர்கள் இந்த  திருவிழாவில் கலந்துகொண்டனர்.

கச்சதீவு புனித அந்தோனியாரின் புதிய ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதல் திருவிழாவின் திருப்பலியை, யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரத்தினம் யோசவ்தாஸ் தலைமையில் அருட்தந்தை நேசன், அருட்தந்தை ஜோஜின், அருட்தந்தை டேவிட், அருட்தந்தை மங்கலம் ஆகியோர், கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அருட்தந்தையர், அருட் சகோதரிகள் பங்கேற்றிருந்தனர். திருவிழா ஏற்பாடுகளை, நெடுந்தீவு பங்குத்தந்தை அ.ஜெ.அன்ரனி ஜெயரஞ்சன் மேற்கொண்டிருந்தார்.

திருவிழாவுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சேவைகளை இலங்கைக் கடற்படையினரும் சிவில் பாதுகாப்பைப் பொலிஸாரும் வழங்கியிருந்தனர். பக்தர்களுக்கான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளையும் மருத்துவ சேவைகளையும், கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/193068/கச-சத-வ-வர-ட-ந-த-த-ர-வ-ழ-பக-தர-கள-பங-க-ற-ப-#sthash.CevRzdk5.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.