Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபந்தனைகளுடன் கூடிய 2 வருடகால அவகாசம் 23இல் ஜெனீவாவில் புதிய தீர்மானம் : சர்வதேச நீதிபதிகள் யோசனையை நீர்த்துப் போகச்செய்யும் முயற்சி தோல்வி

Featured Replies

நிபந்தனைகளுடன் கூடிய 2 வருடகால அவகாசம்

 

23இல் ஜெனீவாவில் புதிய தீர்மானம் : சர்வதேச நீதிபதிகள் யோசனையை நீர்த்துப் போகச்செய்யும் முயற்சி தோல்வி
- லியோ நிரோஷ தர்ஷன் -

நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்ட இரண்டு வரு­ட­கால அவ­கா­சத்தை இலங்­கைக்கு வழங்­கவும், போர்க்­குற்ற விவ­கா­ர­த் தில் சர்­வ­தேச நீதி­ப­திகள் உள்­ள­டங்­க­லாக கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணையை வலி­யு­றுத்­தியும் எதிர்­வரும் 23ஆம் திகதி இலங்கை தொடர்­பி­லான புதிய தீர்­மா­னத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவை முன் வைக்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.  

இறு­திக்­கட்டப் போரின் போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­ப­டு­கின்ற போர்க் குற்­றங்கள் மற்றும் பார­தூ­ர­மான மனித உரி­மைகள் மீறல்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­வாங்கும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் தீர்­மா­னத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்­சியில் இலங்கை தோல்­வி­ய­டைந்­துள்­ளது. 2015ஆம் ஆண்டு உறு­தி­ய­ளிக்­கப்­பட்­ட­மைக்கு அமை­வாக போர் குற்­றச்­சாட்­டுக்­களை சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­குப்­பற்­ற­லுடன் விசா­ரணை செய்ய இலங்கை அரசு இணக்கம் தெரி­வித்தால் கால அவ­ச­காசம் தொடர்பில் சிந்­திக்க முடியும் . அவ்­வாறு அல்­லாது இலங்கை தொடர்ந்தும் இழு­பறி நிலையை முன்­னெ­டுக்கும் பட்­சத்தில் உறுப்பு நாடுகள் தீர்க்­க­மான முடி­வு­களை எடுக்க நேரிடும் என ஐ நா வில் விஷேட ஆலோ­சணை அந்­தஸ்­துள்ள சர்­வ­தேச அமைப்­புகள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.    

இந்­நி­லையில் இன்னும் இரண்டு ஆண்­டு­க­ளுக்குள் விசா­ரணை செய்து சம்­பந்­தப்­பட்ட படை­யி­ன­ருக்கு எதி­ராக சர்­வ­தேச குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக இலங்கை ஜெனி­வாவில் ஒப்­புதல் வழங்­கி­யுள்­ள­தாக உள்­ளக அர­சி­யலில் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் எந்­த­வொரு கார­ணத்­திற்­கா­கவும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை நாட்­டிற்குள் அனு­ம­திப்­ப­தில்லை என ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உள்­ளிட்ட ஆளும் தரப்­பினர் தெரி­வித்­துள்­ளனர் . 

2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான ஐ நா தீர்­மா­னத்தின் 6 ஆவது தீர்­மானம் சர்­வ­தேச நீதி­ப­திகள் மற்றும் குற்­ற­வியல் விசா­ர­ணை­யா­ளர்­களை உள்­ள­டக்­கிய கலப்பு விசா­ரணை ஒன்­றுக்­கா­ன­தாகும்.  

இதனை அர­சாங்கம் தற்­போது எதிர்ப்­ப­தாயின் ஜெனி­வாவில் இரண்டு ஆண்டு கால அவ­காசம் கோரு­வது எதற்­காக ? சர்­வ­தேச நீதி­ப­திகள் தேவை­யில்லை , அவ்­வா­றான பார­தூ­ர­மான குற்­றங்கள் இலங்­கையில் இறு­திக்­கட்ட போரின் போது இடம்­பெற வில்லை என்றால் 2015 ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வினால் கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு எதி­ராக செயற்­ப­டாது ஆத­ரா­வாக செயற்­பட்­டதும் தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யதும் எதற்­காக என்ற கேள்­வி­களை சர'வதேச அமைப்­புகள் முன் வைத்­துள்­ளன.  

மேலும் அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்கக் கூடாது. 2015 ஆம் ஆண்டு தீர்­மா­னத்தை முழு அளவில் நிறை­வேற்றும் வரை ஐ நா வின் பார்வை இலங்கை மீது தீவி­ர­மாக காணப்­பட வேண்டும் என பிரித்­தா­னி­யாவின் தொழிற் கட்சி , ஐரோப்­பிய ஒன்­றியம் ?சர்­வ­தேச மன்­னிப்புச் சபை , மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் உள்­ளிட்ட பல தரப்­புகள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.  

இந்­நி­லையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் தொடர்­பான அழுத்­தத்தை இரா­ஜ­தந்­திர ரீதியில் நீர்த்­துப்­போக செய்யும் இலங்­கையின் நகர்­வுகள் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. எவ்­வா­றா­யினும் எதிர் வரும் 23 ஆம் திகதி இலங்கை தொடர்­பி­லான புதிய தீர­மானம் ஒன்று முன் வைக்கப்பட உள்ளது. இதில் சர்வதேச நீதிபதிகள் விவகாரத்தை வலியுத்தும் வகையில் அமைய உள்ளதுடன் 2 வருட கால அவகாசத்திற்கான நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த இரண்டு வரு ட கால அவகாசத்தில் ஐ நா இலங்கையை முழு அளவில் கண்காணிக்கும் வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-03-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.