Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா பொறிமுறைகள் நீதியைத் தருமா?

Featured Replies

ஐ.நா பொறிமுறைகள் நீதியைத் தருமா?

UNLogo2-bf360d1539858339efbd0742a4ba2981b4788e5f.jpg

 

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் மூல­மாக பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான தமி­ழர்கள் நீதியை எதிர்­பார்க்க முடி­யாது என்ற கருத்து இப்­போது பல­ரி­டமும் ஏற்­பட்­டி­ருப்­பதைக் காண முடி­கி­றது.

இந்தக் கருத்து இப்­போது பர­வ­லாகத் தோன்­றி­யி­ருப்­ப­தற்கு முக்­கி­ய­மான காரணம், 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் இலங்கை அர­சாங்­கத்­தினால் இன்­னமும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாமல் இருப்­பதும், இந்தத் தீர்­மா­னத்தின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­கா­சத்தை அளிப்­ப­தற்­கான தீர்­மான வரைவு ஒன்று முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பதும் தான்.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை மேலும் கால­அ­வ­காசம் கோரப்­போ­கி­றது என்ற தகவல் வெளி­யா­ன­துமே, அவ்­வாறு கால­அ­வ­காசம் வழங்கக் கூடாது என்ற கருத்து தமிழர் தரப்பில் ஒரு தரப்­பி­னரால் முன்­வைக்­கப்­பட்­டது.

ஏற்­க­னவே ஒன்­றரை ஆண்­டு­க­ளாக, தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் தவ­றி­யுள்ள நிலையில், மீண்டும் கால­அ­வ­கா­சத்தைக் கோரு­வது ஓர் இழுத்­த­டிப்பு உத்­தியே என்ற குற்­றச்­சாட்­டுகள் பர­வ­லாக காணப்­ப­டு­கின்­றன. இந்தக் குற்­றச்­சாட்டு முழு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­படக் கூடி­ய­தன்று.

இலங்­கைக்கு மீண்டும் கால­அ­வ­காசம் வழங்­கக்­கூ­டாது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் 11 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு கடிதம் ஒன்­றையும் அனுப்­பினர். (இதில் கையெ­ழுத்துக் குளறு­ப­டிகள் நடந்­துள்­ள­தான குற்­றச்­சாட்­டு­களும் இருக்­கின்­றன.)

தமிழர் தரப்பில் கால­அ­வ­காசம் வழங்­கப்­படக் கூடாது, அவ்­வாறு கால­அ­வ­காசம் வழங்­கு­வ­தற்கு துணை­போ­வது துரோகம் என்று கருத்து வெளி­யிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, கால அவ­காசம் வழங்­கப்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்­கான எந்த முயற்­சி­க­ளையும் எடுத்­த­தாகத் தெரி­ய­வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் 11 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கால­அ­வ­காசம் வழங்­கக்­கூ­டாது என்று கடிதம் அனுப்­பி­யி­ருந்­தாலும், அது எடு­படப் போவ­தில்லை என்று கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஒரு பக்­கத்தில் கால­அ­வ­கா­சத்­துக்கு கூட்­ட­மைப்பு துணை­போ­கி­றது என்றும் அவரே குற்­றம்­சாட்­டு­கிறார், இன்­னொரு பக்­கத்தில் கூட்­ட­மைப்பின் கடிதம் எடு­ப­டாது கால­அ­வ­காசம் வழங்­கப்­படும் என்றும் அவரே கூறு­கிறார். இவை­யி­ரண்டும் முன்­னுக்குப் பின் முர­ணா­னவை.

கால­அ­வ­காசம் வழங்கும் விடயம் என்­பது, அர­சு­க­ளுக்­கி­டை­யி­லான ஒப்­பந்தம். அதற்குள், வெளியார் யாரும் நுழை­வதை, - அது பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ராக இருந்­தாலும்- அர­சுகள் அனு­ம­திக்கப் போவ­தில்லை. அந்த யதார்த்­தத்தை விளங்கிக் கொண்டு பார்த்தால், கால­அ­வ­காச விட­யத்தில் கூட்­ட­மைப்பு எதிர்த்­தாலும் சரி, ஆத­ரித்­தாலும் சரி ஒன்­றுமே நடக்கப் போவ­தில்லை என்­பது புரியும்.

இந்தக் கால­அ­வ­கா­சத்தை முன்­னி­றுத்தி தமிழ் அர­சியல் தலை­மைகள் தமக்­கி­டையில் முட்­டி­மோதிக் கொண்­ட­து தான் மிச்சம். இந்த விட­யத்தில், தமிழ் அர­சியல் தரப்­புகள் உள்­ளக அர­சியல் ஆதா­யங்­களை இலக்கு வைத்தே செயற்­ப­டு­கின்­றன.

இலங்­கைக்கு கால­அ­வ­காசம் வழங்­கப்­படக் கூடாது என்ற கருத்தை முன்­வைக்கும் போது, சில விட­யங்­களில் தீர்­மா­ன­க­ர­மான முடி­வு­களை தமிழர் தரப்பு எடுத்­தி­ருக்க வேண்டும்.

முத­லா­வது - பெரி­ய­ளவில் மக்­களைத் திரட்டி, அழுத்­தங்­களைக் கொடுக்கும் பல­மான சூழல் ஒன்றை உரு­வாக்­கி­யி­ருக்க வேண்டும்.

இரண்­டா­வது,- கால­அ­வ­காசம் வழங்­கு­வ­தற்குப் பதி­லாக மாற்­றாக என்ன செய்­யலாம் என்ற நடை­மு­றைச்­சாத்­தி­ய­மான யோச­னையை முன்­வைத்­தி­ருக்க வேண்டும்.

ஆனால் இந்த இரண்டு விட­யங்­க­ளிலும் தமிழர் தரப்பில் இருந்து யாருமே எந்த முயற்­சி­க­ளையும் எடுக்­க­வில்லை அல்­லது முயற்­சி­களை முன்­னெ­டுத்த தரப்­பு­க­ளுக்கு போதிய ஆத­ரவைக் கொடுத்­தி­ருக்­க­வில்லை.

நீதிகோரும் போராட்­டங்­க­ளுக்­காக மக்­களை அணி­தி­ரட்­டு­வதில், தமிழர் தரப்பு இன்­னமும் ஆரம்பப் புள்­ளியில் தான் நிற்­கி­றது. ஆங்­காங்கே ஒரு சில போராட்­டங்கள் நடத்­தப்­பட்­டாலும், அவை அர­சாங்­கத்­துக்கோ, சர்­வ­தேச சமூ­கத்­துக்கோ அழுத்­தங்­களைக் கொடுக்கக் கூடி­ய­ள­வுக்கு வீரியம் கொண்­ட­வை­யாக இருக்­க­வில்லை.

ஒதுங்கிப் போகின்ற போக்கில் இருந்து தமிழ்ச் சமூகம் இன்­னமும் விடு­ப­ட­வில்லை. சமூக வலைத்­த­ளங்­களில் சூடாக விவா­திக்கத் தயா­ராக இருப்­ப­வர்­களும், அடுத்­த­வர்­களை உசுப்­பேற்றி விடு­ப­வர்­களும் தாமாக இறங்கி போராட்­டங்­களில் கைகொ­டுக்கத் தயா­ராக இருப்­ப­தில்லை.

ஜல்­லிக்­கட்­டுக்கு ஆத­ர­வாக நல்­லூரில் திரண்­டது போல, காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் போராட்­டங்­க­ளுக்கோ, காணி­களை மீட்கும் போராட்­டங்­க­ளுக்கோ இளை­ஞர்கள் திரண்டு வர­வில்லை. இதற்­கான கார­ணத்தை கண்­ட­றிய முனைய வேண்டும்.

தமிழ் மக்­களின் போராட்­டங்­களில் நியாயம் இருந்­தாலும், அதற்குக் கைகொ­டுப்­ப­தற்கு தயா­ராக தமிழ் மக்கள் இல்­லாத சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்­வாறு தமிழ் மக்­களின் பலத்தை ஒன்று திரட்டத் தவ­றி­யது, தமிழ் அர­சியல் தலை­மை­களின் தவறு தான் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இத்­த­கை­ய­தொரு பல­மான அடித்­த­ளத்தைக் கட்­டி­யெ­ழுப்பத் தவ­றி­ய­தா­னது, இலங்கை அர­சுக்கோ, சர்­வ­தேச சமூ­கத்­துக்கோ அழுத்­தங்­களைக் கொடுக்க முடி­யாத நிலையை தமிழர் தரப்­புக்கு ஏற்­ப­டுத்­தி­யது.

போருக்குப் பிந்­திய சூழல் ஏற்­ப­டுத்­திய முக்­கி­ய­மான தாக்­க­மா­கவும் இதனைக் குறிப்­பி­டலாம்.

இனி, இரண்­டா­வது விட­ய­மான, கால­

அ­வ­காசம் வழங்­கு­வ­தற்குப் பதி­லாக, மாற்று நட­வ­டிக்­கை­யாக எதனை வலி­யு­றுத்­து­வது என்ற விட­யத்­துக்கு வருவோம்.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யிடம் முதலில் சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ர­ணையை வலி­யு­றுத்­திய தமிழர் தரப்பு, இப்­போது கலப்பு விசா­ரணைப் பொறி­மு­றையை நடை­மு­றைப்­ப­டுத்தக் கோரும் நிலைக்கு கீழ் இறங்­கி­யி­ருக்­கி­றது.

ஆனால், கலப்பு விசா­ரணைப் பொறி­முறை விவ­கா­ரத்தைக் கூட நீர்த்துப் போகச் செய்யும் முயற்­சி­களில் அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ளது.

இந்தக் கட்­டத்தில் தான் அர­சாங்­கத்­துக்கு மேல­திக கால­அ­வ­காசம் வழங்­கப்­ப­டு­வதை தமிழர் தரப்பில் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அர­சாங்கம் கால­

அ­வ­கா­சத்தை பெறு­வது இழுத்­த­டிப்­ப­தற்கே ஆயினும், இதற்கு மாற்­றாக என்ன செய்­யக்­கூ­டிய நிலையில் தமிழர் தரப்பு இருக்­கி­றது என்று கவ­னிக்க வேண்டும்.

இந்த விவ­கா­ரத்தை ஐ.நா. பொதுச்

­ச­பைக்கு அல்­லது பாது­காப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை, சம்­பந்­தப்­பட்ட நாட்டின் ஒப்­பு­த­லுடன் தான் எதையும் செய்ய முடியும். எந்த நாட்டனதும் இறை­மையை பாதிக்கும் வகையில் செயற்­பட முடி­யாது. எனவே கால­அ­வ­கா­சத்தை நீடிப்­பதை விட ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் ஊடாக உறுப்பு நாடு­களால் மாற்றுத் தெரி­வாக வேறெ­தையும் செய்ய முடி­யாது.

அதை­விட மாற்றுத் தெரி­வாக உள்ள விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் மனோ­நி­லையில் உறுப்பு நாடுகள் இல்லை என்­ப­தையும் இங்கு நாம் கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது.

2011ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இழுத்­த­டிக்­கப்­பட்டு வந்த விவ­கா­ரத்­துக்கு ஐ.நா. பொதுச்­ச­பையோ, பாது­காப்புச் சபையோ ஒரே இரவில் தீர்வைப் பெற்றுத் தந்து விடும் என்று நம்­பு­வது யதார்த்­த­மா­ன­தல்ல.

ஏனென்றால், ஐ.நா. பொதுச்­ச­பையில் நிறை­வேற்­றப்­படும் தீர்­மா­னங்­க­ளினால், சுதந்­தி­ர­மான சர்­வ­தேச விசா­ரணை ஒன்றை ஏற்­ப­டுத்த முடி­யுமா என்­பதை விட, அத்­த­கை­ய­தொரு தீர்­மா­னத்தை நிறை­வேற்றும் வாய்ப்பு உள்­ளதா என்று பார்க்க வேண்டும்.

தற்­போ­தைய இலங்கை அர­சாங்கம் உலக நாடு­க­ளுடன் நல்­லு­றவை பலப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. உலகில் எதி­ரி­களே இல்­லாத நாடு என்று பெரு­மை­பட்டுக் கொள்ளும் நிலையில் இருக்­கி­றது.

இங்கு, இலங்­கைக்கு எதி­ராக ஒரு தீர்­மா­னத்தை கொண்டு வந்து நிறை­வேற்­று­வது சாத்­தி­ய­மா­னதா, அத்­த­கைய முயற்­சிக்கு கைகொ­டுக்கக் கூடிய நாடுகள் ஏதேனும் உள்­ள­னவா என்று பார்க்க வேண்டும்.

ஐ.நா. பொதுச்­ச­பையில் தீர்­மா­னத்தைக் கொண்டு வரு­வ­தற்கு தயா­ராக உள்ள நாடுகள் மட்டும் போதாது,

      தமி­ழர்­க­ளுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டை எடுத்து அதற்­காக வாக்­க­ளிக்கக் கூடிய நாடு­களும் அவ­சியம். அதற்கு வெறும் நீதியும், நியா­யமும் மட்டும் போதாது, பெரி­ய­ள­வி­லான இரா­ஜ­தந்­திர நகர்­வு­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டும். 

அதனைச் செய்­வ­தற்கு எந்த நாடு முன்­னிற்கப் போகி­றது அல்­லது தமிழர் தரப்புத் தான் அத்­த­கைய எந்த நட­வ­டிக்­கை­யை­யா­வது முன்­னெ­டுத்­தி­ருக்­கி­றதா? எது­வு­மே­யில்லை.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யி­லா­யினும், இலங்­கைக்கு நெருக்­க­டி­களை அழுத்­தங்­களைக் கொடுத்து, பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­மாறு அழுத்­தங்­களைக் கொடுக்க முடி­கி­றது. ஆனால் பொதுச்­ச­பையில் தீர்­மானம் நிரா­க­ரிக்­கப்­பட்டால், அடுத்து என்ன செய்ய முடியும்?

இது­போலத் தான் ஐ.நா. பாது­காப்புச் சபை என்­பது, ஐந்து 'வீட்டோ' அதி­கா­ரங்­களைக் கொண்ட நாடு­களின் கையில் உள்ள ஒன்று. அங்கு இலங்­கைக்கு எதி­ராக ஒரு தீர்­மா­னத்தைக் கொண்டு வந்து நிறை­வேற்ற எந்த நாடு தயா­ராக இருக்­கி­றது, எத்­தனை நாடுகள் ஆத­ர­வ­ளிக்கத் தயா­ராக இருக்­கின்­றன,

இவற்றை விட அத்­த­கைய தீர்­மானம் ஒன்­றுக்கு எதி­ராக 'வீட்டோ' அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­த­மாட்டோம் என்று ஐந்து வல்­ல­ரசு நாடு­களும் உறு­தியைத் தரத் தயாராக இருக்கின்றனவா- இல்லையே.

இலங்கையைக் காப்பாற்ற 'வீட்டோ' அதிகாரங்களுடன் சீனா, ரஷ்யா என்பன முடிந்தளவுக்கு மல்லுக்கட்டும். ஏன். அமெரிக்கா கூட அந்த முடிவை எடுக்கலாம்.

       ஏனென்றால் இன்றைய பூகோள அரசியல் போட்டியில், அமெரிக்காவுக்கு இலங்கை முக்கியம்.

எனவே, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இந்த விவகாரம் 'வீட்டோ' மூலம் நிராகரிக்கப்பட்டு விட்டால், எங்கு போய் நீதியைப் பெற முடியும்?

அங்குமிங்குமாக ஓடித்திரிந்து, காலத்தையும், பலத்தையும் வீணடிப்பதை விட, கிடைக்கக் கூடிய சந்தர்ப்பத்தை வலுவானதாகப் பயன்படுத்திக் கொள்வதே இன்றுள்ள சூழலில் முக்கியமானது.

காலஅவகாசம் இழுத்தடிப்பு உத்தியாகவே இருந்தாலும், அதற்கு இடமளிக்காத வகையில் தமிழர் தரப்பு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான உத்திகளையும் பொறிமுறைகளையும் உருவாக்கிக் கொள்ள முனைவது அவசியம்.

சர்வதேசமே நீதியைத் தரும் என்று நம்பிக் காலை வைத்து விட்டோம். இது ஒரு சேற்று நிலம். காலை அங்கும் இங்கும் இழுத்துக் கொள்ள முனைந்தால், இதுவே புதைகுழியாக மாறிவிடும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-03-12#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.