Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்வபுரத்தில் இராணுவத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்ட இளம்பரிதி, அவரது மனைவி, மூன்று பிள்ளைகள் எங்கே?

Featured Replies

செல்­வ­பு­ரத்தில் இரா­ணு­வத்தின் பொறுப்பில் எடுக்­கப்­பட்ட இளம்­ப­ரிதி, அவ­ரது மனைவி, மூன்று பிள்­ளைகள் எங்கே?

Untitled-1-97ad2707a63369b98c6cea575d0c4930c8f5e5cf.jpg

 

  பேரப்பிள்­ளைகள் ஏக்­கத்­துடன் பார்த்­ததை மறக்­க­மு­டி­ய­வில்லை என பெண் கதறல் 
(கரைச்சி நிருபர்)

மரு­ம­கனை பார்ப்­ப­தற்­காக நான்கு இலட் சம் கொடுத்தேன். ஆனால் இன்­று­வரை பார்க்­க­வே­யில்லை, பணம் வேண்­டி­யவர்­களும் காட்­ட­வு­மில்லை. அவர்­களும் இங்­கு தான் இருக்­கின்­றார்கள் என யாழ்.மாவட்ட புலி­களின் அர­சியல் துறைப்­பொ­றுப் ­பா­ள­ராக இருந்த இளம்­ப­ரிதி அல்­லது ஆஞ்சி என்­ப­வரின் மாமி­யா­ரான தங்­கவேல் சத்­தி­ய­தேவி (வயது 69) தெரி­வித்­துள்ளார். 

கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆலய முன்­றலில் 22 நாளாக தொடர் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­களின் போராட்­டத்தில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.  

 அவர் மேலும் தெரி­விக்­கையில்,

 உங்கள் மரு­மகள் ஆஞ்­சியை விடுலை செய்­வ­தற்கு இரு­பது இலட்சம் ரூபா செல­வ­ழிக்க வேண்டும். (அவர் தற்­போதும் விசு­வ­டுவில் இருக்­கின்றார்) பல உயர் மட்­டங்­க­ளுடன் பேச­வேண்டும். ஆஞ்சி இர­க­சிய இடம் ஒன்றில் இருக்­கின்றார் என என்­னிடம் தெரி­விக்­கப்­பட்­டது. நான் அவ­ரிடம் இரு­பது அல்ல எவ்­வ­ளவு வேண்­டு­மா­னாலும் செலவு செய்­யலாம் எனது மரு­மகன் மகள் பிள்­ளைகள் எங்கு இருக்­கின்­றார்கள் என்று காட்­டுங்கள் என்றேன்.

 அதற்கு அவர் மறு­ப­டியும் பார்க்க வேண்டும் என்­றாலும் ஒரு நான்கு இலட்சம் வரை செலவு செய்ய வேண்டும் என்றார். நான் 2009.-09.-19 அன்று தனியார் வங்கி ஒன்றில் என்­னிடம் தொடர்பு கொண்­டவர் குறிப்­பிட்ட மற்­றொரு நபரின் பெய­ருக்கு நான்கு இலட்சம் ரூபாவை வைப்புச் செய்தேன், அதற்­கான வங்­கியின் பற்றுச் சீட்டு கூட என்­னிடம் தற்­போ­துள்­ளது. பின்னர் அவர்கள் என்னை திரு­கோ­ண­ம­லைக்கு வரு­மாறு அழைத்­தனர் அங்கு சென்ற போதும் அவர்கள் சொன்­னது போன்று எதுவும் நடக்­க­வில்லை இதன்­பின்­னரே நாம் ஏமாற்­றப்­பட்­டுள்ளோம் என்­பதை உணர்ந்தோம்.

 2009.-05.-18 ஆம் திகதி வட்­டு­வாகல் ஊடாக செல்­வ­பு­ரத்­திற்கு நான் எனது மகள் மகா­லிங்கம் சிவா­ஜினி, மரு­மகன் சின்­னத்­தம்பி மகா­லிங்கம் (இளம்­ப­ரிதி, ஆஞ்சி) பேரப்­பிள்­ளை­க­ளான ம.மகி­ழினி (வயது 10) , ம.தழி­ளொளி (வயது 8) , எழி­லினி (வயது 3) என நாங்கள் ஆறு பேர் இரா­ணுவ கட்­டுப்­பாட்­டுக்குள் வந்தோம் அப்­போது இரா­ணுவ வீரர் ஒருவர் என்னை தட்டி "அம்மா நீங்கள் போங்கோ நாங்கள் இவர்­களை விசா­ரித்து விட்டு அனுப்­பு­கின்றோம்" என தன்­னு­டைய கொச்சை தமிழில் சொன்னார். இதன்­போது என்­னுடை மகள் ""இவா என்ற அம்மா"" என என்னைக் காட்டி கூற அவர் வயது போனவர் எனக் கூறி­விட்டு என்னை ஏனைய பொது மக்­க­ளுடன் அனுப்­பி­விட்­டார்கள்.

 இவர்­களை நான் பிரிந்த அந்தச் சந்­தர்ப்­பத்தில் மகள் தன்­னிடம் இருந்த எனது கட­வுச்­சீட்டு மற்றும் கொஞ்ச காசையும் தந்து கவ­ன­மாக போங்கோ, தம்­பி­யுடன் தொடர்பு கொண்டு வெளி­யால போங்கோ எனக் கூறினாள். அப்­போது நான் ஐயா என்­னு­டைய மகள், மரு­மகன் பேரப்­பிள்­ளைகள் மீண்டும் என்­னிடம் வந்து சேர­மாட்­டார்கள் என்று நினைக்­க­வில்லை. (கூறி கண்ணீர் விட்டு அழுதார்)

 நான் அவர்­களை விட்டு நகர்ந்து வர­வர என்­னு­டைய பேரப்­பிள்­ளைகள் கண்ணீர் விட்டு அழு­தார்கள். மூன்று வயது பிஞ்சு குழந்தை என்னை ஏக்­கத்­தோடு வெறித்து பார்த்­துக்­கொண்டே இருந்­தது. பத்து வயது மூத்தப் பேரப்­பிள்ளை "அம்­மம்மா" என அழைத்­தது இன்றும் கேட்­டு­கொண்டே இருக்­கி­றது. இந்தப் பிஞ்சுக் குழந்­தை­க­ளுக்கு என்ன நடந்­தது? எங்கு வைத்­தி­ருக்­கின்­றார்கள்?

 நான் எனது பார்­வைக்கு தெரி­யும்­வரை பார்த்­துக்­கொண்டே வந்தேன் மரு­மகன் ஆஞ்சி குனிந்த படியே இருந்தார். மகள் பேரப்­பிள்­ளை­களும் என்னை பார்த்­தப்­ப­டியே இருந்­தார்கள். பாதி­ரியார் ஒருவர் சற்று அருகில் இருந்தார். இவர்­க­ளுடன் நூற்­றுக்­க­ணக்­கான முன்னாள் போரா­ளிகள் பொறுப்­பா­ளர்­களை சி.டி.பி பஸ்ஸில் ஏற்­றி­னார்கள். இதுவே நான் இறு­தி­யாக கண்­டது. அதற்கு பின்னர் பல கதைகள் ஆஞ்சி தொடர்பில் தெரி­வித்­தார்கள். ஆனால் என்ன நடந்­தது என்றே தெரி­ய­வில்லை.

 இதே­வேளை 20.-05-.2009 அன்று எங்­க­ளையும் ஓமந்­தைக்கு கொண்டு வந்­து­விட்­டார்கள். நாங்கள் வந்த பஸ் ஓமந்தை பள்ளிக் கூடத்­திற்கு முன் வீதி­யோ­ர­மாக நிறுத்­தப்­பட்டு உணவு மற்றும் தண்ணீர் என்­பன வழங்­கப்­பட்­டன. இதன்­போது எங்­க­ளோடு இருந்த ஒரு பிள்ளை அம்மா ஆஞ்சி மாமா பள்ளிக் கூடத்­திற்குள் நிற்­கின்றார் என்றார். நான் பார்க்க முற்­பட்ட போது எங்­களை பஸ்ஸில் இருந்து கீழே இறங்க அனு­ம­திக்­க­வில்லை, அதே­நேரம் பஸ்ஸும் புறப்­பட்­டு­விட்­டது என்றார்

 இதன் பின்னர் பலரும் பல இடங்­களில் ஆஞ்­சியை பார்த்­த­தாக சொன்­னார்கள் ஆனால் நான் இன்­று­வரை எங்கும் காண­வில்லை. நானும் என்­னு­டைய பிள்­ளை­க­ளோடு சேர்ந்­து­வி­டு­வ­தற்­காக, பல வருத்­தங்­ளோடு காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் எல்லா போராட்­டங்­க­ளிலும் கலந்து கொண்டு வரு­கின்றேன். 2009.-05.-18 ஆம் திகதி நான் என்­னு­டைய பேரப்­பிள்­ளை­களை விட்டு விலகி வரும் போது பார்த்த அந்த வடி­வான பிஞ்சு முகங்கள் ஏக்­கத்­தோடு என்னை பார்த்­தது இப்­போது என் கண் முன்னே தெரி­கி­றது. நிம்­ம­தி­யாக கண்ணை மூடி படுத்­தாலும் அந்த 18 ஆம் திகதி நினை­வுகள் வருத்­து­கின்­றன.. இப்பொழுது நாங்கள் ஒரு மனநோயாளி மாதிரி இருக்கின்றோம். இப்படியே போனால் நாங்கள் முழுமையாகவே பாதிக்கப்பட்டுவிடுவோம். என்னுடைய பேரப்பிள்ளைகளை நினைக்கும் போதும் எனது நெஞ்சு வெடித்துவிடுவது போன்று இருக்கிறது. தயவு செய்து நாங்கள் எல்லோரும் அரசிடம் கையெடுத்து கும்பிட்டு கேட்கின்றோம் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தவர்களை விட்டுவிடுங்கள் எனக் கண்ணீர்விட்டு அழுதார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.