Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோயில் சிற்பங்களில் ஆபாச சிலைகள் இருப்பது ஏன்?..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் சிற்பங்களில் ஆபாச சிலைகள் இருப்பது ஏன்?..!!

on: மே 05, 2017

kovil*கோயில் சிற்பங்களில் ஏன் ஆபாச சிலைகள் இருக்கிறது ?*

*01. கோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும் குழப்பத்தையும் தருகிறது. இதன் மூலம் என்ன தெரிவிக்கிறார்கள்?*

*02. கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தால் மனம் அலைபாயும் அல்லவா?*

*03. பிறகு எப்பிடி முழு மனமும் தெய்வீகத்தில் ஈடுபடும். ஒரு வேளை காமமும் தெய்வீகம் என்று சொல்கிறார்களா?*

*04. ஏதோ ஒரு மிகப் பெரிய மர்மம் இந்தக் காமத்துக்கும் நம்ம தெய்வீக நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கற மாதிரி இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?*

*பல அன்பர்களின் ஆழமான கேள்விக்கு விளக்கமான பதில்…*
பொதுவாக எல்லோரும் கூறும் விடயம்
எல்லாம் வல்ல இறைவனை காண வேண்டும்
என்றால் “காம என்னம் தடையாகயிருக்கும்.
அத்தகைய காமத்தை, காம என்னத்தை,
குரோதம் (பலி பீடம்) கடந்து வந்தாலே
இறைவனை அடையலாம்” என்பார்கள்.

இதனை சற்று விவாதிப்போம் வாருங்கள்
கோபுரத்தை ஊருக்கு வெளியிலிருந்தே
பார்க்கும்போது கண்ணில் படுவது,
வானளாவிய கோபுரம் அது ரொம்ப
அழகாயிருக்க்கிறது என்று தோன்றும். அதை
பார்க்க அருகில் போவோம்.

கோபுரத்தை
அண்ணாந்து பார்க்கிறோம். அதில்
அடுக்கடுக்காக பல பொம்மைகள். கீழ்
வரிசையில் உள்ள உருவங்களில் சில ஆபாச
சிலைகள் காணப்படுகிறது.

ஆனால் அவற்றுடன் கூடவே யோகியரும்,
முனிவர்களும், உழவர்களும், குறவர்களும்,
அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாக
தேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும்,
அரசரும், வீரகாதைகளும் காட்டப்படுகின்றன
அவற்றில் ஆபாசமான தன்மை இல்லை
வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தைக் காட்டும்
பலவகையான சிலைகள் உள்ளன, அவற்றில்
உடலுறவுச்சிலைகளை மட்டும் தவிர்ப்பது
இந்து மதத்தின் வழக்கம் அல்ல.

வாழ்க்கையின்
எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு
ஒரு முழுமையை உருவகிக்கவே அது
முயல்கிறது. ஆகவே துறவுக்கு இருக்கும்
அதே முக்கியத்துவம் காமத்துக்கும்
இருக்கின்றது.

இது ஆலயங்கள் நமக்குக் கற்றுத் தரும் முதல்
பாடம். “நீ உன் மனதைக் கட்டுப் படுத்தினால்
உயர்வாய்” என்பதை போதிக்கிறது.
நம் மனத்திலே சிறிதளவும் தெய்வ நம்பிக்கை
இல்லை என வைத்துக் கொள்வோம். நம்
மனதிலே தோன்றுவது என்ன?
ஓகோ இந்தக் கோவிலுக்குள் சென்று
பார்த்தால் இன்னும் பல ஆபாசமான
காட்சிகளையும் காண முடியுமோ?
என்னும் எண்ணம்.

உள்ளே செல்கிறோம்.
அங்கு காண்பது என்ன?
நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபம் என
பெரிய பெரிய மண்டபங்கள். இவற்றில் மக்கள்
கூடி வேத மந்திரங்களைக் கற்கவோ, ஆன்மீக
சொற் பொழிவுகளைக் கேட்கவோ, இசை,
நடனம், நாடகம் போன்றவற்றைக் கேட்டு,
பார்த்து ரசிக்கவோ வசதிகள். சொல்லப்
போனால் இலவச பாடசாலைகள் தான்
கோயில்கள்.

வெளிப் பிராகாரம், நடுப் பிராகாரம், உள்
பிராகாரம் என ஒவ்வொன்றையும் சுற்றி
வருகிறோம். நல்ல வெளிச்சமாக இருந்த
வெளிப் பிராகாரத்தில் இருந்து உள்ளே செல்லச்
செல்ல வெளிச்சம் குறைந்து கொண்டே வந்து
கடைசியில் இறைவன் சிலைகள் உள்ள
கருவறையில் வழிபட்டு.

அங்கு எண்ணெய்
விளக்கின் ஒளியில் இறைவனின் உருவம்
மங்கலாகத் தெரிகிறது. பூஜை செய்பவர் ஒரு
தட்டில் கற்பூரத்தை ஏற்றி இறைவனின்
சிலைக்கு முன்னே சுற்றிக் காட்டுகிறார்.

இப்போது இறைவனின் முகம் நன்றாகத்
தெரிகிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்?
அடுத்த வினாடி கண்களை இறுக்க மூடிக்
கொண்டு ஆண்டவனை நினைக்கிறோம். நம்
மனக் கண்ணில் தெறிவது ஆண்டவனின்
உருவம்.

“உன்னுள்ளே உற்றுப் பார். என்னைக் காண்பாய்”
என்ற உன்னத தத்துவத்தை அல்லவா நமக்கு
வெகு எளிதாக போதித்து விட்டது ஆலயம்.
இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா
விஷயங்களுமே புனிதமானவை தான்.
எதையும் தவறாகச் செய்யும் போது அதன்
புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது.

உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால்
அது அர்த்தமுள்ள பேச்சு. அப்பேச்சுடன் தீய
வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால்
அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது.
ஒரு கலங்கிய மனதிலிருந்து எழும் வக்கிர
விகாரமாக காமத்தைக் காட்டும் சிலைகள்
தமிழரின் கோவில்களில் அமைந்திடவில்லை.

ஆபாச சிலை தோற்றமானது சூரியனை
வழிபடும் “சௌர மதத்தில்” காமத்தைக்
காட்டும் சிலைகள் பெருமளவு இருந்தன.
பின்னர் சௌரம் வைணவத்தில் கலந்த போது
அச்சிலைகள் விஷ்ணு ஆலயத்திலும்
இடம்பெற்றன. அதில் இருந்து பின்
படிப்படியாக மற்றைய கோயில்களுக்கும்
பரவியது என்று ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர்.

காமத்தை மனிதனின் இயற்கையான ஆற்றலாக
எண்ணுபவை நமது மதம். அந்த ஆற்றலை
அறிவதும் அறிவதன் மூலம் கடந்து
செல்வதுமே மானுட உண்மையின்
உச்சநிலையை அறிய உதவும் வழி என அவை
நினைத்தன.

ஆகவே அவை காமத்தை அறிவின்
வழியாகக் கண்டன. அந்த நமது மத மரபும்
பாலியல் சிற்பங்களை உருவாக்கியது.
நமது மதம் நீங்கள் மன ஒருமை கொண்டு
கற்போடு வாழ்வதற்காகத் திட்டமிட்டு
உருவாக்கப்பட்ட ஒரு நன்னெறி தொகுப்பு
அல்ல.

அது வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு
மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக்கலந்து
உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை.
அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த
அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை
உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின்
கடமை.

புனிதமான தாம்பத்ய உறவு
இல்லையென்றால்
குழந்தைகள் எப்படிப் பிறக்கும்?
உலக இயக்கம் எப்படி நடக்கும்?
உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி,
கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே
இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம்.

இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு
என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக்
கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை
வாய்ந்தது.

சினிமா, நாடகம், டிவி போன்றவை வந்து,
இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு,
கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு
புனிதமாக வாழும் நெறியை மனித இனம்
உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட
சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு
ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.

இந்து கோவில்களில் ஆபாசம் எதற்கு?
இதற்கான காரணம் மனிதனின் எண்ணத்தில்
இருந்து ஆரம்பம் ஆகிறது.

காமம் இயற்கையின் இனவிருத்திற்கு
முக்கியமான ஒன்று.

அக்காமம் ஒவ்வொரு உயிரினத்திர்கும்
ஒவ்வொரு விதமான தன்மையில் மாறுபடும்.
மனிதனின் வாழ்நாளில் சிறுபகுதியே காமம்
அக்காமம் புனிதமானது.

அதுவே நாளின் அனைத்து பொழுதிலும்
மனித தன்மைக்கு அப்பாற்பட்டு மிருகத்தின்
நிலையில் ஆகும் பொழுது அக்காமம் வக்கிர
காமம் ஆகிறது.

இதையே வக்கிர புத்தி என்றார்கள்.
மனிதனின் எண்ணத்திற்குக்கும் கண்களினால்
எழும் ஒளிக்கதிர்கும் சம்பந்தங்கள் உள்ளது.
கண்களினால் எழும் ஒளிக்கதிர் எண்ணும்
எண்ணத்திற்கு ஏற்றார்போல்
நன்மையாகவும்,தீமையாகவும்
விளைகின்றது.

இதையே முன்னோர்கள் நல்லதையே நினை
நல்லது நடக்கும் என்றார்கள்.
“ஊன் பற்றி நின்ற உணர்புற மந்திரம்
தான் பற்றி நிற்கும் தலைபடும் தாமே”
என்ற திருமந்திர திருபதிகம் மூலமும்
உடலால் பற்றிய பற்றுகளால் நன்மை,தீமை
தானே விளையும் என அறியலாம்.

இனி கோவிலின் அமைப்பை பார்ப்போம்.
கோவிலின் முகப்பு கோபுரம் ஏன் இவ்வளவு
உயரமாக அமைத்தார்கள்.

நவதானியங்கள் எனப்படும் மனிதனுக்கு
அத்தியாவசியமான
நெல்,கோதுமை,பாசிப்பயறு,
துவரை,மொச்சை,எள்,கொள்ளு,
உளுந்து,கடலை முதலானவைகளை இயற்கை
சீற்றத்திலுருந்து காக்கவே உயரமான
கோபுரத்தை அமைத்து அதில் கலசம் எனும்
சிறப்பு பாத்திரத்திலே வைத்தனர்.

கலசத்தின் வடிவம் மேற்கூறை
கூர்மையானதாக காற்று புகாத வண்ணம்
அமைத்தனர்.

இக் கலசம் கோவிலின் இடிமின்னல்களை
தாங்கும் சக்தியும் கொண்டது.
கலசத்தின் உள்இருக்கும் தானியங்கள் 12
வருடம் விதையின் தன்மை மாறாமல்
உயிருடன் இருக்கும்.

இயற்கை சீற்றத்தினால் விதைகள்
அழிவுற்றால் இக்கலசத்தில் இருந்து எடுத்து
விவசாயம் செய்யலாம் என்பதே
முன்னோர்களின் நோக்கம்.

இத்தானிய கலசத்தை வக்கிரபுத்தி
கொண்ட ஒருவன் கண்டால் அவன் கெட்ட
எண்ணத்தாலே அத்தானியங்களின் ஆயுள்
குறையும். இவர்களால் யாதொரு நன்மையும்
இல்லை தீமையே அதிகம்.

முள்ளை முள்ளால் எடுப்பது போல
வக்கிரத்தை வக்கிரத்தால் அழித்தனர்.
கண்ணில் தென்படும் விதத்தில் வக்கிர
சிலைகளை வடிவமைத்தனர்.

வக்கிரவாதி கண்கள் தனக்கு தேவையான
வெறும் சிலைகளை ரசித்தது.
தானியகலசம் இவன் எண்னத்திற்கும்
எட்டாமல் போயிற்று.

கோவிலின் உள்ளே ஏன் வக்கிர சிலைகள்
அமைத்தார்கள்?
வெளி பிரகாரத்திலே கெட்ட எண்ணம்
கொண்டவர் நிற்க.

கருவறையில் நல்ல எண்ணம் கொண்டவர்
நிற்க என பிரிப்பார் இல்லாமலேயே
வகைபடுத்தி புறம்தள்ளினார்கள்.

நல்ல எண்ணம் கொண்டவர்கள் வக்கிரத்தை
தாண்டி மூலத்தை அடைகிறார்கள்.
“வக்கிரம் என்றுமே வெளியில் இருக்கும்
அடிமையாக”

எண்ணத்தின் அதிர்வலைகளின் குவியலே
பிரார்தனை
அப்பிரார்தனையில் தீய எண்ணங்களின்
அதிர்வுகள் கலக்காமல் இருக்கவும் இது
போன்ற சூட்சம வழிமுறைகளை வகுத்தனர்
முன்னோர்கள்.

முன்னோர்கள் செயல் காரணம் இல்லாமல்
இல்லை. செயல் அறியாத சிலரே குறை
கூறுகின்றார்கள்
இக்கேள்விக்கு ஆயிரம் காரணங்கள் அறிஞர்கள்
சொல்லியிருக்கிறார்கள்.

 

http://lankasee.com/2017/05/05/கோயில்-சிற்பங்களில்-ஆபாச/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.