Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மேதின நிகழ்வுகளும் கட்சிகளின் நிலைப்பாடுகளும்

Featured Replies

மேதின நிகழ்வுகளும் கட்சிகளின் நிலைப்பாடுகளும்

 

இலங்­கை­யி­லுள்ள கட்­சிகள் மேதினக் கூட்­டங்­களை, தமது கட்சி நல­னுக்­கா­கவும் ஆட்சி நல­னுக்­கா­கவும் இருப்­புக்­களைக் காத்துக் கொள்­வ­தற்கும் எவ்­வாறு பயன்­ப­டுத்திக் கொள்­கின்­றன என்­பதை தனித் த­னி­யாக மதிப்­பீடு செய்து பார்ப்­பதன் மூலம் அவற்றின் தாற்­ப­ரி­யங்­களைப் புரிந்து கொள்ள முடியும்.  

 

தமது மேதா விலா­சத்தை வெளிப்­ப­டுத்­தவா, மேதி­னத்தை இலங்­கையின் தேசி­யக்­கட்­சி­களும் பிராந்­தியக் கட்­சி­களும் விழாவாக கொண்டாடின என்று ஏழைப் பாட்­டா­ளி­களும் விவ­சா­யி­களும் கேட்­கு­ம­ள­வுக்கு இவ்­வ­ருட மேதின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

ஏழைப்­பாட்­டா­ளி­களின் மற்றும் விவ­சா­யி­களின், அடிப்­படைப் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைகள், முத­லா­ளித்­துவ கெடு­பி­டிகள் ஏகா­தி­பத்­திய விஸ்­த­ரிப்­புக்கள். சமூக ஏகா­தி­பத்­தியக் கொடு­மைகள், சுரண்­டல்கள் பூர்­சுவா மேலா­திக்­கங்கள் என்­ப­வற்­றுக்­கெ­தி­ராக கொண்­டா­டப்­படும் மேதின நிகழ்­வுகள், இலங்­கை­யி­லுள்ள கட்­சி­களும் தொழி­லாளர் சங்­கங்­களும் தமது கட்சிப் பலத்­தையும் மக்கள் செல்­வாக்­கையும் தேச­ம­றியச் செய்யும் விழா­வா­கவும் கொண்­டாட்­ட­மா­கவும் நடத்­தி­யி­ருக்­கின்­றன. இன்­னு­மொ­ரு­வ­கையில் கூறு­வ­தானால் யார் பலம் கொண்­ட­வர்கள் என்று நிரூ­பிக்கும் போட்­டி­யா­கவே மேதின நிகழ்­வுகள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

தேசியக் கட்­சிகள் என்று தம்மை உயர்த்­திக்­காட்டும் ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி நாட்டில் நிலவும் உழைப்­பாளர் வர்க்­கத்தின் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கோ நாட்டின் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­க­ளான, வளர்ச்­சி­யின்மை தேசிய வரு­மான வீழ்ச்சி, அந்­நியச் செலா­வணி பற்­றாக்­குறை, அந்­நியக் கடன்­களின் உக்­கிரம், வேலை­யில்லாப் பிரச்­சினை, பண­வீக்கம், வரி­களின் நெருக்கு நிலைகள் என்­ப­வற்­றை­யெல்லாம் மறந்து போய், சூழ்ச்­சி­களால் எம் கட்­சியின் வளர்ச்­சியை தடுத்­து­விட முடி­யாது, எந்­த­வொரு தேர்­த­லையும் எதிர்­கொள்­ளத்­த­யா­ராக இருக்­கிறோம், அரசை வீட்­டுக்கு அனுப்பும் வேலைத்­திட்டம் தயா­ரிக்­கப்­பட்டு விட்­டது. முடி­யு­மானால் தேர்­தலை நடத்திக் காட்­டுங்கள். மலை­யக மக்­களும் ஏனைய சமூ­கத்­துக்கு நிக­ரான சமூ­க­மாக மாற­வேண்டும். அவர்கள் சின்ன முத­லா­ளி­க­ளாக உய­ர­வேண்டும் என கட்­சிகள் வெற்றுக் கோஷங்­க­ளையும் வார்த்தை ஜாலங்­க­ளையும் உச்­ச­ரித்து மேதி­னத்தைக் கொண்­டா­டி­யி­ருப்­பதைக் காண்­கின்றோம்.

இலங்­கை­யி­லுள்ள தேசி­யக்­கட்­சிகள் மற்றும் பிராந்­தியக் கட்­சிகள், இடது சாரிக் கட்­சிகள், சிறு­கட்­சிகள் என்­ற­வ­கையில் தாம் தாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னைகள், யதார்த்­த­மான வாழ்­வியல் நிலை­க­ளுக்­காக, போரா­ட­வேண்­டி­யதும் குரல் கொடுக்க வேண்­டி­யதும் அந்­தந்த கட்­சி­களின் அடிப்­ப­டை­யான கடப்­பா­டு­க­ளாகும். ஆனால் இலங்­கையைப் பொறுத்­த­வரை மக்கள் என்­னி­லைப்­பட்­டா­லென்ன, எவ்­வகை சமூக, பொரு­ளா­தார கஷ்­டங்­களை அனு­ப­வித்­தா­லென்ன, அது ஒரு புறம் இருக்­கட்டும் எமது ஆட்சி அதி­கா­ரங்­க­ளையும் ஆச­னங்­க­ளையும் தக்­க­வைப்­பதே எமது அடிப்­படை இலட்­சி­ய­மென்ற தாகத்­துடன், தேர்தல் வெற்­றி­களை நோக்­கியும் பாரா­ளு­மன்ற மற்றும் மாகா­ண­சபை, உள்­ளூ­ராட்சி கதி­ரை­களை நோக்கி கட்­சி­களை நடத்திச் செல்லும் போக்­கையே, இம்­முறை நடந்­தே­றிய மேதினக் கூட்­டங்­களின் கோஷங்­களும் உரை­களும் பேர­ணி­களும் ஊர்­வ­லங்­களும் எடுத்துக் காட்­டு­கின்­றன.

இலங்­கை­யி­லுள்ள கட்­சிகள் மேதினக் கூட்­டங்­களை, தமது கட்சி நல­னுக்­கா­கவும் ஆட்சி நல­னுக்­கா­கவும் இருப்­புக்­களைக் காத்துக் கொள்­வ­தற்கும் எவ்­வாறு பயன்­ப­டுத்திக் கொள்­கின்­றன என்­பதை தனித்­த­னி­யாக மதிப்­பீடு செய்து பார்ப்­பதன் மூலம் அவற்றின் தாற்­ப­ரி­யங்­களைப் புரிந்து கொள்ள முடியும்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மேதினக் கூட்டம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கண்­டி­யி­லுள்ள, கெட்­டம்பே மைதா­னத்தில் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்­துக்கு நாட்டின் பல பா­கங்­க­ளி­லு­மி­ருந்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். இவர்­க­ளுக்­கு­ரிய போக்­கு­வ­ரத்து வசதி, உணவு வசதி மற்றும் ஏனைய வச­திகள் அனைத்தும் உண்­டாக்கிக் கொடுக்­கப்­பட்டு, வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். முன்னாள் ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்கள் கட்­சித்­த­லை­வர்கள், தொழிற்­சங்கத் தலை­வர்கள் என ஏகப்­பட்ட பட்­டாளம் ஒன்று கூடி­யி­ருந்­தனர். ஏலவே, மேதி­னத்­துக்கு பிர­சன்­ன­மா­கா­த­வர்கள் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வார்கள், இடை­நி­றுத்­தப்­ப­டு­வார்கள், விலத்­தப்­ப­டு­வார்கள், பத­விகள் வறி­தாக்­கப்­படும் என பய­மு­றுத்­தப்­பட்­டதன் பேரில் நெரிசல் ஏற்­படும் அள­வுக்கு இவர்கள் எல்­லோரும் ஒன்று கூட்­டப்­பட்­டுள்­ளனர்.

பொது­வா­கவே ஆளும் அர­சாங்­க­மாக இருந்தால் அதி­கா­ரத்தைப் பாவித்து எதையும் செய்ய முடி­யு­மென்­ப­தற்கு இதற்கு முன்­னைய காலங்­களில் நிறை­யவே பார்த்­தி­ருக்­கிறோம். இங்கு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, “நாட்டை பிள­வு­ப­டுத்­து­கிறோம், காட்டிக் கொடுக்­கிறோம், நாட்டின் வளங்­களை விற்­கிறோம், பௌத்த மதத்தை இல்­லாது ஒழிக்­கப்­பார்க்­கிறோம், புதிய அர­சியல் அமைப்பின் மூலம் பௌத்த மதத்­துக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது என்­றெல்லாம் எதிர்த்­த­ரப்­பினர் குற்றம் சாட்­டு­கி­றார்கள்.

கட்­சியின் தலைவர் என்ற வகையில் என்னை நீங்கள் நம்­பலாம். நான் இந்த நாற்­கா­லியில் அமர்ந்­தது நாட்டை சீர்­கு­லைப்­ப­தற்­கல்ல. தேசிய நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பி வெளி­நாட்டு அழுத்­தங்­க­ளி­லி­ருந்து நாட்டை காப்­ப­தற்கே. எந்­த­வொரு நாட்­டுக்கும் நம் நாட்டின் சிறு துண்டு நிலத்தைக் கூட விற்­க­மாட்டேன். துறை­மு­கத்தை சீனா­வுக்கு தாரை வார்த்துக் கொடுத்­துள்­ளார்கள்.

இன்று சர்­வ­தே­சத்தை வெற்றி கொண்­டுள்ளோம். ஒரு இனத்தை ஒதுக்கி நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. இனம், மதம் பார்க்­காது ஒற்­று­மை­யாக சுதந்­தி­ரத்தை வென்றோம். ஆனால் அதி­கா­ரத்­துக்­காக பிரிந்து பின்னர் செயற்­பட்டோம். இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் தாய் நாட்டை வென்­றெ­டுத்தோம்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து யாரையும் நான் விலத்­த­வில்லை. கட்­சி­யி­லி­ருந்து செல்ல வேண்­டா­மென்றோ வர­வேண்­டா­மென்றோ கூறி­ய­தில்லை. நான் கட்சிப் பத­வியை பல­வந்­த­மாக பறித்­துக்­கொள்ள வில்லை. அது எனக்கு வழங்­கப்­பட்­டது. ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் எமது கட்சி இணைந்து செயற்­ப­டு­வது தொடர்பில் விமர்­ச­னங்கள் இருக்­கலாம். அவ்­வாறு செயற்­ப­டு­வ­த­னால்தான் சர்­வ­தே­சத்தை வெற்றி கொள்ள முடிந்­தது, என ஜனா­தி­பதி தனது மேதின உரையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அவ­ரது உரை முழு­வ­துமே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மை­யி­லான, பொது எதி­ர­ணியின் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு (பதில் எழுதும் ஒரு மாண­வனைப் போலவே) அமைந்திருந்தது.

ஒரு தேசத்தின் தலைவர் என்ற வகையில் எதிர்க்­கட்­சி­யினர், எதிர்த்­த­ரப்­பினர் விடுக்கும் கேள்­வி­க­ளுக்கும், சந்­தே­கங்­க­ளுக்கும், குற்­றச்­சாட்­டு­க­ளுக்கும் பதில் அளிக்க வேண்­டிய பாரிய கடமை ஜனா­தி­ப­திக்கு உண்டு என்று கூறிக்­கொண்­டாலும், ஆரோக்­கி­ய­மான ஒரு நாட்டை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய தலைவன் என்ற வகையில் கட்­சி­ பே­தங்கள், விமர்­ச­னங்கள், குற்­றச்­சாட்­டுக்கள் என்­ப­வற்­றுக்கு அப்பால் தன்னை சுதா­க­ரித்துக் கொண்டு தேசிய வளர்ச்சி, தேசிய இணக்­கப்­பாடு, சகல இன, மதங்­க­ளுக்­கான ஒற்­றுமை, புரிந்­து­ணர்வு ஆகி­ய­வற்றை வளர்த்­தெ­டுப்­ப­தற்கு தானும் தன்­னு­டைய மக்­களும் எவ்­வாறு செயற்­பட வேண்டும், உழைக்க வேண்டும் என்­பதில் ஒரு தூர சிந்­தனை கொண்­ட­வ­ராக வகி­பாகம் மேற்­கொள்­வ­துதான் உயர்ந்த நாட்டை ஆக்­கு­வ­தற்­கு­ரிய உள்­ளீ­டாக இருக்க முடியும்.

நாடு, தேசம், மக்கள் என்ற எல்­லா­வற்­றையும் மறந்­து­விட்டு நான் என்­னு­டைய ஆட்சி, கட்சி, கொள்கை என்ற போக்கை, வலி­மைப்­ப­டுத்தும் வகையில் பலப்­ப­டுத்தும் எண்­ணத்­துடன் தலைவன் ஒருவன் செயற்­ப­டு­வது என்­பது ஆகாத காரியம். இன்­றைய ஜனா­தி­ப­தி­ தனது இளமைக் காலத்தில் கம்­யூ­னிஷம் பற்றி கனவு கண்­ட­தாக, தானே குறிப்­பிட்­டுள்ளார். சீன கம்­யூ­னி­ஷத்தின் வழி­பாட்­டா­ள­ராக விளங்­கிய சண்­மு­க­தா­சனின் போக்கை நிரா­க­ரித்து தான் தன்னை விலத்திக் கொண்­ட­தா­கவும் கூறி­யுள்ளார். அது­வு­மன்றி, தேசியப் பொரு­ளா­தா­ரத்தில் முக்கால் பங்கு வகிக்கும் விவ­சா­யத்­து­றையை நம்­பி­யி­ருக்கும் பிர­தே­சத்­தி­லி­ருந்து அர­சி­யலை தேர்ந்­தெ­டுத்­தவர் என்ற வகையில் ஏழைப் பாட்­டா­ளிகள், விவ­சா­யிகள் உழைக்கும் வர்க்­கத்தின் உயர்ச்­சியை உயர்த்தும் ஆட்­சி­மு­றைக்கு அவர் மூல­கர்த்­தா­வாக விளங்க வேண்டும்.

நாட்டின் தேசியக் கட்­சி­யென்ற வகை­யிலும் இந்த நாட்டின் ஆட்சி பீடத்தில் பல தட­வைகள் அமர்ந்­த­வர்கள் என்ற வகை­யிலும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி நடத்­திய மே தினக் கூட்­டத்­தினை மதிப்­பீடு செய்து பார்க்க வேண்­டி­யுள்­ளது.

ஐக்கிய தேசிய கட்­சியின் மேதி­னக்­கூட்டம் கட்சித் தலை­வரும், பிர­த­ம­ரு­மா­கிய ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கொழும்­பி­லுள்ள, பொரளை கெம்பல் மைதா­னத்தில் நடை­பெற்­றது.

இக்­கட்­சியின் ஊர்­வ­ல­மா­னது, மரு­தா­னை­யி­லி­ருந்து ஆரம்­ப­மாகி மாளி­கா­வத்தை, பிர­தீபா மாவத்தை, பாலம் சந்தி, காமினி சுற்­று­வட்டம் வரை­யி­லான பகு­தியில் ஒன்று சேர்ந்து பல திசை­க­ளி­லு­மி­ருந்து வந்த மக்கள் பிர­தான மைதா­னத்தில் ஒன்று கூடினர். பேர­ணியில் தொழிற்­சங்­கங்கள், பெண்கள் அமைப்­புக்கள், இளைஞர் அணி­யினர் என ஏரா­ள­மா­ன­வர்கள் ஒன்று கூடி­யிருந்தனர்.

இக்­கூட்­டத்தில் ஐ.தே.கட்­சியின் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண அமைச்­சர்கள் மற்றும் கட்­சி­களின் முக்­கி­யஸ்­தர்கள், முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, தேசிய தோட்டத் தொழி­லாளர் சங்க செயலாளர் வடிவேல் சுரேஷ், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் என ஏரா­ள­மா­ன­வர்கள் கலந்து கொண்­டதை பத்­தி­ரி­கை­களும் தொலைக்­காட்­சி­களும் அழ­காகப் படம் பிடித்­துக்­காட்­டின.

இங்கு உரை­யாற்­றிய கட்­சியின் தலை­வரும் பிர­தம­ரு­மா­கிய ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எந்­த­வொரு தேர்தல் சவா­லையும் முகங்­கொ­டுக்க தயா­ராக இருக்­கிறோம். இந்து சமுத்­தி­ரத்தில் இலங்­கையை வர்த்­தக கேந்­திர மத்­திய நிலை­ய­மாக உரு­வாக்­கு­வதே எமது இலக்கு. நாட்டில் பல பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இந்­தி­யாவும் ஜப்­பானும் இணங்­கி­யுள்­ளன. இழக்­கப்­பட்ட ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை மீளப்­பெற்­றி­ருப்­பது அர­சாங்­கத்­துக்கு பாரிய வெற்றி. எமது அர­சியல் பாதையில் பாரிய குழி­யி­ருந்­தது. அதில் விழு­வதைத் தடுப்­ப­தற்­கா­கவே நாம் பல கட்­சி­க­ளுடன் கூட்டுச் சேர்ந்தோம். மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெல்ல வைத்தோம். தேசிய அர­சாங்கம் அமைத்தோம்.

முன்னாள் ஜனா­தி­பதி நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் பாரிய பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார். இப்­பொ­ரு­ளா­தா­ரத்தை இனிமேல் கட்­டி­யெ­ழுப்ப முடி­யா­தென ராஜபக் ஷ உள்­ளிட்ட பலரும் எமக்கு சவால் விடுத்­தி­ருந்­தனர். ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை மீது முழு­மை­யான நம்­பிக்கை கொண்­டுள்­ளது. நாடு முன்­னேற்­ற­ம­டைய வேண்­டு­மாயின் ஏற்­று­மதி அதி­க­ரிக்க வேண்டும். முன்னாள் ஜனா­தி­ப­தியே ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை இழக்க செய்தார். இப்­பொ­ழுது அதை மீண்டும் பெற்­றுள்ளோம்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண்­ப­தற்கு சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு மிகவும் அவ­சி­ய­மா­னது. இன்னும் இரு மாதத்­துக்குள் புதிய அர­சியல் அமைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கையை சமர்ப்­பிக்க முடியும். இவ்­வ­ரு­டத்­துக்குள் அர­சியல் தீர்வு கொண்­டு­வ­ரப்­ப­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது உரையில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதே­வேளை, இட­து­சாரி சித்­தாந்­தங்­களை சுவீ­க­ரித்து செயற்­ப­டு­வ­தாக கூறிக்­கொள்ளும் ஒரு கட்­சி­யான மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் மே தினக் கூட்­ட­மா­னது, கடந்த காலங்­களைப் போல் அல்­லாது ஆட்­சி­யா­ளர்­களின் கொள்­கைகள் கோட்­பா­டு­க­ளையும் தேசியக் கட்­சி­களின் அடிப்­ப­டை­வா­தத்­தையும் கடு­மை­யாக விமர்­சிக்கும் பாங்கில் நடத்­தப்­பட்­டது. ஜே.வி.பி. ஏற்­பாடு செய்­தி­ருந்த மே தினக்­கூட்டம் கொழும்பு பி.ஆர்.சி. மைதா­னத்தில் நடை­பெற்­றது. செஞ்­சட்டை அணிந்த ஆயி­ரக்­க­ணக்­கான கட்சிப் போரா­ளிகள் ஒன்று கூடி நின்­றனர். இதில் கியூபா, கிரேக்கம், பிரித்­தா­னியா, இந்­தியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வந்­தி­ருந்த இடது சாரிக் கட்­சி­களின் மத்­திய குழு உறுப்­பி­னர்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இங்கு உரை­யாற்­றிய ஜே.வி.பி. தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க, புலிகள் மீண்டும் எழுச்சி பெறப்­போ­கி­றார்கள் என தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக சிங்­க­ள­வர்­களை தூண்டி இழந்த ஆட்­சியைப் பிடிக்க மஹிந்த ராஜபக் ஷ முயற்­சிக்­கிறார். வடக்கில் இனி­யொ­ரு­போதும் ஆயுதப் போராட்டம் ஏற்­பட நாம் அனு­ம­திக்கப் போவ­தில்லை. நாட்டை பிச்­சை­யெ­டுக்கும் நாடாக மாற்­றிய ஆட்­சி­யா­ளர்­களை தூக்­கி­யெ­றி­யுங்கள். 69 வரு­டங்­க­ளாக ஆட்சி செய்த ஆட்­சி­யா­ளர்கள் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் சுற்­றுலா ரீதி­யா­கவும் நாட்டை மோச­மான நிலைக்கு இட்டு சென்­றி­ருப்­ப­துடன் சர்­வ­தே­சத்­திடம் பிச்சை எடுக்கும் நிலையை உரு­வாக்­கி­யுள்­ளனர்.

பிர­தமர் ரணில் நாட்­டுக்கு சொந்­த­மான அரிய வளங்­களை வெளி­நாடுகளுக்கு விற்­ப­தற்கு தீவிரம் காட்டி வரு­கிறார். ஜனா­தி­ப­தியோ உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களை நடத்தப் பயப்­ப­டு­கிறார் என அர­சையும் தேசிய கட்­சி­க­ளையும் கடு­மை­யாக விமர்­சித்­ததை காண்­கிறோம்.

ஜனா­தி­பதி, பிர­தமர், ஜே.வி.பி. தலைவர் ஆகிய மூவ­ரு­டைய மே தின உரை­யிலும் பிர­தான நப­ராக காட்­டப்­பட்­டி­ருப்­பவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவே. இன்­றைய அர­சியல் போக்கில் முன்னாள் ஜனா­தி­பதி பிர­சித்­த­மா­ன­வ­ரா­கவும் கவ­னத்­துக்­கு­ரி­ய­வ­ரா­கவும் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­ப­வ­ரா­கவும் ஏன் காணப்­ப­டு­கிறார் என்­பதை தலை­வர்கள் ஒவ்­வொ­ரு­வரும் ஆற்­றிய உரை­க­ளி­லி­ருந்து இல­கு­வா­கவே அறிந்து கொள்ள முடி­கி­றது.

இலங்­கையின் இன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சிம்ம சொப்­ப­ன­மாக விளங்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இவ்­வ­ளவு கவ­னப்­பாடு கொண்­ட­வ­ராக எல்­லோ­ராலும் பேசப்­ப­டு­கின்ற, விமர்­சிக்­கப்­ப­டு­கின்ற அவரின் மே தின உரை என்ன கட்­டி­யத்தைக் கூறு­கி­றது என சிறிது நோக்­கலாம். நாட்டில் ஆட்சி செய்யும் இந்த அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்பும் வேலைத் திட்­டத்தை காலி­மு­கத்­தி­ட­லி­லிருந்து ஆரம்­பித்­துள்ளோம். முடி­யு­மானால் உள்­ளூ­ராட்சி தேர்­தலை அரசு நடத்­திக்­காட்­டட்டும்.

அர­சாங்கம் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை விற்று வரு­கி­றது. திரு­மலைத் துறை­மு­கமும் அவ்­வாறே. எனது அர­சாங்­கத்தைக் கவிழ்க்க 660 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செல­வி­டப்­பட்­டுள்­ளது. பயங்­க­ர­வா­தத்தை இல்­லாது ஒழித்தேன். அரசின் மோச­டி­களால் நாட்டின் கடன் ­சுமை அதி­க­ரித்­துள்­ளது. இரா­ணுவ வீரர்­களை காட்­டிக்­கொ­டுக்­கி­றார்கள் என்ற கடு­மை­யான விமர்­ச­னங்­களை அர­சுக்­கெ­தி­ராக மஹிந்த வைத்­தி­ருந்தார்.

இம் மேதினக் கூட்­டத்தில் ஸ்ரீலங்கா பொது ஜன பெர­முன, லங்கா சம­ச­மாஜ கட்சி, ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணி, மக்கள் ஐக்­கிய முன்­னணி, இலங்கை சோஷ­லிச தொழி­லாளர் சங்கம், தேசிய சுதந்­திர முன்­னணி, வர்த்­தக மற்றும் தொழில் ஊழியர் சங்கம் ஆகிய ஏழு கட்­சி­களும் சங்­கங்­களும் இணைந்து பொது எதி­ர­ணியின் மே தினக் கூட்டம் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இவை ஒவ்­வொன்றும் ஒன்­றுக்­கொன்று வசை­பா­டு­வ­திலும் ஒன்றை மற்­றொன்று விமர்­சிப்­ப­திலும் கவனம் செலுத்­தி­ய­தையே காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது என்­பது பொது­வான அபிப்­பி­ரா­ய­மாகும். இன்னும் தெளி­வாக கூறு­வ­தானால் ஐ.தே.க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஜே.வி.பி. ஆகிய மூன்று கட்­சி­களும் தமது பொது எதி­ரி­யான மஹிந்த ராஜபக் ஷவை வசை­பா­டு­வ­திலும், அவர் மீண்டும் எதிர்­வரும் காலத்­தேர்­தல்­க­ளான உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்­தல்­களில் மீள் எழுச்சி பெற்று விடுவார் என்ற பயத்தின் கார­ண­மாக நிந்தா துதி­பா­டு­வ­தற்கு மே தினத்தைப் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­மையை காணக்­கூ­டி­ய­தாக இருந்­துள்­ளது.

இதே­வேளை, பொது எதி­ர­ணி­யினர் நல்­லாட்சி அர­சாங்­கத்தை வீழ்த்தி மீண்டும் ஒரு மஹிந்த ஆட்­சியை மீள் எழுச்சி பெற வைக்க வேண்­டு­மென்ற தீவி­ரத்­துடன் செயற்­பட்டு வரு­வ­தையே பொது எதி­ர­ணியின் மேதினச் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. புள்­ளி­யிட்டு கூறு­வ­தானால் நல்­லாட்சி அரசை தக்­க­வைக்கும் முயற்­சி­களில் ஈடு­படும் ஒரு குழுவும் அவ்வாட்­சியை வீழ்த்தி புதிய ஆட்­சியை கொண்­டு­வர வேண்­டு­மென கங்­கணம் கட்டும் மறு குழுவும் போட்டி போடும் மேடை­க­ளாக மேதின மேடைகள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இது இவ்­வாறு இருக்க வட­க்கு, கி­ழக்­குக்கு வெளியேயுள்ள நிலை­மைகள் சற்றும் வித்­தி­யாசம் கொண்டதாக இருந்து அப்பகுதிகளில் தம் மக்கள் சார்ந்த, பிர­தேசம் சார்ந்த, இனம் சார்ந்த பிரச்­சி­னை­க­ளுக்கு முக்­கியம் கொடுத்து மேதினக் கூட்­டங்­கள் நடத்­தப்பட்டிருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது மேதின கூட்­டத்தை அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு மைதானத்தில் நடத்தியிருந்தது. இங்கு கூட்டமைப்பின் 15 அம்ச பிரகடனம் வெளியிடப்பட்டது.

இணைந்த வடகிழக்கில் கூட்டாட்சி முறைமையை ஏற்படுத்தி முழுமையான அதிகாரப் பகிர்வை வழங்கக் கூடிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும், போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீர்வு உடனடியாக காணப்பட வேண்டும், ஐ.நா. தீர்மானத்தில் இணங்கிக் கொண்டமைக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியக சட்டம் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வரை அர­சியல் தீர்வு வட­கி­ழக்கின் யதார்த்த நிலைப்­போ­ராட்­டங்­களை முன்­னி­லைப்­ப­டுத்த வேண்­டிய தேவை இருந்­ததை மேற்­படி மேதினக் கூட்டம் அறி­வு­றுத்தி நின்­றது. இதே­போன்றே கிளி­நொச்சி மேதினக் கூட்­டமும் அமைந்து காணப்­பட்­டது.

வடக்கு, கிழக்கு மக்­களைப் பொறுத்­த­வரை நீண்­ட­கால அர­சியல் போருக்கு முடி­வு­காண வேண்­டி­யதும் அதே­வேளை யதார்த்த நிலை­மை­களில் அனு­ப­விக்கும் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வை காண­வேண்­டிய நிலையே பிர­தா­ன­மாக்­கப்­பட்­டுள்­ளது.

மலை­யக மக்­களின் போராட்­டங்கள், வாழ்­வியல் பிரச்­சி­னைகள், அர­சியல் போராட்­டங்கள் தனித்­து­வ­மா­னவை. அவற்றை மையப்­ப­டுத்தி தமிழ் முற்­போக்கு கூட்­டணி, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தங்கள் மே தினத்தை ஒழுங்­கு­ப­டுத்­தி­யது போலவே வடக்கில் ஈழ மக்கள் புரட்­சி­கர முன்­னணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, சமத்­துவம் சமூக நீதிக்­கான அமைப்பு, வட­மா­காண கூட்­டு­ற­வாளர் மே தினம் எனக்கொண்டாடப்பட்டுள்ளது. இலங்­கையில் நடத்­தப்­பட்ட மே தினக் கூட்­டங்­க­ளா­னது ஒட்­டு­மொத்­த­மாக எதிர்­கொள்­ளப்­போ­கின்ற தேர்­தல்­களை மையப்­ப­டுத்தி மக்கள் செல்­வாக்கை தம் பக்கம் ஈர்க்கும் இலக்­குடன் நடத்­தப்­பட்­டுள்­ளன என்­பதை மிக இல­கு­வா­கவே புரிந்துகொள்ள முடிகிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-06#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.