Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புண்ணை பொன்னாடையால் மூடிமறைக்க முற்படக்கூடாது

Featured Replies

புண்ணை பொன்னாடையால் மூடிமறைக்க முற்படக்கூடாது

 

இந்­திய பிர­தமர் நரேந்­தி­ர­மோடி அடுத்த வாரம் இலங்­கைக்கு வரு­கை­தர உள்ளார். இலங்­கைக்கு வருகை தரும் அவர் சர்­வ­தேச வெசாக் தின விழாவில் கலந்­து­கொள்ள உள்­ள­தோடு எதிர்வரும் 12 ஆம் திகதி மலை­ய­கத்­திற்கும் விஜயம் செய்ய இருக்­கின்றார். பிர­த­மரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் இருந்து வரு­வதும் தெரிந்த விட­ய­மாகும். இதற்­கி­டையில் மலை­ய­கத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்ள மோடி­ யிடம் மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் உரி­ய­வாறு முன்­வைக்­கப்­பட வேண்டும். நிலை மை­களை திரித்து கூறு­வ­தற்கு முற்­ப­டக்­கூ­டாது என்றும் கருத்­துகள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.  

உலக நாடுகள் வரி­சையில் இந்­தியா முக்­கி­ய­மான ஓர் இடத்தை பெற்று விளங்­கு­கின்­றது. பல முக்­கிய தலை­வர்­களை உரு­வாக்­கிய நாடு இந்­தியா. இந்­தி­யாவே இந்­திரா, இந்­தி­ராவே இந்­தியா என்று சொல்­லு­ம­ள­வுக்கு தலை­வர்­களின் அர்ப்­ப­ணிப்­பான சேவையினை பெற்­றுக்­கொண்ட நாடாக இந்­தியா விளங்­கு­கின்­றது. நீங்கள் என்னை சங்­கி­லியால் கட்டிப் போடலாம்; சித்­தி­ர­வதை செய்­யலாம். நீங்கள் இந்த உடலை அழிக்­கக்­கூட செய்­யலாம். ஆனால், எனது சிந்­த­னையை ஒருபோதுமே சிறையில் அடைக்க முடி­யாது என்ற கொள்­கைப்­பற்­றுள்ள தலை­வர்­களைக் கொண்ட நாடு இந்­தியா. இந்­திய நாட்டின் துரி­த­எ­ழுச்சி இன்று அனை­வ­ரையும் வியக்க வைத்­தி­ருக்­கின்­றது. கல்வி, தொழில்­நுட்பம், விஞ்­ஞானம், மருத்­துவம் என்று சகலதுறை­க­ளிலும் குறிப்­பி­டத்­தக்க வளர்ச்­சி­யினை இந்­தியா கண்­டு­வ­ரு­கின்­றது. இந்­தி­யாவின் வளர்ச்சி கண்டு பல உலக நாடுகள் தமக்­குள்­ளேயே குமு­றிக்­கொண்­டி­ருப்­பதும் தெரிந்த விட­ய­மாகும். இந்­தி­யாவை வீழ்த்­து­வதும் சில நாடு­களின் எண்­ண­மாக இருக்­கின்­றது.

இந்­தி­யாவும் இலங்­கையும்

இந்­தியா இலங்­கையின் அயல்­நாடு மட்­டு­மன்றி நீண்­ட­கால நேச­நா­டா­கவும் விளங்­கு­கின்­றது. கலா­சார, வர்த்­தக, பண்­பாட்டு தொடர்­பு­களும், அர­சியல் ரீதி­யான தொடர்­பு­களும் இவ்­விரு நாடு­க­ளுக்கு இடை­யேயும் நீண்­ட­கா­ல­மா­கவே காணப்­ப­டு­கின்­றமை தொடர்­பிலும் நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள். இலங்­கையின் பிரச்­சி­னைகள் பலவும் இந்­தி­யாவில் தாக்க விளை­வு­களை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றன. இந்­தி­யாவின் பிரச்­சி­னைகள் பலவும் இலங்­கையில் தாக்க விளை­வு­களை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றன. இலங்­கையில் மூன்று தசாப்­தங்­க­ளுக்கும் மேலாக யுத்த சூழ்­நிலை நில­வி­யது. இதனால் பல உயி­ரி­ழப்­பு­களும், உடமை சேதங்­களும் ஏற்­பட்­டன. இவ் யுத்­தத்தின் கார­ண­மாக இந்­தி­யாவும் தலை­யி­டி­யான ஒரு நிலை­யினை எதிர்­கொண்டது. பலர் அக­தி­க­ளாக இந்­தி­யா­வுக்குள் படை­யெ­டுத்­தனர். இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய மிகப் பெரிய பொறுப்பு அல்­லது வகி­பாகம் இந்­தி­யா­வுக்கு இருந்­தது. இதே­வேளை, இந்­திய வம்­சா­வளி மக்­களின் நலன்கள் தொடர்­பிலும் இந்­தியா கவனம் செலுத்த வேண்டி இருந்­தது. இந்­திரா காந்­திக்கும், ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்­கா­வுக்கும் இடையே இருந்த தனிப்­பட்ட நட்­பு­றவும் நல்­லி­ணக்­கமும் இந்­திய – இலங்கை உற­வு­க­ளுக்கு மேலும் வலு­சேர்த்­த­தாக புத்­தி­ஜீ­விகள் தெரி­வித்­துள்­ளனர். அரச சார்ந்த பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மற்றும் வெளி­நாட்டுக் கொள்­கையில் இரு­வரும் நம்­பிக்கை கொண்­டி­ருந்­ததால் இந்த உற­வுகள் மேலும் இறுக்­க­முற்ற தன்­மை­ யி­னையும் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.  

ராஜீவ் காந்­தியின் கொலை இலங்கை இந்­திய உற­வு­களில் ஒரு கசப்பு நிலையை தோற்­று­வித்­தி­ருந்­தது. இன்­றும்­கூட இந்­தியா இலங்­கையில் உள்ள தமி­ழர்கள் தொடர்­பாக நடந்­து­கொள்ளும் முறை­யா­னது ராஜீவ் காந்­தியின் கொலைத்­த­ழும்பு இந்­திய தேசத்தின் தேகத்தில் இருந்து இன்னும் மறை­ ய­வில்லை என்­ப­தையே இந்­தி­யாவின் அணு­ கு­முறை எடுத்­துக்­காட்­டு­வ­தாக கூறுவோ ரும் உள்­ளனர். இது தொடர்பில் விமர்­ச­னங்­களும் இருக்­கலாம்.  

இந்­திய வம்­சா­வளி மக்கள்

19 ஆம் நூற்­றாண்டு என்­பது முக்­கி­யத்­துவம் மிக்­க­தொரு ஆண்­டாக விளங்­கு­கின்­றது. தமி­ழக வர­லாற்றில் முன்­னைய கால­கட்­டங்­களில் காணப்­ப­டாத அள­விற்கு பத்­தொன்­பதாம் நூற்­றாண்டில் இலட்­சோ­ப­லட்சம் தமிழ்த் தொழி­லா­ளர்கள் தமி­ழ­கத்­துக்கு மிக அண்­மையில் உள்ள இலங்­கையில் மட்­டு­மன்றி நூற்­றுக்­க­ணக்­கான, பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மைல்­க­ளுக்கு அப்பால் உள்ள நாடு­க­ளுக்கும், தீவு­க­ளுக்கும் கொண்­டு­சென்று குடி­ய­மர்த்­தப்­பட்­டனர். மலே­சியா, சிங்­கப்பூர், பிஜி, டேமாரா, மொரீ­ஷியஸ், சிஷெல்ஸ், ஜமெய்க்கா, பிரிட்டிஷ், கயானா என்று பல இடங்­க­ளிலும் தொழி­லா­ளர்கள் குடி­ய­மர்த்­தப்­பட்­டனர். இவ்­வாறு குடி­ய­மர்த்­தப்­பட்ட தொழி­லா­ளர்கள் பல்­வேறு சுரண்­டல்­க­ளுக்கும், கொடு­மை­க­ளுக்கும் உள்­ளாகி இருந்­த­மையும் நீங்கள் அறிந்த விட­ய­மே­யாகும். இதே­வேளை, இன்று இலங்கை, மலே­சியா, சிங்­கப்பூர் முத­லிய சில நாடு­க­ளி­லேயே தமிழ்த் தொழி­லா­ளர்கள் தொடர்ந்தும் தொழி­லா­ளர்­க­ளா­கவும் அதே­ச­மயம், தமி­ழர்­க­ளா­கவும் வாழ்ந்து வரு­கின்­ற­மையும் அத்­த­கைய சில நாடு­களுள் இலங்­கையே முதன்­மை­யா­ன­தா­கவும் இலட்சோ­ப­லட்சம் தமிழ் தொழி­லா­ளர்­களை கொண்­டுள்­ள­தா­க விளங்­கு­கின்­ற­மையும் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்­டிய ஒன்­றாகும் என்று கலா­நிதி க.அரு­ணா­சலம் தனது நூலொன்றில் குறிப்­பி­டு­கின்றார்.

இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் எமது நாட்டில் பதி­னைந்து இலட்­சத்­துக்கும் அதி­க­மான தொகை­யி­ன­ராக காணப்­ப­டு­கின்­றனர். இவர்­களை என்ன பெயர்­கொண்டு அழைப்­பது என்பது தொடர்­பிலும் கடந்த காலத்தில் பல்­வேறு கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்­டன. இந்­திய வம்­சா­வ­ளி­யினர், இந்­தியத் தமி­ழர்கள், மலை­யகத் தமி­ழர்கள், இந்­திய வம்­சா­வளி மலை­யகத் தமி­ழர்கள் என்­றெல்லாம் பல பெயர்­களும் அடி­பட்­டன. இந்­திய வம்­சா­வளி மக்கள் மலை­ய­கத்தில் அதி­க­மாக வசித்­து­வரும் நிலையில் கடந்த ஒன்­றரை நூற்­றாண்டு காலத்­துக்கும் மேலாக தமக்கே பிரத்­தி­யே­க­மாக உரிய பல பிரச்­சி­னை­க­ளையும், இலங்­கையில் வாழும் பல்­வேறு சமூ­கத்­தி­ன­ருக்கும் பொது­வா­க­வுள்ள பிரச்­சி­னை­க­ளையும் கொண்­ட­வர்­க­ளாக இன்­று­வரை வாழ்க்கைப் போராட்டம் நடத்தி வரு­வதும் தெரிந்த விட­ய­மாகும். இம்­மக்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்­கின்ற அர­சி­யல்­வா­தி­களின் செயற்­பா­டுகள் குறித்தும், இவர்­க­ளுக்கு ஆற்ற வேண்­டிய சேவை­களை உரி­ய­வாறு ஆற்­று­வ­தில்லை என்றும் விமர்­ச­ன ங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.  

 

மோடியின் வருகை

உலக நாடு­களின் வரி­சையில் இந்­தியா எவ்­வாறு முக்­கி­யத்­துவம் பெற்று வரு­கின்­றதோ அவ்­வாறே உலகத் தலை­வர்­களின் வரி­சையில் மோடியும் முக்­கி­யத்­துவம் பெற்ற ஒரு­வ­ராக விளங்­கு­கின்றார். சாதா­ரண நிலையில் இருந்து இன்று நம்ப முடி­யாத அள­விற்கு அவர் உயர்ந்­தி­ருக்­கிறார். அர­சி­யலில் அவர் ஒரு எடுத்­துக்­காட்­டாக விளங்­கு­கின்றார். நரேந்­தி­ர­மோடி என்றால் ஆளுமையின் அடை­யா­ள­மாகும். 2015இல் அவர் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருக்­கின்றார். அது முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு விஜ­ய­மாக அமைந்­தது. அதே­வேளை சர்­வ­தேச வெசாக் தின விழாவில் கலந்­து­கொள்­வ­தற்­காக அடுத்­த­வாரம் மோடி மீண்டும் இலங்கை வரு­கின்றார். இவ­ரது இந்த விஜ­யத்­தின்­போது மலை­ய­கத்­திற்கு வருகை தரும் மோடி டிக்­கோயா, கிளங்கன் வைத்­தி­ய­சா­லை­யையும் திறந்­து­வைக்க உள்ளார். மலை­யகம் அவ­ரது வரு­கையை ஆவ­லுடன் எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கின்­றது. மலை­யக அர­சி­யல்­வா­தி­களும் மக்­களும் மோடிக்கு மரி­யாதை செலுத்த காத்­தி­ருக்­கின்­றனர். நோர்வூட் பொது விளை­யாட்டு மைதா­னத்தில் இடம்­பெறும் பொதுக்­கூட்­டத்­திலும் மோடி உரை­யாற்ற இருக்­கின்றார்.

இந்­தியப் பிர­தமர் மோடியை வர­வேற்க விசேட ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அமைச்சர் பி. திகாம்­பரம் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இதே­வேளை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸின் ­பொதுச்செய­லா­ள­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான் மேதின விழா மேடையில் உரை­யாற்­று­கையில் மோடி எதிர்­வரும் 12 ஆம் திகதி மலை­ய­கத்­திற்கு வரு­கை­தர உள்ள நிலையில் அவரை வர­வேற்க எமது மக்கள் அணிதி­ரள வேண்டும் என்று வேண்­டுகோள் விடுத்­தி­ருந்தார். மேலும் இந்­திய வம்­சா­வளி மக்­களின் சக்­தி­யையும் பலத்­தையும் வெளிப்­ப­டுத்த வேண்டும். இந்­திய பிர­த­ம­ருக்கு மரி­யாதை செலுத்த வேண்டும் என்றும் வலி­யு­றுத்தி இருந்தார். இதற்­கி­டையில் இலங்கை வரும் மோடி ஒப்­பந்­தங்­க­ளிலும் கைச்­சாத்­திட உள்­ள­தாக சிலர் விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். எனினும், இலங்கை வரும் இந்­தியப் பிர­தமர் எந்த ஒப்­பந்­தத்­திலும் கைச்­சாத்­தி­ட­மாட்டார் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெளி­வு­ப­டுத்தி இருக்­கின்றார்.

 உலக தலை­வர்­களின் வரு­கையும் மூடி­ம­றைப்­பு­களும் 

உலகத் தலை­வர்கள் அல்­லது முக்­கி­யஸ்­தர்கள் இலங்­கைக்கு வரு­கையில் மக்­களின் பிரச்­சி­னைகள் அல்­லது தேவைகள் அவர்­க­ளிடம் உரி­ய­வாறு முன்­வைக்­கப்­ப­டு­வ­தில்லை. அவர்­க­ளிடம் மக்­களின் பிரச்­சி­னை­களும் தேவை­களும் மூடி­ம­றைக்­கப்­ப­டு­கின்­றன. அல்­லது திரி­பு­ப­டுத்தி முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன என்­றெல்லாம் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றமை தொடர்பில் நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள். உதாரணமாக இலங்­கையில் இடம்­பெற்ற பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக 2013 இல் பிரிட்டிஷ் இள­வ­ரசர் சார்லஸ் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்தார். சார்லஸ் மலை­ய­கத்தின் லபுக்­கலை தோட்­டத்­துக்கும் விஜயம் செய்தார். காரி­யா­லய வளா­கத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த அருங்­காட்­சி­ய­கத்­தையும் இள­வ­ரசர் திறந்­து­வைத்தார். அவ­ரது வரு­கையை முன்­னிட்டு பெண்கள் கொழுந்து பறிக்கும் நிகழ்வு ஒன்றும் லபுக்­க­லையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. கொழுந்து பறிக்கும் பெண்கள் இயல்­பான நிலையில் இருந்தும் மாறு­பட்டு காணப்­பட்­டனர். கொங்­காணி, கூடை என்­ப­னவும் காணப்­ப­ட­வில்லை.

வர்ணச் சேலை­களை உடுத்தி மணப்­பெண்­களைப் போல இவர்கள் காணப்­பட்­டார்கள். கை வளை­யல்கள், பொட்டு, கழுத்தில் மாலைகள் என்று இப்­பெண்கள் அழ­கூட்­டப்­பட்­டி­ருந்­தனர். மலை­யகப் பெண்கள் இப்­ப­டித்தான் உடை­களை உடுத்­துக்­கொண்டு கொழுந்து பறிக்­கின்­றார்கள். இவர்கள் செழிப்­புடன் வாழ்­கின்­றார்கள் என்ற ஒரு மனோ­நி­லையை இது பார்ப்­ப­வர்­களின் மனதில் தோற்­று­விப்­ப­தாக அமையும். எனவே, மலை­யக மக்­க­ளுக்கு உதவ நினைப்­ப­வர்கள் கூட உத­வ­மாட்­டார்கள். இத்­தகைய போலி வெளிப்­பா­டு­களும், திரி­பு­ப­டுத்­தல்­களும் ஒரு­போதும் தேவை­யில்லை. புண்ணை பொன்­னா­டையால் மறைக்க முற்­ப­டுதல் கூடாது. உள்­ளதை உள்­ள­வாறு வெளிப்­ப­டுத்தல் வேண்டும். இந்த ஒப்­பனை நிலை­மை­களை பார்த்த சிலர், எத்­த­னையோ படங்­களை பார்த்­துள்ள இள­வ­ரசர் மலை­ய­கத்­திலும் ஒரு படத்தை பார்த்­து­விட்டு சென்­று­விட்டார் என்று என் காது­பட பேசிக்­கொண்­ட­தையும் கேட்க முடிந்­தது. மலை­யக மக்கள் பல்­வேறு துன்ப துய­ரங்­களை அனு­ப­வித்து வரு­கின்ற நிலையில் இத்­த­கைய மூடி­ம­றைப்­புகள் தேவை­தானா என்­பதை சிந்­தித்து பாருங்கள். இனியும் இத்­த­கைய மூடி மறைப்­புகள் வேண்டாம்.

இந்­தி­யாவும் பிரித்­தா­னி­யாவும்

இந்­திய வம்­சா­வளி மலை­யக மக்­களின் நலன்­களை பேண வேண்­டி­யதில் இந்­தி­யா­வுக்கும், பிரித்­தா­னி­யா­வுக்கும் கூடு­த­லான வகி­பாகம் அல்­லது வகிப்­பங்கு உள்­ளது. மலை­யக மக்­களின் பரம்­ப­ரை­யினர் இந்­தி­யாவில் இருந்து அழைத்து வரப்­பட்­ட­வர்கள் என்­ப­தாலும் பிரித்­தா­னியர் காலத்தில் இது இடம்­பெற்­ற­மை­யி­னாலும் இவ்­விரு நாடு­க­ளுக்கும் மலை­யக மக்­களின் நலன்­களை பேணு­வதில் கூடு­த­லான பொறுப்பு காணப்­ப­டு­கின்­றது. எனினும் இவ்­விரு நாடு­களும் மலை­யக மக்­களின் நலன் கருதி காத்­தி­ர­மாக பங்­காற்­று­கின்­றனவா என்­பது கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றது. இதே­வேளை மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ. லோரன்ஸ் 18 இலட்சம் மலை­யக தமிழ் மக்கள் தொடர்பில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு காத்­தி­ர­மா­ன­தாக இல்லை என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். இந்­தி­யா­வுக்கும் மலை­யக மக்­க­ளுக்­கு­மி­டையில் தொப்புள் கொடி உறவு காணப்­ப­டு­கின்­றது. எனினும் மலை­யக தமிழ் மக்கள் இங்கு துன்ப துய­ரங்­களை அனு­ப­வித்து வரு­கின்ற போது இந்­தியா இம் மக்­களின் நலன்­களை பேண காத்­தி­ர­மான பங்­க­ளிப்­பினை செய்­தி­ருக்­கின்­றதா என்ற கேள்வி எழு­கின்­றது. இது போன்றே பிரித்­தா­னி­ய­ருக்கும் இம் மக்­களின் நலன்­களைப் பேண வேண்­டியக் கடப்­பாடு இருக்­கின்­றது. எனினும் பிரித்­தா­னி­யாவும் தனது வகி­பா­கத்­தினை உரி­ய­வாறு நிறை­வேற்­றாது மறந்து செயற்­ப­டு­கின்­றது.

இலங்­கைக்கு வருகை தர உள்ள மோடி­யிடம் மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் உரி­ய­வாறு முன்­வைக்­கப்­பட வேண்டும் நீண்­ட­கால, குறு­கிய கால பிரச்­சி­னை­களை வேறு­ப­டுத்தி அவற்றை முன்­வைப்­பது அவ­சி­ய­மாகும். மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்றுக் கொடுக்­கு­மாறு இந்­தி­யாவை வலி­யு­றுத்­தவும், வற்­பு­றுத்­தவும் வேண்டும். இம்­முறை இலங்கை விஜ­யத்­தின்­போது இந்­திய பிர­தமர் மோடி மலை­ய­கத்­திற்கு விஜயம் செய்­வது ஒரு வர­லாற்று நிகழ்­வாகும். இவ் வாய்ப்­பினை எம்­ம­வர்கள் சரி­யாக பயன்­ப­டுத்திக் கொண்டு மலை­யக மக்­களின் வாழ்வில் பல்­வேறு அபி­வி­ருத்­தி­க­ளையும் ஏற்­படுத்த உறுதி பூணுதல் வேண்டும் என்றும் லோரன்ஸ் மேலும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

 

மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள்

பிரச்­சி­னைகள் தனி­நபர், சமூகம் என்று யாரையும் விட்டு வைப்­ப­தில்லை. தனி­ந­பர்­க­ளுக்கும் பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. சமூ­கத்­திற்கும் பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. இந்த வகையில் மலை­யக சமூ­கத்தை எடுத்துக் கொண்டால் ஏற்­க­னவே கூறி­யது போல தமக்கே உரிய பல பிரச்­சி­னை­களை மலை­யக சமூகம் கொண்­டி­ருக்­கின்­றது. இது­போன்றே இலங்­கையில் வாழும் பல்­வேறு சமூ­கத்­தி­ன­ருக்கும் பொது­வாக உள்ள பிரச்­சி­னை­க­ளையும் கொண்­ட­வர்­க­ளாக மலை­யக சமூ­கத்­தினர் விளங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாக இருக்­கின்­றது.

மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். கல்வி, அர­சியல், சமூகம், பொரு­ளா­தாரம், சுகா­தாரம் என்று பிரச்­சி­னைகள் சகலதுறை சார்ந்­த­ன­வாக விளங்­கு­கின்­றன. அண்­மையில் மேதின நிகழ்­வுகள் இடம்­பெற்­றன. இம் மேதி­னத்தின் போது மலை­யக கட்­சிகள் பலவும் பல தீர்­மா­னங்­களை நிறை­வேற்றி இருந்­தன. மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­களின் வெளிப்­பா­டா­கவும் இத் தீர்­மா­னங்கள் அமைந்­தி­ருக்­கின்­றன. கட்­சி­களின் முக்­கிய தீர்­மா­னங்கள் சில­வற்றை நோக்­குவோம்.

 

தமிழ் முற்­போக்கு கூட்­டணி

இலங்­கையில் இனப் பிரச்­சி­னைக்­கான அதி­கா­ரப்­ப­கிர்வு மேற்­கொள்­ளப்­ப­டு­கையில் மலை­யக தமிழ் மக்­க­ளுக்­கான அதி­கா­ரப்­ப­கிர்வு வழங்­கப்­பட வேண்டும். மலை­யக மாவட்­டங்­களில் தமிழ் மொழி அமு­லாக்கம் நடை­மு­றை­ப்ப­டுத்­தப்­பட வேண்டும். தோட்டத் தொழி­லா­ளர்கள் அல்­லாத தோட்ட சேவை­யா­ளர்கள், வர்த்­த­கர்கள் போன்­றவர்­க­ளுக்கு வீட­மைப்புத் திட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும். மலை­யக கல்வித் தரத்தை மேம்­ப­டுத்த தனி­யான கல்­விப்­பி­ரிவு மத்­திய மாகாண சபையில் உரு­வாக்­கப்­ப­டுதல் வேண்டும். தோட்டப் பகு­தி­களில் சிற்­று­ட­மை­யினை அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும். தோட்டக் குடி­யி­ருப்­புக்­களை உள்­ளூ­ராட்­சியின் கீழ் கொண்­டு­வ­ருதல் வேண்டும். மலை­யக பகு­தி­களில் புதிய உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்கள் உரு­வாக்­கப்­ப­டுதல் வேண்டும். அதி­க­ரித்து வரும் வாழ்க்கை செல­வு­களை சமா­ளிக்க அர­சாங்கத்தால், தனியார் துறை­யி­ன­ருக்கு சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­ப­டு­வதைப் போன்று தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்டும். தேசிய தொழிற்­சங்க சட்­டங்கள் பெருந்­தோட்டத் துறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

மலை­யக மக்கள் தனி­யான தேசிய இனம் என்­பதை அர­சியல் யாப்பில் அங்­கீ­க­ரித்து உறு­திப்­ப­டுத்த வேண்டும். சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இளை­ஞர்கள் துரித விசா­ர­ணையின் பின்னர் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். மலை­யக மக்­களின் சனத்­தொகை அடிப்­ப­டையில் இம்­மக்­களின் பாரா­ளு­மன்ற, மாகாண சபை மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற பிர­தி­நி­தித்­துவம் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். புதிய பிர­தேச செய­ல­கங்கள், கிராம அலு­வ­லகர் பிரி­வுகள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். மலை­யக சமூகம் பின்­தங்­கிய நிலையில் இருப்­பதால் அவர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்டும். அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் பெற்ற மலை­யக அபி­வி­ருத்தி அதி­கார சபையை உடன் நிறுவ வேண்டும். மலை­யக தமி­ழர்­களை திட்­ட­மிட்டு குறை­வ­டையச் செய்யும் குடும்பக் கட்­டுப்­பாடு உள்­ளிட்ட ஏனைய பல நட­வ­டிக்­கை­க­ளையும் நிறுத்துதல் வேண்டும். தோட்ட மருத்­து­வ­ம­னை­களும் சுகா­தார சேவை­களும் தர­மு­யர்த்­தப்­படல் வேண்டும். மத்­திய, ஊவா, சப்­ர­க­முவ பகு­திகளில் உள்ள தோட்­டங்­களை ஒன்­றி­ணைத்து பொரு­ளா­தார வலயம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதனை நிர்­வ­கிக்க அதி­கார சபை உரு­வாக்­கப்­பட வேண்டும்.

கைத்­தொழில் பேட்­டைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு மலை­யக இளைஞர், யுவ­தி­க­ளுக்கு தொழில் வாய்­ப்புக்கள் வழங்­கப்­பட வேண்டும். பெருந்­தோட்டத்துறை­யி­னரின் வறு­மை­யினை இல்­லா­தொ­ழிக்க விசேட வறுமை ஒழிப்புத் திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று பல தீர்­மா­னங்­களை தமிழ் முற்­போக்கு கூட்­டணி முன்­வைத் துள்­ளது. 

இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ்

தோட்ட நிர்­வாகம் தான்தோன்­றித்­த­னமாக நிலங்­களை குத்­த­கைக்கோ அல்­லது விற்­கவோ எடுக்கும் முயற்சி உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும். தொழி­லா­ளர்­களை சிறு தோட்ட உடை­மை­யா­ளர்­க­ளாக்­குதல் வேண்டும். இளை­ஞர்­க­ளுக்கு தொழில் வாய்ப்பு ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­படல் வேண்டும். கூட்டு ஒப்­பந்­தத்தில் உள்ள சரத்­துக்­களை சட்­டப்­படி அமுல்­ப­டுத்தி குற்றம் புரி­கின்ற கம்­ப­னிகள் மேல் வழக்குத் தொடர வேண்டும். தோட்டச் சேவை­யா­ளர்கள் தோட்டத் தொழி லா­ளர்­களைப் போல் தேயிலை மற்றும் இறப்பர் தொழில்துறைக்கு மிகவும் தேவை யா­ன­வர்கள். எனவே அவர்­க­ளுக்கு வீட்டு வசதி வழங்­கு­வது அவ­சி­ய­மாகும். நிறை­வேற்று அதி­காரம் அற்ற தோட்ட சேவை­யா­ளர்­க­ளுக்கு வீடு கட்ட காணி வாங்­கு­மாறு வலி­யு­றுத்­து­கின்றோம். 

 

இலங்கை தொழி­லாளர் ஐக்­கிய முன்­னணி

தொழி­லா­ளர்கள் உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும். கூட்டு ஒப்­பந்தம் மீறப்­ப­டக் கூ­டாது. பெண் தொழி­லா­ளிக்கு ஆறு மணி த்­தி­யால சேவை நேரம் தேவை. வீட்­டு­ரி­மை­யுடன் 10 பேர்ச்சஸ் காணி அவ­சியம். இய ற்கை அனர்த்­தங்­களின் போது தொழி­லா­ளர்­க­ளுக்கு உரி­ய­வாறு நிவா­ரணம் வழங்­கப்­பட வேண்டும். மலை­ய­கத்­த­வர்­களின் நலன் கருதி தனி­யான பல்­க­லைக்­க­ழகம் ஏற்­ப­டுத்­த ப்­பட வேண்டும். தோட்டப் பகுதியில் மருத் துவ, சுகா­தார, குடிநீர் மற்றும் கல்வி வச­திகள் மேம்­ப­டுத்­தப்­பட வேண்டும்.இது போன்றே இன்னும் பல மலை­யக கட்­சி­களும் அமைப்­புக்­களும் பல தீர்­மா­னங்­களை முன்­வைத்­துள்­ளன. 

 

பொது­வான தீர்­மா­னங்கள்.

இவற்றின் பொது­வான மற்றும் முக்கிய தீர்மானங்களை தெரிவு செய்தல் வேண்டும். இத்தகையவற்றை இந்தி யாவின் உதவியுடன் நிறைவேற்ற பிரதமர் மோடியிடம் முன்வைக்கவேண்டும். (உதாரணம்: தனியான பல்கலைக்கழகம்) இதேவேளை, இ.தொ.கா. இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவிகள் தொடர்பாக மோடிக்கு கடிதம் ஒன்றினையும் அண்மையில் அனுப்பி வைத்துள்ளது. அவற்றின் விபரம் பின்வருமாறு: வீடமைப்பு, கல்வி, தொழில்நுட்பத்துறை சார்ந்த உதவிகள் அவசியமாக உள்ளன. இத்துறை களில் தேவைப்பாடுகளுக்கும் அவற்றிலான அரசாங்க ஒதுக்கீடுகளுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ள நிலையில் இந்திய அரசிடம் இருந்து மேலதிக உதவிகள் தேவைப்படுகின்றன. இந்திய அரசாங்கத்தின் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான ஏனைய புலமைப்பரிசில்கள் மாறாது ஒதுக்கீட்டு முறைமையின் கீழ் வழங்கப்படவேண்டும். மேலும் பல்கலைக்கழங்களில் மருத்துவ, பொறியியல் மற்றும் சட்ட பீடத்திற்கான அனுமதிகள் தொடர்பில் கடும் போட்டியும், வரையறையும் நிலவுவதால் அத்துறைகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். மலையகத்திற்கென்று தனியான பல்கலை க்கழகம் அமைக்கப்படுதல் வேண் டும். தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையிலான படகு சேவை களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இது போன்ற பல விடயங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இ.தொ.கா. வலியுறுத்தியுள்ளமை குறிப்பிட த்தக்கதாகும். 

உண்மையை சொல்லுங்கள்  

மலையக மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் புதுப்புது வடிவங்களில் அதிகரித்து வருகின்றன. இப் பிரச்சினைகளை மூடிமறைக்காது வெளிக் கொணர்ந்து உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். இப்பிரச்சினை களை தீர்த்துவைக்க இலங்கை அரசாங்க த்துடன் இந்தியாவும் காத்திரமாக பங்காற்ற முடியும். எனவே, உண்மையை மலையக மக்களின் சமகால போக்குகளை இந்தியப் பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூறி பரிகாரம் காண முற்படவேண்டும். குறிப்பாக, மலையக அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு பொதுவான பிரச்சினைகளை ஓரணியில் நின்று மோடியிடம் முன்வைக்கவேண்டும். இப்பிரச்சினைகளை தீர்த்துவைக்க வலியுறு த்தவும், அழுத்தம் கொடுக்கவும் வேண்டும். இப்பிரச்சினைகளை தீர்த்துவைப்பதை விடுத்து இந்தியா விலகிச் செல்லக்கூடாது.  

துரைசாமி நடராஜா 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-06#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.