Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியா வழக்கு: கொழும்பில் நடத்த யோசனை

Featured Replies

வித்தியா வழக்கு: கொழும்பில் நடத்த யோசனை

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அறிய முடியகின்றது. கொழும்பில் இந்த விசாரணையை முன்னெடுக்கவும் யோசனை முன்வைக்க்பபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்பு படுகொலை செய்யப்பட்டார். மாணவியின் படுகொலையும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டனர்.

கொலைக் குற்றச்சாட்டு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் நிறைவடைந்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் மேலதிக நடவடிக்கைக்காகப் பாரப்படுத்தப்பட்டுள்ளது. படுகொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்புக்காக இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அதன்போது சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பகர்வுப் பத்திரம் ஒரு வாரத்துக்குள் முன்வைக்கப்படும் என்று சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதியால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் விசாரணையைa மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய ‘ட்ரயல் அட் பார்’ தீர்ப்பாயம் முன்னிலையில் முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அறிய முடிகின்றது. இந்த விசாரணைகள் கொழும்பில் நடத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

தீர்பாயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபரால் கோரப்படுமிடத்து தலைமை நீதியரசரால் அதற்கான மேல் நீதிபதிகள் மூவர் நியமிக்கப்படுவர். அவர்களில் ஒருவர் தீர்பாயத்தின் தலைவராக செயற்படுவார்.

http://uthayandaily.com/story/1932.html

  • தொடங்கியவர்

புங்குடுதீவு வித்தியாவின் பாலியல் வல்லுறவு வழக்கில் தீடீர் திருப்பம்

 

 

ரி.விரூஷன்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வல்லுறவு வழக்கானது கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளது.

குறித்த வழக்கானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் நிறைவுற்று வழக்கின் விசாரனை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த வழக்கின் முதல் ஒன்பது சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பம் தொடர்பான வழக்கு விசாரணையானது யாழ்.மேல் நீதிமன்றில் கடந்தவாரம் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

vlcsnap-00005-e1478278636900.jpg

இதன்போது குறித்த வழக்கின் குற்றப் பத்திரத்தை இம் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதாக சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி உறுதியளித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே குறித்த வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி இவ் வழக்கை ரயலட்பார் முறையிலான மூன்று சிங்களம் பேசும் பெரும்பான்மை இன நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யும் வகையில் குறித்த மூன்று நீதிபதிகளையும் பிரதம நீதியரசர  நியமித்துள்ளதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவித்துள்ளன.

http://www.virakesari.lk/article/19880

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.