Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதைப்பொருள் சுற்றிவளைப்பு பொலிஸ் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ; 5 பேர் காயம் ; பிலியந்தலையில் பதற்றம்

Featured Replies

போதைப்பொருள் சுற்றிவளைப்பு பொலிஸ் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ; 5 பேர் காயம் ; பிலியந்தலையில் பதற்றம்

 

Image result for துப்பாக்கிச் சூடு

பிலி­யந்­தலை பகு­தியில் போதைப்பொருள் சுற்றி வளைப்­பொன்­றுக்குச் சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் மீது முன்­னெ­டுக்­கப்பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார். அத்­துடன் சிறப்பு விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ரங்கஜீவ உள்­ளிட்ட இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் சிறு­வர்கள் இருவர் உள்­ளிட்ட மூன்று சிவி­லி­யன்­களும் காய­ம­டைந்து களு­போ­வில - கொழும்பு தெற்கு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்­ளனர்.

இச்­சம்­பவம் நேற்று இரவு 8.30 மணிக்கும் 8.45 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் பிலி­யந்­தலை மக்கள் வங்­கிக்கு அருகில் இடம்­பெற்­றுள்­ளது.

 இதன் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான (4946) அபே­விக்­ரம உயி­ரி­ழந்தார் எனவும் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீ­வ­வுடன் பொலிஸ் கான்ஸ்­டபிள் (67055) சமிந்த காய­ம­டைந்­த­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 இத­னை­விட காய­ம­டைந்­த­வர்­களில் 8 வய­தான சிறுமி ஒருத்­தியும் 15 வய­தான சிறுவன் ஒரு­வனும் மற்­றொரு சிவி­லி­யனும் களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்ப்ட்­டுள்ள நிலையில் 8 வயது சிறு­மியின் நிலைமை கவலைக் கிட­மாக உள்­ள­தாக களு­போ­வில வைத்­தி­ய­சா­லையின் பேச்­சாளர் ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

 இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

 சுமார் 10 கிலோ வரை­யி­லான போதைப் பொருள் வர்த்­தகம் ஒன்று தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வுக்கு தகவல் கிடைத்­துள்­ளது. இந் நிலையில் அது தொடர்பில் உடன் செயற்­பட்­டுள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, அதன் பிர­தா­னி­யான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வாவின் ஆலோ­ச­னையைப் பெற்று செயற்­பட்­டுள்­ளது. அதன்­படி அது தொடர்­பி­லான சுற்­றி­வ­ளைப்­புக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ தலை­மையில் குழு­வொன்ரு பொலிஸ் தலை­மை­ய­கத்தில் இருந்து அனுப்­பப்பட்­டுள்­ளது.

இந் நிலையில் இக்­கு­ழு­வா­னது சுற்­றி­வ­ளைப்­புக்­காக பிலி­யந்­த­லையை அடைந்த போது, பிலி­யந்­தலை மக்கள் வங்­கியை அண்­மித்து நடு வீதியில் வைத்து துப்­பாக்கிச் சூடு நடத்­தப்பட்­டுள்­ளது. பொலிஸ் அதி­கா­ரிகள் பய­ணித்த வாக­னத்தை முந்திச் செல்­வது போன்று வந்­துள்ள மோட்டார் சைக்­கிள்­களில் வந்­துள்ள பாதாள உலகக் குழு­வினர் என சந்­தே­கிக்­கப்­படும் நபர்கள், பொலி­ஸாரின் வாகனம் மீது சர­மா­ரி­யான துப்­பாக்கிச் சூட்­டினை நடத்­தி­யுள்­ளனர்.

இதன் போது பொலிஸ் ஜீப் வண்­டியை செலுத்திச் சென்­ற­தாக நம்­பப்­படும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரே உயி­ரி­ழந்­துள்ளார். ஜீப்­பி­லி­ருந்த ஏனையோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

இதனை விட இந்த துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­படும் போது அப்­ப­கு­தியில் இருந்த வர்த்­தக நிலையம் ஒன்றும் துப்­பாக்கிச் சன்­னங்­களால் துளைக்­கப்பட்­டுள்­ளது. இதன் போதே அந்த வர்த்­தக நிலையம் அருகே இருந்த இரு சிறுவர்­களும் மற்­றைய சிவி­லி­யனும் காய­ம­டைந்­துள்­ளனர். இத­னை­விட பொலிஸ் ஜீப் வண்­டிக்கு மேல­தி­க­மாக அப்­ப­கு­தியில் இருந்த மேலும் மூன்று வாக­னங்­களும் துப்­ப­ாக்கிப் பிர­யோ­கத்தில் சேத­ம­டைந்­துள்­ளன.

துப்­பாக்கிச் சூட்­டினை அடுத்து உட­ன­டி­யாக பாதாள உலக உறுப்­பி­னர்கள் என சந்­தே­கிக்­கப்­படும் சந்­தேக நபர்கள் ஸ்தலத்தில் இருந்து தப்பிச் சென்­றுள்ள நிலையில், காய­ம­டைந்த­வர்கள் முதலில் பிலி­யந்­தலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்டு பின்னர் களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

சம்­பவம் தொடர்பில் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான, குற்றம் மற்றும் போக்குவரத்து விவகாரங்களைக் கையாளும்  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் மேல் மாகாணத்தின் தென் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் பிலியந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிறப்புக் குழுவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

http://www.virakesari.lk/article/19873

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.