Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுப் பற்றாளர் 


அம்பலவாணர் குமாரவேலு ஆசிரியர் அவர்கள்


பதிவு-2005. மீள்பதிவு.2017
“காலத்தால் செய் உதவி சிறிதெனினும்
ஞானத்தில் மாணல் பெரிது„
வள்ளுவப் பெரும்தகையின் திருக்குறள் போதிக்கும் விடையம் இது. உதவிகளைப் பொறுத்தவரை அவை புரியப்படும் காலத்தைப் பொறுத்தே பெறுமதி மதிப்பிடப்படுகிறது. 
அந்த வகையில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு “ஞானத்தில் மாணல் பெரிது” என்னும் அளவில் பங்களிப்பை வழங்கிய நாட்டுப்பற்றாளர் உயர்திரு அம்பலவாணர் குமாரவேலு ஆசிரியர் அவர்கள் எம்மால் என்றும் நினைவு கூறப்படவேண்டியவர்.


இன்று எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் 18000க்கு மேற்பட்ட மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் போராளிகளாக உள்ளனர். தமிழ்த்தேசிய இனமே போராட்டத்தின் பின்னால் உள்ளது. இந்தப் பிரமாண்டமான நிலையை அடைவதற்கு விடுதலைப் பயிருக்கு தண்ணீர் ஊற்றி வளர்தவர்களில் ஒருவர்தான் “நாட்டுப்பற்றாளர்“ அம்பலவாணர் குமாரவேலு ஆசிரியர் அவர்கள்.


1982 அக்டோபர் 27ம் திகதி நடைபெற்ற சாவகச்சேரி காவல் நிலையத் தாக்குதல் நடைபெற்ற அன்று அயலவர் எவருக்குமே தெரியாமல்ää போராளிகளின் மறைவிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வீடு ஒன்றினைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. கொக்குவில் பொற்பதி வீதியில் அமைந்திருந்த இந்த வீட்டினைப் பல்கலைக்கழக மாணவர்க் என்ற போர்வையில்தான் பெற முடிந்தது. உலகம் முழுவதுமே 25க்குக் குறைவான தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் இருந்த காலம் அது. எனவே போராளிகள் தம்மை இனம்காட்ட முடியாது. இந்த நிலையில் திட்டமிட்ட ஏற்பாடுகளில் திடீரென செய்யப்பட்ட மாற்றம் காரணமாக இந்த வீட்டிலிருந்தவர்கள் போராளிகள்தான் என வெளிப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரை மணித்தியால இடைவெளிக்குள் அனைவரும் வெளியேறவேண்டி வந்தது. இந்நிலையில்தான் ஏற்கனவே விடுதலை விரும்பியாக இரகசியமாக இனம்காணப்பட்ட இவரின் உதவி நாடப்பட்டது.
உயிர் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்று தெரிந்த போதிலும் போராட்டத்தை நேசித்த காரணத்தால் இயக்க உறுப்பினர்களைக் காப்பாற்ற முன்வந்தார் இவர். விசுவமடுவில் உள்ள தனது பண்ணையில் சில போராளிகளைத் தங்கவைத்துப் பாதுகாக்கத் துணிந்தார். அயல் கமக்காரர்களுக்கே தெரியாத முறையில் இதனைக் கச்சிதமாகச் செய்தார் இவர். கமத்தில் கூலி வேலை செய்பவர்களாகப் போராளிகள் உருமாற்றப்பட்டனர். அவர்களும் அப்பாத்திரத்தை கனகச்சிதமாக நடித்தனர். போராளிகளின் சகல தேவைகளையும் வெளியில் சென்று வரும் இவரே நிறைவேற்ற வேண்டியிருந்தது.


அடுத்தடுத்துப் பொய்களைக் கூறி வேறு சில இடங்களை வாடகைக்குப் பெறும் வரை இவரது கமமே புலிகளுக்குச் “சரணனாலயமாக“ இருந்தது.
1983ம் ஆண்டு மார்ச் 04ம் நாள் உமையாள்புரத்தில் ஒரு கண்ணிவெடித் தாக்குதல் இடம் பெற்றது. இத்தாக்குதலுக்கு முந்தய இரவு பரந்தன் குமரபுரத்திலுள்ள இவரது மற்றுமெரு இல்லத்தில் தங்கியிருந்து புறப்பட்டுச் சென்ற போராளிகளே இத்தாக்குதலை நடத்தினார்கள். இவர் வீட்டில் சாப்பிட்டுவிட்டே வானில் போராளிகள் புறப்பட்டனர்.


உமையாள்புரம் அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள பாலத்தில் காலையில் அதனைக் கடக்கும் இராணுவத்தினர் மீது தாக்கதல் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனையிறவிலிருந்து பரந்தன் சந்திக்குப் பாண்வாங்க வரும் இராணுவத்தினரை இலக்கு வைத்து குண்டைப் புதைத்து விட்டுக் காத்திருந்தனர் போராளிகள். ஒரு நூலை இழுத்தால் வெடிக்கும் விதமாக அப்பையா அண்ணை பொறிமுறையை ஒன்றினை அமைத்திருந்தார். படையினர் நெருங்கும் சமயத்தில் நூலினை உயர்த்தினார் அப்பையா அண்ணை. அந்நேரம் பார்த்து எங்கிருந்தோ வந்த ஆட்டுக்குட்டி ஒன்று நூலில் தடக்குப்படவே குண்டு முன்னரே வெடித்துவிட்டது.


இதனால் படையினர் குதித்து ஆனையிறவுப் பக்கமாக ஓடினர். இவர்கள் மீது தாக்குதலை நடத்தினர் போராளிகள். ஓடிச்செல்லும் படையினரை நோக்கித் தாக்குதல் நடத்த செல்லக்கிளியம்மான் படையினரின் ட்றக்கின் சாரதியின் ஆசனத்தில் அமர்ந்தார். அச்சமயம் எதிர்பாராத விதமாக முல்லைத்தீவிலிருந்து கவசவாகனம் ஒன்று இந்த இடத்தை வந்தடைந்தது. இதனால் சண்டையின் போக்கே மாறியது. இச் சண்டையில் 5படையினர் காயமடைந்தனர். ஆனாலும் அந்த இடத்தை விட்டுப் போராளிகள் பின்வாங்க வேண்டியிருந்தது. அக்காலத்தில் தொலைத்தொடர்பு வசதிகள் இருக்கவில்லை. அதனால் போராளிகள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடியவில்லை. கிட்டு.செல்லக்கிளியம்மான,றஞ்சன்(லாலா) முதலான போராளிகள் ஒரு பகுதியாகவும்.பொன்னம்மான்ääசந்தோசம்ääஅப்பையா அண்ணை முதலான போராளிகள் இன்னொரு பகுதியாகவும் கணேசும் இன்னெரு போராளியும் வேறெரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டு வௌ;வேறு பகுதிகளாகச் சென்றடைந்தனர். எனினும் கவசவாகனத்திற்கு அண்மையில் இவர்கள் சென்ற வாகனம் நின்றதால் மீட்டெடுக்க முடியவில்லை.


பின்னர் அந்த வானிலிருந்த தடையங்களை வைத்து திருமலையைச் சேர்ந்த நவரட்ணராஜாää சிவானந்தராஜா ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களில் நவரட்ணராஜா யாழ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் இவர் குருநகர் முகாமில் சித்திரவதைக்குட்பட்டு உயிரிழந்தார். சிவானந்தராஜ வெலிக்கடைச் சிறையில் உயிரிழந்தார்.
இதில் (வானில்)குறிப்பிடும் தடையங்களை வைத்தே இவர்களைக் கைது செய்து கொலை செய்துள்ளனர். இந்தநிலையில் இந்தவான் இவரது வீட்டிலிருந்துதான் புறப்பட்டு வந்தது என்ற தகவலும் கிடைத்திருந்தால் நிச்சயம் இவரும் பலியாகியிருப்பார். இவ்வாறாக தனது உயிரைப் பணயம் வைத்துப் போராட்டப் பங்களிப்பை வழங்கியிருந்தார் இவர்.


இதன் பின்னர் ஆயதப் பராமரிப்பு ääபாதுகாப்புப் பணிகளுக்கும் தளத்திற்கும் பொறுப்பாக இருந்த பண்டிதருடன் இவரது தொடர்வு இணைக்கப்பட்டதால் இயக்கத்தின் பாதுகாப்புää இயக்கஇரகசியப் பாதுபாப்புக் கருதி ஏனையோரின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது.


எனினும் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் குடாநாடு வந்த பின்னர் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கினார். இவ்வாறாகத் தேசிய விடுதலையை முதன்மைப்படுத்திய இவர் பின்னர் விசுவமடுவில் ஏற்பட்ட சிறுவிபத்தினைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலேயே (கச்சேரி நல்லூர் வீதி) தங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பிறவியியேயே இளம் பிள்ளைவாத நோய் தாக்கியதால் (3வயதில்) இவருக்கு ஒருகால் ஊனம். ஆனால் அது உடல் அங்கத்தில் மட்டுமே. உள்ளத்தைப் பொறுத்தவரை அது ஊனமில்லை. அது உறுதியானது. எமது தலைவனின் காலத்தில் தமிழீழத்தைப் பெற்றுவிடவேண்டுமென்பதில் போராளிகளுக்கு இருக்கும் அதே உறுதி இவரிடமிருந்தது.
இவர் கல்வியங்காடு காசிப்பிள்ளை வித்தியாசாலைää தர்மபுரம் மகாவித்தியாலயம்ääதர்மபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை ஆகியவற்றில் கற்பித்துள்ளார். இறுதியாக புளியம்பொக்கனைää பெரிய புலம் ஜயனார்வித்தியாலய அதிபராகவும் பணியாற்றினார். அமைதியாக அடக்கமாக விடுதலைப் பணிபுரிந்த இவரது பணிகளைப் பாராட்டித் தமிழீழத் தேசியத் தலைவர் “நாட்டுப்பற்றாளர்“ என்ற கௌரவத்தை வழங்கியுள்ளார்: 
-சங்கர்-

L’image contient peut-être : 1 personne, gros plan
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளெனும் அமைப்பைத் தமது தேவைக்கேற்றவாறு எவர் சுட்டினாலும் இவர்போன்ற நாட்டுப்பற்றாளர்களே ஒரு மாபெரும் மக்கள்சக்தியென்ற குறியீட்டடைவின் கரணியர்களாவர். எல்லாக்காலங்களிலும் புலிகளைப் பாதுகாத்து பராமரித்து நின்ற பரவாயிரம் நாட்டுப்பற்றாளர்களைக் கொண்டது எம்தேசமென்பதை இன்றையகாலமும் பதிவுசெய்கிறது. அகங்காரத்தோடு ஆதிக்க சக்திகள் அழித்தவிட்டோமென்று கூச்சலிட அமைதியாக ஆயிரமாயிரம் நாட்டுப்பற்றாளர்களால் புலத்திலும் தாய்நிலத்திலும் போராட்டம் தொடர்கிறதெனில் அதன் முன்னோடிகளாக எம்முன் தெரிவோர் இவர்போன்ற நாட்டுப்பற்றார்களே. அன்னைபூபதியம்மா முதல் புலத்திலே எரிதனலாய்ப்போன செந்தில்குமரன்வரை உலகுக்கு ஒரேசெய்தியையே இவர்கள் சொல்லிநிற்கின்றார்கள். தமிழினம் வீழ்ந்தோமென அடிமைப்பட்டிருக்காதென்பதே அது. இவரகள் எத்தக் கட்டளைகட்டுகும் செயற்படாத செம்மையாளர்கள். நான் கண்ட காட்சியொன்று  அப்போது ஊடகப்பரப்பு குறுகியகாலம். அவரொரு ஆசான். திருநெல்வேலிச் சந்தியிலே தமிழீழ விடுதலைப்புலிகளின் தகவற்பலகையொன்றிருந்தது அதிலே தினமும் நிகழும் முதன்மைச்செய்திகளை பதிவுசெய்வதே அவரது பணி. காலையிலே அதனை செய்துவிட்டே அவர்தனது வேலைக்குச் செல்வார். இப்படிக் களப்பணிமுதல் மனிதநலப்பணிவரை பல்வேறு தளங்களிலே செயலாற்றிய நாட்டுபற்றாளர்கள் என்றும் போற்றப்படவேண்டியோரே. அன்னைபூபதிதினமே அனைத்துநாட்டுபற்றாளருக்குமான தினமாகும். இந்த ஆண்டும் எமைக்கடந்து போகிறது. இந்தநாளிலே எமக்கு அண்மையாக நடைபெறும் நினைவு வணக்க நிகழ்விலே இணைந்து இவர்போற்றோருக்காக ஒருகணம் தலைசாயப்பதும் எமது கடமையாகும். 
தந்தையாரின் வழியிலே இவரது தனயனும் பேரனும்தமிழ்த்தொண்டாற்றுவதானது தலைமுறைகளைக் கடந்தும் தமிழ்நிலைக்கும் என்ற நம்பிப்க்கையை  வலுப்படுத்தகிறதெனலாம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.