Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரத பிரதமர் கூறிய அறிவுரை

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாரத பிரதமர் கூறிய அறிவுரை

 

எஸ்.கணேசன்

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்குள் உள்ள ஒற்­று­மையை நீங்கள் உறு­தி­யாக பாது­காத்­துக்­கொள்­ள­வேண்டும். எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்­பந்­த­னதும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் நகர்­வா­னது மிகவும் சரி­யான நிலையில் காணப்­ப­டு­கின்­றது. இது மிகவும் வலு­வாகப் பேசக்­கூ­டிய ஒரு சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எனவே, நீங்கள் தொடர்ந்தும் இந்த ஒற்­று­மையை பாது­காத்­துக்­கொள்ள வேண்டும் என்று இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரை வலி­யு­றுத்­தி­ய­தாக கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­ மன்ற உறுப்­பி­னரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதித் தலை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் நேற்று வீர­கே­சரி வார வெளி­யீட்­ டுக்குத் தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில்,

தமிழ் மக்கள் எதிர்­நோக்கும்

பிரச்­சி­னைகள், அர­சியல் தீர்வுத் திட்டம் ஆகி­யன குறித்து தெரி­வித்­த­போது காலம் செல்லச் செல்ல எதுவும் நடக்­காது போகும். அத்­துடன் மக்­க­ளு­டைய எதிர்ப்பும் வலுக்கத் தொடங்­கி­விடும். பின்னர் சர்­வ­தே­சத்தின் அழுத்­தங்­களும் அதி­க­ரிக்கத் தொடங்­க­லா­மென்று தாம் இலங்கை ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் ஏற்­க­னவே தெரி­வித்­த­தா­கவும் இந்­தி­யப்­பி­ர­தமர் கூறினார்.

வடக்குக், கிழக்கில் இந்­தியா அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வேலை­யற்­றுள்ள இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களைப் பெற்­றுத்­தர உதவ வேண்­டு­மென கோரிக்கை விடுத்­த­போது இலங்­கையில் முத­லீடு செய்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. வடக்குக், கிழக்­கிலும் இவ்­வா­றான முத­லீ­டு­களை செய்­வ­தற்கு தாங்கள் முனைப்­பாக செயற்­ப­டு­வ­தா­கவும் பிர­தமர் எம்­மிடம் தெரி­வித்தார்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்டும். தற்­போது இரண்டு பெரும் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து ஆட்­சி­ய­மைத்­தி­ருக்­கின்­றன. ஆகவே, இந்த இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு இரண்டு கட்­சி­களும் ஒற்­று­மை­யாக முயற்­சி­களை மேற்­கொள்­ள­வேண்டும். சிறு சிறு பிரச்­சி­னைகள் உள்ளே இருந்­தாலும் அவர்கள் அதைத் தீர்த்து பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான முயற்­சியை மேற்­கொள்­வ­தற்கு இந்­தியா உத­வி­செய்­ய­வேண்டும் என்று கூட்­ட­மைப்பு இந்­தி­யப்­பி­ர­த­ம­ரிடம் வேண்­டுகோள் விடுத்­தது.

இரண்­டா­வ­தாக வடக்­கு-­கி­ழக்கு இணைப்புக் குறித்து பேசப்­பட்­டது. எட்டு மாவட்­டங்­களைக் கொண்ட வடக்கு, கிழக்கில் தமி­ழர்­களே அதி­க­மாக வாழ்ந்து வரு­கின்­றனர். நில ரீதி­யாக இணைந்­தி­ருக்கும் வடக்­கு-­கி­ழக்கு நிரந்­த­ர­மாக இணைக்­கப்­ப­ட­வேண்டும். அதி­காரப் பர­வ­லாக்கல் செய்­யப்­பட்டு நிலம், பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­ப­டல்­வேண்டும். கிட்­டத்­தட்ட இந்­தி­யாவில் ஒரு மாநி­லத்தில் அதி­கா­ரங்கள் பர­வ­லாக்­கப்­பட்­டி­ருப்­பதைப் போன்று இங்கும் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கம் வேண்டும்.

எமது மக்­க­ளு­டைய காணி­களில் படை­யினர் விவ­சாயம் செய்து கொண்­டி­ருக்­கின்­றனர். ஆகவே, இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை நிறுத்­தி­விட்டு காணி­களை எம்­மக்­க­ளி­டமே கைய­ளிக்­க­வேண்டும். மேலும், காணாமல் போனோ­ருக்கு காரி­யா­லயம் அமைத்து அதை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்டும். பல வரு­டங்­க­ளாக சிறை­யி­லி­ருக்­கின்ற எம்­மு­டைய உற­வு­களை விடு­தலை செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அதற்­காக தற்­போது போராட்­டங்கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

அத்­துடன் எங்­களைப் பொறுத்­த­மட்டில் இரண்டு பெரிய கட்­சி­களும் இணைந்­தி­ருக்கும் இச்­சந்­தர்ப்­பத்தில் தான் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வைக்­கா­ண­மு­டியும். ஆகவே, இதற்­கான ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தற்­கான பொறுப்பு இந்­தி­யா­வுக்கு இருக்­கின்­றது. நேரம் போதா­த­ப­டியால் அவ்­வா­றான விட­யங்­களை சுருக்­க­மாகக் குறிப்­பிட்டு அவ­ரது பதிலை எதிர்­பார்த்தோம்.

அதற்கு அவர், அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் சம்­பந்­த­மாக நாங்கள் அர­சாங்­கத்­துடன் பேசி­யி­ருக்­கின்றோம் நிச்­ச­ய­மாக அதை செய்து முடிப்­ப­தற்­கான முயற்­சி­களை தற்­போது மேற்­கொள்­ள­வுள்ளோம்.

இலங்­கையை அபி­வி­ருத்தி செய்யும் நோக்கில் இங்கு முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. ஆகவே வடக்­கு-­கி­ழக்­கிலும் இவ்­வா­றான முத­லீ­டு­களைச் செய்­வ­தற்கு நாங்கள் முனைப்­பாக செயற்­ப­டுவோம் என்றும் இந்­திய பிர­தமர் நரேந்­தி­ர­மோடி தெரி­வித்தார்.

சிறை­யி­லுள்ள கைதிகள், காணாமல் போனோ­ரு­டைய பிரச்­சி­னைகள், காணி விடு­விப்பு போன்ற பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடி தீர்வு காணப்­ப­ட­வேண்டும் , அங்­குள்ள மக்கள் ஏற்­க­னவே பல இன்­னல்­க­ளுக்­குள்­ளா­கியே வாழ்ந்­து­வ­ரு­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். அதற்கு கால தாமதம் பண்­ண­வேண்டாம் என ரணில் புது­டில்­லிக்கு விஜயம் மேற்­கொண்­டுள்­ள­போதே தெரி­வித்­த­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

அதே­போன்று ஜனாதிபதியிடமும் காலந்தாழ்த்தாமல் தற்போது எந்தெந்த நியாயமான கோரிக்கைகளுக்காக மக்கள் போராடிவருகின்றார்களோ அவற்றிற்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் 2016ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இந்த ஆண்டிலும் இவ்விடயம் இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆகவே, காலதாமதத்தை ஏற்படுத்தாமல் இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்படியும் பிரதானமாகக் கேட்டுக்கொண்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-05-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.