Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபையை முடக்கி தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்! வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை

Featured Replies

இன்று மேதகு ஜனாதிபதியைச் சந்திக்கும் எமது முதமைச்சர் எமக்கான சாதகமான முடிவுகளைத் தர வேண்டும். இன்றைய சந்திப்பின் பின்னர் வடமாகாண முதலமைச்சரால் எங்களுக்கான சாதகமான பதில்கள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டும் வடமாகாண சபையை முடக்கி அங்குள்ள மூன்று வாயில்களின் முன்பாகவும் கொட்டகைகள் அமைத்துத் தீர்வு கிடைக்கும் வரையிலான தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும் என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர அரச வேலைவாய்ப்பை வலியுறுத்தி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் காலவரையற்ற போராட்டம் இன்று புதன்கிழமை(17) 80 ஆவது நாளாகவும் தீர்வின்றி இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் போராட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரிகள் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்கள் போராட்டம் 80 ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த 80 நாட்களிலும் எமக்கான எந்தவொரு சாதகமான முடிவுகளும் வழங்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

நாங்கள் கடந்த-09 ஆம் திகதி வடமாகாண சபையை முற்றுகையிட்டதுடன் சபையை முடக்கி எமக்கான தீர்வினை வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களிடம் கேட்டிருந்தோம். ஆனால், எங்களுக்குச் சாதகமான, உறுதியான எந்தவொரு பதில்களும் தரப்படவில்லை.

இன்று-17 ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திக்கவுள்ளதாகவும் அப்போது வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும், இந்தக் கலந்துரையாடலின் பின்னர் எமக்குச் சாதகமான முடிவுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆகவே, இன்று மாலையோ அல்லது நாளையோ எமக்கான நல்ல முடிவுகள் கிடைக்கப் பெற வேண்டும் என நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். எமது பிரச்சினை இன்னமும் இழுபட்டுச் செல்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எமது வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை அரசாங்கம் அல்லது எமது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர நாங்கள் யாரிடம் சென்று எமக்கான தீர்வினைக் கேட்க முடியும் எனவும் வேலையற்ற பட்டதாரிகள் கெள்வியெழுப்பியுள்ளனர்.

இதேவேளை, புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலைக்கான நீதி கோரலுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டக் களத்திற்கு முன்பாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் போராட்டக் களத்திற்கு முன்பாகப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/146014?ref=view-latest

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.