Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டி வரும்

Featured Replies

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டி வரும்

p24-8a27948fa2971fc241579b5c84dcd498249838fe.jpg

 

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த நடவடிக்கைக்கு தயார்

(எம்.சி.நஜிமுதீன்)

முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்துவரும் அசாதாரண நடவடிக்கைகள் தொடர்பில் பாரா ளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் முஸ்லிம் உறுப்  பினர்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் உடனடியாக சத்தித்து பேச்சுவார்த்தை நடத்து  வதற்கு தீர்மானித்துள்ளனர். 

 எனவே அவ்விருவருடனான சந்திப்பை இன்னும் ஓரிரு தினங்களில் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் குறித்த நடவடிக்கையில் கட்சி வேறுபாடுகளுக்க அப்பால் நின்று செயற்படுவதற்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் உறுதிபூண்டுள்ளனர். 

நாட்டில் தற்போது அதிகரித்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் சம்பந்தமாக ஆராயும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் ஏற்பாட்டில் நேற்று காலை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போதே குறித்த இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான எம்.எச்.ஏ. ஹலீம், ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், எம்.எச்.எம். நபவி, இஷாக் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நல்லாட்சியின் இரண்டரை வருடங்கள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் இடம்பெற்றமையினாலேயே அவ்வாட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் திரண்டனர். எனவே நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதில் முஸ்லிம்கள் மிகுந்த பங்கற்றியுள்ளனர்.

ஆகவே நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்குள்ளது. அப்பொறுப்பிலிருந்து விடுபட்டு செயற்பட முடியாது. இருந்தபோதிலும் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அதனால் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை படிப்படியாக வீழ்ச்சி கண்டு வருகிறது. எனவே முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும்.

மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதாகக் கூறமுடியாது. முஸ்லிம்களின் பங்களிப்புடன் ஆட்சிபீடமேற்றப்பட்ட இவ்வரசாங்கத்திற்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துவதற்கு திரைமறைவில் இடம்பெறும் செயற்பாடாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. ஆகவே இது விடயத்தில் அரசாங்கம் பராமுகமாக இருக்குமாக இருந்தால் அது வேறுவிதமான நிகழ்வுகளுக்கு வழிவகுத்துவிடும்.

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் இடம்பெறுவது தற்போது வழமையாகியுள்ளது. இருந்தபோதிலும் நல்லாட்சியில் இச்செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அல்லாவிடத்து முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ்பெறேேவண்டிய நிலை ஏற்படலாம். முஸ்லிம் மக்கள் அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ்பெற முற்படுவார்களாயின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டியிருக்கும் என அச்சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.