Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

91 பேர் பலி , 110 பேர் காணவில்லை : மரணமானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

Featured Replies

களுத்துறை மண்சரிவில் 6 பேர் பலி, நால்வரைக் காணவில்லை

 

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேரைக் காணவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

landslide.jpg_1718483346.jpg

களுத்துறை மாவத்தவத்த, புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தில் காணாமல்போனவர்களை தேடும் பணியில் முப்படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/20377

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இயற்கை அனர்த்தம் :  13 பேர் பலி, நான்கு பேரைக்காணவில்லை

Published by Priyatharshan on 2017-05-26 11:03:29

 

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையையடுத்த இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேரைக் காணவில்லையென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

unnamed__4_.jpg

இந்நிலையில் சம்பவத்தில் காணாமல்போனவர்களை தேடும் பணியில் முப்படையினர்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

களுத்துறையில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20379

  • தொடங்கியவர்

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் தெஹியோவிட்ட : ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம்! (படங்கள்)

 

 

தெஹியோவிட்ட பகுதியில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

18716426_1772655949417413_673879548_n.jp

நேற்று முதல் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக தெஹியோவிட்ட நகரம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. சுமார் 8 அடி உயரம் வரை நீர் நிரம்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை தெஹியோவிட்ட தேசிய பாடசாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் நிரம்பியுள்ளதுடன், ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியிலும் வெள்ளநீர் நிரம்பியுள்ளது.

18716472_1772656102750731_1542628516_n.j

இதனால் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் பஸ்கள் மாற்றுவழிகளை பயன்படுத்திவருவதுடன், சில பஸ்கள் மீண்டும் ஹட்டன் நோக்கி புறப்பட்டுச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சிறிய வாகனங்கள் தெஹியோவிட்ட பகுதியிலுள்ள மாற்றுவழியொன்றினூடாக பயணிப்பதாக செய்தியாளர் தெரிவித்தார்.

18716689_1772656122750729_343403974_n.jp

இதேவேளை தெய்யோவிட்ட நகரத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

18718480_1772655956084079_882268905_n.jp

 

18741359_1772655909417417_110958101_n.jp

18762367_657298061126632_890718132_n.jpg

18762496_657298114459960_936872792_n.jpg

uuu_pu_p__.JPG

 

Tags

http://www.virakesari.lk/article/20381

  • தொடங்கியவர்

இரத்தினபுரி வெள்ளத்தில் மூழ்கியது  : மண்சரிவுகளில் சிக்கி 10 பேர் பலி

Published by Priyatharshan on 2017-05-26 11:56:52

 

இரத்தினபுரி நகரில் இடம்பெற்ற மண்சரிவுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக மேலதிக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

18700172_1541543272574466_41487435421587

களுகங்கை பெருக்கெடுத்ததில் இரத்தினபுரி நகரம் முற்றாக  நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

ஆற்று நீர் நகருக்குள் புகுந்ததில் இரத்தினபுரி நகரின் 10 பிரதேச செயலகப்பிரிவுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மக்களை மீட்கும் பணியில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களினால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 33 பேரை காணவில்லையெனவும் காணாமல்போனோரை மீட்கும் பணி இடம்பெற்றுவருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20383

  • தொடங்கியவர்
புளத்சிங்கள மண்சரிவில் 9 பேர் பலி
 

புளத்சிங்கள, போகஹவத்தை மண்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களது சடலங்கள், பிம்புர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய அதிகாரி ஜீ.டீ.ஆர்.ருத்ரிகு தெரிவித்தார்.

இதேவேளை, இப்பகுதியில் மேலும் ஒரு வீடு, மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த வீட்டின் சுவர்களில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் எஸ்.கே.சேனாதீர தெரிவித்தார்.

இதேவேளை, 10இற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாகவும் இக்கிராமங்களிலிருந்து வெளியேறியவர்களுக்கான நிவாரண உதவிகளை பிரதேச செயலகம் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/புளத்சிங்கள-மண்சரிவில்-9-பேர்-பலி/150-197354

 
 
 
மண்மேடு சரிந்து விழுந்து மாணவர் இருவர் பலி

அவிசாவளை, வெலன்கல பிரதேசத்தில் வீடொன்றின் மீது, மண்மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். 14 வயதுடைய மாணவி மற்றும் 10 வயது மாணவன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

 
 
 
 
ஹெலிகொப்டரிலிருந்து விழுந்து விமானப்படை வீரர் காயம்

நெலுவ, துரிஹெல தோட்டத்தில் பாதிப்புக்கு உள்ளான மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானபடை வீரர், ஹெலிக்கொப்டரிலிருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

நபரொருவரை மீட்டு ஹெலிகொப்டரில் ஏற்ற முயற்சித்தபோது, அந்நபரும் விமானபடை வீரரும் கீழே விழுந்துள்ளனர்.

சுமார் 25 அடி உயரத்திலிருந்து இருவரும் நிலத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

தெற்கு அதிவேக வீதியில் பயணிப்போரின் கவனத்திற்கு...!

 

 

தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன மற்றும் கொக்மாதுவ ஆகிய நுழைவிடங்களில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதால் குறித்த பகுதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த நுழைவிடங்களை பயன்படுத்தும் வாகன சாரதிகள் வேறு நுழைவிடங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

DAu504DUAAIgQ8A.jpg

 

 
 

http://www.virakesari.lk/article/20386

  • தொடங்கியவர்

அகலவத்தையில் பாரிய மண்சரிவு : கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் மாயம்

Published by MD.Lucias on 2017-05-26 12:59:51

 

 

agalawaththa-landslide-flood.jpgஅகலவத்தை, மாவத்தவத்த பகுதியில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளனர்.

மூன்று வீடுகளே மண்ணில் புதையுண்டுள்ளதாகவும்  அவ் வீட்டில் இருந்தவர்களே மண்ணில் புதையுண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

agalawaththa-landslide-1.jpgagalawaththa-landslide-2.jpgagalawaththa-landslide-3.jpgagalawaththa-landslide5.jpg

 

 

Tags

http://www.virakesari.lk/article/20387

 

 

 

அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன வெள்ளத்தில் சிக்கியுள்ளார்

laksman-yappa.jpg
அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாத்தறை பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் அமைச்சரின் வீடு பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் வீட்டுப் பகுதி 15 அடி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சரும், அவரது புதல்வரும் மாகாணசபை உறுப்பினருமான பசந்த யாபா  அபேவர்தனவும் வீட்டில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் மேல் பகுதிக்கு சென்று உதவி கோரியுள்ளதாகவும், ஹெலிகொப்டர் மூலம் அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சினால் ஹெலிகொப்டர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2000மாம் ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை விடவும் இம்முறை அதிகளவு மோசமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/archives/28036

  • தொடங்கியவர்

இயற்கையில் கோரம் : இதுவரை 28 பேர் பலி, 41 பேர் மாயம்

 

 

தொடர்மழையினால் ஏற்பட்டு வரும் வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளதுடன் 41 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.extreme-weather-sri-lanka.jpg

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே இந்த அனர்த்தங்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

புளத்சிங்கள போகஹாவத்த பகுதியில் ஆறு பேர் பலியானதுடன் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், தீவலகட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் எட்டுப் பேரைக் காணவில்லை.

களுத்துறை, பதுரெலிய பகுதியில் நிகழ்ந்த மண்சரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஹெய்யந்துடுவை, சப்புகஸ்கந்தையில் மதில் சுவரொன்று சரிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர்.

இரத்தினபுரி நகரம் முழுவதும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இந்த அசாதாரண காலநிலையால் அப்பகுதியில் மட்டும் பத்துப் பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

பெலியத்தை - கஹாவத்தையில் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த அசாதாரணச் சூழலால் தெனியாய, மொரவக்க கந்தையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/20389

  • தொடங்கியவர்
சப்ரகமுவ பாடசாலைகளுக்குப் பூட்டு
 

மழையுடன் கூடிய காலநிலை மற்றும் வெள்ளத்தின் காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என, சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர்  மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/சப்ரகமுவ--பாடசாலைகளுக்குப்-பூட்டு/175-197353

 

 

 

அவதானம்..! நிரம்பிவழியும் களு, நில்வலா, ஜின் கங்கைகள் : பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின

 

 

நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் களு கங்கை, நில்வலா கங்கை மற்றும் ஜின் கங்கை ஆகியன நிரம்பி வழிகின்றன. இதனால், அப்பகுதிகளைச் சேர்ந்த தாழ்நிலப் பிரதேசம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.D00d55d00d5dd.jpg

காலி, மாத்தறை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை உட்படப் பல நகரங்கள் வெள்ளத்தினால் கடும் விளைவுகளுக்கு முகங்கொடுத்துள்ளன.

காலியில் ஜின் கங்கை பெருக்கெடுத்ததால், அதைச் சுற்றியுள்ள நெலுவ, ஹபரகட, மொறவக்க, யக்கல ஆகிய பிரதேசங்கள் முற்றிலுமாக வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் களு கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பாலிந்த நகரம், புளத்சிங்கள மற்றும் அகலவத்தை ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கிரம ஓய பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மாத்தறையின் கம்புறுப்பிட்டிய மற்றும் முலட்டியான பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வேகமாக நிரம்பி வரும் களனி ஆற்றிலும், மழை தொடர்ந்து பெய்யுமானால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியைச் சூழவுள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பெய்துவரும் தென்மேற்குப் பருவ மழையால் தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மேலும், இப்பாதிப்புகள் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளுக்கும் பரவலாம் என்பதால் அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/20390

  • தொடங்கியவர்

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் 15 குழந்தைகள் : உதவி கேட்டு தொலைபேசி மூலம் கோரிக்கை! (குரல் பதிவு இணைப்பு)

 

விடாது பெய்து வரும் மழையால், காலி, ஹினிதும - நுககஹா பகுதியில் உள்ள வீடொன்றில் பதினைந்து குழந்தைகளுடன் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். இத்தகவலை, அங்கிருக்கும் ஒருவர் தொலைபேசி மூலமாக தெரிவித்துள்ளார்.

 

 

“மாலை ஆறு மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. விடாமல் பெய்துகொண்டிருந்ததால் இரவு பத்து மணியளவில் இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் மூழ்க ஆரம்பித்தன. இப்போது நாம் அனைவரும் ஒரு மாடி வீட்டிலேயே தங்கியிருக்கிறோம். நாம் இருக்கும் வீடு ஒரு தனித் தீவு போலக் காட்சியளிக்கிறது. 

“ஏற்கனவே ஒரு வீட்டில் இருந்து கூக்குரல் எழுந்ததால், பரிசல் போன்ற ஒன்றை அமைத்துக்கொண்டு சென்று அவர்களையும் மீட்டு வந்து எம் வீட்டில் தங்க வைத்திருக்கிறோம். நாம் செல்லும் வரை அவர்கள் கூரையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தனர். வெள்ளத்தில் மூழ்கவிருந்த சுமார் 15 குழந்தைகளும் தற்போது எம்முடனேயே இருக்கின்றனர்.

“குழந்தைகளின் பசியைத் தீர்க்க போதுமான உணவு இல்லாததே தற்போது பிரச்சினையாக இருக்கிறது. பேரிடர் நிவாரணக் குழுவுக்கு அழைப்பு விடுத்தபோது, அவர்களால் நாம் இருக்கும் பகுதிக்குள் நுழைய முடியாதுள்ளதாகத் தெரிவித்தனர்.

“மழை இன்னும் விட்டபாடில்லை. இன்னும் சிறிது நேரம் மழை தொடர்ந்து பெய்தால் நாம் உயிர்தப்ப வழியே இல்லை.”

 

http://www.virakesari.lk/article/20392

  • தொடங்கியவர்

போகவத்தையில் 7 பேர் பலி, 10 பேர் மாயம்

 

 

Bogawathe.jpgபுளத்சிங்கள, போகவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

4 வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதோடு காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/20393

  • தொடங்கியவர்

மீட்பு பணியின் போது நேர்ந்த கொடூரம் : ஹெலிகொப்டரில் இருந்த விழுந்த பணியாளர் : காலியில் சம்பவம்

 

 

காலி நெலுவ  பகுதியில் மீட்பு பணிக்காக சென்றிருந்த Mi27 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்த மீட்பு பணியாளர் ஒருவர் தவறி வெள்ளத்தில் விழுந்துள்ளார்.

z_p01-over-01.jpg

இந்நிலையில் வெள்ளத்தில் விழுந்த குறித்த நபர் உட்பட, வெள்ளத்தில் சிக்குண்ட மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை காலி நெலுவ கொஸ்முல்ல - துலி எல்ல பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்தோடு அதிகளவான அனர்த்த இடம்பெற்ற மாவட்டமாக காலி மற்றும் களுத்துறை மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20394

  • தொடங்கியவர்
7 மாவட்டங்களில் 2,811 குடும்பங்களைச் சேர்ந்த 7,856 பேர் பாதிப்பு
 

கடும் மழை காரணமாக, களுகங்கை, களனி கங்கை, கின் கங்கை, நில்வல கங்கை மற்றும் அட்டங்களு ஓயா ஆகிய நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் 7 மாவட்டங்களில் 2811 குடும்பங்களைச் சேர்ந்த 7856 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 42 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நிலையம் மேலும் கூறியுள்ளது.

சீரற்றக் காலநிலை காரணமாக, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் மேலும் கூறியுள்ளது.

புளத்சிங்களவின் இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவினால், 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் மண்ணுள் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புளத்சிங்கள போகஹாவத்தையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். இதேவேளை, புளத்சிங்கள, கொபவக்கவில் ஏற்பட்ட மண்சரிவில் 8 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

களுத்துறை, பதுரிலியவில் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சப்புகஸ்கந்த, ஹெய்யன்தடுவவில் மண்மேடோடு சேர்ந்து, பாரிய மதில் வீடொன்றின் மீது உடைந்து விழுந்ததில், பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேற்படி வீட்டில் வசித்து வந்த தாயும் மகளுமே இவ்வாறு உயிரழந்துள்ளனர்.

இதேவேளை, அவிசாவளையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். மேலும், இரத்தினபுரியில் மரம் முறிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

அதிக மழை காரணமாக, இரத்தினபுரி , காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழக்கியுள்ளன.

இந்நிலையில், அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்து உதவிகளை பெறுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது.

இதற்கமைவாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தொடர்பு இலக்கங்களான 0112136226, 0112136136 மற்றும் 0773957900  ஆகிய இலக்கங்கள், 24 மணித்தியாலங்களும் சேவையில் இருக்குமென மேற்படி நிலையம் அறிவித்துள்ளது.

பிராந்தியங்களில், மேற்படி நிலையத்தின் அதிகாரிகளாக கடமையாற்றுபவர்களின் அலைபேசி இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கங்களையும் மேற்படி நிலையம் வெளியிட்டுள்ளது. அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தினால் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென்று அந்நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பு- கே.ஏ.நந்தசிறி   (0112325511/ 0112437242/ 0778819383)

காலி-ஏ.சேதர  (0912247175/ 0771761692)

கம்பஹா - குசுமிசிறி  (0332234142/ 0332222900/ 0771761692)

களுத்துறை -கிறிசான்   (0776368763)

மாத்தறை விதானகே    (0412222284/ 0718245180)

இரத்தினபுரி கே.குமார  (0452222233/ 0452222140/ 0714408835)

இதேவேளை, வெள்ளம் மற்றும் வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான உதவியை பெறுவதற்காக, 0112343970 என்ற இலக்கத்தினூடாக, படைவீரர்களின் உதவியை பெற முடியுமென்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/7-மாவட்டங்களில்-2-811-குடும்பங்களைச்-சேர்ந்த-7-856-பேர்-பாதிப்பு/150-197384

  • தொடங்கியவர்

இயற்கையின் சீற்றம் : பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு

 

 

 

More-than-57-people-died.jpg

நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையடுத்து நிலவிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதுடன் 86 பேர் காணாமல்போயுள்ளனர்.

 

குறிப்பாக களுத்துறையில் மாவட்டத்தில் மாத்திரம் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக களுத்துளை மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்து.

இந்நிலையில் தெனியாய மொரவகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 12 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாத்தறை மாவட்ட பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

மண்சரிவுகளில் சிக்கிகாணாமல்போன நபர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸாருடன் இணைந்து முப்படையினரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20397

எச்சரிக்கை : இப்பிரதேசங்களிலிருந்து உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்..

 

பெய்து வரும் கனமழை காரணமாக களனி கங்கையை அண்மித்துள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

fld_vra.jpg

இதனால் களனி கங்கையை அண்மித்த கொலன்னாவ, கடுவெல, வெல்லம்பிட்டிய, களனி, பியகம, ஹன்வெல, பாதுக்க மற்றும் அவிஸ்ஸாவெல்ல ஆகிய பிரதேசங்களில் வசிப்போர் இன்று இரவிற்குள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தென் மாகாணங்களில் ஜின் கங்கை, நில்வலா மற்றும் களு கங்கையை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிப்போர், குறித்த நதிகள் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும், அதனால் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் படி வேண்டப்பட்டுள்ளனர்.

vir_fld.jpg

அத்தோடு மலைப்பாங்கான பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் மண்சரிவுகளை தவிர்ப்பதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் படி பணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக களுத்துறை மற்றும் இரத்தினபுரிமாவட்டங்கள் மன்சரி அபாயம் அதிகமுள்ள மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஏனைய நுவரெலியா மற்றும் கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மண்சரிவு அபாயங்கள் நிறைந்து காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20402

  • தொடங்கியவர்

91 பேர் பலி , 110 பேர் காணவில்லை : மரணமானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

 

 

நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதுடன் 110 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.dead.jpg

மேலும் இதுவரை 16 ஆயிரத்து 759 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 285 குடும்பங்களைச் சேர்ந்த 2042 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

இயற்கை அனர்த்தத்தில் 17 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 482 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே மரணமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மண்சரிவுகளில் சிக்கி காணாமல் போன நபர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/20403

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.