Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பராமுகம்

Featured Replies

பராமுகம்

 

தமிழ் மொழியில் பேசக்­கூ­டிய வல்­லமை உடைய ஒருவர் வட­மா­காண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது என்­பது,வட­மா­கா­ண­ச­பையை நல்ல முறையில் செயற்­ப­டுத்­தவும் அதன் ஊடாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வட­மா­காண மக்­க­ளுக்கு சிறந்த சேவை­யாற்­றவும், அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும் பேரு­த­வியாக இருக்கும் என்றே கரு­தப்­பட்­டது. 

 

இறுதி யுத்­தத்­தின்­போது என்ன நடந்­தது, என்­னென்ன வகையில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டன, சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் எவ்­வாறு புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருந்­தன என்­பது குறித்து பொறுப்பு கூற வேண்­டிய கடப்­பாட்டில் அர­சாங்கம் சிக்­குண்டு கிடக்­கின்­றது. 

இந்த பொறுப்புக் கூறல் கட­மையை நிறை­வேற்­று­வதில் முன்­னைய அர­சாங்­கத்தைப் போலவே, நல்­லாட்­சிக்­கான அர­சாங்­கமும், காலத்தைக் கடத்தி அதனைத் தட்­டிக்­க­ழிக்கும் நோக்கில் செயற்­பட்டு வரு­கின்­றதா என்ற சந்­தேகம் பர­வ­லாக எழுந்­தி­ருக்­கின்­றது. 

அத்­த­கைய சந்­தே­கத்­திற்கு மத்­தி­யிலும், அர­சாங்கம் தனது பொறுப்பு கூறு­கின்ற செயற்­பாட்டை உரிய முறையில் நிறை­வேற்­று­வ­தற்­காக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் மேலும் இரண்டு வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இக்காலப்­ப­கு­தியில் அர­சாங்கம் தனது பொறுப்­புக்­களைச் சரி­யான முறையில் நிறை­வேற்­றுமா என்­பதும் நம்­பிக்கை ஏற்­ப­டுத்தத் தக்­க­தாக இல்லை.

ஏனெனில் பொறுப்புக் கூறு­த­லுக்­கான செயற்­பா­டு­களை மேற்­கொள்­வதில் அர­சாங்கம் இன்னும் பாரா­மு­க­மான ஒரு போக்கைக் கொண்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. 

பொறுப்பு கூறும் விட­யத்தில் முக்­கி­ய­மாக வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய விடயம் இப்­போது முன்­னி­லைக்கு வந்­துள்­ளது. 

இறுதி யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பகு­தி­களில் பதுங்கு குழி­களில் இருந்து வெளியில் வந்­த­போது, இரா­ணு­வத்­தி­னரால் பிடித்துச் செல்­லப்­பட்­ட­வர்­களும்,  பின்னர் அர­சாங்­கத்தின் அழைப்பை ஏற்று, இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த முன்னாள் போரா­ளி­க­ளு­மாகப் பலர் காணாமல் போயி­ருக்­கின்­றார்கள். 

யுத்த களத்­திற்கு வெளியில் நக­ரங்­க­ளிலும், கிரா­மங்­க­ளிலும் இரா­ணு­வத்­தினர் நடத்­திய சுற்றி வளைப்புத் தேடுதல் மற்றும் இரா­ணு­வத்­தினர் மீது விடு­த­லைப்­பு­லிகள் ஆங்­காங்கே நடத்­திய தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து, தமது சகாக்கள் மீது தாக்­குதல் நடத்­தி­ய­வர்­களைப் பிடிப்­ப­தற்­காக இரா­ணு­வத்­தினர் நடத்­திய தேடுதல் வேட்­டை­க­ளின்­போதும் பலர் பிடித்துச் செல்­லப்­பட்­டார்கள். பலர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்து கொண்டு செல்­லப்­பட்­டார்கள். 

இதை­யும்­விட, இரா­ணு­வத்­தி­ன­ருக்குக் கிடைத்த இர­க­சிய தக­வல்கள் மற்றும் அவர்­க­ளுக்கு இயல்­பா­கவே ஏற்­பட்ட சந்­தேகம் கார­ண­மாக கடை­வீ­திக்குச் சென்­ற­வர்­களும் வேலைத்­த­லங்­க­ளுக்குச் சென்­ற­வர்­களும், வயல்­க­ளுக்கும், குளங்­க­ளுக்கும் தேவைகள் நிமித்தம் சென்­ற­வர்­களும் வழியில் மறைந்­தி­ருந்த அல்­லது சுற்­றுக்­காவல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த இரா­ணு­வத்­தி­னரால் பிடித்துச் செல்­லப்­பட்­டார்கள். 

அது மட்­டு­மல்­லாமல், நகர வீதி­க­ளிலும், விடு­த­லைப்­பு­லி­களின் பிர­தே­சத்­திற்கும், இரா­ணுவ கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சத்­திற்கும் இடையில் அமைக்­கப்­பட்­டி­ருந்த இரா­ணுவ சோதனைச் சாவ­டிகள் மற்றும் நகர்ப்­பு­றங்­களில் போக்­கு­வ­ரத்து மார்க்­கங்­களில் அமைக்­கப்­பட்­டி­ருந்த இரா­ணுவத்தின் வீதிச் சோதனை முகாம்­க­ளிலும் வைத்து பலர், இரா­ணு­வத்­தி­ன­ரதும், இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்­க­ளி­னாலும்  சந்­தே­கத்­தின்­பேரில் குடும்­பத்­தி­ன­ருக்கோ, உற­வி­னர்­க­ளுக்கோ அல்­லது மற்­ற­வர்­க­ளுக்கோ தெரி­யாத வகையில் கைது செய்­யப்­பட்­டார்கள். விசா­ர­ணைக்­கென தடுத்து வைக்­கப்­பட்டார்கள்.  இவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் விடு­தலை செய்­யப்­ப­ட­வில்லை.  

இதனால், இவர்­களை இரா­ணு­வத்­தி­னரே வலிந்து காணாமல் ஆக்­கி­யுள்­ளார்கள் என்று உற­வி­னர்கள் சந்­தே­கிக்­கின்­றார்கள். வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய உற­வி­னர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள சந்­தேகம் நியா­ய­மா­னது. பிடித்துச் செல்­லப்­பட்­ட­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்க வேண்டும். 

அல்­லது அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­ப­து­பற்றி குடும்ப உற­வி­னர்­க­ளுக்கு அறி­வித்­தி­ருக்க வேண்டும். அவ்­வா­றில்­லா­விட்டால், அவ்­வாறு பிடிக்­கப்­பட்­ட­வர்கள் அல்­லது கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தின் ஊடாக சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும். இவ்­வாறு செய்­தி­ருந்தால், இரா­ணு­வத்­தி­ன­ராலும், இரா­ணுவ புல­னாய்வு பிரி­வி­ன­ராலும் பிடிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது வெளிச்­சத்­திற்கு வந்­தி­ருக்கும். ஆனால் அவ்­வாறு முறை­யாக நடை­பெ­ற­வில்லை என்­ப­துதான் கவ­லைக்­கு­ரி­யது. இத­னால்தான் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அர­சாங்­கமே பொறுப்பு கூற வேண்டும் என்ற கோரிக்கை பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­க­ளி­னாலும், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­க­ளி­னாலும், ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்­தி­னாலும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதைப் பற்றி அர­சாங்கம் விளக்­க­ம­ளிக்க வேண்டும் என்று கோரப்­ப­டு­கின்­றது. 

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான போராட்டம் 

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது குறித்து அர­சாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கோரி, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா, திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பாணம் ஆகிய இடங்­களில் அவர்­க­ளு­டைய உற­வி­னர்கள் சுழற்சி முறையில் உண்ணா விரதம் இருந்து, அற­வழிப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

இந்த வகையில் கிளி­நொச்சி போராட்டம் 100 நாட்­களைக் கடந்­து­விட்­டது. வவு­னி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள போராட்டம் 100 ஆவது நாளை எட்­டி­யி­ருக்­கின்­றது. 

கிளி­நொச்­சியில் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் நூறா­வது நாளன்று, ஏ9 வீதியை மறித்து, வாகனப் போக்­கு­வ­ரத்­துக்­களைத் தடை செய்து அர­சாங்­கத்தின் கவ­னத்தை ஈர்த்­தி­ருந்­தார்கள்.  வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள், பொது­மக்கள், பொது அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்கள், மனித உரிமைச் செயற்­பாட்­டாளர்கள், மத­கு­ரு­மார்கள், அர­சி­யல்­வா­திகள் என பல­த­ரப்­பட்­ட­வர்­களும் கலந்து கொண்ட இந்த அற­வழிப் போராட்டம் ஜனா­தி­பதி செய­ல­கத்தின் கவ­னத்தை ஈர்த்­தி­ருந்­த­தை­ய­டுத்து, அங்­கி­ருந்து வழங்­கப்­பட்ட ஓர் உறு­தி­மொ­ழி­யை­ய­டுத்து கைவி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அவர்கள் தங்­க­ளு­டைய அற­வழிப் போராட்­டத்தைக் கைவி­ட­வில்லை. அது தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இரண்டு வார காலப்­ப­கு­தியில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்­தப்­படும். காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் அரச உயர் மட்­டத்­தி­னரைச் சந்­தித்துப் பேச்­சுக்கள் நடத்­து­வ­தற்கு வசதி செய்­யப்­படும் என்று அளிக்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­யை­ய­டுத்தே வீதி மறிப்பு போராட்டம் முடி­வுக்கு வந்­தி­ருந்­தது. 

ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால் வழங்­கப்­பட்ட உறு­தி­மொழி நிறை­வேற்­றப்­ப­டுமா, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அர­சாங்கம் உடன­டி­யாக பொறுப்பு கூறுமா என்­பது தெரி­ய­வில்லை. 

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள், வவு­னி­யாவில் நீர்­கூட அருந்­தாமல் நடத்­திய உண்­ணா­வி­ரதப் போராட்டம் ஒன்றைத் தொடர்ந்து, அவர்­களை நேரில் வந்து பார்­வை­யிட்ட பாது­காப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்­தன உறு­தி­யொன்றை அளித்­தி­ருந்தார். 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் பொலிஸ் மா அதிபர், முக்­கிய இரா­ணுவ தள­ப­தி­களை காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­க­ளு­டைய பிர­தி­நி­திகள் சந்­தித்துப் பேச்­சுக்கள் நடத்தி, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களைத் தேடிக் கண்டு பிடிப்­பது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று உறு­தி­மொழி அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

ஆனால், உறு­தி­ய­ளித்­த­படி, அந்தச் சந்­திப்பு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வருகை தரா­ம­லேயே நடை­பெற்­றது. போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­க­ளு­டைய – காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய விடயம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு பதி­ல­ளிக்­கப்­படும் என்று அந்தக் கூட்­டத்தில் தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அரச உயர் மட்­டத்­தி­ன­ரு­ட­னான அந்தச் சந்­திப்பு புஸ்­வா­ண­மாகிப் போனது. அந்தச் சந்­திப்­பினால் ஆக்­க­பூர்­வ­மான விளை­வு­களும் ஏற்­ப­ட­வில்லை. 

கிளி­நொச்­சியில் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருக்­கின்ற வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­யின்­படி அரச தரப்­புடன் நடக்­க­வுள்ள பேச்­சு­வார்த்­தை­களில் என்ன நடக்கும் என்­பதை முன்­கூட்­டியே எதிர்வு கூற முடி­யாது. 

ஆனால், அரச தரப்­பி­ன­ருடன் இத்­த­கைய சந்­திப்பு ஒன்றை நடத்தி பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­படும் என்ற உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் அரச தரப்பைச் சேர்ந்த இருவர் வெளி­யிட்டுள் கருத்­துக்கள் சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருக்­கின்­றன. 

வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் கருத்து

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் பொறுப்பு கூறு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி கிளி­நொச்­சியில் இடம்­பெற்ற வீதி­ம­றிப்பு போராட்­டத்­தை­ய­டுத்து, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் வட­மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்­துள்ள கருத்து பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் மனங்­களைப் புண்­ப­டு­த்தும் வகையில் அமைந்­துள்­ளது. 

காணாமல் போன­வர்கள் பற்றி விசா­ரணை செய்­வ­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட பர­ண­கம ஆணைக்­கு­ழு­விடம் செய்­யப்­பட்­டுள்ள முறைப்­பா­டு­களில், தமது பிள்­ளை­களை விடு­த­லைப்­பு­லிகள் மற்றும் புளொட், ஈரோஸ், இந்­திய அமை­திப்­படை, இலங்கை இரா­ணுவம் ஆகிய பல­த­ரப்­பினர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. அவ்­வா­றி­ருக்­கையில் அர­சாங்­கத்தை மாத்­திரம் பொறுப்பு கூறு­மாறு எப்­படி கேட்க முடியும் என்ற வகையில் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்றார். 

பிர­பா­கரன் இப்­போது உயி­ரோடு இல்லை. கிட்டு இல்லை. சூசை இல்லை. இப்­போது யாரிடம் போய் காணாமல் போன­வர்கள் பற்றி கேட்க முடியும் என்று ஆளுனர் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்றார். காணாமல் போன­வர்கள் பற்றி அர­சாங்­கத்­திடம் மட்டும் கேள்வி எழுப்ப முடி­யாது என தெரி­வித்­துள்ள அவர், காணாமல் போன­வர்கள் குறித்து விசா­ரணை நடத்த முடி­யாது என்றும் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்றார். 

ஆளு­ன­ரு­டைய கருத்து அர்த்­த­மற்­றது. தங்­க­ளு­டைய மனங்­களைப் புண்­ப­டுத்த வல்­லது. தமிழ் பேசு­கின்ற ஓர் அதி­காரி என்ற வகையில் இவ்­வாறு பொறுப்­பற்ற முறையில் பதி­ல­ளித்­தி­ருப்­பது வருத்­தத்­திற்­கு­ரி­யது என்று கிளி­நொச்சி மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் குடும்­பங்­க­ளுக்­கான இணைப்­பாளர் லீலா­தேவி ஆனந்த நட­ராஜா தெரி­வித்­துள்ளார். 

தமிழில் உரை­யாடக் கூடிய வட­மா­காண ஆளு­ந­ராக இருக்­கின்ற போதிலும், வட­மா­காண ஆளுநர் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை சரி­வர அறி­யா­த­வ­ரா­கவே இருக்­கின்றார் என்றும் லீலா­வதி சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். 

ஆளுநரின் கூற்று குறித்து கருத்து வெளி­யிட்­டுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, காணாமல் போன­வர்கள் பற்றி விசா­ரணை நடத்த முடி­யாது என்று கூறு­வ­தற்கு அவ­ருக்கு எந்­த­வி­த­மான அதி­கா­ரமும் கிடை­யாது என சுட்­டிக்­காட்டி கண்­டித்­தி­ருக்­கின்­றது. 

வட­மா­காண ஆளுநர் பதவி வகிக்­கின்ற ஒருவர், இந்த நாட்டின் சாபக்­கே­டாகத் திகழ்­கின்ற இனப்­பி­ரச்­சினை கார­ண­மாக முப்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாகத் தொடர்ந்த ஒரு யுத்­தத்தின் இறு­திப்­ப­கு­தியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் எழுந்­த­மா­ன­மாகக் கருத்து வெளி­யி­டு­வது என்­பது வரை­ய­றையை மீறிய செய­லா­கவே நோக்­கப்­படும். அதுவும் நிலை­மை­களைச் சரி­யாகப் புரி­யா­த­வ­ராகக் கருத்து வெளி­யி­டு­வது என்­பது, அவ்­வாறு கருத்து வெளி­யி­டு­கின்ற அவ­ரு­டைய நோக்கம் குறித்து சந்­தேகம் கொள்­ளவே செய்யும் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

தமிழ் மொழியில் பேசக்­கூ­டிய வல்­லமை உடைய ஒருவர் வட­மா­காண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது என்­பது,  வட­மா­கா­ண­ச­பையை நல்ல முறையில் செயற்­ப­டுத்­தவும். அதன் ஊடாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வட­மா­காண மக்­க­ளுக்கு சிறந்த சேவை­யாற்­றவும், அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும் பேரு­த­வி­யாக இருக்கும் என்றே கரு­தப்­பட்­டது. 

மாறாக அவ­ரிடம் உள்ள தமிழ் மொழி அறி­வா­னது, பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களைப் புண்­ப­டுத்­து­கின்ற வகை­யிலும், உண்­மைக்கும் உண்­மை­யான நிலை­மை­க­ளுக்கும் மாறான கருத்­துக்­களை வெளி­யிட்டு, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணாமல் அவற்றைப் புறந்­தள்­ளு­கின்ற நட­வ­டிக்­கைக்குத் துணை புரி­வ­தற்குப் பயன்­ப­டு­வ­தா­கவே தெரி­கின்­றது. இத்­த­கைய போக்கை அவர் கொண்­டி­ருப்­பா­ரே­யானால், அது வட­மா­கா­ணத்­திற்கு தமி­ழ­ரான ஒரு­வரே ஆளு­ன­ராக நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலு­வோடு எழு­வ­தற்கே வழி சமைக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­காவின் கருத்து

முன்னாள் ஜனா­தி­ப­தியும் தேசிய நல்­லி­ணக்­கத்­திற்­கான செய­ல­கத்தின் தலை­வி­யு­மா­கிய சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா காணாமல் போன­வர்கள் குறித்து வெளி­யிட்­டுள்ள கருத்தும் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன. 

'காணாமல் போன­வர்கள் எங்கு இருக்­கின்­றார்கள், அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதைப் பற்றி காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் எது­வுமே தெரி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­றனர். அதே­போன்­றுதான் காணாமல் போன­வர்கள் எங்­கி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது பற்றி அர­சாங்­கத்­திற்கும் எதுவும் தெரி­யாமல் இருக்­கின்­றது' என்று சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா தெரி­வித்­துள்ளார். 

காணாமல் போயி­ருப்­ப­வர்கள் உயி­ருடன் இருக்­கின்­றார்­களா இல்­லையா என்­பதைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், அவர்கள் அனை­வ­ருமே கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் என்றும் கூறி­யி­ருக்­கின்றார்.  'எனக்குத் தெரிந்த வரையில் காணாமல் போன­வர்கள் யாரையும் முகாம்­களில் மறைத்து வைக்­க­வில்லை.  

ஜனா­தி­பதி ராஜ­பக் ஷ ஆட்­சியில் இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய பழக்­கத்­திற்கு ஏற்ப, காணாமல் போன­வர்கள் அழைத்துச் செல்­லப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம். அது எனக்குத் தெரி­யாது. ஆனால் அந்த இரா­ணு­வத்­தினர் தங்­க­ளு­டைய பொறுப்பில் வந்­த­வர்கள் யாராக இருந்­தாலும் அவர்­களைக் கொலை செய்­வார்­க­ளே­யன்றி, பல வரு­டங்­க­ளாகத் தடுத்து வைத்­தி­ருக்க மாட்­டார்கள்' என்றும் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க சாதா­ர­ண­மான ஒரு­வ­ரல்ல. இந்த நாட்டின் ஒரே­யொரு பெண் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்­தவர் என்ற பெரு­மையைப் பெற்­றவர். ஐந்­தா­வது ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட அவர் இரண்டு தட­வைகள் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்­துள்ளார்.  

 

விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான யுத்தம் புரிந்தவர்­களில் அவரும் ஒருவர். அது மட்­டு­மல்ல இந்த நாட்டின் இரண்டு முக்­கிய பிர­த­மர்­க­ளாகப் பதவி வகித்த பண்­டா­ர­நா­யக்க மற்றும் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க தம்­ப­தி­யின் புதல்வி என்ற சிறப்­பையும் பெற்­றவர். 

அவ­ருக்கு இனப்­பி­ரச்­சினை குறித்து எதுவும் தெரி­யாது என்று கூறு­வ­தற்­கில்லை. அதே­போன்று தொடர்ச்­சி­யாகப் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து முப்­பது வருட கால யுத்­தத்தை எதிர்­கொண்ட தமிழ் மக்­களின் மன உணர்­வு­களை அறி­யா­தவர் என்றும் கூற முடி­யாது. ஆனால் இன்­றைய அர­சியல் சூழலில் அரச தரப்பின் மிக முக்­கி­ய­மான புள்­ளி­யாக விளங்­கு­கின்ற அவர் வெளி­யிட்­டுள்ள கருத்துக்கள் ஏற்­பு­டை­ய­தாகத் தெரி­ய­வில்லை. யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் இருந்த பிர­தே­சங்­களில் இரா­ணு­வத்­தி­ன­ருக்குத் தெரி­யாமல் ஒரு சிறு துரும்­பும்­கூட நகர முடி­யாத நிலை­மையே காணப்­பட்­டது. விடு­த­லைப்­பு­லி­களின் ஊடு­ருவல் நட­வ­டிக்­கைகள் மாத்­தி­ரமே, படை­யி­ன­ருக்குத் தெரி­யாத வகையில் மிகவும் இர­க­சி­ய­மா­கவும், நேர்த்­தி­யா­கவும் இடம்­பெற்­றி­ருந்­தன. இதன் கார­ண­மா­கவே இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் இருந்த சிங்­களப் பகு­தி­க­ளி­லும்­கூட விடு­த­லைப்­பு­லி­களின் ஊடு­ருவல் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. 

பொறுப்­புக்­களைத்  தட்­டிக்­க­ழிக்க முற்­படக் கூடாது 

ஆனால் இரா­ணுவ கட்­டுப்­பாட்டுப் பிர­தே­சத்­தி­னுள்ளே இரா­ணுவம் சம்­பந்­தப்­பட்ட நட­வ­டிக்­கைகள் யாவும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் இரா­ணுவ புல­னாய்வுப்பிரி­வி­ன­ருக்கும் தெரி­யாமல் நடந்­தி­ருக்க முடி­யாது. அவ்­வாறு இடம்­பெ­று­வ­தற்கு சந்­தர்ப்­பமே இருக்­க­வில்லை.  அத்­துடன் விடு­த­லைப்­பு­லி­களின் நட­மாட்டம் அவர்­க­ளு­டைய தாக்­குதல் நட­வ­டிக்­கைகள் என்­பன இடம்­பெ­றாமல் தடுப்­ப­தற்­காக படை­யினர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளின்­போதே பல பொது­மக்கள் காணாமல் போயி­ருந்­தார்கள். அதே­போன்று இறுதி யுத்தம் நடை­பெற்ற வேளை­யிலும் இரா­ணுவம் சம்­பந்­தப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளின்­போதே பெரும்­பா­லா­ன­வர்கள் காணாமல் போயி­ருந்­தார்கள். 

எனவே, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் குறித்து அவர்­களின் உற­வி­னர்­களைப் போலவே, அர­சாங்­கமும் ஒன்றும் தெரி­யாத நிலையில் இருக்­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கூறி­யி­ருப்­பது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தல்ல. 

அன்று பிரதி பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்­த­வரே இன்று ஜனா­தி­ப­தி­யாக இருக்­கின்றார். அன்று யுத்த மோதல்­களில் பங்­கேற்­றி­ருந்த பல உய­ர­தி­கா­ரிகள் இன்னும் நாட்டில் இருக்­கின்­றார்கள். அவர்­களில் சிலர் உயர் பத­வி­க­ளிலும் இருக்­கின்­றார்கள். அன்று செயற்­பட்­டி­ருந்த இரா­ணு­வமே இன்றும் நாட்டில் இருக்­கின்­றது. அன்று வேறு இரா­ணுவம் இருந்­தது என்று கூறு­வ­தற்­கில்லை. 

அதே ­இ­ரா­ணு­வத்­தி­னர்தான் இன்றும் இரு­க­் கின்­றார்கள்.  ஆட்சி வேண்­டு­மானால் மாறி­யி­ருக்­கலாம். ஆனால் அன்­றி­ருந்த பாது­காப்பு கட்­ட­மைப்­பிலும், இரா­ணு­வத்­திலும், எந்த மாற்­றமும் கிடை­யாது. அவைகள் அப்­ப­டியே இருக்­கின்­றன. அவ்­வாறே சம்­பந்­தப்­பட்­ட­வர்­களும் இருக்­கின்­றார்கள். எனவே, அர­சாங்­கத்­திற்கு ஒன்­றுமே தெரி­யாது என்று கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

பொறுப்புக்கூறும் விட­யத்தில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய விட­யமும் முக்­கி­ய­மாக உள்­ள­டக்­கப்­பட்டு, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் குறித்து விசா­ரணை செய்­வ­தற்­கான செய­ல­கமும் சட்ட ரீதி­யாக நிறு­வப்­பட்­டி­ருக்­கின்­றது. அதனைச் செயற்­ப­டுத்­து­வ­தாக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் உத்­த­ர­வா­த­ம­ளித்து அதற்­கான கால அவ­கா­சமும் அர­சாங்­கத்­தினால் பெறப்­பட்­டி­ருக்­கின்­றது. எனவே, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் விட­யத்தில் ஆளா­ளுக்கு அர்த்­த­மற்ற கருத்­துக்கள் வெளி­யி­டு­வதை நிறுத்தி, அவர்­களைப் பற்­றிய விசா­ர­ணை­களை நடத்தி

உண்­மை­யைக் கண்­ட­றிய வேண்­டியதே அர­சாங்­கத்தின் முக்கிய பொறுப்பாகும். அத ற்கு முரணான வகையில் கருத்துக் களை வெளியிட்டு பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்க முயற்சிப்பது அரசாங்கத்திற்கும், அரச தரப்பில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள வர்களுக்கும் அழகல்ல. அது பல்வேறு சிக்கல் களைக் கொண்டு வருவதற்கே வழிவகுக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் நினைவில் கொள்வது நல்லது.  

 

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-03#page-1

Page-13-ad59e28985d609ad34705e5ff8e05f9d

  • தொடங்கியவர்

தமிழ் மொழியில் பேசக்­கூ­டிய வல்­லமை உடைய ஒருவர் வட­மா­காண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது என்­பது,வட­மா­கா­ண­ச­பையை நல்ல முறையில் செயற்­ப­டுத்­தவும் அதன் ஊடாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வட­மா­காண மக்­க­ளுக்கு சிறந்த சேவை­யாற்­றவும், அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும் பேரு­த­வியாக இருக்கும் என்றே கரு­தப்­பட்­டது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.