Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவனிப்பாரின்றி வாழும் ஆதிவாசிகள்

Featured Replies

கவனிப்பாரின்றி வாழும் ஆதிவாசிகள்

 

அர­சியல் பிர­தி­நி­தித்­து­வ­மற்ற ஒரு சமூ­க­மாக திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் நூற்­றாண்­டு­க­ளாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். கடந்­த­ கால யுத்­தத்­தின்­ போது எங்கள் சொந்த மண் பறிக்­கப்­பட்­டு­விட்­டது. யுத்­தமும் வறு­மையும் எங்­களை இடம்­பெயர வைத்­தது. எங்கள் பாரம்­ப­ரிய தொழில்­களை நாங்கள் மறந்து போய்­விட்டோம்.

எங்­க­ளுக்கு வாழ்­வா­தா­ரமும் இல்லை, வாழ வழியும் தெரி­ய­வில்லை. இவற்றைப் பெறவே இக் ­க­வ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை நடத்­து­கி­றோ­மென ஆதங்­கத்­து­டனும் ஆவே­சத்­து­டனும் கூறினார் திரு­கோ­ண­மலை மாவட்ட ஆதி­வா­சிகள் சங்­கத் ­த­லைவர் கனகன் என்று அழைக்­கப்­ப­டு­கின்ற நட­ராஜா கன­க­ரத்­தினம்.

ஒன்­பது கோரிக்­கை­களை முன்­வைத்து இலங்­கைத்­துறை முகத்­து­வாரம், சீனன்­வெளி உப்­பூறல், நல்லூர் நீலாக்­கேணி, இலக்­கந்தை வீர­மா­நகர், பாட்­டா­ளி­புரம், சந்­தன வெட்டை, சந்­தோ­ஷ­புரம் சாலையூர் சீத­ன­வெளி ஆகிய கிரா­மங்­க­ளைச்­ சேர்ந்த ஆதி­வா­சிகள் கடந்த ஞாயிறு வீர­மா­நகர் என்ற கிரா­மத்தில் ஒரு கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை நடத்­தினர்.

வரதன் என்­பவர் தலை­மையில் நடை­பெற்ற இக் ­க­வ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் மேற்­படி கிரா­மங்­களைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான மக்கள் கலந்து கொண்­டனர். இக் ­க­வ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை பின்­வரும் 9 கோரிக்­கை­களை முன்­வைத்தே அவர்கள் நடத்­தி­யி­ருந்­தனர். 

எம்­மி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட எமது பூர்­வீக நிலங்கள் மீள எம்­மிடம் ஒப்­ப­டைக்­கப்­பட வேண்டும். காலா­கா­ல­மாக நாம் செய்து வந்த பாரம்­ப­ரியத் தொழில்­களை மேற்­கொள்ள உரிமை வழங்­கப்­பட வேண்டும். எமது குடி­யி­ருப்­பு­க்க­ளி­லி­ருந்து படை­யினர் வெளி­யேற்­றப்­பட வேண்டும். 

எமது ஆல­யங்­களை ஆக்­கி­ர­மித்­தி­ருக்கும் பௌத்த ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் அங்­கி­ருந்து வெளி­யேற வேண்டும்.

எம்­மி­ட­மி­ருந்து கப­ளீ­கரம் செய்­யப்­பட்ட பாலக்­காட்­டு­மடு, இக்பால் நகர், கோபா­ல­புர பட்­ட­ண­மா­கிய கிரா­மங்கள் எம்­மிடம் மீளக் ­கை­ய­ளிக்­கப்­பட வேண்டும். மலை ­முந்தல், நல்லூர், உப்­பூறல் ஆகிய கிரா­மங்­களை ஆக்­கி­ர­மித்து மேற்­கொள்­ளப்­பட்­டு ­வரும் சாஹிப் நகரத் திட்டம் நிறுத்­தப்­பட வேண்டும். 

எமது மூதா­தையர் காலந்­தொட்டு எமக்­கு­ரித்­தாக இருந்த உல்­லைக்­குளம் எமது சமூ­கத்­தவர் பயன்­ப­டுத்த ஆவன செய்­யப்­பட வேண்டும்.இறால்­குழி சுவாந்­திர ஆறு, கொக்­கட்டி ஆறு ஆகிய இடங்­களில் மீன்­பி­டித் ­தொ­ழிலை தொடர்ந்து செய்ய அனு­ம­திக்க வேண்டும். 

எமது சகோ­தர முஸ்லிம் மக்கள் மீதான சிங்­கள பௌத்த அட்­டூ­ழி­யங்கள் உடன் நிறுத்­தப்­பட வேண்டும். என்ற கோரிக்­கை­களை முன்­வைத்தே ஆதி பழங்­குடி அமைப்பின் ஏற்­பாட்டில் இக்­க­வ­ன­யீர்ப்புப் போராட்டம் நடத்­தப்­பட்­டது. 

கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை நடத்­திய ஆதி­வா­சிகள் பழங்­குடி மக்கள் தாங்கள் சார்ந்த வாழ்­வியல் மற்றும் பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைகள் பற்­றியும் சமூக சவால்கள் பற்­றிய அறிக்­கை­யொன்­றையும் வெளி­யிட்­டி­ருந்­தனர்.

இயக்கர், நாகர் வழி­வந்த தோன்­றல்­க­ளாக இருக்கும் இவர்­க­ளுக்கு பூர்­வீக மொழி­யொன்றை இவர்கள் பேச்சு வழக்கில் கொண்­டுள்­ளனர். இந்த ஆதிக்­கு­டி­களில் சிலர்.

இன்னும் இன்றும் பேசிக் ­கொண்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இருந்­தாலும் கூட தமிழ் பிர­தே­சங்­களை அண்டி வாழ்­கின்­ற­வர்கள் தமி­ழையும் சிங்­கள பிர­தே­சங்­க­ளோடு இணைந்து வாழ்­கின்­ற­வர்கள் சிங்­க­ளத்­தையும் பேச்­சு­மொ­ழி­யாக கொண்­டுள்­ளனர்.

தங்­க­ளு­டைய மரபு முறை­க­ளையும் வாழ்க்கை வடி­வங்­க­ளையும் பெரி­தாக மதிப்­பது மாத்­தி­ர­மன்றி குல­மு­றை­க­ளிலும் தொழில்­க­ளிலும் அதிக பற்­றுக்­கோடு கொண்­டி­ருக்கும் இம்­ மக்கள் தாங்­களும் இச்­ ச­மூ­கத்தில் சகல உரி­மை­க­ளையும் பெற்று அர­சியல் அந்­தஸ்து கிடைக்­கப் ­பெற்று வாழ ­வேண்­டு­மென்­பதில் அதிக நாட்­டமும் பற்­றுறு­தி­யு­டை­ய­வர்­க­ளா­கவும் வாழ்­கின்­றார்கள் என்­பதை அவர்கள் விடுத்த கோரிக்­கை­க­ளி­லி­ருந்து அறிந்து கொள்ள முடி­கி­றது.

நாக­ரிக மேம்­பாடு உயர்ந்து நிற்கும் இந்த நூற்­றாண்டில் பழ­மைக்­கு­டிகள் என்றும் ஆதி­வா­சிகள் என்றும் வேடுவ சமூ­க­மென்றும் சாதிய அடிப்­ப­டையில் இல்­லை­யெனில் நாக­ரிக அடிப்­ப­டையில் அழைக்­கப்­படும் ஒரு சமூகம் இன்று இருக்­கின்­றது. என்­பது ஆச்­ச­ரி­ய­மான விடயம் மாத்­தி­ர­மல்ல ஆரா­யப்­பட வேண்­டிய விட­ய­மும் ­கூட.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் தொன்­மை­யான வர­லாற்றில் இவ்­வாறு அடை­யா­ள­மி­டப்­பட்ட சமூ­கங்கள் இன்னும் இருந்து கொண்­டி­ருக்­கின்­றன என்­ப­தற்கு உதா­ர­ணந்தான் மூதூர் மற்றும் வெருகல் பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளுக்குள் உள்­ள­டங்கி காணப்­படும். கிரா­மங்­க­ளான பாட்­டா­ளி­புரம், வீரமா நகர், இலக்­கந்தை, நீலாக்­கேணி, சூரன்­வெளி, முகத்­து­வாரம், கல ­வடி, வாழைத்­தோட்டம், புன்­னை­யடி, சூர­நகர், நல்லூர், உப்­பூறல், சீனன்­வெளி, தம்­ப­ல­காமம் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்குள் உட்­பட்ட தெலுங்கு நகர் போன்ற பழமை மண்­டிய கிரா­மங்­க­ளாகும்.

யுத்தம் எவ்­வ­ளவு கொடி­யது அதன் வடுக்­களும் அடை­யா­ளங்­களும் இந்த கிராம மக்­களை எப்­படி யெல்லாம் சீர­ழித்து விட்­டது என்ற உண்­மையை களப்­ப­யணம் செய்து கலந்­து­ரை­யா­டு­வதன் மூலமே தெரிந்து கொள்­ள­மு­டியும். அனு­ப­வங்­களும் அதன் பதி­வு­களும் மனி­த­குல வர­லாற்­றுக்கு மகத்­தான சொத்து.

சமூ­க­மொன்று தான்­பட்ட துன்­பங்­க­ளையும் துய­ரங்­க­ளையும் தன்­னுடன் எப்­படி காவிச் சென்­றுள்­ளது. தான் அனு­ப­வித்த இன்­பங்­க­ளையும் இதர சுகங்­க­ளையும் தமக்குள் எப்­படி பகிர்ந்து கொண்­டது என்­ப­தற்கு இந்த பூர்­வீக சமூ­கத்தின் வாழ்க்கை குறிப்­புகள் பெறு­ம­தி­ மிக்­கவை மாத்­தி­ர­மல்ல பகி­ரப்­பட வேண்­டி­ய­வை­யு­மாகும்.

மூதூர் பிர­தேசம் ஒரு தொன்­மை­யான பிர­தேசம் மாத்­தி­ர­மல்ல. வித்­தி­யாசம் வித்­தி­யா­ச­மான கிரா­மங்­க­ளையும் பூகோள வடி­வ­மைப்­பு­க­ளையும் மாறு­பட்ட வாழ்க்கை முறை­க­ளை­க்கொண்ட குடி­க­ளையும் குல­தொ­ழில்­க­ளையும் நாக­ரிக போக்­கு­க­ளையும் கொண்ட பிர­தே­ச­மாகும்.

மூதூரின் வர­லாற்று நாமம் கொட்­டி­யா­புரம் என அழைக்­கப்­பட்டு வந்த போதும் கொட்­டியா புரப்­பற்று என்ற சொல் கோணேஷர் கல்­வெட்டு நூல் பதி­வு­க­ளிலும் போர்த்­துக்­கேயர், ஆங்­கி­லேயர் காலப்­ப­தி­வே­டு­க­ளிலும் விவ­ரணம் கொண்டு காணப்­ப­டு­கி­றது. இப்­ பி­ர­தே­சத்தில் தொன்­மைக்­கு­டிகள் வாழ்ந்த பல கிரா­மங்கள் உள்­ளன.

யுத்தம் இவர்­களின் அடிப்­படை இருப்­புக்­களை குலைத்­தெ­றிந்து விட்­ட­போதும் தமது சொந்த மண்­ணையும் குலத்­தொ­ழில்­க­ளையும் விட்­டுக்­கொ­டுக்க மன­மற்­ற­வர்­க­ளாக இன்னும் இருந்து கொண்­டி­ருப்­ப­து தான் ஆச்­ச­ரி­ய­மான விட­ய­மாகும். இவர்கள் பல கிரா­மங்­களில் வாழ்ந்து வந்­த­போதும் தமது பூர்­வீ­க­மான கிரா­மங்கள் பற்றி பெருமை கொள்­கி­றார்கள்.

நல்லூர் எங்கள் பாரம்­ப­ரிய கிராமம். நெல்லூர் என்­பதே மருவி நல்லூர் என வழங்­கி­ வ­ரு­கி­றது. எங்கள் கிரா­மத்­துக்கு வந்த அதி­காரி ஒருவர் எங்கள் வீடு­க­ளி­லுள்ள நெல்­லுச்­ செல்­வத்­தைக் ­கண்டு எங்கள் கிரா­மத்­துக்கு நெல்லூர் என ­பெயர் சூட்­டினார்.

பொன் விளையும் பூமி­யாக்­கிய எங்கள் ஊருக்கு சொந்­த­மான உல்­லைக்­குளம் இன்று எங்­க­ளுக்கு சொந்­த­மில்லை. அதி­ காரி ஒரு­வரின் கப­டத்­த­னத்­தாலும் அயல் கிரா­மத்தைச் சேர்ந்­த­வர்­களின் நய­வஞ்­ச­கத்­த­னத்­தாலும் வளம் தந்த குளம் கையகப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என ஆதி­வா­சிகள் குடி­யி­ருக்கும் நல்லூர் கிரா­மத்தின் ஆதி­வா­சிகள் சங்­கத்­ த­லைவர் கனகன் தெரி­வித்தார்.

 

வர­லாறு

அவர் தொடர்ந்து தமது சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் பற்றி விளக்­கு­கையில்; ஆதி­வா­சிகள் (வேடுவர் சமூகம்) குடி­யி­ருக்கும் நல்லூர், மூதூர் பிர­தேச செய­லாளர் பிரி வில் வடக்கே பாட்­டா­ளி­புரம், வீர­மா­நகர் இலக்­கந்தை, நீலாக்­கே­ணி­யெனும் ஆதிக்­கு­டிகள் வசிக்கும் கிரா­மங்­க­ளையும் தெற்கே உப்­பூறல் சீனன்­வெளி ஆகிய கிரா­மங்­க­ளையும் கிழக்கே மட்­டிக்­க­ளி­யையும் மேற்கே தோப்பூர் எனும் முஸ்லிம் சமூகம் வாழும் கிரா­மத்­தையும் எல்­லை­க­ளாக கொண்­டது.

எமது மூதா­தையர் மட்­டக்­க­ளப்பு கரு­வேப்­பங்­கேணி எனும் இடத்தில் வாழ்ந்து வந்­துள்­ளனர். பழங்­குடி மக்­க­ளா­கிய எமது மூதா­தையர் குடி­களின் மாற்­றோட்டம் கார­ண­மாக கரு­வேப்­பங்­கே­ணி­யி­லி­ருந்து களு­வங்­கே­ணிக்கும் அங்­கி­ருந்து காயங்­கே­ணிக்கும் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். இது சுமார் 150 வரு­டங்­க­ளுக்­கு முன் ஏற்­பட்ட இடப்­பெ­யர்­வு­க­ளாகும். இது பிரித்­தா­னியர் காலத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

எமது மூதா­தை­யர்­களின் தொழில்­க­ளாக தேன் ­வெட்­டுதல், மான், மரை, உடும்பு, உக்­கிளான் பண்டி, முள்ளுப்­பண்டி, அழு ங்கு, நீர்ப்­பூச்சி, சிள்ஸ் பூச்சி ஆகி­ய­வற்றை வேட்­டை­யா­டுதல் தொழி­லாக கொண்­டி­ருந்­தார்கள். உண­வுக்­காக வேட்­டை­யா­டு­வதே இவர்கள் நோக்கம்.

வேட்டையா­டு­வதில் இரு­ மு­றை­க­ளு ண்டு. 1. இறைச்­சிக்­காக வேட்­டை­யா­டுதல் 2. இரண்­டா­வது முறை சேமித்து வைத்த இறைச்­சி­களை பெற மீண்டும் செல்­லுதல்.

தேன்­களை மரப் பொந்­து­களை வெட்டி எடுப்­பதால் தேன் வெட்­டுதல் என்று கூறு­வது வழக்கம். இறைச்­சிக்­காக (உண­வுக்­காக) வேட்­டை­யாடி இறைச்­சி­களை மரத்தை குடைந்து அதில் இட்டு தேனை அதன் மேல் ஊற்றி, குடைந்த பொந்தை பழை­ய­படி இறுக்­கி­ விட்டு பாது­காப்பு செய்து விட்டு இன்­னு­மொரு காட்­டுக்கு சென்று விடுவோம். இதுவும் ஒரு இடப்­பெ­யர்­வாக இருக்கும். அங்கு வேட்­டை­யாடி உணவை சேமித்த பின், முன்பு பொந்தில் அடைத்து வைத்த இடத்­துக்கு வந்து உணவை உண்போம்.

பாட்­டா­ளி­புரம் என்ற இக்­ கி­ரா­மத்தில் வாழ்ந்­து­ கொண்­டி­ருக்கும் நாங்கள் ஆதிக் குடிகள் என்ற வகையில் ஆதி­வா­சிகள், பழங்­கு­டிகள். எங்­களை ஏனைய சமூ­கத்­த­வரும் அர­சி­யல்­வா­தி­களும் ஒதுக்கி வைக்­க­ப்பார்க்­கி­றார்கள். இந்­நாட்டின் பழங்­கு­டிகள் என்ற வகையில் ஏனைய சமூ­கத்­துக்கு தரப்­படும் கௌரவம் எங்­க­ளுக்கும் தரப்­பட வேண்டும். எமக்­கு­ரிய அடிப்­படை உரி­மைகள் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். ஆதி­வா­சி­க­ளா­கிய எங்­க­ளுக்­கென்று ஒரு சம­தன்மை அரசால் பேணப்­பட வேண்டும்.

இலங்­கையில் தான் நாங்கள் பிறந்­த­வர் கள். எமது தாய்­பூமி என்­பது நாம் வாழும் இந்த கிராமம் தான். நாங்கள் செய்து வந்த குடித்­தொ­ழில்­க­ளான தேன் வெட்ட போக­மு­டி­ய­வில்லை. மிரு­கங்­களை வேட்­டை­யாடி சேமித்து சாப்­பிட முடி­ய­வில்லை. விறகு வெட்டி சீவிக்க முடி­ய­வில்லை. கிழங்கு தோண்டி உண்ண முடி­ய­வில்லை. இவை­யெல்லாம் குற்­ற­மென பொலிஸார் எம்மை கைது செய்­கி­றார்கள். கடந்த கிழ­மை­கூட, எமது பிள்­ளை­களை கைது செய்து கோட­ரி­களை பறித்து, பிடித்த தேனையும் பறித்து போட்­டார்கள். நாங் கள் தனி நாடு கேட்­க­வில்லை. எங்­களை கௌர­வ­மான சமூ­க­மாக அங்­கீ­க­ரித்து எமது பாரம்­ப­ரியத் தொழிலை செய்து சுதந்­தி­ர­மாக வாழ­ வி­டுங்கள் என்றே அரசாங்­கத்தை கேட்­கிறோம்.

எங்கள் கிரா­மத்தில் தண்ணீர் வச­தி­யி ல்லை. ஒரு கிலோமீற்­ற­ருக்கு அப்­பா­லுள்ள குழாய்க் கிணற்­றி­லேயே இக்­கி­ரா­மத்தைச் சேர்ந்த மக்கள் குடி­தண்ணீர் பெறச் செல்ல வேண்டும். எமது பெண்கள் குளிக்க வேண்­டு­மாயின் 5 கிலோமீற்­ற­ருக்கு அப்பால் உள்ள உல்லைக் குளத்­துக்குப் போக வேண்டும். இல்­லை­யாயின் ஒன்­றரைக் கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள இலக்­கந்தை குளத்­துக்கு போக வேண்டும். எமது பெண் ­சாதி, பெண்­ பிள்­ளைகள் குளிக்க வேண்­டு­மாயின் ஆண்கள் கானில் தண்­ணியை எடுத்து வந்தே குளிக்க வைக்க வேண்டும்.

நிறு­வ­ன­மொன்­றினால் கட்டித் தரப்­பட்ட வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­யர்­க ­ளில்லை. ஆனால் கட்­டடம் இருக்­கி­றது. நான்கு வரு­ட­மாக இந்த நிலைமை தொடர்­கி­றது. (நாங்கள்) இக் ­கி­ரா­மத்தை சேர்ந்­த­வர்கள். வைத்­திய உதவி பெறு­வ­தற்கு 10 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள மூதூர் வைத்­தி­ய­சா­லைக்கே செல்ல வேண்டும். பாதை­க­ளில்லை. போகும் வழி­யி­லேயே நோயா­ளிகள் இறந்து விடு­கி­றார்கள். குழந்தை குட்­டி­களைக் கூட எம்மால் காப்­பாற்ற முடி­ய­வில்லை. வாக்­கு­கேட்க வரு­கின்ற ஒவ்­வொரு அர­சி­யல்­வா­தி­க­ளி­டமும் இக்­ கு­றை­பாட்டை வரு­டக்­க­ணக்­காக முறை­யிட்டு வரு­கின்றோம். கவ­னிப்­பா­ரு­மில்லை. கேட்­பா­ரு­மில்லை. ஆனால் உரிமை தவ­றாமல் வாக்­க­ளித்து வரு­கின்றோம்.

எங்கள் பிள்­ளைகள், பரம்­ப­ரைகள் கல்வி கற்­ப­தற்­கு­ரிய வச­திகள் கொண்ட பாட­சா­லை­யில்லை. குறைந்­த­ளவு தரத்தில் தான் எமது பிள்­ளைகள் கல்வி கற்­க­ மு­டியும். மேலே படிக்க வேண்­டு­மாயின் 10 கிலோ மீற்றர் தொலை­வி­லுள்ள சேனை­யூ­ருக்கே செல்ல வேண்டும். சில சம­யங்­களில் வேடுவ சமூ­கத்தை சேர்ந்­த­வர்கள் என்ற கார­ணத்­தினால் பிற கிராமப் பாட­சா­லை­களில் அனு­ம­தியும் கிடைப்­ப­தில்லை. படித்­தாலும் எமது சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு அரச துறை­யிலோ வேறு துறை­க ­ளிலோ வேலை தரப்­ப­டு­வ­தில்லை. அத ற்கு காரணம் எமது சமூகம் சார்ந்த பிரச்­சி­னை­யாகும். எங்கள் கிரா­மத்தைச் சேர்ந்த ஒருவர் கூட அரச துறையில் வேலை பெற­வில்லை. வர­லாற்றில் முதல் ­மு­றை­யாக ஒரே­யொரு மாணவன் மாத்­திரம் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்று பட்டம் பெற்­றுள்ளான்.

மின்­சார வச­தியை பொறுத்­த­வரை இந்த 21 ஆம் நூற்­றாண்­டிலும் எமது மக்கள் இருண்ட கண்­டத்­தி­லேயே வாழ்ந்து வரு­கிறோம். தற்­பொ­ழுது மின்­சார வச­தி­க­ளுக்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அது இன்னும் பூர­ணம்­ பெ­ற­வில்லை.

எங்கள் சமூ­கத்தின் குலத்­தொழில் என்று பார்த்தால் தேன் வெட்­டுதல், கொள்ளி எடுத்­தல் தான் எங்கள் தொழில். தேன் காட்­டுக்கு போய் தேனை எடுப்­பது எமது குலத்­தொழில். சோறு உண்­ணாமல் எத்­தனை நாட்­களும் எங்­களால் வாழ முடியும். ஆனால் இறைச்சி உண்­ணாமல் இருக்க முடி­யாது. காரணம் நாம் இறைச்­சி­யுண்ணும் வேடுவ சமூகம்.

முன்­னைய காலம் போல் மானை வேட்­டை­யாட முடி­யாது. அர­சாங்­கத்தால் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. மரையும் அப்­ப­டியே. பன்­றியை சுருக்கு வைத்து பிடித்­தாலும் அது குற்­ற­மென எம்மை கைது செய்­கி­றார்கள். எங்கள் சமூகம் இறைச்­சியை சேமித்து உண்­டு­ வ­ரு­வது பூர்­வீ­க­மான வழக்­க­மாகும். அவ்­வ­ழக்­கத்தை தற்­பொ­ழுது கடைப்­பி­டிக்க முடி­ய­வில்லை.

வீடு­வாசல் என்­பதை நாம் கண்­டது அண்­மை­யில் தான். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆதி­வா­சி­க­ளுக்­கென 3 ¼ இலட்சம் செலவில் கட்­டித் ­தந்தார்.

அதற்கு முன் நாங்கள் நிரந்­த­ர­மான வீடு­வா­சல்­களை காண­வில்லை. எப்­படி வாழ்ந்தோம் என்­பதை நீங்கள் அறிந்­தி­ருப்­பீர்கள். அரசு பணம் தந்­தாலும் எமது சொந்த உடல் உழைப்­பி­லேயே கட்டி முடித்தோம். சிலர் தங்கள் ஊதி­யத்­தையும் போட்டு பூர­ணப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். எல்­லோ­ராலும் அப்­படி முடி­ய­வில்லை. ஒரு குடும்­பத்தில் நாலு பிள்­ளைகள் இருந்து அந்த நான்கு பிள்­ளை­களும் திரு­மணம் ஆகி­விட்­ட­தென்றால் தாய், தகப்பன், அந்த நான்கு குடும்­பங்­களும் இந்த நானூறு சதுர அடி வீட்டில் தான் குடி­யி­ருக்க வேண்டும். இதுதான் எங்கள் கூட்டு வாழ்க்­கை­யாக இருக்­கி­றது. இன்­னொரு வீடு கட்­டு­வதற்கு நில­மில்லை. உழைப்­பில்லை, ஊதி­ய­மில்லை.

எங்கள் கிரா­ம­மா­கிய பாட்­டா­ளி­பு­ரத்தை இணைக்கும் பக்­கத்து கிரா­மங்­க­ளுக்கோ மூதூர் நக­ரத்­துக்கோ செல்­வ­தற்கு உரிய பாதை­க­ளில்லை. மழை­காலம் வந்தால் மேடும் பள்­ளமும் குன்றும் குழி­யு­மாக இருக்கும். எங்கள் தெருக்­களால் யாரும் செல்­லவும் முடி­யாது வரவும் முடி­யாது.

நாங்கள் பூர்­வீ­க­மாக குடி­யி­ருந்த பாட்­டா­ளி­புர கிரா­மத்தை எங்­க­ளுக்கு தாருங்கள் என நாங்கள் போரா­டிய போதும் அது கடற்­படை கை­வ­சமாக்­கப்­பட்டு நாங்கள் தற்­பொ­ழுது குடி­யி­ருக்கும் பாட்­டா­ளி­புரம் முகா­மை­யென்ற இடத்தில் கொண்­டு­ வந்து 2009 ஆம் ஆண்டு பலாத்­கா­ர­மாக குடி­யேற்­றப்­பட்டோம்.

2006 ஆம் ஆண்டு மாவி­லாறு யுத்தம் என்ற பெயரில் (31.07.2006) மாவி­லாறு பிர­தே­சத்தை நோக்கி மும்­முனை படை நகர்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. கடும் சமர் கார­ண­மாக, பாட்­டா­ளி­புர கிரா­மத்தின் மீது வீசப்­பட்ட ஷெல் தாக்­குதல் கார­ண­மாக எண்­ண­யற்ற மக்கள் உயிர் இழந்த நிலையில் உயிர் ­தப்­பிய மக்கள் வாக­ரைக்கு ஓடி அங்­கி­ருந்து மட்­டக்­க­ளப்பு அகதி முகாம்­களில் தங்­கி­ய ­வேளை 2007 ஆம் ஆண்டு அரசு மீள் குடி­யேற்­று­வ­தாக கூறி கிளி­வெட்டி முகாமில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்தோம். அங்­கி­ருந்து 2009 ஆம் ஆண்டு மூன்று கட்­ட­மாக தற்­போ­துள்ள முகாமை என்­னு­மி­டத்தில் 20 குழி காணி தந்து சுமார் 123 குடும்­பங்கள் குடி­யேற்­றப்­பட்­டன. எங்கள் பூர்வீகமான ஊர் பாமகள் (1986) வித்தியாலயத்துக்கு முன் உள்ள கடற்படை முகாமுள்ள பகுதியே எமது சொந்த ஊர். சுமார் 68 ஏக்கர் நிலப்பரப்பு கடற்படை வசமுள்ளது. தற்பொழுதுள்ள பாட்டாளிபுரம் முகாமை கிராமத்தில் 211 ஆதிவாசி குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம்.

நாங்கள் அனுபவிக்கும் கடுமையான பிரச்சினை ஆதிவாசிகளான நாங்கள் ஆரம்பத்தில் செய்த தொழிலை தற்பொழுது செய்ய முடியவில்லை. வேட்டையாடினோம். தேனெடுத்தோம். கிழங்கு தோண்டினோம். விறகு வெட்டினோம். எவ்வித பிரச்சினை களுமின்றி எமது வாழ்க்கை சந்தோசமாக போய்க்கொண்டிருந்தது. இந்நிலை யுத்தத் திற்கு பின் மாறி விட்டது.

வேளாண்மை செய்ய நிலமில்லை. பூர்வீகமான நிலங்களை கடற்படை வைத்துக்கொண்டிருக்கிறது. எங்கள் சமூகத்துக்கென உரித்தான உல்லைக்குளம் வேறு சமூகத்தவரால் எம்மிடமிருந்து பறிக் கப்பட்டு விட்டது. படித்த எமது சமூகத் தவர்க்கு தொழில் வாய்ப்பில்லை. படிக்கும் பிள்ளைகளுக்கு பண வசதியில்லை. இப்படி எத்தனையோ பிரச்சினைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறது எமது பழங்குடி மக்கள் என பாட்டாளிபுரம் ஆதிக்குடிகளின் சங்கத் தலைவர் கனகன் தெரிவித்தார்.

நாங்கள் நடத்தும் போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அன்றி மதத்திற்கோ எதிரானதல்ல. இது எமது இருப்புக்கான போராட்டம். எம்மிடமிருந்து அடாவடித்தனமாக பறிக்கப்பட்ட, ஆக்கிரமிக்கப்பட்ட எமது நிலங்கள் எமக்கே மீண்டும் திருப்பி தரப்பட வேண்டும்.

எங்கள் முற்றத்தின் மீது கொண்டு நீங்கள் உங்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாம் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என கனகன் மேலும் தெரிவித்ததுடன் பழங்குடி மக்களின் உரிமைக்கான அமைப்பு நல்லூர் என்ற பெயரில் ஓர் அறிக்கையையும் அவர்கள் வெளியிட்டி ருந்தார்கள்.

திருமலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-03#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.