Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்றாட வாழ்க்கைச் செலவை சமாளிப்பதில் மக்கள் பெரும் திண்டாட்டம்; அரசும் கடன் சுமையில்

Featured Replies

பல இலட்சம் இலங்கையர்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டுசெல்வதில் பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர். அவர்கள் கையிலுள்ள பணம் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதற்கு போதிய பெறுமதியைக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் உழைக்கும் வருவாயிலும் பார்க்க பொருட்கள், சேவைகளின் செலவினம் துரிதமாக அதிகரித்துச் செல்கின்றது.  

அரசாங்க மற்றும் தனியார்துறைகளின் உண்மையான ஊதியம் குறைவடைந்திருக்கின்றது. அதேவேளை, உத்தியோகப்பற்றற்ற வகையில் தனியார் துறையில் கட்டணங்கள் அதிகரித்துச் சென்றுள்ளன.

வீட்டு வசதிகளை நிறைவேற்றுதல், கல்விக்கான செலவினம், பஸ் , ரயில் கட்டணங்கள், மருந்துப் பொருட்களுக்கான செலவு, சமையல் வாயு, மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள், பெற்றோல் போன்ற எரிபொருள் கட்டணங்கள் என்பனவற்றுடன் அரிசி, பாண் ,சீனி, மீன், இறைச்சி, காய் கறிகள் என்பனவற்றின் விலை மற்றும் கட்டண அதிகரிப்பு மக்கள் தமக்குக் கிடைக்கும் வருமானத்தின் மூலம் சமாளிக்க முடியாத நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. 


அதேவேளை, அரசாங்கத்தின் நிதி நிலையும் துன்பகரமான நிலையில் உள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்து பலவீனமடைந்து வருகின்றது.  நிதிப்பற்றாக்குறையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் பாரியளவில் அதிகரித்து இருப்பதும் வரி மீளாய்வுகளும் சந்தையில் விலை அதிகரிப்பதற்கு பங்களிப்பை செலுத்தியிருக்கும் காரணிகளாக காணப்படுகின்றன. அதேவேளை, வெதுப்பகத் தயாரிப்புகள் மற்றும் மருந்து வகைகளின் விலைகளும் உற்பத்திச் செலவினங்களும் அதிகரித்துள்ளன. 


 சிறிசேன  விக்கிரம சிங்க அரசாங்கம் 11 ஆவது தடவையாக மீண்டும் 1.5 பில்லியன் டொலரை 6.2 சதவீத வட்டியில் 10 வருடங்களுக்கு செலுத்துவதற்காக கடனாகப் பெற்றுள்ளது. இந்தச் சுமையையும் இலங்கையர்கள் தாங்கவேண்டியுள்ளது. இந்த வருடம் பெப்ரவரியில் இறக்குமதி செய்த பொருட்களுக்குச் செலுத்த வேண்டிய தொகைக்கு 1.5 பில்லியன் டொலர் போதியதாக இல்லை. 1.8 சதவீதத்தினால் டொலரின் பெறுமதிக்கு எதிராக ரூபாவின்  பெறுமதி பலவீனமடைந்துள்ளது. 


அத்துடன், ஏனைய நாணயங்களின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கின்றது. பிரிட்டிஷ் பவுண்ட்ஸ், ஜப்பானின் யென் ஆகியவற்றுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி குறைவடைந்திருக்கின்றது. கடந்த வருடம் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சுமார்  4 வீதம் பின்னடைவைச் சந்தித்தது.  

இந்த விடயம் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் செலவினத்தை அதிகரிக்க வழிவகுத்தது. அநேகமான இறக்குமதிப் பொருட்களுக்கு டொலர்களிலேயே பணம் செலுத்தப்படுகின்றது. அரிசி, பருப்பு, பெற்றோல், சலவை இயந்திரங்கள், எம்.பி.க்களுக்கான டொயோடா வாகனங்களும் டொலர்களிலேயே இறக்குமதி செய்யப்படுகின்றன. 


கடந்த பெப்ரவரியில் அரசாங்கம் 36 மில்லியன் டொலர் பெறுமதியான அரிசியை இறக்குமதி செய்திருந்தது. அதற்கு முதல் வருடத்தில் அதே மாதத்தில் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான அரிசியே இறக்குமதி செய்யப்பட்டது. அத்துடன், அந்த மாதம் 12.9 மில்லியன் டொலர் பெறுமதியான கட்டிடப் பொருட்களை இலங்கை இறக்குமதி செய்திருந்தது.  அதேவேளை, காய்கறி வகைகள், பால் பொருட்களின் இறக்குமதி வரியும் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.


இந்த வருடம் ஏப்ரலில் இருந்து நுகர்வுப் பொருட்களின் விலைகளும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 4.3 சதவீதமாக இருந்த நிலையில், இந்த வருடம் இரு மடங்காக உயர்ந்திருக்கின்றது.  இதனை தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் காண்பிக்கின்றது.

ஏப்ரலில் உணவுப் பொருட்களின்  விலை 11.8 வீதமாக அதிகரித்திருக்கின்றது. அதேவேளை, உணவுப் பொருட்கள் சாராத பொருட்களின் அதாவது வீட்டுப் பொருட்கள், மருந்து வகைகள், நீர், மின்சாரம், சமையல் வாயு என்பனவற்றின் விலைகள் 5.9 வீதமாக அதிகரித்திருப்பதை சுட்டெண் காண்பிக்கின்றது. 


நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு வரி மீளாய்வுகள் பலவும் பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. பெறுமதி சேர்வரி  (வற்) 11 வீதத்திலிருந்து  15 வீதமாக அதிகரித்திருக்கின்றது. அத்துடன், பல பொருட்கள் மீதான வற் விலக்குகளும் அகற்றப்பட்டுள்ளன. 2016 மேயில் பொருட்களின் விலைகள் படிப்படியாக அதிகரித்தன. 


2016 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையின் பிரகாரம்  ஜூலையில் வற் அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆயினும் சுகாதார சேவைகளுக்கான கட்டணங்களின் தொகை வீழ்ச்சியடைந்திருக்கவில்லை. ஆதலால், நவம்பரில் வற் மீள அமுல்படுத்தப்பட்டது. இது, உணவுப் பொருட்கள் சாராத பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது.

இந்த வருடம் நாட்டரிசி, சம்பா, கைக்குத்தரிசி (சிவப்பு ), கைக்குத்தரிசி ( வெள்ளை ) ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன. நாட்டரிசி கிலோ  80 ரூபாவில் இருந்து 88 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன. கைக்குத்தரிசி (சிவப்பு) 78 இல் இருந்து 87 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

சம்பா  90 ரூபாவில் இருந்து 97 ரூபா வரையும் கைக்குத்தரிசி வெள்ளை 78 ரூபாவில் இருந்து 96 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது விலைகள் குறைவாக காணப்பட்டதாலும் 4 வகையானவற்றின் விலைகள் சராசரியாக 69, 60, 90, 65 ரூபாவாக கடந்த வருடம் இருந்துள்ளன சீரற்ற காலநிலையும் மீன் உட்பட பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

இலங்கை மத்திய வங்கியின் விலை அறிக்கையின் பிரகாரம் பேலியகொடை மீன் சந்தையில் ஒரு கிலோ கேலவெல 685 ரூபாவாக கடந்த வருடம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இப்போது  960 ரூபாவாக அதிகரித்துள்ளது. தலபத்து ,பறவ மீன்வகைகளும் 250 ரூபாவாலும் 110 ரூபாவாலும் அதிகரித்துள்ளன.

இப்போது இவை கிலோ 950 ரூபாவாகவும் 920 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. கொழும்பு பகுதியில் சில்லறை மீன் சந்தைகளில்  கெலவலே , தலபத்து, பறவ மீன் வகைகள் 930 1313 ரூபா, 783 1154 ரூபா, 920 1320 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றன. 


காய்கறிகள், சின்ன வெங்காயம், தேங்காய், தேங்காய் எண்ணெய் விலைகளும் புறக்கோட்டைச் சந்தையில் அதிகரித்துள்ளன. கடந்த வருட காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது தேங்காய் விலை கிட்டத்தட்ட 60 வீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம்  46 48 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இப்போது சராசரியாக 75 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 


 கொழும்பிலுள்ள முன்னணி தனியார் வைத்திய சாலையொன்று இதயப் பரிசோதனைக்கு 24 ஆயிரத்து 500 ரூபா அறவிடுகின்றது. முன்னர் 23 ஆயிரத்து 300 ரூபாவாக இத் தொகை காணப்பட்டது. புற்றுநோய்க்கான மருத்துவப் பரிசோதனை 32 ஆயிரத்து  500 ரூபாவாகும். முன்னர் இதற்கான செலவு 31 ஆயிரம் ரூபாவாகும்.

நீரிழிவு, இதயநோய், புற்றுநோய் அல்லது சிறுநீரக நோய் என்பவற்றுக்கான மருந்துகளின் விலைகளும்  தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன.  கட்டிட நிர்மாணப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. உருக்குச்  சட்டங்களின் விலை இந்த வருடம் 3 மடங்காக அதிகரித்துள்ளது.

கடவத்தையில் உள்ள இரும்புக் கடையின் உரிமையாளர் கூறுகையில் ;  இந்த உருக்கு சட்டங்களின் விலை தொன் ரூபா 119,000 விலிருந்து ரூபா 132,000 ஆக அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆற்று மணல் 16 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த வருடம் 14,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகரிப்பால் மொத்த விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இந்த விலைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமென்று தெஹிவளையைச் சேர்ந்த இரும்புக் கடை வர்த்தகர் தெரிவித்திருக்கின்றார். தமது பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக வர்த்தகர்கள் பலர் விலைக்கழிவுகளை வழங்குகின்றனர். 6990 ரூபா பெறுமதியான மின் விசிறியை 6090 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு முன்வந்திருப்பதாக சில்லறை வர்த்தகர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால், மின்சாரப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதாக அவர் கூறுகின்றார்.  3 மாதங்களுக்கு முன்னர்  இதே மின்விசிறி 4990 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். மரத் தளபாடங்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளது. சாப்பாட்டு மேசை ஒன்று இப்போது 97,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. முன்னர் 89,000  ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது. மரக் கதிரை இப்போது 5,250 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இது 4,700 ரூபாவாக  விற்பனை செய்யப்பட்டது. 


பாடசாலை பிள்ளைகளுக்கான போக்குவரத்து மாதாந்தக் கட்டணமும் 5  தொடக்கம் 10 வீதத்தால் அதிகரித்துள்ளது. பாடசாலை சிறுவர் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் எம்.எம். ஹரிச்சந்திரா பத்மசிறி இது தொடர்பாக கூறுகையில்;

டயர் 8,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் லுப்ரிகன்ட் 7,500 ரூபாவாக அதிகரித்திருப்பதாகவும்  கூறியுள்ளார். தனியார் வகுப்பு கட்டணங்களும் அதிகரித்துள்ளன. அத்துடன் பாடசாலைப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.  ஏ 4 கடதாசிகள் , காபன் பேப்பர், பென்சில், அப்பியாசக் கொப்பிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக புத்தகக் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.


இதேவேளை, விலைக் கட்டுப்பாடு இப்போது செயற்படுத்தப்படவில்லையென, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, நுகர்வோர் விவகார பாதுகாப்பு சபையின் சிரேஷ்ட அதிகாரி கூறுகையில்;  பொருட்களின் கட்டுப்பாட்டு விலைச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கிரமமாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், யதார்த்தத்தில் தாங்கள் தீர்மானிக்கும் விலைகளிலேயே வர்த்தகர்கள் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.


சண்டே டை http://www.thinakkural.lk/article.php?article/ujtgvjn0hd6178654516d1b413156yjgazdf6917094de807156adc14mtpjt#sthash.JBpTQLVF.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.