Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஊடகத்துறைக் கல்வியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆரம்பக்கட்ட வேலைகள் பூர்த்தி.........

Featured Replies

அறிமுகம்

தமிழ் ஊடகத்துறைப் பற்றிப் பல தரப்பட்ட கருத்துக்கள் உள்நாட்டவர் மத்தியிலும், வெளிநாட்டவர் மத்தியிலும் நிலவி வருகின்றது. அவற்றில் முக்;கியமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் அநேகமான பத்திரிகையாளர்களும், செய்தியாளர்களும் முறைமையான ஊடகத்துறைக்கான கல்வியூடாக வெளிவர வரவில்லை என்றும், வெளிநாட்டு ஊடகத்துறையினரோடு ஒப்பிடும் போது, குடாநாட்டு ஊடகவியலாளர் தரம் குறைந்தவர்கள் என்றும் குற்றச்சாட்டுகள் உண்டு.

யாழ்ப்பாணத்தினது அல்லது தமிழ் மக்களினது வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கவேண்டிய யாழ் பல்கலைக்கழகமானது, தீண்டாப்பெண்டாட்டி போல தமிழ்ச்சமூக வளர்ச்சியில் அக்கறை எடுக்காமல் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதும், இம்மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு காரணம். இதுவரை காலமும் பல பயனற்ற டிப்ளோமாக்களையும், பட்டப்படிப்பையும் உருவாக்கி, தமிழ் மாணவர்களை ஏய்த்துக்கொண்டிருக்கும் யாழ் பல்கலைக்கழகமானது, 2006ஆம் ஆண்டளவில் எப்படியாவது ஊடகத்துறைக்கான ஒரு கற்கை நெறியை ஆரம்பிக்க உள்ளதாக, பீடாதிபதி ஒருவர் தெரிவித்தார்.

தமிழர்களைப்பற்றித் தமிழர்கள் கவலைப்படுவதிலும் பார்க்க வெளிநாட்டவர்கள் தமிழர்களுக்காகக் கவலைப்படுவது போல் காட்டிக்கொள்வதே, இப்போது அதிகமாகக்காணப்படுகின்றது. முன்னாள் துணைவேந்தர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் முயற்சியாலும், வட இலங்கைப்பத்திரிகையாளர் சங்கத்தலைவரின் முயற்சியாலும், யுனஸ்கோவின் (விரைவில் ஜேர்மன் நிறுவனமான புவண இன் நிர்வாகத்தில்) நிர்வாகத்தில்,; வேலைசெய்யும் பத்திரிகையாளர்களுக்காக டொன்மார்க் அரசின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இதழியல் டிப்புளோமா கற்கை நெறியில் கற்றுப் பயன்பெறும் வாய்ப்புப் பெற்றுள்ளேன். அந்த வகையில் எனக்கு இந்த ஆய்வு செய்யும் வாய்ப்புக்கிடைத்தது எனலாம்.

பத்திரிகையாளர்களின் பாவனைக்கு என சகல வசதிகளும் கொண்ட ஊடக வளநிலையம் ஒன்று யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு 20 மாணவர்களும், மற்றும் தொழில் புரியும் ஏனைய பத்திரிகையாளர்களும் உபயோகிப்பதற்கென புத்தகங்கள் உள்ளன. அவற்றில், அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரால் ஊடகத் துறையில் யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக எழுதி, வெளியிட்ட புத்தகம் உட்பட, பல புத்தகங்கள் உள்ளன. அவற்றில் அடிகளார் அவர்களால் 2003ஆண்டு மார்கழி மாதம் தமிழ் மொழியில் வெளியிட்டிருந்த 'ஊடகவியல் கலைச்சொல் அகராதி" என்பதும் அடங்கும். இந்நூலிற்கு செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகள் முன்; இயலும்@ மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை ஆசி இயலும்@ கலாநிதி க. குணராசா அவர்கள் ஆய்வு இயலும் எழுதியுள்ளனர். ஊடகவியல் கற்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்கென வெளியிடப்பட்டுள்ள இந்தத் தமிழ் அகராதி பற்றி, உலகத்தமிழ்hகள் சரியாக அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, இவ்வாய்வுக்கட்டுரை எழுதப்படுகின்றது.

அட்டைப்படம்;

f_cover20fronm_0f0c1d6.jpg

1. அட்டைப்பட இயல் என்று தலைப்பிடப்பட்ட அட்டைப்படத்திற்கான விளக்கம்.

f_cover20ststm_0b8f0c1.jpg

அட்டைப்படத்திற்கான விளக்கத்தில்,

1. ஊடகஇயல் என்பது, இரு பெரும் பகுதிகளைக்கொண்டது எனக்குறிப்பிடும் அடிகளார், ஊடகவியல் என்ற சொல்லை அகராதியின் தொடக்கத்தில் இருந்து, பல வடிவங்களில் கையாண்டுள்ளார். ஒரு வடிவத்தை மட்டும் கொள்ளக்கூடிய சொல் எவ்வாறு பல வடிவங்களை எடுக்க முடியும் ? (அட்டைப்படத்தினையும் அவதானிக்கவும்)

ஊடக இயல்

ஊடகஇயல்

ஊடகவியல் என மூன்று வடிவங்களில் ஊடகவியல்; என்ற உண்மையான வடிவத்தை உபயோகி;த்துள்ளார்.

இந்தத் தவறினை மறுதலித்து வாதிடுவதற்காக, கணினியில் பக்கங்களை வடிவமைத்தவர் பலிக்கடாவாக்கபடலாம். முழுப்பொறுப்பையும் கணினிப்பக்க வடிவமைப்பாளரின் தலையில் தப்புவதன்மூலம் அடிகளார் தப்பிக்கொள்வார் எனில், அடிகளார் தனது அகராதியில் Pசழழகஇ Pசழழக சநயனநச ,... போன்ற நொற்களுக்கு, அவர் விளக்கங்களைக் கொடுத்திருக்கவில்லையா? சொல், பொருட்திருத்தம் பார்க்கவில்லையா ?

அல்லது, இது, பலரின் உதவியுடன் அவசரமாக வெளியிடப்பட்ட ஒரு அகராதியா ?

என்ன காரணமாக இருந்தாலும், தமிழ்ச்சொல் ஒன்று, ஒரே வெளியீட்டில் பல வடிங்களில் வருவது, வாசர்களை அறிந்தோ அறியாமலோ தொடர்ந்தும் மயக்கத்தில் வைத்திருந்து, எதிர்காலத்தில:; இதுவும் சரி, அதுவும் சரி என்ற நிலையை உருவாக்கப் பெரிதும் பயன்படலாம்! இது தமிழ் மொழியையே மாற்றிவிடும்!

ஊடகத்துறையில் ஆர்வமானவர்களும், ஊடகத்துறைபற்றிக் கற்பவர்களும், ஊடகத்துறையில் பணிபுரிபவர்களும் இவ்வகராதியை உபயோகிக்கும் சாத்தியம் இருப்பதனால், ஊடகவியல் அகராதியில் தலையங்கதிலேயே விடப்பட்ட தவறை என்னவென்று கருதலாம்? மன்னிக்கப்பட முடியாததாகும்.

அடிகளார் தமிழ்ச் சொற்புணர்ச்சியி;ல், பல இடங்களில் தவறுகள் விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் மொழியில் எழுதப்பட்ட அகராதியில் இப்படியான பிழைகள் இருப்பது, தமிழ் செய்த பாவமே!

Journalism என்றால் என்ன ?

அடிகளார் தனது அகராதியில் Journalism என்பதை இருபெரும் பிரிவுகளாக: அச்சுப் பத்திரிகைஇயல் - Print Journalism

மின்னியக்கப் பத்திரிகைஇயல்- Eletronic Journalism

எனத் தந்துள்ளார். ஆனால், ஆங்கில அகராதியில்

journalism என்பது

noun {U}

the work of collecting, writing and publishing news stories and articles in newspapers and magazines or broadcasting them on the radio and television.

எனத்தரப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட விளக்கத்தில் இருந்து தழரசயெடளைஅ என்பதை தமிழில் கூறுவதனால், ஊடகத்துறை அல்லது ஊடகவியல் என்றும், அத்தொழிலில் ஈடுபடுபவரை ஊடகவியலாளர் என்றும் கூறலாம்.

மேலும் ஆங்கில மொழியில் உள்ள சொற்களை தமிழில் தரமுயலும் அடிகளார், ஆங்கில வழக்கத்தில் இல்லாத சொற்பிரயோகங்களை தமிழில் அறிமுகப்படுத்தும் நோக்கம் என்னவாக இருக்கமுடியும் ?

ஒரு மொழிப்பிரயோகத்திற்கு ஆன விளக்கத்தை அடிகளாரின் அகராதியை வாசித்த ஒருவரும், ஆங்கிலத்தில் ஊடகத்துறைபற்றி அறிந்த ஒருவரும், ஒரே சொல்லுக்கு வேறு வேறு கருத்தினைக்கொண்டு கருத்தாடலில் ஈடுபடுவார்கள் என்பதே உண்மை.

மேலும் அடிகளார் உபயோகித்த மற்றய ஆங்கிலப்பதங்களுக்கான விளங்கங்களைப் பார்த்தால்....

print (TEXT)

noun {U}

1 letters, numbers, words or symbols that have been produced on paper by a machine using ink:

- The title is in bold print.

- This novel is available in large print for readers with poor eyesight.

- The book was rushed into print (= was produced and published) as quickly as possible.

- The print quality (= The quality of the text produced) of the new laser printer is excellent.

2 newspapers and magazines:

- The debate is still raging, both in print and on the radio and television

print என்ற ஆங்கிலச் சொல், மேற்கூறப்பட்ட கருத்துக்களை தருகின்றது. இவற்றில் இரண்டாவதில் குறிப்பிட்டதன் பிரகாரம், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பவற்றைப் print என்பது குறிக்கின்றது. அதாவது: கடதாசியில் அச்சுச்செய்யப்பட்டு வெளியிடப்படுவதைக் குறிக்கின்றது (பத்திரிகையியல் அல்லது இதழியல்).

electronic என்ற சொல் பின்வருமாறு குறிக்கப்டுகின்றது

electronic was found in the entries listed below

- electronic (ELECTRICAL)

- electronic (COMPUTING)

- electronic banking

- electronic book

- electronic mail

- electronic mailbox

- electronic organizer

- electronic publishing

- electronic tagging

அவற்றில் அடிகளார் குறிப்பிட்டது போல Eletronic Journalism என்பது வழக்கத்தில் இல்லை என்பதே ஆராய்வின் முடிபாகும். மேலும், அவற்றில் சிலவற்றின் ஆங்கில விளக்கங்களைக ;காணலாம். அதாவது இலத்திரனியலுடன் சம்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ளவற்றில் வானொலி, தொலைக்காட்சி என்ப குறிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

1 ( ALSO e-book) a book that is published in electronic form, for example on the Internet or on a disk, and not printed on paper:

- electronic book publishing

- an e-book publisher

electronic publishing

noun {U}

the business of publishing information that is read using a computer:

- an electronic publishing company/course

e-zine

noun {C}

a zine (= small magazine) that is available on the Internet

the mass media

group noun

newspapers, television and radio:

- The mass media has become one of the main instruments of political change.

the media (NEWSPAPERS)

group noun {S}

newspapers, magazines, radio and television considered as a group:

- the local/national media

- media attention/coverage/type/reports

- The issue has been much discussed in the media.

medium (METHOD)

noun {C} plural media or mediums

a method or way of expressing something:

- the broadcasting/print medium

- They told the story through the medium of dance.

அடிகளார் குறிப்பிடும் Print Journalism, Eletronic Journalism

என எதுவும் இல்லை. அவ்வாறு ஒன்றும் இல்லாத வேளையில், அடிகளார் தமிழ்பேசுபவர்களுக்கு மட்டும் புதிய புதிய பிரிவுகளை ஏற்படுத்துகின்றாரா ? அவ்வாறு ஏற்படுத்தியவற்றுக்கு, அவர் கொடுக்கும் வியாக்கியாணங்கள் தான் அவரது அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளனவா ?

இன்றைய தமிழர்கள் (யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள்) ஆங்கிலம் தெரியாதவர்கள், எதையுமே ஆராயும் தன்மையற்றவர்கள், 'கற்றோர்" எனக் கருதப்படுபவர்கள் எதனைக் கூறினாலும், அவர்கள் சரியென ஏற்பார்கள் என்று அடிகளார் எண்ணியிருந்தாரா ? தயவு செய்து, இந்த இரு சொற்களையும் அகராதியில் இருந்து நீக்கவும்.

அட்டைப்பட விளக்கம்

அடிகளாரின் இலத்திரனியல் பத்திரிகையியலில் வானொலி, தொலைக்காட்சி என்பவற்றோடு இணையத்தையும் சேர்த்துள்ளார். இணையம் என்ற சொல் தமிழில் வலைப்பின்னல்(Web) இணையத்தளம் என்பது,(website) என வழங்கி வரப்படுகின்றது.

ஆங்கில அகராதியில், இணையம் என்பது:

new media

plural noun

products and services that provide information or entertainment using computers or the Internet, and not by traditional methods such as television and newspapers:

- We must embrace the opportunities presented by the new media

எனப் புதிய பிரிவிலேயே உள்ளடக்கப்படுகின்றது. அடிகளாருக்கு தற்போதைய நடைமுறை விடயங்கள் பற்றிய பூரண அறிவின்மையையே அவரது வகைப்படுத்தல்கள் உறுதிப்படுத்துன்றன.

'அச்சுவழிப் பத்திரிகையியலுக்குப் பேனா ஒரு முக்கிய கருவியாகும்.

மின்னியக்கப் பத்திரிகையியலுக்கு ‘டிஸ் அன்ரனா’ ஒரு முக்கிய கருவியாகும்" என அடிகளார் அட்டைப்பட இயல் எனக் குறிப்பிட்டுள்ள அட்டைப்பட விளக்கத்தில் கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட இரு கூற்றுக்களும் அடிப்படையிலேயே தவறதானதாகும். ஊடகவியலில,; கருத்து என்பதே முக்கியமானதாகும். இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. கருத்தானது எழுத்து வடிவில் பேனாவால் எழுதப்படலாம், பென்சிலால் எழுதப்படலாம், தட்டச்சு இயந்திரத்திரால் எழுதப்படலாம், கணினியால் எழுதப்படலாம், கருத்தானது ஒலிவடிவில் வாயால் சொல்லப்படலாம், கருத்தானது நடிப்பால் காட்சிப்படுத்தப்படலாம்.

இலத்திரனியலுக்கும், ஊடகத்திற்கும் தொடர்புபடுத்தி வெளியிடப்பட்டிருக்கும் கருத்தானது எந்தவித விஞ்ஞானபூர்வமற்ற ஒரு கூற்றாகும். இலத்திரனியல் செயற்பாடுகளுக்கு, அதாவது: ஒலி, ஒளிபரப்பு சேவைகளுக்கு 'டிஸ் அன்ரனா" முக்கியமானது என்ற கருத்து, தொழில் நுட்பம் அறிந்த எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. ஒலி, ஒளிபரப்பு நிலையத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரங்களுக்கு உட்பட்டவர்கள், எந்தவித 'டிஸ் அன்ரனா”வையும் பயன்படுத்தாமல் அலைவரிசைகளை உபயோகப்படுத்த முடியும் (இடையிடையே கோபுரங்களை அமைத்து இலங்கை முழுவதும் ஒலி, ஒளிபரப்பு செய்யப்படுகின்றது). கடல் கடந்த, உலகலாவிய ஒலி, ஒளிபரப்பு சேவைகளுக்கு, அடிகளார் குறிப்பிட்ட 'டிஸ் அன்ரனா" சில சந்தர்பங்களில் உபயோகிக்கப்படுகின்றது.

மேலும் தமிழில் உபயோகப்படுத்தும் எந்த ஆங்கிலச்சொல்லும் மேற்கோள் குறிக்குள் குறிப்பிடப்படுவது தமிழ் வெளியீட்டுத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு பொது விதியாகும.; இருப்பினும் அடிகளார் பல இடங்களில் வெறுமனே பயன்படுத்தி இருப்பது அவதானிக்கத்தக்கது.

அடிகளாரின் பணிகளோடு குறுகிய காலத்தில் பல வெளியீடுகளைச் செய்ய ஏற்பட்ட காலநெருக்கடியால் எல்லாவற்றையும் கவனிக்க நேரம் கிடைக்கவில்லையோ, அல்லது அதற்காக அவரால் பணிக்கமர்தியவர்கள் தங்கள் வேலைகளை விட்டு வேறு வேலை பார்த்தார்களோ என்பது இனிவரும் காலங்களில் வெளிவரும் மறுப்பறிக்கைகளில் காணலாம்.

மேலும், அடிகளார் தனது அகராதியில் புதிய சொற்றொடர்களை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1. அட்டைப்பட இயல்

2. முன் இயல்;

3. ஆசி இயல்;

4. ஆய்வு இயல்

5. என் இயல்

இவை, சாதாரண நடைமுறையில், முறையே: அட்டைப்பட விளக்கம் முன்னுரை ஆசியுரை,ஆய்வுரை ஆசிரியருரை என வழங்கப்பட்டு வருகின்றது.

இயல்; என்ற சொல்லுக்கு, தமிழ் அகராதிகளில்: இசை, melody; musical harmony; இயற்றமிழ் natural pur Tmil, prose or poetry ஒத்து a chapter, section treating of a series of subjects, or things in order; குணம் nature, natural property or quality சாயல், aspect. Appearance, shape, likeness நடை good conduct, conduct appropriate, to a person’s caste, rank, office &c பொருந்தென்னேவல் imp be possible, be incident to, etc.; ஒழுங்கு order, course, rule, method; விதி, destiny, appointment, assignation, decree, allotment; இலக்கணம், grammar எனத் தரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அடிகளார் இயல் என்பதை அட்டைப்பட, முன், ஆசி, ஆய்வு, என் என்பவைகளுடன் பின்னால் இணைத்துத் தந்திருப்பமை, உண்மையில் எவற்றைக் குறிக்கமுடியும் என்பது ஆராயப்படவேண்டியதே.

தமிழ் அகராதிகளில் இயல் என்பதற்குத் தரப்பட்டுள்ளவைகளுள், ஒத்து என்பது மட்டுமே பொருந்தக்கூடியது.

ஆனால், அட்டைப்பட இயல் என்பது, இங்கு அட்டைப்பட chapter என்ற கருத்தையே தருகிறது.

இந்தநிலையில், அடிகளார் முன் இயல், ஆசி இயல், ஆய்வு இயல், என் இயல் எனத் தந்திருப்பவைகள் பிழையானவை.

தமிழ் இலக்கண நூல்களில், ஊhயிவநசளதான் இயல் என எழுதப்பட்டுள்ளன.

மேலும், நிறைவு மிகுதித் தன்மை கொண்டிருக்கும் பௌதீகத் தன்மையே இயல்; ஆகும்.

முழுமையானதும், தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்படுவதும் இயல்; ஆகும். ஆகவே, இயக்கவியல், பொருளியல், பௌதீகவியல், இயந்திரவியல்.......!

மேலும், அடிகளார் சொற்களை இங்கு பிரித்து எழுதியிருப்பது, தமிழ் இலக்கணத்திற்கு முரணாணதாகும்.

இயல் என்பதைப் பிழையான விளக்கத்துடன் அவர் பயன்படுத்தியிருக்கும்போதும

post-3649-1172386443_thumb.jpg

Edited by Prashanna

நீங்கள் படத்தை இணைக்கும் போது அதன் URLஐ [ஐ.எம்.ஜி]URL[ஐ.எம்.ஜி] இனுள் போட்டு விடவும். தற்போது ஒட்டப்பட்டுள்ள முறையில் வெளி ஆட்கள் உங்கள் படங்களை பார்க்க முடியாது!

படங்களை சரியாக இணைப்பதற்கு மதனின் உதவிக்குறிப்பை இங்கே பார்க்கவும்.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry117970

நீங்கள் ஒட்டிய படத்தை நான் மதனின் முறையை பாவித்து கீழே ஒட்டியுள்ளேன்

fcover20fronmb37e498rz2.jpg

fcover20ststm4f1bceete0.jpg

  • தொடங்கியவர்

நன்றி மாப்பு, எனக்கும் கொஞ்சம் உங்கள் ஐடியாவை சொல்லிக் கொடுக்க முடியுமா....? :rolleyes::lol::unsure::(:(:(

  • தொடங்கியவர்

பக்கம் 2 மேற்பந்தியின் தொடர்ச்சி.......

சொற்களும் சரியான விளக்கங்களும்:

Access time

f_1m_7bb7b73.png

அடிகளார் தனது எண்ணத்திற்கும் அனுபவத்திற்கும் ஏற்பஇ சில பிரத்தியேக சொற்களுக்கு விளக்கமளிக்க முற்பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும் ? மேலே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கும்இ அடிகளார் தந்துள்ள விளக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை ஒருவர் உணருவதன் மூலம்இ அடிகளாருக்கும் கணினிக்கும் உள்ள தொடர்பை விளங்கிக்கொள்ளலாம் ? அடிகளாரின் விளக்கத்தின் பிரகாரம்இ கணினியை ஒய்வுக்கு கொண்டுவரும் செயற்பாட்டை (shut down) தெரிவு செய்யும் ஒருவா கணினி முற்றாக நிறுத்திக்கொள்ள எடுக்கும் நேரமும் Access time என்ற விளக்கத்தினைப்பெறும்;

Accreditation Card

f_2m_1ce95ed.png

accredit

verb {T}

to officially recognize, accept or approve of someone or something:

- The agency was not accredited by the Philippine Consulate to offer contracts to Filipinos abroad.

accredited

adjective

officially recognized or approved:

- an accredited drama school

- accredited war correspondents

accreditation

noun {U}

- The college received/was given full accreditation in 1965.

அடிகளார் குறிபிட்டுள்ள சொல்லுக்குஇ ஒரு குறிப்பிட்ட அட்டையை மாத்திரம் குறிப்பிடுவது தவறாகும். இதுஇ உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒருவர்இ அல்லது ஒன்று என்பதே பொருள். அவை ஊடகவியலாளருக்கு மட்டும் வழங்கப்படும் விசேட அட்டையும் அல்ல. மேலும்இ இலங்கையில் ஊடகவியலாளருக்கு வழங்கப்படுவது ஊடகவியராளருக்கான அடையாள அட்டையே ஆகும். இதனை இலங்கையில் அடையாள அட்டை என்றே குறிப்பிடுவதும் வழக்கம்.

Accuracy

f_3m_811bf2b.png

accurate

adjective

correct, exact and without any mistakes:

- an accurate machine

- an accurate description

- The figures they have used are just not accurate.

- Her novel is an accurate reflection of life in post-war Spain.

- We hope to become more accurate in predicting earthquakes.

accurately

adverb

- The plans should be drawn as accurately as possible, showing all the measurements.

accuracy

noun {U}

- We can predict changes with a surprising degree of accuracy.

அடிகளார் Accurate என்ற சொல்லுக்குஇ துல்லியம் எனத் தந்துள்ளார். அச்சொல்லிற்கு அவரால் கொடுக்கப்பட்ட விளக்கத்தில்இ அவர்: துல்லியமாகஇ தவறின்றி எனஇ ஒரே பொருளுடைய இரு சொற்களைப் பக்கம் பக்கமாகத் தந்துள்ளார். துல்லியம் என்ற தமிழ் சொல் சரியானஇ தவறு இல்லாத என்ற இரு சொற்களின் பொருளைத் தன்னகத்தே கொண்ட ஒரு சொல்லாகும். மேலுமஇ; செய்தி சேகரிக்கும் போதுஇ காலக்கெடு என்ற வரையறைஇ பொருத்தமற்ற விதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது.

Acoustic

f_4m_a89e833.png

.

acoustic

adjective

1 relating to sound or hearing:

- The microphone converts acoustic waves to electrical signals for transmission.

2 describes a musical instrument that is not made louder by electrical equipment:

- an acoustic guitar.

acoustic

noun {C usually plural}

the way in which the structural characteristics of a building or room affect the qualities of musical or spoken sound:

- The concert was recorded in a French church that is famous for its acoustics.

acoustically

adverb acoustics

noun {U} SPECIALIZED

the scientific study of sound

அடிகளார் acoustic என்ற ஆங்கிலச்சொல்லைஇ எதிர்வு அலை என்னும் பொருளாக கருதியிருக்கிறார். ஆனால்இ உண்மையிலஇ; எதிர்வு அலை என்பது echo ஆகும். மேலும்இ அதே பத்தியிலஇ; இரு வேறு வேறு விளக்கங்களை அவர் கொடுத்திருப்பதும் கவனிக்கத்தக்து. அலைகளை அளவிடும் அளவை என்பது மீடிறன் ஆகும்.

acoustical setting

f_5m_6e5f233.png

acoustic என்பதனை அடிகளார் பிழையாக விளங்கியிருப்பதால் அடுத்ததாக வரும் acoustical setting என்பதற்கும் முற்றிலும் பிழையான விளக்கமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் பின்னணி இசைப்பற்றியே அடிகளார் குறிப்பிட்டுள்ளார்.

Acoustical Screen

f_6m_f582596.png

அடுத்ததாக வரும் Acoustical Screen என்பதற்குக் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் பத்தியின் இறுதியில் முற்றிலும் தவறான சொற்பிரயோகம் ஒன்று உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. .எதிர்வு ஒசையைத் தரக்கூடியதாயும் இது அமைந்திருக்கும் என்று விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதுஇ அடிகளாருக்கு இருக்கும் பிழையான விளக்கத்தையே வெளிப்படுத்தி இருக்கின்றது

தொடரும்..........

Edited by Prashanna

  • தொடங்கியவர்

Action area:

f_1m_668c1c7.jpg

action (ACTIVITY)

noun {U}

things which are happening, especially exciting or important things:

- I like films with a lot of action.

- In her last novel, the action (= the main events) moves between Greece and southern Spain

நிகழ்ச்சிக்களத்தில் இருந்தே செய்தியாளர்கள் நிகழ்ச்சி பற்றிய குறிப்புக்களைப் பெறுகின்றனர் என்பது ஒரு தவறான கூற்றாகும். ஏனெனில,; செய்திகளைச் செய்தியாளர்கள் பல மூலங்களினூடாகப் பெறுகின்றனர். செய்திகளை நிகழ்ச்சிக் களத்தில் இருந்து பெறுகின்றனர் என்பதைக்காட்டிலும், நிகழ்ச்சிக்களத்தில் இருந்தும் செய்திகளைப் பெறுகின்றனர் என்பதே சரியானதாகும்.

All Rights Reserved:

f_aam_43a6beb.jpg

இதற்கு அடிகளார் தனது அகராதியில் குறிப்பீவதுபோன்ற விளக்கம் இல்லை. All Rights Reserved என்பதற்கு,அடிகளார் பத்திரிகை, அல்லது வெளியீட்டில் இருப்பவைகளைத் தொடர்பு படுத்தி விளக்கம் கொடுத்துள்ளார்@ அவற்றின் பிரசுரிப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்

,இது முற்றிலும் பிழையான விளக்கமாகும். இதை விளக்குவதற்கு, ஒரு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பை இங்கு தருகிறோம்.

f_bbm_c0d5cf3.jpg

அடிகளார் “நன்றி என்று போட்டு எடுக்கப்பட்ட பத்திரிகையின் அல்லது வெளியீட்டின் பெயர் போடப்படும்” எனக் குறிப்பிட்டிருப்பது, அடிகளாருக்குச் சட்டங்கள் தொடர்பான விளக்கம் அற்ற தன்மையே உறுதிப்படுத்துகிறது.

ஒரு நூலில் கூறப்பட்டிருப்பவைகளை அறிவியல் ரீதியில் விமர்சிப்பதற்கு மாத்திரமே, முற்கூட்டிய அனுமதியின்றிப் பயன்படுத்தமுடியும். ஏனையவைகளை, முற்கூட்டிய அனுமதியினைப் உரியவரிடமிருந்து பெற்றுக்கொண்ட பின்னரே, அதில் கூறப்பட்டுள்ளவைகளை மீள் பிரசுரம் செய்யமுடியும்.

ஆனால், இலங்கைத் தமிழ் ஊடகங்கள் இப்படியான முறையைக் கையாளுவதில்லை. இதற்குச் சிறந்த உதாரணம்: இணையத் தளங்களிலிருந்து பெறப்படும் கட்டுரைகள் ஏனையவைகளை, கட்டுரைகளை எழுதியவர்களிடம் இருந்து அனுமதியைப் பெற்றுக்கொள்ளாது, அடிகளார் அகராதியில் கூறியிருப்பதுபோல், அக்கட்டுரைகள் வெளியான இணையத்தளங்களுக்கு நன்றி தெரிவித்துத் தமிழ்ப் பத்திரிகைகள் பிரசுரித்துவருபமை.

சட்டம் தொடர்பான பிழையான விளக்கங்களை அகராதியூடாக ஏற்படுத்துவது, ஊடகவியலாளர்களைச் சட்டப் பிரச்சனைக்குள் விழுத்தவே சந்தர்ப்பங்கள் உருவாகும

  • தொடங்கியவர்

ஆய்வு முடிவு

இங்கு ஆராயப்பட்டவைகளில் இருந்து, இந்த அகராதியில் காணப்படும் தவறுகள், பிழைகள் தற்செயலாக நடைபெற்றவை எனக் கருத முடியாததாகவே காணப்படுகின்றன.

ஊடகவியல் அகராதி ஒன்றினைத் தமிழில் எழுதவென முற்பட்ட அடிகளார், குறிக்கோளையே கைவிட்ட நிலையைத்தான் அவர் சொற்களை ஆங்கிலத்தில் தந்துவிட்டு, பின்னர் தமிழ்சொற்களைத் தந்திருப்பது உறுதிப்படுத்துகின்றது.

அடிகளாரின் அகராதியைப் படிப்பவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலே, அதைச் சுலபமாகப் பயன்படுத்த முடியும்.

இக்கட்டத்தில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது. தமிழ் ஊடகவியல் மாணவர்கள் ஆங்கிலம் தெரிந்த நிலையிலிருந்துதானா அவற்றின் விளக்கங்களைத் தமிழ் மொழியூடாக அறியவுள்ளனர்?

இது போகட்டும். அடிகளார் யு எழுத்தின்கீழுள்ள 78 சொற்களுள் 50 மேற்பட்ட சொற்களுக்குப் பிழையான விளக்கங்களைக் கொடுத்துமுள்ளார், சொற்களையே பிழையாகக் கொடுத்துள்ளார்? இது ஏன்? இது எப்படி நடைபெற்றிருக்கமுடியும்?

ஏறக்குறைய 25 வருடங்களாக பத்திரிகையாளராகவும் இருந்துவருபவரும், ஒரு துறவியாக இருப்பவரும், இப்படியான தவறுகளையும், பிழைகளையும் ஒரு அகராதியில் விட்டு, ஒரு அகராதியைத் தமிழில் வெளியிட்டிருப்பது, பத்திரிகை துறையை மேம்படுத்தும் நோக்க வெளிப்பாடாக இருக்கமுடியுமா, அல்லது எதிர் நோக்கமுடைய வெளிப்பாடாக இருக்கமுடியுமா?

இதுபற்றி வாசகர்களே முடிவுசெய்யவேண்டும்.

ஆனால், இந்த அகராதி என்று சொல்லப்படுவதின் வெளியீடானது, ஒன்றினை அசைக்க முடியாதபடி உறுதிப்படுத்துகின்றது.

இப்படியான அகராதிகளும், நூல்களும் தமிழில் பிரசுரிக்கப்பட்டு, அவை ஊடகவியல் மாணவர்களது கைகளில் விட்டால், தமிழ் மொழியே மாற்றமடையும் அபாயம் தீவிரப்படும் நிலையே உருவாகும்@ தமிழ் பேசும் யாழ்பாணத்தின் ஊடகத்துறையானது பெரும் பின்னடைவையே எதிர்நோக்கவேண்டி நேரிடும்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையாகலாம். ஆனால் மண்ணாங்கட்டியே சக்கரையாகுவது பெரும் துன்பமானது.

இதிலும் துன்பமானது என்னவென்றால், “இந்நூல் பல்துறை சார்ந்த பயனள்ள அறிவியல் பெட்டகமாப் பேணப்படும்” எனவும்@ “ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள், புதிதாக ஊடகத் துறையைக் கற்பவர்கள் நல்ல தமிழ்ச் சொற்களைப் பாவிக்கவும், தகுந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தவும் ….ஊடகவியல் கலைச் சொல் அகராதி என்ற இந்த நூல் முதல் வரவு என்கின்ற வகையில் அதற்குப் பெருந்துணை புரிய வாய்ப்புண்டு” எனவும்@ “பத்திரிகைஇயல் ஊடகவியலிவ் முதுகலைமாணிப் பட்டம் பெற்ற இவர் இவ்வாறான ஓர் அரிய நூலினை ஆக்காதிருந்தால் அது அவர் சமூகத்திற்குச் செய்கின்ற துரோகமாகும்” எனவும், சமய, சமூக, கல்விப் பெரியோர்கள் எனக் கருதப்படுபவர்கள்; புகழ்ந்திருப்பதாகும்.

இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்களே.

அதிலும் பரிதாப நிலையாக இருக்கக்கூடியது என்னவென்றால், இப்படியானவர்களிடமிருந்து கல்வி கற்பதே!

f_111m_6b1ae6b.jpg

ஆய்;விற்காக பயன்படுத்திய ஆங்கில விளக்கச்சொல்கள் http://www.freesearch.co.uk என்ற முகவரியில் உள்ள இணைய ஆங்கில அகராதியும், Oxford ஆங்கில அகராதியும் பயன்படுத்தப்பட்டன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.