Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற உறுப்பினர் திரு எம். ஏ. சுமந்திரனின் பேட்டியிலிருந்து

Featured Replies

எனது நண்பர் ஒருவர் திரு எம். ஏ. சுமந்திரன் அவர்கள் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வியை எனக்கு அனுப்பியிருந்தார். ஏரிக்கரை பத்திரிகையான தினகரன் பத்திரிகை எப்பொழுதும் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் பத்திரிகை மற்றும் அரசாங்க பத்திரிகை என்பது யாவரும் அறிந்ததே. ஆனபடியால் சாதாரணமாக நான் தினகரன் பத்திரிகை பார்ப்பது குறைவு அப்படியிருந்தும் எனது நண்பர் மூலம் இவ் செவ்வியை பார்க்க கிடைத்ததற்கு  முதலில் எனது நன்றியை அவருக்கு தெரிவித்துகொள்கின்றேன். இனி திரு எம். ஏ. சுமந்திரன் அவர்களின் செவ்வியில் கூறப்பட்ட முக்கியமான விடயங்கள்  சிலவற்றைப்பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.   

 

வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவி விலக்கப்படவேண்டு மெனக் கோரி வட மாகாண சபையின் உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கைச்சாத்திட்டவர்களில் பலர் தங்கள் நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனவே?

 

 முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது வட மாகாண சபையின் ஆளும் கட்சியினைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் எடுத்த தீமானம். அதில் தமிழரசுக்கட்சியின் நிர்ப்பந்தம் எதுவுமில்லை. அதேபோல தங்கள் நிலைப்பாட்டினை எவரேனும் மாற்றினாலும் அதில் தமிழரசுக் கட்சியின் நிர்ப்பந்தம் எதுவும் இருக்கப்போவதில்லை.

 

மேற் கூறப்பட்ட பதிலில் இருந்து திரு எம். . சுமந்திரன் அவர்கள் என்ன சொல்லவருகின்றார் என்றால் தாங்கள் நல்லவர்கள் போலும் முதலமைச்சர்தான் தவறு செய்துவிட்டது போலவும் காண்பிக்க முற்படுகிறார். சமீபத்தில் நீதிக்குழு என்ற குழுவின் பேச்சாளர் தங்கள் செய்தியாளர் மகாநாட்டில் தாங்கள் பல காலமாக அமச்சர்களுக்கு எதிராக குற்றசாட்டுக்களை முதலமைச்சரிடம் வைத்ததாகவும் இதைப்பற்றி த தே கூட்டமைப்பு தலைவர் திரு சம்பந்தனிடம் பேசியதாகவும் கூறியிருந்தார். இதிலிருந்து உங்களுக்கு என்ன நடக்கின்றது என்பது புரிந்திருக்கவேண்டும். இந்த பிரச்சினை ஒன்று இரண்டு நாட்களாக நடக்கும் பிரச்சினையில்லை பல மாதங்களாக நடக்கின்றது. த தே கூட்டமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரின் தலைமையில் இக் குழு மாகாணசபையிலே இயங்கிவருவதை பல வலைத் தலங்களில் பார்த்திருக்கின்றேன். இவர்கள்தான் முதலமைச்சரை வீழ்த்துவதற்காக முதலமைச்சரின் வலது கரமான திரு ஐங்கரநேசனுக்கெதிராக முதலில் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள். அதைத்தொடர்ந்து மற்றய அமைச்சர்களுக்கெதிராகவும் மற்றய அங்கத்தவர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுதான் உண்மை. இந்த குழுவின் முக்கிய நோக்கம் முதலமைச்சருக்கெதிராக மாகாண சபையில்  பிரச்சினைகளை கொடுப்பது பின்னர் முதலமச்சருக்கெதிராக அவர் வினைத்திறனுடன் இயங்கவில்லை என குற்றம் சுமத்துவது. இவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைதிருக்க தெரியாத தமிழரசுக்கட்சியினருக்கு முதலமைச்சரைப்பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.     

 

 

பதவி விலக்குவதற் கெதிராக வட மாகாணமெங்கும் வட மாகாண முதலமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றினைக் கொண்டு வந்து அவரை முழு அளவிலான ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. வெள்ளியன்று முழு வட மாகாணமுமே வெறிச்சோடிப்போயிருந்ததைக், காணக்கிடைத்தது. இது வட மாகாண மக்கள் முதமைச்சருடன் இருக்கின்றார்கள் என்பதைத்தானே உணர்த்துகின்றது?

இதனைக்கொண்டு மக்கள் அவருக்குச் சார்பாக இருக்கின்றார்கள் என்று சொல்ல முடியாது.

 

திரு எம். . சுமந்திரன் அவர்கள் தனது பதிலில் என்ன கூறுகின்றார் என்றால் ஜனனாயக முறையிலே நடாத்தப்படும் போராட்டங்களால் மக்கள் ஆதரவை கணிப்பிடமுடியாதென்கின்றார். இவர்கள்தான் தங்களை தாங்களே ஜனனாயகவாதிகள் என்கின்றனர். இந்த போராட்டங்களை பார்த்து பயப்படவில்லையென்றால் எதற்காக பராளுமன்ற உறுப்பினர்கள் திரு சிறீதரனையும் திரு சித்தார்த்தனையும் முதலமைச்சருடன் பேசுவதற்கு அனுப்பவேண்டும் அத்துடன் த தே கூட்டமைப்பு தலைவர் திரு சம்பந்தன் அவர்கள் எதற்காக முதலமைச்சருடன் தொலைபேசி தொடர்பையும் கடிதத் தொடர்பை தொடங்கவேண்டும். இவையெல்லாமே போராட்டத்தின் எதிரொலியேயொழிய மற்றும்படி தமிழரசுக்கட்சி விரும்பி செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.  

 

 

 முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை பதவி விலக்க வேண்டும் எனக் கோருவதன் மூலம் தமிழரசுக்கட்சி ஒரு வரலாற்றுத் தவறினைச் செய்கின்றது என்பது பலரது அபிப்பிராயமாக உள்ளதே?

விக்னேஸ்வரனை பதவியில் அமர்த்தியதே தமிழரசுக் கட்சி செய்த வரலாற்றுத் தவறு என்பதாகத்தான் எங்களைப் பலர் விமர்சித்திருக்கின்றார்கள்

 

தமிழரசுக் கட்சி செய்தது வரலாற்றுத் தவறு மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே பதியப்படவேண்டிய முதல் நிகழ்ச்சி. ஆளும்கட்சிக்குள்லேயே ஒரு பகுதியினர் தங்களது முதலமச்சருக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து ஆளுனரிடம் சமர்ப்பித்தது உலக வரலாற்றில் இதுதான் முதல்முறையாகும்.

 

த தே கூட்டமைப்பு தலைமையும் சரி அவர்களது ஆதரவு வலைத்தலங்களும் சரி இரண்டு விடயங்களை திரும்ப திரும்ப கூறிவருகின்றார்கள் அதாவது

 

1.   த தே கூட்டமைப்பின் (தமிழர்களின்) ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடாது.

2.   பாராளுமன்ற தேர்தலிலே தோல்வியுறவர்கள் இப்பொழுதுள்ள பிரச்சினைகளுக்கு பின் புலத்திலிருந்து செயற்படுகின்றார்கள்.

 

 முதலாவதாக ஒற்றுமை என்பது கொள்கையடிப்படையில் இருக்கவேண்டும் மாறாக பாராளுமன்ற ஆசனங்களை பங்கீடு செய்வதில் மட்டும் இருக்கக்கூடாது. த தே கூட்டமைப்பு எதை ஒற்றுமையென்கின்றது, எதிகட்சிகளுடன் சேர்ந்து தங்களது முதலமைச்சருக்கெதிராக நம்பிக்கையிலா தீர்மானத்தை கொண்டு வந்ததையா? அல்லது புதிய அரசியலமைப்பில் என்ன நடக்கின்றது என்பதை த தே கூட்டமைபிலுள்ள மற்றய கட்சிகளுடன் விவாதிக்காமலிருப்பதையா? அல்லது மற்றய கட்சிகளை ஒதுக்கிவிட்டு தமிழரசுக்கட்சியை வளர்த்தெடுப்பதையா? இவர்கள் எதை ஒற்றுமையென்கிறார்கள். சரியான கொள்கைக்காக  த தே கூ பிரிந்தால் அதில் எந்தவித தவறும் இருக்கமுடியாது மாறாக அமைச்சு பதவிக்காகவோ அல்லது பாராளுமன்ற ஆசனங்களுக்காகவோ த தே கூட்டமைப்பை உடத்தால் அது தவறு என்பது எனது அபிப்பிராயம். உதாரணத்துக்கு 1949ல் தமிழ் காங்கிரஸ் உடைக்கப்பட்டு தந்தை செல்வா தலமையில் தமிழரசுக்கட்சியை உருவாக்கியதை யாராவது தவறு என்று கூறுவார்களா? ஏன் திரு சம்பந்தனால் தவறு என்று கூறமுடியுமா? அத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணியை உடைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது சரியென்றால் த தே கூட்டமைப்பு ஒற்றுமையென்ற பெயரில் தவறான கொள்கையில் செல்வதை ஏற்க முடியாது.

 

இரண்டாவதாக    பாராளுமன்ற தேர்தலிலே தோல்வியுறவர்கள் பின் புலத்திலிருந்து த தே கூட்டமைப்பின் ஒற்றுமையை குழப்புவது என்ற குற்றச்சாட்டு. ஏன் அவர்களை குற்றம் சொல்லவேண்டும் நானே தமிழரசுக் கட்சிக்காலத்திலிருந்தே அக் கட்சியை ஆதரிப்பவன் என்னாலேயே இவர்களை  ஜீரணிக்க முடியவில்லை அப்படியானால் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள். இதற்க்கான காரணம் என்ன? முதலில் த தே கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பற்க்காக உருவாக்கப்பட்ட இயக்கம் ஆனால் அதை மறந்து  தமிழரசுக்கட்சி த தே கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக மாற்றி அரசியல் விளையாட்டுக்களை நடாத்துகின்றது. 1956ம் ஆண்டிலிருந்து 2009 வரை எமது தலைவர்களின் கொள்கை முதலில் தமிழர்களின் பிரச்சினை தீக்கப்படவேண்டும் அதன் பின் தான் எமது பிரதேச அபிவிருத்தி என்பதேயாகும் அதனால்தான் தமிழரசுக் கட்சியினர் சந்தர்ப்பம் கிடைத்தும் அமைச்சுப்பதவிகளை ஏற்கவில்லை இது திரு சம்பந்தன் திரு மாவை போன்றவர்களுக்கு நன்றாக தெரியும்  . ஆனால் இன்று ஞானோதயம் பிறந்த திரு சம்பந்தனுக்கும் மாவைக்கும் முதலில் அபிவிருத்திதான் முக்கியம் என்றும் அதற்காக நாலு ஐந்து இணைத்தலைவர்கள் (நல்ல காலமாக இரண்டு மூன்று இணை பிரதமந்திரிகள் இல்லாமல் போய்விட்டது) உரிமைபிரச்சினை இரண்டாவது நிலை என்றாகிவிட்டது. ஆனால் முதலமைச்சரோ முன்னைய தலைவர்களின் கொள்கையை கடைப்பிடிக்கின்றார் அவரது கருத்துக்கள் இனத்துக்கான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றது அதனால்தான் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடுகின்றது. அவர் 300 தீமானங்களை நிறைவேற்றி நேரத்தை வீணடிக்கின்றார் என்பது குற்றச்சாட்டு அவர் தங்களுக்கு வாகனம் வேண்டும் என்றோ அல்லது வீடுகள்  வேண்டும் என்றோ தீர்மானம் போடவில்லை மாறாக தமிழ் இனத்தின் பிரச்சினை சார்ந்தே தீர்மானங்களையே நிறைவேற்றினார்கள். உதாரணத்துக்கு இராணுவ குறைப்பு, மீள்குடியேற்றம் கைதிகள் விடுதலை போன்றவை இதில் எந்தவித தவறு இல்லையென்பதுதான் எனது கருத்து மட்டுமல்ல தமிழரசுக்கட்சியின் அடிப்படக்கொள்கையும் இதுதான்.  அதனால்தான் முதலில் தமிழர் பிரச்சினைக்கு அரசியல்மைப்பு  ஊடாக காலம் கடத்தாமல் விரைவில் தீர்வை காணவேண்டும் என விரும்புகின்றோம். பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால்  அபிவிருதியுடன் சிங்கள குடிடியேற்றங்களும் சேர்ந்து வரும் என்பதையும் கவணத்தில் கொள்ளவேண்டும்.

 

மீண்டும் சொல்கின்றேன் கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பது போல்  தமிழரசுக்கட்சியை சரியான வழிக்கு கொண்டுவரவேண்டுமாக இருந்தால் சரியான தலைமையின் கீழ் மக்கள் பேரவை பலப்படுத்தப்படவெண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் தனது தள்ளாத வயதில் எதிர்கட்சித்தலைவர் பதவியை மனதாற நன்கு அனுபவித்து கடைசிக்காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
சம்பந்தனின் வயதில் உள்ள ஒருவர் பொதுநலத் தொண்டு செய்யும் மனப்பாங்குடன் இருப்பாரா என்பது கேள்விக்குறி.
தனது அன்றாட வாழ்க்கையை கொண்டு செலுத்துவதே பெரும்பாடு அப்படியிருக்க அவர் ஊருக்கு உழைப்பார் என நம்பி மக்கள் காத்திருக்கிறார்கள்.
ஒரு வயோதிபரின் பிரச்சினைகளாக தள்ளாமை உடல் தளர்ச்சி ஞாபகசக்தி இன்மை இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.
வயதுக்கான அனுபவம் மட்டுந்தான் அவர் பயன்படுத்தக்கூடிய ஒன்று மற்றும்படி சம்பந்தன்  எதிர்கட்சி தலைவர் பதவியில் இருப்பதிலும் பார்க்க அதில் இல்லாமல் இருந்து தமிழினத்துக்கு ஏதாவது செய்திருக்கலாம் அல்லது செய்ய முயற்சித்திருக்காலாம்.

சம்பந்தனை எதிர்கட்சித்தலைவர் பதவியில் வைத்திருப்பதால் தமிழருக்கு அதில் எந்த நன்மையும் இல்லை மாறாக சிங்கள அரசும் அண்டை நாடுகளும் வல்லரசுகளும் தான் நன்மையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன. எங்க ஊர் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் முதுமை வரும்போதும் ஓய்வின்றி பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கலாம். அரசியல் செய்வது இலகுவான தொழிலா அல்லது அரசியல்வாதி உடலை மனதை வருத்தி வேலை செய்யவேண்டிய தேவையே இல்லையா ? மக்கள்தான் சிந்திக்கவேண்டும்.

  • தொடங்கியவர்

அதனால்தான் நான் முன்பு எழுதிய கட்டுரையொன்றில் அரசியல் கட்சிகள்  முதியோர் அணியை ஆரம்பிக்க வேண்டும் என எழுதியிருந்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.