Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதை குற்ற செயலாக அறிவிக்கும் சட்டத்தை கொண்டுவாருங்கள்

Featured Replies

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதை குற்ற செயலாக அறிவிக்கும் சட்டத்தை கொண்டுவாருங்கள்

p26-937d5e4694b372d04053dfe6aedca162e40c2676.jpg

 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுப் பெண்கள் கோரிக்கை

வவுனியா,

இலங்கையில் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படுவது தொடர்பில் தண்டனை விலக்கு உரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், அவை மீண்டும் இடம்பெறா மல் இருப்பதை உறுதி செய்யுமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான பெண்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான சுமார் 400 பெண்கள் இணைந்து கையெழுத்திட்டு இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். இன முரண்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கிலான இந்தப் பெண்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களைத் தொடர்ச்சியாகத் தேடி வருகின்றார்கள். 

காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு அரசாங்கத்தைக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல இடங்களிலும் இந்தப் பெண்கள் நூறு நாட்களுக்கு மேலாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். 

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்களின் முன்னிலையில் தாங்கள் சாட்சியமளித்துள்ள போதிலும், அரசுகளின் வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளாகி இருக்கின்றன. எந்தவித பயனும் விளையவில்லை என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதை எதிர்காலத்தில் இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் கடந்த வருடம் பலவந்தமாக காணாமல் போகச் செய்வதில் இருந்து அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தை இலங்கை அரசு அங்கீகரித்துள்ளதையிட்டு தாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இருப்பினும், இலங்கையில் பலவந்தமாக ஆட்களைக் காணாமல் போகச் செய்வதைக் குற்றமாக அறிவிக்கும் சட்டமூலம் குறித்து அரச வர்த்தமானியில் (கசற்) அறிவிப்பு வெளியாகியிருந்த போதிலும், அந்த சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதைப் பின்போட்டிருப்பது தங்களுக்குக் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.

அந்த சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக இம்மாதம் 5 ஆம் திகதி நாள் குறிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த விவாதம் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

இந்த சட்டம் கொண்டு வரப்படுமானால், ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவது நிறுத்தப்படும். தண்டனை விலக்கீட்டு உரிமையும் இல்லாமல் செய்யப்படும். எண்ணற்றவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள சூழலில் இன நல்லிணக்கத்திற்கு இது மிகவும் அவசியமானது.

ஆனால் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதை பலர் பொய்யான பரப்புரைகளைச் செய்து எதிர்க்கின்றனர். ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவது என்பது பாரதூரமான குற்றமாகும். அத்தகைய குற்றத்தைப் புரிந்துவிட்டு தண்டனை பெறுவதில் இருந்து தப்பிச் செல்வது இன்னும் மோசமானதாகும். எனவே, இந்த சட்டமூலம் கொண்டு வரப்படுவதை எதிர்ப்பவர்கள் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதற்குத் துணைபோகின்றார்கள்.

நாட்டின் பல பாகங்களிலும் ஏற்கனவே ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பதனால், அவர்களுடைய உறவுகள் அனுபவித்து வருகின்ற துன்பங்கள் வலிகளை முடிவின்றி தொடர்வதையும் இவர்கள் உறுதி செய்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளையும் துன்பங்களையும் அவர்கள் உணர மறுக்கின்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஆணைக்குழுக்கள், புதிய அரசியலமைப்புக்கான மக்கள் பிரதிநிதிகள் குழு, நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் செயலணி என்பன வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களுடைய உறவினர்களின் மன நிலையைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுக்களின் முன் தோன்றி சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட பலரும், ஆட்கள் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தமது சாட்சியங்களில் வலியுறுத்தியிருக்கின்றனர்.

எனவே, பல வருடங்களாக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல், இடம்பெற்று வருகின்ற ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்ற குற்றச் செயல் தொடர்பில் ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என இந்தப் பெண்கள் அரசாங்கத்தையும் நாட்டின் அரசியல் தலைவர்களையும் கோரியிருக்கின்றனர்.

மேலும் தாமதிக்காமல், ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதைக் குற்றச் செயலாக அறிவிக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.