Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாநாயக்க தேரர்களை சந்திக்க த.தே.கூ.தயார் முதலில் சிங்கள தலைமைகள் அவர்களை சந்தித்து தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் சம்பந்தன்

Featured Replies

மாநாயக்க தேரர்களை சந்திக்க த.தே.கூ.தயார்

03-c6bad5dec2c0407858bfeeca0183e567ca6ccdb2.jpg

 

முதலில் சிங்கள தலைமைகள் அவர்களை சந்தித்து தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் சம்பந்தன்

புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாடு களை மாநாயக்க தேரர்களுக்கு  தெ ளிவுபடுத்த வேண்டுமானால் அதற்கு முன்பதாக சிங்களத் தலைமைகள் மாநாயக்கர்களை சந்தித்து அவர்கள் தமது நிலைப்பாடுகளை வெ ளிப்படுத்த வேண்டும். அதன்பின்னர் நாம் தேரர்களை சந்தித்து தெ ளிவுபடுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முனைந்துள்ள புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைகள், எதிர்ப்புகள் மற்றும் மாநாயக்க தேரர்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், புதிய அரசியலமைப்பு விவகாரமானது தற்போது பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. சிங்களத் தலைவர்கள் அவர்களது நிலைப்பாடுகளை வெ ளிப்படுத்தியும் எதிர்ப்புக்களை தெரிவித்தும் கருத்துக்களையும் முன்வைத்தும் வருகின்றனர். அதேவகையில் அண்மைக்காலமாக மாநாயக்க தேரர்களும் தமது நிலைப்பாடுகளை வெ ளிப்படுத்தயுள்ளனர். ஆகையால் இவ் விவகாரமானது மிகுந்த சவால்களுக்குள் ஆட்பட்டுள்ளது.  

இத் தகைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநயக்க தேரர்களை சந்தித்து இவ் விவகாரம் தொடர்பில் நிலைப்பாட்டை வெ ளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனினும் நாட்டின் மூல சட்டத்துடன் சம்பந்தப்பட்டதான இவ் விடயம் தொடர்பில் சுமூகமானதும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதுமான நிலைமையொன்றை உருவாக்குவதற்கு முதலில் சிங்களத் தலைவர்களே மாநாயக்க தேரர்களை சந்தித்து தமது நிலைப்பாடுகள் தொடர்பில் வெ ளிப்படுத்த வேண்டும். ஏனெனில் தீர்வு எனும் பொறிமுறை பற்றி சிந்திக்கும்போது அது அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புக்களுடனும் ஆதரவுடனுமே சாத்தியப்பட வேண்டியிருக்கிறது.

எனவே சிங்களத் தலைமைகள் முதலில் மாநாயக்க தேரர்களை சந்தித்து தமது நிலைப்பாடுகளை வெ ளிப்படுத்தியததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவர்களை சந்திப்பதற்கும் தமது நிலைப்பாடுகளை வெ ளிப்படுத்துவதற்கும் தயாராக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.