Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிரிய நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாதம் கடந்தும் கடமைகளை பொறுபேற்கவில்லை

Featured Replies

ஆசிரிய நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாதம் கடந்தும் கடமைகளை பொறுபேற்கவில்லை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

SHOCK_CI.jpg

வடமாகாண கல்வி அமைச்சினால் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 38 பேர் ஒரு மாத காலத்தை கடந்ததும் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வடமாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்திற்கு 418 ஆசிரியர் வெற்றிடம் காணப்பட்டது. அதனை நிரப்புவதற்காக பத்திரிக்கை விளம்பரங்கள் ஊடாக கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டது.

குறித்த வெற்றிடங்களுக்கு வடமாகாணத்தில் 353 விண்ணப்பங்களே கிடைக்க பெற்று உள்ளன. அதனால் போட்டி பரீட்சை இல்லாமல், விண்ணப்பதாரிகள் கடந்த மே மாதம் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். குறித்த திகதிகளில் நேர்முக தேர்வுக்கு தோற்ற தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு , ஜூன் மாதம் 5ஆம் திகதியும் நேர்முக தேர்வு இடம்பெற்றது. 353 விண்ணப்பதாரிகளில் , 67 பேர் நேர்முக தேர்வுக்கு தோற்றவில்லை. 286 பேரே நேர்முக தேர்வுக்கு தோற்றி இருந்தனர்.

நேர்முக தேர்வில் தோற்றிய 286 பேரில் 67 பேருக்கு நியமனம் வழங்க முடியாத தன்மை காணப்பட்டது. சிலருக்கு நேர்முக தேர்வில் தோற்றும் வேளை சான்றிதழ்கள் இல்லாமையினால் அவர்களால் நேர்முக தேர்வில் நியமனம் பெறுவதற்கான தகுதியினை இழந்து இருந்தனர்.

நேர்குமுக தேர்வில் தகுதி காணப்பட்ட 219 பேருக்கான நியமன கடிதங்கள் ஜூன் மாதம் 10ஆம் திகதி வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரையும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்றுகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நியமன கடிதம் வழங்கப்பட்டு ஒரு மாதகாலம் கடந்த நிலையிலும் 38 பேர் இதுவரையில் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.

வேலை கோரி பட்டத்தாரிகள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களை நடாத்தி வரும் நிலையில் , வழங்கப்பட்ட வேலையினை பொறுபேற்கவிருப்பம் இல்லாமல் சிலர் இருப்பது கவலையளிப்பதாக கல்வி அதிகாரிகள் விசனம் தெரிவித்தனர்.

http://globaltamilnews.net/archives/32979

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.