Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதிகலாவால் ஜெயாவுக்கு நேர்ந்த கதி ரா (கூ) ஜாவால் தீபாவுக்கும் நேரலாம்

Featured Replies

சதிகலாவால் ஜெயாவுக்கு நேர்ந்த கதி ரா (கூ) ஜாவால் தீபாவுக்கும் நேரலாம்

 

ஜூன் 11 ஆம் திகதி போயஸ் தோட்டத்தில் தீபா ஆடிய கரகாட்டத்தை தமிழ்நாடே கண்டுகளித்த சமயத்தில், அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி? தீபாவோடு நெருங்கி நிற்கும் இந்த ராஜா யார் என்பதுதான்? இவருக்கும் தீபாவிற்கும் என்ன சம்பந்தம்? மனைவி முன்னிலையிலேயே கணவன் மாதவனை நாயே, பரதேசி என்று திட்டும் அளவிற்கு சக்தி படைத்தவரா இவர் என்பதுதான்!

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் தீபாவின் தோழனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த ராஜா, அப்பேரவையின் பொருளாளராக உள்ளார். தீபாவை இயக்குவது மட்டுமின்றி பேரவையின் அனைத்துச் செயல்பாடுகளையும் தற்போது இவர்தான் தீர்மானிக்கிறார். கடந்த பெப்ரவரி தொடக்கத்தில் தீபா வீடு அமைந்திருக்கும் சிவஞானம் தெரு தீபாவின் ஆதரவாளர்களால் நிரம்பி வழியும். திருவிழா போன்று கடை விரித்து ஆயிரக்கணக்கில் வியாபாரம் பார்த்தவர்கள் ஏராளம். ஆனால் இன்று ஒரு குல்பி ஐஸ் வண்டி கூட வராத தெருவாகி விட்டது.

தீபா மீது இருந்த ஈர்ப்பும் ஆதரவும் குறைந்ததற்கு முக்கிய காரணம் இந்த ராஜாதான் என்று குமுறுகிறார்கள் தீபாவின் ஆதரவாளர்கள். தவறான ஆலோசனைகளை அளித்து யாரும் தீபாவை நெருங்க முடியாதபடி தன் குடும்ப உறுப்பினர்களால் அரண் அமைத்துத் தீபாவைத் தடுப்பதாகப் புலம்பித் தள்ளுகின்றனர். இப்படி புலம்புபவர்களுள் தீபாவின் கணவர் மாதவனும் அடக்கம்!

யார் இந்த ராஜா? தீபாவிற்கு நெருக்கமானவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது ராஜாவிற்கு சொந்த ஊர் திருச்சி மாவட்டம் முசிறி. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவராகவும் அமைச்சராகவும் இருந்த முசிறிப்புத்தனின் அக்காள் மகன் என்று தன்னைக் கூறி கொள்பவர். இவரது குடும்பமே எண்ணெய் வியாபாரம் செய்கின்றனர். ஆயில் ராஜா என்றுதான் இவரை அழைப்பார்கள். கச்சா எண்ணெய் தொழிலோடு சில காம்ப்லெக்ஸ்களும் ராஜாவிற்குச் சொந்தமாக உள்ளனவாம்.

தீபக்கிற்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவ்வப்போது நண்பர்களோடு சேர்ந்து சிவஞானம் சாலை வீட்டிற்கு அருகிலிருக்கும் ஒரு பூங்காவில் இரவு நேரங்களில் மதுவருந்திக் குதூகலிப்பது வழக்கம். அப்போது அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்து நெருக்கமானவர்தான் ராஜா. ராஜாவும் தீபக்கும் ஒரே ஏரியா என்பதால் அடிக்கடி சந்தித்துச் சரக்கடிப்பார்கள். அப்படி வீட்டிற்கு வந்து போன போதுதான் தீபாவின் அறிமுகம் கிடைக்கிறது.

அத்தகைய (ஜெயா)ச் சந்திக்க முடியாமல் போயஸ் கார்டன் ரோட்டில் தீபா கலங்க நின்றபோது அவருக்கு ஆறுதல் அளிக்கச் சென்றார் ராஜா. பிறகுதான் இருவருக்கும் இடையே நட்பு நெருக்கமானது. பின் பொருளாதார ரீதியாக தீபாவுக்கு ராஜா உதவவே ராஜா இல்லாமல் எந்த முடிவையும் தீபா எடுப்பதில்லை என்ற நிலையும் ஏற்பட்டது. 2012 இல் மாதவனோடு தீபாவிற்கு திருமணமான பின்பும் ராஜாவிடம் ஆலோசனை கேட்டுத்தான் அவர் செயல்பட்டு வந்தார். பேரவையைத் தொடங்கிய சமயத்தில் தீபாவிற்கு ஆலோசனை அளிக்க எத்தனையோ சீனியர்கள் முன்வந்தார்கள். ஆனால் தன்னை மீறி தீபா செயல்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் யாரையும் தீபாவிடம் நெருங்கவிடாமல் தடுத்து இன்று தீபாவின் அரசியல் வீழ்ச்சிக்கு ராஜாவே காரணமாகியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதவாக்கில் ராஜாவிற்கு சுமார் 20 இலட்சம் ரூபாய் கடன் இருந்தது. ஆனால் இன்று அவர் கோடீஸ்வரர். பேரவையின் ஒவ்வொரு பதவிக்கும் ஒரு ரேட் நிர்ணயித்து இதுவரையும் பத்துக் கோடி ரூபாய்க்கும் மேல் சுருட்டி விட்டார். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பதவிக்காக முட்டை ராஜேந்திரன் என்பவரிடம் இருந்து கைப்பற்றிய காரைத்தான் ராஜா தற்போது பயன்படுத்துகிறார். தீபாவுக்கும் தீபக்கிற்கும் சில முதலீடுகள், கடை வாடகை என்ற வகையில் மாதந்தோறும் சில இலட்சங்கள் வருமானமாக வருகிறது. இதனையும் ராஜா குடும்பத்தினரே ஆட்டையைப் போடுகிறார்கள். தற்போது ராஜாவின் உறவினர்களான முருகன், சுரேஷ், பாலாஜி, விக்கி, ஷங்கர் ஆகியோர்தான் தீபாவைச் சுற்றிலும் இருக்கிறார்கள். இவர்களை மீறி தீபாவிடம் எந்தவொரு விஷயத்தையும் கொண்டு செல்ல முடியாது. ராஜாவின் முழுக் கட்டுப்பாட்டில்தான் தீபா இருக்கிறார். சசிகலா குடும்பத்தினரால் ஓரங்கட்டப்பட்ட இலட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களோ தீபாவை நம்பி வந்தோம். வீடு நிலங்களை விற்று அவருக்காக உழைத்தோம். அந்த நம்பிக்கையை எல்லாம் தீபா தவிடுபொடியாக்கி எங்களை வீதியில் நிறுத்திவிட்டார் என்று கொட்டித் தீர்த்தார்கள்.

குற்றச்சாட்டிற்கு உள்ளான ராஜாவிடம் பேசியபோது; 1992 முதல் தீபாவை எனக்குத் தெரியும். 2001 இல் தனது பாட்டி சந்தியா பெயரில் ஒரு புத்தகத்தைத் தீபா எழுதியபோது அதனை எடுத்துக் கொண்டு நானும் அவரும் தான் போயஸ் தோட்டத்திற்குச் சென்றோம். தீபா, தீபக், நான் மூவரும் ஒன்றாகத்தான் பள்ளியில் படித்தோம். பின்னர் நான் பாதியிலேயே படிப்பை விட்டு விட்டாலும் எங்களுக்கு இடையேயான நட்பு நீடித்தது. அவர்களது குடும்ப உறுப்பினர்களுள் ஒருவராகவே நானும் மாறிவிட்டேன்.

எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவையைத் தொடங்கச் சொன்னதும், அதில் என் மனைவி சரண்யாவின் பெயரைப் பொதுச் செயலாளராகப் போடச் சொன்னதும் தீபாதான். அப்போதிலிருந்தே மாதவனுக்கும் எனக்கும் மனக்கசப்பு துவங்கி விட்டது. தனிக்கட்சி தொடங்கப் போவதாக அவர் எங்களிடம் சொன்னபோது அவரோடு சண்டை போட்டேன். போயஸ் கார்டனில் அவரை நான் திட்டியதற்குக் காரணமும் அவர் நடந்து கொண்டவிதம்தான். பணத்துக்காக நான் என்றுமே அலைந்ததில்லை. நட்புக்காகத்தான் தீபாவோடு இருக்கிறேன். தீபாவின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் அவர் என்னைத்தான் முழுமையாக நம்புகிறார்.

நான்தான் அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறேனே தவிர எனது கட்டுப்பாட்டில் அவர் இல்லை. அவர் சொல்வதைத்தான் நான் கேட்கிறேன். தீபாவை ஒருமையில் பேசியதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். முதலில் அவர் எனக்குத் தோழி, பிறகுதான் கட்சித் தலைவர். அவரை நீ வா, போ என்று அழைக்க எனக்கு முழு உரிமையுள்ளது. தீபா எனக்கு அளிக்கும் முக்கியத்துவம் பிடிக்காமல் சிலர் வேண்டுமென்றே என் மீது களங்கம் கற்பிக்கிறார்கள் என்று விளக்கமளித்தார். பேரவையின் வீழ்ச்சிக்கு ராஜா மட்டுந்தான் காரணம் என்று கூறுவது அபத்தமானது. இதுவரையில் எந்த மக்கள் பிரச்சினைக்காக தீபா போராடி இருக்கிறார், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்லப் போவதாக உதார் விட்டவர், சென்னை எல்லையைக் கூட இன்னும் தாண்டவில்லை. ஆரம்பத்தில் அத்தையின் சொத்து எதுவும் வேண்டாம். அவர் பயன்படுத்திய பேனா மட்டும் போதும் என்று சொன்ன தீபா இன்று போயஸ் கார்டன் வீட்டை அரசுடமையாக்கச் சம்மதிக்க மாட்டேன் என்கிறார்.

எந்த ஒரு திடமான அரசியல் நிலைப்பாட்டையும் எடுக்கத் தெரியாமல் மக்களுக்காகத் தைரியமாகப் போராட முன்வராமல் இருக்கும் தீபா ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று சொல்வதற்கு உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும். அரசியல் தனக்குச் சரிப்பட்டு வராது என உணர்ந்தால் பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு எங்களை ஏமாற்றாமலாவது இருக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆதரவாளர்கள் எழுப்பும் கோரிக்கையாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-15#page-11

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.