Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைந்ததன் நோக்கங்கள் நிறைவேறாததால் விலகுகிறோம்

Featured Replies

இணைந்ததன் நோக்கங்கள் நிறைவேறாததால் விலகுகிறோம்

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவிப்பு

 
 

கேள்வி: நீங்­கள் கூட்­டாட்சி அரசை விட்டு வில­க­வுள்ளீர்கள் என்று கதை அடி­ப­டு­கி­றது. அது­பற்­றிய தங்­க­ளது கருத்­தென்ன?

பதில்: நாம் நீண்ட கால­மாக மகிந்த ராஜ­பக்­ச­வு­டன் இணைந்து அர­சி­யல் செய்­த­வர்­கள்.கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த தோல்­வி­ய­டைந்­த­தும், நாடா­ளு­மன்­றத் தேர்­தல் மூலம் அவரை தலைமை அமைச்­ச­ராக்­கி சுதந்­தி­ரக் கட்சி ஆட்­சியை அமைப்­ப­தற்கு நாம் முயற்­சித்­தோம்.அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

அதன் பின்­னர் அவரை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக ஆக்­கு­வ­தற்கு முயற்சி செய்­தோம். அந்த முயற்­சி­யும் வெற்றி அளிக்­க­வில்லை. அதற்­குப் பின்­னரே நாம் அர­சு­டன் இணைந்து செய­லாற்­று­வ­தற்கு முடி­வெ­டுத்­தோம்.

நாம் ஏற்­க­னவே ஆரம்­பித்த அபி­வி­ருத்தி வேலை­க­ளைத் தொடர்­வ­தற்­கா­கவே அர­சில் இணைந்து செயற்­பட முடி­வெ­டுத்­தோம்.அர­சில் இணைந்த நோக்­கங்கள் நிறை­வே­றா­ த­தால், அர­சி­லி­ருந்த விலகி எதிர்க்­கட்­சி­யில் இருப்­ப­தற்கு விரும்­புகி­றோம்.

கே: மேற்­கு­றிப்­பிட்ட பத­வி­க­ள் ஒன்­றி­லா­வது மகிந்­தவை அமர்த்­த­மு­டி­யா­மல் போன­தால்­தான், மகிந்­தவை விட்டு விட்டு அர­சு­டன் இணைந்­தி­ருக்­கின்­றீர்­கள் என்று சொல்­ல­லாமா?
ப:முத­லில் எமது தரப்­பின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களே அத்­த­கைய முடிவை எடுத்­த­னர்.

புத்­த­ளம் மாவட்ட மக்­கள் என்னை இரண்­டா­வது தட­வை­யாக நாடா­ளு­மன்­றத்­துக்கு அனுப்பி இருக்­கின்­ற­னர்.நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்சி வரி­சை­யில் இருப்பதா? அல்லது அர­சு­டன் இணைந்து மக்­க­ளுக்­குச் சேவை செய்­வதா? என்று முடி­வெ­டுக்க வேண்­டிய கட்­டத்­தில் நான் இருந்­தேன்.

மக்­க­ளி­டம் இது தொடர்­பில் நான் பேசி­ய­போது, அர­சு­டன் இணைந்து வேலை செய்­யு­மாறு கூறி­னார்­கள். அரசு விடுத்த அழைப்பை அடுத்தே அர­சு­டன் இணைந்­தோம். ஆனால், நாம் எதிர்­பார்த்த விதத்தில் இதுவரை எந்த அபி­வி­ருத்­தி­யும் இடம்­பெ­ற­வில்லை.

மகிந்த காலத்­தில் பசில் ராஜ­பக்ச எங்கள் மூல­மாக கிரா­ம­மட்­டத்­தில் மேற்­கொண்ட அபி­வி­ருத்­தி­கள் இப்­போது முற்­றாக நிறுத்­தப்­பட்­டு­ விட்­டன.இந்த அர­சின் ஒட்­டு­மொத்த செயற்­பா­டு­க­ளால் நாம் மன­மு­டைந்து போய் இருக்­கின்­றோம்.

மக்­கள் இந்த அரசை வெறுக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.பல பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­ப­ட­ வில்லை.அரச தலை­வ­ரைச் சந்­திக்­கின்ற ஒவ்­வொரு தட­வை­யும் நாம் எல்­லாத் துறை­க­ளி­லும் பொரு­ளா­தா­ரம் வீழ்ச்­சி­ய­டைந்­து­கொண்டு செல்­கின்­றது என்­ப­தைச் சுட்டிக் காட்டி இருக்­கின்­றோம்.

தேரர்­க­ளு­டன் தேவை­யற்ற பிரச்­சி­னை­கள்

ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.தம்­புள்ள விகாரை பிரச்­சினை இதற்கு நல்ல உதா­ர­ணம். அரசு அடுத்த தேர்­த­லில் வெல்­ல­மு­டி­யுமா என்ற கேள்வி எழு­கின்­றது.என்னை அர­சு­டன் இணை­யு­மாறு கூறிய மக்­கள், இப்­போது வில­கு­மாறு கூறுகின்­ற­னர். நாம் ஏற்­க­னவே ஆரம்­பித்த மக்­கள் நலத்­திட்­டங்­களை பூர்த்தி செய்­தற்­கா­கவே அர­சில் இணைந்­தோம்

கே:நீங்­கள் அர­சில் இருந்து வில­கு­தென உறு­தி­யா­கத் தீர்­மா­னித்­து­விட்­டீர்­களா?

ப:இந்த அர­சு­டன் நாங்­கள் இணைந்­த­தன் நோக்­கத்தை அடைய முடி­ய­வில்லை.இத­னால் இந்த அர­சில் தொடர்ந்­தும் இருப்­ப­தில் அர்த்­த­மில்லை. எதிர்க்­கட்­சி­யில் இருப்­பது மேல் என்று நாங்­கள் கரு­து­கி­றோம்.

அரச தலை­வ­ரைச் சந்­தித்து இது­பற்­றிப் பேசி­ய­போது டிெசம்­பர் மாதம் வரை பொறு­மை­யாக இருக்­கு­மாறு கூறி­னார்.

இந்­தத் தேசிய அர­சுக்கு முடிவு கட்ட வேண்­டும்.ஒன்று ஐக்­கிய தேசி­ யக் கட்­சி­யி­டம் ஆட்­சிப் பொறுப்பை ஒப்­ப­டைத்­து­விட வேண்­டும் அல்­லது மகிந்­தவைத் தலைமை அமைச்­ச­ராகக் கொண்டு சுதந்­தி­ரக் கட்சி ஆட்சி அமைக்க வேண்­டும்.

இந்­தக் கோரிக்­கையை நாம் அரச தலை­வ­ரி­டம் முன்­வைக்­கவுள்­ளோம்.இதை அவர் ஏற்­றால், அர­சு­டன் இருப்­போம்.இல்­லை­யேல் எதிர்க்­கட்­சி­யில் இருப்­போம். இரண்டு கட்­சி­க­ளும் சேர்ந்து அரசை நிர்­வ­கிப்­ப­தில் எவ­ருக்­கும் எந்­தப் பிர­யோ­ச­ன­மும் இல்லை.

மகிந்­த­வை­யும் மைத்­தி­ரி­பா­ல­வை­யும் இணைந்து செயற்­பட வைக்­கவே நாங்­கள் விரும்­பு­கி­றோம்

கே:மகிந்­தவை தலைமை அமைச்­ச­ராக்­கு­வ­தற்கு மைத்­திரி விரும்­பு­வாரா?

ப:மகிந்­த­வைத் தலைமை அமைச்­ச­ராக நிய­மித்து ஆட்­சி­யைக் கொண்டு செல்ல வேண்­டு­மென்­றால் , மகிந்­த­வுக்­கும் மைத்­தி­ரிக்­கும் இடை­யில் நல்­லு­ற­வொன்று ஏற்­பட வேண்­டும்.அதற்­கான வேலைத் திட்­டங்­கள் முன்­வைக்­கப்­பட வேண்­டும்.நாம் அரச தலை­வ­ருக்கு நிபந்­த­னை­கள் முன்­வைப்­ப­து ­போல், மைத்­திரி தரப்­பும் இது தொடர்­பில் நிபந்­த­னை­களை முன்­வைத்து எம்­மு­டன் பேச்சு நடத்­த­லாம்.

இந்த இரண்டு தலை­வர்­க­ளுக்­கி­டை­யில் நில­வும் முரண்­பா­டு­களை நீக்கி இவர்­களை ஒன்று சேர்க்க வேண்­டும் என்றே நாங்­கள் விரும்­பு­கின்­றோம்.மக்­க­ளின் விருப்­ப­மும் அதுவே.
மகிந்­தவை மைத்­திரி தலைமை அமைச்­ச­ ராக நிய­மித்­தால், அடுத்த நிமி­டமே மைத்­திரி -மக்­கள் அனை­வ­ரும் விரும்­பும் ஒரு தலை­வ­ராக மாறி­வி­டு­வார்.ஆனால் அவ்­வாறு செய்­தால் ராஜ­பக்ச குடும்­பத்­தால் தனக்கு ஆபத்து வந்­து­வி­டும் என்று மைத்­திரி அஞ்­சு­கி­றார்.

நாம் கூறு­வ­து­போல் மகிந்­தவை மைத்­திரி தலைமை அமைச்­ச­ராக நிய­ மித்­தால், அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் நாம் மைத்­தி­ரியை அரச தலை­வ­ராக்­கு­வோம். மகிந்த புதிய கட்சி ஒன்­றின் ஊடாக ஆட்­சி­யைப் பிடிப்­ப­தற்கு எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்ற சந்­தர்ப்­பம் இது.அதைத் தடுப்­ப­தென்­றால் அவர் தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட வேண்­டும். அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் ஐக்­கிய தேசி­யக் கட்சி மைத்­தி­ரியை ஆத­ரிக்­காது.

அவர்­கள் தனி வேட்­பா­ளரை நிறுத்­து­வார்­கள்.ஆகவே மைத்­திரி அணி­யும், மகிந்த அணி­யும் ஒன்­றி­ணை­யா­விட்­டால், அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் மைத்­தி­ரி­பால வெற்­றி­யீட்­டு­வது சிர­மமே.

மகிந்­த­வால் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யா­விட்­டா­லும், மாற்று ஏற்­பா­டாக கோத்­த­பாய ராஜ­பக்­சவை அவர்­கள் வேட்­பா­ள­ராக்­க­லாம்.

இது மைத்­தி­ரிக்­குத்­தான் சிக்­கலை ஏற்­ப­டுத்­தும்.இதை­யெல்­லாம் உணர்ந்து மைத்­திரி முடி­வெ­டுக்க வேண்­டும்.எமது நிபந்­த­னை­களை ஏற்க வேண்­டும். அவ­ரால் அது இய­லா­விட்­டால், இந்த அரசு தொடர்ந்து ஆட்­சியை நடத்­தட்­டும். எதிர்க்­கட்­சி­யில் அமர்­வ­தற்கு எமக்­குச் சந்­தர்ப்­பத்தை வழங்­குங்­கள்.இல்­லா­விட்­டால் எங்­க­ளால் மக்­கள் முன்­னி­லை­யில் செல்ல முடி­யாது.

கே:நீங்­கள் [18பேர்] மகிந்­த­வைச் சந்­தித்­தது உண்­மையா?

ப:ஆம்; மகிந்தவை நாம் சந்தித்தது உண்மையே. ஆனால் 18 பேர் அல்ல.நானும் டி.பி.ஏக்­க­நா­ய­க­வும், துலிப் விஜ­ய­சே­க­ர­வுமே சந்­தித்­தோம்.இது திருட்­டுத்­த­ன­ மாக இடம்­பெ­ற­வில்லை.அவ­ரது நிலைப்­பாடு-, அவ­ரது வேலைத் திட்­டம் தொடர்­பில் அறிய வேண்­டிய தேவை எமக்கு இருந்தது.

நாம் 18 பேர் இணை­வ­தன் ஊடாக ஆட்­சி­யைக் கைப்­பற்­றும் திட்­டம் அவ­ரி­டம் உண்டா அல்­லது இப்­ப­டியே எதிர்க்­கட்­சி­யில் இருந்­து­விட்டு அடுத்த தேர்­த­லில் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றும் திட்­டத்­தில் இருக்­கின்­றாரா என்று அறி­யவே அவ­ரைச் சந்­தித்­தோம்.

மைத்­தி­ரி­கூட அவ­ரைச் சந்­திக்க வேண்­டாம் என்று எமக்கு ஒரு­போ­தும் சொல்­ல­வில்லை. மகிந்­த­வை­யும் மைத்­தி­ரி­யை­யும் ஒன்­றி­ணைக்க இய­லா­விட்­டால், புதிய கட்­சி­யொன்றை உரு­வாக்­கு­வதே மாற்­றீடு.

கே:உங்­க­ளது நிபந்­த­னை­களை அரச தலை­வர் ஏற்­கா­விட்­டால், நீங்­கள் அரசை விட்டு வில­கு­வது உறுதி என்று சொல்­கி­றீர்­கள். அப்­ப­டி­யென்­றால் மகிந்த அணி­யு­டன் இணை­வீர்­களா அல்­லது தனித்து இயங்­கு­வீர்­களா?

ப:எதிர்க்­கட்சி என்று வரும்­போது மகிந்த அணி­யு­டன்­தான் இணை­வோம்.சுயா­தீ­ன­மா­கச் செயற்­ப­டு­வ­திலோ அல்­லது புதிய கட்­சியொன்றை உரு­வாக்­கு­வ­திலோ எனக்கு உடன்­பாடு இல்லை.சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஊடா­கவே ஆட்­சி­யைப் பிடிக்க வேண்­டும் என்­பதே எனது விருப்­பம்.அதற்­கா­கவே நாங்­கள் மைத்­திரி தரப்­பை­யும் மகிந்த தரப்­பை­யும் ஒன்­றி­ணைப்­ப­தற்­குப் போரா­டு­கி­றோம்.

ஆனால்,கடைசி வரைக்­கும் இந்­த இரு கட்­சிகளையும் ஒன்­றி­ணைய வைக்க முடி­ய­வில்­லை­யென்­றால், புதிய கட்­சி­யொன்றை உரு­வாக்­கு­வ­தைத் தவிர வேறு வழி­யில்லை.சுதந்­தி­ரக் கட்­சியை ஒற்­று­மைப்­ப­டுத்த முடி­யாத இறு­தித் தரு­ணத்­தில் மாற்­றீ­டா­கவே புதிய கட்சி என்ற முடிவு இருக்க முடி­யும்.

கே:உங்­க­ளது நிபந்­த­னை­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டா­விட்­டால் நீங்­கள் வில­கு­வ­தற்கு டிெசம்­பர் வரை பார்த்­துக்­கொண்டு இருப்­பீர்­களா?

ப:இல்லை.நான் அதற்­கு­ முன்னர் வௌி யே­றி­வி­டு­வேன். எவர் கூட வந்­தா­லும் சரி, வரா­விட்­டா­லும் சரி நான் தனி­யே­யா­வது வில­கிச்­சென்று விடு­வேன்.

கே:நீங்­கள் மகிந்­த­வை­யும் மைத்­தி­ரி­யை­யும் ஒற்­று­மைப்­ப­டுத்­து­வ­தற்கு முயற்சி செய்­கி­றீர்­கள்.ஆனால்,சுதந்­தி­ரக் கட்­சி­யின் செய­லா­ளர் துமிந்த திஸா­நா­யக்க, இனி­வ­ரும் தேர்­தல்­க­ளில் மகிந்­த­வுக்கு கட்­சி­யால் வேட்­பா­ளர் நிய­ம­னம் வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்று சொல்­கி­றாரே?

ப:உண்­மை­யில் இது ஒரு முட்­டாள்த் த­ன­மான கூற்று.மகிந்­த­வுக்கு வேட்­பா­ளர் நிய­ம­னம் வழங்­கா­விட்­டால் ஜீ.எல்.பீரி­ஸால் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கும் புதிய கட்­சி­யின் ஊடாக அவர் போட்­டி­யி­டு­வார்.அது சுதந்­தி­ரக் கட்­சி­யையே பாதிக்­கும்.

கட்­சி­யின் செய­லா­ளர் என்ற அப்­ப­டை­யில் அவர் கட்­சியை எவ்­வாறு வெற்­றிப் பாதை­யில் இட்­டுச் செல்ல முடி­யும் என்றே யோசிக்க வேண்­டும்.அப்­படி யோசித்­தால் அதற்கு ஒரே முடிவு மீண்­டும் மகிந்­தவை கட்­சியில் இணைப்­ப­து­தான்.

அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த தோல்­வி­ய­டைந்­த­தும், அவர் அர­சி­ய­லில் இருந்து ஓய்வு பெறு­வ­தற்கே திட்­ட­ மிட்­டி­ருந்­தார்.ஆனால்,மக்­கள் அவரை விட­வில்லை.இந்த அரசு ஆரம்­பம் முதலே பிழை­யான பாதை­யில் செல்­லத் தொடங்­கி­ய­தால், மக்­க­ளின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க இந்த நாட்­டைக் காப்­பாற்­று­வ­தற்­காக அவர் மீண்­டும் அர­சி­ய­லில் இறங்க வேண்­டி­யேற்­பட்­டது.

இந்த அரசு 2020ஆம் ஆண்டு வரை நீடிக்­கும் என உறு­தி­கூற முடி­யாது

கே:இந்த அர­சின் ஆயுட்காலம் எவ்­வ­ளவுவரை நீடிக்கும் என்று நீங்­கள் நினைக்­கி­றீர்­கள்?

ப:அரசு அர­சி­யல் அமைப்­பால் தப்­பி­யுள்­ளது.நான்­கரை வரு­டங்­க­ளுக்­குப் பிற­கு­தான் தேர்­தல் நடத்த முடி­யும் என்று 19ஆவது திருத்­தச் சட்­டம் சொல்­வ­தால், அரசு 2020 வரை­யும் பய­ணிக்­கும்.

ஆனால்,நாடா­ளு­மன்­றுக்­குள் கட்­சித் தாவல்­கள் இடம்­பெற்­றால் அர­சின் கதை முடிந்­து­வி­டும்.இன்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்கூட, இந்த ஆட்சி மாற வேண்­டும் என்றே விரும்­பு­ கின்­ற­னர்.ஆட்சி மாற்­றத்­துக்­குப் பெரி­தும் பங்­க­ளிப்­புச் செய்த கிழக்கு மாகாண முஸ்­லிம் அர­சி­யல்­வா­தி­கள்­கூட இந்த அரசை வெறுக்­கின்­ற­னர்.அந்த அள­வுக்கு நிலைமை மாறி­விட்­டது.

அர­சில் இருந்து நாங்­கள் வில­கு­வ­தால் ஆட்சி மாற்­றம் ஏற்­ப­டா­விட்­டா­லும், எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும்; எதிர்க்­கட்­சி­யின் பலம் கூடும்.இது இறு­தி­யில் ஆட்சி மாற்­றத்­துக்கு கார­ண­மாக அமை­ய­லாம்.

கே:எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் மாதத்­தில் நீங்­கள் வெளி­யே­றக்­கூ­டுமா?

ப:நாங்­கள் அனை­வ­ரும் செப்­டம்­ப­ருக்­குள் வெளி­யேற வேண்­டு­மென்­று­தான் விரும்­பு­கி­றோம் .இருப்­பி­னும்,நான் எப்­ப­டி­யும் தனித்­தா­வது செப்ரெம்பருக்குள் ஒரு முடிவை எடுத்­து­வி­டு­வேன், என்­றார்.

http://uthayandaily.com/story/14284.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.