Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாசிய வட்டகை ஆதிக்கப் போட்டியில் இந்தியாவும் சீனாவும்

Featured Replies

தென்னாசிய வட்டகை ஆதிக்கப் போட்டியில் இந்தியாவும் சீனாவும்

 
தென்னாசிய வட்டகை ஆதிக்கப் போட்டியில் இந்தியாவும்  சீனாவும்
 

1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் திக­திய நடா­ளு­மன்ற அமர்வு கடும் வாதப் பிர­தி­வா­தங் கள் மத்­தி­யில் சூடு பிடித்திருந் தது. அந்த வேளைய அரச தலை­வர் ஜே.ஆரின் தலைமை யிலான ஐ.தே.கட்சி அரசு, இந்­தி­யா­வு­டன் செய்து கொள்ள விருந்த ஒப்­பந்­தம் குறித்த விவ ரங்­களை நாடா­ளு­மன்­றத்­துக்­குத் தெரி­விக்க வேண்­டு­மென எதிர்க்­கட்­சி­யி­னர் சபை­யில் கடும் வற்­பு­றுத்­தல் மேற்­கொண்­ட­னர். நில­மை­யைச் சமா­ளிக்­கும் நோக்­கில் அரசு நாடா­ளு­மன்ற அமர்வை ஓகஸ்ட் 18 ஆம் திக­தி­வரை ஒத்­தி­ வைத்து எதிர்க்­கட்­சி­யி­ன­ரது எதிர்ப்­பைத் தற்­கா­லி­க­மாக முறி­ய­டித்­தது.

நான்கு நாள்­கள் கழித்து ஜுலை 28 ஆம் திகதி பிர­பல பௌத்த தேரர்­கள் மற்­றும் எதிர்க்­கட்­சித் தலைவி சிறி­மாவோ தலை­மை­யி­லான எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தலை­மை­யில் சுமார் 20 ஆயி­ரம் பேர் வரை­யி­லான சிங்­கள மக்­கள் கோட்டை அர­ச­ம­ரச் சந்­தி­யில் இந்­திய இலங்கை ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து அறப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­த­னர்.

அவர்­களை அங்­கி­ருந்து விரட்­டி­ ய­டிப்­ப­தற்­காக பொலி­ஸார் மேற்­கொண்ட துப்­பாக்­கிச் சூட்­டில் 21 பொது மக்­கள் அந்த இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர். அதை­ய­டுத்து நாடு­பூ­ரா­க­வும் தலை­தூக்­கிய குழப்­பத்­தில் பொலி­ஸார் மற்­றும் இரா­ணு­வத்­தி­ன­ரின் துப்­பாக்­கிப் பிர­யோ­கத்­தில் 132 பொது­மக்­கள் உயி­ரி­ழக்க நேர்ந்­தது.

குறித்த ஒப்­பந்­தத்­துக்­கான எதிர்ப்­புத் தொடர்­பாக அர­ச­த­ரப்­பின் சார்­பில் பதி­ல­ளித்த அந்த வேளைய நிதி அமைச்­சர் றொனி டிமெல், குறித்த இந்­திய இலங்கை ஒப்­பந்­தம் நாட்­டின் இறை­மைக்கு எந்த விதத்­தி­லும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தாது என உறு­தி­ய­ளித்­தார். இதற்கு அடுத்த நாள் அதா­வது 1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29 ஆம் திக­தி­யன்று, இந்­திய –இலங்கை ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

குறித்த ஒப்­பந்­தம் நாட்­டின் இறை­மைக்கு எந்த வகை­யி­லும் பாதிப்­பாக அமை­யாது எனத் தெரி­வித்த ரொனி டி – மெல் கூட குறித்த ஒப்­பந்­தம் குறித்து வாசித்­த­றிந்­தி­ருப்­பாரோ தெரி­யாது. அந்த வேளை­யில் இந்­திய உயர் ஸ்தானி­க­ரா­லய அர­சி­யல் செய­லா­ளர் ஹர்­தீப் சின் பூரி இந்­திய அர­சின் தேவைக்கு ஏற்ற விதத்­தில் தயா­ரித்த அந்த ஒப்­பந்­தம் இலங்­கைக்­குப் பாதிப்பு எத­னை­யும் ஏற்­ப­டுத்­தாது எனத் தெரி­விக்­கப்­பட்ட கருத்து கேலிக்கு உரி­ய­தொன்றே.

குறித்த ஒப்­பந்­தம் இலங்­கை­யின் இறை­மைக்­குப் பாதிப் பா­ன­தொன்று என்­ப­தைத் தெளி­வா­கக் கணிப்­பிட்­டி­ருந்த அந்த வேளை­யில் இலங்­கை­யில் இந்­திய அர­சின் தூது­வ­ரா­கச் செயற்­பட்ட ஜே. என்.டிக்­சிற், வெளி­நாட்­டுத் தலை­வர்­க­ளுக்­கான மரி­யாதை அணிவ­குப்­பில் கலந்து கொள்­வ­தைத் தவிர்க்­கு­மாறு இந்­தி­யத் தலைமை அமைச்­சர் ராஜீவ் காந்­திக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்­தார்.

இருப்­பி­னும் இலங்­கைக்­கான இந்­தி­யத்­தூ­து­வ­ரது அந்த ஆலோ ­ச­னை­யைப் புறக்­க­ணித்து மரி­யாதை அணி­வ­குப்பை ஏற்­றுக் கொண்ட இந்­தி­யத் தலைமை அமைச்­சர் ராஜிவ் காந்தி அணி­வ­குப்­பில் ஒரு இரா­ணுவ வீர­ரா­கக் கலந்து கொண்ட விஜித ரோகண என்ற சிங்­கள இரா­ணுவ வீர­ரது ‘ரைபிள்’ தாக்­கு­த­லுக்கு உட்­பட நேர்ந்­தது.

இலங்­கை­யில் கால்­ப­தித்த இந்­திய இரா­ணு­வம்

இந்­திய இலங்கை ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­ட­தை­ய­டுத்து உட­ன­டி­யா­கவே இந்­திய அமை ­தி­ காக்­கும் படை­யி­னர் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட இந்­திய இரா­ணு­வத்­தி­னர் பலாலி வானூர்தி நிலை­யத்­தில் தரை­யி­றக்­கும்­வரை பலா­லி­யில் கட­மை­யி­லி­ருந்த இலங்கை அர­சின் இரா­ணு­வக் கட்­ட­ளை­யி­டும் அதிகாாி அது குறித்து அறிந்­தி­ருக்­க­வில்லை.

இந்­திய அமைதி காக்­கும் படை­யி­னரை மாலை அணி­வித்து வர­வேற்ற எம்­ம­வர்­க­ளில் பலர், ஓரிரு வாரங்­க­ளில் நிலை­மை­யின் தீவிர பாதிப்­புக்­கு­றித்­துப் புரிந்து கொண்­ட­னர். இந்­திய அமைதி காக்­கும் படை­யி­ன­ரது பிர­சன்­னத்தை விரும்­பாத விடு­த­லைப் புலி­கள் இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக ஒழிந்­தி­ருந்து தாக்­கும் செயற்­பாட்டை முன்­னெ­டுக்க முயன்­ற­தால் நாட்­டின் தமி­ழர் பிர­தே­சம் குருதி ஆறு ஓடும் பிர­தே­ச­மாக மாறும் நிலை உரு­வா­கி­யது. வடக்­கும் தெற்­கும் பற்­றி­யெ­ரி­யும் நிலை ஏற்­பட்­டது.

இந்­திய இலங்கை ஒப்­பந்­தம் கைச்­சாத்­தான வேளை­யில் தலைமை அமைச்­சர் பிரே­ம­தாச நாட்­டில் இருக்­க­வில்லை. அத்­தோடு அர­சில் அமைச்­ச­ரா­கச் செயற்­பட்ட லலித் அது­லத் முதலி ஒப்­பந்த விட­யத்­தில் தமது வாயை இறுக மூடிக் கொண்­டார். குறித்த ஒப்­பந்­தத்­துக்கு ஆத­ர­வா­கக் குரல் கொடுத்­த­வர் அமைச்­சர் காமினி திச­நா­யக மட்­டுமே. கடை­சி­யில் ஒப்­பந்­தத்தை நிறை­வேற்றி முடித்­த­தோடு இலங்கை அரசு தான் நினைத்த விதத்­தி­லேயே அதனை நடை­மு­றைப்­ப­டுத்­த­வும் செய்­தது.

பின்­னர் ஒரு சந்­தர்ப்­பத்­தில் இந்­திய அமை­தி­காக்­கும் படை­யி­னர் இலங்­கை­யில் செயற்­பட்ட விதம் குறித்து இந்­திய போர் விமர்­ச­க­ரான ஆர்.ஹரி­க­ரன் கருத்து வெளி­யி­டு­கை­யில், இந்­தி­யா­வின் பலம் குறித்து பங்­க­ளா­தே­ஷில் இந்­தியா பெற்ற வெற்­றியை வேறு எத­னு­ட­னும் ஒப்­பிட இய­லாது. கிழக்கு பாகிஸ்­தா­னில் இந்­திய இரா­ணு­வம் பாகிஸ்­தான் இரா­ணு­வத்­து­டன் கடும் போரில் ஈடு­பட நேர்ந்­தது.

இந்­தியா பாகிஸ்­தா­னு­டன் மோத வேண்டி ஏற்­பட்­டமை வங்­காளி இனத்­த­வர்­க­ளுக்கு நாடொன்றை உரு­வாக்­கிக் கொடுப்­ப­தற்கே ஆகும். அதே­போன்று இலங்­கை­யில் தமிழ் மக்­க­ளுக்­கா­கவே அமை­திப்­படை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்­தது. இறு­தி­யில் குழப்­பம் நிறைந்த நாடாக இலங்கை ஆன­மையே கண்ட மிச்­ச­மா­கும் எனத் தெரிவித்தி ருந்தார்.

வர­லாற்­றுப் பெரும்
திருப்­பம் அரங்­கேற்­றம்

இந்­திய இலங்கை ஒப்­பந்­தம் இடம்­பெற்று 30 ஆண்­டு­கள் காலம் கழிந்த நிலை­யில், தற்போது வர­லாற்­றில் முக்­கிய திருப்­ப ­மொன்று ஏற்­பட்­டுள்­ளது. இலங்கை இந்­திய ஒப்­பந்­தம் கைச்­சாத்­தா­ன­தன் முப்­ப­தா­வது ஆண்­டுப் பூர்த்­தித் தினத்­தன்று, சீன – இலங்கை ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இவற்­றில் சம்­பந்­தப்­பட்ட முக்­கிய புள்­ளி­க­ளில்­கூட, ஒரு ஒற்­றுமை இருந்­துள்­ளது. அன்று ஜே.ஆர். இலங்­கை­யின் அரச தலை­வ­ராக இருந்­தார். இன்று அவ­ரது மரு­ம­கன் முறையான ரணில் விக்­கி­ரம சிங்க தலைமை அமைச்­ச­ரா­கச் செயற்­ப­டு­கின்­றார்.

அன்று தலைமை அமைச்­சர் பிரே­ம­தாச அர­சுத்­த­லை­வ­ரான ஜே.ஆரின் இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்­துக்கு ஆத­ர­வ­ளிக்­காது ஒதுங்­கிக் கொண்­டார். அதே­போன்ற இன்­றைய அர­ச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், இலங்கை – சீன ஒப்­பந்­தத்­துக்கு முழு ஆத­ரவு வழங்­கு­வ­தா­கக் கூறிக் கொள்ள இய­ல­வில்லை. அன்று பதில் பாது­காப்பு அமைச்­சர் லலித் அது­லத்­மு­தலி இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தை ஆத­ரிக்­க­வில்லை. அதே­போன்று இன்று துறை­மு­கங்­கள் தொடர்­பான அமைச்­சர் மகிந்த சம­ர­சிங்க இந்­திய சீன ஒப்­பந்­தத்­துக்கு முழு ஆத­ரவு வழங்­கு­வ­தா­கக் குறிப்பிட­மு­டி­ய­வில்லை.

அன்று இலங்கை இந்­திய ஒப்­பந்­தம் கைச்­சாத்­தான தினத்­துக்கு முந்­திய தினம் நாடா­ளு­மன்­றத்­தில் கூச்­ச­லும் குழப்­ப­மும் இடம்­பெற்­றன. இன்­றும் நிலைமை அதே­தான். அன்­றும் இன்­றும் நாடா­ளு­மன்­றத்­தில் பெரும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­ய­வர் தினேஸ் குண­வர்த்­த­னவே. அன்று போல் இன்­றும் மேற்­கு­றித்த ஒப்­பந்­தங்­கள் குறித்து நாட்டு மக்­கள் எத­னை­யும் தெளி­வாக அறிந்து கொண்­டி­ருக்­க­வில்லை. அன்று ஒப்­பந்­தம் இந்­தி­யா­வுக்­குச் சாத­க­மான விதத்­தில் அமைந்­தி­ருந்­த­து­டன் தற்­போ­தைய ஒப்­பந்­த­மும் சீனா­வுக்­குப் சாத­க­மா­ன­தொன்­றா­கவே உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இன்­றைய கூட்­டாட்சி அர­சின் வரவு செல­வுத்­திட்­டத்­தின்­படி அர­சுக்கு முக்­கி­யத்­து­வ­மற்ற நிறு­வ­னங்­கள் முதல், கடும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த நுரைச் சோலை அனல்­மின் நிலை­யம் போன்ற பெரிய நிறு­வ­னங்­க­ளை­யும் வெளி­நா­டு­க­ளுக்கு குத்­த­கைக்கு விடவோ விற்­பனை செய்­யவோ அரசு திட்­ட­மிட்டு வரு­வ­தா­கத் தெரிய வரு­கின்­றது. அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­கா­ரம் இதில் ஒரு ஆரம்­பம் மட்­டுமே.

அடுத்­த­தாக மத்­தள வானூர்தி நிலை­யம் வெளி­நா­டொன்­றுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தலைமை அமைச்­சர் இப்­போதே பச்­சைக் கொடி காட்­டி­யுள்­ளார். அதேபோன்று கொழும்பு கட்­டு­நா­யக்க அதி­வே­கப்­பாதை, தெற்கு அதி­வே­கப் பாதை, மின்­சா­ர­சபை என்­ப­வற்­றைத் தனி­யார் மயப்­ப­டுத்த அல்­லது வெளி­நா­டு­க­ளுக்­குக் குத்­த­கைக்கு வழங்­க­வும் அரசு தயா­ராகி வரு­வ­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

இந்த விதம் அரச நிறு­வ­னங்­களை வெளி­நா­டு­க­ளுக்­குக் குத்­த­கைக்கு வழங்­கு­வதை நியா­யப்­ப­டுத்த அவை நட்­டத்­தில் இயங்­கு­வ­தா­கக் காட்­டிக் கொள்ள அரசு நட­வ­டிக்கை மேற்­கொள்ள முயல்­வ­தா­கத் தோன்­று­கி­றது. அம்­பாந்­தோட்டை துறை­ மு­கத்­துக்கு வரும் கப்­பல்­க­ளுக்கு எரி­பொ­ருள் விநி­யோ­கத்தை அரசு நிறுத்­திக் கொண்­ட­மைக்­கான கார­ணம் இதுவே.

முன்­ன­ரெல்­லாம் தென்­னா­சிய வட்­ட­கை­யின் பல­வான் இந்­தி­யாவே. அத­னால் இந்­தியா தனக்கு விருப்­ப­மான விதத்­தி­லேயே செயற்­பட்டு வந்­தது. இன்று ஆசிய வட்­ட­கை­யின் பல­வான் சீனாவே. எனவே இன்று சீனா­வும் தனக்கு விருப்­ப­மான விதத்­தி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றது. முன்­ன­ ரெல்­லாம் இந்­திய ஆதிக்க முயற்சி குறித்து விமர்­ச­னங்­கள் வெளி­யி­டப்­பட்­டன. அது இன்று சீனா­வின் தலை­யில் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றது.

தென்­னா­சிய வட்­ட­கை­யின்
பொலி­ஸ்கா­ர­னாக
ஆக முய­லும் சீனா

SL-CHINA-PM-2.jpg

தற்­போது சீனா தாய்­லாந்­தி­னூ­டாக சுரங்­கப் பாதை அமைத்து வரு­வ­தன் நோக்­கம், எதிர்­கா­லத்­தில் அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்­தைத் தமது எல்­லைக்­குள் கொண்டு வர­வி­ருப்­பதே எனப் பலர் கூறி­வ­ரு­கின்­ற­னர். அவ்­வாறு இடம்­பெ­று­மா­னால், கொழும்­புத் துறை­மு­கத்­தி­னூ­டான அர­சின் வரு­மா­னம் பெரு­ம­ள­வில் குறை­வ­டை­யும். சீனா, அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்­தைத் தாம் கைப்­பற்றி உலக வர்த்­த­கத்­து­றை­யைத் தனது கைக­ளில் எடுத்­துக் கொள்­ளும். மேற்­கு­றிப்­பிட்ட வகை­யி­லான கதை தற்­போது பர­வ­லாக உலா வரு­கி­றது.

அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்தை முன்­னைய அரசு நிர்­மா­ணித்த போது ஐ.தே.கட்­சிக்­கா­ரர்­கள் ‘‘அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்­தில் பெரிய கற்­பா­றை­யொன்று இருக்­கி­றது; வரும் எனக்­கூ­றிய கப்­பல்­கள் எங்கே? உல­கி­லேயே பெரிய நீச்­சல் தடா­கம் போன்ற வார்த்­தை­க­ளால் கேலி செய்­தமை பல­ரும் அறிந்­த­தொன்றே. ஆனால் இந்­தக் கூட்­ட­ரசு பத­விக்கு வந்து அம்­பாந்­தோட்­டை் து­றை­ மு­கத்தை சீனா­வுக்­குக் குத்­த­கைக்கு வழங்­கி­யுள்­ள­தல்­லவா? அதே­போன்று கொழும்­புத்­து­றை­மு­க­ந­கர்த் திட்­ட­மும் முன்­னர் எதிர்த்­த­ரப்­பி­ன­ரது விமர்­ச­னங்­க­ ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தது. ஆனால் கூட்­டாட்சி அரசு பத­வி­யேற்­ற­தும் அந்­தத் திட்­டத்தை அதே விதத்­தில் முன்­னெ­டுக்க முன்­வந்­தது.

இந்­தி­யா­வால் 2011 ஆம் ஆண்­டில் புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட வல்­ல­ப­டம் என்ற துறை­மு­கம் இரண்டு ஆண்­டு­கள் கால­மாக கப்­பல்­கள் எது­வும் செல்­லா­த­தால் பெரும் நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ஆனால் 2014 ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் மட்­டும் அம்பாந் தோட்டை மாகம்­புர துறை­மு­கத்­துக்கு வந்த கப்­பல்­கள் 204 ஆகும். அந்த ஆண்­டில் அந்­தத் துறை­மு­கம் 5 ஆயி­ரத்து 396 மில்­லி­யன் ரூபாவை அர­சுக்கு இலா­ப­மாக ஈட்­டிக் கொடுத்­தி­ருந்­தது.

கொழும்­புத்­து­றை­மு­கம் பன்­னாட்டு கடல் மார்க்­கத்­தில் வெகு­தூ­ரத்­தில் இருப்­ப­து­டன் கிழக்­குத் திசை­யி­லி­ருந்து பய­ணிக்­கும் கப்­பல்­கள் இலங்­கைக்கு ஏதா­வது பொருள் வழங்­கல்­களை மேற்­கொள்­வ­தற்கு கொழும்­புத்­து­றை­மு­கத்­துக்கு வரு­வ­தற்கு அதிக செல­வீ­னத்தை எதிர்­கொள்ள நேர்­கி­றது. திரு­கோ­ண­ம­லைத் துறை­மு­கத்தை எடுத்­துக் கொண்­டால், மேற்­குத் திசை­யி­லி­ருந்து பய­ணிக்­கும் கப்­பல்­கள் திரு­கோண மலைக்கு வர­வேண்­டு­மா­னால் நீண்ட தூரம் பய­ணித்­த­தாக வேண்­டும்.

அந்த வகை­யில் அமை­வி­டம் தொடர்­பில் பன்னாட்டு கடல் மார்க்­கத்­தில் பய­ணிக்­கும் கப்­பல்­க­ளுக்கு இலங்­கை­யலி வச­தி­யான துறை­மு­க­மாக அமை­வது அம்­பாந்­தோட்டை துறை­மு­கமே. அந்த வகை­யில் தற்­போது எதி­ர­ணித்­த­ரப்­பின் குற்­றச்­சாட்­டின்­படி இலங்­கை­யின் மிகப்­பெ­ரும் சொத்து சீனாவுக்கு ஏல­மி­டப்­பட்­டுள்­ளது.
இதில் ஆச்­ச­ரி­யம் என்­ன­வெ­னில் வர­லாற்­றில் இடம்­பெற்ற சம்­ப­வங்­கள் மீண்­டும் அதே விதத்­தில் இடம்­பெ­று­வ­து­தான்.

மகிந்த உரு­வாக்­கி­யதை
மைத்­திரி திறந்து வைக்க
ரணிலோ சீனா­வுக்­கு
தாரை வார்த்­தார்

மகிந்த துறை­மு­கத்தை உரு­வாக்கி வைத்­தார்; மைத்­திரி திறந்து வைத்­தார்; ரணிலோ அத­னைச் சீனா­வுக்­குத் தாரை வார்த்து விட்­டுள்­ளார். மேற்­கு­றித்த குறிப்பு இந்த நாள்­க­ளில் சமூக வலைத்­த­ளங்­க­ளில் உலா வரு­கின்­றன.
இந்தக் கூட்­டாட்சி அர­சின் ஏலம் போடும் போக்கு, இத்­தோடு முடிந்து விட­வில்லை. அடுத்து மத்­தள வானூர்தி நிலை­யம், அதற்­க­டுத்து சூரிய வெவ விளை­யாட்டு மைதா­னம் அதற்­குப் பின்­னர் நாட்­டைச் சுற்­றி­யுள்ள கடல் ஏலம் விடப்­ப­டும், அது­வும் நிறை­வே­றி­னால் நாட்­டின் மனி­தர்­கள் தான் ஏலம் விடப்­ப­டு­வர்.

கூட்­டாட்சி அர­சின் போக்­குக் குறித்த மனக் கொதிப்­பில் எவரோ ஒரு­வர் வெளி­யிட்ட கருத்தே மேற்­கண்ட வாக்­கி­யங்­க­ளா­கும். இந்­திய மாக­ட­லின் பெரிய அண்­ண­னாக ஆவ­தற்கு முய­லும் சீனா இலங்­கை­யின் அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்தை குத்தகைக்கு எடுத்­த­தைப் பார்த்­துக் கொண்டு இந்­தியா மௌன­மாய் இருக்­கு­மென எவ­ரா­வது எண்­ணி­னால் அதை­விட வேடிக்கை வேறு எது­வும் இருக்­க­மாட்­டாது.

அப்­ப­டி­யா­னால் இந்­தி­யா­வுக்கு நாம் செலுத்த வேண்­டிய நட்­ட­ஈடு ஏதா­வது உண்டா என இன்­ன­மும் கூற இய­லா­துள்­ளது. ஒரு சிலர் கூறு­கி­றார்­கள், இலங்கை திரு­கோ­ண­மலை எண்­ணெய்க் குதத் தொகு­தியை இந்­தி­யா­வுக்கு வழங்க வேண்டி ஏற்­ப­டக்­கூ­டு­மென்று. மற்­றொரு புறம் சேது சமுத்­தி­ரத்­திட்­டம் அரங்­குக்கு வரா­தென எவ­ரா­லும் உறு­தி­யா­கக் கூற இய­லாது; போக் ஜல­சந்­தி­யூ­டாக கப்­பல் போக்­கு­வ­ரத்து மேற்­கொள்­ளத்­தக்க வகை­யில் அத­னைச் ஆழப்­ப­டுத்தி அத­னூ­டாக பன்­னாட்டு பெரும் வர்த்­த­கக் கப்­பல்­கள் பய­ணிக்க வழி செல்­வதே சேது சமுத்­தி­ரத்­திட்­ட­மா­கும்.

அது சாத்­தி­ய­மா­னால் பன்­னாட்டு வர்த்­த­கக் கப்­பல்­கள் அவற்­றின் தேவை­களை இந்­தி­யத் துறை­மு­கங்­க­ளில் நிறை­வேற்­று­வது இரு தரப்­பு­க­ளுக்­கும் இலா­ப­க­ர­மாக அமை­யும்.அத்­த­கை­ய­தொரு நிலை ஏற்­ப­டு­மா­னால், இந்­தி­யா­வும் சீனா­வும் இந்­தி­ய­மா­க­ட­லின் ஆத்­தி­கத்­துக்­குப் போட்டி போடும் நிலை உரு­வா­கும்.

இத­னால் குழப்­ப­ம­டை­யப் போவது உல­க­வ­ரை­ப­டத்­தில் வெறும் கோழி முட்டை போன்ற அள­வில் காணப்­ப­டும் இலங்கை நாடே. தற்­போது இந்­தி­யப் பொருள்­கள் ஏற்­று­ம­தி­யில் 80 வீத­மா­ன­தைக் கையாள்­வது கொழும்­புத்­து­றை­மு­கமே. மீதி 20 வீதம் சிங்­கப்­பூர் துறை­மு­க­மூ­டா­கக் கையா­ளப்­ப­டு­கி­றது.

சேது சமுத்­தி­ரத்­திட்­டம் நிறை­வே­றி­னால், இந்­தியா தனது வெளி­நா­டு­க­ளுக்­கான ஏற்­று­ம­தி­க­ளுக்­குக் கொழும்­புத்­து­றை­மு­கத்தை நம்­பி­யி­ருக்­கத் தேவை­யில்லை. அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்­தைத் தமது எதி­ரா­ளி­யான சீனா­வுக்­கு இலங்கை அரசு குத்­த­கைக்கு வழங்­கி­ய­தால் கவ­லை­யுற்­றி­ருக்­கும் இந்­தியா எதிர்­கா­லத்­தில் எந்த விதத்­தில் செயற்­ப­டும் என்­பதை ஆண்­ட­வன் மட்­டுமே அறி­வான்.

சிங்கள மூலம்: ஆதிபாத (மவ்பிம)
தமிழில் : வீஎஸ் ரீ

http://newuthayan.com/story/17732.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.