Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவு? முதல்வர் பழனிசாமி அடுத்த 'மூவ்'

Featured Replies

சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவு?
முதல்வர் பழனிசாமி அடுத்த 'மூவ்'
 
 
 

முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், இன்று டில்லி செல்வதால், இரு அணிகள் இணைப்பு பேச்சில் நீடிக்கும் இழுபறி, முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு, தொண்டர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

 

சசிகலா, தினகரனை,கட்சியிலிருந்து,நீக்க,முடிவு?,முதல்வர் பழனிசாமி,அடுத்த 'மூவ்'

அதற்கு வசதியாக, சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து நீக்க, முதல்வர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க., பழனிசாமி அணியும், பன்னீர் அணியும் இணைய வேண்டும் என, பா.ஜ., மேலிடம் அறிவுறுத்தியது. அதை ஏற்று பேச்சு நடத்த, இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது.

ஆனால், பேச்சு துவங்குவதற்கு முன், இரு அணியி லும் சிலர் தெரிவித்த கருத்துக்களால், இணைப்பு பணி தடைபட்டது. பன்னீர் அணியினர், பேச்சு குழுவை கலைத்தனர். 'இனி பேச்சே இல்லை' என்றும் அறிவித்தனர்
.
இருப்பினும், மத்தியஅரசு அழுத்தம் காரணமாக, மீண்டும் இரு அணி சார்பிலும் பேச்சு நடந்தது. அப்போது, 'சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் இருந்து முழுமையாக விலக்குவதாக, பழனிசாமி அணியினர் அறிவிக்க வேண்டும்' என, பன்னீர் அணியினர் நிபந்தனை விதித்தனர். இதை, பா.ஜ., மேலிடமும் ஏற்றது.

அதன்படி, அறிவிப்பை வெளியிடுமாறு, பழனிசாமி தரப்பிற்கு அழுத்தமும் கொடுத்துள்ளது.அதை ஏற்று, சசிகலா மற்றும் தினகரனை, கட்சியில் இருந்து நீக்க,முதல்வர் முடிவு செய்து உள்ளார். இது தொடர்பான தீர்மானம், அ.தி.மு.க., தலைமை அலு வலகத்தில், இன்று, முதல்வர் தலைமையில் நடை பெற உள்ள கூட்டத்தில், நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங் கேற்க, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்,இன்று மதியம் டில்லி செல்கிறார். அவருடன், முன்னாள் அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, விஸ்வநாதன்,

 

முன்னாள், எம்.பி., மனோஜ்பாண்டியன் ஆகி யோர் செல்கின்றனர். மாலையில், முதல்வர் பழனிசாமி,டில்லி செல்கிறார்.அவருடன், மூத்த அமைச்சர்களும் செல்ல உள்ளனர். டில்லியில், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா முடிந்ததும், இரு அணிகள் இணைப்பு தொடர்பான, பஞ்சாயத்து நடைபெற உள்ளது.

அப்போது, முதல்வராக பழனிசாமி தொடர்வது; கட்சியை வழிநடத்த,பன்னீர்செல்வம் தலை மையில், வழிகாட்டும் குழு அமைப்பது என, முடிவு செய்யப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் -

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1830500

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.