Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரங்கோர்க்குமாறு மகிந்தவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார் சம்பந்தன் - பசில் ராஜபக்ஷ பேட்டி

Featured Replies

853_content_basi_rajapaksha_thinakkural_

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் அண்மையில்  பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கரங்கோர்க்குமாறு மகிந்த ராஜபக்ஷவுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். அதன்பின்னர் ராஜபக்ஷவை சந்தித்துமிருந்தார்.

ராஜபக்ஷவினால் மட்டுமே சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த முடியுமெனவும் அதேபோன்று ராஜபக்ஷவால் மாத்திரமே சமூகங்களை ஒருநாள் ஐக்கியப்படுத்தக் கூடியதாக இருக்குமெனவும் தெரிவித்திருந்தார் என்று முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். 


பூமொட்டு சின்னத்தைக் கொண்டுள்ள இலங்கை பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்களில்  ஒருவராக விளங்கும் பசில் ராஜபக்ஷ எந்தவொரு சூழ்நிலையிலும் எதிர்காலத் தேர்தல்களில் தமது தரப்பு வெற்றி பெறுமென நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேற்று வியாழக்கிழமை அளித்த பேட்டி வருமாறு;

கேள்வி: சு.க. எம்.பி.க்கள் குழுவினர் அரசாங்கத்தை விட்டு வெளியேறி கூட்டு எதிரணியுடன் இணையப் போவதாக செய்திகள் காணப்படுகின்றன. அதேவேளை அரசாங்கத்தை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் 2020 வரை செயற்பட வைக்கக்கூடியதாக இருக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். தங்கள் திட்டம் என்ன?

பதில்: 2020 வரை நாட்டை நிர்வகிக்கப்போவதாக அவர் கதைக்கும் போது அரசியலமைப்பின் பிரகாரம்  அவருக்களிக்கப்பட்ட அதிகாரத்தையே அவர் குறிப்பிடுகிறார். சமூக நீதிக்கான தேசிய இயக்கத்திற்கு தலைமை தாங்கிய  வண.மாதுளுவாவே சோபித தேரருடன் எதனை அவர் அந்தத் தருணத்தில் கூறியிருந்தார்.

இத்தகைய அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்காகவே சோபித தேரர் செயற்பட்டிருந்தார். ஜனாதிபதியும் அதே நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தார். இல்லாதொழித்துவிடப் போவதாக உறுதிமொழி அளித்திருந்தார். எவ்வளவுக்கு இது நியாயமானதாக இருக்கின்றது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டியுள்ளது.

1978 இல் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஜே.ஆர். ஜெயவர்தனா அறிமுகப்படுத்திய போது இதனையே அவரும் கூறியிருந்தார். ஜனாதிபதி அதனை நீக்கி விடுவதற்காகவே தெரிவு செய்யப்பட்டிருந்தார். 


உள்ளூராட்சி தேர்தல்கள் சர்வஜன வாக்கெடுப்பை போன்றவை மக்கள் அரசாங்கத்துக்கு எதிரான தமது விரக்தியை வெளிப்படுத்தும் சர்வஜன வாக்கெடுப்பை ஒத்தவை. அவை நீண்டகாலமாக இடம்பெறாமல் உள்ளன. இந்த மாதிரியாக தேர்தல்கள் ஒருபோதும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கவில்லை.

1975 இலிருந்து 1977 வரைதேர்தலை ஒத்தி வைத்த பின்னர் சுதந்திரக் கட்சி தோற்கடிக்கப்பட்டது. ஜே.ஆர்.ஜெயவர்தனா சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம் தேர்தலை ஒத்தி வைத்திருந்தார். தற்போதைய அரசாங்கம் எந்தவொரு காரணமும் இல்லாமல் அதனை செய்கின்றது. தேர்தல்கள் இடம்பெற்றால் சுதந்திரக் கட்சியிடம் மூன்று தெரிவுகள் உள்ளன. ஒன்று தனியாக போட்டியிடுவது. 

இரண்டாவது ஐ.தே.க.வுடன் குழுவாக சேர்ந்து போட்டியிடுவது மூன்றாவது ஐ.தே.க.வுக்கு எதிராக கூட்டு எதிரணியுடன் கரம் கோர்ப்பது என்பதாகும். சு.க.வின் பிரிவொன்று தற்போது ஜனாதிபதியுடன் இருக்கின்றது. அதன் உறுப்பினர்கள் இந்த மூன்று தெரிவுகளுக்கும் ஆதரவளிப்பவர்களாக இருக்கின்றனர்.

முதல் இரு தெரிவுகளை அவர்கள் கொண்டிருந்தால் அரசியல் ரீதியாக கட்சி அழிந்துவிடும். எம்முடன் இணைந்து கொண்டால் கட்சியை மீள நிலைநிறுத்திக் கொள்ள முடியும். ஜனாதிபதி சிறிசேன கூட அரசியலில் இன்னமும் மேலெழுந்து இருக்கக்கூடியதாக அமையும். இந்த மூன்று பிரிவாக சு.க.வினர் பிளவுபடுவார்கள். குழுவொன்று நிச்சயமாக எம்முடன் இணையும் என நான் நம்புகிறேன். 

கேள்வி: டிசம்பர் வரை சு.க.வினரை இருக்குமாறு ஜனாதிபதி கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் என்ன நடக்கும்?

பதில்: இது அவர்கள் தீர்மானிப்பதைப் பொறுத்ததாகும். அவர்கள் பொருத்தமான தீர்மானத்தை எடுப்பார்கள்.

கேள்வி: டிசம்பரில் தேர்தலை நடத்தாமல் மேலும் பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக ஊகம் வெளிப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில்: இந்த அரசாங்கத்திடம் தொலைநோக்கமும் இல்லை திட்டமும் இல்லை. புதிய முறைமையின் கீழ் தேர்தலுக்கான சட்டத்தை நாங்கள் இயற்றியிருந்தோம். நாங்கள் நகரசபை, மாநகர சபை, பிரதேச சபை ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்தியிருந்தோம்.

இந்த அரசாங்கமோ சகலவற்றையும் தலைகீழாக மாற்றியுள்ளது. நாங்கள் கொண்டு வந்த சட்டத்திலேயே திருத்தங்களை தலைகீழாக கொண்டு வந்துள்ளது. இப்போது தினேஷ் குணவர்தன தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு நான் ஒத்துழைப்பை வழங்கியிருந்தேன்.  வட்டாரத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளித்திருந்தோம். 

கட்சியின் சார்பாக சு.க.வின். யோசனைகளை நான் சமர்ப்பித்திருந்தேன். உண்மையில் இந்த யோசனைகள் தொடர்பான ஆவணத்தில் அச்சமயம் சு.க. பொதுச் செயலாளர் என்ற ரீதியில் ஜனாதிபதி சிறிசேன அதில் கைச்சாத்திட்டிருந்தார். கட்சியில் இருந்தவர்களுடன் கலந்தாலோசனையை மேற்கொண்டு இந்த யோசனைகளை நான் மேற்கொண்டிருந்தேன். 

கேள்வி: அந்தத் தருணத்தில் எல்லை நிர்ணய விவகாரம் காரணமாக தேர்தல் தாமதமடைந்தது என்று அரசாங்கம் தவறைக் கண்டறிந்திருந்தது உங்கள் பதில் என்ன?

பதில்: உண்மையில் இந்தக் குழுவின் அறிக்கையானது தற்போதைய ஆட்சியின் போதே வெளியிடப்பட்டது. 2015 இல் ஜனாதிபதி சிறிசேனவினால்  வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது.

வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்ட விடயம் எமது காலத்தின் போதான வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பான பரிந்துரைகளை கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு அவற்றைத் திருத்துவதற்கான போதிய காலம்  இருந்தது. அதன் பின்னர் அசோகா பீரிஸ் குழு நியமிக்கப்பட்டது.

அந்தக் குழு சிறிய மாற்றங்களை ஏற்படுத்தியது. சில விடயங்களில் வட்டாரங்கள் தொடர்பான இலக்கங்களிலும் மாற்றங்கள் காணப்பட்டன. பதுளை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாற்றங்கள் புறக்கணிக்கப்பட்டவையாக இருந்தன. முழு எல்லை நிர்ணய நடவடிக்கைகளும் சரியானவையாக இருக்கவில்லை.

பாரிய மாற்றங்களை மேற்கொண்டிருக்க வேண்டும். தற்போதைய ஆட்சியின் கீழ் நடவடிக்கைகள் முடிவடைவதற்கு ஒரு வருடத்திற்கு மேலான காலம் எடுத்தது. இதுவரை தேர்தல் பிற்போடப்பட்டிருந்தது. ஏன் அவ்வாறு? அதேவேளை நாங்கள் எந்தக் களத்தில் விளையாடினாலும் நாங்களே வெற்றி பெறுவோம். கடந்த காலத்தில் எமது கிரிக்கெட் அணி போன்றதாக இது உள்ளது. எங்கேயும் எமது குழு வெற்றி பெறுவதாக வழக்கமாக கொண்டிருந்தது. 

கேள்வி: தேர்தல்களில் போட்டியிடுவதற்கு பரந்த அணியொன்றை அமைப்பீர்களா?

பதில்: ஒரே எண்ணப்பாட்டைக் கொண்ட கட்சிகளுடன் கூட்டணியாக நாங்கள் போட்டியிடுவோம் என்பது தெளிவானதாகும்.

கேள்வி: கடந்த இரு தேர்தல்களில் உங்கள் தரப்பு வாக்குகளை இழந்துள்ளது. சிறுபான்மையினர் மத்தியில் மட்டுமன்றி பெரும்பான்மை சமூகத்தின் மத்தியிலும் அதிகளவுக்கு வாக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது. அதனை எவ்வாறு 
நீங்கள் சீர் செய்யப் போகின்றீர்கள்?

பதில்: கடந்த தடவை எமது வாக்கு வங்கி இன, மத அடிப்படையில் பிளவுபட்டது. அதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை மட்டும் பொறுப்பாளியாக நாங்கள் கொள்ள முடியாது. 

எமது காலத்தில் அமைச்சர்களாக பணிபுரிந்த அநேகமானோர் தற்போதைய ஆட்சியில் அங்கமாக உள்ளனர். நான் பிரதிநிதித்துவப்படுத்திய கம்பஹா மாவட்டத்தில் கத்தோலிக்க சமூகம் அதிகளவில் உள்ளது. அப்பகுதி வாக்குகள் மத அடிப்படையில் பிளவுபட்டன. இறுதி பெறுபேறுகளின் தாக்கத்தை ஏற்படுத்தின.

தென் மாகாணத்தில் நாங்கள் இது நகர பகுதியைச் சேர்ந்த தொகுதிகளில் மட்டுமே தோல்வியடைந்தோம். காலியிலும் மாத்தறையிலும் தோல்வியடைந்தோம். அந்தத் தொகுதிகளில் பௌத்தர்கள் அதிகளவில் வாழாத பிராந்தியங்களாகும்.

மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசியல் சக்திகளாக விளங்கும் நாங்கள் சகல இன, மத குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறோம். ஆனால் அரசாங்கத்தின் தீர்மானங்கள் சகல சமூகங்களையும் தற்போது பாதிக்கச் செய்துள்ளன.

உண்மையில் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் பெருந்தோட்ட தமிழ் சமூகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் அவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு மூன்று வேளை உணவை அவர்களால் உண்ண முடியாதுள்ளது.

அவர்களின் வீடுகள் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளன. இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறோம். 
அண்மையில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  கரங்கோர்க்குமாறும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறும் மகிந்த ராஜபக்ஷவிற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்பின்னர் சம்பந்தன் ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். ராஜபக்ஷவால் மட்டுமே நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியுமெனவும் அதேபோன்று ராஜபக்ஷவால் மட்டுமே ஒருநாளைக்கு சமூகங்களை ஐக்கியப்படுத்தக்கூடியதாக இருக்குமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கேள்வி: ஆனால் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தற்போதைய அரசாங்கத்துடன் முழு மனதுடன் இருக்கின்றனவே. அவர்களை உங்களால் எவ்வாறு கவர்ந்திழுக்க முடியும்?

பதில்: கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சிறுபான்மை அரசியல் தலைவர்கள் கவலையடைந்திருந்தனர். பிந்திய கட்டத்தில் அவர்கள் எம்மை விட்டுச் சென்றவர். உண்மையில் அவர்களின் ஆட்கள் குறிப்பாக முஸ்லிம்கள் எம்மை அதிகளவுக்கு கைவிட்டிருந்தனர். நாங்கள் அதனை உணர்ந்து கொண்டோம்.

எங்களை விட்டுச் செல்வதற்கு முதல்நாள் முஸ்லிம் தலைவர் ஒருவர் என்னைச் சந்தித்திருந்தார்.  இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் என்னுடன் கதைத்தார். ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிப்பதென முஸ்லிம் மக்கள் தமது மனதை மாற்றிக் கொண்டிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

அதனால் தான் பிரசன்னமாகியிருப்பது எந்தப் பயனையும் அளிக்காது என தெரிவித்திருந்தார். முஸ்லிம் காங்கிரஸும் அதனையே எனக்குக் கூறியிருந்தது. மக்கள் தலைவர்களை நீண்டகாலத்திற்கு பின்பற்ற மாட்டார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.

அவர்களின் அரசியல் தலைவர்களுக்கு முன்னால் முஸ்லிம் மக்கள் இருந்தனர். தோட்டத் துறையிலும் அதே அனுபவத்தை நாங்கள் பெற்றிருந்தோம். கடந்த காலத்தில் இந்த மக்களுடன் பலதரப்பட்ட அரசியல் முகவர்களூடாக நாங்கள் கதைத்திருந்தோம். அந்த நடைமுறையிலிருந்தும் இப்போது நாங்கள் வெளியேறியுள்ளோம்.

இந்த சமூகங்களுடன் எமது சொந்த அரசியல் அமைப்புகளை நாங்கள் கட்டியெழுப்புவோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைக்கப்பட்ட போது மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, பதியுதீன் முகம்மட் போன்ற முஸ்லிம் தலைவர்களை ஈடுபடுத்தியிருந்தார். எமது கட்சியில் சோசலிச இஸ்லாமிய அணி ஒன்றும் இருந்தது. 1977 இல் தோல்விகண்ட பின்னர் அது இல்லாமல் சென்றது.

அதன்பின்னர் ஏனைய அமைப்புகளூடாகவே முஸ்லிம்களை அணிதிரட்ட ஆரம்பித்தோம். சு.க.வும் ஐ.தே.க.வும் இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்டத்திலே முஸ்லிம் தலைவர்களைக் கொண்டிருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அஷ்ரப் அமைத்த பின்னர் பிரதான கட்சிகள் தமது தளத்தை முஸ்லிம் தலைவர்களை இழந்திருந்தனர்.  முஸ்லிம்களுக்கு தனியான கட்சியின் தேவை அந்தத் தருணத்தில் இருந்திருக்கக்கூடும்.

அது பாதிப்பாக இருந்தது. பின்னர் அஷ்ரப் அதனை உணர்ந்திருந்தார். அதனாலேயே தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்துக்கு சிங்களவர் ஒருவரை அவர் நியமித்திருந்தார்.. துரதிர்ஷ்டவசமாக அவர் மரணமடைந்துவிட்டார். அடுத்த முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் அந்த விடயங்கள் குறித்து கவனத்தில் கொண்டிருக்கவில்லை. பிரதான கட்சிகள் இந்த மக்களுடன் நேரடியாக தீர்வு காண வேண்டும். 

கேள்வி: கடந்த தேர்தல்களின் போது நீங்கள் சிங்கள மக்களின் வாக்குகளை இழந்திருந்தீர்கள். அதனை எவ்வாறு நிவர்த்தி செய்வீர்கள்?

பதில்: அது தொடர்பாக தீவிரமாக நாங்கள் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. கம்பஹா மாவட்டம் அதிக எண்ணிக்கையான தொழில்சார் நிபுணர்களையும் கல்வி கற்றவர்களையும் கொண்டதாகும். அத்துடன் பிரத்தியேக வகுப்புகளை அதிகளவில் கொண்ட கல்வி கேந்திரமாகவும் அது விளங்குகிறது.

பெரிய வர்த்தகர்களுக்கு அப்பால் நடுத்தர மற்றும் சிறியளவு தொழில் கொள்வோரும் இங்குள்ளனர். கடந்த தேர்தலில் இந்த ஆட்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. தொழில்சார் நிபுணர்கள் மற்றும் இடைத்தர வர்க்க வாக்காளர்களுக்கு மேலதிகமாக வாக்காளர்கள் முதல்தடவையாக எமக்கெதிராக சென்றிருந்தனர். எதிர்காலத் தேர்தல்களில் அவர்களே தீர்க்கமான சக்தியாக விளங்குவார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக அவர்களின் எதிர்பார்ப்புகள் தகர்ந்துவிட்டன. முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் கூட இந்த அரசாங்கத்தில் கொண்டிருந்த அதிக எதிர்பார்ப்புகள் இப்போது தகர்ந்துவிட்டது. சமூகத்தின் பிரிவினர் மத்தியில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் புரிந்து கொள்ளப்பட்டு வாக்குகளுக்கான புதிய பரிசீலனைகளை நோக்க ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 

கேள்வி: சமூக ரீதியான விடயங்களின் அடிப்படையில் சட்ட ஆட்சி, ஊழலற்ற சுதந்திரமான சமூகம் தொடர்பான பரந்தளவிலான கோட்பாடுகள் குறித்து ஆட்கள் உணர்வுபூர்வமான தன்மையை கொண்டிருப்பது இயற்கையானதாகும். முன்னைய அரசாங்கம் இது தொடர்பாக ஏன் கவனத்தில் கொண்டிருக்கவில்லை? 

பதில்:  அந்த விடயம் எழுப்பப்பட்டது எம்முடன் இருந்த அமைச்சர் ஒருவர் இப்போது தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்றார். அவர் அந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். அது குறித்து நாங்கள் விரிவாக ஆராய்ந்திருந்தோம். இந்த குறிப்பிட்ட அமைச்சர் இந்தோனேஷியா மற்றும் மலேசியாவில் போன்று கடுமையான சட்டவிதிகள் தொடர்பாக வலியுறுத்தி ஆலோசனை கூறியுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி கூறியுள்ளார். ஆள்வீத வருமானத்தை 4000 டொலரிலிருந்து 12000 டொலர் வரை அதிகரிப்பதற்கு அவர் கருத்தை தெரிவித்திருந்தார்.

சகல ஆசிய நாடுகளும் இந்த இலக்கை வென்றெடுத்திருப்பதாகவும் சிலவிதமான எதேச்சாதிகாரத்தின் கீழ் இதனை வென்றெடுத்திருப்பதாகவும் தூய்மையான ஜனநாயக முன்மாதிரிகளினூடாக அவற்றை வென்றெடுக்கவில்லையெனவும் அவர் கூறியிருந்தார். ஜனாதிபதி ராஜபக்ஷ நேரடியாக இதனை ஆட்சேபித்திருந்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் மனிதாபிமான நடவடிக்கையை மட்டுமே ஆரம்பித்திருந்தோம். 

 

http://www.thinakkural.lk/article.php?article/rubvcwsnny1440f4a331b7a237330rufw2d1b237565d8813a34d8acgzyab

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.