Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரும்புச்சீட்டு

Featured Replies

துரும்புச்சீட்டு

Article-Saturday-Sept-.2017.-02jpg-1024x

மொத்­தத்தில் நிலை­மா­று­கால நீதிக்­கான செயற்­பா டு­களைத் துரி­த­மாக முன்­னெ­டுக்­கு­மாறும் உரிமை மீறல் விட­யங்­களில் பொறுப்பு கூறும்­ப­டியும் வலி­யு­றுத் து­கின்ற ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு வ­ல­கமும், மனித உரிமைப் பேர­வையும் இலங்­கையில் தமிழ் மக்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்­களே, அவர்­க ளுக்கு நீதி மறுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றதே என்ற முழு­மை யான ஆதங்­கத்­தில்தான் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன என்ற முடிவுக்கு வருவது ஏற்புடையதல்ல. 

இலங்­கையின் அனைத்­து­லக முத­லீட்­டா­ளர்­களில் பிர­தான இடத்தைப் பிடித்­துள்ள சீனா­வு­ட­னான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கத்தின் உறவு குறித்து சர்­வ­தேச நாடுகள் மிகுந்த கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்­றன. 

தென்­னா­சிய பிராந்­தி­யத்தில் பொரு­ளா­தார ரீதியில் முதன்மை நிலைக்கு முன்­னே­றி­யுள்ள சீனா, ஜப்பான், அமெ­ரிக்கா மற்றும் இந்­தியா ஆகிய நாடு­க­ளுடன் நேர­டி­யான போட்­டியில் இறங்­கி­யி­ருக்­கின்­றது. இதுவே சர்­வ­தேச நாடு­களின் சீனா இலங்­கையில் கொண்­டுள்ள முத­லீட்டு நட­வ­டிக்­கைகள் மீதான அக்­க­றைக்­கான முக்­கிய காரணம் என அவ­தா­னிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். 

சீனா தனது அய­ராத முயற்­சி­யி­னாலும், திட்­ட­மிட்ட பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களைப் பின்­பு­ல­மாகக் கொண்ட வர்த்­தகச் செயற்­பா­டு­க­ளி­னாலும், ஆசிய பிராந்­தி­யத்தில் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் முதன்மை இடம் வகித்த ஜப்­பானை பின்னால் தள்ளி முன்­னோக்கி நகர்ந்­தி­ருக்­கின்­றது. சீனா தனது பொரு­ளா­தாரச் செயற்­பா­டு­களை விரி­வு­ப­டுத்தும் அதே­வேளை, இந்தப் பிராந்­தி­யத்தில் வல்­லமை பொருந்­திய ஓர் அர­சாகப் பரி­ண­மிப்­ப­தற்­கான முயற்­சி­களைத் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கின்­றது. அதன் முத்­து­மாலை திட்டம் அத­னோடு இணைந்த அதன் பட்­டுப்­பாதைத் திட்டம் என்­பன இந்த முயற்­சி­களின் முக்­கிய மைல்­கற்­க­ளாக நோக்­கப்­ப­டு­கின்­றன. 

மும்­முனைப் போட்டி 

ஜப்­பா­னு­டனும், அமெ­ரிக்­கா­வு­டனும் பொரு­ளா­தாரம் மற்றும் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் சீனா போட்­டி­யிட்டு வரு­கின்­றது. அதே­வேளை, தென்­னா­சிய பிராந்­தி­யத்தின் கடல் வழி வல்­ல­மையை அதி­க­ரித்து, இலங்­கையின் தலை­நகர் கொழும்பு துறை­முக நக­ரிலும், தென்­கோ­டியில் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­திலும் ஆழக் கால் பதிப்­ப­தற்கு மேற்­கொண்­டுள்ள வர்த்­தக ரீதி­யான ஒப்­பந்த நட­வ­டிக்­கை­களின் மூலம் இரா­ணுவ ரீதி­யாக இந்­தி­யா­வுடன் போட்­டி­யி­டு­வ­தாக பொரு­ளா­தார நிபு­ணர்கள் கரு­து­கின்­றார்கள். 

இந்­தி­யா­வுக்கும் சீனா­வுக்கும் இடையில் நீண்ட கால­மா­கவே எல்­லைப்­பு­றத்தில் பகைமை நீடித்­தி­ருக்­கின்­றது. இந்தப் பகை­மை­யா­னது எல்­லைக்­கான சண்­டை­க­ளாக, மோதல்­க­ளாக, எல்­லை­சார்ந்த யுத்­த­மாக அவ்­வப்­போது வெடித்­தி­ருக்­கின்­றன. ஆனால் எல்­லைப்­பு­றத்தில் ஏற்­பட்­டுள்ள பிணக்­கு­களை இரு தரப்­பி­ன­ராலும் அர­சியல் ரீதி­யாக முடி­வுக்குக் கொண்டு வர முடி­ய­வில்லை. இதனால் எல்­லைப்­புறப் பகைமை தொடர்ந்து கொண்டே இருக்­கின்­றது. 

இந்த எல்­லைப்­புறப் பகை­மையின் பின்­ன­ணி­யி­லேயே இலங்­கையில் சீனா மேற்­கொள்­கின்ற அப­ரி­மி­த­மான பொரு­ளா­தார முத­லீட்டு நட­வ­டிக்­கைகள் இந்­தி­யா­வு­ட­னான பாது­காப்பு ரீதி­யி­லான - இரா­ணுவ நலன் சார்ந்த போட்­டி­யாக நோக்­கப்­ப­டு­கின்­றது. ஆசிய பிராந்­தி­யத்தில் சீனாவின் பொரு­ளா­தார வர்த்­தக நட­வ­டிக்­கை­களும் இரா­ணுவ நலன் சார்ந்த நட­வ­டிக்­கை­களும் முன்­னேற்­ற­ம­டை­வதை அமெ­ரிக்­காவும், அமெ­ரிக்­காவின் நேச சக்­தி­களும் விரும்­ப­வில்லை. ஆயினும் சீனாவின் நட­வ­டிக்­கை­களை அந்த நாடு­க­ளினால் நேர­டி­யாகக் கட்­டுப்­ப­டுத்­து­வதும் இய­லாத காரி­ய­மா­கவே தென்­ப­டு­கின்­றது. 

இலங்கை சீனா­வுடன் நீண்ட கால­மா­கவே கலா­சார ரீதி­யா­கவும் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் தொடர்­பு­களைப் பேணி வரு­கின்­றது. இலங்­கையில் இடம்­பெற்ற முப்­பது வரு­ட­கால ஆயுத முரண்­பாட்டு நிலை­மை­யின்­போது, இலங்கை அர­சுக்கு சீனா இரா­ணுவ உத­வி­களை வழங்­கி­யி­ருந்­தது. குறிப்­பாக விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான இறுதி யுத்­தத்தின் போது, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­திற்கு பல வழி­களில் உறு­து­ணை­யாகச் செயற்­பட்­டி­ருந்­தது.  அதில் குறிப்­பாக இரா­ணுவ ரீதி­யி­லான உதவி முக்­கி­ய­மா­ன­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. 

 

அரசு மீதான அதி­ருப்தி 

விடு­த­லைப்­பு­லி­களை ஆயுத ரீதி­யாக முறி­ய­டிப்­ப­தற்கு அமெ­ரிக்­காவும், இந்­தி­யா­வும்­கூட பேரு­தவி புரிந்­தி­ருந்­தா­லும்­கூட, யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர், மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் சீனா­வுடன் கொண்­டி­ருந்த உறவு மேலும் நெருக்­க­ம­டைந்­தி­ருந்­தது.  

 

அதே­நே­ரத்தில் மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்­ப­வற்­றுடன், ஜன­நா­ய­கத்தைத் துச்­ச­மாக மதித்து, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கடைப்­பி­டித்த சர்­வா­தி­காரப் போக்கு கார­ண­மாக ஓர் ஆட்சி மாற்­றத்­திற்கு அமெ­ரிக்கா மற்றும் இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடுகள் துணை­போ­யி­ருந்­தன. 

ஆட்சி மாற்­றத்தின் பின்னர் உரு­வா­கிய நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது, படிப்­ப­டி­யாக நல்­லாட்சிப் போக்­கி­லி­ருந்து நழுவி, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் போக்கில் காலடி எடுத்து வைத்­தி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. 

யுத்­தத்­தினால் பொரு­ளா­தார ரீதி­யா­கவும் அர­சியல் ரீதி­யா­கவும் நிலை­கு­லைந்­துள்ள நாட்டை முன்­னேற்­று­வ­தற்­காக, குறிப்­பாக பொரு­ளா­தார ரீதியில் முன்­னேற்­று­வ­தற்­காக சீனாவின் பொரு­ளா­தார உத­வி­களை நாடி­யி­ருப்­பது, இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உரு­வாக்­கத்­திற்குக் கார­ண­மாக இருந்த அமெ­ரிக்­கா­வுக்கும், இந்­தி­யா­வுக்கும் அதி­ருப்­தி­யையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. யுத்தம் கார­ண­மாக பேர­ழிவைச் சந்­தித்­துள்ள ஒரு நாடு, தனது இறை­மையின் அடிப்­ப­டையில் தனது முன்­னேற்­றத்­திற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதை ஏனைய நாடுகள் எழுந்­த­மா­ன­மாக தடை­செய்­யவோ அல்­லது, அதன் செயற்­பா­டு­களில் நேர­டி­யாகத் தலை­யீடு செய்­யவோ முடி­யாது. அவ்­வாறு செயற்­ப­டு­வதை ஓர் ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­யாக ஏனைய உலக நாடு­க­ளினால் நோக்­கப்­ப­டு­கின்ற ஆபத்து உள்­ளது. ஆனாலும் தமது பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளிலும், தமது பாது­காப்பு குறித்த நலன்­க­ளிலும் இறை­மை­யுள்ள ஓர் அர­சாங்­க­மாக இருந்­தாலும், மற்­று­மொரு நாட்டின் செயற்­பா­டு­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வதை எந்த நாடு­களும் பார்த்­துக்­கொண்டு வாளா­வி­ருப்­ப­தில்லை. 

 

முர­ணான செயற்­பா­டுகள் 

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யி­லேயே இலங்கை மீதான நெருக்­கு­தல்கள் இப்­போது அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. குறிப்­பாக யுத்­த­மோ­தல்­களின் போது இழைக்­கப்­பட்ட போர்க்­குற்றச் செயற்­பா­டுகள், மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்­ப­வற்­றுக்குப் பொறுப்பு கூறும் கடப்­பாட்டை நிலு­வை­யாகக் கொண்­டுள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது இந்த நெருக்­கு­தல்கள் மேலோங்­கி­யி­ருக்­கின்­றன.  

 

பொறுப்பு கூறும் கடப்­பாட்டை நிறை­வேற்றப் போவ­தில்லை என யுத்­தத்தில் வெற்றி பெற்ற முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் நேர­டி­யா­கவே தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால், யுத்த வெற்றி வீர­னாகத் திகழ்ந்த மஹிந்த ராஜபக் ஷவை அரி­ய­ணையில் இருந்து வீழ்த்தி, நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் பொறுப்பு கூறு­வ­தற்­கான ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்கி ஆத­ரித்­தி­ருந்­தது. 

மனித உரிமைப் பேர­வையின் 2015 ஆம் ஆண்டு 30/1 இலக்கப் பிரே­ர­ணையை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தாக மன­மு­வந்து ஏற்று ஒப்­புதல் வழங்­கி­யி­ருந்­தது. ஆனால் அளிக்­கப்­பட்ட ஒப்­பு­த­லுக்கு அமைய நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­க­ளையும் நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்கும் நட­வ­டிக்­கை­க­ளையோ உளப்­பூர்­வ­மாக மேற்­கொள்­ள­வில்லை. மாறாக காரி­யங்­களை இழுத்­த­டித்துச் செல்­வ­தி­லேயே கூடிய கவனம் செலுத்­தி­யி­ருந்­தது. 

அத்­துடன் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணை­யின்­படி, சர்­வ­தேச நீதி­ப­திகள் அடங்­கிய விசா­ரணைப் பொறி­மு­றையை உரு­வாக்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­ததன் பின்னர், வெளியார் எவ­ருக்­குமே இடம் கிடை­யாது, விசா­ரணைப் பொறி­மு­றையில் உள்ளூர் நீதி­ப­தி­களே இடம்­பெற்­றி­ருப்­பார்கள், வேண்­டு­மென்றால் வெளி­நாட்­ட­வர்­களின் ஆலோ­ச­னை­களை மட்டும் பெற்­றுக்­கொள்­ளலாம் என அளிக்­கப்­பட்ட ஒப்­பு­த­லுக்கு முர­ணான வகையில் கருத்து வெளி­யிட்டு, அதன்­ப­டியே காரி­யங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் என்­ப­தையும் உறு­தி­யாகக் கூறி­யி­ருக்­கின்­றது. 

அவ்­வா­றி­ருந்த போதிலும், 2016 ஆம் ஆண்­டிலும் ஒப்­புக்­கொள்­ளப்­பட்­ட­வாறு ஐ.நா. பிரே­ர­ணையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விட­யங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் தவ­றி­யி­ருந்­தது. ஆயினும் தனக்கு கால அவ­காசம் போதாது என தெரி­வித்த கார­ணத்தை ஏற்று, அர­சாங்கம் கோரி­ய­வாறே பிரே­ணையை நிறை­வேற்­று­வ­தற்கு மேலும் இரண்டு வருட கால அவ­கா­சத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவை வழங்­கி­யி­ருந்­தது. 

 

பின்­ன­ணியில் அமெ­ரிக்கா  

இந்த கால அவ­கா­ச­மா­னது, ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யினால் மட்டும் வழங்­கப்­ப­ட­வில்லை. இதன் பின்­ன­ணியில் அமெ­ரிக்கா செயற்­பட்­டி­ருந்­தது.   

 

இலங்கை அர­சாங்­கத்­திற்கு இவ்­வாறு கால அவ­காசம் வழங்­கப்­ப­டு­வதை யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் விரும்­ப­வில்லை. ஆயினும் அந்த மக்­களின் அர­சியல் தலை­மை­யா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனை அழைத்து, இவ்­வாறு இரண்டு ஆண்­டுகள் கால அவ­காசம் வழங்­கு­வ­தற்கு தமிழ் மக்கள் சார்­பி­லான ஒப்­பு­தலை அமெ­ரிக்கா பெற்­றி­ருந்­தது என்­பது விசே­ட­மாக சுட்­டிக்­காட்டத் தகுந்­தது. 

இவ்­வாறு அமெ­ரிக்­கா­விடம் கால அவ­காசம் வழங்­கு­வ­தற்கு உடன்­பாடு தெரி­விக்­கப்­பட்­டதை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தமிழ் மக்­க­ளுக்கு, உட­ன­டி­யாகத் தெரி­விக்­க­வில்லை. 

அது மட்­டு­மல்­லாமல், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளுக்­குக்­கூட தெரி­யாமல் இந்த விடயம் மறைக்­கப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பாக இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேசாப் வெளி­யிட்ட தக­வ­லை­ய­டுத்தே இது வெளிச்­சத்­திற்கு வந்­தது என்­பதும், அதன்­பின்பே கூட்­ட­மைப்பின் மக்கள் பிர­தி­நி­திகள் அடங்­கிய உயர் கூட்­டத்தில் இது­பற்றி தகவல் தெரி­விக்­கப்­பட்­டது என்­பதும் அனை­வரும் அறிந்­ததே. 

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்கம் பொறுப்பு கூற­வேண்டும் என்று ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. 

இந்தப் பிரே­ர­ணைகள் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­ல­கத்­தி­னாலோ அல்­லது அதன் அலு­வ­லக அதி­கா­ரி­க­ளி­னாலோ கொண்டு வரப்­ப­ட­வில்லை. இந்தப் பிரே­ர­ணை­களை முழு மூச்­சாக இருந்து அமெ­ரிக்­காவே மனித உரிமைப் பேர­வையில் கொண்டு வந்­தி­ருந்­தது. 

எனவே, இலங்­கையில் இடம்­பெற்ற யுத்த மோதல்­க­ளின்­போது மனித உரி­மைகள் மீறப்­பட்­டி­ருந்­தன, சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் மீறப்­பட்­டி­ருந்­தன,

அத்­துடன் போர்க்­குற்றச் செயற்­பா­டு­களும் இடம்­பெற்­றி­ருந்­தன என்று ஐ.நா. தெரி­வித்­தி­ருந்­தா­லும்­கூட, ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அவை தொடர்பில் பிரே­ர­ணை­களை சர்­வ­தேச சக்­தி­யா­கிய அமெ­ரிக்­காவே கொண்டு வந்­தி­ருந்­தது என்­பது கவ­னத்தில் கொள்ள வேண்­டி­யது முக்­கி­ய­மாகும். 

விடு­த­லைப்­பு­லி­களை இரா­ணுவ ரீதி­யாகத் தோற்­க­டிப்­ப­தற்கு, இலங்கை அர­சாங்­கத்­திற்குப் பல வழி­க­ளிலும் உத­வி­யி­ருந்த சர்­வ­தேச நாடு­களில் அமெ­ரிக்­காவும் ஒன்­றாகும்.

அதே அமெ­ரிக்­காதான் விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான இரா­ணுவ மோதல்­க­ளின்­போது அரச படைகள் மனித உரி­மை­க­ளையும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­வி­தி­க­ளையும் மீறி­யி­ருந்­தன என குற்றம் சுமத்தி இலங்­கைக்கு எதி­ராக அடுத்­த­டுத்து ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் பிரே­ர­ணை­களைக் கொண்டு வந்­தி­ருந்­தது. இந்த வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் தீர்­மா­னங்­களின் ஊடா­கவும், ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரி­னாலும் மனித உரிமை மீற­லுக்­கான பொறுப்பு கூறலில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு எழுந்­துள்ள நெருக்­க­டி­க­ளா­னது, சர்­வ­தே­சத்­தி­னா­லேயே – சர்­வ­தேச நாடு­க­ளி­னா­லேயே கொடுக்­கப்­ப­டு­கின்­றன என்­பது நிரூ­ப­ண­மா­கின்­றது. 

 

 

மனித உரிமை ஆணை­யா­ளரின் எச்­ச­ரிக்கை  

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே, செப்­டெம்பர் மாதம் 11 ஆம் திகதி நடை­பெற்ற ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடரில் உரை­யாற்­றிய ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல்ராட் ஹுசைன் உரிமை மீறல்­க­ளுக்­கான பொறுப்பு கூறும் விட­யத்தில் காலத்தை இழுத்­த­டிக்­காமல் துரி­த­மா­கவும் நம்­ப­க­ர­மா­கவும் செயற்­பட வேண்டும் இல்­லையேல் சர்­வ­தேச தீர்ப்­பா­யத்தை நாட வேண்­டிய அவ­சியம் ஏற்­படும் என சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.  

 

நிலை­மா­று­கால நீதிக்­கான செயற்­பா­டு­க­ளுக்­கு­ரிய பொறி­மு­றை­களை உரு­வாக்கிச் செயற்­ப­டு­வது, இரா­ணு­வத்­தி­னரால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­வித்தல், காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தைச் செயற்­ப­டுத்­துதல், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை நீக்கி அதற்குப் பதி­லாக சர்­வ­தேச தரத்­தி­லான சட்­டத்தை உரு­வாக்­குதல் உள்­ளிட்ட பல விட­யங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்கம் உடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் இலங்கை அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இரா­ணு­வத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள தமது காணி­க­ளுக்­கா­கவும், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள தமது உற­வு­களைக் கண்­டு­பி­டித்துத் தரு­வ­தற்­கா­கவும் போராடி வரு­கின்ற தமிழ் மக்கள் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்­துள்­ளனர் என்­ப­தையும் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். 

இலங்கை அர­சாங்­கத்தின் பொறுப்பு கூறும் விட­யத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரினால், இது­கால வரை­யிலும் இல்­லாத வகையில் அழுத்­த­மா­கவும் எச்­ச­ரிக்கை விடுக்கும் தொனி­யிலும் இப்­போது கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. 

ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் இந்தக் கூற்று பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளு­டைய மனங்­களைச் சற்று ஆசு­வா­சப்­ப­டுத்­து­வ­தா­கவும், அதே­வேளை, சிங்­களத் தீவிர அர­சி­யல்­வா­தி­க­ளான விமல் வீர­வன்ச போன்­ற­வர்­களை சீற்­ற­ம­டையச் செய்­வ­தா­கவும் அமைந்­துள்­ளது. 

ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் எச்­ச­ரிக்கைக் கூற்றை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வர­வேற்­றி­ருக்­கின்­றது. ஆனால் அர­சாங்கம் அது குறித்து அதி­ருப்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­றது. வெளி­நாடு சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இது­வி­டயம் தொடர்பில் ஜெனி­வாவில் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல்ராட் ஹுசைனை சந்­தித்து நிலை­மை­களை விளக்­குவார் என அர­சாங்கத் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.    

 

 

யதார்த்­தத்தைப் புரிந்து  கொள்­ளுதல் அவ­சியம் 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­ட­னான சந்­திப்பில் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ள­ரு­டைய நிலைப்­பாட்டில் மாற்­றங்கள் எதுவும் இடம்­பெறும் என்று எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை. இருந்த போதிலும், ஒரு நாட்டின் அர­சாங்கம் என்ற வகையில் அவ­ரு­டைய கூற்­றுக்­களும், அவர் பக்க நியாயங்களும் மனித உரிமை ஆணையாளரினால் கவனத்திற் கொள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை.  

 

மொத்தத்தில் நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகளைத் துரிதமாக முன்னெடுக்குமாறும் உரிமை மீறல் விடயங்களில் பொறப்பு கூறும்படியும் வலியுறுத்துகின்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகமும், மனித உரிமைப் பேரவையும் இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்களே, அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கின்றதே என்ற முழுமையான ஆதங்கத்தில்தான் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன என்ற முடிவுக்கு வருவது ஏற்புடையதல்ல. 

ஐ.நா.வையும், சர்வதேச நாடுகளையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில், அவர்களுக்காகச் செயற்பட வேண்டிய நிலைமைக்குத் தமிழர் தரப்பில் சர்வதேச மட்டத்தில் வலிமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. சர்வதேச வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் ஒரு துரும்புச்சீட்டாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதே யதார்த்தம். 

தமிழ் மக்களுக்காக சர்வதேசமும், ஐ.நா.வும் அக்கறைகொண்டு செயற்படுகின்றன என செய்யப்படுகின்ற பிரசாரமும், தமிழ் மக்களுக்காக அல்லது தமிழ் மக்களின் சார்பில் சர்வதேசம் செயற்படுகின்றது என்றும் அந்த வகையில் தமிழ் மக்களுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் சர்வதேசம் ஆதரவாக இருக்கின்றது என்றும் செய்யப்படுகின்ற அரசியல் ரீதியான பிரசாரங்கள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கவனமாக இருத்தல் வேண்டும். உரிமைகளுக்காகவும், உரிமை மறுப்புக்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட தரப்பினரே விடாப்பிடியாகக் குரல்கொடுக்க வேண்டும். தொடர்ச்சியாகப் போராட வேண்டும். அதனைவிடுத்து, தங்களுக்காக பிறர் செயற்படுகின்றார்கள், அவர்கள் ஆதரவாக இருக்கின்றார்கள் என்று வெற்றுப் பிரசாரம் செய்வதிலும், வெறும் தேர்தல் அரசியலுக்காக மக்களைத் திசை திருப்புவதிலும் பயனேதும் ஏற்படப் போவதில்லை. 

– செல்­வ­ரட்னம் சிறி­தரன் –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-16#page-1

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.