Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எது சிறந்தது?

Featured Replies

எது சிறந்தது?

 

இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்த காப்புகளா அல்லது சீனாவின் அரசியல் அமைப்பில் சிறுபான்மையினருக்கு கொடுத்திருக்கும் காப்புகளா சிறந்தவை?

முக்­கி­ய­மான மூன்று விட­யங்­க­ளினைப் பற்றி இப்­பொ­ழுது விப­ரிக்­கப்­ப­டு­கின்­றது.  தமிழ் தேசி­ய­மக்கள் வடக்­கு, கிழக்கு  மாகா­ணங்கள் எங்­க­ளது தாயகம் (HOME LAND) என்­பது போல  சீனா­விலும் சிறு­பான்மை மக்­களின்  தாயகம் என்னும் கொள்­கையை பேணிக்  காப்­பாற்­று­கின்­றார்கள். 'The minority people became masters of their homelands and their own destinies" சிறு­பான்மை மக்கள் தங்­க­ளது தாயக பூமிக்கு  அவர்­களே எஜ­மானர்கள்.  தங்­க­ளது தலை­வி­தியை தீர்­மா­னிப்­ப­தற்கு  அவர்­க­ளுக்கே உரிமை உண்டு. ஒவ்­வொரு சிறுபான்மை இனமும் தங்களுக்குள் முரண்படாமல் ஒரு இனம் மற்றைய இனத்தினை வீழ்த்தாமல் ஒற்றுமையாக அவர்களது பிரச்சினைகளினை தீர்த்து வைப்பதில் சீன அரசாங்கம் எல்லாவகை செயற்பாடுகளினையும் செய்து கொடுக்கும். இலங்கையில் அவ்வாறு காணப்படுவதில்லை.

எழு­ப­தா­யிரம் வரு­டங்­க­ளுக்கு முன்பு இந்­தியப் பெரு­நி­லமும் இச்­சி­றிய இலங்­கையும் ஒரே நிலப்­ப­ரப்­பாக இருந்­த­தென பூகோள வர­லாறு சாட்­சியம் பகர்­கின்­றது. அது­மட்டுமல்ல இரா­மரின் வான­ரப்­ப­டைகள் சிறு­க­ட­லினால் பிரிக்­கப்­பட்­­டி­ருந்த இலங்­கைக்கு பாலம் அமைத்­தன என இரா­மா­யணம் கூறு­கின்­றது.

ஏறக்­கு­றைய இரண்­டா­யிரம் ஆண்­ட­ளவில் சிங்­க­ள­வரின் மூதா­தைகள் இந்­தி­யாவில் இருந்து வந்­தார்கள்.அவ்­வாறே தமி­ழர்­களின் மூதா­தை­யர்­களும் இந்­தி­யாவில் இருந்தே வந்­தார்கள். புத்தர் ஞானம் அடைந்த ஐந்தாம் வருடம் யாழ்ப்­பா­ண­ நா­க­தீ­பத்தில் அர­சர்­க­ளான மாமன்னர் மகோ­த­ர­ரிற்கும் அவ­ரது மரு­மகன் குலோ­த­ர­னிற்கும் இரத்­தி­னக்­கற்­களால் செய்­யப்­பட்ட அரச இருக்கை நிமித்தம் (throne) பிணக்கு ஏற்பட்டது. அப்பிணக்கை புத்தர் தீர்த்து வைத்தார். நாக அரசர்கள் தமிழர்கள். இந்நிகழ்வின் பின் தான் விஜயன் இலங்கைக்கு வந்து சிங்கள குடியேற்றம் ஏற்பட்டது. புத்­த­ம­தமும் இந்­து­ம­தமும் இந்­தி­யா­வி­லி­ருந்தே இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டன. பூகோ­ள­ரீ­தி­யாக தென்­னிந்­தி­யாவில் குறிப்­பாக தமிழ் நாட்டில் ஏற்­படும் பூமி­அ­திர்ச்­சியின் அதிர்­வ­லைகள் இலங்­கை­யிலும் உண­ரப்­படும். இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இறுக்­க­மான சமுதாய உற­வுகள் பல உண்டு.

தமிழ்நாட்­டு ­உ­றவு

தமிழ்­நாடு தமி­ழர்­களின் தாய­க­மா­கும். ஏறக்­கு­றைய ஆறு கோடித் தமிழர்­களின் வதி­வி­ட­மாகும். இலங்­கையில் வாழும் தமி­ழர்­க­ளுடன் தொப்புள் கொடி உற­வினைக் கொண்­ட­வர்கள். இலங்கைத் தமி­ழர்­க­ளுக்கு தீங்கு ஏதும் நடந்தால் தமிழ்நாடு கொந்­த­ளித்­தெழும். பல­வித போராட்­டங்கள் நடத்­தப்­படும். இந்­தி­ய­மத்­தி­ய அ­ர­சிற்கு பல­வகை அழுத்­தங்­களை ஏற்­ப­டுத்­துவர். அதனால் இந்­தி­ய­ மத்­திய அர­சு தான் நினைத்­த­படி ஆட முடி­யாமல் போவதும் உண்டு. மீனுக்கு வாலையும் பாம்­பிற்கு தலை­யையும் காட்டும் விலாங்குமீனின் குணம் படைத்த அர­சி­யலில் இந்­திய மத்­திய அரசு பய­ணிப்­ப­து­முண்டு. எது என்­ன­வாக இருந்­தாலும் எப்­பொ­ழுதும் எவ்­வி­ட­யத்­திலும் இந்­தி­யாவின் நல­வு­ரி­மை­யினைப் பேணிக்­காப்­ப­துவே அதன் முதன்­மை­யான அர­சியல் நிலைப்­பா­டாகும்.

மேலே விப­ரித்த அர­சியல் சூழ்­நி­லை யில் தான் இந்­தோ­ – ஸ்ரீ­லங்கா உடன்­ப­டிக்­கை­யையும் (INDO- SRILANKA AGREEMENT) இந்­திய நல­வு­ரி­மையை பேணிக்­காப்­ப­தற்­காக எழு­தப்­பட்டது.

உடன்­ப­டிக்­கை­யுடன் கடி­தங்கள்

இந்­திய பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­பதி ஜெய­வர்த்­த­ன­விற்கும் இடையில் கடி­தங்கள் பரி­மா­றப்­பட்­டன. அவை­யாவும் உடன்­ப­டிக்­கையின் பகு­தி­யா­கவும் பாக­மா­கவும் கணிக்­கப்­பட்­டன. அக்­க­டி­தங்­களில் முக்­கி­ய­மாக மூன்­று­வி­ட­யங்கள் குறிக்­கப்­பட்டு ஏற்றுக் கொள்­ளப்­பட்­டன. அவை­யா­வன:

1. இந்­தி­யாவின் நல­வு­ரி­மை­க­ளுக்குப் பாத­கமாக திரு­கோ­ண­மலைத் துறை­முகம் மற்றும் இலங்­கையின் துறை­மு­கங்கள் யாவும் இரா­ணுவ பாவ­னைக்கும் வேறு எந்த நாடும் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக கொடுக்­கப்­ப­டாது.

2. திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதங்களை திருத்­துதல், செயற்­ப­டுத்­துதல் ஆகி­யன யாவும் இந்­தி­யாவும் இலங்­கையும் இணைந்து கூட்­டு­மு­யற்­சி­யாக செயற்­படல் வேண்டும்.

3. வெளிநாட்டு வானொலி அமைப்­புக்­க­ளுடன் இலங்கை ஏற்­ப­டுத்திக் கொண்ட ஒப்­பந்­தங்கள் மீளாய்வு செய்­யப்­பட்டு உறுதிப்படுத்­தப்­பட்டு பாது­காப்புச் செய்­யப்­பட வேண்டும். அவர்­க­ளினால் இலங்­கையில் உரு­வாக்­கப்­பட்­டவை பொது­மக்­களின் பாவ­னைக்­கான ஒலி­ப­ரப்­பாக இருத்தல் வேண்­டுமே அன்றி இரா­ணுவ புல­னாய்வு விட­யங்­க­ளுக்கு உப­யோ­கிக்­கப்­ப­டக் கூடாது.

மேலே விப­ரிக்­கப்­பட்­டுள்ள மூன்று விட­யங்­களும் இந்­தி­யாவின் பாது­காப்­பிற்­கு­ரிய முக்­கிய விட­யங்கள். இந்­தி­யாவின் பாது­காப்பு இந்­தி­யாவின் நல­வு­ரி­மை­யாகும். இதனால் இலங்கைத் தமி­ழர்­களின் அர­சியல் உரி­மைகள், - பாது­காப்பு யாவும் பின் தள்­ளப்­பட்­டன.

உடன்­ப­டிக்­கையின் பிரிவு 2:15

உடன்­ப­டிக்­கையின் பிரிவு 2:15 மிக முக்­கி­ய­மா­னது. அப்­பி­ரிவு என்ன கூறு­கின்­றது? நீர் மேல் எழுத்துப் போல அழி­ய­விட்­டது இந்­தியா. வேறு பல விட­யங்­களும் கைவி­டப்­பட்­டன.

அப்­பி­ரிவு திட்­ட­வட்­ட­மாக பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றது. 04.05.1986 தொடக்கம் 19.12.1986 வரையும் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்டு தீர்­மானம் எடுக்­காத மிகுதிப் பிரே­ர­ணைகள் முடி­வெ­டுக்­கப்­பட்டு அவற்­றினை ஏற்றுக் கொள்­வ­தென்ற நிபந்­த­னைக்கு அமைய இப்­பி­ரே­ர­ணைகள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. உடன்­ப­டிக்கை கையெழுத்­திட்ட ஆறு கிழ­மைக்குள் மேற்­கு­றித்த காலத்தில் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்ட ஆலோ­ச­னை­க­ளுக்கு ஏற்ப இந்­தி­யாவும் இலங்­கையும் தீர்க்­க­மான முடிவை எட்­டு­ம். இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னங்­க­ளினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தியா தனது நேரடி ஒத்­து­ழைப்­பினை வழங்கும். மேற்­கு­றித்த காலத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அமை­வா­கவே இந்­திய ஒத்­து­ழைப்பு இருக்கும்.

2.15 – 11 These proposals are also conditional to an acceptance of the proposals negotiated from 04.05.1986 to 19.12.1986 residual matters not finalized during the above negotiations shall be resolved between India and Srilanka with in a period of six weeks of signing this agreement. These proposals are also conditional or the government of India co-operating directly with a government of Srilanka in their implementation.

04.05.1986 தொடக்கம் 19.12.1986 வரை­யு­முள்ள காலப்­ப­கு­திக்குள் கலந்து ஆலோ­சித்து, தீர்வு எடுக்க முடி­யாமல் போன விட­யங்­க­ளுக்கு உடன்­ப­டிக்­கை கைச்சாத்­திட்ட ஆறு கிழ­மைக்குள் தீர்வு எட்­டப்­ப­டு­மென்று கூறப்­பட்­டுள்­ளது. ஆறு கிழ­மைக்குள் தீர்க்­க­மான தீர்வு எட்­டிய பின் உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருக்­கலாம் தானே, ஆக்­கப்­பொ­றுத்­தவர்

ஆறப்­பொ­றுக்­கக்­கூ­டாதா?

உடன்­ப­டிக்­கையில் விப­ரித்­த­வாறு ஆறு கிழ­மைக்குள் எது­வித தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை. ஆறு கிழமை 13.09.1987இல் முடி­விற்கு வரு­கின்­றது. 13.09.1987 வரையும் எவ்­வித முயற்­சி­யையும் இந்­தியா எடுத்­த­மைக்கு ஆதாரம் இல்லை. இவற்றை இலங்கை அர­சியல் அமைப்பில் 13ஆவது திருத்­தத்­திற்குள் சேர்க்கவில்லை. மாகா­ண­ச­பைகள் சட்­டத்­திற்குள் சேர்க்கவில்லை. இவற்­றிற்கு தீர்க்­க­மான முடிவு எதுவும் எடுக்­காது இலங்கை அர­சாங்கம் மேற்­கூ­றிய இரு சட்­ட­மூ­லங்­களை வெளியிட்­டதை இந்­தியா எவ்­வாறு அனு­ம­தித்­தது? 13ஆவது திருத்தம் கொண்டு வந்­தது போல அத்­தீர்­மா­னங்­க­ளினை உள்­ள­டக்கி இன்­னுமோர் அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை.? இன்­று­வரை 04.05.1986 தொடக்கம் 19.12.1986 வரையும் கலந்­தா­லோ­சித்த விட­யங்கள் எவை? எவை? என்னென்ன தன்­மை­கொண்­டவை? விட­யப்­பொ­ருட்கள் என்ன? என்று இந்­தி­ய­ தமிழ் மக்­க­ளுக்கு தெரியப்­ப­டுத்­தவே இல்லை. முற்­று­மு­ழு­தாக அவற்­றினை கைவிட்­டது இந்­தியா. எவருக்கு நன்மை செய்­தது இந்­தியா? தமி­ழர்­க­ளுக்கா அல்­லது பௌத்த சிங்­கள மேலா­திக்கம் கொண்ட இலங்கை அர­சாங்­கத்­திற்கா நன்மை ஏற்­பட்­டது?

எல்லா வகை தீர்­மா­னங்­க­ளி­னையும் செயல் வடிவம் கொடுப்­ப­தற்கு இந்­தியா அண்­டறைட்" காப்­புறுதி செய்­துள்­ளது. அந்த காப்­பு­று­தி­யையும் காற்­றிலே பறக்க விட்­டது இந்­தியா. தமி­ழர்­களின் உரி­மை­க­ளினை நசுக்கி, மழுங்­கச்­செய்து, அழித்து அவர்கள் நட்டாற்றில் தள்ளி விடப்­பட்­டார்கள். அப்­பாவித் தமிழ் மக்கள் ஆயி­ரக்­க­ணக்கில் அழிந்த பின் கூட இந்­தியா சரி­யான திசைக்கு திரும்­பவே இல்லை.

13ஆவது அரசியலமைப்பின் திருத் தமும் மாகாண சபைகள் சட்ட மும் ஏன் மழுங்கடிக்கப்பட்டன? உடன் படிக் கையி லும் வாய் மூலமும் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர்களுக்கு எவ்வளவோ வாக்குறு திகளை வழங்கியுள்ளார். ஆனால் அவற்றில் ஒன்றினையும் செய்ய முடிய வில்லை. கூட்டணித்தலைவர்கள் எழுதிய கடிதங்களுக்கு மறு மொழியே கொடுக்கவில்லை. மயான அமைதியில் ராஜீவ்காந்தி இருந்தார். ஏன்?

கடிதங்கள் மூலம் மூன்று நலவுரிமை களை இந்தியா பெற்றிருந்தது. மூன்று விடயங்களும் சட்ட வலிதற்றவை என இந்திய சட்ட அறிஞர்கள் அறிவித்தனர். அதனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் அதற்கான சட்டத்தை இயற்றும்படி ராஜீவ்காந்தி வேண்டி நின்றார்.

இதற்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன பவ்வியமாக பதில் கொடுத்தார். அத்துலத்முதலியும் பிரேமதாசவும் 13ஆவது திருத்தத்திற்கும் மாகாண சபை சட்டத்திற்கும் எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இச்சூழ்நிலையில் எவ்வாறு இன்னுமொரு சட்டத்தை கொண்டு வரமுடியும். என் கையை கட்டிப்போடாமல் சுதந்திரமாக செயற்பட விட்டால் அத்துலத்முதலியையும் பிரேமதாசவையும் சமாதானப்படுத்தி புதிய சட்டத்தை கொண்டு வர முயற் சிப்பேன் என்று ஜே.ஆர். கூறினார். இந்தி யப் பிரதமர் ராஜீவ்காந்தியும் ஜே.ஆரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறியபடி புதிய சட்டம் கொண்டு வரவே இல்லை. ஆனால், 13ஆவது அரசியலமைப்பின் திருத்தத்தையும் மாகாண சபை சட்டத்தையும் முடமாக்கி விட்டார்.

13ஆவது திருத்­தமும்  மாகாண சபையும்

13ஆவது அர­சியல் அமைப்பின் திருத்­தத்தின் மூலமும் மாகாண சபைகள் சட்­டத்தின் மூலமும் மாகாண சபைகள் அமைக்­கப்­பட்­டன. காய்­தல், உவத்தல் இன்றி விருப்­பு, வெறுப்பு இன்றி மாகா­ண­ச­பைக்­கான அதி­கா­ரங்­க­ளினை அலசிப் பார்த்தால் எவ்­வித அதி­கா­ரங்­களும் மாகா­ண­ச­பைக்குக் கொடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது தெளிவாகும். மாகா­ண­சபை அர­சாங்­கத்தின் ஒரு­மு­கவர் நிலை அந்­தஸ்தை பெற்­றுள்­ளது. முக­வ­ரா­கவே செயற்­ப­டு­கின்­றது. அவ்­வாறு செயல்­பட வேண்டும். மாகா­ண­ச­பைக்கு அளிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் அதி­கா­ரங்கள் எத­னையும் மாகா­ண­சபை சுய­மாக, சுதந்­தி­ர­மாக செயல்­ப­டுத்த முடி­யாது. ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்கள், ஆளுநர், அமைச்சின் செய­லாளர் கொடுக்­கின்ற "பிச்­சையை தான் மாகா­ண­சபை ஏற்க வேண்டும். இவர்கள் மாகா­ண­ச­பைக்கு அதி­கா­ரங்­க­ளினைக் கொடுக்­கலாம், எடுக்­கலாம், குறைக்­கலாம், மழுங்­க­டிக்­கலாம். ஒரு­கையால் கொடுத்­ததை மறு­கையால் அக்­க­ணமே எடுத்து விடலாம். காலையில் கொடுத்­ததை மாலையில் எடுக்­கலாம். மாகாண சபை­யினால் இவற்­றுக்கு எதி­ராக ஒன்­றுமே செய்­து­விட முடி­யாது.

இந்­திய அர­சியல் முறைமை

இந்­திய அர­சியல் முறைமைப்­படி அர­சி­ய­ல­மைப்பில் இருந்தே நேர­டி­யாக மாநி­லங்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் அளிக்­கப்­பட்­டுள்­ளன. மாநி­லங்­க­ளுக்­கென வரை­யறுத்துக் கொடுக்­கப்­பட்ட அதி­கா­ரங்­க­ளினை நேர­டி­யாக செயல்­ப­டுத்த முடியும். இந்­திய ஜனா­தி­ப­தி, பிர­த­மர், அமைச்­சர்­கள், ஆளு­நர், செய­லா­ளர்கள் இவர்கள் போன்­ற­வர்­களின் கரு­ணையால் மாநி­லங்கள் இயங்­க­வில்லை. மாகா­ண­ச­பையும் அவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்­கான செயற்­பா­டு­களை இந்­தியா விரும்­ப­வில்லை.

இப்­போது இந்­தியா தற்பொழுது இருக்கும் கள­நிலை­வ­ரப்­படி நடக்­கு­மாறு கூறு­கின்­றது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரை இலங்கை அர­சாங்­கத்­துடன் கதை­யுங்கள் அவர்கள் தரு­வதைப் பெற்றுக் கொள்­ளுங்கள் என்று வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

சீனாவின் அர­சியல் அமைப்பில் சிறு­பான்மை இனங்கள்

ஐரோப்­பி­ய, அமெரிக்­க, கனடா போன்ற நாடு­களின் சட்­டங்­களில் வரை­ய­றுக்­கப்­பட்­டுள்ள சிறு­பான்மைக் காப்­புக்­களை அலசிப் பார்க்­கின்றோம். ஆனால் சீனாவில் கொடுக்­கப்­பட்­டுள்ள சிறு­பான்மை மக்­க­ளுக்­கான காப்­புக்­களை எட்டி நின்றும் பார்ப்­ப­தில்லை. சீனா கம்­யூ­னிச சர்­வா­தி­கார நாடு, அங்கு என்ன நடக்­கின்­றது என யாரும் நுழைந்து பார்க்க முடி­யாது என்ற எண்ணம் பல­ரது மனதில் பதிந்­துள்­ளது. அதனால் சீனாவில் சிறு­பான்மை மக்கள் கேவ­ல­மாக நடத்­தப்­ப­டு­கின்­றார்கள் என்ற தவ­றான எண்ணம் பல­ரது மன­திலும் உள்­ளது. உண்மை அவ்­வாறு இல்லை. சீனாவில் 150க்கு மேற்­பட்ட சிறு­பான்மை இனத்­த­வர்கள் வாழ்­கின்­றார்கள். அவர்­க­ளது உரி­மைகள் யாவும் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் நன்­றாகப் பேணிக்­காப்­பாற்­றப்­ப­டு­கின்­றன. செயல் முறை­யிலும் எவ்­வித நழுவல் தளம்பல் இல்­லாமல் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

முக்­கி­ய­மான மூன்று விட­யங்­க­ளினைப் பற்றி இப்­பொ­ழு­திற்கு விப­ரிக்­கப்­ப­டு­கின்­றது. தமிழ் தேசி­ய­மக்கள் வடக்­கு, கிழக்கு மாகா­ணங்கள் எங்­க­ளது தாயகம் ((HOME LAND) என்­பது போல சீனா­விலும் சிறு­பான்மை மக்­களின் தாயகம் என்னும் கொள்­கையை பேணிக் காப்­பாற்­று­கின்­றார்கள். 'The minority people became masters of their homelands and their own destinies" சிறு­பான்மை மக்கள் தங்­க­ளது தாயக பூமிக்கு அவர்­களே எஜ­மானர்கள். தங்­க­ளது தலை­வி­தியை தீர்­மா­னிப்­ப­தற்கு அவர்­க­ளுக்கே உரிமை உண்டு. ஒவ்­வொரு சிறுபான்மை இனமும் தங்களுக்குள் முரண்படாமல் ஒரு இனம் மற்றைய இனத்தினை வீழ்த்தாமல் ஒற்றுமையாக அவர்களது பிரச்சினைகளினை தீர்த்து வைப்பதில் சீன அரசாங்கம் எல் லாவகை செயற்பாடுகளினையும் செய்து கொடுக்கும். இலங்கையில் அவ்வாறு காணப்படுவதில்லை. சிறு பான்மையினர்க்கிடையே பிரிவுகளை உருவாக்குகின்றனர்.

155 சிறுபான்மை இனத்தவர்களுக்கும் autonomous regions தன்னாட்சி பிரதே சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர் களது மொழி, கலாசாரம், பண்பாடு, மத, நம்பிக்கை, வழிபாடுகள் யாவற் றையும் எவரது தலையீடும் இன்றி அனுபவிக்கலாம். தாயகக் கோட்பாடு மிக முக்கிய கோட்பாடாக சீனாவில் பேணிக் காப்பாற்றப்படுகின்றது. இலங்கையில் HOMELAND என்றாலே தனிநாடு என்று வேண்டாத அர்த்தம் கொடுக்கப்படுகின்றது.

சீனாவில் அவ்வாறு இல்லை. சீன அரசி யலமைப்பின் பிரகாரம் சிறுபான்மை மக்களுக்கு பலவித உரிமைகளை காப்புக்களை சீன அரசாங்கம் கொடுத் துள்ளது. சீனா இலங்கையின் தலை சிறந்த நட்பு நாடு. சீனா இலங்கைக்கு பலவித உதவி களினைச் செய்கின்றது. அதனால் சீனாவில் சிறுபான்மை மக்களின் உரிமை கள் எவ்வாறு பேணிப் பாதுகாத்து வளர்க்கப் படுகின்றன என்பதனை ஆரா ய்ந்து சீனா காட்டும் தீர்வைநாமும் ஏன் பின்பற்றக் கூடாது? எல்லா வகை முயற் சிகளாலும் தமிழர்களுடைய அரசியல் பிரச்சினை, அவர்களது உரிமைகள் யாவும் அமைதி வழியில் தீர்க்கப் படவேண்டிய கடப்பாடு பௌத்த சிங்கள தேசிய மக்களுக்கு உண்டு. செய்வார்களா?

சி.வி.விவேகானந்தன், சட்டத்தரணி

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-16#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.