Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்..! - ஓ.பி.எஸ்

 

o-panneerselvam-jayalaitha-600-28-146182  article-2120782-12583E28000005DC-831_634  Sasikala_Paneerselvam_EPS.jpg

 

சென்னை : தங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2 ஆயிரத்து 315 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 58 சிறப்பு ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி இன்று வழங்கினார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கிள்ல நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வமும் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், "எங்களைப் போன்ற நல்ல அரசயில்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியைப் போலவே தற்போதும் கல்வித்துறை அதே வளர்ச்சிப் பாதையை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜெட் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்" என்றும் கூறி ஐஸ் வைத்தார் ஓ.பன்னீர் செல்வம்.

 

தற்ஸ்தமிழ்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.